நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4203 topics in this forum
-
சுய நிர்ணயம் பற்றிய அரட்டை -புவனேசுவரி நாட்டில பல வருசமா இனப்பிரச்சனை எரிஞ்சு கொண்டிருக்கு அதில எண்ணெய் ஊத்தி இந்தியாவும் குளிர்காயுது எண்டா அது மிகையில்லை! ஈழத்தமிழ் பெடியளின்ட போராட்டத்துக்கு உதவிறம் எண்ட பேரில ஆயுதங்களும் பயிற்சிகளும் குடுத்து பிறகு அவங்களுக்குள்ளயே அடிபடவிட்டு புலிகளை மட்டும் வைச்சிருந்து கொண்டு இந்தியா தங்கட அரசியல நடத்தினது எண்டு நான் சொல்லி நீங்கள் தெரிஞ்சு கொள்ளுற அளவில இருந்தா நீங்கள் இவ்வளவு காலுமும் கோமால இருந்திருக்கிறியள் எண்டு அர்த்தம். (கோமா எண்டா கிரேக்கத்தில ஆழ்ந்த உறக்கம் எண்டு அர்த்தமாம்) இதில புலிகளோட மேற்கில இருக்கிற அமெரிக்கா பிரித்தானியா நோர்வே எண்டு இன்னும் சில நாடுகளும் நல்ல உறவில இருந்தவை. இருந்து கொண்டு 2009ல எல்லாத…
-
- 4 replies
- 677 views
-
-
தமிழ்மக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் தார்மீக கடப்பாடு இந்தியாவுக்கு உள்ளது என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 66 ஆவது இந்திய குடியரசு தின நிகழ்வுகள் யாழ். நகர விடுதியொன்றில் நேற்றிரவு இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்திய குடியரசு தினத்தில் என்னை அழைத்தமைக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன் புதியதொரு அரசியல் சூழலில் பதவியேற்று வடக்கு மாகாணத்திற்கு வந்துள்ள துணைத்தூதுவர் நடராஜ் அவர்களினால் இந்தியாவுக்கும் வடக்கு மாகாணத்திற்கும் இடையிலான உறவு மேலும…
-
- 1 reply
- 332 views
-
-
சர்வாதிகார அரசாங்கத்தை அகற்றி மக்களுக்கு நல்லாட்சியையும் மாற்றத்தையும் கொண்டுவரப்போவதாக ஜனாதிபதி கூறிவருகின்ற நிலையில் வடக்கு கிழக்கு தமிழர் வாழும் பகுதிகளில் இன்னமும் மகிந்தராஜபக்ஷவால் தமிழரை நசுக்க பழக்கப்படுத்தப்பட்ட இராணுவத்தினரின் தலையீடுகளும் நெருக்குவாரங்களும் இம்மியளவும் குறைந்ததாக தெரியவில்லை. ரோந்துகளும் புலனாய்வு துறையினரின் மோப்பங்களும் தொடர்கின்றது.இதன் மூலம் இந்த நாட்டிலும் தமிழ் மக்கள் வாழ்விலும் நம்பிக்கை வருமென நம்பி வாக்களித்த மக்களின் மனதில் அச்சமும் நம்பிக்கையின்மையிலும் ஏற்பட்டுவருகின்றது. நேற்று கிளிநொச்சி உருத்திரபுரத்திரம் சாஜிமுன்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் கலந்துகொள்ளச்சென்றபொழுது அங்கு இராணுவப் பிரசன்னமே நிறைந…
-
- 4 replies
- 571 views
-
-
தேவைக்கும் ஆசைக்கும் இடையில் தமிழீழம் என்ற லட்சியத்திற்க்கு இமக்கிரிகைகள் நடக்கின்றது. இதுவே எமது இனத்தின் வரலாற்றுத் தவறுகளுக்கான தண்டனையுமாகின்றது. ஆனால் பாவம் ஒரு பக்கம் பழி ஒருபக்கம் என வறுமைப்பட்ட மக்களே இறுதியில் செத்து மடிகின்றனர். வதை முகாம்களில் வாழும் மக்களுக்கும் சிங்களத்தின் பிடிக்குள் இருக்கும் மக்களுக்கும் தமிழீழம் தேவையான ஒன்று. இது பொருளாதாரம் பாதுகாப்பு போன்றன அடிப்படையில் சுதந்திரமான நோக்கத்தை கொண்டது. புலம்பெயர்வாழ் மக்களுக்கு பொருளாதராம் பாதுகாப்பு போன்ற நோக்கங்களுக்கு அப்பால் தமிழீழம் பெரு விருப்பம் சார்ந்த ஒன்றாக இருக்கின்றது. ஒரு மனிதன் பாதுகாப்புடனும் பொருளாதார நொருக்கடிகளை சமாளித்து வாழ்வதற்கும் அவனது சொந்த தேசம் அவசியமா என்று ஒரு கேள்வி…
-
- 8 replies
- 3.1k views
-
-
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி) எதிர்வரும் பொதுத் தேர்தலில் தென் பகுதியை சேர்ந்த இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டுள்ளதாக அந்த கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தவிர ஏனைய எந்த கூட்டணியானாலும் அதனுடன் இணைந்து போட்டியிட தயார் என ஈ.பி.டி.பி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஜனநாயக இடதுசாரி முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் லங்கா சமசமாஜக் கட்சி ஆகிய கட்சிகளுடன் ஈ.பி.டி.பி கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரியவருகிறது. இடதுசாரி கட்சிகள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருந்து வருவதால், அந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்க ஈ…
-
- 5 replies
- 552 views
-
-
மகிந்தா ஆட்சியின் கீழ் யாழ்ப்பாணத்தில் பல கல்லூரிகளின் அதிபர்களும் ஆசிரியர்களும் தன்களின் அரசியல் செல்வாக்குகளை பயன்படுத்தி ஆட்டம் போட்டார்கள் அதுவும் தங்களுக்கு பிடிக்காதவர்களை இடம் மாற்றுவது தங்களின் பதவிகளுக்கு போட்டியாக வர கூடியவர்களை வேறு இடத்துக்கு துரத்தி அடிப்பது ....,திறமைகள் மூலம் பதவி கிடைக்க இருந்தவர்களை பின் தள்ளி தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை பதவியில் அமர்த்தியது ..... போன்றவற்றையும் புதிதாக பொறுப்பெடுத்திருக்கும் கல்வி அமைச்சர் விசாரிக்கணும் கல்லூரிகளிலும் பாடசாலைகளிலும் அரசியல் நுழையாமல் பாத்துக்கணும்..... செல்வாக்கு உள்ளவர்களை விட திறமையானவர்களை பாடசாலைகளின் அதிபராக்கணும் ....
-
- 0 replies
- 532 views
-
-
கைதிகளைச் சிறையிலடக்கத் துணை போன டக்ளஸ் இன்று விடுதலை செய்யக் கோருகிறார் பத்துவருடங்களாக இனக்கொலையாளிகளான ராஜபக்ச குடும்பத்தின் அடியாளாகவிருந்து செயற்பட்ட டக்ளஸ் தேவானந்தாவிற்கு திடீரென சிறைக் கைதிகள் மீது அக்கறை பிறந்துள்ளது. மகிந்த அரசில் செல்வாக்கு மிக்க அரசியல் வாதியாகத் திகழ்ந்த டக்ளஸ் கைதிகள் தொடர்பாக மூச்சுக்கூட விட்டதில்லை. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துகொள்ள நேரிட்டதும் சிறைகளில் வாடும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பfடவேண்டும் எனக் பாராளுமன்றத்தில் கோரியுள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பதாக மகிந்த ராஜபக்சவே தமிழ் மக்களின் தேவைகளை உணர்ந்து செயற்படுகிறார் என்று கூறிய டக்ளஸ் நேற்றுப் பாராளுமன்றத்தில் மகி…
-
- 0 replies
- 436 views
-
-
வடக்கில் படைக்குறைப்பு செய்யப்படும் என்று இந்தியாவிடம் உறுதியளித்திருக்கின்றார் இலங்கை வெளிவிவகார அமைச்சர்..... இது சற்று மகிழ்ச்சியை அளித்தாலும் வெறும் வாய் வழி உறுதியாக இருக்காமல் இதை நடைமுறைப்படுத்துகின்ற அதே நேரம்..... இந்தியாவும் அதற்கான அழுத்தங்களை கொடுத்து கண்காணிக்க வேண்டும்...... இப்பொழுது இலங்கையில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தில் கண்டிப்பாக தற்பொழுதைய இந்திய அரசின் பங்கும் பெருமளவில் இருக்கு என்பதனை யாரும் மறுக்க முடியாது ஆகவே இந்த சந்தர்பத்தில் தமிழர்கள் எதிர்ப்பார்க்க கூடிய தீர்வை படிப்படியாக ஏற்படுத்தி கொடுக்கின்ற கடமை இந்தியாவிற்கு உண்டு......... Sundhal 21/01/15
-
- 7 replies
- 766 views
-
-
ஜனவரி 8 திகதி தேர்தலில் ஆச்சரியமளிக்ககூடிய வெற்றியை பெற்ற பின்னர் இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கும் மைத்திரிபால சிறிசேன அவருக்கு முன்னர் பதவிவகித்தவரை விட வித்தியாசமானவர். உள்நாட்டின் ஆட்சி முறையில் கவனம் செலுத்துவதே அவரது முன்னுரிமைக்குரிய விடயமாக காணப்படப் போகின்றது, அது நடைமுறைப்படுத்துவதற்கு கடினமான விடயம். மகிந்த ராஜபக்சவின் மீதான வெறுப்பு என்ற விடயத்தை தவிர வேறு எதிலும் ஓற்றுமை இல்லாத கூட்டணிக்கு அவர் தலைமை தாங்குகின்றார். அவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளமை இந்தியா மற்றும் அமெரிக்காவுடனான உறவுகளை சரிசெய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. இதனை சாத்தியமாக்குவதற்கு அவருக்கும் அவரது வெளிநாட்டு நண்பர்களுக்கும் திறமையும், கற்பனாசக்தியும் அவசியமாகின்றத…
-
- 1 reply
- 776 views
-
-
உள்ளதும் போச்சடா, நொள்ளைக் கண்ணா எவருக்கும் ஒரு பலவீனம் இருக்கும். எதிரியின் பலவீனம் அறிந்தவனே வெல்ல முடியும். ஹிட்லர், கடாபி, பின் லாடன் பலவீனம் பெண்களில் இருந்தது. மகிந்தவின் பலவீனம் சாத்திர விடயங்களில் இருந்தது. சுமனதாச அபயகுணவர்த்தன என்னும் ஒரு சாத்திரியார், இப்போது குறும்புக் கார இலங்கையர்களின் பாராட்டு மழையில் நனைந்த வாறு உள்ளார். அவரது சாத்திரம் என்னவோ பிழைத்தாலும், அவரோ எதிர்பாராத ஹீரோ ஆகி இருக்கிறார். தனி ஒரு ஆளாக, 'இத்த கயிறினைக்' கொடுத்து, மகிந்தவை பதவி இறக்கி, நாட்டினை அவரதும், அவர் தம் குடும்பத்திடம் இருந்து காத்த 'மாவீரன்' என்ற பாராட்டு மலையில் நனைந்து, வாய்க்குள் அல்வா இறுக்கின மாதிரி, மனிசன், அழவும் முடியாமல், சிரிக்கவும் முடியாமல் நிக்கிற…
-
- 8 replies
- 2.2k views
-
-
கூட்டமைப்பின் உடனடிக் கடமை இன்றைய நிலையில் ஐதேக, சுக ஆகிய முக்கிய கட்சிகள் ஒன்று இனைந்துள்ள நிலை காணப் படுகின்றது. இந்த தேசிய அரசு அடுத்த 100 நாட்களுக்கு இருக்கப் போகிறது. அதன் பின்னர் பாழும் இனவாத அரசியல் புதிய தேர்தலுடன் ஆரம்பித்து விடும். ஆகவே இந்த 100 நாட்களுக்கு இடையே, தமிழர் பிரச்னை தீர்வு குறித்த, ஒரு அடிப்படை இணக்கம் காணப் பட வேண்டும். இல்லாவிடில் பழைய குருடி கதவைக் திறடி கதை தான். ஆகவே, மேற்குலகு, இந்தியா பார்த்துக் கொள்ளும் என்று இருக்காது, இப்போதே தேங்காயை அடித்து உடைக்க வேண்டும். தேனிலவு முடிவதற்க்கு முன்னர் தமிழர் பிரச்னை குறித்த விவாதம், நடாத்தப்பட வேண்டும். இல்லாவிடில் ஆறிய கஞ்சி பழைய கஞ்சி தான் என்றாகிவிடும்.
-
- 0 replies
- 471 views
-
-
இலங்கை அரசின் மற்றுமொரு இன அழிப்பு.... சுன்னாக மின் நிலையத்தில் இருந்து பாதுகாப்பற்ற முறையில் வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய் இப்பொழுது தெல்லிப்பழை வரை கிணறுகளில் கலந்து விட்டது குறிப்பாக கிணற்று நீரையே நம்பி இருக்கும் மக்களின் சுகாதாரம் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கு அதுவும் குறிப்பா தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் கிணற்றையும் இது பாதித்திருப்பதாக கூறப்படுகின்றது..... சும்மார் 1700 மாணவர்கள் படிக்கும் மகஜானவில் மட்டுமல்ல அதன் அருகில் இருக்கும் யூனியன் கல்லூரி மற்றும் பாடசாலைகளிலும் இதே அவலம் இலங்கை அரசோ இதை கண்டுகொள்வதாக தெரியவில்லை.... யுத்தத்தால் கடுமையாக பாதிக்க பட்ட பிரதேசம் இவை ...... இப்பொழுது சுற்று சூழலாலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கு...... இலங்கை அரசு …
-
- 10 replies
- 1.4k views
-
-
சார்லி ஹெப்டோ படுகொலைப் பிரச்சினை தற்காலிகமாக முடிவுக்கு வந்திருப்பது போலத் தோன்றுவது வெறுமனே வெளித்தோற்றம் மட்டும்தான். மூன்று இஸ்லாமிய அடிப்படைவாத ஆயுததாரிகளால் மொத்தமாக 17 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். சார்லி ஹெப்டோவின் 4 கார்ட்டுனிஸ்ட்டுகளும் சார்ப்போ சேபர்னியர் எனும் அதனது ஆசிரியரும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதுவன்றி இரு இஸ்லாமியர்களான ஒரு காவல்துறை அதிகாரியும், சார்லி ஹெப்டோ ஊழியர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். சார்லி ஹெப்டோ அலுவலகத் தளத்தில் மட்டும் மொத்தமாகப் 12 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இதனோடு ஒரு பெண் காவல்துறை அதிகாரியும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். யூத பலசரக்குக்கடையில் நடந்த பிணைக்கைதிகள் பிரச்சினையில் இஸ்லாமிய அடிப்படைவாத ஆயுதத…
-
- 0 replies
- 517 views
-
-
இவரது பெயர் Maurice Sinet. ஐந்து வருடங்களுக்கு முன்னர், சார்லி எப்டோ பத்திரிகையில் கேலிச்சித்திரங்கள் வரைந்தவர். 2009 ம் ஆண்டு, பத்திரிகை நிர்வாகம் இவரை வேலையே விட்டு நீக்கி விட்டது. இவர் செய்த குற்றம் என்ன? பத்திரிகையில் Sine என்ற புனைபெயரில் எழுதிய கட்டுரை, "யூதர்களுக்கு எதிரானது" என்ற குற்றச்சாட்டில் பணிநீக்கம் செய்யப் பட்டார். அன்றைய பிரெஞ்சு ஜனாதிபதி சார்கோசியின் மகனின் திருமணம் பற்றிய அரசியல் விமர்சனக் கட்டுரை அது. சார்கோசியின் மகன் அப்போது தான் ஒரு யூத தொழிலதிபரின் மகளை திருமணம் முடித்திருந்தார். அவர் பணத்திற்காக யூதராகவும் மாறிவிடுவார் என்று அந்தக் கட்டுரையில் விமர்சிக்கப் பட்டிருந்தது. French cartoonist Sine on trial on charges of anti-Semitism over Sarkozy j…
-
- 1 reply
- 465 views
-
-
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மென்மையான போக்குடையவர் என்பதை அவரின் செயற்பாடுகளில் இருந்து உணர முடிகின்றது. இரண்டாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரி அறிவித்தமை ஒரு தலைவனுக்கு இருக்கக் கூடிய சிறப்பைக் காட்டுவதாகும். இரண்டாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என மைத்திரி அறிவித்த நேரம், காலம் என்பன மிகவும் பொருத்தமானவை. இந்த அறிவிப்பு அவர் மீது நம்பிக்கை கொள்ள வைக்கிறது. அதேநேரம் கண்டி தலதா மாளிகையின் எண்கோண மண்டபத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில் சாந்தமும், நிதானமும் தெரிகிறது. எனினும் அதீத நல்ல குணம் பலவீனமாகக் கருதப்படும் என்பதன் அடிப்படையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதானமாகவும் தீர…
-
- 0 replies
- 510 views
-
-
https://soundcloud.com/user3011607/distributor-singaravelan-abuses-superstar-rajni-proof-revealed-listen-to-this
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரான்சில் மறக்கமுடியாத நாட்களாக 07-08-09/01/2015 அமைந்துவிட்டன... ஏழாந்திகதி காலை 11 மணியளவில் CHARLIE HEBDO என்னும் பத்திரிகை அலுவலகத்திற்குள் ஆபத்தான நவீன ஆயுதங்களுடன் புகுந்த இரு இளைஞர்கள் (சகோதரர்கள்) Chérif Kouachi (32 வயசு), Said Kouachi,( 34வயசு ( மத்தியகிழக்கைச்சேர்ந்தவர்கள்) அல்லாவின் பெயரைச்சொல்லியபடி குறி தவறாதும் துப்பாக்கி சூட்டில் அனுபவப்பட்டவர்கள் போல் சுடுகின்றனர். காவலுக்கு இருந்த காவல்துறையினர் இருவர் மற்றும் பத்திரிகையின் முக்கிய பிரமுகர்கள் உட்பட 12 பேர் கொல்லப்பட 11 பேர் காயமடைகின்றனர். அதில் நால்வரின்நிலை கவலைக்கிடமானதாக இருக்க கொலையாளிகள் வந்த வாகனத்திலேயே தப்பிவிடுகின்றனர்...... மக்கள் கொதித்து எழுந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுப…
-
- 23 replies
- 1.3k views
-
-
பாதுகாபப்பு செயலரானார், பசனாயக்கா. இவர் இராணுவ தொடர்பு இல்லா, முன்னால் சூழல் சுற்றாடல் செயலர் ஆவார்.
-
- 0 replies
- 584 views
- 1 follower
-
-
இலங்கையில் புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் மைத்திரி ஆட்சியுடன் இணைந்து செயலாற்றுவதற்கு நாம் தயார் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் கருத்து வெளியிட்டுள்ளதாக தெரியவருகின்றது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டி இன்றைய தினம் மைத்திரிபால சிறிசோன தனது பதவியை பொறுப்பேற்கவுள்ள நிலையில் அமைச்சர் டக்ளஸ் குறித்த அறிவிப்பினை விடுத்திருக்கின்றார். அவர் மேலும் குறிப்பிடுகையில், மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சி நல்லாட்சியாக நடைபெறும் பட்சத்தில் அவர்களுடன் இணைந்து செயலாற்றுவதற்கு நாம் தயார். நாம் இணக்க அரசியல் நிலைப்பாட்டினை தொடர்ந்தும் கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்றோம். இதனடிப்படையிலேயே முன்னைய ஆட்சியாளர்களுடனும் பேசி கொள்கை ரீதியான உடன் பாட்டுடன் நாம் செயற்பட்டோம். அந்தவ…
-
- 0 replies
- 658 views
-
-
தேர்தல் பற்றிய கருத்துக்களை இங்கே பதிவோமா உறவுகளே.. கிருபனின் பதிவு இது தேர்தல் திரியில்...
-
- 44 replies
- 4k views
-
-
சனாதிபதித் தேர்தல்: சிங்கள பௌத்த பேரினவாதத்தை அழிக்கவா பலப்படுத்தவா? ச.பா.நிர்மானுசன் சிறீலங்காவின் தற்போதைய சனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கடந்தகால மற்றும் நிகழ்கால ஆட்சியில், தமிழ் மக்களுக்கு எதிரான அவரது செயற்பாடுகள் எவ்வளவு கொடூரமானவை என்பதை மீளப்பதிவு செய்ய வேண்டிய தேவையில்லை. எதிர்காலத்திலும் தமிழின அழிப்பில் முதன்மையான இடத்தை தக்க வைப்பதற்காக இன்றும் தொடர்ந்து போட்டி போட்டுக் கொண்டிருப்பவர் மகிந்த ராஜபக்ச. இவரது ஆட்சி தொடர்ந்தும் நீடித்தால், சிங்கள குடியேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்பு போன்ற கட்டமைப்புசார் இன அழிப்பும் நீடிக்கும். ஆதலால் தமிழ் மக்களால் மகிந்த ராஜபச்ச நிராகரிக்கப்பட வேண்டியவர் என்பதில் மறுபேச்சுக்கு இடமில்லை. அதேவேளை, மைத்திரிபால சிறீசேனவும் பெரும்பான…
-
- 0 replies
- 1.2k views
-
-
தான் பதவியில் தோற்றாலும் கூட இன்னும் இரு வருடங்களவது தொடர்ந்தும் பதவியில் இருக்கப்போவதாக மகிந்த கூறிவருகிறார். தனது இரண்டாவடது பதவிக்காலம் முடிவடைய இரு வருடங்கள் இருக்கும் நிலையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஆயத்தம் செய்துவரும் மகிந்த, தர்செயலாக தான் தேர்தலில் தோற்க நேரிடினும் கூட, தனது இரண்டாவ்து பதவிக்காலத்தில் இன்னும் மீதமிருக்கும் இரு வருட்ங்களை பூர்த்தி செய்ததன் பின்னரே பதவியிலிருந்து விலகுவது பற்றி சிந்திக்க முடியும் என்றும், அதுவரை எதிரணியிலிருந்து தெரிவாகும் யாராக இருந்தாலும் காத்திருக்க வேண்டியதுதான் என்றும் கூறியிருக்கிறார். இதுநாள்வரையிலும் தான் வெல்வது உறுதி என்று கர்வத்துடன் கூறிவந்த மகிந்த இப்போது தோற்றாலும் கூடப் பதவியில் இருப்பேன் என்று கூறியி…
-
- 3 replies
- 702 views
-
-
பகடைக்காய்கள் ஜனாதிபதித் தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்புக்களினாலும் சுவாரஷ்யங் களினாலும் நிறைந்து கொண்டிருக்கிறது. தங்களைத் தக்க வைக்கப்பதற்கான போராட்டத்தை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக் தனது அரசின் மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். தனியே பரப்புரைக் கூட்டத்தை நடத்தாமல், அரச நிகழ்வுகளையே தனது பரப்புரைக் கூட்டமாக மாற்றி வருகின்றார் மஹிந்த. தனியே அவர் மட்டுமல்லாது அவரின் எடுபிடிகளும், அமைச்சர்களும், அமைப்பாளர்களும் தங்கள் பங்குக்கு மஹிந்தவுக்கு வாக்குச் சேகரிப்பும் பரப்புரைகளில் தீவிரமாக இறங்கிவிட்டனர். கடந்த வாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பல்கலைக்கழக மாண வர்களுக்கு மஹாபொல புலமைப்பரி…
-
- 0 replies
- 588 views
-
-
ஆயுத எழுத்து 30.12.2014இன்றைய தலைப்பு குறித்து விவாதிக்க சிறப்பு விருந்தினராக சுமந்திரன்-தமிழ் எம்.பி // அய்யாநாதன்-தமிழ் ஆர்வலர் // அருணன்-சி.பி.எம் // ராதாகிருஷ்ணன்-பத்திரிக்கையாளர்.. http://www.thanthitv...id=9&vidid=8020 ஆயுத எழுத்து 29.12.2014இன்றைய தலைப்பு குறித்து விவாதிக்க சிறப்பு விருந்தினராக ராமசாமி முத்தையா-இலங்கை அமைச்சர் // பகவான் சிங்-பத்திரிக்கையாளர் // சீமான்-நாம் தமிழர் கட்சி // கே.டி. ராகவன்-பா.ஜ.க. http://www.thanthitv...id=9&vidid=7999
-
- 0 replies
- 727 views
-
-