நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
முஸ்லிம் மறும் மலயக அரசியல் ஆர்வலர்களுக்கு. - வ.ஐ.ச.ஜெயபாலன் . பலமானது கட்சியா தனி நபரா என்கிற கேழ்விக்கு கட்சி அல்லது கட்சியை முழுமையாகவோ பெரும்பாகமாகவோ கட்டுப்படுத்தும் தனிநபர் என்பதுதான் வரலாற்றின் பதிலாக உள்ளது. இதுதான் ரணிலுக்கும் சஜித்துக்கும் உள்ள போட்டி. காலம் கடக்கமுன்னம் தோழர் மனோ கணேசனும் முஸ்லிம் தலைவர்களும் நிலமையை உணர்ந்து கொள்வது சிறந்தது. ஐக்கிய தேசியக் கட்ச்சியின் தலைவர் ரணிலா சயித்தா என்பதை யு.என்.பி மட்டும்தான் தீர்மானிக்கும். அதனை தீர்மானிப்பது ஒருபோதும் முஸ்லிம்களதும் மலையக தமிழர்களதும் வேலையல்ல நண்பர்களே. உங்கள் இனத்தின் வெற்றியும் உங்கள் கட்ச்சியின் வெற்றியும் மட்டுமே உங்கள் இலட்ச்சியம் என்பதை இப்பவாவது நீங்க உணரவேண்டும். அல்லத…
-
- 0 replies
- 259 views
-
-
தமிழகத் தேர்தலும் இலங்கை தமிழரும் கருணாகரன் 'தமிழ்நாட்டுத் தேர்தல் களம் எப்பிடியிருக்கு? யார் அங்கே ஆட்சியைப் பிடிக்கப்போகிறார்கள்? யாருக்குச் சான்ஸ் இருக்கு? எந்தத்தரப்பினர் அதிகாரத்துக்கு வந்தால் நல்லது? அதாவது யார் பதவிக்கு வந்தால் ஈழத்தமிழருக்கு வாய்ப்பாக இருக்கும்?....' என்ற விதமாக பேஸ்புக்கிலும் இணையத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் ஏராளமாக எழுதப்படுகின்றன. தினமும் ஆய்வுகள் வேறு நடந்து கொண்டிருக்கின்றன. எந்தத் தரப்பு அதிகாரத்தைக் கைப்பற்றும் என்ற ஊகங்கள், கருத்துக் கணிப்புகள் கூட நடக்கின்றன. பலர் இதில் முழுநேரக் கவனத்தை வேறு கொண்டிருக்க…
-
- 0 replies
- 474 views
-
-
தொண்டாவுக்கு அஞ்சலி செலுத்த அவரின் இல்லத்திற்கு திகா போகாதது ஏன்? : மனோ விளக்கம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரின் வீட்டுக்கு முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் ஏன் செல்லவில்லையென முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெளிவுப்படுத்தியுள்ளார். மனோகணேசனின் பதிவு வருமாறு, நண்பர் ஆறுமுகன் தொண்டமான் மறைந்த போது நான் ஒரு வெளிநாட்டு ராஜதந்திரியுடன் உரையாடலில் இருந்தேன். செய்தி கேட்டதும் உடனேயே தலங்கம மருத்துவமனைக்கு ஓடினேன். ஏன் பக்கத்தில் இருக்கும் ஸ்ரீஜயவர்தனபுர மருத்துமனைக்கு கொண்டு செல்லவில்லை என நினைத்துக்கொண்டேன். நான் போனபோது நான் மட்டும்தான் முதல் எதிர்கட்சிகாரனாக இருந்தேன். அப்புறம் ஒரே ஆளும்கட்சி கூட்டம். பிரதமர் வ…
-
- 0 replies
- 1.1k views
-
-
முறுகல்களுக்கு முடிவில்லாத முஸ்லிம் காங்கிரஸ்! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவான காலத்திலிருந்து அக்கட்சிக்குள் சர்ச்சைகளுக்கும் உட்பிளவுகளுக்கும் பஞ்சமிருக்கவில்லை. ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் உயிரோடிருந்த காலத்திலும் மு.கா. பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளது. பலர் கட்சியை விட்டும் விலக்கப்பட்டனர். பலர் தாமாகவே வெளியேறினர். பின்னர் அஷ்ரபின் மரணமே பெரும் முரண்பாடுகளுக்கும் பதவிப் போட்டிகளுக்கும் வித்திட்டது. அதனைத் தொடர்ந்து கட்சி இரண்டாக மூன்றாக மேலும் பல புதிய அணிகளாக உடைந்து போனது. பலர் மு.கா. எனும் அரசியல் வாழ்விலிருந்தே முற்றாக ஒதுங்கிப் போயினர். ரவூப் ஹக்கீம், தலைவர் பதவியை ஏற்ற…
-
- 0 replies
- 364 views
-
-
தம்பி சீமான், .வைகோ அண்ணா . நெடுமாறன் ஐயா உங்களிடம் ஒரு வேண்டுகோள் . சாதி அற்ற ஒரு தமிழகத்தை கட்டி எழுப்புங்கள் எந்த சாதி கட்சியுடனும் கூட்டணி வைக்காதீர்கள். கொள்கை வேறு அரசியல் தேர்தல் கூட்டு வேறு என்று இதுவரை செய்த தவறுகளை இனி தமிழன் செய்யது இருக்கவேண்டும் தூய தமிழகத்தை உருவாக்குங்கள் மதுக்கடைகளை இழுத்து மூடுங்கள் . நல்ல ஒழுக்கம் கொண்ட வள்ளுவன் சமுதாய நெறிகளை பலபடுத்துங்கள் . தமிழகம் தமிழனுக்கான பாரம்பரியங்களை கட்டிக்காத்து உலகத்தின் ஒட்டுமொத்த தமிழனின் சரணாளையமாக அவன் நிம்மதியான வாழ்விடம் என்பதை உறுதி படுத்துங்கள். தமிழகம் ஈழம் இவ்விரண்டு தாய் நிலமும் அதன் விரிந்த ஆகாயமும் கடலும் உலக தமிழன் தமிழிச்சி ஒவ்வொருவரின் பூர்விக உரிமை என்பதை யாரும் மறுபதற்கு இல்லை . இ…
-
- 1 reply
- 715 views
-
-
இந்திய மருத்துவத் துறையையே உறைய வைத்திருக்கிறார் குணால் சாஹா. தன்னுடைய மனைவி அனுராதாவின் மரணத்துக்கு மருத்துவர்களின் அலட்சியமான சிகிச்சைக்கு இழப்பீடாக ரூ. 11 கோடியை உச்ச நீதிமன்றத்திடமிருந்து தீர்ப்பாகப் பெற்றிருக்கிறார் சாஹா. இந்திய வரலாற்றில் மருத்துவத் துறை தவறுகளுக்காக விதிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச அபராதத் தொகை இது. “இந்திய மருத்துவத் துறைக்கு இது ஒரு கருப்பு நாள்” என்று சொல்லும் அளவுக்கு இந்திய மருத்துவத் துறையை குறிப்பாக, தனியார் மருத்துவத் துறையைக் கொந்தளிக்கவைத்திருக்கிறது சாஹா பெற்றிருக்கும் தீர்ப்பு. ஆனால், சாமானியர்களோ கொண்டாடுகிறார்கள். சாஹாவிடம் பேசினால், ஒரு பெரிய கதை விரிகிறது. ஒரு தனிப்பட்ட மனிதனின் காதலில் தொடங்கும் அந்தக் கதை இந்திய நோயாளிகளின் அவலங்கள…
-
- 0 replies
- 513 views
-
-
மகிந்தாவின் பெருவெற்றியினதும் ஜெனரல் பொன்சேகாவின் தோல்வியினதும் பரிமாணங்கள் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றைப் பொறுத்தவரை 1994 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் பொதுஜன முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி திருமதி குமாரதுங்க பெற்ற பெரும்பான்மை வாக்குகளுக்கு அடுத்தபடியாக கூடுதலான பெரும்பான்மை வாக்குகளினால் வெற்றியீட்டியவராக மகிந்த ராஜபக்ஷ விளங்குகிறார். 2005 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரான எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை 2 இலட்சத்துக்கும் குறைவான பெரும்பான்மை வாக்குகளினாலேயே மகிந்தாவினால் தோற்கடிக்கக் கூடியதாக இருந்தது. கடந்த தடவை மகிந்த ராஜபக்ஷவுக்கு அளித்த ஆதரவை விடவும் மிகவும் கூடுதலான ஆதரவை …
-
- 3 replies
- 533 views
-
-
உக்ரைன் – ரஷ்யயுத்தம்: வில்லன் யார், கதாநாயகன் யார்? – (பகுதி-1) March 19, 2022 — ஜஸ்ரின் — தற்போதைய நிலையின் ஆரம்பம் எது? 2021 நவம்பர் மாதத்திலிருந்தே உக்ரைனின் கிழக்குப் பகுதி எல்லையிலும், பின்னர் உக்ரைனுக்கு வடக்கேயிருக்கும் பெலாறஸ் நாட்டின் எல்லையிலும் ரஷ்யா படைகளைத் திரட்டிவைத்திருக்க ஆரம்பித்தது. இது ஆரம்பத்தில் ஆரவாரமின்றி நடந்தாலும், மேற்கு நாடுகளின் செய்மதிப் படங்களின் வழியாக இந்தப் படைக் குவிப்பு வெளிவர ஆரம்பித்தபோது ரஷ்யாவின் பதில் இரண்டு வகையானதாக இருந்தது: ஒன்று, நம் நாட்டினுள்தான் படைகள் இருக்கின்றன, உக்ரைன் நாட்டினுள் படைகள் நுழையாது; இரண்டு, ஒரு பாரிய இராணுவ ஒத்திகைக்காக படைதிரட்டுகிறோம் – முடிந்ததும் கிளம்பி விடுவோம் (இ…
-
- 32 replies
- 1.9k views
-
-
அமெரிக்காவின் காலடிக்குள் குழி தோண்டும் இலங்கை அமெரிக்காவின் காலடிக்குள் தனக்குப் பாதுகாப்பான புகலிடம் ஒன்றைத் தேடும் முயற்சியில் இலங்கை தீவிரம் காட்டி வருகிறது. அமெரிக்காவுக்கு கீழே, தென் அமெரிக்க நாடுகளை தன் பக்கம் திருப்பும் திட்டமே இது. இந்த முயற்சியை இலங்கை அரசாங்கம் தொடங்கியது, இப்போதல்ல. அதற்கான முயற்சிகள், ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான முதலாவது தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்த போதே, தொடங்கப்பட்டு விட்டன. ஆனாலும், அதற்கான பலன், கடந்த ஆண்டு கூட ஜெனிவாவில் சரியாக கிடைக்கவில்லை. இந்த ஆண்டிலாவது, தென் அமெரிக்க நாடுகளின் மூலம் இலங்கை பாதுகாப்பைத் தேடிக் கொள்ள முடியுமா என்ற கேள்விகள் நீடிக்கின்றன. இலங்கைக்கு எதிரான முதலாவது தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்த ப…
-
- 2 replies
- 635 views
-
-
இன்றைய தமிழர் நிலை ! உலகெங்கும் வாழுந்தமிழர்கள் சிந்தித்துச் செயல் படவேண்டிய முக்கிய தருணம் இது.ஈழத்தில் நாம் அடைந்த வேதனையும்,வெட்கமும் உணர்வுள்ளத் தமிழர்களை மென்று,தின்று ,அரைத்துக் கொண்டுள்ளது.உலகிலே நமக்கென்று உள்ள சில நல்ல உள்ளங்கள் நம்மை எதிர்த்தவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.இப்போது ஒரு சிலர் உண்மையைப் புரிந்து கொண்டு நம் பக்கத்து நியாயத்தை உணரத் தலைப்பட்டிருக்கின்றார்கள்.இன்னும் நமது முயற்சிகள் பல்வேறு வழிகளில் பலரை அடைய வேண்டியுள்ளது.உலக மக்களுக்கு நமது நிலைமையும்,உரிமையும் நன்றாக எடுத்துச் சொல்லப் பட வேண்டியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் தமிழர் எங்குமே ஆட்சி,அதிகாரத்தில் இல்லை. தமிழ்நாட்டில் ஆட்சியாளர் யாராக இருந்தாலும் டில்லி ஆதிக்கத்தை எதிர்…
-
- 0 replies
- 3.6k views
-
-
இதயசுத்தியுடனான நடவடிக்கையே அரசியல் தீர்வுக்கு வழிவகுக்கும் அரசியல் தீர்வின் அவசியம் குறித்து தமிழ் தரப்பினரால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றபோதிலும் இன்னமும் உறுதியான தீர்வைக் காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் புதிய அரசியல் யாப்பினை உருவாக்குவதன் மூலம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனாலும் இந்த முயற்சி விடயத்திலும் தொடர்ச்சியான இழுபறி நிலை காணப்பட்டு வருகின்றது. 2016ஆம் ஆண்டு இறுதிக்குள் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்று எதிர்க்கட…
-
- 0 replies
- 340 views
-
-
தரங்கெட்ட தமிழ் தளங்கள். இன்று அவசரமாக இந்த பதிவை இடவேண்டிய கட்டாயம். இந்த பதிவு தாங்களும் ஊடக இணையம் ஒன்றினை வைத்து நடத்துகின்றோம் என்று கூறி தம்பட்டம் அடித்துக்கொண்டிருப்பவர்களுடைய முகத்திரையினை கிழித்தெறியும் முகமாக இப்பதிவினை இடுகின்றேன். இந்த பதிவினை வாசித்தறிந்த பிறகு ஆ என்று வாயை பிளந்திடுவார்கள். கள்ள நெஞ்சுக்காரர்கள். சரி. நாம் விடையத்திற்கு வருவோம். அண்மைக்காலமாக புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலரால் நடாத்தப்படும் இணையத்தளங்கள் பற்றியும் அவற்றினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் பற்றியும் பலர் பலவாறான பதிவுகளை இட்டிருந்தனர். அத்துடன் சேர்த்து தகவல் திருட்டு பற்றியும் அவர்கள் பேசியிருந்தார்கள். சாதாரணமாக நடக்கும் ஒரு சின்ன விடையத்தினை கூட வக்கிரமான தலையங்கங்களுட…
-
- 1 reply
- 7.2k views
-
-
11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்; கரன்னாகொடவின் கரணம் Editorial / 2019 மார்ச் 21 வியாழக்கிழமை, மு.ப. 11:47 Comments - 0 சட்டத்தை மதிக்கும் சமூகத்தைக் கொண்டே, ஒரு நாட்டின் நாகரிகம் மதிப்பிடப்படுகிறது. நாட்டிலுள்ள அனைவரும், சட்டத்துக்கு உட்பட்டவர்களே தவிர, அதற்கு அப்பாற்பட்டவர்களென எவரும் இல்லை. சட்டம், அனைவருக்கும் பொதுவாக இருக்கும் வரையிலும் நடைமுறைப்படுத்தப்படும் வரையிலும், நாடு தொடர்ந்தும் முன்னேறிக்கொண்டே இருக்கும். இருப்பினும், எமது நாட்டைப் பொறுத்தவரையில், ஆங்காங்கே காட்டுச் சட்டங்களே அதிகாரம் செய்கின்றன. இதனால் தான், யுத்தம், பாதால உலகக் கோஷ்டியினரின் நடவடிக்கைகள், போதைப்பொருள் வியாபாரங்கள் எனப் பல பிரச்சினைகளை, இலங்கை சந்தித்தது, இன்னும் சந்தித்துக்க…
-
- 0 replies
- 733 views
-
-
வன்முறையை பரிசளிக்கும் நல்லாட்சி Editorial / 2019 மார்ச் 28 வியாழக்கிழமை, பி.ப. 05:48 Comments - 0 நல்லாட்சியின் இலட்சணம், இப்போதைக்கு எமக்கு விளங்கியிருக்க வேண்டும். கடந்த வாரம் புத்தளத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது, பொலிஸார் நடத்திய தாக்குதல், வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. ஆனால், பொலிஸாரின் இந்த நடத்தையில் ஆச்சரியப்பட அதிகம் இல்லை. வன்முறையையே பதிலாகக் கொண்ட அரச இயந்திரம், தனது இயலாமையை வேறெவ்வாறு வெளிக்காட்டவியலும்? இன்று, போராடுவதைத் தவிர வழி வேறில்லை என்பதை, நல்லாட்சி தனது கடந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில் காட்டிள்ளது. அது தோட்டத் தொழிலாளர்களின் சம்பளக் கோரிக்கையாகட்டும், அரசியல் கைதிகளின் விடுதலையாகட்டும், மாணவர்களது …
-
- 0 replies
- 340 views
-
-
இலங்கை தேர்தல் முடிவுகள் இந்தியாவுடனான உறவில் மாற்றத்தை ஏற்படுத்துமா? முரளிதரன் காசி விஸ்வநாதன்பிபிசி தமிழ், கொழும்பிலிருந்து 10 நவம்பர் 2019 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைOLEKSII LISKONIH / GETTY நவம்பர் 16ஆம் தேதி இலங்கையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தல்கள் அந்நாட்டிற்கும் இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கும் இடையிலா…
-
- 2 replies
- 464 views
- 1 follower
-
-
http://www.youtube.com/watch?v=B0M22bCu15A இந்த காணொளியை நீங்கள் ஏற்கனவே பார்திருப்பீர்கள். என்றாலும் இந்த கால மாற்றத்தின் பின்னர், இன்றும் கூட புலிகளின் மேல் வைக்கப்படும் சில குற்றச்சாட்டுக்கள், புத்தக வெளியீடுகளில் குறிப்பிடும் சில விடயங்கள் எந்த அளவுக்கு ஞாயமானது, உண்மையானது என்ற கேள்விக் குறிகளும் எனக்குள் எழுகின்றது. நல்லதோர் வீணை செய்தோம் ...அதை நலம் கெட புழுதியில் எறிந்துவிட்டோம்.. சொல்லடி சிவசக்தி! எங்கள் சுடர்மிகும் அறிவினை அழித்து விட்டாய்.
-
- 0 replies
- 607 views
-
-
உலகின் இருதயங்களை துண்டாடும் கொரோனா: தீபச்செல்வன் மனிதன் தனித்து வாழ முடியாத காரணத்தினால்தான் குடும்பம் என்ற அலகாகவும் சமூகம் என்ற நிறுவனமாகவும் வாழத் துவங்கினான். மனிதனுக்கு உணவும் உறையுளும் எப்படி முக்கியமோ அப்படித்தான், சக பாடிகளும் ஜோடிகளும் உறவுகளும் முக்கியமானவர்கள். மனிதர்களுக்கு உறவின் தீணியாக, உணர்வின் தீனியாக சக மனிதர்கள் தேவைப்படுகின்றனர். உலகம் இந்த கூட்டிணைவின் புள்ளியில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. மனித நாகரிகங்களும் வாழ்க்கையும் இந்தப் புள்ளியில் புதிய உலகை படைத்துக் கொண்டிருக்கின்றது. கிறிஸ்துவுக்குப் பிற்ப்ட்ட இந்த உலகத்திற்கு 2020 வருடங்கள் வரலாறு. இந்த வரலாறு முழுவதும் பல்வேறு கொள்ளை நோய்கள் ஏற்பட்டிருக்கின்றன. பேரழிவுகளும் நடந்திருக்கி…
-
- 0 replies
- 440 views
-
-
தேர்தல் என்றாலே... விளம்பரங்களும், சுவரொட்டிகளும்... "கட் அவுட்களும்" முக்கிய இடத்தைப் பிடிக்கும். உங்கள் கண்ணில் பட்ட... விளம்பரங்களையும் பதியுங்கள்.
-
- 45 replies
- 4.6k views
-
-
ஈழப் பிரச்சினைக் குறித்தும் அதில் இந்தியத் தமிழர்களின், இந்தியாவின் பங்களிப்புக் குறித்தும், இதுவரை பல கட்டுரைகள் பல அறிஞர்களால் ஆழமாக எழுதப்பட்டிருக்கிறது. அப்படி எழுதப்பட்டிருக்கிற கட்டுரைகள் படிப்பவரை, அவர் எந்த அமைப்பை, எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவரை ஒத்துக் கொள்ள வைக்கிற, கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரே புள்ளியில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செயலாற்ற அழைக்கிற அளவிற்கு இதுவரை ஒரு கட்டுரையும் எழுதப்பட்டதில்லை. ஆனால், முத்துக்குமாரின் கட்டுரை வடிவில் அமைந்திருக்கிற அந்த நான்கு பக்கக் கடிதம், அதை செய்திருக்கிறது. அதை நிரூபித்தது போல், அவரின் எழுச்சிமிகு இறுதி ஊர்வலத்தில் பல்வேறு இயக்கங்களும், மக்களும் லட்சக்கணக்கில் கலந்து க…
-
- 0 replies
- 887 views
-
-
2020ஆம் ஆண்டு இலங்கை மக்கள் அதிகம் ஏமாந்த, ஏமாற்றப்பட்ட ஆண்டாக விடை பெறுகிறதா? ந.லோகதயாளன். January 1, 2021 2020ஆம் ஆண்டு அரச தலைவர்கள், அமைச்சர்களினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது மக்கள் அதிகம் ஏமாற்றப்பட்ட ஆண்டாகவே காணப்படுவதோடு இதில் அதிகம் வஞ்சிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டவர்கள் தமிழ் மக்களாகவே காணப்படுகின்றனர். கிழக்கு மாகாண தொல்லியல் திணைக்களத்தின் செயலணி தனிச் சிங்களச் செயலணியாக நியமிக்கப்பட்டதனை சுட்டிக்காட்டியபோது தமிழர் ஒருவர் நியமிக்கப்படுவார் என ஓர் வெற்று வாக்குறுதியளிக்கப்பட்டது. இருப்பினும் அது ஆண்டு இறுதிவரை இடம்பெறவில்லை. ஏனெனில் தகுதியான தமிழர் இல்லையாம். ஆனால் நியமிக்கப்பட்ட சிங்களவர்கள் அனைவரும் தகுதியானவர்கள். …
-
- 0 replies
- 330 views
-
-
ஐந்து நாட்கள் இத்தனை பாடுபட்டது எதற்காக? | உடனே விழி தமிழா
-
- 0 replies
- 380 views
-
-
பொருத்து வீடுகள் மலையகத்தில் பொருத்தமாக இல்லையா? மலையக மக்களின் வீட்டுத் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளன. பெரும்பாலான மக்கள் பல்வேறு சிரமங்களுக்கும் மத்தியில் லயன் அறைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். லயத்து வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து தனிவீட்டு கலாசாரத்தை இம் மக்களின் நலன் கருதி முன்னெடுக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. எனினும் இதற்கான முன்னெடுப்புகள் காத்திரமானதாக இல்லை. மந்த கதியிலேயே அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடமைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இதற்கிடையில் பொருத்து வீட்டுத் திட்டத்தினை மலையகத்தில் அமுல்படுத்துவது தொடர்பில் தற்போது ஆலோசனைகள் இட…
-
- 0 replies
- 976 views
-
-
முதல் பாகம் படிப்பதற்கு இங்கே சொடுக்கவும் கி.மு.1000 ஆண்டை ஒட்டி மைய ஐரோப்பாவிலும், வட இத்தாலியிலும் வழங்கி வந்த மொழி எத்ருஸ்கன் ஆகும். அப்போது அங்குஇலத்தீன் மொழியும் கிடையாது. கிரேக்க மொழியும் கிடையாது. கிரேக்கர்களும் இலத்தீனியர்களும் குடியேறியவர்களே! எங்கிருந்துகுடியேறினர் என்பது இன்னும் அறுதியிடப்படாத ஆராய்ச்சியாகவே உள்ளது. கிரீட் தீவு என்பவர் பலர். எத்ருஸ்கன் மொழியோஇந்த இரண்டைக் காட்டிலும் பழமையானதாக ஆனால் இந்த இரண்டு மொழிகளுக்கும் தொடர்பற்றதாக இருந்தது. எனினும்திருவிட மொழியோடு எத்ருஸ்கன் மொழிக்குத் தொடர்பு இருக்கிறது. ஐரோப்பாவில் திருவிடமொழி எங்ஙனம் முளைத்தது? (1) திருவிடர்கள் குமரிக்கண்ட மக்கள். குமரிக்கண்டம் சிதையும்போது திருவிட மக்கள் உலகெங்கும் குடியேற…
-
- 1 reply
- 1.3k views
-
-
http://www.4th-tamil.com/blog/wp-content/u.../05/india02.jpg படத்தைப் பெரிதாகப் பார்க்க... இந்தப் பாழாய்ப் போன இலங்கையை ஆசியாக் கண்டத்தின் ஆண்குறி மாதிரித் துருத்திக் கொண்டிருக்கும் புண்ணிய பாரதத்தின் தலைப்பில் வைத்தது யார்? யார்? யார்? கவிதை வரிகள்: கவிஞர் சேரன் குறிப்பு1: படத்தின் மேல் அழுத்தினால் படம் பெரிதாகத் திறக்கும். குறிப்பு2: கருத்துக்கள நிர்வாகம் இது விதிமுறைகளை மீறவதாகக் கருதினால் நீக்கவும்.
-
- 4 replies
- 7k views
-
-
தமிழால் இணைவோம் நீர்.... கடவுளின் முதல் கொடை இந்த உலகிற்கு. 'நீரின்றி அமையாது இவ்வுலகு' என்று தெய்வப் புலவரால் சொல்லப் பட்ட ஒரு வஸ்து. உணவின்றி ஒரு மனிதனால் 7 நாட்கள் வரை உயிர் வாழ முடியும். ஆனால் நீரின்றி 14 மணி நேரத்திற்கு மேல் மனிதனால் தாக்கு பிடிக்க முடியாது. 75% உலகில் நீர் சூழப் பட்டு இருந்தாலும், குடிப்பதற்கான மென்நீர் 2.7% மட்டுமே பூமியில் இருக்கிறது. அதிலும் 2.5% நீர் ஆர்ட்டிக் மற்றும் அண்டார்டிக் துருவங்களில் பனிக்கட்டிகளாக உறைந்து கிடக்கிறது. ஆக, நாம் வாழ்வது மீதம் உள்ள 0.2% குடிநீர் ஆதாரங்களை கொண்டுதான். மழைநீர் முன்னொரு காலத்தில் சுத்தமான குடிநீராகக் கருதப் பட்டு வந்தது. ஆனால் வானம் மாசுபடத் தொடங்கியதும், அதுவும் மாறிப் போனது. …
-
- 0 replies
- 427 views
-