நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
பாவமன்னிப்பா? பரிகாரமா? -கருணாகரன் செந்தில் என்று அழைக்கப்படும் முருகுப்பிள்ளை ரவீந்திரராஜா விடுதலைப்புலிகள் அமைப்பில் ஒரு காலம் செயற்பட்ட போராளி. அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனையிலிருந்து மிக இளைய வயதில் புலிகளோடு இணைந்தவர். இராணுவத்தினருடனான போர்க்களமொன்றில் செந்தில் ஒரு காலை இழந்தார். அதற்குப்பிறகு அவர் கல்முனைக்குச் செல்லவில்லை. பொதுமக்களுக்கான பணிகளையே செய்தார். பழகுவதற்கு இனிய செந்தில், அமைதியான சுபாவமுடையவர். அதனால் மக்களின் மத்தியில் செல்வாக்கைப் பெற்றிருந்தார். இறுதி ஈழப்போரில் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பிறகு, படையினரின் புனர்வாழ்வு முகாமுக்கு (தடுப்புக்கு) சென்று மீண்டார். இப்பொழுது கிளிநொச்சி நகருக்கு அண்மையில் குடும்…
-
- 0 replies
- 227 views
-
-
உன்னதமான இலட்சியப் பயணத்திற்காக தமிழீழ விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்டதே தமிழ் தேசிய கூட்டமைப்பு. அந்த அமைப்பு இருக்கும் வரையில், கட்டுக் கோப்புடன் செயற்பட்டுவந்தது கூட்டமைப்பு. ஆனால், இன்று மக்களின் பிரதிநிதிகள் எனத் தெரிவிக்கும் ஒரு சிலரின் வஞ்சகத்தனமாக போக்கினால் சில குள்ளநரிகள் கூட்டமைப்புக்குள் உள்நுழைந்துள்ளன. முழுக்க முழுக்க சிங்கள அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் படி செயற்பட்டவர்கள், இன்றும் செயற்படுபவர்கள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட நோக்கத்தை சிதைக்கும் நோக்குடன், கொழும்பு அரசாங்த்தினால் பல்வேறு வழிகளில் நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் உள்நுழைய வைத்துள்ளனர். ஒரு கொள்கை, ஒரு கொடி, ஒரு தேசியம் என மிகவும் கன்னியமாக வளர்க்கப்பட்ட கூட்டமைப்பு இன்று பல்வேறு …
-
- 0 replies
- 673 views
-
-
பாவிகளா...சீமான் இதைத்தான் கத்தினான்.கேட்டிகளா?இப்ப தெரிகிறதா உண்மை..!
-
- 3 replies
- 536 views
-
-
இன்றைய செய்தி இது: ஞாயிற்றுக்கிழமை அன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இன்று காலை 10 மணியளவில் கிளி நொச்சி 155 ம் கட்டைப் பகுதியில் பரீட்சார்த்த பயணத்தில் ஈடுபட்டிருந்த புகையிரத்தத்தினால் முதலாவது பொதுமகன் பலியெடுக்கப்பட்டுள்ளார். அன்றைய செய்தி: 2005 ல் ஜனாதிபதி தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர், தனது சொந்த தேர்தல் தொகுதியான, ஹம்பாந்தோட்ட பகுதியில் முதலாவது தேர்தல் பரப்புரையினை ஆரம்பித்தார் மகிந்த ராஜபக்ச. திறந்த வெளி அரங்கம் ஒன்றில் நிகழ்ந்த இந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், மகிந்த வெக்கை காரணமாக புழுக்கத்தில் அவதிப் பட்டார். மேலே இருந்த மின் காத்தாடி வேலை செய்ய வில்லை. எங்கிருந்தோ மின் பொறியியலாளர் அழைக்கப் …
-
- 4 replies
- 832 views
-
-
பிக்கர் ஞானசாரார் 2012ம் ஆண்டு தண்ணியில் கார் ஓடி பிடிபட்டு நீதிமன்றில் நிறுத்தப் பட்ட போது, தனது குற்றதிணை ஒத்துக்கொண்டார். இந்த நிலையில் கோத்தபயாவின் உதவி கிடைக்க, தண்டனையில் இருந்து தப்பி, கோத்தவின் வேலைகளைச் செய்யும் ஓரு அமைப்பினை உருவாக்கினார். இன்று அதே ராஜபக்சக்களின் ஏவுதலில், நீதி மன்றினுள் புகுந்து, எகலியகொட வழக்கில் அட்டகாசம் புரியப் போய், தானே வலியப் போய் நீண்ட நாட்களாக விரித்துக் காத்திருந்த வலையில் சிக்கிக் கொண்டார். ராஜபக்சே மகனே உள்ள போயுள்ள நிலையில், தேரர் கைது, இரண்டாம் பட்ச நிலைக்கு தள்ளப் பட்டு விட்டதால், தேரர் பாடு கஷ்டம் தான். இவரது கதைக் கண்டித்து, அதே நீதிமன்றின் முன்னால், கற்கள் எறிந்து, சிறை வண்டிகளின் குறுக்கே படுத…
-
- 5 replies
- 1.2k views
-
-
குடிப்பது கூழ், கொப்பளிப்பது பன்னீர் என்றொரு முதுமொழி தமிழில் வழக்கில் உள்ளது. எந்த விடயத்துக்கு இது பொருந்துகின்றதோ இல்லையோ, இலங்கையின் அண்மைக்கால அரசியலுக்கும் அதன் நகர்வுக்கும் இந்த முதுமொழி கச்சிதப் பொருத்தம். விடயம் என்னவென்றால், எதிர்வரும் மே மாதத்தில் இடம்பெறவுள்ள வெசாக் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையிடம் நிதியுதவியைக் கோரியிருக்கின்றது இலங்கை. ஒரு பண்டிகையை யாசகமெடுத்தேனும் கொண்டாடி விடுவது என்ற நிலைப்பாட்டில் இருப்பதற்காக அரசாங்கம் வெட்கப்பட வேண்டும். அதேநேரம், வரவிருக்கும் வெசாக் கொண்டாட்டங்களின் பின்னால் உள்ள ஆபத்தான செய்திகளையும் இலங்கையர்கள் ஆழ்ந்து உணர்ந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமுமாகும். இந்த வருடம் தேர்தல் காலமாகையால், அரசாங்கம் …
-
- 1 reply
- 514 views
-
-
பிச்சைக்காரனின் புண் [11 - April - 2007] நேரம் நள்ளிரவு. கட்டுநாயக்க பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் பிரயாணிகள் தங்கும் பகுதியில் பொருத்தப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியில் சுயாதீன ஒளிபரப்புச் சேவையின் செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அந்தச் செய்தியில் அரச படைகள் விடுதலைப்புலிகளின் நிலைகளைத் துவம்சம் செய்து முன்னேறிக் கொண்டிருப்பதாக காட்டப்பட்டது. அதேவேளையில், பிரயாணிகள் தங்கும் பகுதியில் இருந்தவர்களுக்கு பாரிய சப்தம் ஒன்று கேட்டது. இருப்பினும், அங்கிருந்த பயணிகள் அதைக் கணக்கில் எடுத்ததாகத் தெரியவில்லை. ஆனால், அந்தச் சத்தத்தைக் கேட்ட அங்கிருந்த இந்தியப் பிரஜை ஒருவர், அது குண்டு வெடித்ததால் ஏற்பட்ட சத்தமாகவே இருக்க வேண்டும் என நினைத்துப் பதற்றத்துடன…
-
- 5 replies
- 2.5k views
-
-
பிட்டும் தேங்காய்ப்பூவும்.! August 26, 2023 ஓடிப்பிடித்து ஒழித்து விளையாடும் அடையாள அரசியல்…! — அழகு குணசீலன்— கிழக்கில் நீறுபூத்த நெருப்பாய் கிடந்த தமிழ்- முஸ்லீம் இனவாதம் மீண்டும் கொழுந்துவிட்டு எரிகிறது. சாம்பலைத்தட்டி தணலாக்கி எரியவைத்தவர் தமிழரசு எம்.பி.சாணக்கியன் இராசமாணிக்கம் என்று அவர் மீது முஸ்லீம்கள் பழியைப் போட்டாலும் ஒட்டுமொத்த பழி தமிழர்கள் தலையில் கட்டப்பட்டுள்ளது. “பிட்டும் தேங்காய்ப்பூவும்” கதை கேட்டுக் கேட்டு , எழுதி எழுதி புளித்துப்போன ஒன்றுதான். ஆனாலும் கிழக்கின் சமூக, பொருளாதார, அரசியலில் அது இன்னும் பேசப்பட வேண்டிய ஒன்றாக இருப்பதே அதன் சமூக- அரசியல் விஞ்ஞான முக்கியத்துவம்.கிழக்கின் …
-
- 6 replies
- 945 views
-
-
பின் நிலைமாறுகால நீதியும் தமிழினப் படுகொலையும் - அருட்தந்தை எழில் றஜன் யே.ச. 31 டிசம்பர் 2013 ஜோசப் பரராஜசிங்கம் நினைவுப் பேருரை:- திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களே அவையில் கூடியிருக்கும் பெரியோர்களே, சகோதர, சகோதரிகளே அனைவருக்கும் இந்நேர வணக்கங்களை உரித்தாக்குவதில் பேருவகை அடைகின்றேன். மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் நினைவுப் பேருரையை நிகழ்த்துமாறு எனக்கு அழைப்பு விடுத்த திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் ஞாபகார்த்தக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கம்பன் எவ்வாறு தனது இயலாமையை இராமாயணத்தின் ஆரம்பத்திலேயே எடுத்தியம்புகிறானோ அவ்வாறு நானும் இப்பேருரையை ஆற்ற அரசியலில் பழுத்த பேராசான்கள் முன் நிற்கின்றேன். அரசிய…
-
- 0 replies
- 368 views
-
-
அண்மையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் இனஅழிப்பு அரசின் காவல் துறையினரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து தமிழ் வன்முறைக் குழுக்கள் தொடர்பான கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதன் பின்னணியை பலர் புரிந்திருந்தாலும் அது இன்னும் ஆழமாக சென்று அலசப்பட வேண்டிய விடயமாகும். நேரடியான இனஅழிப்பு நடந்து முடிந்த தேசங்களில் தொடர்ந்து இனச்சுத்திகரிப்பை மேற்கொள்ள நேரடி உத்திகளை கையாள முடியாத சூழலில் நுட்பமான உத்திகளை இனஅழிப்பு அரசுகள் கவனமாகக் கையாளும். அதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் பலதரப்பட்டவை. அவை இனஅழிப்பு வடிவங்கள்தான் என்பதே சம்பந்தப்பட்ட இனக்குழுமத்திற்கு புரியாத வகையில் அவை நடைமுறைப்படுத்தப்படும். அதை விட கொடுமையானது, ச…
-
- 0 replies
- 348 views
-
-
பின்னடைவு குறித்த மறுபரிசீலனை இல்லாத மந்தைச் சமூகம் September 20, 2022 — கருணாகரன் — அரசியல், பொருளாதாரம், பண்பாடு எல்லாவற்றிலும் ஈழத் தமிழர்கள் மிகப் பின்னடைந்து கொண்டே செல்கின்றனர். இது மிக அபாயகரமான ஒரு நிலையாகும். தொடரும் இந்த நிலையானது, எதிர்காலத்தில் மிகப் பெரிய சிக்கல்களையும் நெருக்கடிகளையும் உருவாக்கப் போகிறது. என்பதால்தான் இது மிகப் பெரிய அபாகரமான நிலை என்று எச்சரிக்க வேண்டியுள்ளது. இதேவேளை எப்படித்தான் நாம் எச்சரிக்கை செய்தாலும் -உண்மை நிலவரத்தை எப்படித்தான் எடுத்துச் சொன்னாலும் அதைப் புரிந்து கொள்ளக் கூடிய உள நிலையும் அறிதிறனும் தமிழர்களிடம் இல்லை. ஏனென்றால், இதைப் பலர் ஏற்கனவே முன்னுணர்ந்து செய்திருக்கின்றனர். மாற்றுப் பாதையைக…
-
- 1 reply
- 476 views
-
-
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அறிவித்த பந்த்தைத் தொடர்ந்து... பிப்ரவரி 4-ந்தேதியின் காலைப்பொழுது பரபரப்பாகவே விடிந்தது. தர்மபுரி மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருக்க... பல வீடுகளில் கருப்புக் கொடிகள் பறந்தன. தனியார் பேருந்துகள் முற்றிலுமாக நிறுத்தப்பட... ஓடிய ஒரு சில அரசுப் பேருந்துகளும் அங்கங்கே நடத்தப்பட்ட மறியலால் பிற்பகலில் நிறுத்தப்பட்டு விட்டன. பொம்மிடி ரயில் நிலைய வளாகத்தில் காலை 11 மணிக்கு பெட்ரோல் டின்னுடன் தீக்குளிக்க வந்த சிறுத்தைகள் இயக்கத் தைச் சேர்ந்த முருகனை, மடக்கிப் பிடித்து காக்கிகள் கைது செய்ய... பலத்த பரபரப்பு பற்றிக் கொண்டது. பந்த்துக்கு மத்தியில் கிருஷ்ணகிரி பைபாஸ் சாலையில் இருக்கும் டாஸ்மாக் கடைக்குள் புகுந்த ஒரு கும்பல்…
-
- 0 replies
- 761 views
-
-
பிரசல்ஸ் பயங்கரவாதத் தாக்குதல்: விளைநிலத்தின் அறுவடை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ பயங்கரவாதத்தைப் பயங்கரவாதத்தால் ஒழிக்க முடியாது. ஒரு பயங்கரவாதத்துக்கெதிரான இன்னொரு பயங்கரவாதம், இரு தரப்பிலும் அழிவுகளை மட்டுமே பரிசாகக் கொடுக்கிறது. ஆனாற் பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்கள் அதை உணர்வதில்லை. அதை என்றோ உணரும் போது காலங் கடந்துவிடுகிறது. உண்மையில் பயங்கரவாதத்துக்கெதிரான பயங்கரவாதம் மேலும் பயங்கரவாதங்கட்கு வித்திடுகிறது. கடந்த வாரம், பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் பெல்ஜியத்தை உலகெங்கும் பரவும் பயங்கரவாதத்தின் இன்னொரு பலிபீடமாக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத் தலைநகரும் நேட்டோவின் தலைமையலுவலகம் அமைந்த நகரும் எனுஞ் சிறப்பு அடையா…
-
- 0 replies
- 209 views
-
-
பிரஜைகளுக்காக உழைத்த ஒரு சட்டம் : ' இலங்கையில் தகவல் அறியும் உரிமையின் 5 வருடங்கள் ” By VISHNU 30 SEP, 2022 | 12:26 PM செப்டெம்பர் 28 ஆம் திகதியன்று நினைவுகூறப்படும் உலகளாவிய தகவல் அணுகலுக்கான சர்வதேச தினத்தை (IDUAI) முன்னிட்டு, இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI) 'பிரஜைகளுக்காக உழைக்கும் ஒரு சட்டம்: இலங்கையில் தகவல் அறியும் உரிமையின் ஐந்தாண்டுகள்' என்ற தலைப்பில் இணையவழி கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தது. இந்த கலந்துரையாடலில், இலங்கை தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் ஆணையாளர் கிஷாலி பின்டோ ஜயவர்த்தன, ஜூலியஸ் & க்ரீசியின் சிரேஷ்ட சட்டத்தரணி பிரசாந்தி மகிந்தாரத்ன மற்றும் தொழில்நுட்பம், ஊடகம் மற்றும் தொடர்பாடல் சட…
-
- 0 replies
- 271 views
- 1 follower
-
-
பிரதமருடைய புதிய ஆலோசகரின் பின்னணி பிரதமர் மன்மோகன் சிங்கின் முதன்மைச் செயலராக 7 ஆண்டுக்காலம் இருந்த டி.கே.ஏ.நாயர், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு பிரதமரின் ஆலோசகராக செயலாற்றுவார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது. டி.கே.ஏ.நாயர் வகித்துவந்த முதன்மைச் செயலர் பொறுப்பை புலோக் சாட்டர்ஜி என்கிற உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 1974ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் இணைந்த அதிகாரி ஏற்கிறார் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. புலோக் சாட்டர்ஜி, சோனியாஜிக்கு நெருக்கமானவர் என்றும், அவரை முதன்மைச் செயலராக அமர்த்துவதன் மூலம் பிரதமருக்கும், காங்கிரஸ் தலைவருக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் என்று செய்திகள் கூறுகின்றன. டி.கே…
-
- 0 replies
- 641 views
-
-
-
- 0 replies
- 849 views
-
-
-
- 0 replies
- 521 views
-
-
இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என இந்தியாவில் வைத்து இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளமை தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்கள் சிலர் தமது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். "இந்தியா தன்னுடைய நலனுக்காகவும் இலங்கைத் தமிழர் நலனுக்காகவும் இலங்கை தொடர்பில் இதுவரை எடுத்து வந்திருக்கும் தனது நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்" என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் . "இந்திய_ இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது இந்தியாவின் நலன்களை பாதுகாப்பதற்காகவாகும். ஆனால் இன்று இந்திய_ இலங்கை ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர்களின் பிர…
-
- 0 replies
- 251 views
-
-
பிரதமர் யஸ்ரின் லிபரல் கட்சி ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என ஆகுமா? என்பது போகப் போகத்தான் தெரியும்! இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை. உயிர், உடல், செல்வம் மட்டுமல்ல பதவிகளும் நிரந்தரமில்லை. மூன்று தேர்தல்களில் அடுக்கடுக்காய் வென்று வந்த பழமைவாதக் கட்சி நான்காவது தடவை பலத்த தோல்வியைத் தழுவியுள்ளது. இம்முறை மூன்று கட்சிகளுக்கும் இடையே போட்டி கடுமையாக இருந்தது. கருத்துக் கணிப்பின்படி ஒவ்வொரு கட்சியும் முதலாவதாகவும் மூன்றாவதாகவும் மாறி மாறி வந்தன. கடந்த ஓகஸ்ட் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது புதிய சனநாயகக் கட்சி முதலாவதாகவும் பழமைவாதக் கட்சி இரண்டாவதாகவும் லிபரல் கட்சி மூன்றாவது இடத்திலும் இருந்தன. பின்னர் பழமைவாதக் கட்சி முதலாவது இடத்திலும் புதிய சனநாயகக் க…
-
- 0 replies
- 277 views
-
-
மே 18 இனோடு விடுதலை புலிகளின் தலைமைத்துவமே சிங்கள இராணுவத்தினால் துடைத்தழிக்கப்பட்டு, தமிழீழ கனவுகளுடன் தம் எதிர்காலம், வாழ்வு, உறவுகளை தூக்கி எறிந்து அர்பணித்த பல ஆயிரம் போராளிகள் இன்று சிங்கள கொலை முகாங்களில் அடைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு உடபடுத்தப்பட்டும், கிரமமாக கொன்றொளிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், வட/கிழக்கு காடுகளில் ஓரிரு தளபதிகளுடன் சில நூறு போராளிகளே எஞ்சியுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் விடுதலை புலிகளின் தளபதியாக இருந்த கருணாவின் செயற்பாடுகளை விடுதலை புலிகளின் தலைமை கண்டு கொள்ளாமல் விட்டதன் காரணமாக, இப்போராட்ட அழிவின் முதல் அங்கமாக கருணாவின் பிரிவு வழிவகுத்தது. புலிகளுக்கு போராளிகளை கிரமமாக வழங்கிய கிழக்கு பிரதேசம், ஏறக்குறைய விடுதலை புலிகள் தடை செ…
-
- 16 replies
- 2.4k views
-
-
மனம் திறந்துள்ளார் பொப் இசைப் பாடகி மாயா. இலங்கையில் பிறந்த மாதங்கி அருட்பிரகாசம் பின்னர் அரசியல் தஞ்சம் கோரி பிரித்தானியா வந்தார். ஈழத் தமிழ் பெண்ணான இவர், பின்னர் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற பொப் இசைப் பாடகியாக இருக்கிறார். மாதங்கி என்ற பெயரைச் சுருக்கி எம்.ஐ.ஏ என்று மாற்றிக்கொண்டார். மடோனா போன்ற உலகப் புகழ்மிக்க பாடகிகளுடன் இவர் இணைந்து பல இசை நிகழ்வுகளை நடத்தி இருக்கிறார். சமீபத்தில் இவர் மனம் திறந்து பேசியிருக்கிறார். தான் ஒரு பாடகியா இல்லை அரசியல் வாதியா என்று யாரும் முடிவெடுக்க முடியாது. பாடகி அரசியல் பேசக்கூடாது என்று விதிகள் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடப்பது ஒரு இனப்படுகொலையே என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கை குறித்து…
-
- 19 replies
- 1.3k views
-
-
பிரபலங்களுக்கு மட்டுந்தான் சமூகப் பொறுப்பா? கனகலிங்கம் கோபிகிருஷ்ணா சமூகங்களில் பிரபலங்களின் பொறுப்பு என்ன, கடமை என்ன என்பது தொடர்பான விவாதங்கள், எப்போதுமே உருவாகி வந்திருக்கின்றன. ஆனால், பேரழிவுகள் அல்லது அதைப் போன்ற சம்பவங்களின்போது, இது தொடர்பான விவாதங்கள் அதிகம் எழுவதுண்டு. அதேபோலவே, சென்னையில் ஏற்பட்ட கடும் வெள்ளம், அதைத் தொடர்ந்தான குழப்ப, பதற்ற, அழிவு நிலைமைகளின்போது, இந்தியப் பிரபலங்களின் பங்களிப்புத் தொடர்பாக அதிகம் கவனஞ்செலுத்தப்பட்டது. அதைப் போன்றே, அண்மையில் கசிந்த அனிருத் - சிம்பு கூட்டணியின் பாடலின் போதும், இதே கேள்வி எழுப்பப்பட்டது. உண்மையிலேயே…
-
- 0 replies
- 223 views
-
-
(சவுக்கு வெளியீடான ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்....’ நூலுக்கு மறுப்பு தெரிவித்து, அதன் வெளியீட்டு விழாவில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட பதிப்பு, பகுதி-11) ராஜபக்சே - ராணுவத்தைப் போலவே ராஜீவ் அனுப்பி வைத்த ‘அமைதிப் படையும்’ விடுதலைப் புலிகள் தலைவர், உலகத் தமிழினத்தின் தலைவர் பிரபாகரனுக்குத் தான் குறி வைத்தது. விடுதலைப் புலிகளின் படைப் பிரிவான 1.4 ஆம் தளத்தில் ராஜீவ் காந்தியின் படை பிரபாகரனை சுற்றி வளைத்தபோது அவர் தனது மெய்க்காப்பாளர்களால் காப்பாற்றப்பட்டுவிட்டார் என்று ராஜிவ் சர்மா எழுதுகிறார். ராஜீவ் காந்தியும் பிரபாகரன் தலைக்குக் குறி வைத்தார். பிரபாகரன் தலையைக் கொண்டு வராதவரை, தான் அனுப்பி வைத்த படையின் தாக்குதல் நிற்காது என்று சப…
-
- 1 reply
- 686 views
-
-
சிதைக்கப்பட்ட மாவீரர் கல்லறைகள்... சிரித்தபடி நிற்கும் மகிந்த 'கட்-அவுட்'கள்... அ.மார்க்ஸ் பார்த்த ஈழ அனுபவங்கள்! ஈழத் தமிழர்கள் மத்தியில் பேரழிவுகளை ஏற்படுத்திய யுத்தம் முடிந்த இந்த மூன்று ஆண்டுகளில் இரண்டாம் முறையாக அந்தப் பகுதிக்குச் சென்று பல தரப்பினரையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இம்முறை வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தவர்கள் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர். அந்தக் கல்லூரியின் புகழ்பெற்ற முன்னாள் மாணவரும், அந்தச் சங்கத்தின் பொருளாளராக இருந்து சென்ற ஆண்டு மறைந்தவருமான பேராசிரியர் சிவத்தம்பி குறித்து நினைவுப் பேருரை ஆற்றுவதற்காக நான் அழைக்கப்பட்டு இருந்தேன். கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் கடந்த ஜூலை 8 அன்று இந்நிகழ்வு நடைப…
-
- 14 replies
- 5.1k views
-
-
பிரபாகரனின் பாதம் பட்ட நிலத்துக்காகவா போராட்டம்? ஜெரா இராணுவத் தரப்பினால் அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்கும் மக்களின் போராட்டத்துக்கு புதிய விளக்கத்தை கொடுத்திருக்கிறார் இராணுவப் பேச்சாளர். விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கால்பதித்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய காணிகளை மீளப்பெறவே இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டதாக அவரின் ஊடக அறிக்கை சொல்கிறது. ஆர்ப்பாட்டக்காரர்களிடம் காணிக்கான உறுதி இல்லை என்பதும், அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் என்பதும் இராணுவ பேச்சாளரின் மேலதிகக் குற்றச்சாட்டுக்களாக அமைந்திருந்தன. இந்தக் குற்றச்சாட்டுகள் ஏற்கத்தக்கவையல்ல. வன்னியில் பிரபாகரனின் அல்லது புலிகளின் காணிகள் என்று எதுவும் இருக்கவில்லை. வருட அடிப்…
-
- 0 replies
- 558 views
-