நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
முப்பது வருடங்களுக்கு மேல் தொடர்ந்த அத்தியாயம் ஒன்றினை அடுத்து இப்போது இரண்டாவது । । இது மேலும் தொடரும் என்பதில் ஐயமில்லை ........ அங்கின நெலம என்ன?" எல்லாம் முடிஞ்சி வா," ஆ? என்ன சொல்றிங்க" "எங்கட ஊடு, கடே, ஆட்டா எல்லாத்துக்கும் நெருப்பு வெச்சி வா, வைப் புள்ளங்க கூட ரோட்டுல நிக்கிறம் வா😭, " "யாரு வா செஞ்சாங்க, எங்க இருக்கிறிங்க இப்ப? கேபியூ போட்டுத்தானே ஈக்கி?" "எங்களுவளுக்குத்தான் கேபியூ போட்டிருக்காங்க வா, அவகளுக்கு இல்ல😭" "சரி அழாதீங்க வா, எங்க இருக்கிங்க இப்ப?" "எங்கட ஆட்டாக்கு நெருப்பு வெச்சி, ஊடு கட எல்லாம் எரிஞ்சிட்டுவா, ரெண்டு பள்ளியும் ஒடச்சி, குரான் எல்லாம் நாசம் பன்னிட்டாங்க வா, நடந்து புள்ளயல் வைப் எல்லாம் எங்கவா போவம்" …
-
- 1 reply
- 471 views
-
-
தமிழ் நாட்டில ஒரு கருனாதிதி மாதிரி, இங்க ஒரு ராஜபக்சே. ஐந்து தடவை முதல்வர், இருந்தும் 6 வது முறையும் ஏதும் கிடைக்குமா என்று ஏங்கி நிக்கிறார். இங்கே அதை விட கேவலம். MP , பிரதமர், இருமுறை ஜனாதிபதி எண்டு இருந்த ஆள். ஏதாவது தேறுமா எண்டு MP ஆக பின் வரிசையில் குந்தப் போகுது. இரகசியமாக, தனக்கு ஜனாதபதியாக இருந்ததால் கிடைத்த அரச மான்ய சலுகைகள் தொடர வேண்டும் என்று கோரிக்கை வேற. இந்திய ஜனாதிபதியா இருந்த மறைந்த அப்துல் கலாம், தமிழ் நாடு MLA ஆனா, எப்படி இருக்கும் ? பேராசை ஜன்மங்கள். 'தானும் படான், தள்ளியும் படுக்கான்' எண்டு இவையல வைச்சு தன சொல்லி இருக்கினம் போல. இதுகளை கடவுளாப் பார்த்து தூக்கினா தான் உண்டு.
-
- 10 replies
- 1.9k views
-
-
CHINESE IN ALLAIPITI (JAFFNA) - V.I.S.JAYAPALAN அல்லைப்பிட்டியில் சீனர்கள் - வ.ஐ.ச.ஜெயபாலன் . . அல்லைபிட்டி அகழ்வாரட்ச்சி புலத்தில் புதிதாக சீன மட்பாண்டம் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. எங்கள் மண்ணின் வரலாற்றில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும். எனினும் பலர் நினைப்பதுபோல 1980ல்தான் அல்லைப்பிட்டியில் சீன மட்பாண்டங்கள் கண்டறியப்பட்டன என்கிற கருத்து தப்பானதாகவும். அதற்க்கு முன்பே மணல் கிள்ளைக்காரர்களுக்கு இவ்விடாம் தெரிந்திருக்கிறது. நான் யாழ்பல்கலைக்கழக மாணவர் மன்ற தலைவராக இருந்த சமயம் (1976-78) தற்செயலாக மண் அள்ளுகிறவர்களால் முதல் சீன மண்பாண்டம் கண்டுபிடிக்கபட்டிருந்தது. அதற்க்கு முன்பே மண் ஏற்ற…
-
- 3 replies
- 815 views
-
-
இராணுவ பலத்தின் மூலம்தான் மனித சமூகம் ஒவ்வொன்றும் தன்னை வரலாற்றில் முன்னிலைப்படுத்தியுள்ளது. இவ் நீண்ட வரலாற்றுக் கால ஓட்டத்தில் போர் வீரர்களைத்தான் அன்றிலிருந்து இன்றுவரை மனிதகுலம் நினைவு கூருகிறது, போற்றுகின்றது. இவ்வாறு மனித வரலாற்றை சமைத்து எமக்குத் தந்துவிட்டு மடிந்து போன மானவீரர்களை உலகெங்கும் பரந்து வாழும் மனித சமூகம் கொண்டாடிக்கொண்டிருந்தாலும், இன்றைய உலகில் ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட வர்க்கங்களின் விடுதலைக்காக போராடிவீழ்ந்த வீரர்களை கௌரவிப்பதில் தமிழீழ மக்கள் இன்றும் முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர். அந்த வகையில் இந்த நவம்பர் மாதம் 11ம் திகதி பிரித்தானியா, அவுஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகள் தங்களின் நாட்டுக்காக வீழ…
-
- 3 replies
- 504 views
-
-
கோழியுடன் எழுந்திருந்து கோட்டானுடனே துயிலும் கோலமே வாழ்க்கை ஆச்சு!- 24 ஜனவரி 2016 செய்தியாக்கம்- குளோபல் தமிழ் விசேட செய்தியாளர், கிளிநொச்சி இப்பொழுதெல்லாம் கிளிநொச்சியில் உயர்தரப் பரீட்சை எழுதிய பிள்ளைகள் சித்திபெறத் தவறியதும் ஆடைத் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்றுவிடுகிறது என்றும் நல்ல திறமையான மாணவர்கள்கூட இவ்வாறு வீட்டு நிலமை மற்றும் வருவமானத்திற்காக தங்கள் கல்வியை முடித்துக் கொள்கிறார்கள் என்றும் ஆசிரியராக பணியாற்றும் எனது நண்பன் ஒருவன் கவலையோடு சொன்னான். தினமும் இருள் புலராத அதிகாலையிலும் இருள் சூழ்ந்த மாலையிலும் ஆடைத்தொழிற்சாலைக்கு செல்லும் யுவதிகளைப் பார்க்கும் ஒவ்வொரு தருணத்தில் அந்த வா…
-
- 0 replies
- 223 views
-
-
யாழ் நூலக எரிப்பு! புத்தங்களோடு இன வன்முறை புரிந்த செயல்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்: ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அதன் பண்பாட்டை, அதன் அறிவுத்தடங்களை, அதன் சரித்திரத்தை அழிக்க வேண்டும் என்பது இன அழிப்பு சார்ந்த கொள்கைகளாக பின்பற்றப்படுகின்றன. அப்படித்தான் ஈழத்தின் யாழ் நூலகம் அழிக்கப்பட்டது. இன்று யாழ் நூலகம் எரிக்கப்பட்ட கறுப்பு நாள். 1981ஆம் ஆண்டு இதேபோல் ஒரு நாளின் நள்ளிரவில் யாழ் நூலகம் எரியூட்டப்பட்டது. அந்த நாள், யாழ் நூலம் இன நூலெரிப்பு வன்முறையால் அழிக்கப்பட்ட நாள். இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்கள் தங்கள் உரிமையை குறித்து குரல் எழுப்பப்பட்ட காலத்தில் அவர்களின் குரலின் அறிவுத்தடங்களை, இன உரிமைப் போராட்டத்தின் ஊற்றிடங்களான …
-
- 0 replies
- 203 views
-
-
-
வை.கோ அவர்களின் மாவீரர் நாள் உரை (துல்லிய ஒளி வடிவில்)
-
- 1 reply
- 1.4k views
-
-
வெல்லவாய, ஹண்டபனகல பகுதியில் நேற்று (28) பிற்பகல் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்ததாக வெல்லவாய பொலிசார் தெரிவித்தனர். நவகமுவாவிலிருந்து கட்டராகம பகுதிக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் குழு ஹண்டபனகல பகுதியில் தரித்து, மதுபான விருந்து வைத்துள்ளனர். இதன்போது இரண்டு கிராமவாசிகளைத் தாக்கி அவர்களின் மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த ஹடபனகல பகுதி கிராம மக்கள் சுற்றுலாப் பயணிகளை சுற்றிவளைத்து தாக்கி, முழங்காலில் உட்கார வைத்துள்ளனர். இரண்டு கிராமவாசிகளையும் தாக்கிய சில இளைஞர்களை மட்டுமே, கிராமவாசிகள் தாக்கியுள்ளனர். ஏனையவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. காயமடைந்த 6 பேரும் மொனராகல பொது வைத்தியசாலை மற…
-
- 4 replies
- 575 views
-
-
சிங்கள வரலாற்றினுள் புகுந்து குடையும் விக்கியர் இன்று பாராளுமன்றில், பேசிய யாழ் மாவட்ட எம்பி விக்கினேஸ்வரன், திருகோணமலை திரியாய பகுதியில், மக்களின் விவசாய நிலத்தினுள் செல்ல விடாமல் ஒரு பிக்கு ஒருவர் தடுத்துள்ளமை, மிகவும் கவலைக்குரியது. 40% மக்கள் விவசாயத்தினை வாழ்வாதாரமாக கொண்டுள்ள ஒரு நாட்டில், தீடீரென எந்த வித அரச முன்னெடுப்புகளும் இல்லாமல், ஒருவர் விவசாயிகளை தடுப்பதை அனுமதிக்க முடியாது, இதனை பிரதமர் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என்று தெரிவித்தார். மேலும், இந்த வரலாற்று சம்பந்தமான இடங்களை தெரிவு செய்யும் வேலைகளை தனிமனிதர்களிடம் கையளிக்காமல், தமிழ், இஸ்லாமிய, சிங்கள மற்றும் தென்னாசிய வரலாறு தெரிந்த வெளிநாடு ஆய்வலர்களை உள்ளடக்கிய ஒரு குழு ஒன்றினை அமைக்க வேண்டும்…
-
- 18 replies
- 2.7k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழினத்தின் இடர்கள் என்னுடைய தரப்படுத்தல்...... 1 Osama bin laden 2 Indias' foreign policy over Sri Lanka 3 Ban ki Moon 3 China 4 Sonia 5 Hindu Ram 6 Karuna & co 7 Karunanithi 8 Gotabaya 9 Sarath fonseka 10 George W bush 11 Mahinda Rajapakshe 12 World Bank and IMF 13 Richard BOucher(America's defence commander for asia and pacific region) 14 Arumugam thondaman 15 Chandrasekar 16 Yasusi Akasi 17 scho 18 subramanya swami இது சரியா??
-
- 7 replies
- 2k views
-
-
இரண்டாவது பதவிக்காலத்துக்கு தயாராகும் கோதாபய- கேணல் ஆர்.ஹரிஹரன் நரகத்துக்கான பாதை நன்னோக்கத்துடனேயே வகுக்கப்படுகிறது ‘ என்ற மணிகொழி கோதாபய அரசாங்கம் நேர்மையான நோக்ககத்துடன் செயற்படுவதாக உரிமைகோரிக்கொள்கின்ற போதிலும், அதன் மோசமான செயற்பாடுகளுக்கு பிரயோகிக்கப்படக்கூடியதாகும்.’ செயல்வீரர்’ என்றும் ( புலிகள் இயக்கத்தை ஒழித்தமைக்காக)’ ஒழித்துக்கட்டுபவர்’ என்றும் புகழப்படுகின்ற ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச தேர்தலுக்கு முன்னதாக அவர் உறுதியளித்த ‘ சுபிட்சமும் சீர்மையும் கொண்ட எதிர்காலத்தை ‘ நாட்டு மக்களுக்கு ஏற்படுத்திக்கொடுப்பதில் தொடர்ந்து தடுமாறிக்கொண்டிருக்கிறார். ‘ ஒழித்துக்கட்டுபவரின்’ முயற்சிகளில் பெருமளவானவற்றை தற்போது தொடருகின்ற கொவிட் –19 பெருந்தொற்று பாதித்துவிட்…
-
- 0 replies
- 189 views
-
-
வடக்கில், இராணுவத் தலையீட்டைக் குறைப்பது தொடர்பாகவும், ஆளுனரை மாற்றுவது தொடர்பாகவும், சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சு நடத்தப் போவதாக, வடக்கு மாகாண முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், வடக்கு மாகாணசபைக்கு அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பாக மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் பேச்சு நடத்த விருப்பம் கொண்டுள்ளதாக கூறியுள்ளார். வடக்கில் இராணுவத் தலையீட்டைக் குறைப்பது தொடர்பாகவும், வடக்கில் ஆளுனராகத் தற்போது பணியாற்றும் முன்னாள் இராணுவ அதிகாரியை நீக்குவது தொடர்பாகவும், முன்னுரிமை கொடுத்து பேசப் போவதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமது சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்துவதற்கான ஆணையை தமிழ்த் …
-
- 0 replies
- 506 views
-
-
நானும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் 1977 இலிருந்து இவர்களை நான் ஆதரித்து வந்துள்ளேன் இவர்களது அனேகமான செயற்பாடுகள் தமிழ் மக்கள் நலம் சார்ந்ததால் இன்றும் ஆதரிக்கின்றேன் இன்னும் ஆதரிப்பேன் இன்று இவர்களில் சிலரது செயற்பாடுகளில் சிலருக்கு சந்தேகங்கள் வருகின்றன. எனக்கல்ல..... அவர்களது நிலையை நான் புரிந்து கொள்கின்றேன் நான் இங்கிருந்து முகம் காட்டாது எழுதுவதற்கும் அவர்கள் பேய்கள் பிசாசுகள் நரிகள்.......???? என்போருக்கு மத்தியிலிருந்து சொல்லும் அல்லது செய்யும் ஒவ்வொன்றும் அவர்களை மரணத்துக்கு இட்டுச்செல்லும்.....
-
- 7 replies
- 892 views
-
-
இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டின் இறைமையை மீட்டெடுப்பதற்காக இரத்தம் சிந்தியவர்கள். போர்த்துக்கேயர்கள் தொடங்கி ஒல்லாந்தர் பிரித்தானியர்வரை அந்நிய ஆதிக்கத்தை தொடர்ச்சியாக ஒழிக்கப் போராடியவர்கள். இந்த நாட்டின் இறைமையின் பிரவிடாப் பாகத்தின் மீது பூரண உரிமை கொண்ட சமூகம் முஸ்லிம் சமூகம். அதனால்தான் முஸ்லிம் சமூகம் இலங்கையின் அனைத்து மூலைகளிலும் பரவி வாழ்கிறோம். இலங்கை முஸ்லிம்களுக்கு அன்றைய மன்னர்களால் அபயமளிக்கப்பட்ட பூமி. ஆதம் நபி முதலில் கால்பதித்ததால் இது முஸ்லிம்களுக்கு புனித பூமியும்கூட. இன்று நமக்கு நேர்ந்தது என்ன? இன்னும் அறிய வேண்டுமா? சித்தி லெப்பை ஆய்வு மன்றத்தின் ஏற்பாட்டில் முஸ்லிம் தேசியம் எழுச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வாருங்கள். தமிழ்நாட்டு பேராசிரியர்…
-
- 0 replies
- 253 views
-
-
அரசதுறை வியாபாரத்தில் ஈடுபட்டதால் மகாவலி போன்ற 100 திட்டங்களை நிர்மாணிப்பதற்கான பணம் வீணடிக்கப்பட்டது - ஜனாதிபதி Published By: DIGITAL DESK 5 23 MAR, 2023 | 04:06 PM மறைந்த பிரதமர் தேசபிதா டி.எஸ்.சேனாநாயக்கவின் தத்துவத்தை நாம் ஒதுக்கினாலும் பிரதமர் லீ குவான் யூ அந்த தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றி சிங்கப்பூரை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எமது நாட்டின் அரசியல்வாதிகள் இலங்கையை சிங்கப்பூராக மாற்ற வேண்டும் என்று கனவு கண்ட போதும் கடந்த 75 வருடங்களில் சில அரசியல் இயக்கங்களின் தீர்மானங்களினால் இலங்கைக்கு ஏற்பட்ட அழிவுகள் எண்ணிலடங்காது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டின…
-
- 0 replies
- 363 views
- 1 follower
-
-
சட்டமறுப்புப் போராட்டத்துக்கு தமிழ்க் கட்சிகள் தயாராகுமா?-அரசியல் ஆய்வாளா் யதீந்திரா செவ்வி May 1, 2023 தமிழா் தாயகப் பகுதிகளில் பகிஷ்கரிப்புப் போராட்டம் ஒன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றிருக்கின்றது. புதிதாக அறிமுகப்படுத்தபடவிருக்கும் பயங்கரவாத எதிா்ப்புச் சட்டம் மற்றும் தமிழா் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்கு எதிராகவே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. சட்டமறுப்புப் போராட்டம் ஒன்றுக்கும் தாம் தயாராக இருப்பதாக அன்றைய தினம் சுமந்திரன் நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கின்றாா். இவை குறித்து உயிரோடைத் தமிழ் தாயக களம் நிகழ்வில் இந்த வாரம் தமது கருத்துக்களைப் பகிா்ந்துகொண்டிருந்தாா் அரசியல் ஆய்வாளா் யதீந்திரா. அவரது செவ்வியின் முக்கிய…
-
- 0 replies
- 190 views
-
-
ஆங்கிலத்தில் சொல்வார்கள்: damn you do and damn you don't. If you do whatever it is you are going to do then you are in trouble, if you don't act out what you were going to do then you are in trouble another way. நீங்கள் ஒரு விடயத்தினை செய்ய முனைந்தாலும் பிரச்னை, அந்த விடயத்தினை செய்யாமல் விட்டாலும் பிரச்னை தான். இது கூட்டமைப்புக்கு சரியாக பொருந்தும். அதற்கு முன்னால் மூன்று தெரிவுகள் இருந்தன. மகிந்தவுக்கு ஆதரவு, ரணிலுக்கு ஆதரவு, நடுநிலை. இதில் மகிந்தவுக்கு ஆதரவு தந்தாலும் பிரச்சனை, நடுநிலைமை வகித்தாலும், அதுவே மகிந்தவுக்கு சார்பாகி பிரச்சனை. ஆகவே மூன்றாவது தெரிவே அவர்கள் முன் இருந்த தவிர்க்க முடியாத தெரிவு ஆக இருந்தது. மறுபுறம்... சர்வத…
-
- 11 replies
- 1.5k views
-
-
சமூகமாக வாழுதல் என்னும் சவால் Editorial / 2019 ஏப்ரல் 25 வியாழக்கிழமை, மு.ப. 01:32 Comments - 0 பல மொழி பேசுபவர்களையும் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுவோரையும், வேறுபட்ட இனக்குழுக்களைச் சேர்ந்தோரையும் கொண்ட பன்மைச் சமூகமே இலங்கைச் சமூகம். ‘சேர்ந்து வாழுதல்’ என்பதே இலங்கை மக்களின் தாரகமந்திரமாக இருக்கிறது. இச்சமூகம் தொடர்ச்சியாக நெருக்கடிகளைச் சந்தித்து வந்துள்ள போதும், சமூகமாகச் சேர்ந்து வாழுதல் என்பது, நடைபெற்று வந்துள்ளது. மூன்று தசாப்தகாலப் போர், இனக்குழுக்களிடையே அச்சத்தையும் ஐயத்தையும் உருவாக்கிய போதும் மக்கள் சேர்ந்து வாழ்ந்தார்கள். இலங்கையையே ஆட்டம் காணச் செய்துள்ள பயங்கரவாதத் தாக்குதல்கள், மக்கள் இணைந்து ஒன்றாக வாழ்தலில் புதிய சவால…
-
- 0 replies
- 306 views
-
-
HISTORICAL OPPORTUNITY - GREETINGS FOR OPPOSITION LEADER SAMPANTHAN வரலாற்று சந்தர்ப்பம். எதிர்க் கட்ச்சித் தலைவர் சம்பந்தனுக்கு வாழ்த்துக்கள், - வ.ஐ.ச.ஜெயபாலன் என்போன்றவர்கள் எதிர்பார்த்ததுபோலவும் பிரார்த்தித்ததுபோலவும் தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக மேம்பட்டுள்ளது. எதிர்கட்சி தலைவர் சம்பந்தனுக்கு முன்கூட்டியே என் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளேன். இப்போது என் வாழ்த்துக்களையும் ஆதரவையும் பதிவு செய்கிறேன். அண்மைக்கால வரலாற்றில் விடுதலைக்குப் போராடும் பல்வேறு தேசிய இனங்கள் இன்று நாம் நிற்கும் புள்ளியைக் கடந்து வெற்றிபெற முயன்றுள்ளன. அவற்றுள் எரித்திரியா, கொசோவோ கிழக்கு தீமோர் தென் சூடான் ஸ்கொட்லாந்து கியூபெக் போன்ற தேசிய இனங்கள் இன்று நாம் நிற்க்கும் புள…
-
- 10 replies
- 797 views
-
-
பொதுத் தேர்தலுக்கு முன்னர் தொடரப்போகும் அதிரடிகள் – அகிலன் September 30, 2024 ஜனாதிபதித் தோ்தல் நடைபெற்று முடி வடைந்த நிலையில், அதிரடியான அரசி யல் நகா்வுகளை கடந்த சில தினங்களில் காணக் கூடியதாக இருக்கின்றது. ஜனாதிபதி பதவியேற்பு, புதிய பிரதமா், மூன்று உறுப்பினா் அமைச்சரவை நியமனம் என்பவற்றைத் தொடா்ந்து நாடாளு மன்றமும் கலைக்கப்பட்டுவிட்டது. குறுகிய காலத்துக்குள் அடுத்த பொதுத் தோ்தலை நாடு சந்திக்கப்போகின்றது. அரசியல் கட்சிகள் அனைத் துமே பொதுத் தோ்தலை எவ்வாறு சந்திப்பது என்பதில் தமது கவனத்தைக் குவித்துள்ளன. ஜனாதிபதித் தோ்தலைப் பொறுத்தவரை யில் அதன் முடிவு ஓரளவுக்கு ஊகிக்கப்பட்டதுதான். அதேவேளையில், பல்வேறு கருத்துக் கணிப்புக் களும் தேசிய மக்கள் சக்தி அதி…
-
- 0 replies
- 217 views
-
-
படத்தின் காப்புரிமை SAJITH MEDIA Image caption சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய பல கட்சிகள், அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்த புதிய கூட்டணியொன்று நேற்று (திங்கட்கிழமை) உருவாக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவின் தலைமையில் இந்த கூட்டணி திங்கட்கிழமை உருவாக்கப்பட்டது. கொழும்பு தாமரை தடாகம் மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் இந்த நிகழ்வு நேற்று முற்பகல் இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில், ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய மனோ கணேஷன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ரவூப்…
-
- 1 reply
- 657 views
-
-
மூணாறில் அண்மையில் நடந்த மண்சரிவில் கொல்லப்பட்ட 86 தமிழர்களின் இழப்புக்கு நீதிகோரி தமிழர்களின் பிரதிநிதியான கோமதி அவர்கள் வீதியில் போராடி வருகிறார். தமிழர்கள் கொல்லப்பட்டு 7 நாட்களுக்குப் பின்னர் இப்பகுதிக்கு விஜயம் செய்தார் கேரள முதலமைச்சர். அவரது கார் தொடரணி போகும் பாதையில் நின்று அவரிடம் நீதிகேட்க, தன் உயிரையும் துச்சமென மதித்துப் போராடும் கோமதியை ஏறெடுத்தும் பார்க்காத முதலமைச்சர், தனது அதிகாரிகளுடன் இடத்தைப் பார்வையிட்டுவிட்டுச் சென்றுவிட்டார். வீதியில் போராடியதற்காகக் கோமதியை சிறையில் அடைத்துவிட்டது கேரளக் காவல்த்துறை. தமிழர்கள் என்பதற்காக வஞ்சிக்கப்படும் எமதினத்தின் வாக்குகளை விலைபேசி பதவிக்கு வரும் உள்ளூர் அரசியல்வாதிகள், பதவிக்கு வந்தபின்னர் தமிழர்கள் என்று …
-
- 2 replies
- 489 views
-
-
உலகே உனக்கு கண்ணில்லையா..? -காணொளி http://video.google.com/videoplay?docid=7804172462482091873
-
- 0 replies
- 1k views
-