நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
நைஜீரிய விடுதலைப் போராட்டத்தில் ஈழப் பெண் போராளி: கவல்கணன். பெண் போராளிகள் எங்கே? மாதர் தினம் என்றதும் பெண் விடுதலை பற்றி பலரும் பேச ஆரம்பித்து விடுவார்கள். பெண் விடுதலை பற்றி பேசுவதை விட விடுதலைக்காகப் போராடிய பெண்கள் பற்றிப் பேசினால் என்ன என்று எனது சிந்தனையில் ஒரு போராட்டம். அந்தத் தேடலின் பதிவு தான் இது. சிறு வயதிலிருந்து விதைக்கப்படும் சிந்தனைகள் தாம் நாம் வளர்ந்த பின்னர் எம் நடத்தையினை முடிவு செய்கின்றன என்று நம்புபவன் நான். “வீண் பிள்ளை என்றாலும் ஆண் பிள்ளை” என்று சொல்லி வளர்த்தால் வளர்ந்த பின் அந்த ஆண் பிள்ளை தான் என்னவும் செய்யலாம் என்று சிந்தப்பதைத் தடுக்க முடியாது தானே. “கற்காலத்தில் ஆண்வேட்டையில்ஈடுபட,பெண்உணவுசேகரிப்பதிலும், குழந்தைகளைக…
-
- 0 replies
- 558 views
-
-
குடிமக்களை கையேந்தி பிச்சை எடுக்க வைக்கும் அரசு தன்மானமும், சுயமரியாதையும் உள்ள மனிதர்கள் ஒருபோதும் பிச்சை எடுத்து உயிர் பிழைக்க விரும்புவதில்லை. வள்ளுவர் கூட “பிச்சை எடுத்துத்தான் ஒரு மனிதன் உயிர் வாழ வேண்டும் என்றால் குடிமக்களுக்கான பொருளைத் திரட்டித் தரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் நாடாளுபவன், அப்படிக் கடமையைச் செய்யாமையின் காரணமாக இரப்பவரைப் போலவே தானும் எங்கும் அலைந்து திரிந்து கெடுவானாக” என்கின்றார். ஆனால் இன்றோ அடுத்த வேளை உணவிற்கு யாராவது வழி செய்ய மாட்டார்களா என மக்கள் கதவுகளைத் திறந்து வைத்து காத்துக் கிடக்கின்றார்கள். ஊரடங்கு அறிவிக்கப்படும்வரை தன்னுடைய சொந்த உழைப்பில் சுயமரியாதையோடு வாழ்ந்தவர்கள் இன்று தங்கள்முன் உணவுப் பொருளோடு நீளும் தர்ம பிரபுக்கள…
-
- 0 replies
- 497 views
-
-
எம்ஜிஆர் மறைந்தும் பலர் மனங்களில் வாழும் மனிதர் , தமிழகத்தில் இருக்கும் முதியவர் சொன்னார் , ஈழ தமிழர்களுக்காக இரத்த கண்ணீர் விட்டது என்றால் அது எம்ஜிஆர் , மற்ற அரசியல் வாதிகள் குள்ள நரிகள் என்று , இந்தக் காணொளி பல வருடங்களுக்கு பிறக்கு இப்போது தான் மீண்டும் பார்க்கிறேன் , ஆரம்ப கால எம் போராட்ட வளர்சிக்கு எம்ஜிஆரின் பங்கு மிக பெரியது
-
- 0 replies
- 524 views
-
-
2009 இலங்கை இறுதிப்போரையடுத்து, ஏற்கெனவே சி.பா.ஆதித்தனாரால் நடத்தப்பட்ட ‘நாம் தமிழர் கட்சி’ என்னும் பெயரைத் தூசுதட்டி எடுத்து 2010-ல் கட்சியைத் தொடங்கினார் சீமான். ``உறவுகளே’’ சீமான் தன் கட்சித் தொண்டர்களை இப்படித்தான் அழைப்பார். அந்த உறவுகளில் ஏற்பட்டுள்ள பிரிவும் பிரச்னைகளும்தான் இப்போது பரபரப்பாகப் பேசப்படுகின்றன. என்ன ஆச்சு நாம் தமிழர் கட்சிக்கு? கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன், ஆனூர் ஜெகதீசன், விடுதலை ராசேந்திரன் ஆகியோர் இணைந்து உருவாக்கிய ‘தந்தை பெரியார் திராவிடர் கழக’ மேடைகளில் பகுத்தறிவு, தமிழின உணர்வு, ஈழ ஆதரவு, சாதி மறுப்பு ஆகியவற்றைப் பேசக்கூடிய பேச்சாளராக அரசியல் உலகத்துக்கு அறிமுகமானார் சீமான். …
-
- 29 replies
- 3.6k views
-
-
யாழ்பாண இராச்சியத்தின் மன்னனாக இருந்து 1621ம் ஆண்டு போத்துக்கீசரால் சிறைப்பிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்ட சங்கிலி மன்னனின் 28 வது வாரிசு என நெதர்லாந்திலிருந்து வெளிவந்திருக்கின்றார் ரெமிகிஸ் கனகராஜா. இவரை கடந்த 2005 ம் ஆண்டு போத்துக்கீசர் சங்கிலி மன்னனின் வாரிசு என அங்கீகரித்துள்ளனர். உலகிலுள்ள பல அரச குடும்பத்தினருடனும் யாழ்பாண இராச்சிய மன்னனாக தான் தொடர்பில் இருப்பதாக இலங்கைநெற் இற்கு அவர் வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். செவ்வி கண்டவர் பீமன். கேள்வி: உங்களுக்கும் மன்னன் சங்கிலியனுக்கும் இடையேயான உறவு முறை என்ன? பதில்: நான் சங்கிலிய மன்னனின் 28 வது வாரிசு. கேள்வி: உங்கள் 28 பரம்பரைகள் தொடர்பில் விளக்கமாக கூறமுடியுமா? பதில்: இலங்கையின் யாழ்பாண ராட்சியத்தை கடைசியாக…
-
- 49 replies
- 4.8k views
-
-
திருமணமும் இராணுவ மயமாகிறதா? எதற்காக இந்த புதிய நடைமுறை? – அகிலன் January 3, 2022 திருமணமும் இராணுவ மயமாகிறதா?: வெளிநாட்டுப் பிரஜைகளைத் திருமணம் செய்ய விரும்பும் இலங்கையர்கள், புதிய தடையைத் தாண்ட வேண்டியவர்களாக உள்ளார்கள். குறிப்பிட்ட வெளிநாட்டவர் குறித்த பாதுகாப்பு அமைச்சின் ‘கிளீயரன்ஸ் றிப்போர்ட்’ வரும் வரையில் அவர்கள் காத்திருக்க வேண்டும். ஆக, திருமணம் கூட இப்போது இராணுவ மயமாக்கப்படுகின்றது. பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை பாதகமானதாக இருந்தால், அடுத்த கட்டம் எவ்வாறானதாக இருக்கும் என்பதும் தெரியவில்லை. மாவட்டப் பதிவாளர்கள் மற்றும் மேலதிக பதிவாளர்களுக்குப் பதிவாளர் நாயகத்தினால் கடந்த வாரம் அனுப்பப்பட்ட சுற்றுநிருபம் ஒன்றிலேயே, இந்த புதிய நிபந்தனைகள் க…
-
- 6 replies
- 518 views
-
-
மக்கள் நீதிமன்றம் சிறிலங்காவிற்கு வழங்கிய இறுதித் தீர்ப்பு அறிக்கையைப்படிப்பதற்கு :http://www.tamilkathir.com/news/2589/58//d,full_view.aspx
-
- 0 replies
- 640 views
-
-
புலம்பெயர் தமிழர்கள் மீது இலங்கை அரசு தொடுத்துள்ள இராஜதந்திரப் போர் – வேல்ஸ் இல் இருந்து அருஷ் சிறீலங்காவின் புதிய அரசாங்கம், அதன் பழைய அரச தலைவரின் தலைமையில் முற்றுமுழுதான ஒரு இராஜதந்திரப்போரில் தற்போது இறங்கியுள்ளது. புதிய வெளிவிவகார அமைச்சர் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றார். சிறீலங்கா அரசின் இந்த இராஜதந்திரப்போர் என்பது எதற்காக? யாரை எதிர்த்து? உலகில் உள்ள மனிதாபிமான மற்றும் மனித உரிமை அமைப்புக்கள், அனைத்துலக அரச சார்ப்பற்ற நிறுவனங்கள், மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் கருத்துக்களை தெரிவித்துவரும் மேற்குலகம், சிறிலங்காவில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆலோசனைக்குழுவை அமைக்க முற்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றை எதிர்த்தே சிறீலங்…
-
- 0 replies
- 498 views
-
-
ஆசியா முழுவதும் தனது பிரசன்னத்தை அதிகரிக்க அமெரிக்கப் படைத்தரப்பு திட்டங்களை மேற்கொண்டுள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்த அமெரிக்க படைத்துறை அமைச்சர் ரொபேர்ட் கேட்ஸ், அவுஸ்திரேலிய படைத்தரப்பினருடன் உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுடன் படைத்தரப்பு ஒத்துழைப்பை கட்டி எழுப்புவதன் மூலம் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கப் படைத்தரப்பின் பங்களிப்பை விரிவுபடுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார். மெல்போர்னுக்கு கடந்த சனிக்கிழமை விஜயம் செய்த அமெரிக்க படைத்துறை அமைச்சர் ரொபேர்ட் கேட்ஸ் விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் ஊடகவியலாளர் மத்தியில் இக் கருத்துகளைக் கூறியிருக்கின்றார். இவர் மேலும் கூறி…
-
- 5 replies
- 865 views
-
-
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலொன்றான பின்லாந்து "நாட்டொ" அமைப்பில் இணைவதற்கான அனைத்துத் தடைகளையும் தாண்டி வெற்றியடைந்துள்ளது. வியாழக்கிழமை மாலையில் துருக்கி நாட்டின் நாடாளுமன்றில் அதன் அங்கத்தவர்களால் பின்லாந்தை இணைத்துக்கொள்வதில் எமக்கு எந்தத் தடையுமில்லை எனும் பிரேரணை நிறைவேறியதன் பின்னராக, அந்நாட்டில் அதிபருக்கு அந்தப்பிரேரணையில் நகல் அனுப்பப்பட்டு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை அந்நாட்டு அதிபர் ஏற்றுகொண்ட கடிததை அமெரிக்கவிலுள்ள நாட்டொ தலைமையகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. நாட்டொவில் இணைவதற்கான தடைகள் நீங்கிவிட்டதாக பின்லாந்து நாட்டின் அதிபர் திரு செளலிநீனிஸ்தோ அவர்கள் வெள்ளி காலையில் தனது "டுவீற்றர்" செய்தியின்மூலம் நாட்டு மக்களுக்குத் தெரிவிக்திருந்த…
-
- 22 replies
- 1.4k views
-
-
திராவிட, தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிராக உள்ள பெரிய தடைக்கல் எது? இதை நான் ஒரு மேலோட்ட கேள்வியாகப் பார்க்கவில்லை. மேலோட்டமாக பார்த்தால் பல காரணங்கள் தென்படும். எது முதன்மையானது என்று எதனிடப்படையில் ஆராய்வது? இக்கட்டுரையின் நோக்கம் அனைத்தையும் சுருக்கி ஒரே ஒரு விடையளிப்பதே. அதன் வழியாக இன்றும் நாம் காணும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் பார்க்கலாம். முதலில் ஒரு அடிப்படையான அறிவியல் கருத்தை அனைவரும் தெளிவாக அறிந்து கொள்ளுதல் முக்கியம். இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களின் வாழ்விற்கு அடிப்படையானது அறிவு (knowledge) [1,2]. ஓர் உயிர் தான் வாழும் சூழலுக்கு ஏற்ப அறிவைப் …
-
- 0 replies
- 707 views
-
-
ஒப்ரோபர் 13 காலை… அநுராதபுரம் சிறைச்சாலை… மாவை, அரசியல்கைதிகள்: நடந்தது என்ன? October 16, 2018 தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் முடிக்கப்பட்ட விதம், அன்றைய தினத்தில் நடந்தது என்ன என்பது தொடர்பான தகவல்களை தமிழ் பக்கம் திரட்டியுள்ளது. நடைபயணம் சென்ற பல்கலைகழக மாணவர்கள் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று சேர்வதற்கு முன்பாகவே, அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் முடித்து விட்டார்கள் என்றும், அரசியல் கைதிகள் விவகாரத்தில் முடிவில்லையேல் வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதாக மாவை சேனாதிராசா கூறியதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், இந்த தகவல்கள் “மிக நுணுக்கமாக“ சரியானவை அல்ல. அப்படியானால், அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் நடந்தது என்ன? அரசியல் …
-
- 0 replies
- 313 views
-
-
முல்லைத்தீவு எனும் போராட்ட பூமி Editorial / 2019 ஜனவரி 02 புதன்கிழமை, மு.ப. 04:11 - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இலங்கையின் வடக்குப் பகுதி, பல்வேறு விடயங்களுக்காகப் பெயர்போனது. ஒரு காலத்தில், அறிவியலாளர்களைத் தோற்றுவித்த பகுதியாகவும், தமிழர் உரிமைகளுக்கான போராட்டத்தில் முன்னின்ற பகுதியாகவும், வடக்குக் காணப்பட்டது. ஆனால், 2009ஆம் ஆண்டு இறுதி யுத்த அவலங்கள், அதன் பின்னரான பொருளாதாரப் பிரச்சினைகள், நுண்கடன் பிரச்சினைகள், கடும் வரட்சி என, அவல பூமியாக வடக்கு மாறியிருப்பதாகவே தெரிகிறது. இந்த அவலங்களுக்கெல்லாம் முடிவில்லை என்பதைப் போலத் தான், வடக்கில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் அமைந்திருக்கிறது. வடக்கின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைப் பிரதானமாகவும்,…
-
- 0 replies
- 992 views
-
-
கோத்தாபயவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்! அவர் யாரென்று மக்களுக்கு தெரியும்! - எம்.ஏ சுமந்திரன் February 2, 2019 எம்.ஏ சுமந்திரன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ யாரென்று தமிழ் மக்களுக்கு தெரியும் என்றும் அவருக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி, அரசியல் பயணம், சர்வதேச விசாரணை, அரசியல் தீர்வு, புதிய அரசியலமைப்பு முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்த வீரகேசரிப் பத்…
-
- 1 reply
- 458 views
-
-
மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட உலகளாவிய ஆதரவாளர்களைக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச் சபை 2011 டிசம்பர் 10ம் நாள் தனது ஜம்பது வருட வாழ்வை நிறைவு செய்துள்ளது. பீற்றர் பெனன்சன் (Peter Benenson) என்ற பிறிட்டிஷ் வழக்கறிஞர் தனி மனிதனாக இந்த அமைப்பபைத் தோற்று வித்தார். போத்துக்கல் நாட்டு இரு இளம் மாணவர்கள் அடக்கு முறைக்கு எதிராகக் கோசமிட்டதற்காக 1961ம் ஆண்டு சிறை வைக்கப்பட்டார்கள். இதை அறிந்த பீற்றர் பெனன்சன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் நோக்கில் ஒப்சேவர் பத்திரிகை வாயிலாக “மறக்கப்பட்ட கைதிகள்” (The Forgotten Prisoners) என்ற கட்டுரையைப் பிரசுரித்தார். அந்தக் கட்டுரையில் அவர் “மன்னிப்புக்கு மனு 1961” என்ற கோரிக்கையை (Appeal to amnesty 1961) விடுத்தார். அதற்கு உலகளாவிய வரவேற்ப…
-
- 0 replies
- 411 views
-
-
இன்று உலக தண்ணீர் தினம் - தண்ணீரின் அவசியம் மற்றும் பராமரிப்பு மீதான விழிப்புணர்வுக்காக உலக தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்பட்டாலும் தின கொண்டாட்ட எல்லைகளை எல்லாம் கடந்த முக்கியத்துவமுடையது தண்ணீர் என்பதே உண்மை. வாழ்த்த வயதில்லை என்பது போல, தண்ணீரை போற்ற மனிதனுக்கு தகுதியில்லை. உயிர்கள் உட்பட, இயற்கையிலிருந்து திரிக்கப்பட்ட செயற்கையும் சேர்த்து இங்கு எல்லாம் இயற்கையின் மூலதனமே! பஞ்ச பூதங்கள் பாதிப்பு இயற்கையின் முக்கிய அங்கங்களாக விளங்குவது நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களே. அதற்குப் பிறகுதான் உயிர்கள். மனிதர்கள் பஞ்ச பூதங்களையே பாழ்படுத்துவதை இயற்கை பொறுக்கவே பொறுக்காது. வெப்பம், புயல், புகம்பம் என பேரிட…
-
- 0 replies
- 880 views
-
-
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அறிவித்த பந்த்தைத் தொடர்ந்து... பிப்ரவரி 4-ந்தேதியின் காலைப்பொழுது பரபரப்பாகவே விடிந்தது. தர்மபுரி மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருக்க... பல வீடுகளில் கருப்புக் கொடிகள் பறந்தன. தனியார் பேருந்துகள் முற்றிலுமாக நிறுத்தப்பட... ஓடிய ஒரு சில அரசுப் பேருந்துகளும் அங்கங்கே நடத்தப்பட்ட மறியலால் பிற்பகலில் நிறுத்தப்பட்டு விட்டன. பொம்மிடி ரயில் நிலைய வளாகத்தில் காலை 11 மணிக்கு பெட்ரோல் டின்னுடன் தீக்குளிக்க வந்த சிறுத்தைகள் இயக்கத் தைச் சேர்ந்த முருகனை, மடக்கிப் பிடித்து காக்கிகள் கைது செய்ய... பலத்த பரபரப்பு பற்றிக் கொண்டது. பந்த்துக்கு மத்தியில் கிருஷ்ணகிரி பைபாஸ் சாலையில் இருக்கும் டாஸ்மாக் கடைக்குள் புகுந்த ஒரு கும்பல்…
-
- 0 replies
- 753 views
-
-
முகமது நபிகளின் உருவப்பட சர்ச்சை: திருக்குர்ஆன் என்ன சொல்கிறது? சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் பட மூலாதாரம், GETTY IMAGES இஸ்லாமியர்கள் இறைத்தூதராக வணங்கும் முகமது நபிகளின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரம் பிரான்சில் மறுபதிப்பு செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு ஒன்றன்பின் ஒன்றாக நடந்து வரும் தாக்குதல் சம்பவங்களும் அது குறித்த பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங்கின் கருத்துகளும் தொடர்ந்து விவாதத்துக்குள்ளாகி வருகின்றன. இதன் எதிரொலியாக, பல்வேறு நாடுகளிலும் முஸ்லிம்கள் பிரெஞ்சு பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ள நிலையில், இஸ்லாம் மதத்துக்கு எதிராக கருத்துத் தெரிவித்…
-
- 0 replies
- 985 views
-
-
கூலிக்கு மாரடிக்கும் கொத்தடிமைகளை உருவாக்கும் இலங்கையின் கல்விமுறை கூலிக்கு மாரடிக்கும் கொத்தடிமைகளை உருவாக்கும் இலங்கையின் கல்விமுறை தேசிய பாடசாலையாக மாற்றும் விவகாரம், பாடசாலை அபிவிருத்தி மற்றும் எங்களின் இன்றைய கல்வி முறை எப்படியான மனிதர்களை உருவாக்குகின்றது என்பது தொடர்பில் பல்வேறு கருத்துக்களையும் பகிர்ந்து கொள்கின்றார் சமூக, பொருளாதார ஆய்வாளரும், ஆலோசகருமான செல்வின். இவ்வளவு பேருக்கும் வழங்கப்படும் கல்வி என்னவென்று சொன்னால் ஏதோவொரு நிறுவனத்தின் கொத்தடிமையாக வாழ்ந்து கொண்டு வாழ்க்கையின் நோக்கத்தையும் பெறுமானத்தையும் இழந்து உழைக்கின்ற மிருகமாக இருந்து கொண்டு தருகிற பணத்துக்கு வேலை செய்ய தான் இந்த கல்வி முறை உள்ளது. ஒரு விழுமியம் மிக்க வாழ்க்கையை கட்டி …
-
- 3 replies
- 831 views
-
-
1984-இல் நடந்த சீக்கியப் படுகொலை தொடர்பான வழக்கொன்றில் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டிருந்த காங்கிரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யான சஜ்ஜன் குமார், அவ்வழக்கு தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் – கொலைக்குற்றம் மற்றும் கலவரம் – விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 29 ஆண்டுகளாக நீதிக்காகப் போராடி வரும், நீதிக்காகக் காத்திருக்கும் சீக்கியர்களிடம் இந்த அநீதியான தீர்ப்பு எத்தகைய மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கும் என்பதை எந்தவொரு வார்த்தையாலும் விவரித்துவிட முடியாது. 1984-ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று காலையில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, சீக்கிய மதத்தைச் சேர்ந்த இரண்டு மெய்க்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்துத் தொடங்கிய சீக்கியப் படுகொலை நவம்பர் 3-ஆம் தேதி வரை …
-
- 0 replies
- 421 views
-
-
வீட்டின் செல்லப்பிராணிகளாக இருக்கும் நாய்கள், பூனைகளுக்கு அடுத்தபடியாக அதிகமாக விரும்பப்படுவது முயல்கள்தான் வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளைப் போல அழகாக துள்ளி விளையாடும் முயல்கள் மனஅழுத்தத்தை குறைக்கும்என்கிறார்கள் ஆராய்ச்சியாளர். ஏற்கனவே வெள்ளை மற்றும் கருப்பு நிற முயல்குட்டிகளை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள நிலையில், தற்போது இருட்டில் அவை பச்சை நிறத்தில் ஒளிரும் தன்மை உடையவைகளாக மாற்றி சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று ஒளிரும் தன்மையுடைய முயல்கள் பல நோய்களுக்கு மிக குறைந்த விலை மருந்தாக பயன்படும் எனவும் கருதப்படுவதுடன் இந்த சாதனையை துருக்கியில் உள்ள இஸ்தான்புல் ஹவாஸ் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் உயிரியல் விஞ்ஞானிகள் முயலை கொண்டு மேற்கொண்ட ஆராச…
-
- 1 reply
- 442 views
-
-
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் சிறீலங்காவுக்கான விஜயம் நிறை வடைந்திருக்கின்றது. போர் நிறைவடைந்த பின்னரும் நித்தம் கண்ணீருடன் அம்மையாரின் வருகையினையும், வார்த்தைகளையும் எதிர்பார்த்து காத்திருந்த தமிழர்களின் முகங்கள் மிதிக்கப்பட்டிருக்கின்றன. வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான விஜயத்தின் நிறைவில் அம்மையார் கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார். குறித்த சந்திப்பும், அங்கே பேசப்பட்ட வார்த்தைகளும் எங்கள் கன்னங்களில் காய்ந்திருந்த கண்ணீர் தடங்களை அழிக்க தவறியிருக்கின்றன என்பதே யதார்த்தம். ‘வடக்கு, கிழக்கு மாகாணங்களில் என்னைச் சந்தித்த மக்கள் காவல்துறையினர் என அடையாளப்படுத்திக் கொண்ட சிலரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இது ஆரோக்கியமானதல்ல’ என அம்மையார் அந்த…
-
- 0 replies
- 400 views
-
-
ஆதரவு-24. எதிர்-21 --மணிவண்ணனின் முகநூல்
-
- 4 replies
- 661 views
-
-
சிங்கள அரசு போர்க்குற்றவாளியே உலக மக்கள் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பு தமிழாக்கம் : பூங்குழலி (செவ்வாய், பிப்ரவரி 16, 2010 23:14 | அகரவேல். சென்னை) மக்களின் உரிமைகள் மற்றும் விடுதலைக்கான லெலியோ பாசோ உலகளாவிய அமைப்பினால் ஆதரித்து ஊக்கப்படுத்தப்படும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம், இத்தாலியில் உள்ள பொலோக்னாவில் ஜுன் 1979-இல், 31 நாடுகளைச் சேர்ந்த பல சட்ட வல்லுநர்கள், எழுத்தாளர்கள் மற்றும் நோபல் பரிசு வென்ற 5 பேர் உட்பட பிற பண்பாட்டு மற்றும் சமூகத் தலைவர்களால் உருவாக்கப்பட்டது. வியட்நாம் (1966-67) மற்றும் லத்தீன் அமெரிக்காவின் சர்வாதிகாரங்கள் (1974-76) மீதான ரஸ்சல் தீர்ப்பாயத்தின் மூலம் பெற்ற வரலாற்று அனுபவங்களை தனது அடிப்படையாக நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் கொண்டுள்ளது. …
-
- 0 replies
- 725 views
-
-
தமிழகத்தில் இப்போது ஏறக்குறைய 500 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. ஆண்டு தோறும் இந்தியாவில் 7,50,000 பொறியியல் பட்டதாரிகள் வெளிவருகிறார்கள் என்றால் தமிழகத்தின் பங்கு மட்டும் அதில் 1,50,000. இந்தப் புள்ளிவிவரத்தை வைத்து நாம் பெருமைப்பட முடியுமா? இந்தியாவின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு தேவையான தொழில், அந்த தொழிலுக்குத் தேவையான படிப்பு என்ற சுதேசிப் பார்வை, அணுகுமுறையில் நமது உயர் கல்வி அமையவில்லை. கல்வி தனியார் மயமான பிறகு தகவல் தொழில்நுட்ப முதலாளிகளுக்குத் தேவையான பொறியியல் படிப்புக்களை மக்கள் தமது சொந்த செலவில் படித்து விட்டு காத்திருக்கும் மாட்டுச் சந்தை போல மாற்றப்பட்டிருக்கின்றனர். பட்டம் பெறும் அனைவருக்கும் அல்லது பெரும்பான்மையினருக்கும் தகுதியான …
-
- 1 reply
- 910 views
-