நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
நிகழ்வுகள் 2020: கொரோனா முதல் அரசியல் மோதல் வரை... உலகில் தாக்கத்தை ஏற்படுத்திய சம்பவங்கள் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம், ஊரடங்கு கட்டுப்பாடுகளால் மக்கள் பட்ட அவஸ்தைகள், பொருளாதார மந்தநிலை, இயற்கை சீற்றங்கள் என கடுமையான சோதனைகளும் வேதனைகளும் நிறைந்த 2020ம் ஆண்டு இன்னும் சில நாட்களில் விடைபெறுகிறது. இந்த ஆண்டு உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மற்றும் முக்கிய நிகழ்வுகளை பார்ப்போம். ஜனவரி ஜன. 2 * ஆஸ்திரேலியாவில் 2019 ஆம் ஆண்டு தொடங்கிய காட்டுத்தீயால் லட்சக்கணக்கான வன உயிரினங்கள் உயிரிழந்தன. இந்த காட்டுத்தீயால் ஆஸ்திரேலியாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. ஜன. 3 * அமெரிக்கா-ஈரான் இடையேயான மோதலின் உச்சபட்சமாக ஈரானின் புரட்சிப்படை தளபதி…
-
- 0 replies
- 578 views
-
-
வடக்கு தேர்தல் வட மாகாண சபைத் தேர்தல் என்பது அதிகாரமற்ற ஒரு சபைக்கான தேர்தலாயிருந்தாலும் கூட இது சர்வதேச மட்டத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்திருப்பதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாபெரும் வெற்றியொன்றைப் பெற வேண்டியது தமிழ் தேசியக் கூட்டமைப்பை மிகப் பெரும்பான்மையுடன் வெல்ல வைப்பது மிகவும் முக்கியமாகின்றது. இது தமிழர்கள் வட மாகாணத்தை ஆள்வதற்கான ஆணையாக இல்லாமல் அபிவீருத்தி என்ற வெற்றுக் கோசத்தை விட 1948 இல் இழந்து விட்ட அரசியல் உரிமையே தமக்கு முக்கீயம் என்பதை பறைசாற்றும் ஒரு தீர்ப்பாக அமைய வேண்டும். இந்த நேரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிப்பதுடன் நின்று விடாது அந்தக் கூட்டமைப்பிற்குள் தேசியத்தின் பாலும் தமீழ் மக்களின் பாலும் உண்மையான ஈடுபாடுடையவர்களைத் தெரிவ…
-
- 1 reply
- 578 views
-
-
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 16.02.2010 அன்று ஒலிபரப்பாகிய வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றிய பதிவு http://www.yarl.com/articles/node/1007
-
- 0 replies
- 577 views
-
-
-
சிங்கள பௌத்த மயமாக்கத்தின் நீட்சியானது அதிகாரப்பகிர்வு வழியிலான தீர்வை அன்று மட்டுமல்ல இன்றும் தடைப்படுத்தியே நிற்கின்றது. சென்ற கட்டுரையில் இன்றைய சர்வதேச அரசியல் சூழ்நிலைகளில் தமிழ்த் தரப்பானது துவண்டுபோக வேண்டியதில்லை எனக் கூறியிருந்ததுடன் எங்களது இறைமை தொடர்பான விடயத்தில் நாம் ஒரு தேசம், எமக்கென ஒரு தனித்துவம் உள்ளது, நாம் சுயநிர்ணய உரிமைகளுக்கு உரித்துடையவர்கள் என்ற விடயத்தை முன்னிறுத்தியிருந்தோம். நாம் இவற்றின் அடிப்படையிலேயே தீர்வுக்குப் போகவேண்டியவர்கள் என்பதையும் வலியுறுத்தியிருந்தோம். இக் கட்டுரையில் அதிகாரப்பகிர்வு மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வினை எட்டிவிடலாம் என சிலர் நம்பிக்கை வெளியிட்டு வருவதனால் அதிகாரப் பகிர்வானது எமது இனப்பிரச்சினைத் தீர்வுக்கு உகந…
-
- 0 replies
- 577 views
-
-
வித்தியாவின் இழப்பு என்பதற்கு அப்பால் ,அதில் இருந்து குடும்பம் மீண்டு வருவதும் அல்லது அவள் நினைவில் மண்டு போவதுமாக ,நித்தம் நித்தம் கண்ணீரும் சோறுமாக அவள் பேச்சும் குறும்பும் விளையாட்டு சீண்டலும் என்று ஒரே ஆரவாரம் ,சிரிப்பொலியுடன் இருந்த வீடு இன்று பெரும் சோக முகில்களை தாங்கி இருண்டு எப்பொழும் விம்மி வெடிக்கும் கனத்த இதயத்துடன் ,அன்பான அவளது குரல் இல்லாது செவிகள் இனிமையான ஒலிகளை கூட கேட்க மறந்து கிடக்கிறது ........... இவற்றுக்கு எல்லாம் அப்பால் அந்த கொடும் துயரின் பிடியின் இறுக்கத்தில் இருந்து தளர்வுகள் வரும் போது எல்லாம் ,சுற்றி உள்ள சமூகம் சரி இணையங்கள் ஊடகங்கள் என்று ஏதாவது ஒன்று ,அந்த ரண வேதனையை மீண்டும் பெரும் ஈட்டி கொண்டு தாக்குவது சொல்லனா துன்பம் ...... தங்களுக்கு…
-
- 4 replies
- 577 views
-
-
[size=4]ச்சே…. இந்த இளவட்டங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லை போலிருக்கிறது. எதற்கெடுத்தாலும் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று முத்தமிழ் “அறிஞர்”…. தப்பு தப்பு…. ஐந்தமிழறிஞர் கலைஞர் எதைச் சொன்னாலும் பகடி செய்யக் கிளம்பி விடுகின்றனர்.[/size] [size=3][size=4]ஈழத்தில் விமானத் தாக்குதல்களுக்கும், கொத்துக் குண்டுகளுக்கும் தப்பி…. முள்வேலி வதை முகாம்களில் இருந்து குற்றுயிரும் குலை உயிருமாய் மீண்டு…. மிச்ச சொச்ச உயிரையும் கையில் பிடித்துக் கொண்டு அலைபவர்களைக் கரையேற்றலாம் என்று பார்த்தால் அதற்கும் விட மாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்தால் யார்தான் சகித்துக் கொள்வார்கள்.?[/size] [size=4]“டெசோ” வை (அதுவாகப்பட்டது தமிழீழ ஆதரவாளர் அமைப்பு) மீண்டும் ஆரம்பிக்கல…
-
- 0 replies
- 577 views
-
-
முழுமையாக காண வேண்டிய காணொளி. தலைப்புக்குரிய விடயம்.. இப்பேச்சில்.. 17 - 22 ஆவது நிமிடத்தில்... வருகிறது.
-
- 2 replies
- 577 views
-
-
சர்வதேசச் சட்டத்தின் பார்வைக்குள் அகப்பட்டிருக்கும் இலங்கை அரசு அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிராக, முக்கியமாக 2009-ல் முதல் 5 மாதங்களில் வட மாகாணத்தில், இலங்கை அரசு புரிந்த பரவலான ஒருங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மீறலுக்குள் அமைகின்றன எனச் சட்ட நிபுனர்கள் கூறுகின்றனர். இந்தக் காலவரையறையில், ஐ.நா உட்பட சர்வதேசச் சமூகத்தினால் காட்டப்பட்ட அலட்சியப் போக்கினால், 30,000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் உயிரிழக்க நேரிட்டது. தற்போதைய நிலையில், (அ) இலங்கை அரசு, நடைபெற்ற பேரழிவுகளைச் சரித்திரப் பதிவுகளிலிருந்து அழித்தலைத் தடுத்தல் (ஆ) சர்வதேசம் தமிழ் மக்களை, நடைபெற்ற குற்றங்களுக்குப் பதில் சொல்லுவதைத் தவிர்த்தும் நீதியைக் கோராது சமாதானமாகப் போக…
-
- 0 replies
- 576 views
-
-
முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகப் பகுதி உட்பட தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகள் பலவற்றிலும் மிகவும் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றுள்ளது. குறிப்பாக யாழ் பல்கலைக் கழகத்தில் சிறீலங்கா இராணுவத்தினரதும் புலனாய்வாளர்கள் மற்றும் ஒட்டுக்குழுக்களினதும் பாரிய அச்சுறுத்தலுக்கு மத்தியில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நிகழ்ந்தேறியுள்ளது. ஆயினும் பல மாணவர்கள் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ளனர். ஏற்கனவே, முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூரும் பதாகைகள், சுவரொட்டிகள் யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஒட்டப்பட்டிருந்தமை தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட அதிகாரிகள் பலரும் சிறீலங்கா புலனாய்வாளர்களால் விசாரிக்கப்பட்டிருந்தமை தொடர்பாக த…
-
- 0 replies
- 576 views
-
-
சுமார் 1900 வருடங்கள் அகதிகளாக, அடிமைகளாக உலகம் முழுவதும் பரவி வாழ்ந்து வந்த யூத இன மக்களால் தங்களுக்கென்று ஒரு தேசத்தை எவ்வாறு அமைத்துக்கொள்ள முடிந்தது? தமது விடுதலையை இஸ்ரேலியர்கள் எவ்வாறு பெற்றுக்கொண்டார்கள்? தமது விடுதலைக்காக அவர்கள் அமைத்த வியூகங்கள் என்ன? அவர்கள் கடைப்பிடித்த வழிமுறைகள் என்ன? – இவை பற்றித்தான் இந்தத் தொடரில் நாம் விரிவாக ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம். இஸ்ரேல் தேசம் என்பது இஸ்ரேலியர்களை மிக மோசமாக விரோதிக்கின்ற அரபு நாடுகளை அயல்நாடுகளாகக் கொண்டுள்ளது. எகிப்து, யோர்தான், லெபனான், சிரியா என்று இஸ்ரேலை விழுங்கி ஏப்பமிட்டுவிடத் துடிக்கும் நாடுகளை தனது அயல் நாடுகளாகக் கொண்டு, எந்த நேரத்திலும் ஆபத்துக்களை எதிர்கொண்டபடி இருக்கின்ற ஒரு தேசம்தான் இஸ்ரேல்…
-
- 0 replies
- 576 views
-
-
இலங்கை முழுமையாக இருளை அரவணைக்கிறதா? இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் , மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கள்ஆகியவை முரண்பட்டிருப்பதாகத் தென்படுகின்றமை நெருக்கடியை மேலும் மோசமாக்குகிறது *சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம்உலை எண்ணெய் பற்றாக்குறையால் தனது செயற்பாடுகளை நிறுத்தியுள்ளது *குறைந்தளவு மழைவீழ்ச்சியால் நீர்மின் உற்பத்தியும் சவாலாக உள்ளது *ரந் தெனிகல நீர்த்தேக்கம் ஏற்கனவே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், கொத்மலைக்கும் கடந்த வாரம் முதல் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. *உலர் வலயத்தில் அமைந்துள்ள வீடுகளின் கூரைகளில் சூரியக்க…
-
- 0 replies
- 576 views
-
-
ராஜபக்ஷே தமிழர்களுக்கு நன்மை செய்யமாட்டார்! டெசோவுக்கு வந்த சிங்களர் பேட்டி விக்கிரமபாகு கருணரத்ன, இலங்கையின் எந்த ஓர் அடக்குமுறைக்கும் அடங்காதவர். சிங்களராக இருந்தும், 'சிங்களர்கள் வந்தேறிகள்தான்... தமிழர்களே இலங்கை மண்ணின் பூர்வகுடிகள்’ என்ற கருத்தை முன்வைப்பவர். சிங்கள இனவெறியாளர்கள், புலிகளின் மீது தாக்குதலைத் தொடுத்தபோது 'பிரபாகரன் ஒரு மாவீரன்’ என்றவர். 2006 இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரிகள் சார்பாக ராஜபக்ஷேவுக்கு எதிராகத் தேர்தலில் நின்றவர். இலங்கை நவ சமா சமாஜ் கட்சியின் தலைவர். இந்த அடையாளங்களை எல்லாம் மீறி இவருக்கு இப்போது புதிய அடையாளம், 'இலங்கை அரசின் மிரட்டலுக்கு அடிபணியாத ஒற்றை மனிதனாக, டெசோ மாநாட்டுக்கு இலங்கையில் இருந்து வந்தவர்’…
-
- 0 replies
- 575 views
-
-
வளைவுகள் வளையலாம் வளை வழுக்கலாமா? காரை துர்க்கா / 2019 மார்ச் 20 புதன்கிழமை, பி.ப. 05:02 Comments - 0 உலகில் பிறந்த அனைத்து மனிதர்களுமே எப்போதும் மகிழ்ச்சியை விரும்புகின்றார்கள். ஆனாலும் மகிழ்ச்சியிலேயே உயர்ந்த மகிழ்ச்சி மற்றவர்களை மகிழ்வித்து, அதனூடாகத் தானும் மகிழ்தல் ஆகும். இதற்காகவே மனிதர்கள் கடவுளின் குடியிருப்புக்கு (கோவில்) செல்கின்றார்கள். ஆனால், மறுவளமாகப் பார்க்கில், கடவுள் எல்லா உயிரிலும் குடிகொண்டிருக்கின்றார். இவ்வாறாக ஆன்மிகமே நம் பண்புகளை உயர்வு நோக்கிக் கொண்டு செல்கின்றது. உலக சுகாதார நிறுவனத்தின் வரைவிலக்கணத்தின் பிரகாரம், ஆரோக்கியம் என்பது உடல், உளம், சமூகம், ஆன்மீகம் ஆகிய நான்கு தளங்களில் உள்ள உயர்வான நிலை என விளக்கம் பகிர்கின்ற…
-
- 0 replies
- 575 views
-
-
இலங்கையில் இந்த நிலைக்கு மாறி மாறி ஆப்படிக்கும் இந்தியனே காரணம் ஈழத்தமிழர்களை மீண்டும் பகடைக்காய்களாக்க ஈழத்தமிழர்கள் இந்தியாவிற்கு இடம் கொடுக்கக்கூடாது. இந்தியாவின் ஒரே ஒரு நோக்கம் சிங்கள அரசுகளைத் தன் கைக்குள் வைத்திருப்பதே. அதற்காக யாரை வேண்டுமானாலும் பலி கொடுக்கத் தயாராகி இருக்கும் இந்திய இராட்சியம். சிங்களம் தன் கட்டுக்குள் அகப்படாது போனால் மீண்டும் தமிழர் உரிமைப்போராட்டம் முடக்கிவிடலாம். இதற்கு யாரும் பலிக்கடாவாகக்கூடாது. தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் இந்தியாவிற்கு எள்ளளவும் விருப்பம் இல்லை. சுருங்கச்சொன்னால் அமெரிக்காவிற்கு பாலஸ்தீனம் எப்படியோ இது போலத்தான் இந்தியாவிற்கு இலங்கைத்தமிழர். இந்தியா இந்தியாவாக இருக்கும் வரைக்கும் நாங்கள் சிங்களத்துடன் சகோத…
-
- 0 replies
- 575 views
-
-
அரியானா மாநிலத்தில் அரசு நிலத்தை தனது பெயரில் மாற்ற சோனியா மருமகன் ராபர்ட் வதோரா போலியான ஆவணங்கள் மற்றும சட்ட மீறல்களை செய்ததாக ஐ.ஏ.எஸ்.அதிகாரி அசோக் கேம்கா தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். அரியானா மாநிலத்தில் காங். ஆட்சி நடக்கிறது. இங்கு முதல்வர் பூபிந்தர்சிங்ஹூடா முதல்வராக இருந்து வருகிறார். குர்கான் அருகே ஷிக்கோபூர் கிராமத்தில் 3. 5 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமானதாக இருந்தது. இந்த நிலம் முதன்முதலில் டி.எல்.எப்., என்ற நிறுவனத்திற்கு குறைந்த விலையில் விற்கப்பட்டது. அதாவது சுமார் 200 கோடி மதிப்புள்ள இந்த நிலம் வெறும் 7. 5 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து கடந்த ஆண்டு அன்னா ஹசாரேயின் நெருங்கிய நண்பர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த தகவலை…
-
- 4 replies
- 575 views
-
-
-
- 0 replies
- 575 views
-
-
சாய்ந்தமருதில் நடந்தது என்ன? உயிர் பறித்த ஞாயிறு நேற்றுடன் ஒருவார காலத்தை நிறைவு செய்துள்ளது. அதனிடையே இடம்பெற்ற சம்பவங்களுள் சாய்ந்தமருதுச் சம்பவம் பலத்த கவனத்தை ஈர்த்துள்ளது. உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு உரிமைகொண்டாடிய அதே ஐ.எஸ். அமைப்புத்தான்தான் கல்முனைச் சம்பவத்திற்கும் உரிமைகோரியுள்ளது. கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பூரணமாக முஸ்லிம் மக்களைக்கொண்ட பிரதேசமாகும். சுனாமியில் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருதுக் கிராம கரையோர மக்களுக்கு குடியேற்றக்கிராமமாக வொலிவேரியன் என்ற கிராமம் மேற்கேயுள்ள வயல்பகுதியில் உருவாக்கப்பட்டது. …
-
- 0 replies
- 575 views
-
-
தேர்தலுக்கு செல்வதனால், இன்றைய நிலையில் 19A சட்டப்படி உள்ள ஒரேவழி பாராளுமன்றம் 2/3 பெரும்பான்மையுடன் அதைக் கோர வேண்டும். இன்று பாராளுமன்றில் பேசிய மகிந்த இது தொடர்பாக ஐ தே க ஒத்துழைக்க வேண்டும். தேர்தலுக்கு சென்று மக்களை சந்திப்போம் என்றார். அது தொடர்பில் இன்று மாலை நடந்த பெரும் பேரணியில் பதில் சொன்ன ரணில், தான் அதுக்கு சம்மதிப்பதாகவும், ஆனால் ஜனாதிபதி தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் ஒன்றாக மீண்டும் நடக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். மைத்திரி பறியில கை போடும் வேலை. அரண்டு போன மைத்திரி ஆள விடப்பா சாமிகளே என்று இன்று அவசர கூட்டம் ஒன்றை கூட்டி, ரணிலை கூப்பிடுள்ளார். இதுக்கு தான் நரியர் ரணில் என்பது. Image: Dailymirror.lk
-
- 1 reply
- 574 views
-
-
உலகை அச்சுறுத்தி வருகிறது கொரோனா என்னும் கொடூர வைரஸ். சமீபத்திய ஆண்டுகளில் மக்களை கொன்று குவித்த பெரும்பாலான தொற்று நோய்கள், ஆசிய மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி மக்களை காவு வாங்கியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் உருவான பெரும்பாலான உயிர்கொல்லி வைரஸ்கள் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் தான் உருவாகியுள்ளன. தற்போது உலக மக்களை மரண பீதியில் வைத்துள்ள COVID-19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ், ஆசியாவின் முக்கிய நாடான சீனாவில் உருவானதாக நம்பப்படுகிறது. வரலாற்றில் அவ்வப்போது தொற்றுநோய்கள் வந்து கூட்டம் கூட்டமாக மனிதர்கள் மாண்டு போவது நடக்க கூடியதே என்றாலும் கூட, தற்போது இந்த அபாயம் மிகவும் அதிகரித்துள்ளது. அதுவும் கடந்த 20 ஆண்டுகளில் கொரோனா வைரஸ்கள…
-
- 1 reply
- 574 views
-
-
பாலசுப்ரமணியம் காளிமுத்து பதவி,பிபிசி தமிழ் 6 டிசம்பர் 2023 மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளது. திங்கள்கிழமை தொடங்கி 24 மணி நேரத்தில் சென்னையில் அதிகபட்சமாக பெருங்குடியில் 45 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் இந்த மழையால் ஏற்பட்ட சேதம் குறித்தும் மேற்கொள்ளப்பட்ட வடிகால் பணிகள் குறித்தும் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளதால் இந்த நிகழ்வு அரசியல் பிரச்னையாகவும் உருவெடுத்துள்ளது. குறிப்பாக, திமுக அரசால் திட்டமிடப்பட்ட 4000 கோடி ரூபாய் மதிப்பிலான மழைநீர் வடிகால் பணிகள் என்ன ஆனது என்ற கேள்வியை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்கட்சி அரசியல் தலைவர்…
-
- 1 reply
- 574 views
-
-
ஐரோப்பிய ஒன்றியம்: கேள்விக்குறியான எதிர்காலம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ எதிர்காலம் எதிர்வுகூறவியலாதது. நிகழ்காலம் நிச்சயமற்றது. இறந்தகாலம் மீளாது. இம் மூன்று காலங்கட்குமிடையான உறவும் முரணுமே நிகழ்வுகள் யாவையும் தீர்மானிக்கின்றன. நடந்தவை நடப்பவற்றுக்குத் தளமிடுகின்றன. நடப்பது நடக்கவுள்ளதன் திசைவழியின் வரைபடத்தை நடந்ததின் உதவியுடன் வரைகிறது. கடந்த இரு வாரங்களாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வெளிப்படையாகத் தம்முள் கொள்கையளவில் முரண்பட்டிருப்பதும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இருப்புப் பற்றி ஐயம் வெளியிட்டிருப்பதும், ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ளார்ந்த நெருக்கடிகளை இன்னொரு முறை பொதுவெளிக்குக் கொணர்ந்துள்ளன. கடந்த வாரம் பிர…
-
- 0 replies
- 573 views
-
-
அடிப்படை வசதிகளின்றி தொடர்ந்தும் அவதியுறும் முள்ளிக்குளம் மக்கள் : April 13, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் மக்கள் தமது சொந்த இடத்தில் மீள் குடியோறி இரண்டு வருடங்கள் ஆகியும் இது வரை தாங்கள் தொடர்ச்சியாக அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி அவதியுறுவதாகவும் அரச அதிகாரிகள் தொடர்ச்சியாக பாராமுகமாக செயற்படுவதாகவும் ; விசனம் தெரிவித்துள்ளனர். முள்ளிக்குளம் மக்கள் யுத்த காலப்பகுதியில் இராணுவ நடவடிக்கை காரணமாக தங்களுடைய சொந்த கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிகமாக மலங்காடு எனும் பகுதியில் கட்டாயத்தின பெயரில் குடியமர்த்தப்பட்ட நிலையில் பொருளாதார ரீதியில் மிகவும் சிரமத்தின்…
-
- 0 replies
- 573 views
-
-
பெரும் இனவாதியான ஜாதிக ஹெல உறுமயாவின், சமபக்க ரணவக்க, தமிழ் மக்களை தேர்தல் பகிஸ்கரிக்க கோரும் பெரும், உள்ளூர், சர்வதேச, முனைப்புகள் பெரும் முன்னெடுப்புடன் நடைபெறுவதாக கவலை வெளியிடுள்ளார். இந்த தேர்தல் தமிழ் மக்களுடன் தொடர்பு இல்லாதது என கூறி அவர்களை வாக்களிக்காமல் தடுக்க முனைகின்றனர் என அவர் கவலை வெளியிட்டார். இந்த நாட்டில் வாழும் சகலரது தலைவிதியினை பாதிக்கும் தேர்தல் ஆகையால் சகலரும் வாக்களிக்க வேண்டும் என்றும், 2005ல் பகிஸ்கரிப்பினால் லாபம் அடைந்தவர்களே இம்முறையும் பகிஸ்கரிப்பினை விரும்புவதை தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார். மகிந்தருடன் நின்ற இவரது கட்சி இப்போது மைத்திரி பக்கம் நிக்கிறது.
-
- 0 replies
- 573 views
-
-
முயற்சிகள் ஏதும் இன்றி முடங்கி மௌனமாக நீட்டிக்கிடக்கும் எந்த இனத்துக்கும் வலியவந்து நீதி தேவதை வரங்கள் ஏதும் தரப்போவதில்லை. உலகில் நடத்திமுடிக்கப்பட்ட இனப்படுகொலைகள் அனைத்துக்கும், இனச்சுத்திகரிப்புகள் அனைத்துக்கும் உரிய நீதி கிடைத்திருக்கா என்றால் இல்லை. இனப்படுகொலைகளின் வடுக்களை தாங்கிய மக்கள் ஓய்வின்றி எழுந்து நீதிக்கான தேடலை ஆரம்பித்தால் நிச்சயம் அது கிடைத்தே தீரும். அது இன்றோ நாளையோ, நாளை மறுநாளோ திடீரென நிகழ்ந்துவிடக்கூடிய ஒன்று அல்ல. அதற்கான நீண்ட பயணங்கள் ஓய்வின்றி நிகழ்த்தப்படும்போது அது பல கதவுகளை திறந்துவைக்கும். நீதியின் கதவு உட்பட. எல்லாவகையான கொடூரமான கொலைகளையும் செய்து முடித்துவிட்டு நீதியின் கண்ணில் இருந்து தூரச்சென்று ஒழித்திருந்த ஒரு போர்க்குற்றவாளியை…
-
- 0 replies
- 573 views
-