Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்புள்ள லச்சுமியக்கா வணக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லச்சுமி கலைச்செல்வன்

இவரிற்கு ஒரு கடிதம்

அன்புள்ள லச்சுமியக்கா வணக்கம்

முதலில் என்னை மன்னிக்கவும் ஏனெனில் உங்கள் கணவரின் பெயரை உங்கள் பெயருடன் இணைத்து எழுதியதற்கு. எனக்கு தெரியும் அது உங்களிற்கு பிடிக்காது காரணம் அதுபெண்ணடிமைத்தனம் எண்டு நீங்களே சொல்லியிருக்கிறீங்கள். சரி சமீபத்தில் உங்கள் வீட்டை உடைத்து பல விலை மதிப்பற்ற உங்கள் ஆணவங்களை மன்னிக்க ஆவணங்களை சிலர் திருடிகொண்டு போய் விட்டாகளாம் அதுவும் நீங்கள் இல்லாத சமயம் என்று செய்தி அறிந்தேன். அது புலிகள்தான் என்று நீங்கள் குற்றம் சாட்டியிருக்கிறீங்கள். நீங்கள் இல்லாத சமயம் வந்தது புலிகள் தான் என்று புலிகள் எப்படி அவ்வளவு திட்டவட்டமாக உங்களிற்கு தெரியும் . வந்தவர்களே பின்னர் தொலைபேசியடித்து தாங்கள் புலிகள் தாங்கள் தான் ஆவணங்களை எடுத்ததாக சொன்னார்களா?.

மற்றது இலக்கிய சந்திப்பு பற்றிய பெறுமதி மிக்க ஆவணங்கள் என்று கூறியிருக்கிறீர்கள் இலக்கிய சந்திப்பு என்றால் இந்த திகதி இடத்தில் இந்த திகதியில் இன்னார் இன்னார் வந்து பேசினார்கள் என்கிற பதிவுகளும் அந்த சந்திப்பிற்காக நீங்கள் அடித்த துண்டுபிரசுரங்களும் தானே உங்கள் பெறுமதி மிக்க ஆவணங்கள். அது மட்டுமல்ல இலக்கிய சந்திப்பு என்பது என்ன அதியுயர் பாதுகாப்புடன் இரகசியமாக நடக்கும் ஒரு விடயமா? இல்லையே அது பகிரங்கமாக விழம்பரம் செய்து இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் வந்து கூடுகினற ஒரு நிகழ்வுதானே அதைவிட அந்த சந்திப்பு பற்றி அது நடந்து முடிந்த பின்னர் பகிரங்க அறிக்கை விடுவதுடன் அந்த செய்தி இணைய தளங்களிலும் ஏன் சஞ்சிகையாகவும் வருகிறதுதானே.

அதைவிட அந்த சந்திப்புகள் பற்றிய ஆவணங்கள் அந்த சந்திப்பில் கலந்து கொண்ட அனைவரிடமும் இருக்கும் அப்படி இருக்கும் போது இத்தனை சிரமபட்டு அதுவும் நீங்கள் இல்லாத வேளை புலிகள் உங்கள் வீட்டை உடைத்து ஏன் எடுக்கவேண்டும்.அப்படியாயின் வெறும் இலக்கிய சந்திப்பு பற்றி ஆவணங்களை விட உங்களிடம் வேறு ஏதோ இரகசியங்கள் இருந்திருக்க வேண்டும் என்கிற கேள்வியே எழுகிறது. சரி இதை புலிகள் எடுத்துகொண்டு போய் என்ன செய்ய போகிறார்கள்??. அவர்களிற்கு இன்று உலக அளவில் ஆயிரம் தேவைகள் பிரச்சனைகள் இருக்கும் போது லச்சுமியின் வீட்டை உடைத்து அங்கிருந்த பழைய நோட்டீசை எடுத்து கொண்டு போய் சுருட்டி என்ன காது குடையவா?? அது மட்டுமல்ல உங்கள் வீடு உடைக்கபட்டது இது முதல் தடைவையல்லவே முன்னரே உங்களுடன் பிரச்சனைப்பட்ட உங்கள் உறவு காரர்களாலும் பின்னர் உங்களுடன் இணைந்து எக்சில் என்கிற இணைய சஞ்சிகையை நடத்தியவர்களாலும் தானே உங்களுடன் முரண்பட்டு உங்கள் வீட்டை அடித்து உடைத்தனர்.

ஆனாலும் எனக்கு தெரியும் உங்கள் வைன் கிளாஸ் தட்டுபட்டு விழந்து உடைந்தாலும் நீங்கள் இழுத்துவிட்ட மல்போறோ சிகரற்றின்புகை வட்டம் வட்டமாக வரவில்லையென்றாலும் கூட அது புலிகள்தான் என்று அறிக்கை விடுகிறவர் நீங்கள். அது இன்றைய உங்கள் தேவையும்கூட ஏனெனில் கலைச்செல்வனின் தோழில் நீங்கள் பயணம் செய்த காலங்களில் உங்களிற்கும் ஏதோ இலக்கியம் தெரியுமென்று சிலர் மரியாதை தந்தனர். உங்கள் இம்சை தாங்காமலேயே கலைச்செல்வன் மனவிரக்தியால் தவித்து மாரடைப்பில் மரணமடைந்தபின்னர் உங்களை மொத்தமாக எல்லாருமே மறந்து போயிருந்த நேரத்தில்தான் மீண்டும் உங்களை இனம்காட்ட இலக்கிய வாதிகள் என்றாலே ஏதோ புலிஎதிர்ப்பாளர்கள் தான் என்கிற ஒரு மாயையை உருவாக்கி இலக்கிய சந்திப்பு என்றாலே அங்கு புலியெதிர்ப்புகள்தான் பேசப்படும் என்கிற ஒரு தோற்றத்தையும் உருவாக்கி அதற்கு நீங்களே தலைமை தாங்குபவராக வர விரும்புகிறீர்கள்.அதற்கு உதவியாக உங்கள் தோழி ராஜேஸ்.பாலா என்பவர்.(ராஜேஸ்வரி என்பது அவர் பெயர் பாலா என்பது யார்ரென்று எனக்கு இதுவரை தெரியாது)கை கோர்த்திரக்கிறார். அதன் ஆரம்பம் தான் இந்த வீடுஉடைப்பு நாடகம் .அடுத்ததாக உங்களிற்கு கிடைத்தது அண்மையில் பாரிசில் நடைபெற்ற புஸ்பராசா அவர்களின் அஞ்சலிகூட்டம். தொடருங்கள் பார்க்கலாம் உங்கள் நாடகத்தை பார்க்க ஆவலாய் இருக்கிறோம். அதுவரை உங்கள் நலனில் அக்கறையும் அன்பும் கொண்ட சாத்திரி :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹிஹி

புலிகளை ஆதரித்தும் தேட முடியாது என்றவுடன், எதிர்த்து பிரபல்யம் தேட இப்படிப்பட்டவர்கள் இருக்கத் தான் போகின்றார்கள் சாத்திரி. இலக்கிய வட்டம் என்பது அந்தக் கருதுகோளில் தான் இப்போது இயங்குகின்றது.

சமூகக் கட்டமைப்புக்கு எதிரான கட்டுரைகள், கதைகள் படைப்பதும், உருவாக்குவதும் கூட சமுதாயத்தில் இருந்து வேறுபடுத்திக் காட்டத்தான். புலிகளுக்கு எதிரானவர்கள் மிகக் குறைவு என்பதால், இப்படிப்பட்டவர்கள் தங்களை அடையாளப்படுத்த புலியெதிர்ப்பைக் கையில் எடுத்திருக்கின்றார்கள் அவ்வளவே!

ஆனால் இப்போது தங்களின் பெயர் பிரபல்யம் ஆகுமென்று கனவு காண்பவர்கள், எதிர்காலத்தில் தமிழனத்தை எதிரி அழிக்கும்போது துணைபோன துரோகிப்பட்டியலில் நிச்சயம் இடம் இருக்கும். காக்கை வன்னியனை, எட்டப்பனை மக்கள் எவ்வாறு காறித் துப்பினார்களோ, அவ்வாறே இவர்களின் மீதும் காறித் துப்பப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார் உங்களுக்கும் குறிப்பிட்ட நபருக்கும் இடையே ஏதேனும் தனிப்பட்ட பிரச்சனை உண்டா.??! ஏனென்னா இப்ப எல்லாம் தமிழர்கள் தங்கட தனிப்பட்ட பிரச்சனைகளையும் பிரச்சாரப்படுத்த புலி ஆதரவு - எதிர்ப்பு நிலைப்பாட்டைத்தான் பாவிக்கிறாங்க..! அதாவது அசைலம் அடிக்க, சுயநலத்துக்காக எப்படி புலியை எதிர்த்து கூசாமல் மேற்குலக அரசுகளுக்கும் நீதிமன்றங்களுக்கும் சொல்லுறாங்களோ..அவங்களே தான் விசா கிடைச்சதும் புலி ஆதரவா மாறி தங்களையும் ஏமாற்றி புலிகளையும் ஏமாற்றி மக்களையும் ஏமாற்றி வருகின்றனர்... அப்படியாக..!

( வழங்கப்பட்ட வாக்கு மூலங்களில் புலிகள் எத்தனை தடவை தமிழ் மக்களையே கொடுமைப்படுத்துகின்றனர் என்று கொடுக்கப்பட்டுள்ளன..! அவற்றை நோக்கும் போது வெளிநாட்டு அரசுகள் புலிகளையும் மக்களையும் வேறுபடுத்தி நோக்க காட்ட நல்ல ஆதாரம் வழங்கப்படுகிறது...! ஐரோப்பிய அவலமுன்னு தனி நபர்கள் அவலங்களை சொல்லும் தாங்கள் தமிழர்கள் ஒட்டுமொத்தமா வைக்கிற ஆப்புக்குறித்து ஒரு வார்த்தை தானும் சொல்வதில்லையே ஏன்...??! அசைலம் கேஸ் வெல்லனும் என்றதுக்காக எத்தனை தமிழர்கள் புலிகளை பற்றிப் பொய் சொன்னீர்கள்.. அதுவும் கூசாமல்...அத்தனை பேரும் எட்டப்பர்கள் தான்..!) :angry: :angry: :angry:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலை போவான் எனக்கும் மேற் குறிப்பிட்ட நபரிற்கும் எவிவித தனிப்பட்ட பிரச்சனையும் இல்லை தனிப்பட்ட உறவும் இல்லை.பிரான்சில் எமது இலக்கிய படைப்பாளிகள் பலரினதும் படைப்புக்களை நான் ஆர்வமாய் படிப்பவன்அதே பேலத்தான் இவரது படைப்புகளையும் ஆரம்பத்திலிருந்து படித்து வருபவன்.அண்மையில் சில தளங்களில் இவ இந்த செய்தியை (புலிகள் வீட்டை உடைத்து விட்டடார்கள்) எழுதிய பின்னர்தான் நான் அதன் உண்மையை யாராவது அவரை தெரிந்தவர்கள் எழுதுவார்கள் என சில வாரங்கள் காத்திருந்தேன்(எதுக்கு எனக்கு ஊர்வம்பு என்று) ஆனால் எந்த வழியாலும் யாரும் உண்மை நிலையை எழுதவில்லை எனவே தான் நான் எழுதினேன் .மற்றது நீங்கள் சொன்ன அந்த அகதி விண்ணப்ப நிலையில் எம்மவர் சொல்கின்ற புலியெதிர்ப்பு வசனங்கள் பற்றி அண்மையில் பாரிசில் கைது செய்ய பட்ட புனர்வாழ்வு கழக பணியாளர்கள் பற்றிய ஒரு றெடியோவில் நடந்த கலந்துரையாடலில் விபரமாக சொல்லியிருந்தேன் இப்படியான வாக்கு மூலங்களை கொடுத்து விட்டு பின்னர் அகதி அந்தஸ்த்து கிடைத்த பின்னர். ஈழ போராட்டத்திற்கு ஆதரவான கூட்டத்தில் பல்லாயிர கணக்காக திரண்டும் பிரயொசனம் இல்லை எனவே புலத்து தமிழர்கள் இந்த அகதி விண்ணப்ப வாக்கு மூலத்திலும் கவனமாய் இருக்கவேண்டும் என்று. அதன் ஒலி வடிவம் யாழிலும் உள்ளது கேட்டு பாருங்கள் நன்றி

ஹிஹிஹி

புலிகளை ஆதரித்தும் தேட முடியாது என்றவுடன், எதிர்த்து பிரபல்யம் தேட இப்படிப்பட்டவர்கள் இருக்கத் தான் போகின்றார்கள் சாத்திரி. இலக்கிய வட்டம் என்பது அந்தக் கருதுகோளில் தான் இப்போது இயங்குகின்றது.

சமூகக் கட்டமைப்புக்கு எதிரான கட்டுரைகள், கதைகள் படைப்பதும், உருவாக்குவதும் கூட சமுதாயத்தில் இருந்து வேறுபடுத்திக் காட்டத்தான். புலிகளுக்கு எதிரானவர்கள் மிகக் குறைவு என்பதால், இப்படிப்பட்டவர்கள் தங்களை அடையாளப்படுத்த புலியெதிர்ப்பைக் கையில் எடுத்திருக்கின்றார்கள் அவ்வளவே!

ஆனால் இப்போது தங்களின் பெயர் பிரபல்யம் ஆகுமென்று கனவு காண்பவர்கள், எதிர்காலத்தில் தமிழனத்தை எதிரி அழிக்கும்போது துணைபோன துரோகிப்பட்டியலில் நிச்சயம் இடம் இருக்கும். காக்கை வன்னியனை, எட்டப்பனை மக்கள் எவ்வாறு காறித் துப்பினார்களோ, அவ்வாறே இவர்களின் மீதும் காறித் துப்பப்படும்.

இப்பவே எல்லாரும் துப்பினம் ஆனால் அதை துடைச்சு போட்டு இவை தொடரினம் காரணம் இவர்கள் தங்கள் சய நினைவில் இல்லை அதுதான் காரணம் :)

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலை போவான் எனக்கும் மேற் குறிப்பிட்ட நபரிற்கும் எவிவித தனிப்பட்ட பிரச்சனையும் இல்லை தனிப்பட்ட உறவும் இல்லை.பிரான்சில் எமது இலக்கிய படைப்பாளிகள் பலரினதும் படைப்புக்களை நான் ஆர்வமாய் படிப்பவன்அதே பேலத்தான் இவரது படைப்புகளையும் ஆரம்பத்திலிருந்து படித்து வருபவன்.அண்மையில் சில தளங்களில் இவ இந்த செய்தியை (புலிகள் வீட்டை உடைத்து விட்டடார்கள்) எழுதிய பின்னர்தான் நான் அதன் உண்மையை யாராவது அவரை தெரிந்தவர்கள் எழுதுவார்கள் என சில வாரங்கள் காத்திருந்தேன்(எதுக்கு எனக்கு ஊர்வம்பு என்று) ஆனால் எந்த வழியாலும் யாரும் உண்மை நிலையை எழுதவில்லை எனவே தான் நான் எழுதினேன் .மற்றது நீங்கள் சொன்ன அந்த அகதி விண்ணப்ப நிலையில் எம்மவர் சொல்கின்ற புலியெதிர்ப்பு வசனங்கள் பற்றி அண்மையில் பாரிசில் கைது செய்ய பட்ட புனர்வாழ்வு கழக பணியாளர்கள் பற்றிய ஒரு றெடியோவில் நடந்த கலந்துரையாடலில் விபரமாக சொல்லியிருந்தேன் இப்படியான வாக்கு மூலங்களை கொடுத்து விட்டு பின்னர் அகதி அந்தஸ்த்து கிடைத்த பின்னர். ஈழ போராட்டத்திற்கு ஆதரவான கூட்டத்தில் பல்லாயிர கணக்காக திரண்டும் பிரயொசனம் இல்லை எனவே புலத்து தமிழர்கள் இந்த அகதி விண்ணப்ப வாக்கு மூலத்திலும் கவனமாய் இருக்கவேண்டும் என்று. அதன் ஒலி வடிவம் யாழிலும் உள்ளது கேட்டு பாருங்கள் நன்றி

குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் உங்கள் பதில் திருப்தி அளிக்கிறது. மிக அண்மையில் கூட ஒருவர் தனக்கு பிரித்தானிய Home office இடமிருந்து வந்த கடிதத்துடன் வந்திருந்தார். அவரின் கடிதத்தில் அவரின் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட காரணங்களில் புலிகள் பற்றி அவதூறாக சொல்லப்பட்டவற்றை கோடிட்டு அதை தாங்கள் ஏற்கின்ற போதும் சிறீலங்காப்படைகளின் மீதான நெகிழ்வைக் காட்டி சில காரணங்கள் சொல்லி அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தது. இத்தனைக்கும் அந்த விண்ணப்பதுக்கான ஆரம்ப வேலைகளை செய்தவர்கள்.. பிரித்தானிய வாழ் குடியுரிமை பெற்ற தமிழ் சட்டவல்லுனர்கள் என்று தெரிந்ததும் திகைத்துப் போனேன்..! இப்படி சுயநலம் பிடித்த தமிழர்களுக்கு தமிழீழம் ஒரு கேடா என்று..??! இவர்களின் இன்னொரு முகம் புலியாதரவு..! :angry: :angry: :)

இப்படி பல விதத்தில் புலத்தில் சுய நலத்தமிழர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்மையில் நெதர்லாந்தில் அகதியாக வந்து பாராளுமன்றம் சென்ற ஒரு கறுப்பினத்தவர் தனது பிரசாவுரிமையையே இழந்து நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டார். காரணம் அவர் அகதி அந்தசுது கோரும் போது பொய்சொல்லியிருந்தமையே.

தமிழர் தரப்பு இப்படிப்பட்ட விடயங்களில் கவனமாக இருக்க வேண்டும்

அவாவின் பாஸ்போட் மீண்டும் கொடுக்கப்பட்டு அவா தற்போது அமெரிகாவில் குடியேறி விட்டார்

சோமாலியா நாட்டை சேர்ந்தவர்

அதை விட அவர் ஒரு முஸ்லிமாக இருந்து முஸ்லிம் மத்தில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் என்று ஒரு படம் கூட தயாரித்தவர் அதோடு அவரோடு இனைந்து அந்த படத்தை தயாரித்த Van Goho ஒரு முஸ்லிம் மதத்தை சேர்ந்தவரல் சுட்டு கொல்லப்படார்...............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருபேப்பரில் வெளிவந்த ஆக்கமொன்றிற்கு இதனுடன் தொடர்பிருப்பதால் அனைவரும் படிப்பதற்கு இங்கே இணைக்கின்றேன்.

******************

இலக்கியச் சந்திப்பும் அதன் மாற்றமும்.

- சாந்தி ரமேஷ் வவுனியன் -

இலக்கியத்தை நேசிப்பவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட 'இலக்கியச் சந்திப்பு" அரசியல் கறள் தட்டும் சந்திப்பாகவும் ஆளையாள் குத்தும் சந்திப்பாகவும் ஆனதெப்படி ? இந்தச்சந்திப்புப்பற்றி எழுது முதல் ஒன்றை சொல்லிவிடுகிறேன். இந்த இலக்கியச் சந்திப்பில் நான் ஒரு நாளும் தலைவைச்சும் படுக்கேல்ல. இப்பத்தியை படிக்க நேரும் இலக்கியம் இல்லை அரசியல் கறள்தட்டும் ஆர்வலர்கள் அறுவைகள் விசித்திரங்கள் லச்சுமிகளுக்கெல்லாம் எழும் கேள்விக்கு முதலிலே பதிலை தருவது பொருத்தமாகும் என்பதால் சொல்லியாயிற்று.

இலக்கியச் சந்திப்பு என்பது புகலிட நாடுகளில் வெளியாகிக்கொண்டிருந்த குறிப்பாக ஜேர்மனியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த நமதுகுரல்,தேனி , சிந்தனை , தூண்டில் , புதுமை உட்பட அப்போது வெளிவந்து கொண்டிருந்த இலக்கிய சஞ்சிகைகளின் ஆசிரியர்கள் வாசகர்களுக்குள்ளான ஒரு சந்திப்புக் களமாகவும் , இலக்கிய ஆர்வலர்களின் தளமாகவுமே ஆரம்பிக்கப்பட்டது. இச்சந்திப்பில் புலி ஆதரவுக்காரர்கள் , மாற்றுக்கருத்தாளர்கள் என்று யாருமே புலிச்சாயம் மாற்றுச்சாயம் கலக்காமல் முதல் சந்திப்பு நடந்து முடிந்தது. இலக்கியச்சந்திப்பு என்ற ஒரு சந்திப்பு உருவாக உழைத்து அதை உருவாக்கியவர்களான பார்த்திபன் , பீற்றர் ஜெயரட்ணம் ஆகியோரே இலக்கியச்சந்திப்பின் வேர்கள்.

இவ்வாறு தோற்றம் பெற்ற இலக்கியச் சந்திப்பானது இரண்டாவது சந்திப்பிலே அறுவை சஞ்சிகையின் ஆசிரியர் அறுவை லோகநாதனால் அரசியல் களமாக்கத் தொடங்கிய போது அன்று கலந்து கொண்டவர்களால் அரசியல் தவிர்த்த இலக்கியச் சந்திப்பாகவே நடாத்தப்பட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்ட போது மேன்மை தங்கிய அறுவை லோகநாதன் அவர்கள் 'அரசியல் இல்லாமல் இலக்கியம் இல்லை" எனக்கூறி இரண்டாவது சந்திப்பிலேயே சில ஆர்வலர்களை வெளியேற்றிய பெருமையைப் பெற்றுக் கொண்டார்.

அடுத்தடுத்து நடைபெற்ற இலக்கியச் சந்திப்புக்களில் புலி ஆதரவாளர்களென முத்திரையிடப்பட்டு பல எழுத்தாளர்களும் கலைஞர்களும் இந்தப் புலியெதிர்ப்பாளர்களால் விலகி ஒதுங்கிப் போனார்கள். இலக்கியத்தை நேசித்தவர்கள் ஒதுங்கிப்போகப்போக புதிய புலியெதிர்ப்புப்பிராணிகளின

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.