Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெலோவின் தலைமை பதவியை இராஜினாமா செய்ய உத்தேசம்: செல்வம் எம்.பி. தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

selvam-adaikalanathan.jpg

தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நடைபெற்ற வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக வன்னி மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ சார்பாக வன்னி மாவட்டத்திற்கு வழங்கப்படவிருந்த அமைச்சுப் பதவி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு வழங்க கட்சி தீர்மானித்துள்ளது.

கட்சியின் தீர்மானத்திற்கு நான் கட்டுப்பட்டவனாக இருந்தாலும் வன்னி மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய நிலை எனக்கு உள்ளது.

1998 ஆம் ஆண்டு தொடக்கம் வன்னி மக்கள் எமது கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வந்தனர். 2013 ஆம் ஆண்டு வரை மக்கள் எமது கட்சிக்கு பெரும் ஆதரவு வழங்கி வந்துள்ளனர்.

ஆனால் அந்த மக்களின் எதிர்பார்ப்பான அமைச்சுப்பதவி வன்னி மாவட்டத்திற்கு கிடைக்காத நிலையில் அந்த மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். எனவே இந்த மக்களுக்கு பெறுப்புக்கூற வேண்டிய தார்மிக பொறுப்பு என்னிடமுள்ளது.

எனவே தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் தலைவர் பதவியை இராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளேன்.

இது தொடர்பில் சில தினங்களில் எனது இராஜினாமா கடிதத்தை கட்சியின் செயலாளர் நாயகத்திடம் கையளிக்கவுள்ளேன் என்றார்.

சிவாஜிலிங்கம் தனக்கு வல்வெட்டித்துறை நகரசபை த்தலைவர் பதவி கிடைக்கவில்லை என்பதற்க்காக சொந்த ஊரின் சபைக்கும் ,தலைவர் ஆனந்தராவுக்கும் எதிராக EPDP உடன் சேர்ந்து வேலைசெய்தவர் .இப்பொழுது அடைக்கலநாதனுக்கே ஆப்பு .

ரெலோவின் புதிய தலைவர் M K சிவாஜிலிங்கமா ???? :D   

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிவாஜிலிங்கத்துக்கு போட்டியிட அனுமதி கொடுத்ததே பெரிய விடயம். இதில அமைச்சு பதவி வேறையா. தூக்கிப் போட்டுடு டெலோவை வழிநடத்துங்க செல்வம். டெலோவின் ஒரே பாஉ நீங்கள்தான். வன்னி மக்களுக்கு இந்த அமைச்சு பதவி கொடுப்பதுதான் நியாயம். இது எனது ஆதங்கம் கட்டளையோ அட்வைசோ இல்லை.

சிவாஜிலிங்கம் தனக்கு வல்வெட்டித்துறை நகரசபை த்தலைவர் பதவி கிடைக்கவில்லை என்பதற்க்காக சொந்த ஊரின் சபைக்கும் ,தலைவர் ஆனந்தராவுக்கும் எதிராக EPDP உடன் சேர்ந்து வேலைசெய்தவர் .இப்பொழுது அடைக்கலநாதனுக்கே ஆப்பு .giri

Giri,

இந்த புரிதல் தவறானது. 

வல்வெட்டித்துறை நகரசபையானது,இன்று இந்த அளவுக்கேனும் செயற்படுகிறது என்றால் அதற்கு அடிப்படையாக இருப்பது சிவாஜியின் செயற்பாடுகளே. தனக்கான இருப்பிடத்தை தக்கவைக்கும்  இன்னொரு தமிழ் தேசிய கூட்டமைப்பின்  பாரளுமன்ற உறுப்பினரின் தலையீடே  இன்று நகரசபைக்குள் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. 

நீங்கள் கேட்கலாம் மக்கள் வாக்களிக்காமல் விட்டமையால் தானே சிவாஜிலிங்கம் தோற்றவர் என. சிவாஜிலிங்கம் தனது உணச்சி வசப்பட்ட செயற்பாடுகளாலும், ஊடக பலமின்மையாலும்  தான் அந்த நிலைக்கு தள்ளப்பட்டவர். 

சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டமை குறித்த வாதப்பிரதிவாதங்கள் எல்லாம் தோற்றுப்போய் இன்று அது சரியானது என்று வாதிடும் பல விமர்சகர்களை பார்த்துள்ளேன். 

ஒரு தனி மனிதனுக்கான ஊடக பலமும்,பண பலமும் இருந்தால் எதயும் சாதிக்கலாம் எனபதற்கு சிவாஜின் நகரசபை தேர்தலும் ஒரு உதாரணம். 

Edited by நெற்கொழு தாசன்

வல்வெட்டித்துறை நகர சபை தலைவர் ஆனந்தராசவின் நேர்காணலை கேட்டுப்பாருங்கள் .

அப்ப மகிந்த அல்ஐசீராவிற்கு சொன்னதும் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

ரெலோக்கு தலைமை அதுஇதென்னு.. ஒன்னு.. இருக்கா.

ஆயிரத்தெட்டு இயக்கங்களை வைச்சுக் கொண்டு இருக்காம.. எல்லாத்தையும் கலைச்சுப் போட்டு.. மக்கள் விருப்பை நிவர்த்திக்க விரும்பாத.. சம்பந்தன்.. சுமந்திரனை தூக்கி வெளில போட்டிட்டு...  தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்திற வழியைப் பாருங்க சார். ரெலோவும்.. புளொட்டும்.. ஈபியும்.. தமிழரசுக் கட்சியும்.. கூட்டணியும் எனி ஏன்..??! தமிழனுக்கு தேவை அதிகாரம். சொந்த நிலம். முதலில் அதை மீட்கிற வழியைப் பாருங்க...! வன்னியோ.. வாகரையோ மக்களின் தேவை ஒன்று தான். நிம்மதியான தனித்துவமான வாழ்க்கை..! அதற்கு ஏற்பாடு செய்ய முடிஞ்சா செய்யுங்க. இல்ல விட்டிட்டு பிள்ளைகுட்டியோட வெளிநாட்டுக்குப் போங்க..! :icon_idea::rolleyes::(

Edited by nedukkalapoovan

எப்படி? யார்? அதை செய்யப்போகிறார்கள்?

இதற்காகத்தான் உரிக்க உரிக்க வெங்காயத்துக்குள் ஒன்றும் இருக்காது என்று சொல்வார்கள். பூசு கழிந்தவுடன் உரிப்பதை நிறுத்துவது நல்லது.

முதலில் நல்ல ஜனநாயக அரசாங்கத்தை தமிழ் பகுதிகளில் கொண்டுவாருங்கள். அப்போது மக்களுக்கு சுமந்திரனா அல்லது சம்பந்தரா என்று முடிவு செய்ய முடியும்.  ஒரு ஒழுங்கான தேர்தல் நடத்த வழி இல்லை. அதுவரைக்கும் அவர்கள் தெரிபவரை வெங்க்காயம் மாதிரி உரிக்காமல் இருப்பது நல்லது. இல்லையேல் இந்த கருத்து வந்து முடிந்தது மாதிரி Dead End க்குதான் பாதை போய்முடியும்.

வல்வெட்டித்துறை நகரசபை வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டது- சிவாஜியின் சாதனை

Published on January 4, 2013-9:30 am   ·   No Comments

sivajilinkam.jpgதனக்கு தலைவர் பதவி தராவிட்டால் வல்வெட்டித்துறை நகரசபையை இயங்க விட மாட்டேன் என்றும் நகர சபை நிர்வாகத்தை முடக்கப்போவதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கு 28.07.2011 அன்று கடிதம் எழுதிய சிவாஜிலிங்கம் அதனை தற்போது நிறைவேற்றியுள்ளார்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டு அச்சபை கலைக்கப்பட கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினரும் ஈ.பி.டி.பியினரும் இணைந்து வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் சமர்ப்பித்த வரவு செலவு திட்டத்தை தோற்கடித்துள்ளனர்.

தலைவரினால்,வரவு செலவுத் திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டபொழுது, கூட்டமைப்பின் உறுப்பினரான க.சிவாஜிலிங்கம் தான் அதனை நிராகரிப்பதாகக் கூறி முன்மொழிய அவரது கூற்றை ஏற்ற ஈபிடிபி உறுப்பினரான பொ.தெய்வேந்திரன் அதனை

வழிமொழிய சூ.சே.குலநாயகம் மற்றும் சில உறுப்பினர்களும் அதற்கு ஆதரவளித்தனர். இதனால் வல்வெட்டித்துறை நகரசபையின் வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

சிவாஜிலிங்கத்தின் பதவி ஆசையால் வல்வெட்டித்துறை நகரம் நாறிக்கிடக்கின்றது.

- See more at: http://www.thinakkathir.com/?p=46630#sthash.KNzq4Pxg.dpuf

சிவாஜிலிங்கத்தின் போலி ஊடக பிரசாரம்- வல்வை நகரசபை தலைவர் கண்டனம்!

Published on October 16, 2011-10:53 pm   ·   2 Comments

aus-hc-for-sri-lanka1-150x100.jpgதன்னை ஹிரோவாக காட்டி மக்களிடம் பிரபல்யம் தேடுவதற்காக வல்வெட்டித்துறையில் புத்தர் சிலை. வத்திக்கானுக்கு அறிவித்திருக்கிறேன் என்றும் தன்னுடைய நடவடிக்கைகளால் புத்தர் சிலை அமைக்கும் நடவடிக்கையை இராணுவத்தினர் கைவிட்டுவிட்டனர் என்றும் சிவாஜிலிங்கம் போலி பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்.
இது தொடர்பாக வல்வெட்டித்துறை நகரசபைத்தலைவர் அனந்தராஜ் தினக்கதிர் இணையத்தளத்திற்கு அனுப்பி வைத்த செய்திக்குறிப்பை இங்கே தருகிறோம்.

தற்போது நடைபெற்று முடிந்த வல்வை உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிந்த கையுடன் தனக்கே தலைவர் பதவி தரப்படவேண்டும் என்று பல முயற்சிகளையும் தந்திரோபாயங்களையும் கையாண்டதுடன் மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்ற நல் நோக்கத்துடன் அரசியலுக்குள் உள்வாங்கப்பட்ட சில இளைஞர்களைச் சில மாதங்கள் வரை ஆசை வார்த்தைகளைக் கூறித் தவறான வழியில் நடக்கத் தூண்டியும் எல்லாம் தோல்வி அடைந்த நிலையில் 30.09.2011 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பங்குபற்றியிருந்தார். எனக்கு எதிராக அவரால் மேற்கொள்ளப்பட்ட அவதூறுகள் போய்ப்பிரசாரங்கள் எல்லாவற்றையும் மறந்து அவரை அன்புடன் வரவேற்று உரிய கௌரவத்தை நான் அவருக்கு அளித்திருந்தேன்.

ஆனால் அவரது உள்நோக்கத்தை நேற்றைய(15.10.2011) தினக்குரலிலும் இன்றைய (16.10.2011) தினக்குரலிலும் அவரால் வழங்கப்பட்ட தவறான செய்திகைப் பார்க்கும் பொழுது என்னால் புரிந்து கொள்ளமுடிகின்றது. (புத்தர் சிலை அமைப்பதை தான் தடுத்து நிறுத்தி விட்டதாக வெளியிட்ட செய்தி) தன்னைத் தலைவராக நியமிக்காவிடில் வல்வெட்டித்துறை நகர சபையை முடக்குவேன் என்று அறிக்கை விட்ட க.சிவாஜிலிங்கம் அந்த இலட்சியத்தை நடத்தி முடிப்பதற்காகவே இவ்வாறான போலி ஊடகப் பிரசாரத் தந்திரத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளார். அவரது அறிக்கைகளை ஊடகங்கள் உறுதிப்படுத்திய பின் வெளியிடுவதன் மூலம் அவை தமது கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும். ஊடகங்களினுடாகவே தன்னைப் பிரபல்யப்படுத்த முனையும் க.சிவாஜிலிங்கம் நீண்ட காலத்திற்கு மக்களையும் ஊடகங்களையும் ஏமாற்றமுடியாது.

கடந்தகால ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவி மக்களின் செல்வாக்கை இழந்தவர். மீண்டும் வல்வெட்டித்துறை நகர சபைத் தேர்தலில் பின் கதவினூடாக கட்சித் தலைவர்களின் அனுமதியின்றி அதில் நுழைந்தவர் பல்வேறு பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு எனக்கு எதிராகப் பல நடவடிக்களை மேற்கொண்டபோதும் எவ்வித பண முதலீடுகளோ பெரிய அளவிலான பிரசாரங்களோ இன்றி மக்களின் ஒன்றுபட்ட ஆதரவினால் வெற்றிபெற்ற பின்னர் கடந்த ஒருமாதமாக அவர் எனக்கு தந்த மனஅழுத்தங்களில் இருந்து நான் இன்னும் விடுபடாத விலையில் சந்தர்ப்பவாத அரசியலை நடத்தும் க.சிவாஜிலிங்கம் மீண்டும் ஒரு பொய்யை தினக்கதிர் ஊடாகக் கட்டவிழ்த்து விட்டது நகைப்பாக இருக்கின்றது.

அவர் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அவருக்கான ஆதரவை நானும் எனது சபை உறுப்பினர்களும் வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்திருப்பதாகவும் விடுத்த செய்திக் குறிப்பில் எவ்வித உண்மையுமில்லை என்பதைத் தங்களுக்கு அறியத்தருகின்றேன். அவ்வாறு நான் அவருக்கு தேர்தலில் ஆதரவை அளிப்பது என்மீது நம்பிக்கை வைத்துச் செயற்படும் புலம் பெயர் உறவுகளுக்கும் தாயக உறவுகளுக்கும் துரோகம் இழைப்பதாகவே நான் கருதுகின்றேன். நான் பற்றுறுதியுடன் நேசிக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் வேட்பாளராக நியமிக்கப்படும் ஒருவர் அவர் நேர்மையானவராகவும் உறுதியான கொள்கைப்பற்று உடையவராகவும் நல்ல பண்புகளைக் கொண்டவராகவும் மனிதநேயம் உள்ளவராகவும் மக்களை நேசிப்பவராகவும் ஜனநாயகத் தன்மை கொண்டவராகவும் தனது அரசியல் இருப்புக்காக கட்சிவிட்டுக் கட்சி தாவாதவராகவும் உண்மையில் தமிழ் தேசியத்தின் மீது பற்றுக் கொண்டவராகவும் இருக்கும் பட்சத்தில் அவருக்காக யாழ் மாவட்டமெங்கும் முழமையாகக் களத்தில் இறங்கிப் பிரசாரம் செய்வதுடன் அவருக்கு அதிகூடிய வாக்குகளைப் பெற்றுக் கொடுப்பேன். அத்தகைய பண்புள்ள வேட்பாளர்களையே தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பீடம் தெரிவு செய்யவேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. கடந்த காலத்தில் பொருத்தமற்றவர்களை நியமித்து மாற்றுக் கட்சியினர் இடம் பெறுவதற்கு இடம் அளித்தது போல் அல்லாது எதிர் காலத்தில் பொறுப்புடன் செயற்படவேண்டும் -

வல்வை.ந.அனந்தராஜ் வல்வெட்டித்துறை நகர பிதா

- See more at: http://www.thinakkathir.com/?p=20521#sthash.1EEZ2VDz.dpuf

சிவாஜிலிங்கம், சிறிகாந்தா ஆகியோர் ரெலோவில் மீண்டும் இணைந்து கொள்கின்றனர்! Published on June 25, 2011-6:55 pm   ·   No Comments

srika-150x150.jpgரெலோவிலிருந்து பிரிந்து சென்று தனியாக ஒரு கட்சியாக செயற்பட்டு வந்த சிவாஜிலிங்கமும், சிறிகாந்தாவும் தமது கட்சியான தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பை கலைத்து விட்டு ரெலோவுடன் இணைந்து கொள்ளவதாக இன்று அறிவித்துள்ளனர்.
யாழ் நகரில் செய்தியாளர் மகாநாட்டை நடத்திய இருவரும் இதனை அறிவித்ததுடன் நாளை வவுனியாவில் நடைபெற இருக்கும் ரெலோவின் மகாநாட்டிலும் கலந்து கொண்டு அக்கட்சியுடன் இணைய இருப்பதாக அறிவித்துள்ளனர்.
தமிழ் தேசிய சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் வந்திருப்பதினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோவுடன் இணைந்து கொள்வதற்காக தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பை இன்றுடன் கலைப்பதாக அதன் தலைவர் எஸ். சிறிகாந்தாவும் செயலாளர் சிவாஜிலிங்கம் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர்.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப்பெற்றுக் கொள்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் எந்தவித குறுகிய அரசியலுக்காக இந்த முடிவை தாங்கள் எடுக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை நாளை ரெலோவின் தேசிய மகாநாடு வவுனியா முத்தையா மண்டபத்தில் நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற உள்ள இம்மகாநாட்டில் புதிய தலைவர் செயலாளர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர் என ரெலோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ரெலோவில் மீண்டும் இணைந்து கொள்ள உள்ள சிவாஜிலிங்கத்திற்கு முக்கிய பதவி ஒன்று வழங்கப்பட உள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

- See more at: http://www.thinakkathir.com/?p=12625#sthash.ofOz30cj.dpuf

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி? யார்? அதை செய்யப்போகிறார்கள்?

இதற்காகத்தான் உரிக்க உரிக்க வெங்காயத்துக்குள் ஒன்றும் இருக்காது என்று சொல்வார்கள். பூசு கழிந்தவுடன் உரிப்பதை நிறுத்துவது நல்லது.

முதலில் நல்ல ஜனநாயக அரசாங்கத்தை தமிழ் பகுதிகளில் கொண்டுவாருங்கள். அப்போது மக்களுக்கு சுமந்திரனா அல்லது சம்பந்தரா என்று முடிவு செய்ய முடியும்.  ஒரு ஒழுங்கான தேர்தல் நடத்த வழி இல்லை. அதுவரைக்கும் அவர்கள் தெரிபவரை வெங்க்காயம் மாதிரி உரிக்காமல் இருப்பது நல்லது. இல்லையேல் இந்த கருத்து வந்து முடிந்தது மாதிரி Dead End க்குதான் பாதை போய்முடியும்.

அதென்ன நல்ல ஜனநாயகம். கெட்ட ஜனநாயகம்...???! சுமந்திரன் ஜனநாயக வழியில் வந்தவரோ..????!

சும்மா கதை அளக்கப்படாது.. ஜனநாயகம் என்று. உங்க எவருமே ஜனநாயகம் செய்யல்ல. ஆளையாள்.. மக்களை ஏமாற்றிறதுக்குப் பெயர் ஜனநாயகம் கிடையாது. மக்களுக்கு வழங்கும் வாக்குறுதிகளை காப்பாற்ற முடியல்ல.. அரசியலை விட்டு விலகிப் போறது தான் ஜனநாயகம். விலகிப் போங்க.. அதுக்கு அப்புறம் மக்களுக்கு தெரியும் யாரை முன்னிறுத்தனுன்னு...! :icon_idea::rolleyes:

பிரபாகரன் போவார்... சுமந்திரன்.. சம்பந்தன் வருவார்கள் என்று மக்கள் காத்திருக்கல்ல. மக்கள் அவர்களுக்குரிய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் தகுதியோட தான் இருக்கிறார்கள்.மக்கள் ஜனநாயகம் கேட்டுப் போராடேல்ல. மக்கள் சொந்த மண்ணில் வாழ்வுரிமை தான் கேட்டுப் போராடினார்கள். அத்தகைய.. மக்களை சிங்களவனுக்கு விற்றுப் பிழைக்கிறவர்கள் தான் பிரச்சனைக்குரியவர்களாக உள்ளனர். :icon_idea:

Edited by nedukkalapoovan

அதென்ன நல்ல ஜனநாயகம். கெட்ட ஜனநாயகம்...???!  தேர்தல் நடப்பாதால் இலங்கையில் ஜனநாயம் இருப்பத்ததாக மகிந்த கொடுத்த பேச்சுக்களை படிகவில்லையா?

சுமந்திரன் ஜனநாயக வழியில் வந்தவரோ..????! சுமந்திரனை இலங்கை பாராளுமன்றத்தில் சம்பந்தர் சர்வாதிகாரமாக வைத்திருக்கிறார் என்பதா கருத்து?  இலங்கை பாரளுமன்றத்தின் தேர்தல் சட்டங்களுக்கு பிறம்பாக, உரிமை பெறாதவர் ஒருவர் பாராளுமன்றத்தில் உள்ளே நுளைந்து அமர்வுகளில் பங்கு பற்ற முடியுமா? அதற்கு இலங்கை அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்காது என்கிறீர்களா?

இலங்கை ஒரு சர்வாதிகர நாடு என்றால் அது வேறு. நியமன பா.உ ஒருவரை நியமித்தது சர்வாதிராம் என்பது அகில பாரளும்ன்றங்களின் நடத்தைகளையும் தூக்கி எறிவது. அமெரிக்காவில் மந்திரி ஸ்தானங்களில் இருக்கும் எல்லா காரியதரிசிகளும் நியமிக்கபட்டவர்களே.  அவர்கள் மக்களால் தெரிவு செய்யப்படாமல் தனிய தமக்கு அந்த துறையில் இருக்கும் ஆழுமையை மட்டும் பயன்படுத்தி அந்த பதவிகளுக்கு வருபவர்களே. சட்டத்துறை உதவிக்கு பாராளும்ன்ற நியமன பா.உ  ஆக்கப்படவரல்லவா சுமந்திரன்.

சும்மா கதை அளக்கப்படாது.. ஜனநாயகம் என்று. உங்க எவருமே ஜனநாயகம் செய்யல்ல. ஆளையாள்.. மக்களை ஏமாற்றிறதுக்குப் பெயர் ஜனநாயகம் கிடையாது. மக்களுக்கு வழங்கும் வாக்குறுதிகளை காப்பாற்ற முடியல்ல.. அரசியலை விட்டு விலகிப் போறது தான் ஜனநாயகம். விலகிப் போங்க.. அதுக்கு அப்புறம் மக்களுக்கு தெரியும் யாரை முன்னிறுத்தனுன்னு...! :icon_idea::rolleyes:

அப்பாடா!  தேர்தலில் பதவி பெற்றவர்கள் இன்னமும்ம் சத்தியப்பிரம்ணம் எடுத்து பதவி ஏற்கவில்லை. அதற்குள் அவர்கள் பதவி விலகவேண்டிய அளவு தவறுகள் செய்திருக்கிறார்கள் என்பது மிகைப்படுத்தபட்ட குற்ற்ச்சாட்டுதல்கள் இல்லையா? அவர்கள் பதவி விலகினால் இலங்கை அரசாங்கத்தை வைத்து இன்னொருதேர்தல் எப்படி வைப்பிப்பது என்றதை ஆர்ரய்ந்துவிட்டா இந்த புதியவர்களை தெரியும் அவா வருகிறது?

பிரபாகரன் போவார்... சுமந்திரன்.. சம்பந்தன் வருவார்கள் என்று மக்கள் காத்திருக்கல்ல. மக்கள் அவர்களுக்குரிய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் தகுதியோட தான் இருக்கிறார்கள்.மக்கள் ஜனநாயகம் கேட்டுப் போராடேல்ல. மக்கள் சொந்த மண்ணில் வாழ்வுரிமை தான் கேட்டுப் போராடினார்கள். அத்தகைய.. மக்களை சிங்களவனுக்கு விற்றுப் பிழைக்கிறவர்கள் தான் பிரச்சனைக்குரியவர்களாக உள்ளனர். :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.