Jump to content

'தமிழக சட்டசபையில் தீர்மானம் திகைப்பில் ஆழ்த்தியது. தேச நலனுக்காகவே கலந்து கொள்கிறேன்': சல்மான் குர்ஷித்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

'தேசிய நலனுக்காகவே இந்தியாவின் பிரதிநிதியாக காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்கிறேன்' என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவுத்துறை  சல்மான் குர்ஷித், வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சுஜாதாசிங்குடன் தனி விமானத்தில் நேற்று கொழும்பு சென்றார்.

விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சல்மான் குர்ஷித், 'ஈழத்தமிழர் பிரச்னைகள் உள்பட பல்வேறு பிரச்னைகளை இலங்கையுடன் பேச வேண்டி உள்ளது. தேசநலனைக் கருதித்தான் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள முடிவு எடுக்கப்பட்டது.

இங்கு நடைபெறுவது இரு தரப்பு மாநாடு அல்ல. பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கிற மாநாடு. இதில் பங்கேற்பது அத்தியாவசியமானது என்றுதான் வந்திருக்கிறேன். இந்த மாநாட்டின் இடையே, ஈழத்தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதுபற்றியும், இந்திய மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்கிறபோது எதிர்கொள்கிற தாக்குதல்கள் குறித்தும், இந்தியாவின் கருத்துக்களை, கவலைகளை இலங்கை அரசிடம் எடுத்துச் சொல்கிற வாய்ப்பு கிடைக்கும்.

காமன்வெல்த் மாநாட்டை முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்னை திகைப்பில் ஆழ்த்தியது. இலங்கையில் வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்கள் நலனுக்காக நாங்கள் எவ்வளவோ செய்கிறோம். போரினால் சின்னாபின்னமான பகுதிகளில் 15 ஆயிரம் வீடுகள் கட்டித்தருகிற மிகப்பெரிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். சாலைகள் போடுகிற திட்டங்கள், உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துகிற திட்டங்களிலும் ஈடுபட்டு இருக்கிறோம்.

நாங்கள் இங்கு இல்லாவிட்டால், இந்த செயல்களை எப்படி செய்ய முடியும்? எனவேதான், இலங்கைக்கு நாங்கள் செல்லக்கூடாது என அவர்கள் சொல்வது கண்டு திகைக்கிறேன். எனது வேலை, தேசிய நலனையொட்டி இந்தியாவின் பிரதிநிதியாக கலந்துகொள்வதுதான்' எனத் தெரிவித்துள்ளார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98972/language/ta-IN/article.aspx

 

Posted

நாங்கள் இங்கு இல்லாவிட்டால், இந்த செயல்களை எப்படி செய்ய முடியும்? எனவேதான், இலங்கைக்கு நாங்கள் செல்லக்கூடாது என அவர்கள் சொல்வது கண்டு திகைக்கிறேன். எனது வேலை, தேசிய நலனையொட்டி இந்தியாவின் பிரதிநிதியாக கலந்துகொள்வதுதான்' எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கை இறையாண்மை உள்ள நாடுதானே.. அவர்கள் செய்யமாட்டார்களா?? நீங்கள் பிடுங்கினால்தான் ஆணி பிடுங்குப்படுமா?? :rolleyes:

Posted
போரினால் சின்னாபின்னமான பகுதிகளில் 15 ஆயிரம் வீடுகள் கட்டித்தருகிற மிகப்பெரிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

 

ஏட்டுக்கணக்கை மாத்தி மாத்தி எழுதுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சென்ற மாதம் போய் வந்தது எந்த கணக்கில்? இரு நாட்டு கூத்தா அல்லது வேறு ஏதுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.