Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பம்பாய் சென்னை தாக்குதல்கள். பாதுகாப்பு ஓட்டை. - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பம்பாய் சென்னை தாக்குதல்கள் - இந்திய பாதுகாப்பில் ஓட்டை - வ.ஐ.ச.ஜெயபாலன்

 

இந்தியாவின் பாதுகாப்பு ஓட்டைகள் தொடர்பாக 2006ல் இருந்து எச்சரித்துவரும் எனது சில நேர்காணல்களில் இருந்து ஒரு சில பகுதிகளை மீழ நினைவூட்ட விரும்புகிறேன். இந்திய பாதுகாப்பு ஓட்டைகலை அடைக்க இலங்கை தமிழர்போன்ற தென்னாசிய நட்ப்பு சக்திகளில் நல்லுறவு அவசியம் என்பதை இனியாவது இந்தியா உணரவேண்டும்.  பம்பாய் சென்னை தாக்குதல்களுக்கான சூழல் நிலவுவதை 2006ல் இருந்தே தொடர்ந்து எச்சரித்து வருகிறேன்.

 இலங்கை உளவுத்துறையிலுள்ள சிலரது அனுசரனையுடனேயே பாகிஸ்தான் உளவுத்துறையின் இலங்கையில் செயல்படுகிறது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

  

... ஜெயபாலன் - 01.10.2006 நேர்காணல் - தீராநதி  

http://www.tamilcanadian.com/article/tamil/97

BREEF


. . . ஜெயபாலன்: தென்னாசிய நாடுகளுக்கு இடையேயான சதுரங்க போட்டியில், உண்மையில் காய்களை நகர்த்துவது சீனாவும் அமெரிக்காவும்தான். இந்த இரண்டு நாடுகளும் நேரடியாக இந்தியாவுடன் இராணுவ ரீதியாக முரண்படாமல், அதேநேரத்தில் பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், ஓரளவு பங்களாதேஷ் போன்ற நாடுகளை தங்களுடைய அம்புகளாகப் பயன்படுத்துகின்றன. பாகிஸ்தான், முழுமையான ஒரு கையாளாகப் பயன்படுத்தப்படுகிறது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சதுரங்கத்தையும்கூட சீனாவும் அமெரிக்காவும்தான் ஆடுகின்றன. இதில் சீனாவின் கைதான் இலங்கையில் ஓங்கியிருக்கிறது. சீனாவின் உளவுத்துறையும் பாகிஸ்தான் உளவுப்பிரிவான .எஸ்..யும் இலங்கையில் பலப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு வல்லரசுகளுடன் உறவு இருப்பதால்தான், பங்களாதேஷ் யுத்தத்தில் இலங்கை துணிந்து பாகிஸ்தானுக்கு உதவியது. இதனை இந்திய அறிஞர்கள் உணர்ந்துகொள்வது அவசியம். நேபாளம், பங்களாதேஷ் போன்ற மற்ற தென்னாசிய நாடுகளிலும் இதுமாதிரியான போக்கு நிலவுகிறது. பாகிஸ்தான் உளவுத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் ராஜதந்திரிகளாக இலங்கையிலும் பங்களாதேஷிலும் நேபாளத்திலும் பணிபுரிகிறார்கள். அவர்கள் அங்கே பணிபுரிவது நிச்சயம் அந்தந்த நாடுகள் தொடர்பான விவகாரங்களுக்காக அல்ல. இந்தியா தொடர்பாகத்தான் அவர்கள் அங்கே பணிபுரிகிறார்கள். (அப்படி இலங்கையில் பணியாற்றும் ஒரு பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரியின் வாகனம் அண்மையில் வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளானது. பாகிஸ்தான், இதற்கு இந்தியாவைக் குற்றம் சாட்டுகிறது. இலங்கை, விடுதலைப்புலிகளைக் குற்றம் சாட்டுகிறது.)
2

... ஜெயபாலன் - 01.01.09 நேர்காணல் - தீராநதி
https://groups.google.com/forum/#!msg/mintamil/SHJTipUQwnk/6XhzEIwp_2EJ

 

BREEF
...ஜெயபாலன்: மும்பை பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் கடற்படை கண்காணிப்பைத்தீவிரப்படுத்தியுள்ளது இந்திய அரசு. இந்நிலையில், கண்காணிப்புக் குறைவாக இருக்கும் தமிழகத்தின் தென்பகுதியான தூத்துக்குடி, கன்னியாகுமரி கடல்பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளது என்பது என் அனுமானம். நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல், இந்தியாவுக்கு முன்னால் உள்ள முக்கிய அச்சுறுத்தல் பாகிஸ்தான் உளவுத்துறையின் தென்னாசிய செயல்பாடுகள்தான். நேபாளம், வாங்காள தேசம், இலங்கை போன்ற இந்தியாவின் அண்டை நாடுகளில் இருந்து பாகிஸ்தான் உளவுத்துறை செயல்பட்டு வருவது ரகசியம் இல்லை. இதற்கு சீனாவின் அனுசரணை உள்ளது என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயங்கள். இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் உளவுத்துறையான .எஸ்..யின் செயல்பாடுகள், பாகிஸ்தானில் இருந்து மட்டுமல்லாமல் நேபாளம், பங்களாதேஷ், இலங்கை என .எஸ்.. பரந்துள்ள இடங்களில் இருந்தும் திட்டமிடப்படுகிறது. காத்மாண்டு, டாக்காவில் உள்ள .எஸ்..யின் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்திய உளவுத்துறை நிறுவனங்களே பலமுறை தெரிவித்துள்ளன. கொழும்பில் நடக்கும் .எஸ்.. செயல்பாடுகளை இந்தியா உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இந்திய உளவுத்துறைக்கு சந்தேகம் இருக்கிறது. பாகிஸ்தான் உளவுத்துறைத் தலைவரான பஷீர்வாலி முகமது இலங்கைக்கான தூதராக நியமிக்கப்பட்டது, இலங்கை அரசியல்வாதிகளுடனும் அதிகாரிகளுடனும் சாயங்காலங்களில் விருந்து சாப்பிடவும் தேநீர் குடிக்கவும் மட்டும் இல்லை.

இலங்கையில் .எஸ்..யின் செயல்பாடுகளைப் பலப்படுத்தத்தான் என்பது அங்கே எல்லோருக்கும் தெரியும். 2006ஆம் ஆண்டு பஷீர்வாலியைக் கொலை செய்யும் நோக்கத்துடன் கொழும்பில் மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இலங்கை ராணுவத்துக்கு பாகிஸ்தான் ஆயுத சப்ளை செய்துவருவதால் புலிகள்தான் அதைச் செய்தார்கள் என்று சொல்லப்பட்டாலும், இந்திய உளவுத்துறைதான் அதைச் செய்தது என்று பாகிஸ்தான் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. கொழும்பில் பாகிஸ்தான் உளவுத்துறை பலப்படுவது இந்தியாவை சீர்குலைப்பதற்குத்தான். கொழும்பில் உள்ள .எஸ்..தான், கொழும்பு தூத்துக்குடி -கன்னியாகுமரி முக்கோணக் கடல்பகுதி வழியாக தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்புள்ளது என்கிறேன். தமிழகத்தின் தென்பகுதியில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, கொழும்பு மூன்று ஊர்களுக்கும் இடைப்பட்ட முக்கோணப் பகுதி தொடங்கி கேரளாவின் மேற்குக் கடற்கரை வரை இலங்கையின் ஊடாக இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சி இருக்கிறது என்பதான சந்தர்ப்ப சாட்சிகள் எங்களுக்குக் கிடைத்துள்ளது. இது சம்பந்தமான சூசகமான தகவல்களை கொழும்பில் கேள்விப்படுகிறோம். கோயம்புத்தூர் குண்டு வெடிப்பில் கேரள சம்பந்தம் உள்ளது சாதாரணமான விஷயம் இல்லை. கோயம்புத்தூர் தாக்குதலுக்கான ஆள்கள் இலங்கை ஊடாக வந்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை கொழும்பிலேயே என்னிடம் பலர் எழுப்பினார்கள். எனவே, இலங்கைக்குள் நடக்கும் .எஸ்.. செயல்பாடுகளையும், தென் தமிழகம் தொடங்கி கேரளாவில் மலைப்புறம் வரைக்குமான இந்தியாவின் தென் கடல்பகுதியிலும் கண்காணிப்பை இந்தியா தீவிரப்படுத்த வேண்டும். 

தீராநதி: தமிழகக் கடற்கரை வழியாக ஊடுருவுவது மட்டுமல்லாமல், தமிழகத்துக்கும் தீவிரவாதத் தாக்குதல் அபாயம் இருப்பதாக கருதுகிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணோய்,

அங்க பிடிபட்ட ------, இலங்கைத் தமிழர் எண்டு, வட இந்திய ஊடகங்கள் சொல்லுது.

முதல் அதை பிழை எண்டு நிறுவப் பார்ப்போம்.

பிறகு இந்திய ஓட்டை பற்றி அலசுவோம்.

(நிழலி நன்றி, எனினும் அந்த சொல் சாதாரணமாக இலங்கையில் முஸ்லிம் மக்களில், தனியொருவரை குறிப்பது, இனத்தை அல்ல என்பதுடன் எனது பதிவிற்கு முக்கியமானது என்பது எனது கருத்து. ஏனெனில் தமிழ் நாட்டில் இலங்கை போல் வேறுபாடு இல்லை)

Edited by Nathamuni
இனம் ஒன்றை அவமதிக்கும் சொல் நீக்கம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மதிப்புக்குரிய நாதமுனி, பொதுவாக வட இந்திய ஊடகங்கள் சென்னை இரயில் தாக்குதலுடன்  இலங்கைத் தமிழர்களை சம்பத்தப்ப் படுத்தி எழுதியதாகத் தகவல் இல்லை.  

2012 ல் @Is ISI recruiting Lankan Tamils to spy on India?  என்று ஒரு தவறான வந்து அதனை கண்டித்தோம்.

http://timesofindia.indiatimes.com/city/chennai/Is-ISI-recruiting-Lankan-Tamils-to-spy-on-India/articleshow/16500314.cms.  

 
எதாவது ஒரிரு வட இந்திய ஊடகங்களில் அப்படிச் சேதி வந்திருந்தால் தயவு செய்து
 சேதியின் இணைப்பை அனுப்பி உதவுங்கள். இயன்றதை செய்கிறேன்

Edited by poet

(நிழலி நன்றி, எனினும் அந்த சொல் சாதாரணமாக இலங்கையில் முஸ்லிம் மக்களில், தனியொருவரை குறிப்பது, இனத்தை அல்ல என்பதுடன் எனது பதிவிற்கு முக்கியமானது என்பது எனது கருத்து. ஏனெனில் தமிழ் நாட்டில் இலங்கை போல் வேறுபாடு இல்லை)

 

கருத்துக்கள விதிகளின் 4 ஆவது பகுதியை ஒரு முறை பாருங்கள்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=100794

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கள விதிகளின் 4 ஆவது பகுதியை ஒரு முறை பாருங்கள்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=100794

 

அதில இருகிறதால தான் பாவித்தேன்......  ஹி, ஹி.  :icon_mrgreen:
 
பிழை தான்.. ஏற்றுக் கொள்கிறேன்.
 
ஆனாலும், இந்த நாதரியால், இஸ்லாமிய சகோதரர்கள் இனிமேல் தமிழகம் செல்வது, விசா பெறுவது கஷ்டமாகலாம். 
 
அதுவே எனது கோபத்துக்கு காரணம்.  :blink:
 

"இலங்கைக்கும் இந்தியாவுக்கும்இடையிலான சதுரங்கத்தையும்கூட சீனாவும் அமெரிக்காவும்தான் ஆடுகின்றனஇதில் சீனாவின் கைதான் இலங்கையில்ஓங்கியிருக்கிறதுசீனாவின் உளவுத்துறையும் பாகிஸ்தான் உளவுப்பிரிவான .எஸ்..யும் இலங்கையில் பலப்பட்டிருக்கிறது.இந்த இரண்டு வல்லரசுகளுடன் உறவு இருப்பதால்தான்பங்களாதேஷ் யுத்தத்தில் இலங்கை துணிந்து பாகிஸ்தானுக்குஉதவியது."

 

அந்த நேரம் சீனாவுக்கும் இலங்கைக்கும் உறவு இருக்கவில்லை. குறைந்தபடசமான பண்டாரநாயக்க நினைவு மண்டபம் கூட அதன் பின்னர் தான் சீனா கட்டியது. அந்த நேரம் இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா செயல் பட்டு வந்தது. இன்று அமெரிக்கா சீனாவுக்கு எதிராக செல்ல இந்தியாவை அணைக்கிறது. இலங்கை சீனாவுக்கு அடிமை ஆனது 2008 துறை முகத்தின் பிண்ணர். இலங்கை இந்தியாவுக்கு எதிராக போனது 1987 ஆண்டு படை எடுப்பின் பின்னர். இலங்கை 1963ம் ஆணடு இந்தியா சீனா இரண்டையும் ஒறெ மாதிரி நடத்தியதால் போரில் மத்தியஸ்தம் வகித்தது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.