Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனின் தொடர் தோல்விகளின் பின்னணியில் அமெரிக்க எவ்.பி.ஐ.! -சிங்கள ஊடகம் திவியனவின் கண்டுபிடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனின் தொடர் தோல்விகளின் பின்னணியில் அமெரிக்க எவ்.பி.ஐ.!

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் சர்வதேச ஆயுதக் கொள்வனவுகள், கடத்தல்கள் சம்பந்தப்பட்ட செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய அமெரிக்காவின் எவ்.பி.ஐ. எனப்படும் சமஷ்டிப் புலனாய்வுக் குழுவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எடுத்த நடவடிக்கைகளும் பிரபாகரனின் தாக்குதல் திட்டங்களுக்குப் பாரதூரமான பின்னடைவையும் தோல்வியையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் புலிகள் அமைப்பு மேற்கொண்ட தாக்குதல் திட்டங்கள், செயற்பாடுகள் பற்றி ஆராய்ந்து பார்த்தால் அவ்வாண்டில் பிரபாகரனின் அனைத்து நடவடிக்கைகளிலும் அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக தோல்விகளை அடைந்திருப்பதாகக் கருத முடியும்.

இந்த வகையில் கடந்த ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தால் புலிகள் அமைப்புக்கு எதிராக தடை விதிக்கப்பட்ட பின்னர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை யுத்தநிறுத்த கண்காணிப்புக் குழுவிலிருந்து அகற்ற வேண்டுமென புலிகள் அமைப்பின் தலைமைத்துவம் கோரி, தீவிர முயற்சிகளை மேற்கொண்ட போதும் அவை பலனளிக்கவில்லை. அத்துடன், தற்போது யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் பலமற்றதாகிவிட்டது. இதைத் தொடர்ந்து பிரபாகரனுக்கு அனைத்து சந்தர்ப்பங்களிலும் தோல்விகள் ஏற்பட்டன.

தற்போது, வாகரைப் பிரதேசங்கள் படையினரால் கைப்பற்றப்பட்டுவிட்டதுடன் கிழக்கு மாகாணத்துக்கான பிரதான மார்க்கமாகிய ஏ௧5 பாதையும் படையினரின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் முற்றாகக் கொண்டு வரப்பட்டது. இந்த இழப்புகள் பிரபாகரனுக்கு ஏற்பட்ட பெரும் தோல்வியாகும். இதனால், புலிகள் இயக்கத்தின் பிரதான தலைவர்களுக்கு மட்டக்களப்பிலுள்ள தமது படையணிகளுக்கான தேவைகளை வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் வழங்கமுடியாமல் போய்விட்டது. இந்நிலையில் கிழக்கு மாகாணத்திலுள்ள படையணிகளைப் பலப்படுத்தும் புலிகள் அமைப்பின் முயற்சியும் வியர்த்தமாகியுள்ளது.

அடுத்து, ஸ்ரீலங்கா விமானப்படையினரால் மேற்கொள்ளப்படும் தீவிர ஆகாயமார்க்கத் தாக்குதல்களால் சிதறிப் போய்விட்ட புலிகள் இயக்கப்படையினர், தற்போது அநாதரவான நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். இனிப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இட்ட திட்டங்கள், எடுத்த முயற்சிகள் அனைத்தும் கடந்த ஆண்டில் வியர்த்தமாகப் போய்விட்டதற்கான சர்வதேச ரீதியிலான, மற்றுமொரு காரணம் ஐக்கிய அமெரிக்காவின் சமஷ்டிப் புலனாய்வுப் பொலிஸ் பிரிவினர் புலிகள் இயக்கத்தினரின் சர்வதேச ஆயுதக் கடத்தல்களுக்கு எதிராக எடுத்த உறுதியான நடவடிக்கைகள் ஆகும்.

இந்த வகையில் எவ்.பி.ஐ. புலனாய்வுப் பிரிவினர் புலிகள் இயக்கத்துக்காக சர்வதேச ரீதியில் ஆயுதங்களை கொள்வனவு செய்து கடத்துவதற்குத் தயாராக இருந்த 11 முக்கிய நபர்களை அண்மைக் காலத்தில் கைது செய்துவிட்டனர். இது புலிகளின் அனைத்து சர்வதேச ஆயுதக் கடத்தல் முயற்சிகளும் தடுத்துநிறுத்தப்பட்டன. இதனால், படையினர் மேற்கொள்ளும் விமானத் தாக்குதல்கள், பல்குழல் பீரங்கித் தாக்குதல்கள் உட்பட அனைத்து தீவிர தாக்குதல்களையும் முறியடிக்கும் நோக்கத்தில் புலிகள் இயக்கத்தின் தலைமைத்துவம் சர்வதேச ரீதியில் விமான எதிர்ப்பு ஏவுகணைகள், நவீன ஆயுதங்களை மற்றும் முக்கிய ஆயுத் வகைகளைக் கொள்வனவு செய்யும் திட்டங்களும் முயற்சிகளும் படுதோல்வியில் முடிந்துவிட்டன. இந்த நிலையே பிரபாகரனுக்கு பாரதூரமான மீள முடியாத பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.

-திவயின விமர்சனம்

-தினக்குரல்

Edited by கந்தப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடித்தான் முன்பு யாழ்ப்பாணத்தினை ரத்வத்தை பிடிக்க சிங்கள ஊடகங்கள் பல நகைச்சுவை செய்திகள் வெளியிட்டன. பிறகு முல்லைத்தீவு, வன்னி நிலப்பரப்பு, கிளினொச்சி, ஆனையிரவு, கட்டுனாயக்கா என்று செய்திவர அவையின்ற மூச்சுப் பேச்சு ஒன்றையும் காணவில்லை

தொடர்தோல்விகளாமோ? தோல்விகளை சிங்களப்படைகள் கண்டதில்லையே?

அந்தத்தாக்கங்களை மறந்ததினால்தான் இன்று இந்தக் கதை. இனிமேல்

சந்திக்கப்போகின்றதைப் பற்றி எதை எழுதப்போகிறார்களோ தெரியவில்லை.

இப்படிப்பட்ட பம்மாத்துச் செய்திகள்தான் அப்பாவிச் சிங்களச் சனத்தைப்

போய்ச் சேருகின்றது.

எவ்பி ஐ. சி ஐ ஏ. இதுகளினாதான் நாங்கள் வென்றோம் என்கின்ற

சிங்கள அரச ஊதுகுழல்கள் நாளைக்கு ஜோர்ச் புஷ்ஷின் தம்பிதான்

மகிந்த என்றும் எழுதுவார்கள்.

இதுக்கு நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்.

:rolleyes: இதே எவ்.பி.ஐ தான் ஈராக்கில தடைசெய்யப்பட்ட ஆயுதம் இருக்கு எண்டு அமெரிக்கப்படையெடுப்புக்கு சார்பா வேலை செய்து இன்று மூக்குடைபட்டுள்ளது. அதனால் அவையின் பேச்சை விட்டுவிட்டு...ஓம் ஒரு உண்மை இருக்கிறது. தோல்வி என்னமோ உண்மைதான்.. வெறும் 20- 30 ஆயிரம் போராளிகளை வைத்துக்கொண்டு ஒரு மரபுப்படையை அழியும் நோக்கில் தாக்குதல் நடத்தியிருக்க தலைவரால் முடிந்திருக்கும் ஆனால் தலைவர் அதற்கு மேலால சிந்திச்சு எனிவரும் காலங்களை நிகழ்காலத்தின் அடிப்படையில், பழைய அனுபவங்களுடன் ஒரு தனிநாட்டுக்குறிய ஒரு போராட்ட நுணுக்கங்கள் எதிர்கால அடக்கு முறைகளுக்கு எதிராக போராடப்போகும் பிரிதொரு இயக்கங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும் படியாக பல பல ஆராய்ச்சிகளின் அடிப்படையில், தேவையானவற்றையெல்லாம் எடுத்து ஒரு பெரிய பாயலுக்கு தயாராகுவது போல தமிழ்ச்செல்வனின் உரை தெட்டத்தெளிவாக எடுத்துரைக்கிறது. ஆகவே அமெரிக்கா நிப்பாடினா என்ன ஆண்டவன் வந்தா என்ன தெளித்த குருதி எம் மக்கள் மனங்களில் இருந்து மறையும் வரை...அன்று தலைவர் சொன்னது போல தான் போராட வெளிக்கிட்டதே தான் சின்னனில அப்பாவோட போகேக்க ஆமிகாரன் எங்கடை சனத்தை போட்டு அடிக்கிறதை சகிக்காம் தான் என்று...ஆஆ ஆகவே இவ்வளவு செய்து போட்டான் எனி தலைவர் பொறுக்கிறார் எண்டால் ஏதோ இருக்கு எண்டது ரொக்கட் சயன்ஸ் அல்ல எப்ப எண்டது தான் மில்லியன் டொலர் கேள்வி எங்கள் எல்லோருக்கும்.

பொறுங்கோ பொறுங்கோ காற்று விரைவினில் மாறும். பின் லேடன் உலக வர்த்தக மையத்தை தாக்க முயற்சித்து, பின் தாக்கி அழிக்கும் வரை தூங்கிக் கிடந்தது FBI. ஆனால் தமிழர்களாகிய எம்மிடமும் ஒரு புலனாய்வுத்துறை இருக்கிறது. புகையத்தொடங்கவே மணந்து பிடித்துவிடுவார்கள். இவர்களுக்கும் FBI கும் ஏணிவைத்தாலும் எட்டாது. :rolleyes:

கோவணத்தை கழட்டி தலையில கட்டும் சிங்கள ஊடகங்கள் அடி விளும் போது துண்ட்=டைக்காணோம் என ஓடும் போது தெரியும்

பேரின அரசுக்கு அடிவருடி அண்டி வாழும் ஊடகங்கள். இப்படி எழுதாவிட்டால் இங்கு குப்பை கொட்ட இவர்களால் முடியாது. தமது இனத்தையே தவறான பாதையில் இட்டுச் செல்லும் விஷமிகள். வாரலாற்றை திரும்பிப் பார்க்கட்டும். தவறாய்ப் போன இவர்கள் ஊகங்கள் பதில் சொல்லும். ஒரு சிறிய கடந்த கால வரலாறு தாண்டிக்குளத்தில் அடிவாங்கி கோவணமும் இல்லாமல் எமது வேட்டியை சுருட்டிக் கட்டிக் கொண்டு தமிழனை போல் நடித்து தப்பியோடியது மறந்து விட்டதா? அல்லது வன்னி ஜய சிகுறு மறந்து விட்டதா? வன்னியை கபளீகாரம் செய்ய சிங்களத்திற்கு இருவருடம் தேவைப்பட்டது. ஆனால் அதே வன்னியை மீட்டது தமிழர்படை 36 மணி நேரத்தில். வாகரையும் சாம்பூரும் எம் தேசியப்படைக்கு ஒரு பொருட்டல்ல. இந்தப் பத்திரிகைகள் ஊதிப் பெருக்கிய இனத் துரோகி அடிவருடி கருணாவிற்கு என்ன நடந்தது எத்தனை மணி நேரம் சென்றது...... ? இவை எல்லாம் மறுபடியும் விரைவில் அது வரை அமெரிக்கனை துாக்கி வைத்து கொஞ்சட்டும். அவர்கள் உச்சி குளிர போற்றி புகழட்டும்.

ஈழத்திலிருந்த

ஜானா

பின்னடைவுகள் என்பதை ஒத்துக்கொள்வேன் ஆனால் தோல்விகள் என்பதையல்ல.

எந்தவொரு இராணுவ தந்திரோபாய திட்டங்களிலும் "Tactics of Survival" என்பது ஒரு அசையாத இடத்தைப் பிடித்திருக்கும்.

எதிரியின் வலுக்கட்டாய அழைப்பில் போருக்குச் செல்வது ஒரு போதும் நன்மை தராது.

போர்களத்தையும் போரிடும் நேரத்தையும் தமிழர் படை தான் தீர்மானிக்கும்.

அப்போது வரட்டும் இந்த ஊடகங்கள் களத்தை ஆய்வுசெய்வதற்கு.

mathuka இன்ரை எல்லாளன்படை FBI அய்யை மிகவிரைவில் துவசம் பண்ணப்போகுது என்று கதை அடிபடுது.

mathuka இன்ரை எல்லாளன்படை FBI அய்யை மிகவிரைவில் துவசம் பண்ணப்போகுது என்று கதை அடிபடுது.

என்ன குறுக்காலபோவான் அவர்களே? நீண்ட நாளைக்கு பிறகு வந்து Mathuka வை தொடர்ந்து தாக்குரிங்க?

  • கருத்துக்கள உறவுகள்

mathuka இன்ரை எல்லாளன்படை FBI அய்யை மிகவிரைவில் துவசம் பண்ணப்போகுது என்று கதை அடிபடுது.

அந்த எல்லாளன் படையை வழி நடத்துறது தாங்கள் தானாமே மாத்தையா, பிளானிங்க் எல்லாம் உங்க அண்ணன் நெடுக்காசாமே?? இதை இந்திய புலனாய்வு துறை சொல்லித்தான் நம்மட புலனாய்க்கு அறிஞ்சுதுங்கோ.

கொக்கரக்கோ கும்மாங்கோ.. :P

அடடா புண்ணாக்குநாய் பொருத்தமான விழையங்களைத்தான் அறிஞ்சிருக்கு. உதைப்பற்றி முந்தினமாதிரி ஒரு தெருக்கூத்து தொடர் ஒண்டு நடத்தலாமே.

சனம் 22 ஆம் திகதி மட்டும் என்னெண்டு பொழுது போக்கிறது எண்டு சரியா சங்கடப்படுகுதுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜோவ்வ் நான் இப்ப எழுதுறதேன் ஒரு தெருக்குத்துத்தானே, (என்ன ஒவ்வொரு பிரிவிலையும் ஒவ்வொரு பிரிவா பிரிச்சு எழுதிக்கொண்டு இருக்கிறன்), எப்படியெண்டு யோசிக்கிறீரோ? (சா நீர் யோசிக்கவெல்லாம் மாட்டீர், உமக்கு கொண்ணருக்கும் கற்பூர புத்தி கப் பெண்டு பிடிச்சுடுவியள் நேக்க்கு தெரியும்,இருந்தாலும் வயசு போன சின்னப்பு, கந்தப்புவுக்காக சொல்லுறன், உங்கள் இருவரைப்பற்றி (நெடுக்ஸ், குறூக்ஸ்) நான் எது எழுதினாலும் படு தமாசா இருக்காமப்பா,, அட இதை யாழ்கள வடிவேலில இருந்து நேற்று வந்த கு.மா வரைக்கும் சொன்னாங்களப்பா... தமாசா இல்லை.. :rolleyes::lol::lol:

கொக்கரக்கோ கும்மாங்கோ.. :P

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி 1998 இல இருந்து எவ் பி ஐ தூங்கிக் கொண்டிருந்தது இப்பதான் விழிச்சதாம்..! :P

யாரப்பா அங்க.. சும்மா போறவங்க வாறங்க மேல குலைச்சுக் கொண்டிருக்கிற உந்த புல நாயைப் பிடிச்சுக் கட்டுங்க. இல்ல எவ் பி ஐ எட்டப் பிடிச்சுக் கொடுத்திடுவன். :lol::rolleyes:

என்ன குறுக்காலபோவான் அவர்களே? நீண்ட நாளைக்கு பிறகு வந்து Mathuka வை தொடர்ந்து தாக்குரிங்க?

நேற்றுத்தான் ரிபிசி பூட்டினவயளாம்.

இனி இவரை இஞ்ச அடிக்கடி காணலாம். சும்மாயில்ல, பெரும் ஆராச்சி அறிக்கையளோட.

இந்த மாதம் 23ம் திகதி வெளியிடுறேக்கெண்டு தனியா ஒரு பெரும் அறிக்கையத் தட்டி சேவ் பண்ணி வெச்சிருக்கிறார். அத விட்டாரெண்டா கன பேர் யாழ் களத்தில் மூக்குடைவியள், இப்பவே சொல்லிப் போட்டன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா புண்ணாக்குநாய் பொருத்தமான விழையங்களைத்தான் அறிஞ்சிருக்கு. உதைப்பற்றி முந்தினமாதிரி ஒரு தெருக்கூத்து தொடர் ஒண்டு நடத்தலாமே.

சனம் 22 ஆம் திகதி மட்டும் என்னெண்டு பொழுது போக்கிறது எண்டு சரியா சங்கடப்படுகுதுகள்.

ஒய் என்னப்பா சும்ம கதை விடதிர்கள் சிலர் எதிர்பார்த்தௌ உண்மைதான் 22 திகதிக்கு பின் ஏதும் நடக்கலாம் என்று ஆனால் கூடுதலான மக்களுக்கு தெரியும் 22 திகதிக்கு பின் ஒன்றும் நடப்பதுக்கு இல்லை( புலிகள் பாய்வர்கள் என்பது எப்ப எப்படி என்று எனக்கும் தெரியாது உமக்கும் தெரியாது)

சும்மா ஒவருதரும் ஒவரு மாதிரி சிந்திப்பார்கள் அதே மாதிரி நம்ப்பிகைகளும் அப்படி தான் அதை வைச்சு நக்கல் நய்யாண்டி செய்து கொண்டு ஏன் நேர் ஒரு விளக்கம் கொடுகளாமே?

நேற்று*

இன்று*

நாளை*

என்ன நடந்தது என்ன நடக்கிறது எனன் நடக்கும் என்று ஒர்உ ஆய்வு(ஒய்வு) எழுதலாமே?

அதை விடுத்து அவா என்ன சொன்னா இவர் என்ன சொன்னார் என்று விடயவே கிழட்டு சிங்கம் மாதிரி தொடங்கிட்ட்ரிர்கள்.

நக்கல் பன்னுவது விடியா மூஞ்சிகளே .

உமது நக்கல்களின் படி பார்த்தால் இங்கு நாம் எதிர்ப்பார்ப்பதை விடவும் ஆய்வாளர்கள்(?) எழுதுபவையை விfடவும் நிலமை வேரு என்று சரி அந்த நிலமை தான் என்ன????????????????????????

தெளிவு படுதலாமே!

அதுசரி 1998 இல இருந்து எவ் பி ஐ தூங்கிக் கொண்டிருந்தது இப்பதான் விழிச்சதாம்..! :P

யாரப்பா அங்க.. சும்மா போறவங்க வாறங்க மேல குலைச்சுக் கொண்டிருக்கிற உந்த புல நாயைப் பிடிச்சுக் கட்டுங்க. இல்ல எவ் பி ஐ எட்டப் பிடிச்சுக் கொடுத்திடுவன். :lol::rolleyes:

சரி ஒன்று குரைக்க தொடங்கினால் பக்கது வீட்டு நாயில் இருந்து பக்கது ஊர் நாய்வரை ஊளையிட தொடங்கிடும் இதுக்கு நீரும் விதிவிலக்கா என்ன!

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி 1998 இல இருந்து எவ் பி ஐ தூங்கிக் கொண்டிருந்தது இப்பதான் விழிச்சதாம்..! :P

யாரப்பா அங்க.. சும்மா போறவங்க வாறங்க மேல குலைச்சுக் கொண்டிருக்கிற உந்த புல நாயைப் பிடிச்சுக் கட்டுங்க. இல்ல எவ் பி ஐ எட்டப் பிடிச்சுக் கொடுத்திடுவன். :lol::rolleyes:

இங்கபாருங்கப்பா தமாசை,, தெரு நாயொண்டு புலனாயை பிடிச்சு கட்டட்டுமாம், ம்ம்ம் கலிகாலமப்பா..

அது இருக்க 1998க்கு முன்னம் எவ்.பி.ஐக்கு சிறந்த ஆலோசகர் இல்லாமல் போய்ட்டினமாப்பா, (எங்கிட்ட சொல்லி விம்மி விம்மி அழுதாங்கள் தெரியுமா, அட அமெரிக்க புலனாய்வு பிரிவைப்பற்றித்தான் சொல்லுறன், நம்புங்க) செப்11க்கு பிறகு யாழ்களத்தை ஏதேச்சையா பார்த்தபொழுது குருஸ், குறுக்ஸ் இரண்டு பேரின் கட்டுரைகளை பார்த்துத்தான் கன விடயங்களை அறிஞ்சு கொண்டதாகவும் ஆனால் குருஸ் களத்திலிருந்து வெளீயேறியதும் விஞ்ஞானம் சம்பந்தமான சில பிரச்சினைகளை தாங்கள் எதிர்கொண்டதாகவும் ஆனால் தங்களின் நல்ல நேரம் குருஸ் நெடுக்ஸ் ரூபத்தில் வந்து தங்களை காப்பாற்றினதாகவும் எனக்கு தகவல் கிடைச்சுதப்பா. நம்புங்க.. இதை தேனி இனையத்தளம் வேற உறுதி செய்திருந்தது. :lol:

கொக்கரக்கோ கும்மாங்கோ.. :P

Edited by Danklas

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கபாருங்கப்பா தமாசை,, தெரு நாயொண்டு புலனாயை பிடிச்சு கட்டட்டுமாம், ம்ம்ம் கலிகாலமப்பா..

:P

இந்த நெடுக்ஸ் குருவியின் எச்சம் தானே!

அதன் கருத்துக்களும் என்னங்களும் சிந்தனைகளும் அப்படி தான் இருக்கும்...

சிங்களவன் இப்படி எழுதிறான் தமிழன் மறுத்து இப்படி எழுதிறான் இதன் உன்மைய் பொய் விடுதலைப்புலிகள் தான் சொல்லவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நெடுக்ஸ் குருவியின் எச்சம் தானே!

அதன் கருத்துக்களும் என்னங்களும் சிந்தனைகளும் அப்படி தான் இருக்கும்...

மிச்ச சொச்சங்களுக்குத்தானே எச்சங்களைப் பற்றித் தெரியும். நமக்குத் தெரியாதப்பா.

தெருவேரக் குட்டை நாய புல நாய் என்றா இப்படித்தான் டன் குலைக்கும்..! கெதில பிடிக்கப் போறாங்க நாய் பிடி காரங்கள்.

சிங்களவன் பிடிச்சிட்டானே எவ் பி ஐயை...அது போல..! :P :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன செய்ய உண்மை (?) பேசுறோம் என்று சிங்களவனின் கு***** நக்கி கழுவிற கூட்டம் இப்படி தான் தத்துவம் பேசும்.....

  • கருத்துக்கள உறவுகள்

பறவாயில்லையே, எவ்.பி.ஐ. இண்டர்போல், ஸ்கொட்லாண்ட் யார்ட் போன்ற நிறுவனங்களோட தான் நெடுக்ஸுக்கு லிங்க் இருக்கெண்டு பார்த்தால் நாய்பிடிகாரர் கூட எல்லாம் லிங்க் இருக்கு? உம்மைப்பற்றி இவ்வளவு நாளும் தவறா நினைச்சுப்போட்டனப்பா... :D

என்ன குறுக்காலபோவான் அவர்களே? நீண்ட நாளைக்கு பிறகு வந்து Mathuka வை தொடர்ந்து தாக்குரிங்க?

அதில்லை மூக்கி எல்லாளன் படை வெளிநாடு போய்விட்டுதாம் என்றவுடன் அனேகருக்கு அங்க வயிறு கலக்குதாம்.

அதில குறுக்காலபோவான் பகிரங்கமாகவே பயப்படுகிறார். அதில்லை இப்படியான ஆட்கள் வெளிநாடுகளில் இருந்துகொண்டு புலியின் பொக்கற்றுக்குள் கையை விட்டால் ( விதண்டாவாதம் பேசி உதவிசெய்கிறவர்களையும் தடுக்கும் செயல்) ??? விடுவாங்களா?

பின்ன என்ன இங்கு விழுகிற பிஸ்டல் வெடியை பார்த்தால் பின்ன கலக்காமல் என்ன செய்யும்.

ஓம் வயித்தைக் கலக்கி பாச்சல் பாச்சல் என்று ஒரே பீச்சல்.

ஆகா நீங்கள் போராட்டத்தின் பெயரால் வெளிநாடுகளில் எல்லாளன் படை என்று பிஸ்டல் வெடி வைக்கப் போறியளோ? நல்லது வன்முறையை புலிகள் இலங்கைத் தீவிற்கு அப்பாலும் கொண்டு வந்துவிட்டார்கள் என்று ஆதாரமாக கூற உதவியிருக்கிறியள். மேற்குலகில் புலிகளைத் தடை செய்தது நியாயமானது தான் ஏன் என்றால் போராட்டத்தின் காவலன் mathuka வும் அவரது எல்லாளன் படையும் புலம் பெயர்ந்த நாடுகளில் பிஸ்டல் வெடி வைக்கிறார்கள். இது அல்கைதா போன்ற ஒரு சர்வதேச பயங்கரவாதம் என்றதை நிரூபிக்கிறதிலை எங்கடை "ஆதரவாளர்களிற்கு" இருக்கிற ஆசையோ கொள்ளை ஆசை.

பிஸ்டல் வெடி மாதிரி வேறு என்ன வெடிகள் விடுறதாக உத்தேசம் புலம்பெயர்ந்த நாடுகளில்?

இல்லை நீங்கள் பிஸ்டலை விட பெரிசா ஏதாச்சும் வெடிச்சா எனக்கும் பெரிசா வயித்தை கலக்கும். அதுக்கு இடம் பாக்கத்தான் கேக்கிறன்.

யாழ்களம் மொத்தில ஒரு Zoo மாதிரி ஆகிட்டுது..நாய், புலி, சிங்க, குரங்கு,கங்காறு என்று வித்தை காட்டிகொணிருங்கொண்டிருக்கா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.