Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாய் திறந்தது பிபிசி அதன் நோக்கம் என்ன?

Featured Replies

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் சமரசம் ஏற்பட்டு விட்டதாக அக்கட்சி கூறுகிறது

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகிய கருணா அவர்களின் தலைமையில் செயல்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்கிற அமைப்பின் தலைவர் கருணா அவர்களுக்கும், அந்தக் கட்சியில் உள்ள பிள்ளையான் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல்கள் காரணமாக அந்தக் கட்சியில் பிளவு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாயின.

அதனால் ஏற்பட்ட மோதல் சம்பவங்களில் பிள்ளையான் அணியின் ஆதரவாளர் எனக் கூறப்படும் சிந்துஜன் என்பவர் கொல்லப்பட்டதாகவும் ஊடகங்கள் மேலும் தெரிவித்தன.

தமது அமைப்பில் கருத்து மோதல்கள் ஏற்பட்டது உண்மை எனவும், அவை இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது தீர்க்கப்பட்டன எனவும் அந்தக் கட்சியின் சார்பில் பேசவல்ல அசாத் மௌலானா தமிழோசைக்கு வழங்கிய பேட்டியில் கூறினார்.

தமது அமைப்பில் ஏற்பட்ட மோதல்களுக்கோ அல்லது இணக்கப்பாட்டிற்கோ, இராணுவமோ அல்லது வேறு யாருமோ காரணம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

நிதி ரீதியாகத்தான தமது அமைப்பில் மோதல்கள் ஏற்பட்டன என்பதனையும் அவர் மறுத்தார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் இந்த பிளவு என்ற செய்திகேட்டு அதிர்ந்து போய் இருக்கும் BBC தமிழோசையின் கவலையைப் போக்குவதற்க்காக சொல்லப் பட்டிருக்கின்றதுபோல் இருக்கிறது.

புதிதாக கைப்பற்றப் பட்ட இடத்தில் இருந்து புலிகள் விலகியபின் அந்த சமரைப் பற்றி அரச ஊடகம் வாய்திறக்கின்ற பாணியிலேயே தமிழோசைக்கும் இதுவரைககாலமும் என்ன நடந்ததென்று ஒன்றுமே தெரியாதாம். எல்லாம் சீவகன், அன்பரசன் என்ற திருவோடுகாவியளின் ஊடகப் பொறுக்கித்தனம்தான்.

கருணாவின் விசுவாசிகள் பிள்ளையனுடன் இணைவு

கருணாவின் அட்டகாசங்களை பொறுத்துக்கொள்ள முடியாத கருணாவின் விசுவாசிகள் பலர் திருகோணமலையில் உள்ள பிள்ளையானுடன் இணைந்துகொள்கின்றனர். இதன் ஒருகட்டமாக வாழைச்சேனை மாங்கேணி இராணுவப்பொறுப்பாளரான சூட்டி தனது சகாக்களுடன் வந்து திருகோணமலையில் இணைந்துகொண்டனர் இவரை பிள்ளையானின் மிகவும் நம்பகத்துக்குரிய வெளிநாட்டுப்பொறுப்பாளர் எ.சூட்டி என்பவரால் வரவேற்று இணைத்துக் கொண்டார். இதேவேளை இவ்வாறு கருணாவின் விசுவாசிகள் பலரும் பிள்ளையானுள் இணைவதால் கலகமடைந்த கருணா நாட்டை விட்டு தப்பி ஓடுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக களத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் கருணாவிடம் இப்போது இனியபாரதி சின்னத்தம்பி ஜீவேந்திரன் திலீபன் ஆகியோரே ஒட்டிக்கொண்டிருக்கின்றனர். இவர்களில் ஜீவேந்திரன் திலீபன் ஆகியோர் நான்கு மாதங்களின் முன்பே வெளிநாட்டில் இருந்து வந்தனர். இவர்களும் கருணா அணியின் பிரிவுக்கு காரணம் என களநிலவரங்கள் தரிவிக்கின்றன. இதேவேளை இவர்களும் தப்பியோட முயற்சிப்பதாக களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.

http://www.nitharsanam.com/

கருணாவின் விசுவாசியும் பிள்ளையான் அணியின் வீடுடைப்பில் முன்னின்றவருமான மொட்டைமாமா அதிரடியாக தலைமறைவாகியுள்ளார்

கருணாவின் விசுவாசியும் பிள்ளையான் அணியின் வீடுடைப்பில் முன்னின்றவருமான மொட்டைமாமா அதிரடியாக தலைமறைவாகியுள்ளார். கருணாவின் விசுவாசிகள் பலரும் பிள்ளையானுடன் இணைவதை அவதானித்த மொட்டை மாமா கருணாவிற்கே அறிவிக்காமல் திடீரென தலைமறைவாகியுள்ளார்.

http://www.nitharsanam.com/

  • கருத்துக்கள உறவுகள்

பெயருகளும் ஆக்களும், மொட்டை மாமா, பிள்ளையான், இளையான்.....

கறுனா தற்பொழுதும் உயிரடன் தான் இருக்கிறானா இல்லையா என்று உறுதியாக எவருக்குமே தெரியாது. என்னமாதிரி நெஞ்சை நிமிர்த்தி கேணல் எண்ட பட்டத்துடன் தென் தமிழீழத்தை சுற்றி வந்தான், பெண் ஆசை, பண ஆசையால், இன்று உயிருடன் இருக்கிறானா, இல்லையா எண்டு தெரியாதளவுக்கு சென்றுவிட்டான்.

தமிழீழத்தையும், அவனை வளர்த்து ஆளாக்கிய தலைவனின் அருமையையும் தற்பொழுது உணர்ந்திருப்பான் இந்த அடிமுட்டாள். அடுத்த பிள்ளையான் எண்ட கிணற்று தவளை 100 பேரை வைச்சுக்கொண்டு புலியை அடித்து விரட்டப்போவதாக கொக்கரிக்குது, இதுக்கு மட்டக்களப்பில விட்டால், பக்கத்த உள்ள அம்பாறைக்கு போக தெரியாது, இப்படிப்பட்டதுக்கு தலைவர் பதவி, இனி இதுக்குள்ள பிரிவு எப்ப வருமெண்டு தெரியா. இவருக்கும் அவங்கட ஆளாளேயே அழிவு நிச்சயம். :lol::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அர்பணித்து போராடிய விடுதலைப் போராட்டத்தையே விற்றவங்கள் இவங்கள்.. இவங்களோடுபோய் கதைத்துகொண்டு இருப்பது Waste

Edited by Kishaan

  • தொடங்கியவர்

அசாத்மவுலானா சொல்கிறார் இவ்வளவு நாளும் அமைதியாக இருந்தோம் என அதே போல பிபிசி தமிழ் சேவையும் அமைதியாக இருந்ததன் நோக்கம் என்ன பிபிசி கருணா குழுவின் வானொலியா

தமிழக மீனவர்கள் விவகாரத்தை ஒவ்வொரு நாளும் புலிகளுக்கு எதிராக பயன்படுத்துகின்றது பிபிசி ஒவ்வொரு நாளும் அது சம்பந்தமான செய்திகளையும் மற்றும் மட்டக்களப்பில் நடந்து வரும் கொலைகள் வயதுடன் சொல்லும் பிபிசி ஏன் சிந்துஜனின் கொலையை மறைத்தது

என்னதான் தமிழக மீனவ சமுகத்தை றோவுடன் சேர்ந்து புலிகளுக்கு எதிராக திருப்ப முற்பட்டாலும் கடத்தபட்டதாக கூறும் அந்த 12 மீனவர்களின் உறவினர்களை தவிர மற்ற எவரும் புலிகளுக்கு எதிராக கருத்து சொல்லவில்லை அவர்கள் புலிகளை நம்புகின்றனர் என்பது மகிழ்சியைதருகின்றது ஆனால் அந்த கடத்தப்பட்ட மீனவர்களின் உறவினர்களின் ஆதங்கம் நியாயமானது அரசாங்கம் சொல்லுதே என குழப்பத்தில் இருக்கும் அவர்கள் புலிகள் மீது சில கருத்துக்களை சில்வது இயற்கை அதனை யாரும் மறுக்கவோ கண்டிக்கவோ முடியாது ஆனால் இப்படியான அந்த உறவுகளின் உணர்வுகளில் அதாவது குழம்பிய குட்டையினுள் மீன் பிடிக்க முயலுகின்றது றோவும் அதன் அடிவருடிகளும்

அத்துடன் 5 பேர் சுட்டு கொல்லபாட்ட சம்பவத்தை நேரில் பார்த்த அந்த நபர் தடுத்து வைக்கப்பட்ட மரியாபடகு முதலில் அந்தபடகு தம் மீது தக்குதல் நடத்தவில்லை என கூறிய பின் இன்றி அந்தர் பல்டி அடிச்சு அதுதான் அந்த படகு என கூறியிருப்பதன் மர்மம் என்ன.

தமிழ் செல்வன் அண்ணா சொன்னமாதிரி எம்மியக்கம் மீது சேறு பூசப்படும் போது அல்லது முலௌம் போது இறுதியில் தம்மீதே அதனை பூசிக்கொள்கின்றனர் என்பதாகும்.அதன்படியே இறுதியில் நிச்சயம் நடக்கும் என்பது நிதர்சனம்

  • கருத்துக்கள உறவுகள்

இதிலை முக்கியமாக அடிபடும் ஒரு செய்தியை அதாவது விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரவினரின் நுட்பத்தால் தான் இந்தப் பிளவு ஏற்பட்டது என்ற செய்தி உங்களால் செல்லமாக அழைக்கப்படும் பி.பி.சி சொல்ல தயங்குவதேனோ?

  • கருத்துக்கள உறவுகள்

மின்னினால் மட்டுமே போதும் பொன்னாகிவிடலாம்

என சில முட்டாள்கள் நினைத்து பின்பு இருந்த இடமே

இல்லாமல் போவதென்பது போராட்டம் தொடங்கிய காலத்தில் இருந்தே நடக்கிறது!

எமக்கு இதெல்லாம் நகைச்சுவை மாதிரி கேட்டோமாம் சிரித்தோமாம் என இருக்க வேண்டும்.

பெண்ணுடன் தொடர்புவைத்திருந்தது கூட இருந்த போராளிகளால் உறுதிபடுத்தப்பட்டபோது. தலைவர்மேதகு- உமா மகேஸ்வரன் எனும் கோமாளியை அமைப்பில் இருந்து நீக்குவதாக போராளிகளுடன் சேர்ந்து முடிவெடுத்தார்.

அந்த கோமாளி நாட்டிற்கு வந்து சில இளைஞர்களை தன்னுடன் சேர்த்துவிட்டு புலிகள் எனும் அமைப்பு என்னுடையது அதற்கு நானே தலைவன் என கூறிகொண்டு திரிந்தது. அதனை தொடர்ந்து எத்தனை..................... எல்லாம் போய் சேர வேண்டிய இடங்களுக்கு போய்சேர்ந்துவிட்டது.

இதுகள் இப்பத்தானே தொடங்கியிருக்குதுகள் கொஞ்ச நாளைக்கு ஆடட்டும்.

பி பி சி யை அண்மையில் இரண்டு தடவைகள் கவனித்துவிட்டேன். இவர்களைப் பார்த்தால் சட்டத்துக்கு பிறம்பாக இலங்கை அரசின் ஏஜண்டாகத்தான் காட்சியளிக்கிறார்கள். அந்த மீனவச்சமூகத்தை எப்படியெல்லாம் துருவித் துருவி விசாரணை பண்ணுகிறார்கள். விடுதலைப்புலிகள் எங்கள் ஆட்களை கொல்லவில்லை என்றால் ஏற்றுக்கொள்ள வேண்டியது தானே! மத்தியாரசு வேறு அறிக்கை விட்டுள்ளது. இதைவிடுத்து முதலமச்சரே கூறியுள்ளார். தமிழ் நாட்டு பொலீஸ் தலைமை அதிகாரி இவங்கள் எல்லாம் சொல்லுவது பொய்யா? இப்படியெல்லாம் நாளுக்கு நாள் வெருட்டி பேட்டி எடுப்பது ஒரு வகை மனித உரிமை மீறல் தான். ஏழை குப்பத்து ஜனங்களை அடிக்கடி சீவகன் தொடர்பு கொள்ள காரணம் தான் என்ன? இதுக்கெல்லாம் இலங்கை தூதரகத்தின் தூண்டுதலாகத்தான் இருக்கும். அப்படியாயினும் இவர்கள் ஏன் இலங்கை அரசிடமா பணிபுரிகிறார்கள்? அப்போ இவர்களுக்கு அங்கிருந்து கிம்பளம் கிடைக்கலாம். இதே போலத்தான் இந்து ஆசிரியர் கூட அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த தென் கிழக்குஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அந்த அமெரிக்க அதிகாரியை சினத்துக்குள்ளாக்கி உள்ளார். இலங்கையில் இருக்கும் வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு அடிக்கடி விருந்தும் அன்பளிப்புகளும் வழங்கி அந்த நாட்டு அரசாங்கம் கௌரவிக்குமாம். (எல்லோரையுமல்ல) மக்களுக்காக சேவை செய்வதாகக் கூறி பாசிஸ அரசுகளின் அன்பளிப்புகளுக்காக ஏங்கித் தவிக்கிறார்கள் இந்த பிபிசி தமிழ் ஊழியர்கள் என்றால் இது உண்மையாயின் வெட்கப்பட வேண்டியது இப்படியான தமிழினத் துரோகிகள் மட்டுமல்ல அதன் நிர்வாகமும்தான்.

  • தொடங்கியவர்

டெயிலி மிரர் சொல்வது உண்மையா அல்லது பிபிசி மூலம் அசாத் மவுலானா என்னும் சொறிநாய் சொல்லுவது உண்மையா.சீவகன் என்ன சொல்லுவது என சொல்லமுடியாமல் தள்ளாடுகின்றார் போலும்

Pillayan vows to fight both Karuna and Prabha

New breakaway group claims to have more cadres; Karuna likely to flee

By Sunil Jayasiri

Former Karuna associate Pillayan yesterday vowed to continue his fight against the LTTE while ruling out reconciliation with Karuna Amman from whose faction he broke away recently following a bitter feud.

“We will continue to fight against the Prabhakaran-led Wanni cadres but we will definitely not patch up with Karuna Amman,” a spokesman for the Pillayan group told the Daily Mirror.

He said the Karuna-breakaway group led by Pillayan and including senior military and political leaders and some 350 cadres was based in Trincomalee.

“Most of the former Karuna faction’s senior military and political wing leaders are with us. Karuna is only left with a handful of seniors,” the spokesman said.

He said military and political leaders like Jeyam, Markan, Thooyavan – the former spokesman for the Karuna faction - Eelamaran, Pradeep Master - former eastern political leader and Suranga, have joined forces with the new splinter group.

The Pillayan spokesman said leaders like Sinnathambi, Bharathee, Thileepan and Jeevendran were among those still loyal to Karuna.

“We have the full control of the military wing of the Karuna faction. We do not want to link with the Wanni’s fascist terrorists and will continue our struggle to rescue innocent Tamil-speaking people from Prabhakaran’s grip,” the spokesman claimed.

He revealed that though the initial arrangement was for Karuna to be the overall leader of the TMVP (Tamil Makkal Viduthalai Pulikal) – the political wing of the Karuna faction with Pillayan the party’s deputy leader in charge of its military wing.

“But it did not work out as Karuna did not like that arrangement,” the spokesman said. Meanwhile, it is learnt that Karuna was to leave the country with some of his close associates because of split in the faction.

A few weeks, ago, Karuna’s deputy leader Pillayan parted ways with Karuna over the alleged misuse of TMVP funds by Karuna Amman. Later two close associates of Pillayan were killed by Karuna.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பி.பி.சி தமிழோசையின் நம்பகத்தன்மை எப்போதோதொலைந்து போய்விட்டது. அதைப்பற்றி நாம் பெரிதாக அலட்டிக்கொள்ளத்தேவைஇல்லை.

தமிழ் ஊடகம் என்றுபுலம் பெயர் நாட்டில் வரும் போது இரு பெரும் தொலைக்காட்சி ஊடகங்கள் ஆட்சி செய்தன. ஒன்று தமிழ் தொலைக்காட்சி , தீபம்.

அப்படியான ஒன்று ஏதோ ஒரு காரணத்திற்காக நிறுத்தப் பட்டு விட்டது அது பற்றி இந்த ரி.பி.சி தமிழோசை ஒரு மூச்சு கூட விடவில்லை. பாருங்கள் எவ்வளவு நிதானத்தோடு எங்களை இல்லாது ஒழிக்க முனைகிறார்கள்.

அப்படி தொலைக்காட்சி நிற்பாட்டியதை செய்தியில் சொன்னால் அந்த தொலைக்காட்சியின் பெயர் பிரபலமாகி விடும் என்பதுதான் இதன் உள்நோக்கம்...

இப்படி பல செயல்களை ரி.பி.சி தமிழோசைசெய்கிறது.

நான் முதல் இதே பகுதியில் எழுதிய கருத்து நீக்கப்பட்டது அதுக்கு விளக்கம் கேட்டேன் பதிலும் கொடுத்தார்கள்

QUOTE(I.V.Sasi @ May 14 2007, 08:28 PM)

http://www.yarl.com/forum3/index.php?showtopic=23606

வாய் திறந்த பிபிஸி என்ற தலைப்பில் நான் எழுதிய கருத்தை காணவில்லை

எங்கே? யார் அதை நீக்கியது?? ஏன்?

தனிநபர் ஒருவரைக் குறிப்பிட்டு எழுதியபடியால் அக்கருத்து நீக்கப்பட்டு விட்டது

சரி விடயத்துக்கு வருவோம்

மேல நன்பர் ஈழபிரியன் குறிப்பிட்டது போல அந்த நிறுவனத்தில் வேலை(தமிழ் பிரிவு) செய்பவர் கருனாவை சந்தித்தார் அவருக்கு படி அளப்புகள் பல முறையில் பல (சில) மாதிரி கிடைக்கிறது.

இதில் ஒருவர் ஊடகத்தூறையை சேர்ந்த எங்கள் மாவட்டம் தான் அவரும் லண்டனில் இருந்து கோவாவில் போய் இந்த கருணாவை சந்தித்தார் ................

புதுப்பிக்கப்பட்ட நாள்: 15 மே, 2007 - பிரசுர நேரம் 16:44 ஜிஎம்டி

மின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்

செய்தியரங்கம்

நடுக்கடலில் விடுதலைப் புலிகளின் படகுகள்-ஆவணப் படம்

தமிழோசை

மாலத்தீவுகள் அருகில் முழ்கடிக்கப்பட்ட படகில் விடுதலைப் புலிகள் ஆயுதங்கள் கடத்தியதாக சந்தேகம்

புதன் கிழமையன்று மாலத்தீவு கடற்பரப்புகுள் ஊடுருவிய ஒரு 80 அடி நீளமுள்ள வெளிநாட்டு மீன்பிடி பட்கு ஒன்றின்மீது, இன்று வியாழக் கிழமை மாலத்தீவின் கடலோரக் காவல் படையினர் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர்.

இந்த மீன்பிடி கப்பலை உள்ளூர் மீனவர்கள் நேற்று பார்த்தனர். இந்த தாக்குதல் நடப்பதற்கு முன்னர், அந்த மீன்பிடி படகில் இருந்த நான்கு பேர் கடலில் குதித்துவிட்டனர் அவர்களை மாலத்தீவின் பாதுகாப்புப் படையினரும் கடலோர காவல் படையினரும் பிடித்து வைத்துள்ளனர். அவர்கள் இப்போது காவலில் உள்ளனர். விசாரணை நடக்கிறது என மாலத்தீவு அரசின் சார்பில் பேசவல்ல அதிகாரியான மொஹமத் உசேன் ஷரீப் கூறினார்.

அவர்களது உள்நோக்கங்கள் குறித்து தமக்கு இந்த தருணத்தில் ஒன்றும் தெரியாது என்றும், யூகங்கள் சில இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தக் கலனை கடலோரக் காவல் படையினர் அணுகியபோது ஒருவர் கடலில் குதித்துவிட்டார் என்றும் பிடிபட்ட அவர் இந்திய மொழியான மலையாளத்தில் பேசினார் என்றும் மாலத்தீவின் அதிகாரி தெரிவித்தார்.

இந்தப் படகில் பெருமளவு ஆயுதங்கள் இருப்பதாக அந்த மீனவர் கூறியதாகவும், அதன் பின்னர் கடலோரக் காவல் படையினர் இந்த விடயத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாண்டனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்திய அரசிடம், வான் மூலம் வேவு பார்க்கும் உதவியை மாலத்தீவு கோரியதாகவும், அதையடுத்து இந்தியக் கடற்படைக்கு சொந்தமான விமானத்தை அனுப்பி, அவர்கள் வான் வழியாக இந்த நிலைமையை கண்காணித்தனர் என்றும் மாலத்தீவுகளின் அதிகாரி தெரிவித்தார்.

பிறகு சுமார் 10 லிருந்து 12 மணிவரை இந்த கலனில் உள்ளவர்களுடன் ஒரு பாதுகாப்பான தொலைவில் இருந்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர்தான் தமது கடலோரக் காவல் படை நடவடிக்கை எடுப்பது என்று தீர்மானித்தது என்றும் மொஹமத் ஷரீப் கூறினார். அதற்குப் பிறகு துப்பாக்கி வேட்டுகள் தீர்க்கப்பட்டு அந்தக் கலன் மூழ்கடிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

படகு மூழ்குவதற்கு முன்னரே அதிலிருந்து கடலில் குதித்த இருந்த நால்வரும் பிடிக்கப்பட்ட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் மாலத்தீவின் சார்பில் பேசவல்ல அதிகாரியான மொஹமத் உசேன் ஷரீப் தெரிவித்தார்.

--------------------------------------------------------------------------------

இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குதலில் பத்துக்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக இராணுவம் கூறுகிறது

விடுதலைப் புலிகள்-ஆவணப் படம்

இலங்கையின் வடமேற்கில் மன்னார் மாவட்டம் மடு பிரதேசத்திற்கு கிழக்கே இராணுத்தின் முன்னரங்க பிரதேச்தில் புதன்கிழமை இடம்பெற்ற இருவேறு தாக்குதல் சம்பவங்களில் பத்துக்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளும், இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தினர் தெரிவித்தள்ளனர்.

மோதல்களின் பின்னர் இராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதலின்போது விடுதலைப் புலிகளின் இரண்டு சடலங்கள் கைப்பற்றப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சடலங்களை விடுதலைப் புலிகள் உரிமை கோரியுள்ளதையடுத்து, சடலங்களை வைத்தியசாலையில் பார்வையிட்டு விசாரணை நடத்திய வவுனியா மாவட்ட நீதிபதியின் உத்தரவுக்கமைய அவற்றை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் கையளிப்பதற்கான நடவடிககைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை விடுதலைப்புலிகளின் சடலங்கள் எனக் கூறப்படும் 6 சடலங்கள் இன்று இரவு வவுனியா வைத்திய சாலையில் புலிகளின் இராணுவச் சீருடையுடன் பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

--------------------------------------------------------------------------------

ஓமந்தை சோதனைச்சாவடி ஊடான போக்குவரத்து நிறுத்தம்

மூடப்பட்டுள்ள ஓமந்தை சோதனைச் சாவடி

இலங்கையின் வடக்கே வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற எறிகணை வீச்சு மோதல்கள் காரணமாக ஓமந்தை சோதனைச்சாவடியின் ஏ9 வீதி ஊடான போக்குவரத்துக்கள் இன்று காலை 11 மணி முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி வழமை போல இன்று காலை திறக்கப்பட்டு விடுதலைப் புலிகளின் பிரதேசத்திற்கும், இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கும் இடையிலான வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்து நடைபெற்ற போதிலும் திடீரென இரு தரப்பினரும் எறிகணை வீச்சுத் தாக்குதல்களில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சர்வதேச செஞ்சிலுவைக் குழுவின் பேச்சாளராகிய டாவிடே விக்னட்டி அவர்கள்

ஓமந்தை எல்லைக்கோட்டின் ஏ9 வீதிக்கு அருகில் எறிகணை வீச்சுக்கள், மோதல்கள், குண்டு வெடிப்புகள் இடம்பெற்றதன் காரணமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தமது அலுவலர்கள் ஓமந்தையை விட்டு வருவதற்குத் தீர்மானித்தார்கள். அவர்கள் அங்கிருந்து வெளியேறியதையடுத்து, ஓமந்தை சோதனைச்சாவடிப் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இது நாளை திறக்கப்படுமா என்பது குறித்து தன்னால் எதுவும் இப்போது கூற முடியாது எனக் கூறினார்.

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர் அப்பகுதிக்கு

மீண்டும் கடமைக்கு வரும் வரையில் பாதையைத் திறக்க முடியாத என இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியான பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

பாதை ஊடான போக்குவரத்துக்கள் நடைபெறுவதற்கு அவர்களின் பிரசன்னம் முக்கியமானது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

--------------------------------------------------------------------------------

விடைபெற்றார் அன்பரசன்

அன்பரசன்

தமிழோசையில் கடந்த ஆறு ஆண்டு காலத்துக்கும் மேலாக நம்மோடு பணியாற்றி உங்களுக்கு நல்ல தரமான செய்திகளை தருவதில் ஊக்கமுடன் பணியாற்றிய நமது அன்பரசன் இன்றுடன் தமிழோசையிலிருந்து விலகுகிறார்.

அன்பரசன் பிபிசியிலிருந்து விலகவில்லை, பிபிசியின் ஆங்கிலப்பிரிவுக்கு மாற்றலாகியே செல்கிறார்.

நம்மோடு பணியாற்றிய கடந்த ஆறு ஆண்டுகளில், அன்பரசன், அன்றாட தயாரிப்புப் பணிகளை திறம்பட செய்ததோடு மட்டுமல்லாமல், பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளையும் தயாரித்துதந்துள்ளார் என்பதை நேயர்களாகிய நீங்கள் அறிவீர்கள். 2003ல் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள், மற்றும் தென்னாப்பிரிக்காவில் இந்திய வம்சாவளியினரின் எதிர்காலம் குறித்த பெட்டகம் , 2004 சுனாமியில் அந்தமான் தீவுகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு, 2005ல் நடந்த இலங்கை ஜனாதிபதி தேர்தல்கள், பின்னர் 2006ல் ஜெனீவாவில் நடந்த இலங்கை சமாதானப் பேச்சுவார்த்தைகள் போன்ற முக்கிய நிகழ்வுகளில் அன்பரசன் தமிழோசைக்காக தயாரித்து தந்த செய்திகள் குறிப்பிடத்தக்கவை

BBC

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.