Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தமிழர்கள் பழமை வாதிகளா??????

Featured Replies

**************

Edited by harikalan

பழமை பேண்வாதிகள் இல்லை என்று சொல்வதற்கில்லை. அவ்வாறானவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஆனால் ஒட்டு மொத்த யாழ்பாண தமிழர்களையும் பழமைபேண் வாதிகள் என்பதில் அடக்க முடியாது.

கனடாவில் கார்பர் அரசு தமிழருக்கு எதிராக தடைகளை உருவாக்கியது. உருவாக்கும் என்று அது வெற்றி பெற முன்னரும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் இருந்தும் அந்தக் கட்சிக்கு வக்களித்தவர்கள் இருக்கின்றார்கள். இந்த மன நிலைக்கும் பழமை போண்வாத மன நிலைக்கும் தொடர்பிருப்பதாக அர்த்தப்படுத்தப்படுகின்றது.

அதே போல் இந்தியாவில் இந்துதுவ வாதிகள் குறிப்பாக பிராமணிய தரப்பினர் ஈழப்போராட்டத்தை எதிர்ப்பதை தொடர்ந்து செய்து வருகின்றனர். திராவிட கட்சிகள் ஏனைய இரத கட்சிகள் ஆதரிக்கின்றனர். இருந்தும் திராவிடக்கட்சிகளை எதிர்ப்பவரும் பிராமணியத்துக்கு வக்காலத்து வாங்குபவரும் இருக்கத்தானே செய்கின்றார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக சிங்களம் எத்தனை அழிவுகளை செய்தாலும் அதை பொருட்படுத்தாது புலிகளை எதிர்க்கும் ஈழத்தமிழர்களும் இருக்கின்றார்கள். இவர்களிடமுன் பழமை; பேண்வாதத்தில் ஊறிய கருத்து நிலை இல்லை என்பதற்கில்லை.

இவற்றுள் பழமை பேண் வாதம் என்பது வெளிப்படையாக உணரக்கூடிய ஒன்று. அது அவராவரது மத சாதிய மனநிலைகளின் பிரகாரம் உருவாக்கம் பெற்ற ஒரு கருத்து நிலை.

ஈழத்தமிழர்கள் பிளவுபட்டு கிடப்பதற்கு பழமை பேண்வாதிகள் ஒரு காரணம் என்றால் அதிலும் நியாயங்கள் இல்லமல் இல்லை. ஆனால் சிறப்பு என்னவென்றால் இவ்வாறு கருத்துக்களை முன்வைப்பவரும் பழமைபேண்வாத தாக்கத்திற்கு உட்பட்டவரே.

ஆத்திரப்படுவதற்கு இவ்வாறான கருத்து பகிர்வில் எதுவும் இல்லை. எனது அனுபவங்களின் பிரகாரம் நான் எனது கருத்தை பகிர்ந்து கொண்டேன். அதை மறுப்பவர் மறுக்கலாம் எதிர்ப்பவர் எதிர்க்கலாம். அது அவரவர் உரிமை.

  • கருத்துக்கள உறவுகள்

சமூக மாற்றங்களை ஏற்றுக் கொள்ளத் தயங்குவதும், பழையகாலப் பண்புகள், நடத்தைகள் என்பனவற்றை இறுகப் பற்றி நிற்பதும் பழமைவாதிகளின் பழக்கம்.. யாழ்ப்பாணத்தாரில் பெரும்பான்மையோர் எப்படியானவர்கள் என்று சிந்தித்தால் விடை கிடைக்கும்.. :D

பழமைவாதம் என்பது தவறா???

தவறு என்பது எங்கும் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

பழமைவாதம் என்பது தவறா???

பிரித்தானியாவில் உள்ள பணக்கார ஆங்கிலேயர்கள் பழமைவாதிகளாகவே உள்ளனர்.. நம்ம ஆட்களும் "நல்ல ஏரியா" என்று சொல்லி வாழ ஆசைப்படும் இடங்கள் எல்லாமே பழமைவாதக் கட்சியின் செல்வாக்கு அதிகமான இடங்களே!

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் உள்ள பணக்கார ஆங்கிலேயர்கள் பழமைவாதிகளாகவே உள்ளனர்.. நம்ம ஆட்களும் "நல்ல ஏரியா" என்று சொல்லி வாழ ஆசைப்படும் இடங்கள் எல்லாமே பழமைவாதக் கட்சியின் செல்வாக்கு அதிகமான இடங்களே!

அப்படியான இடங்களில் எம்மவர்கள் வாழ்வது எவ்வளவு சாத்தியம்? அதாவது, பழமைவாத ஆங்கிலேயர்கள் வேற்று நாட்டவருடன், முக்கியமாக வேறு நிற இனத்தினருடன், நட்புடன் பழகுவார்களா? இல்லையெண்டால் ஒவ்வொருத்தரும் நல்ல ஏரியா எண்டு சொல்லிக்கொண்டு தங்கட பாட்டில இருக்கினமோ?

இப்டியான இடங்களில் இருப்பதனால் நன்மைகளும் உண்டு. அரசியல்வாதிகளின் செல்வாக்கு இருக்கும். அதனால் பொது சேவைகள் (போக்குவரத்து, மருத்துவம், போன்றவை) துரிதமாகவும், அதிகமாகவும், நேர்தியாகவும் இருக்கும். கள்ளர் கூட்டம்குறைவு. இரவு நேரங்களில் வீதிகளில் சத்தங்கள் இருக்காது. நம்மவர்கள் பம்பல் வேண்டுமானால் கிழமைமுடிவு நாட்களில் நகரத்துக்கு போய் வருவார்கள் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி வீரம் விவேகம் விச்சுழி தந்திரம் சுயநலம் இவற்றோடு கட்டுப்பெட்டித்தனம் புதுமைநாட்டம் விடுப்பார்வம் விண்ணாணம் இவையெல்லாம் கலந்த ஒரு திணுசான கலவைதான் ஒரு அசலான யாழ்ப்பாணி'

நிலாந்தன் -

  • கருத்துக்கள உறவுகள்

அதே போல் இந்தியாவில் இந்துதுவ வாதிகள் குறிப்பாக பிராமணிய தரப்பினர் ஈழப்போராட்டத்தை எதிர்ப்பதை தொடர்ந்து செய்து வருகின்றனர். திராவிட கட்சிகள் ஏனைய இரத கட்சிகள் ஆதரிக்கின்றனர். இருந்தும் திராவிடக்கட்சிகளை எதிர்ப்பவரும் பிராமணியத்துக்கு வக்காலத்து வாங்குபவரும் இருக்கத்தானே செய்கின்றார்கள்.

சுகன்

நீங்கள் தொடர்ந்து ஏதோ ஒரு வகையில் சம்பந்தமில்லாத தலைப்புக்களில் இந்துக்களை விடுதலைப் போராட்டத்துக்கு எதிரானதாகக் காட்டுவதற்கு முயன்றுகொண்டிருக்கின்றீர்க

Edited by இணையவன்

சுகன்

நீங்கள் தொடர்ந்து ஏதோ ஒரு வகையில் சம்பந்தமில்லாத தலைப்புக்களில் இந்துக்களை விடுதலைப் போராட்டத்துக்கு எதிரானதாகக் காட்டுவதற்கு முயன்றுகொண்டிருக்கின்றீர்க

Edited by இணையவன்

பழமைவாதம் இல்லை என கூற முடியாது நிச்சயம் இருக்குது ஆனால் போராட்டத்தால் சற்று தணீந்திருகின்றது சிரட்டையில் தேனீர் கொடுத்தவர்களும் இருகின்றார்கள் பிரித்து பந்தி போட்டு அன்னதானம் கொடுத்தவர்களும் இருகின்றார்கள் இதனை யாழ் இடம்பெயர்வு வரை எனது ஊரில் கண்டு இருகின்றேன் எமது வீட்டில் இந்த பாகுபாடு காட்டபடாவிட்டாலும் எனது மாமாவீட்டில் இந்த பாகுபாட்டினை கண்டிருகின்றேன் தனியாக பாத்திரங்கள் வைத்திருந்தார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இது யாழ்பாணத்தில மட்டுமா இருக்கு வேற பிரதேசங்கள இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

பழமை பேண்வாதிகள் இல்லை என்று சொல்வதற்கில்லை. அவ்வாறானவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஆனால் ஒட்டு மொத்த யாழ்பாண தமிழர்களையும் பழமைபேண் வாதிகள் என்பதில் அடக்க முடியாது.

இவ்வாறு தான் எனது கருத்து ஆரம்பிக்கின்றது. பழமைபேண்வாதிகள் பல விதத்திலும் இருக்கின்றார்கள் என்பது எனது கருத்து அதில் ஒரு உதாரணம் உங்களை ஆத்திரப்பட வைக்கின்றது. இவ்வாறான உங்கள்உணர்ச்சிகரமான கருத்துக்கள் ஊடாகத்தான் பழமை பேண்வாதம் என்னும் கருத்து நிலையை விளங்கி கொள்ள முடியும் என்று நான் நம்புகின்றேன். எனவே உங்களுக்கு நன்றி

நீங்கள் எவ்வாறு ஆரம்பிக்கின்றீர்கள் என்பதும் எப்படிக் கொண்டு போய் முடிகின்றீர்கள் என்பதும் தான் இங்கே பிரச்சனை.

சம்பந்தமில்லாமல் எல்லாத் தலைப்புக்களிலும் இந்துக்களை இழுத்துக் கதைக்கின்றீர்கள் என்பது தான் என் கேள்வி.

நீங்கள் காட்டுகின்ற உதாரணம் ஒவ்வொரு முறையும் இந்துக்களைச் சாடுவதைத் தான் பார்க்க முடிகின்றது. ஒன்று நீங்கள் கன்னடக்காரனின் திராவிடக்கொள்கை என்ற போலிக்குள் மூழ்கி மண்டை காய்ந்தவராக இருக்கலாம். இல்லை, சில மதமாற்ற வாதிகளின் செயற்பாட்டுக்குத் துணை போபவராக இருக்கலாம். அதை பகுத்தறிவு என்ற முகமூடிக்குள் இருந்து நடத்திக் கொள்கின்றீர்கள்.

அதே போல் இந்தியாவில் இந்துதுவ வாதிகள் குறிப்பாக பிராமணிய தரப்பினர் ஈழப்போராட்டத்தை எதிர்ப்பதை தொடர்ந்து செய்து வருகின்றனர். திராவிட கட்சிகள் ஏனைய இரத கட்சிகள் ஆதரிக்கின்றனர். இருந்தும் திராவிடக்கட்சிகளை எதிர்ப்பவரும் பிராமணியத்துக்கு வக்காலத்து வாங்குபவரும் இருக்கத்தானே செய்கின்றார்கள்

யாழ்பாணம் பற்றிய கருத்துக்கள் எப்படி உங்களுடைய விளையாட்டைக் காட்டுகின்றீர்கள் என்று பாருங்கள். இதில் இந்துக்களைக் கொச்சைப்படுத்துவதையும், எதிராகவும் காட்டிக் கொண்டு, திராவிடவாதிகள் தமிழீழத்துக்காக உயிரையும் கொடுப்பவர்கள் போல, இடைச்செருகல் செய்து கொள்கின்றீர்கள்.

முன்பு சந்திரிக்கா அரசு, விடுதலைப்புலிகளை விளிக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், பயங்கவாதிகள் என்ற அடைமொழி போட்டுக் கொள்ளும். அப்போது எம்மவர்களுக்கு அதன் பாதிப்புத் தெரியவில்லை. ஆனால் பயங்கரவாதம் தொடர்பாக உலகமட்டத்தில் பேசுகின்ற சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றிலும் பிற்பாடு புலிகளும் இணைக்கப்படும் அளவுக்கு அந்த நிலை சென்று, இப்போது இப்படி ஒரு நிலைக்கு வந்து நிற்கின்றது.

நீங்கள் செய்கின்ற செயலும் இவ்வாறு ஒத்தது தான். இந்துக்கள் தமிழீழப் போராட்டத்துக்கு எதிரானவர்கள் எனக் காட்டி ஒவ்வொரு முறையும் எழுதி, மனரீதியாக வாசிப்பவர்களுக்கு அவ்வாறன ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முனைகின்றீர்கள்.

பகுத்தறிவு, பெரியாரிசம், நவீனத்துவ சிந்தனை என்ற வார்த்தைகளை தனது பித்தலாட்டத்துக்கு தலைப்பாகப் போட்டுத் தான் ராமசாமியும் தன் கருத்துக்களைப் பரப்பலானர். அதை நம்பாதவர்கள் முட்டாள்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தவும் அது வழி செய்தது. இதனால் விருப்பமோ, இல்லையோ சிலர் அந்த முகமூடிக்குள் புதைந்து வாழ்;கின்றார்கள்.

பழமைவாதம், புதுமைவாதம் என்ற சிந்தனையும் அவ்வாறு தான். பழமைவாதி என்று சொன்னால் பிற்போக்குத்தனம் என சமூகத்தில் அவமானம் ஏற்படும் என்று சிலர் அதற்குள் நடிக்க முனைகின்றார்கள்.

என்னைப் பொறுத்தவரைக்கும் பழமை வாதம் என்பதில் எல்லாமே தப்பில்லை. மூடநம்பிக்கைகள் சிலவற்றைத் தவிர்த்தால் மிகுதி எல்லாமே ஓரளவு நன்று.

நம்மவர்கள் நினைக்கின்ற பழமைவாதம் என்னவென்றால், வேட்டி கட்டினால் அவன் பழமைவாதி. ஜீன்ஸ் அணிந்தால் புதுமைவாதி. நவீனத்துவம் கொண்டவன்.

இந்த இலட்சத்தில் பழமைபுதுமை பற்றிய அறிவாற்றால் இருக்கின்றபோது, தமிழனம் அழியும் என்று சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்.

------------------------------------

சுகன்

இவ்வாறன உணர்ச்சிகரமான வார்த்தைகளில் தான் பழமைவாதத்தை அறியலாம் என்று சம்பந்தமில்லாமல் ஏதோ எழுதுகின்றீர்கள். ஆனால் நீங்கள் இவ்வாறு இடைச்செருகல் செய்து சமூகமட்டத்தில் தவறான சிந்தனையைக் கொண்டு வவதை இப்படியான பதில்கள் தான் தேவைப்படுகின்றன. அதற்கு உதவியமைக்கு நன்றிகள்

----------------------------

***

*** நீக்கப்படுள்ளது. பண்பற்ற வார்த்தைகளைத் தவிர்க்கவும்.

Edited by இணையவன்

உண்மைகள் உறைக்கும்.

உள்ளதே வெளிக்கும்.

நன்மைகள் செய்தால்

நல்லதே நடக்கும் :lol:

என்னைப் பொறுத்தவரைக்கும் பழமை வாதம் என்பதில் எல்லாமே தப்பில்லை. மூடநம்பிக்கைகள் சிலவற்றைத் தவிர்த்தால் மிகுதி எல்லாமே ஓரளவு நன்று.

பழமை வேறு பழமைவாதம் வேறு.

தூய்மை வேறு துய்மைவாதம் வேறு.

இதை உணர்ந்துகொண்டு, உள்வாங்கிக்கொண்டு கருத்துக்களை முன்வைத்தால் தவறுகள் நேராது. இங்கு யாரும் பழமை எல்லாம் தவறானது என்கிற கருத்தை முன்வைக்கவில்லை என்றே நினைக்கிறேன். :blink:

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

தணிக்கை இன்றி இவ்வளவு நேரம் விட்டமைக்கு நன்றிகள். அல்லது எனித்தான் நடக்குமோ?

உண்மைகள் உறைக்கும்.

உள்ளதே வெளிக்கும்.

நன்மைகள் செய்தால்

நல்லதே நடக்கும் :lol:

பழமை வேறு பழமைவாதம் வேறு.

தூய்மை வேறு துய்மைவாதம் வேறு.

இதை உணர்ந்துகொண்டு, உள்வாங்கிக்கொண்டு கருத்துக்களை முன்வைத்தால் தவறுகள் நேராது. இங்கு யாரும் பழமை எல்லாம் தவறானது என்கிற கருத்தை முன்வைக்கவில்லை என்றே நினைக்கிறேன். :blink:

இளைஞன்

உங்களது கவிதையில்(?? அப்படித் தான் நினைக்கின்றேன்) எனக்கு உடன்பாடில்லை. உண்மைகள் மட்டும் எப்போதும் கோபத்தைத் தருவதில்லை.( உறைப்பது என்பது அந்த அர்த்ததில் கொண்டு தான் எழுதியுள்ளீர்கள் என நினைக்கின்றேன்) அவதூறாகச் சொன்னாலும் அது வரத்தான் செய்யும்.

உள்ளது மட்டும் வெளிக்காது. இங்கே பகுத்தறு என்று கதைப்பது எல்லாம் பகுத்தறிவா? அதில் காமராஜருக்கான அரசியல், அண்ணாத்துறைக்கான அரசியல், காங்கிரசுக்கான அரசியல் என எவ்வளவு எல்லாம் கலந்துள்ளது.

பழமை, பழமைவாதம் என்பதில் என்ன வேறுபாடு கண்டீர்கள். பழமையை ஆதரிக்கின்றவர்கள் கொண்டிருக்கின்ற அல்லது சமூகத்தில் பரப்புகின்றவர்கள் பழமைவாதிகள் எனப் பொருள்படுமா? அது தான் hன் மேலே சொன்னது போல, சமூகத்தில் பழமைவாதம் என்றால் தப்பு என்ற எண்ணம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

நான் தூய்மையாக இருப்பது தூய்மை. மற்றவர்களைத் தூய்மையாக இருக்க வலியுறுத்துவதும், அதை ஆதரிப்பதும் தூய்மைவாதம். இவ்வளவு தான் என் சிற்றறிவுக்குப்பட்டது.

"எல்லையற்ற பெருமைப்பேச்சு

பல்லிளிக்கும் சிறுமை"

என்று க.நா.சு. எனப்படுகிற க.நா.சுப்புரமணியம் (கவிஞர்) தமிழ்ச் சமூகம் பற்றிச் சொல்கிறார்.

யாழ் கருத்துக்களத்தில் ஒரு நிலை இருக்கிறது:

நாய் நான்கு கால் பிராணி என்று நாய் பற்றிக் கதைக்க வெளிக்கிட்டால்

யானைக்கு தும்பிக்கை இருக்கிறது என்று கதைக்கப்படும் :blink:

  • கருத்துக்கள உறவுகள்

அது உங்களில் தப்பு.

நாலு கால் மட்டும் இருக்கின்றது என்று சொன்னால் சனம் அப்படித் தானே நினைக்கும். நீங்கள் மனதில் நினைப்பதை எல்லாம் கண்டு பிடிக்கவா முடியும்?

(அப்படிக் கண்டு பிடிக்க முனைஞ்சால் அண்ணி யார் என்று பிடிக்காமல் விடுவமா?)

அது உங்களில் தப்பு.

நாலு கால் மட்டும் இருக்கின்றது என்று சொன்னால் சனம் அப்படித் தானே நினைக்கும். நீங்கள் மனதில் நினைப்பதை எல்லாம் கண்டு பிடிக்கவா முடியும்?

எழுதுவது எதையும் உருப்படியாக வாசிப்பதில்லைப் போல?

நாய் நான்கு கால் பிராணி என்று நாய் பற்றிக் கதைக்க வெளிக்கிட்டால்

யானைக்கு தும்பிக்கை இருக்கிறது என்று கதைக்கப்படும்

எம் சமூகத்தின் பழமைபேண் மனோநிலையின் வெளிப்பாடாக இதனையும் கொள்ளலாமா?

அழுத்தம் (குறும்படம்)

http://www.salanam.com/index.php?option=co...2&Itemid=46

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

முதலில எது பழமை ஏன்.. என்று சொல்லுங்க.. அப்புறம் எது புதுமை ஏன் என்று சொல்லுங்க.. காரணம் என்னாக்காண்டா.. உடுப்பை அவுத்துக்கிறது இப்ப புதுமையா சிலருக்கு தெரியுது.. ஆனா ஆதிகாலத்தில உடுப்பே இல்லாமல் தானே இருந்தனாங்க..... எனவே தான்.. எது புதுமை எது பழமை.. என்று தெளிவா வரையறுத்திட்டு தலைப்பில முட்டி மோதினீங்கண்ணா.. உபயோகமா இருக்கும். ஆளாளுக்கு படுற புதுமை பழமை.. எல்லாத்தையும் இங்க கொணாந்து.. உங்க வண்டவாளங்களுக்கு..சா.. உங்கட புதுமைகளுக்கு.. களம் தேடாதீங்கோ.. கண்டீங்களோ...! :lol::blink:

ரொபொட் கோம்ஸ், யாழ்பாணம் 1980: பக்கம் 04 இல் இருந்து யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்து நிலை என்னும் நூலில் (பக்கம் 55) மேற்கோள் காட்டப்பட்ட அறிமுக கருத்து ஒன்று

"இந்த நூலின் கதாநாயகன் யாழ்பாணத்தனே எனினும் அவன் தன்னை நாயக நிலையில் வைத்து சிந்திப்பவன் அல்லன். மனித இனத்தின் இந்த பிரதிநிதியை புகழ்வது பிறரே. சிக்கனமானவன், பழமைபேண்வாதி, மதபக்தி உடையவன், பிடித்ததை விடாதவன், ஒரு விடயத்தை ஆற அமரபார்ப்பவன், பொதுவாக கல்வி உயர்வு உடையவன், வரப்போவதெல்லாம் ஆபத்தனதே என பார்ப்பவன், ஊழில் நம்பிக்கை உடையவன், கிண்டல் கேலிக்காரன், சந்தேகப்பிராணி, போட்டியிடுபவன், விடாது வழக்காடுபவன், உணர்ச்சிவசப்படுபவன், கலந்து நடந்து கொள்பவன், மற்றவரைப்பற்றி தெரிந்திருப்பதில் நிபுணன், தான் பேச விரும்புபவன், சாதிக்குணமுடையவன், மூட நம்பிக்கை உள்ளவன், "கிளாரிக்கல் மனோபாவம் கொண்டவன்" குடும்பமயப்பட்டவன், அடக்குமுறைகளை தாங்கிக் கொள்பவன், மற்றவர்களுடன் கூடிவாழும் பண்புடயவன் அல்லன். எதேச்சதிகார போக்கு குணமுடையவன், ஆண் ஆதிக்ககாரன், பொருள் நலத்தையே நோக்குபவன், எனவரும் இந்த குணவியல்புகள் சில இயல்பானவை. சில ஒன்றுக்கொன்று முரணானவை- யாழ்பாண மனிதர்களுள் பெரும்பகுதிக்கான விவரணமாகும். எந்த ஒரு மனிதனிடத்தும் இவையெல்லாம் இருப்பதில்லை."

(ரொபொட் கோம்ஸ், யாழ்பாணம் 1980: பக்கம் 04

-----------------------------------------------------------------------------------------------------------------

எமக்குள் இருக்கும் குறைநிறைகளை நாம் கதைப்பது பிரச்சனை. கருத்துப்பகிர்வது பிரச்சனை. முடிவில்லாத வாதங்கள். மறுதலிப்புகள். ஏற்றுக்கொள்ளாத மனப்பாங்கு. இப்படி நிறைய விசயங்கள். இவை எல்லாம் என்னுமொருவன் எம்மை கணிப்பிட வழிவகை செய்கின்றது. அவற்றை நிராகரிக்க வேண்டுமானால் அதையும் செய்துவிட வேண்டியது தான்.

நாம் ஏன் பிளவுபட்டு கிடக்கின்றோம் என்பதும் எமது எதிரிக்கு பலம் எது என்பதும் உலகறிந்த விசயம். நாமும் அறிவோம.; ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். இது பழமைபேண் வாதத்தின் ஒரு சாராம்சம் என்றால் அதை எதிர்ப்போம்.

இனம் இனத்தினது தேசிய வாதம் என்பது மதத்தால் சாதியால் வர்க்கத்தால்பிரதேச வாதத்தால் பிளவுபட்டு வலுவிளந்து காட்சி தருவதும் அதை வலுவாக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு அனுசரிப்பும் ஒத்துளைப்பும் என்பதை ஒருங்கிணைந்து கொடுக்க முடியாதவர்களாக ஈழத்தமிழ் சமூதாயம் உள்ளதென்றால் அதற்கு காரணங்கள் பழமைபேணும் மனநிலையின் இறுக்கம் பிரதான காரணம் என்ற உண்மை எமக்கு எப்போதும் உறைக்கப்போவதில்லை.

இணைப்புக்கு நன்றி சுகன். எனது பார்வையில் முரண்பாடானவை ஆனால் உண்மையான அவதானங்கள்.

-1- பொதுவாக கல்வி உயர்வு உடையவன் VS மூட நம்பிக்கை உள்ளவன் மதபக்தி உடையவன்

இதற்கு காரணம் என்ன?

ஆழமாகப் பார்த்தால் "பொதுவாக கல்வி உயர்வு உடையவன்" என்பது அடிமை விசுவாசத்திற்கு கிடைத்த சலுகையை வைத்து தவறாக கொடுக்கப்பட்ட தோற்றப்பாடா?

-2- அடக்குமுறைகளை தாங்கிக் கொள்பவன் VS மற்றவர்களுடன் கூடிவாழும் பண்புடயவன் அல்லன்

இதற்கு காரணங்கள் எதையும் சிந்திக்க முடியவில்லை ஆனால் மிகவும் யதார்த்தமான அவதானம். ஆனால் இந்த 2 முரண்பாடனவற்றிற்கும் ஒற்றுமையானது சுயநலம்.

-----------

Conservatism is a term used to describe political philosophies that favor tradition and gradual change, where tradition refers to religious, cultural, or nationally defined beliefs and customs. The term is derived from the Latin, conservāre, to conserve; "to keep, guard, observe". Since different cultures have different established values, conservatives in different cultures have different goals. Some conservatives seek to preserve the status quo or to reform society slowly, while others seek to return to the values of an earlier time, the status quo ante.

Conservatism as a political philosophy is notoriously difficult to define...

http://en.wikipedia.org/wiki/Conservatism

Various Schools of conservatism:

Cultural conservatism

Liberal conservatism

Social conservatism

National conservatism

Neoconservatism

Paleoconservatism

Libertarian conservatism

Edited by kurukaalapoovan

கனவுகள் கை கூட வேண்டுமே

கொள்ளும் கோபம் கூட வேண்டுமே...

எமக்கென புது பூமி வேண்டுமே

தமிழ்தாய் அங்கு வேண்டுமே....!

தமிழனுக்கினி ரோசம் வேண்டுமே

எண்றும் இதயம் மாற வேண்டுமே...

அடடா இது நடக்குமா.? என்-

பூமி எனக்கு கிடைக்குமா..?

அதுவரை நெஞ்சம் பொறுக்குமா.?

என் ஜென்ம தமிழினம் பிழைக்குமா..?

--

அக போர், என இறங்கபிடிக்குமே

அகிலம் ஆண்டது எங்கள் தமிழின.....ம்....

அடுத்தவன் எமை சீண்டி பார்க்கையில்

எலும்பை முடிக்கும் எங்கள் புலிக்குணம்...!

இப்பிடி எங்களை பற்றி நாங்கள் பெருமையாய் அவலத்தை பாடலாம்... அதுதான் பழைமை, இதிலை இருந்து கொண்டு சொல்லுறதுதான் பழமை வேண்டுதல்... அது இருக்கும் வரைக்கும்தான் எங்களுக்கு அடையாளம் இருக்கு... !

சோழன் கொடியை எங்கட கொடி எண்டு சொல்லேக்கை இருக்கிற பெருமை, மற்றய நேரங்களிலை கருத்தாடும் போது இல்லாமல் போய்விடுகிறது..

பழமையான தமிழை விட்டுவிட்டு புதுமையான இலகுவான ஆங்கிலத்துக்கு மாற முடியாது....!

Edited by தயா

காய்க்கிற மரத்துக்குத்தான் கல்லெறி விழும் என்பாங்க.. அதேபோல எதற்கும் யாழ்ப்பாணத்தானின் தலை உருளுவது.. அதுவும் யாழ்ப்பாணத்தானாலேயே யாழ்ப்பாணத்தானின் தலை உருட்டப்படுவது வேதனையான வேடிக்கைதான்.

யாழ்ப்பாணத்தான் பழமையுடனும் இருக்கட்டும். பழமைவாதத்துடனும் இருக்கட்டும். அதனால் விளைந்தவைகள் என்ன? ஒவ்வொரு கட்டத்திலும் சிறிலங்காவின் போக்கும் வீச்சும் மாற்றங்களும் யாழ்ப்பாணத்தாலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. தமிழீழப் பிரகடனமாட்டும்.. பொங்குதமிழாகட்டும்.. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்!!

மற்றும்படி, நல்லவை கெட்டவை.. சாதகம் பாதகம் என்பவை உலகிலுள்ள எல்லா சமூகங்களிலும்தான் பரவிக் காணப்படுகின்றன.

எனிவே.. ஐ ஆம் ப்யூர் யாழ்ப்பாணத்தான்!! :blink:

  • கருத்துக்கள உறவுகள்

மனித வரலாற்றுக்கு.. இறந்த காலம்.. நிகழ்காலம்.. எதிர்காலம் என்று மாறுபட்ட வடிவங்கள் உள்ளன. இதில் இறந்த கால வடிவங்களையும்.. நிகழ்காலத்துக்குள் பேணிக்கொண்டு.. எதிர்காலத்துக்குரியதை நிகழ்காலத்துடன் சேர்த்து திட்டமிடுவதுதான்.. மக்களுக்கு அவசியமானது.

மூடநம்பிக்கைகளுக்கும் பழமைவாதத்துக்கும் சிலர் முடிச்சுப் போடுகின்றனர். ஏன் மதத்தையும் கலந்து அடிச்சு.. ஒரு நல்ல நவீன சர்பத் அடிச்சுக் கொடுத்திவிடத் துடிக்கின்றனர். ஒன்றில் அவர்களுக்கு பழமைவாதம் என்பதன் தொனிப்பொருள் விளக்கேல்ல.. அல்லது மூடநம்பிக்கை என்பதன் பின்னால் உள்ள தொனிப்பொருள் விளங்கேல்ல. நிகழ்காலத்திலும் மூடநம்பிக்கைகள் இருக்கின்றன.. முளைக்கின்றன. உதாரணத்துக்கு சுப்பர்மான் கலாசாரம்.. ஸ்பைடர்மான் கலாசாரம்.. இவையெல்லாம்.. மூடநம்பிக்கைகள் அல்லாமல்.. விஞ்ஞான விளக்கங்களின் பெறுதிகளா..????!

எமக்கென்ற வரலாறு.. பழமைக்குள் தான் பொதிந்திருக்கிறது. பழமைவாதம் பழமைவாதிகள் என்று எமது வரலாற்று அடையாளங்களை தொலைக்கத் தூண்டுவது..அல்லது இழக்கச் செய்வது.. என்பது எமது இனத்துவ இருப்புக்கான சான்றுகளை அழிப்பது அல்லது இழக்கச் செய்வது போன்றது. இது ஒரு வகையில் சிங்களப் பேரினவாதிகளின் இன அழிப்புக் கொள்கைக்கு நிகரானதே..!

மக்கள் பழமை சுமந்து கொண்டு.. நவீன நிகழ்காலத்தையும் அதிநவீன எதிர்காலத்தையும் நோக்கிப் பயணிக்க வேண்டும்.. அதுதான் அவசியமே அன்றி பழமைவாதம் என்று தூக்கி எறிஞ்சிட்டுப் போக.. நாம் இன்று உதித்த இனமல்ல. ஒருவேளை புலம்பெயர்ந்துவிட்ட சில அதிபுத்திசாலிகள் தங்களை புலம்பெயர்ந்த புது இனமாக்கக் காட்ட விரும்பினம் போல. ஏலவே ஈழத்தமிழர்கள்.. கனடாத் தமிழர்.. லண்டன் தமிழர்.. நோர்வேத் தமிழர்.. சிட்னித் தமிழர்.. மலேசியத் தமிழர்.. மற்றும் ....... ........ ....... தமிழர்கள் என்று பிரிஞ்சிருப்பது அல்லது பிரிக்கப்பட்டிருப்பது.. காணாதென்று.

இதன் தாக்கம் இன்றைய போராட்ட சூழலில் பெரிசா உணரப்படேல்ல.. இதன் விளைவுகள்.. போராட்டம் ஓய்கின்ற போது.. புதிய பரிமானத்தோடு தமிழர்களை கூறுபோட்டு நிற்கும்.. என்பதை மட்டும்.. கவனிக்கனும். அப்போது கூட.. இந்த யாழ்ப்பாணப் பழமைவாதம் தான் உதவிக்கு வரணும்... சின்னச் சின்ன ஒற்றுமைகளை என்றாலும் எடுத்துக்காட்டி.. முயன்றளவு ஒற்றுமையை அடையாளம் காண...! :rolleyes:

Edited by nedukkalapoovan

சரி இந்த படத்தையும் பாத்திட்டு கதையுங்க

மனுசி

http://youtube.com/watch?v=J77Mlhw_D1A

Edited by ஈழவன்85

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.