Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையத்தில் கருத்துச் சுதந்திரம் என்று நீங்கள் எதிர்பார்ப்பவை எவை? - யாழ் சும்மா வந்து சும்மா போவோர் சங்கத்தினால் நடாத்தப்படும் அறிவுப்பட்டறை

22 members have voted

  1. 1. யாழ் இணையம் - கருத்தாடல் தளத்தில் கருத்துச் சுதந்திரம் இருக்கின்றதா?

    • ஆம்! 100% உள்ளது!
      9
    • ஆம்! 75 - 100% உள்ளது!
      6
    • ஆம்! 50 - 75% உள்ளது!
      3
    • கருத்துச் சுதந்திரம் இல்லை!
      3
    • தெரியவில்லை!
      1

Please sign in or register to vote in this poll.

Featured Replies

அனைவரையும் யாழ் சும்மா வந்து சும்மா போவோர் சங்கம் சார்பில் எமது முதலாவது அறிவுப்பட்டறைக்கு அன்புடன் வரவேற்கின்றோம்.

இது எமது சங்கம் யாழில் நடாத்தும் முதலாவது செயற்திட்டம் ஆகும். இந்த அறிவுப்பட்டறையின் நோக்கம் யாழ் இணையத்தில் கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன என்ற ஒரு வரைவிலக்கணத்தை எட்டி கருத்துச் சுதந்திரம் பற்றிய அறிவை கள உறவுகளிடையே வளர்த்தல் ஆகும்.

எமது சங்கத்தின் கெளரவ செயாலாளர் திருவாளர். குறுக்காலபோவான், மற்றும் சங்கத்தின் ஆலோசகர்கள் திருவாளர்கள் மணிவாசகன், ஈழவன், யமுனா ஆகியோர் இந்த அறிவுப்பட்டறையில் தமது ஆலோசனைகளையும் கூறி யாழ் இணையத்தில் கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன இந்த தொனிப்பொருளை தெளிவாக்குவார்கள்.

  • யாழ் இணையத்தில் நாம் எவற்றையும் எழுதக்கூடிதாய் இருக்க வேண்டும் (தூசணம் உட்பட..) இதுவே உண்மையான கருத்துச் சுதந்திரம் என்று யாராவது இங்கு நினைக்கின்றீர்களா?
  • மட்டறுத்துனர்கள் இல்லாமல் யாழ் கருத்தாடல் தளம் இயங்குவதை அதாவது மட்டறுத்தல் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படுவதை யாராவது கருத்துச் சுதந்திரம் என்று இங்கு எதிர்பார்க்கின்றீர்களா?
  • இப்போது யாழ் இணையத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள புதிய உறுப்பினர்கள் இணைவதில் உள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதை யாராவது கருத்துச் சுதந்திரத்தின் அங்கமாக இங்கு நினைக்கின்றீர்களா?
  • ஒரு கள உறவை தனிப்பட தாக்கி கருத்தாடல் செய்வதை நிருவாகம் அனுமதிப்பதுவே கருத்துச் சுதந்திரம் என்று யாராவது இங்கு நினைக்கின்றீர்களா?
  • பெண்களை கண்டபடி கிண்டல் செய்து கருத்துக்கள் எழுதப்படுவதை நிருவாகம் அனுமதிப்பதை யாராவது இங்கு கருத்துச் சுதந்திரம் என்று நினைக்கின்றீர்களா?
  • தமிழ்த்தேசியம் பற்றி எவ்வாறான கருத்துக்களும் பக்கச் சார்பின்றி வைக்கப்படும் நிலை உருவாவதை யாராவது கருத்துச் சுதந்திரத்தின் ஒரு பகுதி என்று இங்கு நினைக்கின்றீர்களா?
  • மதங்கள், சாதிகள் பற்றி எவ்வாறான கருத்துக்களும் எழுதப்படுவதற்கு நிருவாகத்தினால் கட்டுப்பாடுகள் போடப்படாது இருப்பதை யாராவது கருத்துச் சுதந்திரம் என்று இங்கு நினைக்கின்றீர்களா?

யாழ் இணையத்தில் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நீங்கள் எதிர்பார்ப்பவை எவை? யாழ் இணையத்தில் கருத்துச் சுதந்திரம் இல்லை என்று கூறுபவர்கள், மற்றும் யாழ் இணையத்தில் கருத்துச் சுதந்திரம் தேவை என்று கோசம் போடுபவர்கள் நீங்கள் யாழ் இணையத்தில் எதிர்பார்க்கும் கருத்துச் சுதந்திரம் என்ன என்பதை தெளிவுபடுத்த முடியுமா?

நன்றி!

யாழ் சும்மா வந்து சும்மா போவோர் சங்கம்

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து சுகந்திரமே தேவைல.....................

நாங்கள் எழுத வேண்டியத எழுதுவம் அவங்க வெட்ட வேண்டியத வெட்டுவாங்க...

இதுல காமடி என்னான்னா இவங்க வெட்டிறதுக்குள்ள நாங்கள் சொன்னத எல்லாரும் வாசிச்சிடுவாங்க....

வணக்கம் ஜெனரல்!!

என்னையும் சிற்றுரை ஆற்ற வரும்படி அழைப்பு விடுத்ததிற்கு மிக்க நன்றிகள் :) !!கருத்து சுகந்திரம் என்றால் (தூசணம்) உட்பட நாகரிகமற்ற வார்த்தைகளை பிரயோகிப்பது அல்ல இதை நான் உங்களுக்கு விளங்கபடுத்த தேவையில்லை என்று நினைக்கிறேன் :unsure: !!கருத்து சுகந்திரம் என்ற வரையறையில் ஒரு சமுகத்தில் நிகழும் குறைகள் மற்றும் நிறைகளை எந்த வித மட்டுறுத்தலுமின்றி கொண்டு வர வேண்டும் என்பதே என்னுடைய பார்வையில் :rolleyes: !சமூகத்தில் நடக்கும் குறையை ஒரு ஆளிற்காக மூடி மறைத்தல் ஒருவர் கூறுகிறார் என்று கருத்துகளை தூக்குதல் என்பது எல்லாம் கருத்து சுகந்திரம் என்ற வட்டதில் கொண்டு வர முடியாது!! :D

களத்தில் உறவு ஒருத்தரை தரகுறைவாக பேசினா அதனை ரிப்போர்ட் பட்டனை அமர்த்துவதன் மூலம் முறையிடலாம் அந்த செயற்பாட்டை வரவேற்கிறேன் ஆனால் வெளியில் இருந்து ஒருவர் இதை தூக்குமாறு ஆலோசணை கூறுவதை எக்காரணம் கொண்டும் நான் ஆமோதிக்கமாட்டேன் இது கடந்தகாலங்களிள் நடந்த பிரச்சினை இனிமேல் வராது என்று நம்புகிறேன்!! :wub:

புதிய உறவுகள் இணைவதில் உள்ள கட்டுபாடு ஒரு வகையில் வரவேற்கிறேன் ஏனேனில் கள்ள ஜடி பிரச்சினைகள் குறையும் ஆனால் உண்மையாக எழுத வரும் புதிய உறுப்பினர்கள் இதனால் விரக்தியுற்று செல்கிறார்கள் என்பது நிதர்சனம் தற்போது பரிந்துரை என்ற செயற்பாடு வந்திருந்தாலும் அது எவ்வளவு தூரம் வெற்றி அளிக்கும் என்பது ஜயமே!!"பரிந்துரை செய்யும் நடவடிக்கை முதலியவற்றை "சுகந்திர கருத்தாளர் சங்கம்" எடுத்து செயல்படுத்த இருகிறது என்றே கூறலாம்!! :wub:

அடுத்து மட்டுஸ்மார் வேண்டும் அவர்களின் இந்த சேவையை நான் பாரட்டுகிறேன் அவர்களாள் தான் யாழ் சிறந்த வழியில் போகிறது என்பதை எவராலும் மறுக்கமுடியாது ஆயினும் சில தவறுகளை விடுகிறார்கள் அது உறவுகள் மத்தியில் பாரியளவு தாக்கத்தை செலுத்துகிறது என்பது நான் கண்டறிந்தவகையில் உண்மை அதை போக்கும் முகமாக உருவானது "யாழ்கள சுகந்திர கருத்தாளர் சங்கம்" என்று கூறலாம்!! :lol:

மேலும் நேரம் கிடைக்கும் போது மிகுதி தகவல்களை பரிமாறி கொள்கிறேன் ஏனேனின் நீங்கள் பொறுப்பொன்றை ஒப்படைத்திருக்கிறீர்கள் அதனை முடித்துவிட்டு மீண்டும் சந்திகிறேன்!! :)

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"கருத்துகளிற்கு தடை போட்டாலும் உண்மையை யாராலும் தடை செய்ய முடியாது"!!

Edited by Jamuna

யாழ்களம் என்ன நோக்கத்திற்காக இயங்குகிறதோ அதை நிறைவேற்றுவதற்குரிய முழுக் கருத்துச் சுதந்திரம் தான் குறைந்தபட்ச்சத் தேவை. யாழ்களத்தின் இயங்கும் நோக்கத்திற்கு அப்பாற்பட்ட கருத்துச் சுதந்திரம் ஆடம்பரமானதும் தேவை கருதி கட்டுப்படுத்தப்படக் கூடியதும் வேண்டியதுமே.

யாழ்களம் என்ன நோக்கத்திற்காக இயங்குகிறது என்பதை அதன் பொறுப்பாளர்(கள்) தான் தீர்மானிக்கக் கூடியவர்கள். ஏனையவர்களிற்கு எந்தளவிற்கு உரிமை இருக்கிறது எந்தளவிற்கு கொடுக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்தவித அபிப்பிராயமும் இல்லை. இது முற்று முழுக்க பொறுப்பாளர்களின் உரிமை-முடிவு என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.

யாழ் போன்ற ஒரு களம் எப்படியான நோக்கங்களிற்கு இயங்க வேண்டும் என்பதைப் பற்றி தனிப்பட்ட கருத்துக்களைச் சொல்லலாம்.

-1- இன்று தமிழ் இனம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் பற்றிய சரியாக prioritize பண்ணுப்பட்டு அவற்றில் கவனம் தேவை.

-2- அந்த சவால்கள் பற்றி ஏனை தளங்களில் இல்லாத பார்வைகளிற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

-3- வித்தியாசமான சிந்தனைகள் வரவேற்கப்பட வேண்டும் புதிய அணுகுமுறைகள் பரீட்சித்துப்பார்க்கும் ஊக்குவிக்கும் களமாக இருக்க வேண்டும்.

-4- இவற்றின் மூலம் புதிய வழிமுறைகள் அணுகுமுறைகள் அறிமுகப்படுத்தப்படலாம். அது பரந்த சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளப்படுவதும் விடுவது பல புறக்காரணிகளால் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ தடைப்படலாம். ஆனால் அவற்றை இனங்கண்டு அவற்றின் மீது கவனத்தை கொண்டுவர முயற்சிக்கும் கடமையைச் செய்ய வேண்டும்.

-5- எமது சமூகத்தில் உள்ள வழமையான சிந்தனைகள் பார்வைகள் கருத்துக்கள் ஏனைய தளங்கள் ஊடகங்கள் களங்களில் நிரம்பி வழியும் விவகாரங்களால் நிரம்பி வழிவதை overwhelm பண்ணப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும்.

-6- மொத்தத்தில் தமிழ்த் தேசியத்தின் சமூகத்தின் ஆரோக்கியமான எதிர்காலம் நோக்கிய ஒரு சுதந்திரமான சிந்தனை மற்றும் பரீட்சாத்த ஆய்வு களமாக இருக்க வேண்டும். தமிழ்த் தேசியத்தை பாதிக்காத நீதியான நியாயமான நேர்மையான சட்டதிட்டங்களிற்கு உட்பட்ட அனைத்திற்கும் அனுமதி இருக்க வேண்டும். இதன் அர்த்தம் விபச்சாரத்தால் எப்படி விரைவாக பணம் பண்ணலாம் என்று ஆய்வு செய்யலாம் அறிவுரை கூறலாம் என்று அர்த்தம் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்ஸ்,

மிகவும் அருமையாக விளக்கியிருக்கிறீர்கள். உங்கள் கருத்தே எனது கருத்தும்.

  • தொடங்கியவர்

கருத்துக்கள் கூறிய எமது சங்கத்தின் கெளரவ செயலாளர் திருவாளர். குறுக்காலபோவான், எமது சங்க ஆலோசகர் யமுனா, மற்றும் கள உறவுகளுக்கும், கருத்துக்கணிப்பில் பங்குபற்றியவர்களுக்கும் நன்றிகள்.

நான் கருத்துக்கணிப்பில் 75 - 100 % சுதந்திரம் என்ற தெரிவுக்கு எனது வாக்கை அளித்தேன்.

சுண்டல் கூறுவதை வாசிக்க சிரிப்பாக இருக்கின்றது. இப்படி சொல்வது சிறுபிள்ளைத்தனமாக இல்லையா? நீங்கள் கள விதிகளிற்கு கீழ்பட்டு எதையும் எழுதும் போது நிருவாகம் அவற்றை தூக்கப்போவதில்லை.

இந்தத் தலைப்பில் கருத்தாடல் செய்யும்போது தெளிவு ஏற்பட வேண்டுமாயின் இங்கு நடைபெறும் பிரச்சனைகளை உதாரணங்களுடன் விளக்குவதே சிறந்தது.

நேற்று பாட் ஸ்குயாட் என்ற தலைப்பு ஒன்று நிருவாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. இந்த தலைப்பில் இரண்டு பாடல்களிற்கு (ஒன்று ஆங்கில தூசண வார்த்தைகள் வரும் பாடல், மற்றையது ஆங்கில தூசண வார்த்தைகளுடன் தமிழ் மொழியும் கலந்தது) லிங் கொடுக்கப்பட்டு இருந்தது. இங்கு கருத்துச் சுதந்திரம் மீறப்பட்டு உள்ளது என்று இந்த தலைப்பை தொடங்கிய கள உறவு பீல் பண்ண முடியுமா?

மற்றையது...

நிருவாகம் ஒரு தலைப்பை ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு நகர்த்தும்போது கருத்துச் சுதந்திரம் மீறப்படுகின்றது என்று யாராவது நினைக்கின்றீர்களா?

ஆம் 100% இருக்கிறது என்பதுக்கு வாக்களித்து இருக்கிறேன்....

100% உண்டு என்பதற்கே வாக்களித்தேன்

***********

Edited by harikalan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.