Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் இராணுவ புலனாய்வு தளபதி சார்ள்ஸ் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவு

Featured Replies

விடுதலைப் புலிகளின் இராணுவ புலனாய்வு தளபதி சார்ள்ஸ் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவு

தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ புலனாய்வு தளபதி சார்ள்ஸ் அவர்கள் இன்று நடைபெற்ற கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவு அடைந்து உள்ளதாக களத்தில் இருந்து வரும் தவல்கள் தெரிவிக்கின்றன. சண்முகநாதன் ரவிசங்கர் என்ற இயற்பெயர் உடைய இவர் தெற்கில் இராணுவ மையங்கள் மீது பல வெற்றிகரமான தாக்குதல்களை வழிநடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

-பாரிமகன்

செய்தி மூலம் : http://www.sooriyan.com/

விரிவாக விபரம் தெரிந்தவர்கள் கூறவும்

சூரியன் உந்த விடையங்களில் புரளி கிழப்பாது. உண்மை போல்தான் இருக்கு. யாழ்பாணம் கைப்பற்றப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை மீண்டு உறுதிப்படுத்துகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் ரானுவ புலனாய்வு பொறுப்பாளர் சாள்ஸ் (அருள்வேந்தன்) மன்னாரில் ஆழ ஊடுருவும் சிங்கள படைதாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். தென்னிலங்கை பகுதியில் நடந்த பல தாக்குதலுக்கு இவரே அரசாங்கத்தால் தேடப்பட்டவர்.

-தேசத்தில் வந்த குறிப்பு-

சூரியனைத் தவிர இச் செய்தி வேறெங்கும் பிரசுரிக்கப்படவில்லை. பொறுத்திருந்து பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் இராணுவ புலனாய்வு தளபதி சார்ள்ஸ் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவு

சாள்ஸ் நலமாக இருக்கிறார்

சாள்ஸ் நலமாக இருக்கிறார்

செய்தி உண்மை இல்லையா?

விடுதலைப் புலிகளின் இராணுவ புலனாய்வு தளபதி சார்ள்ஸ் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவு

தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ புலனாய்வு தளபதி சார்ள்ஸ் அவர்கள் இன்று நடைபெற்ற கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவு அடைந்து உள்ளதாக களத்தில் இருந்து வரும் தவல்கள் தெரிவிக்கின்றன. சண்முகநாதன் ரவிசங்கர் என்ற இயற்பெயர் உடைய இவர் தெற்கில் இராணுவ மையங்கள் மீது பல வெற்றிகரமான தாக்குதல்களை வழிநடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

-பாரிமகன்

செய்தி மூலம் : http://www.sooriyan.com/

விரிவாக விபரம் தெரிந்தவர்கள் கூறவும்

தளபதி சாள்ஸ் அவர்களுக்்கு எனது வீரவணக்கம்......

ஓயாத அலைகள் 3 படைநடவடிக்கையின் மூலம் ஆனையிறவு மீட்கப்பட்டதைத் தொடர்ந்து பளையும் புலிகளின் கையில் வீழ்ந்தபோது சூரியன் எப்.எம். வானொலி அந்தத் தாக்குதலின் ஒருங்கிணைப்புத் தளபதி கேணல் பானு வீரச்சாவடைந்ததாக செய்தி வெளியிட்டது. செய்தியை விடுதலைப் புலிகளின் தரப்புச் செய்திபோலவே ஆனால் எந்தத் தரப்பையும் குறிப்பிடாமல் மோதலில் பானு அவர்கள் வீரச்சாவென்று சொன்னார்கள். ஆனால் அரச ஊடகங்கள் அப்போது அது குறித்து சில நாட்களிற்கு எந்தச் செய்தியையும் வெளியிடாமையும் சூரியன் மீதான நம்பகத் தன்மையும் அப்போது அந்தச் செய்தியை நம்பவைத்தது. ஆனால் பின்னர் அச்செய்தி பொய்யாகிப் போனது.

அதேபோன்றே இன்று சூரியன் இணையம் இப்படி ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. புலிகளின் குரல் வானொலியோ அல்லது வேறெந்த ஊடகமோ இச்செய்தியை வெளியிடவில்லை. எனவே இந்தச் செய்தி பொய்யாகிப் போகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மொட்டையான இச்செய்தியின் நம்பகத்தன்மை கேள்விக்குறியதுடன்.. கிளைமோரில் ஒரு தளபதி இறந்திருப்பதை புலிகள் மறைத்தாலும்.. சூரியனுக்கு கிடைத்த தகவல் அரசுப் புலனாய்வாளர்களுக்கு கிடைக்க நேரம் சென்றிராது.

அரச ஊடகங்களில் (குறிப்பாக இராணுவ ஊடகங்களில் ) கூட இதுபற்றிய குறிப்புகள் இல்லை..!

எனவே இச்செய்தி தொடர்பாக மிகவும் விழிப்போடு இருப்பது அவசியம். சூரியன் போன்ற தமிழ் தேசிய சார்ப்பு என்ற அடையாளம் காட்டும் ஊடகங்களின் செயற்பாடுகள் ஆதாரங்கள் இன்றி வெளியிடும் தகவல்கள் மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்த செய்யப்படும் விசமப் பிரச்சாரங்களின் விளைவாக இருக்குமோ என்ற கேள்வியையும் எழுப்புகிறது..?! :D:D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் தளபதியைக் கொன்றிருந்தால் சிங்களம் இப்போதே கொக்கரிக்கத் தொடங்கியிருக்கும். அனால் அப்படி எதையும் காணவில்லை. ஆகவே இச்செய்தி உண்மையாக இருக்க வாய்ப்புகள் குறைவு.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் தளபதியைக் கொன்றிருந்தால் சிங்களம் இப்போதே கொக்கரிக்கத் தொடங்கியிருக்கும். அனால் அப்படி எதையும் காணவில்லை. ஆகவே இச்செய்தி உண்மையாக இருக்க வாய்ப்புகள் குறைவு.

சிங்கள ஊடகங்கள் கொக்கரிச்சாப் போல செய்தி உண்மை என்றும் இல்லை..! உண்மையோ பொய்யோ அவர்களுக்கு சார்பான செய்தி ஒன்று வெளிவந்தால் அதை பெரிசு படுத்தாமல் விடமாட்டார்கள்..!

இச்செய்தி மொட்டைச் செய்தியாக வெளிவந்திருப்பதானது சந்தேகத்தைக் கிளப்புகிறது. உண்மைச் செய்தியென்றால் எப்போ எங்கே நடந்தது போன்ற விபரங்கள் வந்திருக்கும். யார் இறந்து என்பதை அச்சொட்டாகக் கண்டு பிடித்தவைக்கு எங்க எப்ப நடந்தது என்று தெரியாதா. சும்மா இன்று என்று போட்டால்.. எப்ப எங்க..???!

சிங்கள ஊடகங்களே இந்தச் செய்தி கிடைக்கல்ல எனும் போது.. அவர்களுக்கே அவசியமில்லாத பொய்தான் உது போல.. தெரியுது..! :lol::D:D

Edited by nedukkalapoovan

உள்ளுக்கை நடக்கிறதுகள் எப்படி சிங்கள ஊடகங்களிற்கு தெரியவரப்போகுது. உது ஆழஊடுருவும் படையணியின் தாக்குதல் என்றால் சிங்கள ஊடகத்து நிருபர் போய் தாக்குதல் நடந்த இடத்தில் பாத்து செய்தி எழுதுவதா? இல்லை ஆழஊடுருவி தாக்குதல் நடத்தியவர்கள் நடத்தியபின் உறுதிப்படுத்த முனைவார்களா? இல்லையே. அவர்கள் தப்பி மீண்டும் தளம் திரும்புவதில் தான் கவனம் செலுத்துவர்கள். பிறகு தொடர்பாடல்கள் போன்றவை முதல் ஏனைய வழிகளில் தான் தாக்குதல் வெற்றியா தோல்வியா என்று அறிய முடியும்.

கடற்புலிகளின் தளபதி சூசை காயப்பட்டத்தை அறிந்து கொள்ள எவ்வளவு காலமானது.

அது போலவே தலைவரிற்கு காயம் எண்டது கூட இன்னமும் ஒத்துக் கொள்ளப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளுக்கை நடக்கிறதுகள் எப்படி சிங்கள ஊடகங்களிற்கு தெரியவரப்போகுது. உது ஆழஊடுருவும் படையணியின் தாக்குதல் என்றால் சிங்கள ஊடகத்து நிருபர் போய் தாக்குதல் நடந்த இடத்தில் பாத்து செய்தி எழுதுவதா? இல்லை ஆழஊடுருவி தாக்குதல் நடத்தியவர்கள் நடத்தியபின் உறுதிப்படுத்த முனைவார்களா? இல்லையே. அவர்கள் தப்பி மீண்டும் தளம் திரும்புவதில் தான் கவனம் செலுத்துவர்கள். பிறகு தொடர்பாடல்கள் போன்றவை முதல் ஏனைய வழிகளில் தான் தாக்குதல் வெற்றியா தோல்வியா என்று அறிய முடியும்.

கடற்புலிகளின் தளபதி சூசை காயப்பட்டத்தை அறிந்து கொள்ள எவ்வளவு காலமானது.

அது போலவே தலைவரிற்கு காயம் எண்டது கூட இன்னமும் ஒத்துக் கொள்ளப்படவில்லை.

தாங்கள் கெட்டித்தனமாப் பேசுறம் என்று தங்கட மனசுகளுக்க கிடக்கிறதுகள.. சனத்தின்ர மனசுக்க இருக்கிறதா அதைக் காட்டிறதா சொல்லிக்கொண்டு சில பேர் நல்லாவே தமிழ் தேசிய விழிப்புணர்வு வளர்க்கினம்..!

கங்கை அமரன் இறந்ததும் இராணுவம் செய்தி வெளியிட்டது. ராஜன் இறந்த போதும் இராணுவம் செய்தி வெளியிட்டது. பிற தாக்குதல்களின் போதும் இராணுவம் செய்திகளை முந்தி அடிச்சுக் கொண்டு சொன்னது..!

ஆள ஊடுருவு படையினரிடம் தாக்குதல் வெற்றியா தோல்வியா என்று சொல்ல தொலைத்தொடர்பு சாதனங்கள் உட்பட்ட பல வசதிகள் இருக்கின்றன. நேரில போய் தான் செய்தியை காதுக்க குசு குசுக்கனும் என்றில்லை..! :D:D

Edited by nedukkalapoovan

தொலைத் தொடர்பு சாதனத்தில யார் யாரிட்டை அறியிறது அங்கு நடப்பவற்றை? சரி ஒட்டுக் கேக்கிறது எண்டாலும் சிங்கள ஊடகங்களிற்கு அந்த வசதியிருக்கா?

முன்பு போல் அல்லாது சிறீலங்கா இப்ப பலமாக இருக்கு. எனவே அவர்கள் விழுந்து கட்டி உரிமைகோரி அறிவித்து பிரச்சாரம் தேட வேண்டிய தேவை இல்லை. காலம் பதில் சொல்லும் என்று விட்டுவிட்டு விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தொலைத் தொடர்பு சாதனத்தில யார் யாரிட்டை அறியிறது அங்கு நடப்பவற்றை? சரி ஒட்டுக் கேக்கிறது எண்டாலும் சிங்கள ஊடகங்களிற்கு அந்த வசதியிருக்கா?

முன்பு போல் அல்லாது சிறீலங்கா இப்ப பலமாக இருக்கு. எனவே அவர்கள் விழுந்து கட்டி உரிமைகோரி அறிவித்து பிரச்சாரம் தேட வேண்டிய தேவை இல்லை. காலம் பதில் சொல்லும் என்று விட்டுவிட்டு விடுவார்கள்.

அதுவும் கொழும்பில கிளைமோர் வைக்கிறதில முன்னின்ற.. அனுராதபுர தாக்குதலை திட்டமிட்ட தளபதியே போயிட்டார் (அதுக்காகத்தான் நாங்க செய்தியில ஒரு வரியைச் சேர்த்தனாங்க தென்னிலங்கையில் இராணுவத் தாக்குதல்களைத் திட்டமிட்ட புலிகளின் இராணுவப் புலனாய்வுத் தளபதியென்று) என்று காட்டினா சிங்கள மக்கள் வெடி கொழுத்திக் கொண்டாடினா.. மகிந்தவுக்கும் வீரவன்சவுக்கும் புகழ்மாலை விழுமெல்ல.. சிங்கள மக்கள் மனங்களில் எல்லாம்.

இதை தவறவிடுவமே.. நாங்க. மகிந்தவுக்கு எப்படியாவது சொல்லிடனும் இந்தச் செய்தியை..! அவைக்கு முக்கியமில்லை என்று இருக்க விடவே கூடாது..! :D:D

மகிந்த உதவிட பெரிய கொண்டாட்டம் எல்லாம் கண்டவர். சிங்களவர்களும் உதை விட பெரிய கெண்டாட்டங்கள் எல்லாம் கண்டவர்கள். பனங்கொட்டையளின்ரை யாழ்பாணத்தில சிங்கக் கொடி ஏத்தினதையே அன்று கொண்டாடியவர்கள் இன்றும் கொண்டாடுகிறார்கள் 10 வருடங்களிற்கு மேலாக.

கொண்டாட என்ன இருக்கு என்று அங்கலாய்ப்பதும் தட்டுப்பாட்டில் இருப்பதும் தமிழர்கள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த உதவிட பெரிய கொண்டாட்டம் எல்லாம் கண்டவர். சிங்களவர்களும் உதை விட பெரிய கெண்டாட்டங்கள் எல்லாம் கண்டவர்கள். பனங்கொட்டையளின்ரை யாழ்பாணத்தில சிங்கக் கொடி ஏத்தினதையே அன்று கொண்டாடியவர்கள் இன்றும் கொண்டாடுகிறார்கள் 10 வருடங்களிற்கு மேலாக.

கொண்டாட என்ன இருக்கு என்று அங்கலாய்ப்பதும் தட்டுப்பாட்டில் இருப்பதும் தமிழர்கள் தான்.

அது மகிந்த இல்ல ராசா.. சந்திரிக்காவும் ரத்வத்தையும் கொண்டாடினது. இது மகிந்த கொண்டாட வேண்டியது. விடுறியள் இல்லையே..!

பனங்கொட்டையள் விரக்தியின்ர விளிம்பில நிக்கினம் என்றுதானே நாங்கள் பனங்கொட்டையளை நோக்கி வரைபடமா வரைஞ்சு விழிக்கப் பண்ணுறம். தற்கொலை பண்ண வேணாம் என்று..! :D:D

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான செய்தியாக இல்லைப் போலத்தான் உள்ளது :D

  • கருத்துக்கள உறவுகள்

சரி குறுக்காலபோவானின் வழிக்கே வருவோம். இத்தாக்குதல் ஆழ ஊடுருவும் அணியால் நடத்தப்பட்டது என்றும் அவர்கள் அந்த அணி பாதுகாப்பாக களம் திரும்பும் வரை செய்தியை வெளியிடாமல் வைத்திருக்கிறார்கள் என்றும் வைத்துக்கொள்வோம். அப்படியானால் சூரியனுக்கு மட்டும் தெரிந்தது எப்படி ? புலிகள் சொன்னார்களா ? எங்கேயோ உதைக்கிறதே குறுக்ஷ் ?!

குறுக்குக் கேள்வி எம்மை நாமே கேட்பது நல்லதுதான், ஆனால் விதண்டாவாதம் செய்யக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனின் தொழிநுட்ப வளர்ச்சி பற்றிக் கதைக்கும் எம்மில் பலருக்கு இன்னும் புலிகளின் வளர்ச்சி பற்றி தெரிந்திருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

நாம் செய்ய வேண்டியது சிங்களவனின் வளர்ச்சிய்ல் நம்பிக்கை வைப்பதல்ல, மாறாக தமிழரின் பலத்தில் நம்பிக்கை வைப்பதுதான். இவ்வளவு காலமும் சிங்களவனின் வளர்ச்சி போரின் போக்கைத் தீர்மானித்திருந்தால் இலங்கையில் தமிழர் என்ற இனமே இன்று இருந்திருக்காது, சிங்களவனுக்கு அடிமைப்பட்டு வாழும் ஒரு சிறு கூட்டத்தைத் தவிர !

யாழ்ப்பாணமும், கிழக்கும் இழக்கப்பட்டது ஏன் என்பது பற்றி இங்கே பலர் எழுதியாயிற்று. இன்னும் அதைப் பிடித்துவிட்டாங்கள், இதைப் பிடித்து விட்டாங்கள் என்று சப்பைக் கட்டு கட்டுவதில் எந்தப் பயனுமில்லை. யாழ்ப்பாணம் இழப்பின்றி பினவாங்கப்பட்டதால்தான் வன்னியில் போரியல்ச் சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. அனால் யாழ்ப்பாண மீட்பு என்பது புலிகளையும் தமிழரையும் பொறுத்தவரை மிகவும் சாத்தியமானதே. இங்குள்ள சிலருக்கு புலிகள் 2000 இல் யாழ்நகருக்குள் நுழைந்து பின் இந்திய சூழ்ச்சியால் அதை விட்டு வெளியேறியது இலகுவாக மறந்துவிடுகிறது அல்லது அவர்கள் அதை மறைக்க விரும்புகிறார்கள்.

கிழக்கென்பது எப்போதுமே புலிகளின் பலமான நிரந்தரத் தளமாக இருந்ததில்லை. வடக்கு ராணுவ நடவடிக்கைகளுக்காக ராணுவம் அகற்றப்பட்டபோது புலிகள் சண்டையின்றி கைப்பற்றியதுதான் கிழக்கு. அனாலும் அதை ராணுவம் மீளக் கைப்பற்றும்போது பெரிய விலை கொடுத்தே மீட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவன் சொன்னதுபோல், வன்னியில் நாள்தோறும் அடிவாங்கியும் மகிந்த தனது ராணுவம் வெல்வதாகப் பிரச்சாரம் செய்யும்போது, இவ்வாறான செய்தி கிடைத்தால் சும்மா விட்டு விடுவதற்கு மகிந்த ஒன்றும் சுத்த முட்டாள் இல்லை. ஊரைக் கூட்டி விழாவே நடத்தியிருக்கும். வேற்று நாட்டுக் கப்பலைத் தாக்கிவிட்டு புலிகளின் கப்பல் என்று விழா நடத்தி தனது படையினரைக் கவுரவித்த மனிதரல்லவா ?!

Edited by ragunathan

கேணல் சாள்ஸ் அவர்கள் வீரச்சாவடைந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

LTTE's Head of Army Intelligence killed in Claymore ambush

[TamilNet, Sunday, 06 January 2008, 01:20 GMT]

Col. Charles, Head of Liberation Tigers Army Intelligence, was killed in a Sri Lanka Army Deep Penetration Unit Claymore attack in Pa'l'lamadu in Mannaar Saturday evening, LTTE officials in Vanni said. Col. Charles who has been in charge of internal intelligence within the ranks of LTTE ground forces and led an external operations corps as well as a regular combat force that has been deployed in Mannaar district was killed together with three LTTE lieutenants in a random ambush carried out by a Sri Lankan DPU team while they were riding in a van.

Col. CharlesCol Charles (Shanmuganathan Ravishankar, Jaffna) was on a mission inspecting his regular forces in Mannaar, informed sources said.

The lieutenants killed in the ambush were identified as Sukanthan (Sivapalan Sreetharan) from Jeyapuram, Lt. Veeramaravan (Pararajasingham Suthan) from Mallaavi and Lt. Kalaa (Sinnaththamby Kangatharan) from Vaddakkachchi.

கேணல் சாள்ஸ் அவர்களுக்கு வீரவணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
:D கேணல் சாள்சுக்கும் அவருடன் வீரச்சாவடைந்த மூன்று லெப்டினன்களுக்கும் வீரவணக்கம் !

விடுதலைப்புலிகளின் படையப் புலனாய்வுப் பொறுப்பாளர் கேணல் அருள்வேந்தன் அல்லது சாள்ஸ் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். நேற்றுமன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளேமோர்த்தாக்குதலில் கேணல் அருள்வேந்தன் சாள்ஸ் உட்பட நான்கு போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.

நேற்றையதினம் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கேணல் அருள்வேந்தன் சாள்ஸ் (சண்முகநாதன் ரவிசங்கர்) மற்றும் லெப்.சுகந்தன் (சிவபாலன் சிறிதரன், மாதிரிக் கிரமம், ஜெயபுரம்), லெப்.வீரமாறன் (பரராஜசிங்கம் சுதன், 176 யோகபுரம் மல்லாவி), லெப்.காவலன் (சின்னத்தம்பி கங்காதரன், திரு.க.முருகவேள், ஆறுமுகம் வீதி வட்டக்கச்சி) ஆகிய மாவீரர்களுக்குத் தமிழீழ விடுதலைப்புலிகள் தமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.