Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ தமிழர்கள் இந்தியாவை பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்

10 members have voted

  1. 1. பைத்தியம் உளறுகிறது

    • பைத்தியம் உளறுகிறது
      6
    • வாயை மூடுடா நாயே
      2
    • இந்த துரோகியின் கட்டுரையை முதலில் தடை செய்யுங்கள்
      2

Please sign in or register to vote in this poll.

Featured Replies

இக்கட்டுரையை ஏற்கனவே வந்த ஒரு பதிவுக்கு பதிலிலும் பதிந்துள்ளேன்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=71050

ஈழ தமிழர்கள் இந்தியாவை பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் .

அதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது . உரிமையை தூக்கி குப்பையில் கூட போடலாம் . நியாயமான கோபம் இருக்கிறது. கடந்த கால வலிகள் இருக்கிறது . நம்பி ஏமாந்த சோகம் இருக்கிறது . உறவுகளே உதவாத கொடுமை இருக்கிறது . கொடுமைக்கு துணை போனதாக குற்றம் சாட்ட சில பல உதாரணங்கள் இருக்கிறது . தனது வலிமைக்காக ஈழ தமிழர்களை பகடை காய்களாக இந்திய பயன்படுத்துவதாக நடுநிலைமை கொண்டோரின் குற்ற சாட்டு இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரின் உயிருக்காக இத்தனை உயிர்களா என்ற நியாயமான ஆதங்கம் இருக்கிறது . கடைசி வரை போராடிய புலிகள் இந்தியாவிற்கு எதிராக எந்த நிலைப்பாடும் எடுக்காதிருந்தும் இந்தியா உதவாதது நியாயமில்லை. இன்னும் பல காரணங்கள் இருக்கிறது ஈழ தமிழர்கள் இந்தியாவை எதிர்க்க. அவர்கள் இந்தியாவை எதிரியாக வைத்துப் போராடினால் தான் ஈழம் சாத்தியம் என்பது மிக அருமையான கருத்து . ஆனால்................

.........இந்தியாவில் வாழும் தமிழர்களுக்கு இந்தியாவை தூற்ற உரிமை அறவே கிடையாது. வேண்டுமென்றால் காங்கிரஸ் என்ற ஒரு கட்சியை அல்லது அதிமுக எனும் இன்னொரு கட்சியையும் சேர்த்து தூற்றுங்கள் . இன்னும் தேவை என்றால் யார் யார் ஈழத்தை எதிர்க்கிறார்களோ அவர்களை எல்லாம் எதிர்க்க உரிமை இருக்கிறது . மேலும் முடிந்தால் ஆட்சியை மாற்றியமைக்கவும் முயற்சிக்கலாம் .ராஜீவ் கொலையாளிகள் தான் தண்டிக்கபட்டு விட்டனரே இப்போது ஈழ மக்களுக்கு உதவுங்கள் என்று ஏன் ராகுல் காந்தியிடமே / காங்கிரஸ் கட்சியிடமே கூட மனு கொடுக்கலாம். அப்போது தான் அவர்களின் உண்மையான முகங்கள் தெரிய வரும் . அவர்களின் முகம் என்று நமக்கு தெரிந்தது பிறரின் கற்பனை கட்டுரை மட்டுமே நம் கைவசம் இருக்கிறது . உண்மையான முகம் அறிய இன்னொரு முறை அவர்களை கெஞ்சுவதே சரி . அதை விட்டுவிட்டு பஸ்ஸை உடை , எரி என்பதெல்லாம் கேலிக்கூத்து. முழுமையான ஜனநாயக நாட்டில் அனைவரின் கருத்துக்கும் மதிப்பு உண்டு . அது ஈழ எதிர்ப்பாளர்கள் ஆனாலும் சரி . ஆதரவானவர்கள் ஆனாலும் சரி . இந்திய நாட்டின் முடிவு நூறு கோடி மக்களின் சம்பந்தப்பட்டது. ஆறு கோடி பேரை வைத்துக்கொண்டு இந்தியாவை ஆட்டி படைக்க வேண்டும் என்பது பேராசை தனம். ஈழ தமிழர்களுக்கு எடுத்தோம் கவித்தோம் என இந்தியா ஆதரவளித்தால் இலங்கை சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் முழு கதவை திறந்தால் முதல் அடி தமிழ் நாட்டு மண்ணும் மக்களும் தான் தமிழனே. அப்போதும் ஏதாவது வியாக்கியானம் பேச வருபவர்கள் நிறையவே உள்ளனர்.

ஏனெனில் பேசிவிட்டு தூண்டிவிட்டு ஏழை எளிய மக்களை ஏவி விட்டு குளிர்காயும் பரம்பரை தானே நம் இனம். ஒரு நாள் தகர கொட்டகையில் வீரம் பேசும் யாரையாவது இருந்து பார்க்க சொல்லுங்கள் .ஒரு வருடம் ஆகியும் மீள குடியமர்த்தாது இருக்கும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க இருக்கும் ஒரே சக்தி இப்போது இந்தியா மட்டுமே. எதிர் வினை செய்து பிற வினை விதைப்பது தற்போது அர்த்தமற்றது .அப்படி உண்மையிலேயே இந்தியாவில் உள்ள வீர தீர தமிழர்களுக்கு ( நான் குறிப்பிடுவது சிலரை மட்டுமே ) வீரம் இருந்து இருந்தால் ஈழம் வந்து மாவீரன் பிரபாவுடன் கைகோர்த்து போரிட்டு இருக்கலாம். ஒரு மூணாயிரம் நாலாயிரம் வீரர்கள் தமிழ் நாட்டில் இருந்து வந்து போராடியிருந்தால் எதோ அதில் இந்தியர்களும் இருக்கிறார்கள் என்று ஒரு வேலை இந்தியா போரை தடுக்க முயற்சித்து இருக்கலாம் . அல்லது இந்த போரிலேயே வென்று ஈழம் அமைத்தும் இருக்கலாம் . ஒரு வருடம் முன்பு தானே போரே நடந்தது. அப்போது என்ன இப்போது பேசுபவர்கள் எல்லாம் சின்ன வயதிலா இருந்தார்கள் ???

ஈழ தமிழரில் தான் எத்தனை குழுக்கள் !!! எத்தனை கட்சிகள் !!! எத்தனை தலைவர்கள் !!! எத்தனை பிரிவுகள் !!! முதலில் இலங்கையில் உள்ள ஈழ தலைவர்கள் மற்றும் மக்கள் ஒன்று சேரவேண்டும் . ஒரே குரல் எழுப்ப வேண்டும் . சிலரின் உயிர் போனாலும் போராட்டம் மீண்டும் உயிர் பெரும். அடுத்தவர்களை குறை கூறிக்கொண்டும் மாற்று கருத்துள்ளோரை தூற்றிக்கொண்டும் கிடப்பதை முதலில் ஈழ தமிழர்கள் மாற்றிக்கொண்டு ஆக்கபூர்வமாக சிந்திப்பதே இப்போதைக்கு தேவையான ஒன்று . முதல் படியாக முகாமில் இருப்போரை மீள குடியேற்ற வைக்க போராடலாம் . புலம் பெயர் சமூகம் வாக்கெடுப்பில் செலுத்தும் கவனத்தை சிலர் நன்கொடை என்ற பெயரில் கல்லா கட்டுவதில் கொடுக்கும் கவனத்தை இதில் செலுத்துவது சிறந்தது.

புலிகள் இருந்தவரை ஈழ விடுதலை என்பது மிக தெளிவான சிந்தனையோடு தான் இருந்துள்ளது. புலிகளிடம் தெளிவான பாதை இருந்தது . தியாகம் இருந்தது . உறுதியான தலைமை இருந்தது. அப்போது கண்மூடித்தனமாக அவர்களை ஆதரித்து இருந்தால் இந்நேரம் ஈழ நாட்டில் என்ஜாய் பண்ணிக்கொண்டு இருந்திருக்கலாம் . அதற்காக புலிகளுக்கு வக்காலத்து வாங்குவதாக நினைக்க வேண்டாம். உலகில் குற்றமில்லாத குறையில்லாத தவறில்லாத விடுதலை போரே கிடையாது. பிற விடுதலை போருடன் ஒப்பிடும் போது புலிகளிடம் அவ்வளவாக ஒன்றும் பெரிய குறை இல்லை.

ஆனால் இப்போது ஈழ விடுதலை என்பதே எடுப்பார் கைப்பிள்ளையாய் கேலிக்கூத்தான பொருளாக்கி கொண்டு போகிறார்கள் நம் தமிழர்கள்.

தமிழ் தற்போது தமிழர்களுக்கு தேவைப்படுவது பக்குவமும் நிதானமும் பொறுமையும் சாதுர்யமும் தான். தனி உரிமை அல்லது சம உரிமைக்கான அனைத்து உரிமைகளும் நியாயங்களும் உண்மைகளும் இருந்தும் அது நம் இனத்திற்கு மறுக்கப்பட்டு வருகிறது . உலகிற்கே சவால் விடும் பலமிருந்த போதே நமக்கு யாரும் குரல் கொடுக்க வில்லை . இப்போது இருக்கும் கொஞ்ச நஞ்ச ஓட்டுகளையும் வெட்டி விட்டு நிராயுத பாணியாக ஈழ மக்களை நிறுத்துவது மிக மிக தவறு . இப்போது தமிழ் ஈழத்தில் தேவைபடுவது புனர் வாழ்வும் மனக்காயங்களை குணப்படுத்துதலும் தான் . அது தான் இன்றைய சூழலில் தேவையான ஒன்று . சாத்வீகமான முறையில் தொடர்ந்து முயற்சிப்பதே நன்று . மேலும் இப்போது ஈழ தமிழருக்கு உதவுவதிலோ அல்லது குரல் கொடுப்பதிலோ எந்த தடையும் இந்தியாவிற்கு இல்லை . இனி இந்தியாவில் உள்ள தமிழர்கள் அற வழி போராட்டங்களை முன்னெடுத்து அனைவரையும் ஒருங்கிணைத்து சம உரிமை அல்லது சுய உரிமை கொடுக்க நிர்பந்திக்குமாறு இந்தியாவில் போராடலாம்.

நாட்டில் அமைதி நிலவ மூன்றில் ஒரு பங்கு ஆதரவு வேண்டும் என ராஜபக்ஷே கேட்டது இன்று கிடைத்து விட்டது . சிங்களர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பதை பொறுத்து பார்ப்பதும் தேவையான ஒன்று.

மேலும் போர் நடந்தபோது போராட்டங்களில் உலகெங்கும் பல தலைவர்கள் பல உறுதிகளை கொடுத்துள்ளனர். தமிழக திமுக உட்பட . இனி அவர்கள் என்ன செய்கிறார்கள் என பார்ப்பதும் அறிவே . அவர்களுக்கு நினைவு படுத்துவதும் அறிவே

அதே நேரம் வஞ்சிக்கபட்டால் எரிமலையாக வெடிக்க பலம் தேவை . அந்த பலத்திற்காக இப்போது அமைதி என்பது மிக அவசியம் . இனி வெடித்தால் யாரும் குறுக்கே வர மாட்டார்கள் . அப்போது ஈழம் உலகமே தடுத்தாலும் பிறக்கும் . பிறப்பதும் பிறக்காததும் தமிழரின் செயல்பாடுகளில் ராஜ தந்திரங்களில் (???) உள்ளது .

இந்தியாவை எதிரியாக நினைத்து போராடினால் ஈழம் மட்டுமல்ல எதுவுமே கிடைக்காது

Edited by tamil paithiyam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லது... மீண்டும் ஒருமுறை இந்தியாவின் காலில்?

ஆனால் நண்பரே... இன்னும் எங்கள் முதுகு வளையவில்லை....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புரட்சி....... உதால என்ன நன்மை? :(

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் தமிழ் பைத்தியத்தின் இந்திய பாசம் புரிகிறது..... முதலில் தேசியம் என்றால் என்ன? வெள்ளைகாரனால் ஒட்டவைக்க பட்டு பிச்சைகாரன் வாந்தி எடுத்தாதாற் போல் உள்ளதெல்லாம தேசியம் எனும் கணக்கில் வருமா?

இந்தியா என்பது வெள்ளையர்களால் ஒட்டவைக்க ஒரு தேசம் எனபது தோழருக்கு புரியவில்லை போலும்...

அதற்காக மேற்குரியவாறு கட்டுரையாளர் உருமுவார்.... அப்புறம் ஏன் இங்கு உள்ளீர்கள் என...நான் தமிழர் நாட்டில் உள்ளேன்.... தமிழர் நாடு என்பது பலவந்தமாக வெள்ளையரால் இந்தியத்துடன் ஒட்ட வைக்கபட்டுள்ளது....

nr581_thumb.jpg?w=242&h=244

என்று ஒரு வாதத்தை சமூக நெறிகள் பற்றிய ஆய்வாளர் “பால் கோம்பெர்க்” வைக்கிறார். அது ஓரளவுக்கு உண்மையாகத் தான் இருக்க வேண்டும், இந்திய தேசிய வடிவமும் அதன் ஆளுமை மையங்களும் இடைவிடாது ஒரு அண்டை நாட்டின் மீது வளர்க்கும் காழ்ப்புணர்வு இதற்குச் சான்றாகத் தோன்றுகிறது, அரசியல் நிலையிலான பல்வேறு முரண்பாடுகளைக் கடந்து நம்மைப் போலவே அன்றாடம் வாழ்க்கையை நோக்கிப் போராடுகிற எண்ணற்ற மக்களைக் கொண்ட இன்னொரு தேசத்தை வெறுக்கவும் அதன் மீதான நமது காழ்ப்புணர்வைக் கொட்டித் தீர்க்கவும் நமக்கான காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் தொடர்ந்து ஈடுபடுகின்றன. நாமும் அதனைப் பின்பற்றி முகம் தெரியாத மக்களை, அந்த மக்களின் அழகிய குழந்தைகளை, அவர்களின் வழிபாட்டு முறைகளை, அவர்களின் வாழ்வியல் நடைமுறைகளை வெறுக்கத் துவங்கி இருக்கிறோம்.

பல்வேறு இனக்குழுக்களின் நசுக்கப்பட்ட அடையாளங்கள் அடக்குமுறைகளின் உடைபாடுகளில் சிக்கி முனகிக் கொண்டிருப்பதை இந்திய ராணுவத்திற்கு எதிராக அஸ்ஸாம் பெண்கள் நடத்திய நிர்வாணப் போராட்டம் துவங்கி ராஜதானி விரைவு ரயிலின் கடத்தல் வரையிலான பல்வேறு செயல்பாடுகள் நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றன. இவற்றின் உச்சமாக உலகமே இன அழிப்பு என்று எதிர்க்குரல் கொடுக்கிற இனப்படுகொலையை, சிங்களப் பேரினவாதத்தை நியாயம் செய்து ஒரு பக்கம் நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டே இன்னொரு பக்கம் ஆயுதங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிற தேசிய வடிவம் தங்கள் நாரயணங்களை அனுப்பி தமிழர்களுக்கு எதிரான போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்ற அமெரிக்கா வரை பறந்து பறந்து தனது தேசிய வடிவத்தை வார்ப்பில் வடிக்கிறது.

nationnationalposter_thumb.jpg?w=161&h=244

இந்த நிலைகளில் “நான் தமிழனா? இல்லை, இந்தியனா?” என்றொரு கேள்வி விடுதலை பெற்ற இந்தியாவில் வாழும் தமிழ் இளைஞர்களை அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு மிகுந்த வீச்சுடன் எதிர்கொள்கிறது. இந்தக் கேள்வி எழுந்ததன் காரணிகளை நான் உங்களுக்கு அறிமுகம் செய்யத் தேவை இல்லை என்றாலும், எனது மொழியையும், எனது பண்பாட்டையும் கொண்டு வாழ்ந்து வருகிற எனது உறவுகள் என்று நான் கருதுகிற தமிழினத்தின் மீதான ஒரு பேரினவாதப் போரை ஆதரித்து அதன் அழிவிற்குத் துணை நிற்கிற தேசியத்தின் வடிவம் எனக்கானதா? என்ற அடிப்படைக் கேள்வியில் இருந்துதான் மேலே தலைப்பில் சொல்லப்பட்டிருக்கும் கேள்வியின் மூலம் ஒளிந்து கிடக்கிறது.

என் பள்ளி நாட்களில் தேசியகீதம் இசைக்கப்பட்ட போது அதனை அவமதிக்கும் வண்ணம் நடந்து கொண்ட எனது சக மாணவனைப் பள்ளியின் வழிபாட்டுக் கூடத்தில் அடித்து என்னை ஒரு தேசப் பற்றாளனாக அடையாளம் கண்டிருக்கிறேன், இந்தியா என்கிற கோட்பாட்டை, தேசிய வடிவத்தை எனக்குள் ஊற்றி வளர்த்த எனது பள்ளிகளின் வகுப்பறைகளும், கல்லூரியின் விளையாட்டு அரங்குகளும், என்னை விட்டு விலகி நீண்ட தூரத்தில் இருப்பதைப் போலவே, தேசத்தின் மீது நான் கொண்ட நம்பிக்கையும் சிதைந்து, சிதிலம் அடைந்து இருக்கிறது, இந்தச் சூழலில் தேசியம் என்கிற கருத்தாக்கத்தின் வேர்களைத் தேடி பயணம் செய்ய வேண்டிய நெருக்கடி உருவாகிறது.

india_thumb.jpg?w=244&h=164

1993 ஆம் ஆண்டு மகாராட்டிர மாநிலத்தின் “லாத்தூர்” மற்றும் “உஸ்மானாபாத்” மாவட்டங்களில் நிகழ்ந்த மிகப்பெரும் கொடிய நிலநடுக்கத்தின் போது, புவி அமைப்பியல் மாணவர்களின் சார்பில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு, நினைவேந்தல் சுவரொட்டிகள் ஒட்டி எனது தீவிரமான தேசியச் சிந்தனைகளை வலிமைப்படுத்தி வைத்திருந்தேன். எனக்குள் மிக ஆழமாக ஊடுருவியிருந்த அந்த தேசப்பற்றின் சுவடுகள் இந்தக் கட்டுரை எழுதும் நேரத்தில் எனக்குள் முற்றிலும் இல்லை, நீர்த்துப் போன எனது தேசியம் பற்றிய சிந்தனைகளோடு தேசியம் பற்றிய எனது பார்வை மாறுபாட்டினை அடைந்து வேறு திசையில் பயணிக்கத் துவங்கி இருந்ததை என்னால் உணர முடிந்தது, இந்த மாற்றம் எனக்குள் எவ்வாறு விளைந்தது? இந்த மாற்றத்தின் அடிப்படைக் காரணிகள் என்ன என்பதைப் பற்றி அடிக்கடி நான் சிந்திக்கத் துவங்கி இருந்தேன், அப்படிச் சிந்திக்கும் போது தேசியம் பற்றிய எனது தேடல் துவங்கியது என்று சொல்லலாம்.

வெவ்வேறு முரண்பாடுகள், அரசியல் மற்றும் சமூகத் தாக்கங்களைக் கடந்து தேசியம் என்கிற கருத்துருவாக்கம் ஒரு மாயத் தோற்றமா? அல்லது கற்பிதமா? உலக இயங்கியலின் இன்னொரு பிரிவா? என்கிற பல்வேறு கேள்விகள் எனக்குள் எழுந்து கொண்டே இருக்கிறது……

எந்த ஒரு கருத்தாக்கமும் மனித மனங்களில் ஒரே மாதிரியான விளைவுகளை உருவாக்குவதில்லை, ஒரு தனி மனிதனின் அல்லது சமூகத்தின் உள்வாங்குதலைப் பொருத்தும், அதற்குப் பின்புலமாக இருக்கிற புறக்காரணிகளின் அடிப்படையிலுமே கருத்துருவாக்கங்கள் மாற்றம் பெறுகின்றன, பின்னர் வெளிப்படுத்தப்படுகின்றன. ஆதி காலம் தொட்டு மனிதர்களுக்குள் நிலவும் பல்வேறு முரண்பாடுகள், வேறுபாடுகளாக மருவிப் போராகவும், ஆட்சி மாற்றமாகவும், ஆதிக்கமாகவும் வரலாற்றின் பக்கங்களில் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டுள்ளது. எல்லாவிதமான கருத்தாக்கங்களையும் போலவே தேசியம் என்பதும் தனி மனிதனின் அல்லது ஒரே சிந்தனையுள்ள மனிதக் குழுக்களின் தன்னியல்பான வாழ்க்கை முறைகளில் இருந்தே கட்டமைக்கப்படுகிறது.

வாழிட ஆதாரங்களை, மொழியை, பழக்கவழக்கங்களை, வழிபாடுகளை மையமாகக் கொண்டு செயல்படும் ஒரு குறிப்பிட்ட மரபுசார் மனிதக் குழு, நீண்ட காலமாகத் தொடர்ந்து செயல்படுகிற போது தேசியம் என்கிற கருத்தாக்கம் தோற்ற மடைகிறது, அதன் கூறுகளின் வலிமையைப் பொறுத்து வடிவம் பெறுகிறது அல்லது வெற்றி பெறுகிறது என்று நம்மால் தேசியத்தைப் புரிந்து கொள்ள இயலும்.

t.gif

தேசியம் என்கிற கருப்பொருள் ஐரோப்பிய நிலப்பரப்பில் இருந்தே துவங்கியது என்று வாதம் செய்கிற சில மேலைநாட்டு அறிஞர்களை நம்மால் கண்டறிய முடிகிறது, எடுத்துக்காட்டாக "ஜோகன் காட்ப்ரைட்" என்ற ஜெர்மானிய அறிஞரைப் பற்றிக் குறிப்பிடலாம், இவரை தேசியம் என்கிற கோட்பாட்டின் வடிவமைப்பாளராக சித்தரிக்கிறார்கள், ஆனால் இவரது வாதத்தின் நம்பகத்தன்மை ஏனைய கருத்துக்களில் நிகழும் ஒரு ஐரோப்பிய ஆளுமை மனப்போக்கைப் போலவே காணப்படுகிறது, பதினேழாம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களில் எழுதப்பட்ட சில வரலாற்றுக் குறிப்புகள் உலக வரலாற்றில் எஞ்சிய நிலப்பரப்புகளில் காணக்கிடைத்த உண்மைகளை மறுதலித்து தங்கள் வாழிடங்களின் புறச் சூழலைத் தழுவியே இறுதி செய்யப்படுகிறது என்பதுதான் அதற்கான காரணம்.

ஏறக்குறைய மூன்றாம் நூற்றாண்டின் முன்னதாகவே தொடங்கிச் செழித்திருந்த நமது இலக்கியங்களும், வாழ்வியல் கட்டமைப்புகளும் இத்தகைய ஆய்வுகளில் கணக்கில் கொள்ளப்படவில்லை. ஆகவே தேசியம் பற்றிய நமது கருத்தாக்கம் முன்னரே அறிந்து கொள்ளப்பட்ட ஒன்று என்கிற முடிவுக்கு நம்மால் எளிதில் வர இயலும். தேசியம் என்கிற ஒரு கருத்து வடிவத்தின் இன்றியமையாத பகுதிகளாகப் பண்பாட்டையும், மொழியையும் நம்மால் இனம் காண முடியும், ஒரே மாதிரியான பண்பாட்டையும், மொழியையும் கொண்ட மனிதக் குழுக்களே தேசியம் என்கிற கருத்து வடிவத்தை முழுமை பெறச் செய்யும் காரணிகளாக இருக்க முடியும்.

இதற்கிடையில், தேசியம், தொழில் மயமாதலின் விளைபொருளாகவும், முதலாளித்துவத்தின், ஊடகங்களின் துணைப் பொருளாகவும் சித்தரிக்கப்படுவதும் நிகழ்கிறது, தொழில் மயமாதலின் விளைபொருளாகத் தேசியம் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது, வேண்டுமானால், மேற்கத்திய நாடுகளில் இத்தகைய நிகழ்வுகள் உருவாகி இருக்கலாம், ஆனால், ஒட்டு மொத்த உலகிற்கும் தேசியம் என்கிற ஒரு வடிவம் தொழிற்புரட்சிக்கு முன்னதாகவே தோன்றி வளர்ந்திருந்தது என்பது தான் உண்மை. நதிக்கரை நாகரிக காலங்களில் தொழில் மயமாதலின் அடிப்படை ஆழமாகப் பரவி இருக்கவில்லை என்பதும், விவசாயம் அல்லது நிலப்பரப்பு சார்ந்த தொழில்கள் மேம்பட்டிருந்த காலங்களில் கூடத் தேசியம் என்ற கருத்தாக்கத்தின் படிமங்கள் இருந்ததற்கான சான்றுகளை நம்மால் காண இயலும்.

எடுத்துக்காட்டாக “திராவிட நாகரீகம்” தோன்றி வளர்ந்த சிந்து நதியின் சமவெளி சார்ந்த பண்பாட்டுக் காலத்தை (கி.மு 2600 – 1900) தேசியக் கருத்தாக்கங்களை அதன் மூல வேர்களை உருவாக்கிய காலம் என்று சான்றுகளுடன் நம்மால் உறுதி செய்ய முடியும், கலை, கலாசார, மொழிக் கருவிகளோடு செழித்திருந்த சிந்துச் சமவெளி நாகரீகம் தேசியக் கோட்பாட்டின் வெளிப்பாடாகிய தலைமைப் பண்புகளை வரையறுக்கும் வரையில் கிளைத்திருந்தது என்பதை தேசியம் பற்றிய வெவ்வேறு ஆய்வுகளில் “சார்லஸ்” “மேசன்”, “பியூம்ஸ்”, “கன்னிங்காம்” மற்றும் “தேம்ஸ்” போன்ற அறிஞர்கள் உறுதி செய்திருக்கிறார்கள், அதேவேளையில் தேசியம் பற்றிய ஆய்வுகளில் மேற்கண்ட அறிஞர்களின் ஆய்வையும் அதன் முடிவுகளையும் “மிக்கேல் ஜெ ஹெக்கேன்பெர்கர்” மற்றும் “அன்டோனி டி ஸ்மித்” போன்றவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதும் இவர்களது தேசியம் பற்றிய வரையறைகளையும் அதன் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்குகிறது. தேசியம் பல்வேறு உட்பிரிவுகளைக் கொண்ட அல்லது முரண்பாடுகளை உள்ளடக்கிய ஒரு கோட்பாடாகவே இன்றளவும் காணப்படுகிறது, தேசியத்தின் நன்கு அறியப்பட்ட பிரிவுகளாக கீழ்க்கண்டவற்றை நம்மால் பட்டியலிட முடியும்.

1) மரபு வழியான தேசியம்.

2) அரசியல் வழியான தேசியம்.

3) கொள்கை வழியான தேசியம்.

4) பண்பாட்டு வழியான தேசியம் .

5) காலனி ஆதிக்கத்திற்குப் பிந்தைய தேசியம்.

6) உரிமைகள் வழியான தேசியம்.

7) இடதுசாரி விடுதலை வழியான தேசியம்.

8) மத வழியான தேசியம்.

9) தனிமனித வழிகாட்டுதல் வழியான கொடுங்கோன்மை தேசியம்.

10) இலக்கு வழியான தேசியம்.

இந்தப் பிரிவுகள் தவிர்த்து இன்னும் சில தனி வரையறைகளைக் கொண்ட தேசிய வகைகளும் இருப்பினும், நன்கு அறியப்பட்ட தேசிய வகைகளாக மேற்காணும் பிரிவுகளை அடையாளம் காண இயலும்.

1) மரபு வழியான தேசியம். (Ethnic Nationalism)

ஒரே மொழியை, பழக்க வழக்கங்களைக். குடும்ப அமைப்புகளைக் கொண்டு நீண்ட காலமாக வாழிட ஆதாரங்களை மையமாகக் கொண்டு செயல்படும் தேசிய வடிவத்தை மரபு வழியிலான தேசியம் என்று பொருள் கொள்ளலாம்.

2) அரசியல் வழியான தேசியம். (Civic Nationalism)

வெவ்வேறு மொழிகளையும், பழக்க வழக்கங்களையும் கொண்டிருந்தாலும், ஒரே மாதிரியான அரசியல் வடிவங்களைப் பெற்று ஆட்சி முறைகளில் ஒருங்கிணையும், நில எல்லைகளை மாற்றி அமைக்கும் நெகிழ்வு கொண்ட ஒரு தேசிய வடிவமாக இதனைப் பொருள் கொள்ளலாம்.

3) கொள்கை வழியான தேசியம்.(Expansionist Nationalism)

அரசியல், மொழி மற்றும் கலாசார மதிப்பீடுகளை விடுத்துக் கொள்கைகள் அடிப்படையில் இணைகிற அல்லது உருப்பெருகிற தேசியமாக இதனை நாம் பொருள் கொள்ள இயலும்.

4) பண்பாட்டு வழியான தேசியம். (Cultural Nationalism)

மரபு வழி தேசிய வடிவிற்கும், பண்பாட்டு வழியான தேசிய வடிவிற்கும் பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லை என்றாலும், மொழி மற்றும் நிலப்பரப்பு எல்லைகளில் நெகிழ்வுத் தன்மை கொண்ட ஒத்த பண்பாட்டில் ஒருங்கிணையும் ஒரு தேசிய வடிவமாக இதனை நாம் பொருள் கொள்ள இயலும்.

5) காலனி ஆதிக்கத்திற்குப் பிந்தைய தேசியம். (Post Colonial Nationalism)

பல்வேறு பண்பாட்டு, மொழி மற்றும் அரசியல், குடும்ப அமைப்பு, வழிபாட்டு முறைகள், கலை வேறுபாடுகளைக் கொண்ட வெவ்வேறு தேசியமாகச் செயல்பட்டு வந்த குழுக்கள், மற்றொரு குழுவின் ஆளுமைக்குப் பிறகு வலிந்து ஒரே மாதிரியான அரசியல் அளவீடுகளில், தனது நிலப்பரப்பை வரையறுத்துக் கொள்கிற தேசிய வடிவமாகவும், ஏற்கனவே உருவாகித் தழைத்திருந்த மரபு வழி மற்றும் அரசியல் வழியிலான தேசிய அடையாளங்களை விழுங்கி ஒரு புதிய தோற்றம் தரக்கூடிய தேசியமாக இதனை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

6) உரிமைகள் வழியான தேசியம். (Liberation Nationalism)

ஒரு குறிப்பிட்ட தேசிய வடிவில் இருந்து இழந்த தங்கள் உரிமைகளை மீட்டு மீண்டும் நிறுவுவதற்குப் போராடித் தங்கள் தேசிய வடிவத்தை உள்ளிருந்து மாற்றி அமைக்கிற தேசிய வடிவமாக இதனைப் பொருள் கொள்ள முடியும்.

7) இடதுசாரி விடுதலை வழியான தேசியம். (Left – Wing Nationalism)

குறிப்பிட்ட தேசிய வடிவினால் ஒடுக்குமுறைக்கு உட்பட்ட அல்லது உரிமைகளை இழந்த மனிதக் குழுக்கள் ஒருங்கிணைந்து போராடிப் பொது மக்களுக்கு நன்மை தருகிற அரசியல் வழியிலான தேசிய வடிவத்திற்கு மாற்றம் பெறுகிற தேசிய வடிவம் என்று இதனைப் பொருள் கொள்ளலாம்.

8) மத வழியான தேசியம்.(Religious Nationalism)

ஒரே வழிபாட்டு முறைகளைக் கொண்ட, மத நம்பிக்கைகளின் அடிப்படையில் ஒருங்கிணைந்து உருவாக்கம் பெறுகிற தேசிய வடிவமாக இதனைப் பொருள் கொள்ள இயலும்.

9) தனி மனித வழிகாட்டுதல் வழியான கொடுங்கோன்மை தேசியம். (Fascist Nationalism)

ஒரு தனி மனிதனின் சிந்தனைகளின் அடிப்படையிலும், மாற்றுச் சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காத மக்களுக்கு எதிரான கொடுங்கோன்மை வழியாக உருப்பெருகிற தேசியமாக இதனைப் பொருள் கொள்ள இயலும்.

10) இலக்கு வழியிலான தேசியம். (Diaspora Nationalism)

9888b9449bf40ae360f3ee48b0666cc6.jpg

வெவ்வேறு நிலப்பரப்புகளில் வாழினும் தங்கள் இலக்கு நோக்கிய செயல்பாடுகள் மூலமாக ஒரு தேசிய வடிவைக் கட்டமைக்கிற அல்லது செயல்படுகிற தேசியக் கருத்தாக்கமாக இதனைப் பொருள் கொள்ள முடியும்.

நீண்ட தேடலுக்குப் பிறகு, என்னால் உள்வாங்கப்பட்ட தேசியம் என்கிற கருத்துரு உண்மையில் எனக்கானது அல்ல என்பதை அரசியல் சார்ந்த, இனம் சார்ந்த அல்லது மொழி சார்ந்த சில அண்மைய நிகழ்வுகள் உறுதி செய்தது மட்டுமன்றி என்னைப் போன்று எண்ணற்ற இளம் தலைமுறைத் தமிழர்களை இந்திய தேசியம் என்கிற கோட்பாட்டில் இருந்து திசை திருப்பி இருக்கிறது. இதன் தாக்கம் வரும் காலங்களில் இந்திய தேசிய அரசியலையும், தமிழ் மக்களின் அரசியல் பற்றிய சிந்தனைகளையும் மாற்றி அமைக்கும்.

நான் மரபு வழியிலான ஒரு தேசத்தில், உயர்ந்த பண்பாட்டு மொழிக் கோவைகளை உள்ளடக்கிய ஒரு தேசிய வடிவத்தில் அல்லது அதற்கும் மேலான " யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்ற தேசியங்களைக் கடந்த ஒரு வடிவத்தில் எனது வாழ்வியலைச் செம்மைப்படுத்தி வாழ்ந்த போது, பொருளாதார நோக்கிலும், வல்லரசுக் கனவுகளிலும், முதலாளித்துவச் சிந்தனைகளால் வளர்க்கப்பட்டு வரும் ஒரு குறுகிய இருநூறு ஆண்டுகால நாகரீகத்துடன் இணைத்துக் கொண்டு எனக்கான தேசிய வடிவமாக அதனை ஒப்புக் கொள்வது ஒரு வகையில் அறிவீனமானது என்றே தோன்றுகிறது.

மரபு வழியிலான, மொழி வழியிலான, இன வழியிலான கலைப் பண்பாட்டு வழியிலான எனது உறவுகள் என்று நான் கருதுகிற, மக்களின் வாழ்வியலைக் கேள்விக்குள்ளாக்கும் அல்லது பேரினவாதக் கொள்கைகளுக்கு முட்டுக் கொடுக்கும் ஒரு மண்டல வல்லரசுக் கனவின் வழியாகச் செலுத்தப்படும் தேசியத்திலும், அதன் அரசியல் நிலைப்பாடுகளிலும் எனக்கு முற்றிலும் நம்பிக்கை இழப்பு உருவாகி இருக்கிறது. என்னைப் போலவே எண்ணற்ற தமிழ் இளைஞர்களுக்கும் உருவாகி இருக்கிறது என்பதும் உண்மை.

tamil_genocide_march2009_032.jpg

எனது உறவுகள் என்று நான் கருதுகிற மக்களைப் பாதுகாக்கிற வலிமை இருந்தும், அந்த வலிமையை எம்மிடம் இருந்தே பெற்றிருந்தும் கூட எமது உணர்வுகளைக் கொஞ்சமும் மதிப்புடன் நடத்தாத, எனது நிலப்பரப்பின் வழியாகவே இன அழிப்பிற்கான ஆயுதங்களைக் கொண்டு செல்லத் துணிந்த ஒரு தேசிய வடிவத்தில் நாம் இணைந்து செயல்படுவதும், அதனைக் கொண்டாடி மகிழ்வதும் எனது வழிவழியான மனிதநேயச் சிந்தனைகளுக்கு எதிரானதாகவும், முற்றிலும் முரண்பட்ட ஒரு தேசிய வடிவமாகவும் இருப்பதால் என்னை இந்திய தேசியத்தின் அடிப்படைக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டதில் இருந்து மாற்றி இருக்கிறது.

இவை அனைத்திற்கும் மேலாக, எனது மரபு வழியிலான தொழில்களை முற்றிலும் அழித்துப் பொருளாதார மயமாக்கல் என்கிற ஒரு முதலாளித்துவ ஏமாற்று வழியை உள்ளிருத்தி அறம்சார்ந்த எனது வாழ்வியலைப் பொருள்சார்ந்த வாழ்வியலாகத் திரிக்க முனைகிற, எனக்கான இன, மொழி அடையாளங்களை சிதைவுறச் செய்து ஒரு மதச்சார்பு வழியில் இயங்கத் துடிக்கிற குழுக்களின் ஆளுமையை தேசியவடிவம் என்று ஏற்றுக் கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகிறது. இவற்றின் ஆளுமையில் இருந்து விடுபட்டு நிலைத்த மேன்மையான எனது "தமிழன்" என்கிற அடையாளத்துடனேயே நான் வாழவும், அடையாளப்படுத்தப்படவும் விரும்புகிறேன்.

09011620january200920bombing2020shelling_2.jpg

என்னுடைய தேசிய வடிவம் மரபு வழியான முதல் பிரிவில் உலகெங்கும் அறியப்படுகிறது, மனித நேயம் நிறைந்த, சாதி வேறுபாடுகளும், மதக் குழப்பங்களும் அற்ற இயற்கையை வணங்கிப், பெண்களின் தலைமைப் பண்புகளை ஒட்டிக், கலை மற்றும் பண்பாட்டு வெளிகளில் நிறைந்து வாழ்கிற நீண்ட காலத் தேசிய வடிவம் என்னுடையது. அதன் அடையாளங்களை எந்த தேசிய கீதத்தின் இசைப்பிலும் நான் இழப்பதை விரும்பவில்லை. என்னை இந்தியன் என்று யாரும் அழைப்பதை இப்போது நான் வெறுக்கிறேன், குடியுரிமைகள் கொண்ட ஒரு இந்தியனாக நான் இருக்கிற போதிலும், கொள்கை வழியாக நான் இந்திய தேசியத்தில் இருந்து நீண்ட தொலைவில் இருக்கிறேன், அல்லது எனக்குக் குடியுரிமைகள் வழங்கிய ஒரு தேசம் என்னை தனது செயல்பாடுகள் மூலமாக விலக்கி வைத்திருக்கிறது.

நான் இந்தியனாக இருந்தால் தமிழனாக இருக்க முடியாது, உண்மையான தமிழனாக இருந்தால் இந்தியனாக இனி ஒருக்காலும் இருக்க முடியாது,

இந்தியாவில் வாழும் தமிழர்களுக்கு இந்தியாவை தூற்ற உரிமை அறவே கிடையாது. வேண்டுமென்றால் காங்கிரஸ் என்ற ஒரு கட்சியை அல்லது அதிமுக எனும் இன்னொரு கட்சியையும் சேர்த்து தூற்றுங்கள் . இன்னும் தேவை என்றால் யார் யார் ஈழத்தை எதிர்க்கிறார்களோ அவர்களை எல்லாம் எதிர்க்க உரிமை இருக்கிறது . மேலும் முடிந்தால் ஆட்சியை மாற்றியமைக்கவும் முயற்சிக்கலாம் .ராஜீவ் கொலையாளிகள் தான் தண்டிக்கபட்டு விட்டனரே இப்போது ஈழ மக்களுக்கு உதவுங்கள் என்று ஏன் ராகுல் காந்தியிடமே / காங்கிரஸ் கட்சியிடமே கூட மனு கொடுக்கலாம். அப்போது தான் அவர்களின் உண்மையான முகங்கள் தெரிய வரும் . அவர்களின் முகம் என்று நமக்கு தெரிந்தது பிறரின் கற்பனை கட்டுரை மட்டுமே நம் கைவசம் இருக்கிறது . உண்மையான முகம் அறிய இன்னொரு முறை அவர்களை கெஞ்சுவதே சரி . அதை விட்டுவிட்டு பஸ்ஸை உடை , எரி என்பதெல்லாம் கேலிக்கூத்து. முழுமையான ஜனநாயக நாட்டில் அனைவரின் கருத்துக்கும் மதிப்பு உண்டு . அது ஈழ எதிர்ப்பாளர்கள் ஆனாலும் சரி . ஆதரவானவர்கள் ஆனாலும் சரி . இந்திய நாட்டின் முடிவு நூறு கோடி மக்களின் சம்பந்தப்பட்டது. ஆறு கோடி பேரை வைத்துக்கொண்டு இந்தியாவை ஆட்டி படைக்க வேண்டும் என்பது பேராசை தனம். ஈழ தமிழர்களுக்கு எடுத்தோம் கவித்தோம் என இந்தியா ஆதரவளித்தால் இலங்கை சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் முழு கதவை திறந்தால் முதல் அடி தமிழ் நாட்டு மண்ணும் மக்களும் தான் தமிழனே. அப்போதும் ஏதாவது வியாக்கியானம் பேச வருபவர்கள் நிறையவே உள்ளனர்.

இதற்கு பதிலலித்து விட்டு என்னையும் இந்தியனாக மாற்றுங்கள்...

தமிழர்கள் இது வரை யாருடைய உரிமைகளையாவது மறுத்திருக்கிறார்கள் ??? எந்த இனத்தவரையாவது அடிமைபோல நடத்தி அவர்களை பாகுபாடுடன் நடத்தியிருக்கிறார்களா ? தமிழர்களின் உரிமையை ஏன் மற்றவர்கள் மறுக்கின்றனர் ?? இதற்கு தங்கள் பதில் இருந்தால் நன்றாக இருக்கும்..

மராட்டியத்தில் கூலி வேலை செய்த தமிழர்களை அடித்து விரட்டினர் சிவசேனைய மராட்டிய படைகள்.. அதற்கு அவர்கள் சொன்ன பதில் 'மும்பை நகரம் மராட்டியர்க்கே' ஏன் அவ்வாறு கூறி விரட்டினர் ????

ஆசியாவிலேயே அதிகம் குடிசை மக்கள் வசிக்கும் பகுதி மும்பை தாராவி பகுதி.. அங்கு யார் வசிக்கிறார்கள் என்பதை நினைவு படுத்திக் கொள்ளவும்..

இங்கு தமிழகத்தில் எத்தனை மார்வாடிகள் கால் மேல் கால் போட்டுக் கொண்டு வட்டித் தொழிலில் தமிழர்களை வாட்டி எடுத்துக் கொண்டிருக்கினறனர் என்hதை பார்க்கவும்...

கேரளாவிலிருந்து தமிழகத்தில் வந்த மலையாளிகள் 3 லட்சம் தேனீர் கடைகள் வைத்துள்ளனர்.. அதற்கான நன்றியை கூட முல்லை பெரியாறு பிரச்சனையில் காட்ட மறுக்கின்றனர்.. கடலில் கலக்கும் வீணாகும் நீரில் சில டி.எம்.சியைக் கூட மறுக்கின்றனர்.. ஏன் ??????

ஒரு மலையாளி (அந்தோணி) ராணுவ அமைச்சராக இருக்கும் ஒரே காரணத்திற்காக முல்லை பெரியாற்று அணைக்கு சம்பந்தமே இல்லாத கப்பற் படை ஏன் வந்தது ? யார் உத்தரவிட்டார் ? மலையாள இன உணர்வு தானே காரணம் ?

கேரளாவிற்கு தினமும் அரிசி, பருப்பு, இறைச்சி என எவ்வளவோ செல்கிறது ... ஏன் அவர்களுக்கு நம் மீது மட்டும் இப்படியொரு தாழ்மையான எண்ணம்... 96 சதவீதம் தமிழர்கள் வசித்த தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் ஏன் கேரளத்தோடு இணைக்கப்பட்டது,..? யார் இணைத்தது ??? ஏன் இணைத்தனர் ???

ஆந்திரர்கள் பாலாற்றில் அணை கட்டுவதற்கு தைரியமூட்டியது யார் ? அது தவறா ??? சரியா ???

உலகில் எங்குமே அனுமதிக்கப்படாத ரசியாவின் அணுமின் நிலையத்தை தமிழகத்தை தவிர இந்தியாவில் எந்த மாநிலமும் பாதுகாப்பு கருதி அனுமதிக்கவில்லை.. அதனால் மத்திய அரசு தமிழகத்தில் அதை அமைக்க தீவிரம் காட்டியது ஏன் ??? புதிய அறிவியல் சோதனைகளுக்கு பயன்படும் எலி போன்ற சிறு உயிரினங்களை போல ஏன் மத்திய அரசு தமிழர்களை கருதுகிறது ??

ரயில்வே துறைத் தேர்வுக்கு ஏன் பிஹாரில் மட்டும் விளம்பரம் செய்து இந்தியா முழுக்க நடப்பதாக சொல்லப்பட்டது ?? அம்மாநிலத்திற்கு மட்டுமான தேர்வு எனில் அதை எழுத பிஹாரிகள் சென்னைக்கு ஏன் வரவேண்டும் ?? ஏன் அத்தேர்வு மற்ற மாநிலங்களில் அறிவிக்கப்டடபோதும் தமிழகத்திற்கு அறிவிக்கப்படவில்லை ஏன் ??? யார் அதை செய்தது ? ரயில்வே துறை அமைச்சருக்கு இன உணர்வு ஏன் ?

இந்திராகாந்தியை சுட்டுக் கொன்ற சீக்கியனுக்கு பிரதமர் பதவி... தன்னையும் கற்பழித்து தன் அண்ணன் மார்களை கண் முன்னேயே கொன்ற இந்திய அமைதிப் படையினரை எதிர்த்து அதை அனுப்பிய ராசீவ் காந்தியை அழித்த சுபா என்கிற தமிழச்சியைக் காட்டி ஒர் இனத்தின் விடுதலையையே தடுப்பது ஏன் ?? தமிழர்களிடம் மட்டும் ஏன் இந்த பாகுபாடு ??

உப்புத் தொழிலில் இந்தியாவில் முதலிடத்தில் இருந்தது தமிழகம்.. குஜராத் இரண்டாம் இடம்.. திடீரென அயோடீன் குறைவு என ஏன் தமிழகத் தொழிலை மட்டும் தடை செய்து குஜராத்தை முதலிடத்திற்கு போனது எப்படி ? நம்மை விட குறைந்த அயோடின் சக்தி கொண்ட குஜராத் உப்புத் தொழிலை ஏன் காங்கிரஸே தடை செய்யவில்லை ?????

நம்முடைய தமிழ் நிலமான கச்சத்தீவை இலங்கைக்கு தானமாக வழங்கியது யார் ???

நாகப்பட்டினம் மீனவர்களை தினமும் சுட்டு அட்டுழியம் செய்யும் இலங்கை அரசை என்றாவது இந்திய அரசு கண்டித்ததா ? என்ன நடவடிக்கை எடுத்தனர் ?? குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் படையினர் சுட்டால் அதற்கு உலகையே கூப்பிட்டுக் காட்டும் மத்திய அரசு ஏன் தமிழர்களிடம் பாகுபாடு காட்டுகிறது ?? தமிழர்களும் இந்தியர்கள் தானே ??

தாங்கள் பழம் பெரும் நாடு என்னும் இந்திய நாடு இருந்ததற்கான வரலாற்று ஆதாரம் ஏதேனும் உண்டா ??? தெரிந்து கொள்ள ஆசை.. கூறுங்களேன் தோழரே....

இடஒதுக்கீடு கொடுத்தால் தகுதி திறமை கெட்டு போய் விடும் என்று கூறிவிட்டு சுமார் 75 வருடங்களாக இடஓதுக்கீடு அமல் படுத்தும் தமிழகத்திற்கு ஏன் வடநாட்டவர்கள் மருத்துவத்திற்கு தமிழகம் வருகிறார்களே ,,? இங்கு தான் தகுதியும் திறமையும் கெட்டுப் போய்யிருக்குமல்லவா ??? ஏன் அதை உச்சநீதி மன்றம் மறு ஆய்வு செய்ய சொன்னது ???

குடியரசுத் தலைவர் கலாம்.. ஒரு தமிழனாய். இலங்கை பிரச்சனைக்கு என்ன நடவடிக்கை எடுத்தார் ?? ஒரு குடியரசுத் தலைவராய் நாட்டிற்று புதிதாக ஏதேனும் செய்திருக்கிறாரா ? அவர் தன்னிச்சையாக மக்களுக்காக எடுத்த ஏதாவது ஒரு திட்டத்தினை சொல்லவும்..

முதன் முதலில் 1805 வேலூரில் நடைபெற்ற சிப்பாய்க் கலகம் ஏன் மறக்கடிக்கப்பட்டு 1857 கலகம் மட்டும் பாட புத்தகங்களில் முதலிடம் பெற்றது ??

'இந்தியாவில் அனைவரும் சமம் '- நியாயப்படுத்துக...

ஏன் நாகாவை மட்டும் தனித் தேசிய இனமாக இந்திய அரசமைப்பு சட்டப்பிரிவு 371(ஏ) பிரிவு அங்கீகரிக்கிறது ? மற்ற இனங்களான தமிழ், மலையாளம், பிஹாரிகள், மராட்டியர்கள், கன்னடர்கள் ஆகியவற்றை ஏன் மறுக்கிறது ???

மகாராட்ரம், காசுமீர், அசாம், மெகாலயா, அருணாசல பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மற்ற மாநிலத்தவர் ஏன் நிலம் வாங்கக்கூடாது ? அதை ஏன் அரசியலமைப்பு சட்டம் 351 முதல் 355 வரை உள்ளிட்ட பிரிவுகள் ஏன் மறுக்கின்றன ? அது இந்தியா தானே ?? ஏன் இந்த பாகுபாடு ? மகாராட்டிரம் முன்னேறாத மாநிலமா ?

மேலே என் அறிவுக்கு எட்டிய வற்றுக்கும் எனக்கு தெரிந்தவற்றுக்கும் தான் கேள்வி கேட்டுள்ளேன்.. தங்கள் பதிலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.. இவற்றுக்கான பதிலை மற்றவர்களும் எழுதலாம்..

நான் தமிழ் இன வெறியன் இல்லை. உலகை ஆண்ட தமிழினம் வீழ்ந்து கிடப்பதை எண்ணி வேதனைப்படும் பலருள் ஒருவன். 5000 வருட தமிழன் என்கிற அடையாளம் மறந்து இந்தியன் என்கிற போலி அடையாளத்தை மறுப்பவன்..

இக்கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியது தமிழர்களாய் இருந்தும் 'இந்தி"ய அடையாளம் பேணுபவர்கள் தான்....

இதற்கு பதிலலித்து விட்டு என்னையும் இந்தியனாக மாற்றுங்கள்... என் தமிழ் அடையாளத்தை எப்படி தகர்ப்பது என யோசியுங்கள்...

ஒரு மனிதன் சாதி இல்லாமலும், மதம் இல்லாமலும் வாழ முடியும்..

மொழி இல்லாமல் வாழ்ந்த மனிதப்பிறவி இதுவரை இல்லை..

ஏனெனில் மொழியும் இனமும் இயற்றை அளித்தது.. அதை பாதுகாப்பது நம் கடமை.. அதை பிறர் அழிக்க நினைத்தால் வேடிக்கை பார்ப்பது மடமை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புரட்சி....சிம்பிளா அரசியல் எண்டே சொல்லியிருக்கலாம். :(

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் பைத்தியம்.... அடுத்து கெஞ்சி கூத்தாடுமாறும்.... கூறுகிறார் அவர் வழியில் அது சரியே.... கெஞ்சுவது கூத்தாடுவதும் தமிழருக்கு அழகு என்று நினைத்து விட்டார் போலும்....

ஆறு கோடி பேரை வைத்துக்கொண்டு இந்தியாவை ஆட்டி படைக்க வேண்டும் என்பது பேராசை தனம்.

ஆமாம்... அடிப்படை உரிமையைகளே இங்கு தமிழர்நாட்டுக்கு மறுக்க படுகிறது.... எனும் போது கைகொட்டி வாய் பொத்தி இருக்குமாறு கட்டுரையாளர் சொல்கிறார்.... அவருக்கு இது பழக்கமாக இருக்காலாம்...அதானால் தான் சொல்கிறோம்... இந்த இழவே வேண்டாம் என....

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் உள்ள வீர தீர தமிழர்களுக்கு ( நான் குறிப்பிடுவது சிலரை மட்டுமே ) வீரம் இருந்து இருந்தால் ஈழம் வந்து மாவீரன் பிரபாவுடன் கைகோர்த்து போரிட்டு இருக்கலாம். ஒரு மூணாயிரம் நாலாயிரம் வீரர்கள் தமிழ் நாட்டில் இருந்து வந்து போராடியிருந்தால் எதோ அதில் இந்தியர்களும் இருக்கிறார்கள் என்று ஒரு வேலை இந்தியா போரை தடுக்க முயற்சித்து இருக்கலாம் . அல்லது இந்த போரிலேயே வென்று ஈழம் அமைத்தும் இருக்கலாம் . ஒரு வருடம் முன்பு தானே போரே நடந்தது. அப்போது என்ன இப்போது பேசுபவர்கள் எல்லாம் சின்ன வயதிலா இருந்தார்கள் ???

காலதிகாலம் இந்தியா எனும் தேசம் அமையும் முன்பு.... ஈழத்திற்கு சிக்கல் என்றால் தமிழகத்தில் இருந்து படைகிளம்பியது தொழருக்கு செலட்விவ் அம்னிசியா போல் மறந்துவிடுகிறார்... ஏன் இப்போது படை திரட்ட முடியவில்லை குறுக்கே நிற்பது யார்... என்பது முதலில் அவருக்கே தெரியாது போலும்...... ஆம் தோழரே தமிழர் நாட்டுக்கு என்று ஒரு படை தேவை...

பொந்தியா துண்டு துண்டாய் சிதறினாலும் ஈழம் பிறக்க வழி உண்டு

உலகத்துல என்ன நடக்குது எண்டு தெரியாம வாழ்ந்து கொண்டு ஈழப்பிரச்சினையில் மூக்கை நீட்டும் விளக்கம்குறைஞ்ச தமிழ்நாட்டுகாறருக்கு பச்சை மட்டை அடி குடுக்கோனும்.. நித்திரையில இருந்து எழும்பி கனவுக்கும் நிஜத்துக்கும் வித்தியாசம் தெரியாம உளருவது போலத்தான் இருக்கு உங்க கதைகள்... :(

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு எடுத்தோம் கவித்தோம் என இந்தியா ஆதரவளித்தால் இலங்கை சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் முழு கதவை திறந்தால் முதல் அடி தமிழ் நாட்டு மண்ணும் மக்களும் தான் தமிழனே. அப்போதும் ஏதாவது வியாக்கியானம் பேச வருபவர்கள் நிறையவே உள்ளனர்.

திட்டமிட்டு அணு உலைகளை தமிழர் நாட்டில் நிறுவிட்டு வடநாட்டன்கள் பாதுகாப்பாக உள்ளது இதன் மூலம் புலனாகிறது....

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க இருக்கும் ஒரே சக்தி இப்போது இந்தியா மட்டுமே.

ஆமாம் ஒட்டு மொத்த தமிழினத்தையும் ஓல் சேலில் வாங்கிவிட்டார்கள் அல்லவா???

அவனின்றிஒரணுவும் அசையாது... என்ற மாய பிம்பத்தை கட்டுரையாளர் வரைய முனைகிறார்...

இவனுங்களுக்கு தனக்கு கீழே வலிமைகுறைந்த யாராவது நன்றாக இருந்தால் பிடிக்காது..நன்றாக அல்ல மூன்று வேளை நன்றாக உண்டாலே இந்தி அடிப்பொடிகளுக்கு வயிறுவாயெல்லாம் எரிய ஆரம்பித்துவிடும்..அதுவும் தமிழனாக இருந்தால் சொல்லவே வேண்டாம்..ஆரிய இந்தி பார்பனதின் புத்தி அதுதானே? இல்லையென்றால் இந்த நாட்டை சுற்றி ஒருத்தனாவது இவர்களை சப்போர்ட் பண்ணுகிறார்களா..பாருங்கள்..சுற்றிலும் எதிரிகள்.. இதுதான் இவர்களுடைய வெளியுறவு கொள்கையின் வெற்றி..தன் முதுகிலேயே ஆயிரம் அழுக்கை வைத்துகொண்டு அடுத்தவன் முதுகை சொறிவது..பக்கத்து நாடு நன்றாக இருந்தால் அங்கு உளவுதுறையை அனுப்பி அவன் குடியை கெடுப்பது.. அவன் சாப்பாட்டில் மண் அள்ளி போடுவது இப்படி இருந்தால் எவன் இவர்களை நம்புவான்?

எவன எங்க அடிச்சுக்கிட்டா இவனுங்களுக்கு என்ன? இவனுங்க காசுமீர் அரிப்பையே இவர்களால் தடுக்கமுடியவில்லை..ஏன் அடுத்தவனிடத்தில் தலையிட வேண்டும்?.. தனது வீரத்தை ஒரு இனக்குழுமத்திடம் காட்டும் இவர்கள் அதே போல வம்பிழுக்கும் சீனா பாகிஸ்தானிடம் காட்ட தயாராக இருக்கிறார்களா? சுண்ணாம்பு தடவி அனுப்புவார்கள் இவர்கள் பருப்பு அங்கே அவிய வாய்ப்பில்லை.. இளிச்சவாய் தமிழர்களிடம் மட்டும் தான் அவியும்.. ஈழ தமிழர்கள் செய்த ஒரே பிழை பாகிஸ்தான் போலவே.. இவர்களும் ஆங்காங்கே (தமிழ்நாட்டை தவிர்த்து) குண்டு வைத்து காட்டியிருக்கவேண்டும்.. அதை அவர்கள் செய்யாததால் தான் இவ்வளவு தெனாவெட்டு செயல்!

முதலில் இவர்களை ஈழ விடயத்தில் தலையுடுமாறு யாரும் கோரவில்லை... பாகிஸ்தான் சீனா போன்ற நாடுகளிடம் எப்படி வாலை மொத்தமாக சுருட்டி கமுக்கமாக உள்ளார்களோ அப்படி இருந்த்தல் சிறப்பு..... அவர்கள் வழியை அவர்கள் பார்ப்பார்கள் புரட்சிகர தோழர்கள் அதற்கு துணை நிற்பார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புரட்சி.... அடுத்த கட்டுரைய முத்தமிழ் வேந்தனா விட்டீங்களெண்டா அரசியலில அடுத்த படிக்கு முன்னேறலாம். :(

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தற்போது தமிழர்களுக்கு தேவைப்படுவது பக்குவமும் நிதானமும் பொறுமையும் சாதுர்யமும் தான். தனி உரிமை அல்லது சம உரிமைக்கான அனைத்து உரிமைகளும் நியாயங்களும் உண்மைகளும் இருந்தும் அது நம் இனத்திற்கு மறுக்கப்பட்டு வருகிறது . உலகிற்கே சவால் விடும் பலமிருந்த போதே நமக்கு யாரும் குரல் கொடுக்க வில்லை . இப்போது இருக்கும் கொஞ்ச நஞ்ச ஓட்டுகளையும் வெட்டி விட்டு நிராயுத பாணியாக ஈழ மக்களை நிறுத்துவது மிக மிக தவறு . இப்போது தமிழ் ஈழத்தில் தேவைபடுவது புனர் வாழ்வும் மனக்காயங்களை குணப்படுத்துதலும் தான் . அது தான் இன்றைய சூழலில் தேவையான ஒன்று . சாத்வீகமான முறையில் தொடர்ந்து முயற்சிப்பதே நன்று..

அதாவது தோழர் தொடர்ந்து தொண்டை தண்ணீர் வற்றும் வரை கூவி கொண்டே இருக்க சொல்கிறார்...அதாவது தலாய் லாமா கொஸ்டியை போன்று.... ஆனால் அதுவரை இனக்கலப்பு நடக்காது... எனபதற்கோ... அல்லது வேறு இனமாக மாற மாட்டார்கள் என்றோ தோழர் உத்திரவாதம் தருவாரா?

  • கருத்துக்கள உறவுகள்

சிலரின் உயிர் போனாலும் போராட்டம் மீண்டும் உயிர் பெரும். அடுத்தவர்களை குறை கூறிக்கொண்டும் மாற்று கருத்துள்ளோரை தூற்றிக்கொண்டும் கிடப்பதை முதலில் ஈழ தமிழர்கள் மாற்றிக்கொண்டு ஆக்கபூர்வமாக சிந்திப்பதே இப்போதைக்கு தேவையான ஒன்று . முதல் படியாக முகாமில் இருப்போரை மீள குடியேற்ற வைக்க போராடலாம்

அதாவது கண்ணையும் குத்திவிட்டு பிச்சை எடுக்க விடும் ஒரு இழி நிலையே இது.... இதை பார்த்தால் ராகுல் எனும் கைத்தடி தமிழர் நாட்டுககுவந்து பேட்டியளித்த நினைவு தான் வருகிறது....

நிருபர்: அய்யா... இந்தியா ஏன் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தது....???

ராகுலு: இது இப்போது முக்கியமில்லை... அவர்களுடைய மறுவாழ்வு தான் முக்க்யம்....

ஏற குறைய எல்லா ஈழம் குறித்த கேள்விகளுக்கு இதுதான் பதில்... ஏண்டா கண்ணை குத்தினீர்கள் என்று கேட்டால் பதில் வராது.... எல்லா இந்திய கைத்தடிகளின் பதிலும் இப்படித்தான் இருக்கும்....அல்லது தோழர் போன்று நாங்க குத்தாவிட்டால் பாகிஸ்தான் காரன் குத்திடுவான் ஆனால் நாங்க கொஞ்சம் வலி தெரியாம குத்தவோம்... ம்ம்ம்ம்

இந்தியா உருவானது எப்படி?

india_map.gif

ஆங்கிலேயர்கள் இந்தியா வருவதற்கு முன், இப்போது இருக்கும் இந்தியா என்ற நாடு இருந்ததா என்ற கேள்விக்கு, இல்லை என்பதே எல்லோருக்கும் தெரிந்த பதில். வட இந்தியாவை எடுத்துக் கொணடால், அதன் 1800 ஆண்டு வரலாற்றில், ஒரே பகுதியாக இருந்ததாக வரலாறு கிடையாது. மவுரியர், கனிஷ்கர், குப்தர், அர்ஷவர்த்தனர், சுல்தான்கள், பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர். தனித்தனி நிலப் பகுதிகளில், தனித்தனி ஆட்சிகளே நடந்தன. ஒரே குடையின் கீழ் பெரும் நிலப்பகுதி கொண்டு வரப்பட்டபோது கூட, தன்னாட்சிகளை அழித்து விடவில்லை.

மராத்தியை மய்யமாகக் கொண்ட மத்திய இந்திய பகுதி, தக்காணிப் பிரதேசம் என்று அழைக்கப்படுவ தாகும். இங்கும், தனித்தனிப் பிரதேசங்களும், தனித்தனி ஆட்சிகளுமே நடந்திருக் கின்றன. மராத்தி, ஒரிசா, கன்னடம் மற்றும் ஆந்திரப் பகுதி களைக் கொண்ட இந்தத் தக்காணப் பிரதேசத்தில் சாத வாகணர் என்ற ஆந்திரர்கள், சாளுக்கி யர், ராஷ்டிரகூடர், கங்கர், கடம்பர் என்று பல் வேறு வம்சத்தினரின் ஆட்சி கள், தனித்தனிப் பகுதிகளில் நடந்தன.

13 ஆம் நூற்றாண்டில், வட இந்தியாவி லிருந்து, மொகலாயர்கள் படை எடுத்து வந்து, தக்காணத்தின் வடபகுதியைக் கைப்பற்றினர். அப்போது தக்காணத் தென்பகுதியில் விஜயநகரப் பேரரசு இருந்தது. இது, மத்திய இந்தியாவின் நிலை என்றால், தென்னிந்தியாவின் வர லாறு என்ன? சேரர், சோழர், பாண்டியர், களப்பிரர், பல்லவர் மற்றும் குறுநில மன்னர்களின் ஆட்சிகளுக்குட்பட்ட, தனித் தனிப் பிரதேசங்கள்தான் இருந்தன. இந்திய வரலாற்றில், பெரும் நிலப் பகுதியைக் கைப்பற்றி, பல தனி யாட்சிகளை ஒழித்து - ஒரு முக ஆட்சியை உருவாக்கியவர்கள் மொக லாயர்கள் தான்!

மொகலாயர்கள் பேரரசு நடந்த காலத்தில்தான் பார்ப்பனர்கள் நாடு முழுவதும், சமூக அரங்கில் தங்கள் ஆதிக்கத்தை நிலைப்படுத்திக் கொண் டார்கள். இந்தியாவில் வாழ்ந்த முஸ்லிம் அல்லாத பல்வேறு இனக் குழுக்களை, பார்ப்பனர்கள் தங்கள் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வந்ததும் இந்தக் காலத்தில் தான். முஸ்லிம் அல்லாத எல்லோரையும், மொகலாய மன்னர்கள் ‘இந்து’ என்று கூறியதும், ‘இந்து’ என்ற பெயர் வழக்கில் வந்ததும், அக்காலத்தில் தான். சமஸ் கிருத சுலோகங்களையும், வேதங்களை யும் பார்ப்பனர்கள், தங்கள் சுயநலச் சுரண்டலுக்கு ஏற்ப திருத்தி அமைத்துக் கொண்டதும் அப்போதுதான்.

அப்போதும் தமிழ்நாடு மொக லாயர்கள் ஆட்சியின் கீழ் வரவில்லை. அத்தகைய மொகலாயப் பேரரசுகூட, அவுரங்கசீப்புக்குப் பிறகு வீழ்ந்து விட்டது. அதன் பிறகு 66 ஆண்டு களுக்கு, இந்தியத் துணைக் கண்டத்தைக் கட்டி ஆளும் ஒரே மய்ய அரசு எதுவும் உருவாகியதில்லை. ஆங்கிலேயரின் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பெனிதான் இங்கே குறி வைத்தது. இந்த வர்த்தகக் கம்பெனி உருவாக்கப் பட்ட நாள் 1.12.1600. இந்திய அரசர் களிடம் உரிமை வாங்கிக் கொண்டு, கடற்கரை ஓரமாக தங்களது வர்த்தகக் குடியேற்றங்களை இவர்கள் ஏற் படுத்திக் கொண்டனர். கி.பி. 1612 இல் முதன்முதலாக சூரத்திலும் தொடர்ந்து மசூலிப்பட்டிணம் (1616), அரிகர்பூர் (1633), சென்னை (1640), பம்பாய் (1669), கல்கத்தாவிலும் (1686) வர்த்தகக் குடியேற்றங்களை நிறுவினர்.

வர்த்தகம் செய்ய வந்தவர்கள், நாடு பிடிக்கும் ஆசையை விட்டு விடுவார் களா? இந்தக் கம்பெனி வெறும் கை யுடன் வந்துவிடவில்லை. தனக் காக ஒரு கடற்படையை வைத்துக் கொள்ளவும், தேவையான சட்டங்களை இயற்றிக் கொள்ளவும் பிரிட்டிஷ் ராணியிடம் உரிமை பெற்றிருந்தது. முதலில் மேற்கு வங்கத்தில் உள்ள சிட்டகாங் பகுதியைத் தாக்கி தோல்வி கண்டார்கள். பிரிட்டிஷ் கம்பெனி நாட்டை விட்டே வெளி யேற வேண்டும் என்று உத்தரவு போட்ட அவுரகசீப் மரணமடைந் தார். (கி.பி.1707) பேரரசு சிதைந்து, தனித்தனி ஆட்சிகள் உருவானது. தனது அதிகாரத்தை உறுதிப் படுத்த நேரம் பார்த்துக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களுக்கு நல்ல வாய்ப்பாகி விட்டது.

ராபர்ட் கிளைவ், ஆற்காடு பகுதியைப் பிடித்தார் (கி.பி.1749) தொடர்ந்து 12 ஆண்டுகள் போர் நடத்தி தென்னிந்தி யாவின் பல பகுதிகளைப் பிடித்தனர். கருநாடகப் போர்கள் மூலம் ஆந்திரத் தின் பெரும் பகுதியைக் கைப்பற்றினர். வெற்றி களைக் குவித்த ராபர்ட் கிளைவ் வடக்கே போனார். பிளாசி யுத்தம் நடத்தினார்; அதில் வங்கம் வீழ்ந்தது. அதைத் தொடர்ந்து ஒரு நூற்றாண்டில், படிப்படியாக ஆங்கிலேயர்கள் கைப் பற்றிய பல்வேறு பகுதிகள்தான் இந்தியா. ஆங்கிலேயர் ஆட்சி செய்த இந்தியாவில், இன்றைய ஆப்கானிஸ்தான் நாட்டின் பெரும் பகுதியும், பர்மாவும் (இன்றைய மியான்மர் நாடு) இலங்கையும் அடங்கி இருந்தது.

அப்போது இலங்கை ஒரு மாவட்ட மாகக் கூட அங்கீகரிக்கப்படவில்லை; ஒரு வட்டமாகவே கருதப்பட்டு, அதன் நிர் வாக அலுவலகமே தமிழநாட்டில் தான் இருந்தது. இன்றைய பாகிஸ் தானும் பங்களாதேசும் அன்றைய ‘இந்தியா’ தான். இப்போதுள்ள வட கிழக்கு மாநிலங்களோ, காஷ்மீரோ அன்றைய இந்தியாவில் இல்லை. ஆக, 3000 ஆண்டு கால வரலாற்றில் - தனித் தனிப் பகுதி களாக நிலவிய தேசங்களை - துப்பாக்கி முனையில் மிரட்டி, ஆங்கிலே யர்களால் உருவாக்கப்பட்ட நாடுதான் ‘இந்தியா’.

நன்றி தோழர் விடுதலை ராஜேந்திரன்

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ தமிழர்களுக்கு எடுத்தோம் கவித்தோம் என இந்தியா ஆதரவளித்தால் இலங்கை சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் முழு கதவை திறந்தால் முதல் அடி தமிழ் நாட்டு மண்ணும் மக்களும் தான் தமிழனே. அப்போதும் ஏதாவது வியாக்கியானம் பேச வருபவர்கள் நிறையவே உள்ளனர்.

ஏன் இப்ப மட்டும் தமிழ் நாட்டு தமிழன் அடிவாங்காமல் சுதந்ந்திரமாகவா இருக்கிறார்கள். எத்தனை மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் மானபங்கப்படுத்தபட்டுள்ளார்கள். ரவுண்டு கட்டி சிங்கள இராணுவம் தாக்குகிறான். மத்திய அரசு ஒரு வார்த்தை கூட கெட்கவில்லை. இந்த லட்சணத்தில் சீன, பாகிஸ்தான் தாக்கினால் மட்டும் தமிழ் நாட்டை மத்திய அரசு காப்பாற்றி விடுமாக்கும்.உங்களை நீங்களே ஏமாற்றி கொள்கிறீர்கள்? அதற்கேற்ற இழிச்சவாய் தலைமைகளையும் தமிழ் நாடு தன்னகத்தே கொண்டுள்ளது. அணுக்குண்டு விழுந்தாலும் கவிதை எழுத வல்ல தானை தலைவர் உள்ள போது தமிழ் நாட்டு மகள் ஏன் கவலை பட வேண்டும்?? :(:(

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் உள்ள பல்வேறு தனித்த தேசிய இனங்களும் உலகமயத்திடமிருந்து தற்காத்துக் கொள்ள தனது சொந்த தேசிய இனத்தின் அடையாளத்தை மீட்டுக் கொள்ள போராட்டம் நடத்தத் தொடங்கி அந்த போராட்டம் ஒருவேளை ஒருங்கிணைக்கப்பட்டால் தான் இந்தியப் புரட்சி என்பது சாத்தியமாகும். இது நடக்கும் செயலா? ஒரே இந்தியா என்று பேச்சில் இருக்கிறதே தவிர செயலில் எங்காவது இருக்கிறதா? கர்நாடகம், கேரளா, ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் தமிழகத்தை வேறு நாடாகத் தானே பார்க்கின்றன? தமிழகத்துக்குரிய உரிமைகளை மறுக்கின்றன. இப்படி இருக்கையில் அவர்களை இணைத்துக் கொண்டு புரட்சி நடத்துவது சாத்தியமா..? அண்டை தேசிய இனங்கள் நம்மிடம் சண்டையிட்டு வந்தபோது அதனைத் தடுக்க வேண்டிய இந்திய அரசு வேடிக்கை பார்ப்பது தானே வாடிக்கை. இந்நிலையில் இந்தியா என்பது வேறு எங்கு இருக்கிறது? நிஜத்தில் செய்லபடுவது ‘இந்தி’யா தானே..?

இதற்கு மாற்றாக தமிழக மக்களின் அரசியல் நிலை எதுவாக இருக்க வேண்டும்..? தமிழ்த் தேசிய இனத்தின் தன்னுரிமையைப் பாதுகாப்பதாகவும், தமிழ் இனத்தை உலகமயப் பணக்காரனுக்கு மட்டுமின்றி தில்லிக்காரனுக்கும் விற்கும் இந்தியனுக்கு எதிரானதாக புரட்சிகரத் தமிழ்த் தேசிய அரசியல் நிலையைத் தான் நாம் முன்னெடுக்க வேண்டும்.

நல்ல நிதானமான் பதில்கள் புரட்டிகர தமிழ்தேசியன்....

தென் இந்தியர்கள் இந்தியாவை முதலில் இரண்டு கூறுகளாக பிரிக்கவேண்டும்.

அதன்பின் வந்தேறு குடிகளான வட இந்திய ஹிந்தி வெறியர்களை (பயங்கரவாதிகளை) அவர்களது சொந்த இடங்களுக்கு விரட்டிய பின்னர், வட இந்தியாவை தமக்குள் பங்குபோட்டு தனித் தனி நாடுகளை அமைக்கலாம். இதுவே ஆசிய அமைதிக்கு அவசியம்.

தமிழ்நாட்டு தமிழர் தான் இந்தியாவை தூற்றுவதில் மற்றவர்களை வழிநடத்த வேண்டும். இந்தியத்தை காலில் போட்டு மிதிக்க வேண்டும்.

காரணம் வட இந்திய பயங்கரவாதிகளால் தென் இந்தியருக்கும், குறிப்பாக அமைதியை விரும்பும் தமிழினத்துக்கும் மோசமான அவச்சொல் ஏற்படுகிறது.

வட இந்தியர், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள், வந்தேறு குடிகள், போர்க் குற்றவாளிகள், ....., ... ...

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சி.... அடுத்த கட்டுரைய முத்தமிழ் வேந்தனா விட்டீங்களெண்டா அரசியலில அடுத்த படிக்கு முன்னேறலாம். :(

மெயின் கிரோவை கணக்கில் எடுக்கும் போது சைடு ஆக்டரை கணக்கில் எடுக்க முடியாமல் போனது தோழரே மதிவனகு... அதற்காக வருத்தபடாதீர்கள்...தாங்கள் வாரும் விவாதம் செய்யலாம்...

மெயின் கிரோவை கணக்கில் எடுக்கும் போது சைடு ஆக்டரை கணக்கில் எடுக்க முடியாமல் போனது தோழரே மதிவனகு... அதற்காக வருத்தபடாதீர்கள்...தாங்கள் வாரும் விவாதம் செய்யலாம்...

அவர் விவாதத்துக்கு வருவதா...?? யாரையாவது செறிவதும் ஓடி ஒளிவதும் மட்டும் தான் அவருக்கு வரும்...

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியனை எமது பிரச்சனையில் மூக்கை நுளைக்காமல் தடுப்பதுகக்க இப்ப உள்ள ஒரே வழி நாம் இலங்கை அரசோட சேர்ந்து எமது பொருளாதரத்தை கட்டி எழுப்புவதுதான்.போராட்டகாலத்தில் மேற்க்கொன்ட புறக்கனிப்பு இப்ப சாத்தியம் இல்லை.இப்ப உள்ள உலகத்தில பலம் தொழில்நுட்பமும் பொருளாதரமும்தான்.இல்ங்கை அரசோட சேர்வது என்பது அரசியல் இல்லை.உங்கள் நிறுவனங்களை நீங்கள் வாழும் நாட்டில் சட்டபூர்வமாக பதிந்தால் நீங்களும் வெளி நாட்டு நிறுவனம்தான்.உங்களுக்கு அந்த நாட்டு குடியுரிமை இருந்தால்.

அரசியலை கொஞ்சம் கிடப்பில போட்டுவிட்டு மக்களின் உடனடி மற்றும் அத்தியாவசிய தேவைகளை பற்றி கொஞ்சம் சிந்திப்போமா.

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் தமிழ் பைத்தியம் இந்தியதின் சார்பாக நாசுக்காக வாக்களிப்பு நடத்தியுள்ளார்... அவருக்கு ஒரு வேண்டுகோள் ....

1) இந்தியா இல்லாமல் ஒர் அணுவும் ஈழத்தில் அசையாதா?(சர்வதேச அரசியல் ஈழத்தவர்க்கு யாரும் தெரியாது பாரும்)

2)இனியும் இந்தியத்தின் உதவி வேண்டுமா? ( அதாவது கொத்தாணி குண்டுகள் விச வாயு என )

3)ஆம் இந்தியாதான் எங்கள் கண் கண்ட தெய்வம்....

இப்படித்தான் தோழரே வாக்களிப்பு நடத்தவேண்டும்.... இதில் இனம் ... ஈழதமிழினம் மலெசிய தமிழினம் ... தென்னாப்பிரிக்க தமிழினம் என்று வேறுபாடு இல்லை இது அனைவருக்குமான பிரச்சனை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.