Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் விருதுகள் விழா 2011 - நேரடி ஒளிபரப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தொலைக்காட்சிகளில் முதல்முறையாக...!

:wub:

-

-

-

யாழ்விருதுகள் விழா.. நேரடி ஒளிபரப்பு.. உங்கள் யாழ் டிவியில்..!

-

-

-

காணத்தவறாதீர்கள்..!!!

:icon_mrgreen:

-

-

-

a2251851-73-love hina.gif?d=1230832475

  • Replies 464
  • Views 25.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

காத்திருக்கின்றோம்! காத்திருக்கின்றோம்!! :rolleyes: :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பான யாழ் நேயர்களே.. தாய்க்குலங்களே.. :wub:

இது உங்கள் அன்பு அறிவிப்பாளன் இசைக்கலைஞன்.. :icon_mrgreen:

எங்களின் யாழ் உறுப்பினர்கள் மாண்புமிகு தமிழ்சிறி அவர்களும், மாண்புமிகு கோமகன் அவர்களும் எவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் இவ்விழாவை ஒழுங்குபடுத்தியிருக்கிறார்கள் என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். :rolleyes:

இதோ இப்போது நான் மண்டப வாசலில் நின்று கொண்டிருக்கிறேன்.. என்னுடன் இணைந்து இவ்விழாவை வழங்க யாராவது ஒரு தாய்க்குலம் முன்வரலாம்.. :wub: ஒன்றுக்கு மேற்பட்ட தாய்க்குலங்கள் முன்வரும்போது குலக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்..! :rolleyes:

யாருமே முன்வராதபோது ஒண்டிக்கட்டையாகவே இவ்விழாவை நடத்த வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்படும் என்பதையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்..! :o

இதோ எமது உறுப்பினர்கள் தத்தமது கணவர், மனைவி(யர்), குழந்தை குட்டிகள், தாத்தா பாட்டிமார், பேரன் பேத்திகளுடன் விழா அரங்கத்துக்குள் குவிந்து கொண்டிருக்கிறார்கள்..! :wub:

இத்தருணத்தில், எமது ஒருங்கிணைப்பாளர்கள் இம்மண்டபத்தை முதன்முதலில் பார்வையிட வந்தபொழுது இம்மண்டப மேலாளர் இம்மண்டபத்தின் பெருமைகளை எடுத்துரைத்த காணொளியை.. இதோ உங்கள் எல்லோருக்குமாக.. மேடையின் பிரம்மாண்டத் திரையில் ஒளிபரப்புகின்றோம்..! <_<

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு ஒளிபரப்பு தெளிவில்லாமல் இருக்கு தயவு செய்து சரிபார்க்கவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி.. நன்றி.. நன்றி..

மீண்டும் உங்களுக்காக.. மண்டபத்தின் உள்ளிருந்து.. :wub:

பல முக்கியமான விருந்தாளிகளும் இவ்விழாவில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்..! அவர்களைப் பற்றிய விவரங்களெல்லாம் விருதுவழங்கும் நேரத்தில் அறிவிக்க இருக்கிறோம்.. பெரும்பாலானவர்கள் வந்துவிட்டார்கள்..! சிலர் தமது கறுப்புப் பூனைகளுக்கு பிஸ்கட் போட நேரமாகிவிட்டதால் சிறிது நேரம் கழித்து மண்டபத்தை வந்தடைவார்கள் என எமக்கு அறியத் தந்துள்ளார்கள்..! :huh:

இதோ இன்னும் சிறிது நேரத்தில் நிகழ்ச்சி ஆரம்பமாகப் போகின்றது.. நமது அரங்கு பெரும்பாலும் நிறைந்துவிட்டது..

பிரான்சிலிருந்து, ஜேர்மனியில் இருந்து, லண்டன், சுவிஸ்,.. அவ்வளவு ஏன்.. கனடா, அமெரிக்காவிலிருந்து கூட எமது உறவுகள் இதோ இங்கே குவிந்திருக்கிறார்கள்..!

எங்கள் விசுகு அண்ணா குடும்பத்துடன் பிரான்சிலிருந்து வந்துள்ளார்.. :icon_mrgreen: அவருடன் இப்போது பேசுவோம்..

"வணக்கம் விசுகு அண்ணா.."

"வணக்கம்.. வணக்கம் தம்பி.."

"பிரான்சிலிருந்து வந்திருக்கிறீர்கள் அண்ணா.. நன்றிகள்"

"ஏன் தம்பி நன்றி.. இது என் குடும்பம் மாதிரி.. பார்க்கலாம்.."

" என்னது பார்க்கலாமா? எதைப் பார்க்கலாம்?"

" நிகழ்ச்சியைப் பார்க்கலாமெண்டு சொன்னன்.. மணிரத்தினம் மாதிரி.." :wub:

"ஓ.. சரி.. சரி.. நேரத்தை ஒதுக்கி எம்முடன் அளவளாவியதற்கு நன்றிகள் அண்ணா"

" நன்றிகள் தம்பி" :wub:

அடுத்து மண்டப வாசலில் ஒருவர் நின்று வாயிலும் மூக்கிலுமாகப் புகை விட்டுக்கொண்டிருக்கிறார்.. அவரை இப்போது சந்திப்போம்..! :lol:

லண்டன்காரர்கள் நாங்கள் இருக்கிறோம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்க்கு விருந்தினர்களாக வந்த நீங்கள் பேசாமல் சாப்பிட்டு விருதை வாங்கிகொண்டு போங்கள்... வயதான காலத்தில் கஸ்ரப்படவேண்டாம்.. :icon_mrgreen:

தொலைகாட்சி எந்த அலைவரிசையில் ஒலி ஒளிபரப்பாகின்றது நானும் நிகழ்வில் கலந்து கொள்வதாயின் எப்படி வருவது ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லது நேயர்களே..

எமது கள உறுப்பினர் தமிழ் அரசு அவர்களும் இங்கே வருகை தந்துள்ளார்கள்.. மண்டபத்தின் உள்ளிருந்தே குறுஞ்செய்திமூலம் எமக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளார்கள்..! அதாவது நேரடி ஒளிபரப்பு தெளிவாக இல்லையென்று..! அவர் தனது மூக்குக் கண்ணாடியை மறந்துவிட்டு வந்துவிட்டார் என நினைக்கிறேன்..! :lol:

இவருக்கு உதவிட நமது கள் உறுப்பினர் சுஜி அவர்கள் தனது இரண்டாவது சோடாபுட்டி கண்ணாடியைக் கொடுத்து உதவ அன்புடன் முன்வந்திருக்கிறார்..! :icon_mrgreen:

நேயர்களே.. எமது யாழ் உறுப்பினர்கள் எவ்வளவு ஒருவருக்கு ஒருவர் பாசம் வைத்தவர்கள் என்பது இதிலிருந்தே வெட்ட வெளிச்சமாகிறது அல்லவா.. :wub: சுஜி எங்கிருந்தாலும் மேடைக்கு அருகில் வந்து தமிழ் அரசுவிடம் மூக்குக் கண்ணாடியைத் தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..! :lol:

மூக்கு கண்ணாடி இல்லை மூக்கையே உடைச்சுப்போடுவன்.. ஒருதனும் இந்த மண்டபம் வாசலில் நிற்க்கப்படாது சொல்லிப்போட்டன் எல்லோரும் ஓடிப்போயிடவேண்டும் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போது மறுபடியும் மண்டப வாசலில்..

இதோ இங்கே நமது விழா ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்சிறியும், கோமகனும்.. :rolleyes:

"வணக்கம் தமிழ்சிறி.. வணக்கம் கோமகன்.."

(கோரசாக) "வணக்கம்.. வணக்கம்"

"விழா ஏற்பாடுகள் எல்லாம் எப்படி இருக்கிறது?"

தமிழ்சிறி: விழாவை எமது வீட்டு விழாமாதிரி ஏற்பாடு செய்திருக்கிறோம்.. நேயர்கள் காலம்தாழ்த்தாது வந்து கலந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்..!" :wub:

"கோமகன்.. உங்களின் கருத்து?"

கோமகன்: இது ஒரு குடும்ப விழா.. குடும்ப விழாக்களில் பார்த்திருப்பீர்கள் காலடியில் புகையை வெளிவிடுவார்கள்.. அந்த இயந்திரம் இன்னும் வந்து சேரவில்லை.. அதனால் நான் இப்போது மூக்காலும் வாயாலும் என்னால் முடிந்த அளவுக்கு வாசலில் புகை செய்துகொண்டிருக்கிறேன்.." :wub:

"ஆகா.. இதுவல்லவோ பாசம்.. நன்றிகள் கோமகன்.. நன்றிகள் தமிழ்சிறி.." :D

நான் இருக்கும் நாட்டில் ஒளிபரப்பு நல்ல தெளிவாக உள்ளது விழாக்குழுவினர் கூறியபடி எமது கலாச்சார

உடையான வேட்டி தான் கட்டி கொண்டு வந்திருக்கீங்க இண்டைக்கு ஆர் உங்களுக்கு வேட்டி கட்டி விட்டவங்க

பச்சை கலர் சாறி உடன் மண்டபத்தில்;குறுக்கும் நெடுக்கும் போய் கொண்டு இருப்பவ ஆர் ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நமது கள உறுப்பினர் உலையரிசி அவர்கள்.. :o மன்னிக்கவும் கலையரசி அவர்கள்.. :( ச்சே.. அலையரசி அவர்கள் :D நேரடி ஒளிபரப்பை எந்த அலைவரிசையில் காண்பது என்று குறுஞ்செய்திமூலம் கேட்டிருக்கிறார்.. :wub:

நீங்கள் டிவி முன்னால் இருந்து சிப்ஸ் சாப்பிட்டது வரைக்கும் காணும்.. :lol: உடனடியாக லண்டன் வெஸ்ற்மின்ஸ்ரர் வந்து சென்ட்ரல் மண்டபத்தில் விழாஅவில் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்..! :icon_mrgreen:

நல்லது நேயர்களே.. விழாவை ஆரம்பிக்கும் நேரம் நெருங்கிவிட்டது.. மேடையிலிருந்து மீண்டும் உங்களுடன்.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன்காரர்கள் நாங்கள் இருக்கிறோம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்க்கு விருந்தினர்களாக வந்த நீங்கள் பேசாமல் சாப்பிட்டு விருதை வாங்கிகொண்டு போங்கள்... வயதான காலத்தில் கஸ்ரப்படவேண்டாம்.. :icon_mrgreen:

சவுண்ட விட்டாக் காணாது சுஜி இசையோடு சேர்ந்து உங்களுடைய வர்ணனையும் அட்டகாசமாக வெளிவரவேண்டும் உங்களுக்கு வெட்கம் பயம் இருந்தால் ஒலிவாங்கியை இப்படியே தந்திட்டு முன் வரிசையில போய் உட்காருங்க :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"இப்போது மங்கள வாத்தியம் முழங்க எங்கள் கனடாவின் கவி வல்வை சகாரா அவர்களும், ஜேர்மனியின் நேசமகள் சாந்தி அவர்களும் குத்துவிளக்கை ஏற்றி விழாவை ஆரம்பித்து வைப்பார்கள்..!"

:lol:

(வல்வை அக்காவும், சாந்தி அக்காவும் உரையாடிக்கொண்டே மேடைக்கு வருகிறார்கள்.. அது தெளிவாக ஒலிவாங்கி மூலம் மண்டபம் முழுக்கக் கேட்கிறது..)

"என்ன சகாரா.. சாறி அந்தமாதிரி எடுப்பா இருக்கு..?" :(

"பின்ன சும்மாவே.. ஸ்காபுறோ ஏசியனில வாங்கினது.. ஐநூறு டொலர்.. சும்மாவே.." :icon_mrgreen:

"எனக்கும் ஒண்டை வாங்கியந்திருக்கலாமில்லே.. காசு குடுத்திருப்பன் தானே.." :huh:

"இருக்கலாம்தான்.. ஆனால் பிளவுஸ் ஜன்னல் எப்பிடி எண்டு தெரியாததால விட்டிட்டன்.." :unsure:

"ஓ.. சரி.. சரி.." :(

( இருவரும் விளக்கேற்றுகிறார்கள்..!) :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"இதோ.. என்னுடன் விழாவைத் தொகுத்து வழங்க வல்வை அக்கா அவர்கள் பெருமகிழ்வுடன் முன்வந்துள்ளார்கள்..!" :wub:

"அக்கா.. நீங்களும் இணைந்துகொள்ளுங்கள்..! " :icon_mrgreen:

"இத்தருணத்தில் வீணா அவர்கள் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்கள்..! பச்சை சாறியுடன் யாரோ நடமாடுவதாக.. அது கொள்ளிவால் பேயாக இருக்கலாம்.. :lol: இங்கே யாரும் பச்சை சாறியுடன் நடமாடுவதாகத் தெரியவில்லை..!" :(

  • கருத்துக்கள உறவுகள்

"இப்போது மங்கள வாத்தியம் முழங்க எங்கள் கனடாவின் கவி வல்வை சகாரா அவர்களும், ஜேர்மனியின் நேசமகள் சாந்தி அவர்களும் குத்துவிளக்கை ஏற்றி விழாவை ஆரம்பித்து வைப்பார்கள்..!"

:lol:

(வல்வை அக்காவும், சாந்தி அக்காவும் உரையாடிக்கொண்டே மேடைக்கு வருகிறார்கள்.. அது தெளிவாக ஒலிவாங்கி மூலம் மண்டபம் முழுக்கக் கேட்கிறது..)

"என்ன சகாரா.. சாறி அந்தமாதிரி எடுப்பா இருக்கு..?" :(

"பின்ன சும்மாவே.. ஸ்காபுறோ ஏசியனில வாங்கினது.. ஐநூறு டொலர்.. சும்மாவே.." :icon_mrgreen:

"எனக்கும் ஒண்டை வாங்கியந்திருக்கலாமில்லே.. காசு குடுத்திருப்பன் தானே.." :huh:

"இருக்கலாம்தான்.. ஆனால் பிளவுஸ் ஜன்னல் எப்பிடி எண்டு தெரியாததால விட்டிட்டன்.." :unsure:

"ஓ.. சரி.. சரி.." :(

( இருவரும் விளக்கேற்றுகிறார்கள்..!) :lol:

(இரகசியமாக)

இருடி நேரடி ஒலி,ஒளிபரப்பு முடியட்டும் :icon_mrgreen:

"இப்போது மங்கள வாத்தியம் முழங்க எங்கள் கனடாவின் கவி வல்வை சகாரா அவர்களும், ஜேர்மனியின் நேசமகள் சாந்தி அவர்களும் குத்துவிளக்கை ஏற்றி விழாவை ஆரம்பித்து வைப்பார்கள்..!"

:lol:

(வல்வை அக்காவும், சாந்தி அக்காவும் உரையாடிக்கொண்டே மேடைக்கு வருகிறார்கள்.. அது தெளிவாக ஒலிவாங்கி மூலம் மண்டபம் முழுக்கக் கேட்கிறது..)

"என்ன சகாரா.. சாறி அந்தமாதிரி எடுப்பா இருக்கு..?" :(

"பின்ன சும்மாவே.. ஸ்காபுறோ ஏசியனில வாங்கினது.. ஐநூறு டொலர்.. சும்மாவே.." :icon_mrgreen:

"எனக்கும் ஒண்டை வாங்கியந்திருக்கலாமில்லே.. காசு குடுத்திருப்பன் தானே.." :huh:

"இருக்கலாம்தான்.. ஆனால் பிளவுஸ் ஜன்னல் எப்பிடி எண்டு தெரியாததால விட்டிட்டன்.." :unsure:

"ஓ.. சரி.. சரி.." :(

( இருவரும் விளக்கேற்றுகிறார்கள்..!) :lol:

:icon_mrgreen: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நண்பர், அறிவிப்பாளர் இசைக்கலைஞன் அவர்களே.

தொடங்கியவர் அ டங்குவார் ...... அது வரைக்கும் யாழ் உறவுகளே இசையின் கலக்கல் கடிக்கதம்பத்தின் இன்னொரு முனையை பற்றிக் கொள்ளும் இவள் கனடாவில் இருந்து வருகை தந்திருக்கும் யாழ் நீலி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"வணக்கம் அக்கா.. இணைந்து கொண்டமைக்கு நன்றிகள்..! மேடை என்றதும் ஓடி ஒளியாத உங்கள் தனித்தன்மையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்..!" :wub:

"அன்பான நேயர்கள் எல்லோருக்கும் வணக்கம்.. எமது நிகழ்ச்சிகள் ஆரம்பமாகிவிட்டன..!"

இப்போது எமது நடுவர்களால் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கள உறுப்பினர்கள் ஒவ்வொருவராக அழைக்கப்படுவார்கள்..! முதலாவதாக.."

"கறுப்பி.. யாழ்களத்தின் பலநாள் உறுப்பினர்(கள்) கறுப்பி அவர்கள்.. மேடைக்கு வரவும்.."

(கறுப்பிக்குப் பதிலாக ஒரு கறுப்பன் மேடைக்கு வருகிறார்)

"வாருங்கள் கறுப்பி.. நீங்கள் என்றிலிருந்து கறுப்பன் ஆனீர்கள்? சரி அது இருக்கட்டும்.."

"கறுப்பிக்கு யாழ்களத்தின் முதன்மைச் செய்தியாளர் :wub: விருதினை வழங்க மோகன் அவர்களை அழைக்கிறோம்..!"

"வாருங்கள் மோகன் அண்ணா..!"

(மோகன் விருதை வழங்குகிறார்..)

அடுத்த விருதை சகாரா அக்கா அவர்கள் தனது தனிமடலைப் பார்த்து அறிவிப்பார்கள்.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இசை நிகழ்ச்சிக்கு வர கொஞ்ச தாமதமகும், மாட்டுக்கு வைக்கல் போட்டனான் இப்பதான்ன, இனிதான் புண்ணாக்கு தண்ணி வைக்கனும், அங்க மாட்டுக் கொட்டில் இருக்குதானே கட்டி வைக்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"உடையார் அவர்கள் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்கள்..! அவரின் மாட்டுக்குப் புண்ணாக்கு வைப்பதில் சிரமம் இருப்பதாக.." :unsure:

"நேயர்களே.. நீங்கள் எல்லோரும் உடையாரைச் சந்திக்க மிக ஆவலாக உள்ளீர்கள்.. அவர் வரத் தாமதம் ஆவதால் அவர் ஏற்கனவே எமக்கு அனுப்பியிருந்த ஒரு ஒளிப்படத்தை மேடையிலே இதோ உங்களுக்காக... :D

http://www.youtube.com/watch?v=j20pVOMRXKE

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் இசை இதோ எங்கள் வாசக்ப் பெருங்கூட்டத்தின் மத்தியில் அகப்பட்டு ஒரு வழியாக சிரமப்பட்டு....... மேடைக்கு அருகமையில் நிற்கின்றேன்.. கொஞ்சம் மேடைக்குச் செல்ல வழி தாருங்கள் பெரியோர்களே!

இந்த சனத்திரளின் மத்தியில் பயணித்து மேடைக்கு வருவதற்குள்ளே பெரும்பாடாகி விட்டது. இருப்பினும் விருதுகளை அறிவிக்க வேண்டிய காரணத்தினால் அவதிப்பட்டு நான் வரும்போது காலில் மிதியுண்ட நண்பர்களிடம் :blink: மன்னிப்புக் கேட்டுக் கொண்டு இதோ..... இந்த மேடையில் அடுத்து விருது வாங்க இருக்கும் பெருமகன்........

ஏதெல்லாம் எமக்கு வாசிக்க அரியதாக இருக்கிறதோ அவற்றையெல்லாம் அலாக்காகத் தூக்கிவந்து இணைத்து விட்டு மிகவும் அமைதியான புன்னகையுடன் நகர்ந்துவிடுவார். நூதனம், நுணுக்கம் "நு"ணா என்ற எழுத்திற்கே ஒரு அழகைக் கொடுத்தவர். அவருக்கு என்ன விருது கொடுக்கலாம்? ம்.... சொல்லுங்கள்........... ஆ...... அங்குயாரோ கூறுகிறார் ஆமாம் அவருக்கே உரித்தானது. :rolleyes:

இதோ அவருக்கான விருதை வழங்க மோகன் அண்ணா காத்துக் கொண்டிருக்கிறார்.

அமைதிக்கடலே எழுந்து வாருங்கள்.

வாருங்கள் நுணாவிலான்

உங்களுக்கு இந்த விருதுவிழா2011 மண்டபத்தில் வைத்து "அமைதிக்கடல்" என்ற விருதினை வழங்கி மதிப்பளிக்கிறோம். எங்கே உறவுகளே உங்கள் கரவொலி?.....

...

Edited by valvaizagara

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:D

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த விருதினை வாங்க யார் வரப்போகிறார் பொறுத்திருங்கள் இதோ இசை அடுத்த விருதிற்கானவரோடு இப்போது... :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"நன்றிகள் அக்கா.." :)

அடுத்ததாக.. வீரத்துக்கும் தீரத்துக்கும் பெயர்போன எம் ஈழமண்ணிலே அவதரித்த இளைஞன்.. தவளைக்கும் எலிக்கும் பரம வைரி.. கீபோர்டைப் பஞ்சராக்கிய எழுத்தாளன்..!

அஞ்சாநெஞ்சன் :lol: நெடுக்கால போவான்.. எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்..! :D

அவருக்கு விருதை வழங்க ஒரு தாய்க்குலம்தான் சரி.. யாழ்களத்தின் ரதியவர்கள் விருதை வழங்கக் காத்திருக்கிறார்கள்..!"

(நெடுக்ஸ் விருதைப் பெற்ருக்கொள்கிறார்..)

"நெடுக்ஸ்.. எம் கள உறவுகளுக்காக ஓரிரு வார்த்தைகள்.."

"வணக்கம் கள உறவுகளே.. உங்களெல்லோரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.. ரதி அக்காவின் கரங்களால் அஞ்சாநெஞ்சன் விருது வாங்கியதில் மகிழ்ச்சி.. என்னதான் இருந்தாலும் அவர் பெண்ணல்லவா.. என்னைப் பெற்ற தாயும் ஒரு பெண்ணல்லவா..!" (கண்களைத் துடைத்துக் கொள்கிறார்). :(

"இதுக்கு மேல என்னால முடியல்ல.. வணக்கம்.. வாறன்.." :(

"நன்றி.. நெடுக்ஸ் அவர்களே.." :blink:

"அடுத்த விருதை வல்வை அக்கா அவர்கள் அறிவிப்பார்கள்.." :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.