Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    11
    Points
    15791
    Posts
  2. தமிழ்சூரியன்

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    5
    Points
    5566
    Posts
  3. சண்டமாருதன்

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    4
    Points
    2554
    Posts
  4. மல்லையூரன்

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    3
    Points
    10836
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/18/14 in all areas

  1. இங்கே யாரும் இந்து மதத்தை அவமதிக்கவில்லை ..................தமிழன் இரத்தத்தில் ஊறியது சைவமத காலாச்சாரம் ,அவன் மதத்தால் கிறிஸ்தவனாய் இருந்தால் கூட ................கிறிஸ்தவ மதம் பரப்பப்பட்ட விதம் எல்லோரும் அறிந்ததே ..............ஆனாலும் நம் பின்பற்றும் மதத்தோடு ,நாம் வாழும் சமுதாயத்திற்கு ,ஏற்புடையவனாக ,மனிதனாக வாழ்வதே மனிதப்பண்பு ..........அந்த வகையில் ஆரோக்கியமாக விமைசிக்கப்படவெண்டிய விடயங்களை .இப்பிடி மனித மனங்களை புண்படுத்தும் விதமாக விமர்சித்தால் .இறுதியில் மனித மனங்கள் உடைந்து துன்புறும் ...........எம் தமிழீழ விடுதலைபபாதையின் தூரம் அதிகரித்து உள்ள இந்த நேரத்தில் ...நாம் இப்பிடியான அர்த்தமற்ற ,தேவையற்ற விடயங்களை திணிப்பது ..........எம் விடுதலைப்பாதை அண்ட வெளியின் எல்லையை கடந்துவிடும் .....................மீண்டும் சமாதானம் .மனிதர்களாகிய நாம் பலவீனர்கள் .பாவம் செய்வோம் ....மறப்போம் ,மன்னிப்போம் .தொடர்ந்து பயணிப்போம் .......................விடுதலைத்திசை நோக்கி
  2. உங்களுக்கு என்னதான் பிரச்சனை என்று புரியவில்லை. இந்துமதமோ சைவமோ அவ்மததில் உள்ளவர்கள் அம்மதத்தல் எவருக்கும் சமமானதில்லை. இதே மதங்கள் தான் இன்ன சாதிதான் கோயிலுக்குள் வரலாம் பூசை செய்யலாம் இன்மொழியில் தான் பூசை செய்யலாம் அதற்கும் மேலாக தீண்டத்தகாத கடவுள்கள் என்று கோயிலுக்கு வெளியே மனிதர்களை மட்டுமல்ல கடவுள்களையும் வைத்துள்ளது. இந் நிலையில் யாருக்காக மதம் மற்றுவது சரி அல்லது பிழை என்று கருத்துச் சொல்லவேண்டும்? இந்து என்றாலே அதன் கீழ் யாரும் சமமாக இருக்கமுடியாது இந்நிலையில் எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டுபோய் மதம் மாற்றுவது சரி பிழை என்று சொல்வது? சுத்த கூறுகெட்ட தனமா இருக்கு உங்கள் கேள்விகள். நீங்களும் நானும் ஒரு மொழிபேசுவதால் தமிழர் எனலாம் இல்லை ஒரு பிரதேசத்தில் வாழ்வதால் ஒரு இடத்துக்குரியவர் எனலாம் ஆனால் நீங்களும் நானும் அல்லது எவரும் நாங்கள் இந்த அல்லது சைவம் என்ற பொதுப்படைக்கு கீழே வரமுடியாது அதை புரிந்துகொள்ளுங்கள். அங்கே சாதிகள் எற்றதாழ்வுகள் வந்து தடுத்துக்கொள்ளும். இந்நிலையில் மதம் மாற்றுவது பிழை என்று யாருக்காக சொல்லவேண்டும் உங்களுக்காகவா இல்லை வேறு யாருக்காகவுமா? மானுட நேயத்தை சமத்துவத்தை விரும்பும் எவனும் இந்துமதத்தில் இருந்து என்னுமாரு மதத்துக்கு ஒருவன் செல்வதை தடுக்கமாட்டான். இந்து மதமே எம்மை அழித்து சிதைத்து சின்னாபின்னமாக்கும் நிலையில் அடுத்தவனைப்போய் நீ செய்வது பிழை என்பதற்கு என்ன அடிப்படை யோக்கியம் இருக்கு? மதம் மாற்றுபவராகட்டும் இல்லை மாறுபவராகட்டும் அது அவர்கள் பிரச்சனை. அதில் கருத்துச்சொல்லும் அடிப்படைத்தகுதி எனக்கிலல்லை ஏனெனில் நான் பிறப்பால் சைவசமயம் சார்ந்தவன். தூரதிஸ்டவசமாக மானுட விரோத மததில் பிறந்துவிட்டதால் எந்தவிதத்திலும் என்னுமொருவர் மீது குற்றம் காணும் தகுதி எனக்கில்லை. நீங்கள் வேண்டுமானால் மதம் மாற்றுவது பிழை என்று ஆரம்பித்த சண்டையை இழுத்து இரண்டு தரப்பும் அங்கு அடிபட்டு சாக இங்க இருந்து புலிக்கு முதல் விசில் அடித்தது போல் விசிலடியுங்கள்.
  3. இந்துத்துவத்துக்கு இன்னுமொரு பெயர் பார்ப்பனப் பயங்கரவாதம். ஈழத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் இந்தப் பயங்கரவாதத்தை உணர்பவர்கள் இல்லை. அதில் நீங்களும் ஒருவராக இருக்கலாம் பெரும்பாலானவர்கள் ஏதோ ஒரு கோயிலுக்குப் போன்றார்கள் தமது ஆத்ம சாந்திக்கு வழிபடுகின்றார்கள். இது ஆன்மீகம் அல்லது இறை நம்பிக்கை. அதில் நம்பிக்கை உடையவராக நீங்கள் இருக்கலாம். இந்துத்துவம் என்பது மதம் மற்றும் அதுசார்ந்த அரசியல். அங்கே ஆன்மீகத்துக்கு இடமில்லை. இந்துத்துவம் மனு தர்மத்தைப் போதிக்கின்றது. வருணாசிரமதர்மத்தைப் போதிக்கினறது. சதீயத்தை வரையறை செய்கின்றது. ஏற்றதாழ்வை சட்டமாக்குகின்றது. இதனடிப்படையில் இந்தியாவில் இன்னும் 17 இல் இருந்து 20 மில்லியன் மக்கள் தீண்டத்தகாத மக்களாக தலித்துக்களாக அவர்களது வாழ்வு நரகமாக்கப்பட்டுள்ளது. இந்துத்துவத்தின் பிரதான இயங்குசக்தியானது இனங்கள் உருவாவதை தடுத்தல் சமூகம் சமநிலைப்படுவதை தடுத்தல். ஏற்றதாழ்வு சமநிலைப்படுவதை தடுத்தல். இனத்துக்கான தேசீயம் உருவாவதை தடுத்தல். - இது எவ்வாறு நிகழ்கின்றது என்றால் சாதி இருக்கும் சமுதாயம் ஒன்றுபட முடியாது. சமூக உறவுக்குள் நெருக்கம் வராது. நீயும் நானும் தமிழன் ஆனால் நான் உன்னைத் தொடமாட்டேன் நீ திண்டத்தகாதவன் குறைந்த சாதி உன்னிடம் சம்மந்தம் வைத்துக்கொள்ள மாட்டேன என்னும் நிலையில் இந்த தமிழன் என்பதை எவன் ஏற்கப்போகின்றான்? அதற்கு என்ன அவசியம் இருக்கின்றது? இததான் இந்தியாவில் நடக்கின்றது. எந்த இனமும் விடுதலை பெறமுடியாது. ஒவ்வொரு வரும் பல தட்டுகளாக சாதிவாரியாக பிரிந்து இனத்தை இரண்டாம் நிலையில் வைத்துள்ளனர். இதுவே பிரித்தாளும் அரசியில். இந்தியாவை இந்துதுவம் ஆழ்கின்றது. யாரொருவன் இந்துவாக இருக்க முடியுமோ அவன் இனத்தை துறந்தாகவேண்டும். இனத்தேசீயத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமோ அவன் இந்துத்துவத்தை துறந்தாகவேண்டும். இது வெளிப்படையான யதார்த்தம். இந்தியாவில் குறிப்பாக பார்ப்பனர்கள் இந்திய அதிகார வர்க்கம் ஈழம் அமைவதை ஒரு தேசீய இனம் உருவாவதை என்றைக்கும் விரும்பியது இல்லை. இனிமேலும் அது விரும்பாது. பிரித்தாளும் தனது பாரம்பரிய குணத்திற்கேற்ப ஈழத்தமிழ் இயக்கங்களை பிரித்து சூழ்ச்சிகளுக்கு உட்படுத்தி ஈழத்தை சுடுகாடாக்கியது. பிரித்தாழ்வதும் மனித குலத்தை சர்வ நாசம் செய்வதும் இந்துதுவத்தின் அடிப்படைக் குணம். இந்துத்துவம் தமிழ்மொழியை நீச பாசை என்கின்றது. அதாவது தீண்டத்தகாத பாசை என்கின்றது. கடவுளுக்கு கேட்கும் மொழி சமஸ்கிருதம் என்கின்றது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் பிரசங்கம் செய்த மேடைகளை கழுவி தீட்டுக்களித்த சம்பவங்கள் எல்லாம் வரலாற்றில் பதிவாகியுள்ளது. ஈழத்தில் இந்த நிலை இந்தியா அளவுக்கு மோசமாக இருந்ததில்லை. சைவம் அதிகாரத்துடன் இருந்தது.ஆனாலும் சைவத்தை வைத்து பிழைப்புவாதம் நடத்தியவர்கள் தம்மையும் இந்துவாக தாமாக அந்தச் சகதிக்குள் தலையை கொடுத்தனர். சமஸ்கிருதத்தில் தான் மந்திரம் சொல்லவேண்டும் என்று கங்கணம் கட்டி நின்றனர் (இத்திரியில் ஒரு புத்தகத்தின் இணைப்புள்ளது அதைப் படித்தால் அதுசார்ந்து நிறைய விசயங்களை அறிந்துகொள்ளலாம்)அதாவது தமது தாய்மொழியை தாமே தீண்டத்தகாகத மொழி என்று ஏற்றுக்கொண்டனர்.இந்தியாவின் இந்துத்துவம் கட்டமைத்த சாதீகளை யாழ்பாணத்தில் சைவம் என்ற போர்வையில் ஏற்படுத்தினார்கள். இந்தியாவில் இந்துத்துவத்துக்கு பார்ப்பான் தலமையாக இருப்பதுபோல் யாழ்ப்பாணத்தில் வெள்ளார் தலமையாக இருக்க முற்பட்டனர். ஏழை எளிய மக்கள் சாதியில் தாழ்ந்த மக்கள் கல்வி கற்பதை தடுத்தனர். அரச உத்தியோகத்தில் இணைவதை தடுத்தனர். இதுதான் நாவலர் காலம். இதன் வரலாறு மிக நீளமானது. ஒரு இனம் உருவாவதை தடுக்கும் மிகப்பெரிய சக்தியாக இந்துமதம் அதன் இயங்கு சக்தி உள்ளது. சமூகங்கள் சிதைந்து சீரளிந்து பேவதற்கு இந்துமதம் பிரதான சக்தியாக உள்ளது. அதை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு இன விடுதலை என்பத எவ்வளவு வேடிக்கையானது? நீங்கள் பற்றுக்கொண்டுள்ளது இறைநம்பிக்கையிலா இல்லை அது சார்ந்த ஆன்மீகத்திலா இல்லை சைவத்திலா இல்லை இந்துத்துவத்திலா? இந்துத்துவத்தில் என்றால் இனத்தை மறந்தவிடுவது உங்கள் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட விதி. சிங்கள இனம் பௌத்தத்தை அடிப்படையாக வைத்து இனத்தின் பலத்தை கட்டியெழுப்புகின்றது. தமிழினத்தில் இந்துத்துவம் என்பது சதீய வர்கக் ஏற்றதாழ்வுகைள ஆழமாக்கி பிளவுகளை ஏற்படுத்தி இனத்தை சிதைக்கின்றது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் நேரெதிரானது. சிங்கள இனம் அதன் இன உருவாக்கம் குறித்து மதத்தை எப்படிக் கையாழ்கின்றது என்பது வெளிப்படையானது. அதே போல் இஸ்லாம் மதத்தின் பெயரால ஒன்றுபடுகின்றது. சமூக உறவுகள் நெருக்கமாகின்றது. எதிர்காலத்தில் அதன் பலம் அதிகரிக்கும். இந்துத்துவம் இதற்கு நேர் எதிர்த்திசையில் பயணிப்பது. அதன் விழைவில் இயக்க மோதல்கள் உட்பட இஸ்லாமியப் பிழவுகள் பிரதேசவாதப்பிழவுகள் அதற்கான உளவியல் அனைத்தும் இணைந்திருக்கின்றது. நீங்கள் விரும்பினால் இந்துவாக இருங்கள் இல்லையேல் சைவனாக இருந்து அதை திருத்திக்கொள்ளுங்கள் இல்லை சாதராண இறை நம்பிக்கையுள்ளவர்களாக இருங்கள் அது உங்கள் தனிப்பட்ட பிரச்சனை. ஒரு தேசீயவாதியாக இன அடயாளத்தை முன்நிறுத்தும் போத கருத்துக்கள் முரண்படுகின்றது அவ்வளவுதான்.
  4. சுண்டல், நான் எனது மதம் மேலானது என்று எங்கும் சொல்லவில்லையே. உண்மையாகவே இந்துக்களை பலாத்காரப்படுத்தித்தான் போர்த்துக்கேயரால் கிறீஸ்த்தவம் இலங்கையில் பரப்பப் பட்டது என்பதை நான் நன்கு அறிவேன். இதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. நீங்கள் மேலே மேற்கோள் காட்டியிருக்கும் என்னால் எழுதப்பட்ட பகுதி கிறீஸ்த்தவம் மேலானது என்று காட்ட எழுதப்படவில்லை. தூயவன் பைபிளில் உள்ளதென்று ஒரு கருத்தை எழுதியிருந்தார். அது தவறென்று தெரிந்ததால்த்தான் பைபிளில் உண்மையாக எழுதியிருப்பதை எழுதியிருந்தேன். அதற்காக எனது மதம் இந்து மதத்திலும் மேலானதென்று நான் ஒருபோதும் நினைக்கவோ, எழுதவோ இல்லையே. அடுத்ததாக, பைபிளில் சில இடங்களில் (குறிப்பாக ஆதியாகமத்தில்) சொல்லப்பட்டுள்ள விடயங்கள் பாதிக் கற்பனை என்றும் எழுதியிருக்கிறேன். அப்படியிருக்க, நான் எனது மதம் இந்து மதத்திலும் மேலானதென்று எப்படிச் சொல்ல முடியும் ?
  5. இந்து சமயத்தை அவமதித்து கிறீஸ்தவ ஆதரவாளராக வைக்கப்படும் கருத்துகளுக்கு நீங்கள் எந்தப் பதிலும் வைக்கவில்லை தமிழ்சூரியன்.
  6. தொடர்ந்து இந்தத் திரியை அணையாது வளருங்கள், தமிழுக்கு மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் - பலரின் மனதை புண்படுத்தும் இந்த திரி தொடரத்தான் வேண்டுமா, எத்தனையோ திரிகளை பூட்டியவர்களுக்கு, இதைப் பூட்ட ஏன் யோசிக்கவில்லை, தடையில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றீர்கள்????
  7. "எங்கள் மதம்தான் உலகிலேயே புனிதமானது" என்று கொய்யோ ..... முய்யோ .... என்று கத்துவது அப்படி என்ன புனிதம் இருக்கிறது ? என்று யாரும் கேட்டால் .... பிற மதங்களில் இருக்கும் அசிங்கங்களை காட்டுவது. இந்த காட்டுமிராண்டி தனத்திட்குதான் பெயர் "இந்து மதம்" இந்துக்களாக இருக்கும்வரை இந்த காட்டுமிராண்டி தனத்தில் இருந்து எளிதாக யாராலும் வெளிப்பட முடியாது. மனிதராக மாற நினைக்கும் எவனாலும் இந்த சாக்கடை இந்துமதத்தை பின்பற்ற முடியாது. அடிப்படை நாகரீகம் எங்கு செத்து கிடக்கிறது என்றால் ........... இங்கு இந்து கோவில் ஒன்று இருக்கிறதோ அங்குதான். பல நாடுகள் பெண்களை இந்து நாட்டுக்கு தனியாக செல்லாதீர்கள் என்று அறிவுரை வழங்கும் அளவிற்கு நாரி கிடக்கிறது. இந்த லட்சணத்தில் பாதிரியாரின் சிறுவர் துஸ்பிரயோக படங்களுடன் புனித இந்துக்கள் .
  8. திருக்குறள் சமண நூல் அல்ல என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. முதலாவது குறளே அதற்குச் சான்று. சமணத்தில் பரமாத்மாவின் இயல்புகள் திருக்குறளின் கடவுள் வாழ்த்தில் உள்ள ஓவ்வொரு குறளில் இருந்தும் விலகியது. கடவுள் வாழ்த்து சைவத்தின் பக்தி மார்க்க நெறியே. அதைவிட திருவள்ளுவர் திருக்குறளின் 3 இல் ஒரு பகுதியை காமத்திற்கு ஒதுக்கியுள்ளார். குளித்தால் உடலின் கிருமிகள் அழிந்து போம் என்று குளியாதிருக்கும் சமணர் ஒருவர் காமத்துப்பால் இயற்றினால்.... திருக்குறள், கம்பர் எழுதிய இராமாயணம், தேவார திருவாசகங்கள் என்று எண்ணற்ற இந்து / சைவ நூல்கள் தமிழை வளர்த்தது வரலாறு. இந்து மதம் ஒரு பெரிய விருட்சம். அதில் கன்னடத்தில் சிவனை வணங்குபவர்களும், வங்காளத்தில் காளியை வணங்குபவர்களும், தெலுங்கில் கிருஷ்ணனை வணங்குபவர்களும் உள்ளார்கள். வந்தேறு குடிகள் எம் மொழியை நீச பாசை என்றால் நாம் அவர்களுக்காக எம்மொழியையோ, எம் மதத்தையோ கைவிடத் தேவையில்லை. ஏனென்றால் இது வந்தேறு குடிகளின் மதமல்ல. எங்கள் ஆயிரம் முப்பாட்டர்களின் மதம். சைவத்தில் சாதீயம் மதத்தில் இல்லை. அது மனிதரில் இருக்கிறது. சைவம் ஒருவனை தாழ்ந்தவன் என்று எங்கும் சொல்லவில்லை. காஷ்மீரில் உள்ள சைவசமய சமூகத்தில் சாதி அமைப்பு இல்லை. தமிழ்நாட்டின் சாதி அமைப்பும் யாழ்ப்பாண சாதி அமைப்பும் வித்தியாசமானவை. ஆனால் இரண்டு இடங்களிலும் சைவ சித்தாந்தம் ஒன்று. அப்படியானால் சாதியின் தோறுவாய் சம‌யமா இல்லை ஏனைய சமூக காரணிகளா ? அதே நேரம் நாரீகம், கல்வி வளர்ச்சி என்பன சாதீயத்தின் கிடுக்கிப் பிடியை நன்றாகத் தளர்த்தி உள்ளன. இது சைவத்தைக் கைவிட்டாதல் நிகழவில்லை என்பதைக் கவனிக்க. இது சைவமே சாதீயத்தைப் போணுகின்றது என்பவர்களுக்கு கசப்பான விசயம். அதே நேரம் சைவத்தை விட்டு விலகிய பச்சோந்திகள் தமது சாதிப் பெருமைகள் பேசுவதையும் கவனிக்க. மதம் தேசிய அடையாளம் அல்ல. அவுஸ்திரேலிய வெள்ளை இன கிறீஸ்தவனும் அமெரிக்க வெள்ளை இனக் கிறீஸ்தவனும் தேசியத்தால் வேறு. ஆனால் அடையாளத்தால் ஒன்று. வருந்தத்தக்க உண்மை. சில சமயம் பேசாதிருத்தலின் விலை பேசுதலின் விலையவிட மிக அதிகமாக இருக்கிறது.
  9. அவ்வளவு இலகுவில் நாங்கள் ஏமாறப்போவதில்லை. எழுதும் வரைக்கும் இந்துக்களை பற்றி கேவமான கீழத்தர பொய்களை எழுதின அற்பத்தனங்கள், இனி எழுத இல்லை என்றவுடன் நான் அது இல்லை, இது இல்லை என்கிறார்கள். விவாதிக்க முடியவில்லை என்றவுடன் சொந்த குணத்தைக்காட்டி சம்பந்தருக்கு கழுதப்பால் பருக்கிய இழி குணத்தை பார்த்தோமே. ஆனால் நாங்கள் மற்றவர்களின் தலைவரை பற்றி வெளிவந்த வீடியோ படங்களை பற்றி சொல்ல வரவில்லை. நாங்கள் பார்க்கத்தெரியாத குருடுகளும் இல்லை. இந்து மத்தத்தவன் ஒருவனுக்கு அப்படியான் கேவலக் குணம் எப்போதுமே வருவத்தில்லை. மற்ற மதத்தினை இந்துக்களை அழித்தது மட்டும் என்றுமே நடக்காத சரித்திரம். உலகத்தின் மிக கொடுரமான மிருகத்தனமாக இந்துக்களை கொலைகளை செய்தவன் தான் கான்சி முகமெட். ஆனால் இந்துக்கள் என்றுமே தங்களை தாக்காதவர்களை தாக்கியதில்லை. மேலும் நாயன்மார் சரித்திரத்தில் மெய்பொருள் நாயனாரின் சரித்திரம் தனி. அது முஸ்லீம்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றதால் இங்கே எழுதுகிறேன். . தன்னை எதிரி தாக்க வந்திருக்கிறான் என்று கண்டபின்னரும் அவன தான் ஒரு சிவனடியான் என்று பொய் சொல்வதால் அவனுக்கு பாத பூசை செய்தார். அவன் முதுகில் குத்திய பின்னரும், அவன் சிவனடியான் என்று சொன்னதால் தன் மேய்ப்பாதுகாவலரின் துணையுடன் அவனை அனுப்பி வைத்துவிட்டு தான் தனியாக இறந்தார். அவ்வளவு உயர்வானது தமிழரின் வீரம். அவ்வளவு மரியாதையானது இந்து மதம். அந்த மதம், அந்த குலத்தில் பிறந்த நாங்கள். நாடில்லாவிட்டாலும், வீடில்லாவிட்டாலும் உண்ண உணவில்லாவிட்டாலும் சிங்களவருகு பினவளம் கழுவும் வேலைக்கு போக மாட்டோம். அதனால் நான் அப்படி பேசவில்லை. மேலும் சுத்த சைவனாக வாழ்நாள் முழுக்க வாழ்ந்திட்டத்தால் போராடாம் கீராட்டம் என்று நினக்கவில்லை. அதனால் கழுத்தில் சைனட் குப்பியுடன் திரியத்தக்க தன்மான்ம் என்னில் குறைகிறது. ஆனல் 146,000 மக்களை துடிக்க பதைக்க குண்டுகளால் எரித்துவிட்டு பேடிகள் போல ஐ.நா பிரேரணையை இனி திருப்ப முடியாது என்றவுடன் வெக்கம் கெட்டத்தனமாக பின்வளத்தில் கால் அடிக்க ஓடிதிருந்து காட்டி தன்னை நரியிலும் கெட்ட கோளையாக காட்டும் அளவுக்கு பேய்வாரியும் இல்லை. வீராமாக கொலை செய்தவர்கள் "மின்சாரக்கதிரை" என்று பேடிகள் மாதிரி ஓலம் போட்டு அழமால் துணிந்து நெஞ்சை நிமிர்த்தி ஐ.நாவை விசாரிக்க சொல்லி கேடக வேண்டும். இந்தியா இனி உதவ மாட்டாது என்று மறுத்த பிறக்கு இரண்டு நாளாக புதிய இந்துத்துவதை வைத்துக் கரைகிறார்கள் இங்கே. இவர்களை கேட்கிறேன் இவர்களுக்கு தெரியாதா இந்த சொல்லே 99 % மட்டக்களப்பு, ம்லையக, யாழ்ப்பாணத்து தமிழருக்கு தெரியாது என்று. இதை வைத்தா இந்தியாவை எங்களை கொண்டு மிரட்டுவித்து மின்சாரக்கதியிலிருந்து விடுவிக்காலம் என்று நினைக்கிறார்கள். எத்தனை ஓலம் போட்டாலும் புலம் பெயர் தமிழர் இனி பினவாங்கப் போவதில்லை. கடைசி நேரம். தமிழன் என்றால் குப்பி கடிப்பான். அல்லது வீரபாண்டிய கட்டப்பொமன் மாதிரி தன் சுருக்கு கயிறை தானே தன் கழுத்தில் மாட்டுவான். சிங்கள்வன் என்றால் அப்பனை அணைக்குள் வைத்து கட்டுவான். பிலிமாதள்வை, எகிலபொல கூட்டமாகின் அண்ணை தம்பி காட்டிக்கொடுப்பான. ஐ.நா பிரேரணை வருகிறது இவர்கள் எப்படி நடக்க் போகிறார்கள் என்று பார்க்கத்தான் போகிறோம். இந்துத்துவம் என்று திரும்ப திரும்ப கூறி கூன் விழுந்த கிழவிகள் மாதிரி மாரடித்து ஓலம் போட்டு கத்த போகிறார்களா அல்லது நெஞ்சை நிமிர்த்து "நாம் செய்தோம். நீ விசாரி" என்று ஐ.நாவுக்கு ரோசமாக பதில் அளிப்பார்களா என்றுதான் பார்க்கப் போகிறொம். ஆண்டாண்டு காலமாக இந்து மதத்தை திட்டுவதில் மட்டும் செய்த்திருக்கும் PhDயை பார்த்தோமே. இந்து மதத்தை திட்டுவதால் புலம் பெயர் மக்களை சலிப்படைய செய்யலாம் என்ற கனவுகளை பார்க்க போகிறோமே. வவுனியாவுக்குள் சிவசேனா வந்துவிட்டதாக அவிட்டு விட முனைந்த ஏமாற்றை பார்த்தோமே. நான் அதுவல்ல. இதுவல்ல என்று கூறி தப்பித்து ஒடப்பார்க்கும் கோளைத்தனத்தையும் தான் பார்க்கிறோமே. சம்பந்தர் களுதைப்பால் குடித்தாக திட்டும் வீரம் ஆப்கானி பாகிஸ்தானி மிருகங்கள் அசுவமேதயாகம் என்று குதிரையின் கழிவுகளை குடிக்கும் போது சொல்ல ஏன் கூசுகிறது?
  10. இல்லை. இதை இவ்வாறு எழுதினால் நன்றாக இருக்கும். நான் குளித்து சுத்தமாக இல்லை. அதற்காக அடுத்த வீட்டுக்கு போனால் குளிப்பேன் என மற்றவர்களுக்கு கூறுதல். ஆனால் அடுத்த வீட்டிலும் தண்ணி இல்லை, குளிக்க முடியாது. அங்குள்ளவர்களும் குளிக்காமல் அசுத்தமாக தான் உள்ளார்கள். அங்கும் இங்குள்ள அதே பிரச்சினை. எனவே எதற்காக போக வேண்டும்? அடுத்த வீட்டுக்கு போனால் குளிக்கலாம் என்பது பொய் தானே?
  11. இந்துத்துவம் என்டால் என்ன? தெளிவான விளக்கம் தேவை சுகன் சிங்களவன் பெளத்தவனாக[மதம்] இருந்து கொண்டு ஆட்சியில் இருக்கலாம் தமிழ்/சிங்களம் பேசும் முஸ்லீம்[மதம்] ஆட்சியில் இருக்கலாம் ஏன் தமிழன் இந்துவாக இருந்து கொண்டு ஆட்சியில் இருக்க இயலாது? இந்துத்துவ அடிப்படையில் தான் தமிழ்ர் அரசாள வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை ஆனால் ஏன் அப்படி ஆட்சியமைக்க முடியாது என்று சொல்கிறீர்கள்? மத ரீதியான பாகுபாடுகள் இல்லாமல் எல்லா இனத்தவரையும் சமமாக பாவித்தால் போச்சு.அங்கே பாகுபாட்டுக்கே இடமில்லைத் தானே! நீங்கள் முதலில் இந்துக்கள் மட்டும் தான் ஏதோ சாதி பார்ப்பதாக எழுதுனீர்கள்.இப்ப அதைப் பற்றி கதைக்காமல் இந்துத்துவம் அது,இது என்று எழுதுகிறீர்கள். ஒரு கதைக்கு இந்தியாவை தற்போது முஸ்லீம்கள் ஆண்டு கொண்டு இருந்தால் எமக்கு நாட்டை தூக்கி தந்து விடுவினமா? எமது பிரச்சனைக்கும் இந்தியா இந்துத்துவத்திற்கும் என்ன சம்மந்தம்?....இராமன் ஆண்டாலும்,இராவணன் ஆண்டாலும் இந்தியா அப்படித் தான் இருக்கப் போகுது.அதற்கும் இந்துத்துவத்திற்கு ஒரு சம்மந்தமும் இல்லை என்பது என் கருத்து. தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை.தலைவரால் கூட அனைத்து மக்களையும் ஒன்றினைக்க முடியாமல் போய் விட்டது.அதற்குள் சாதி,இந்துத்துவம் எங்கே வந்தது? எமது தோல்விக்கு காரணம் ஒவ்வொருவரதும் தனிப்பட்ட சுயநலம்.அது தான் மு.வாய்க்கால் தோல்விக்கும்,ஈழம் எடுப்பதற்கும் தடையாக இருந்தது/இருக்குமே வழிய வேறு காரணம் இல்லை உங்களைத் தவிர ஒருத்தரும் இங்கு மதவாதத்தை தூக்கி பிடிக்கவில்லை.நாங்கள் எங்கட மதத்தில் இருக்கிறோம் பகிரங்கமாக மற்றவரை மதம் மாத்த வேண்டாம் என்றே கேட்கிறார்கள்.அப்படி கேட்பது தப்பா?...அதில் எங்கே இந்துத்துவம் இருக்கிறது முதலில் சாதியை தூக்கிப் பிடித்தீர்கள்.தற்போது இந்துத்துவம் கதைக்கிறீர்கள்.இனி மேல் என்ன கதைக்கப் போறீர்களோ நான் சிவசேனாவை பின்பற்ற சொல்லி சொல்லவில்லை.அதற்கான தேவையும் இல்லை.யாழில் இருப்போர் பிற மதங்களை தாக்குகிறார்கள் என சொல்லும் நீங்கள் இந்துக்களை தாக்குவது எவ் விதத்தில் நியாயம்? இது உண்மையில் தெரியாமல் தான் கேட்கிறேன் இந்து மதத்துள் ஒரு தேசிய இனம் உருவானால் அது இந்துத்துவத்திற்கு பெருமை தானே! அது ஏன் இந்துத்துவம் அமைய விடாது என சொல்லி உள்ளீர்கள்
  12. திரி அழகாக நகர்கின்றது! பல விடயங்கள், வரலாறுகள் அனைத்தும் அலசப்படுகின்றன! பலவற்றை அறியக்கூடியதாகவும் உள்ளது! எல்லா மதங்களிலும், பலங்களும், பலவீனங்களும் உண்டு! ஏனெனில் அனைத்து மதங்களுமே, மனித வாழ்வை ஒழுங்கு படுத்தும் நோக்கில் ஏற்பட்டவையே! சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு நெறிகளைப் போதித்தது எனது மதம்! அது எனது மனதை ஒழுங்குபடுத்தும் நோக்கில் போதிக்கப்பட்டது! பிரமச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்னும் நான்கு நிலைகளைப் போதித்தது எனது மதம். அது எனது வாழ்வை நெறிப்படுத்தும் நோக்கில் போதிக்கப்பட்டது! எம்மில் எத்தனை பேர், சரியையும், கிரியையும் தாண்டியிருக்கிறோம்? எம்மில் எத்தனை பேர் பிரமச்சரிய நெறியில் வாழ்ந்திருக்கிறோம்? எனவே மதம் தனது நோக்கத்தை நிறைவேற்றவில்லை! வெறும் சுயநலவாதிகளை மட்டும் வளர்த்துக் கொண்டு இருக்கின்றது! இதற்கு, சமீபகால சங்கராச்சாரியார்களும், நித்தியானந்தாக்களுமே சாட்சியாக உள்ளனர்! இந்த மதத்தின் பெயரால் தானே, எமது மக்கள் அழிக்கப்பட்டனர்! இதற்கு உதாரணங்கள், சோ. ராமசாமி, இந்து ராம், அமைச்சர் சிதம்பரம், சிவசங்கர் மேனன்,தீக்சித், நாராயணசாமி, நம்பியார், ஜெயலலிதா,..........நீண்டுகொண்டே போகின்றது! இவர்கள் அனைவருமே ஐயர், ஐயங்கார், நம்பூதிரிகள்,... என்ற வரிசையில் நகர்கின்றன! இதை ஏன் ஒருவரும் பெரிது படுத்துவதில்லை? நான் ஒரு சைவன் என்பதில் எனக்குப் பெருமை! முருகன் எனது கடவுள். அவன் முருகனாக வள்ளியுடன் இருக்கும் போது என்னால் அவனை ஏற்க முடிகின்றது! ஆனால் அவன், கந்தனாக, தேவயானை சமேதனாக வரும்போது, என்னால் அவனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை! இதே போல, சிவன், சிவனாக இருக்கும் போது, லிங்கமாக இருக்கும்போது என்னால் வணங்க முடிகின்றது! அழகிய அர்த்தநாரீச்வர தத்துவத்தின் பெருமையையும் உணர முடிகின்றது! அதற்கு மேல், ஐயப்பனாக,அவனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை! ஏனெனில் ஐயப்பன், பிறப்பில், விஷ்ணுவுடன் சைவம் கலந்து இந்து மதத்தினுள் போய் விடுகின்றது. இதே நிலையே. இராமர், லட்சுமணன்,என வரும்போதும் ஏற்படுகின்றது! சிவபக்தனான இராவணனை அழித்து வெற்றிவாகை சூடிய இராமனை வணங்கும் மனம் எனக்கு வருவதில்லை! இது தான் மதத்தைப்பற்றிய எனது நிலைப்பாடு! இன்னொருவருடைய கலாச்சாரத்தைத் தமிழன் வளர்த்துக்கொண்டு திரிகின்றான்! காஞ்சீபுரம் புடவைகளும், பரதநாட்டிய அரங்கேற்றங்களும் என்னைக் கவர்ந்திழுக்கவில்லை! ஏனெனில் அவை எமது கலாச்சாரத்துக்குள் திணிக்கப்பட்டவை! ராஜ ராஜ சோழன் ஈட்டிய வெற்றிகளினால், அவனிலும் பார்க்கப் பலமடைந்தது, அவனுடன் தொங்கிகொண்டிருந்த பிராமணர்களே! வேர்வை சிந்தாது, இரத்தம் சிந்தாது வெற்றி பெற்றவர்கள் அவர்களே! தாய்லாந்தின் அரச முடிசூட்டு விழாக்களில், 'சிவபுராணம்' இன்னும் ஒலிக்கின்றது! ஆனால், அதைத் தமிழர்கள் ஒலிப்பதில்லை! பிராமண வம்சாவளியினர்கள் தான் இன்னும் ஒலிக்கின்றார்கள்! தஞ்சைப் பெரிய கோவில் கட்டியவன், வென்றெடுத்த பூமியில், அரசர்களின் பெயர்களில், வீதிகளின் பெயர்களில் இருப்பது ' ராம்' என்பதே தவிர 'சிவா' இல்லை! அது மட்டுமில்லை, தமிழனைக் குறிக்கும் 'தாய்லாந்து மொழியில்' உள்ள சொல்லானது மிகவும் கீழ்த்தரமானது! இதற்குக் காரணம், யாராக இருக்கமுடியும்? தமிழ் மன்னன் வென்றெடுத்த பூமியின் விமான நிலையத்தில் இருக்கும் சிலைகள் முன்னிலைப்படுத்துவது, தேவர்கள் பாற்கடலைக் கடைவது தான்! சிவன் முட்டாளைப் போல, நஞ்சை விழுங்கியதைத் தவிரச் சைவம் இதில் காணப்படவில்லை. இந்து மதம் தான் அங்கே முன்னிலைப்படுத்தப்படுகின்றது! அந்த விமான நிலையத்தின் பெயர் கூட, 'ஸ்வர்ண பூமி'! தமிழன் வென்ற நிலம்!
  13. இந்த சந்தர்ப்பத்தில் தான் இந்தக் கதையைச் சொல்ல முடியும் என்று நினைக்கின்றேன். நான் இரண்டு குழந்தைகளை 2009ம் ஆண்டு யுத்தத்தின் பிற்பாடு தத்தெடுப்பாக உறுதி செய்து, ஒரு தேவாலயம் ஊடாகச செய்து வந்தேன். இரண்டு குழந்தையில் ஒன்றுக்கு பெற்றோர் உறவினர் இல்லை. மற்றவரின் தாய் போராளி என்பதால் சிங்கள அரசு புனர்வாழ்வு என்ற பெயரில் வைத்திருந்தது. எனக்கு அவர்களின் மீதான அன்பு ஏதோ என் குழந்தைகளாகவோ, சகோதரங்களாக இருந்தால் எப்படி ஒரு உணர்வைத் தருமோ, அது போன்றதொரு பாசத்தை உருவாக்கியது. எனக்குத் திருமணம் ஆகாததால் தத்தெடுக்கமுடியாது, மற்றும் கனடா கொண்டு வரமுடியாது என்பதாலும், குழந்தைப் பாக்கியம் இல்லாத உறவினர் ஊடாக அவர்களிருவரையும் வளர்ப்பதற்காக முயன்றபோது, அதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. விசாரித்தபோது இரு குழந்தைகளும் மதம் மாற்றப்பட்டிருந்தனர். எனக்கு உள்ள வருத்தம் என்னவெனில், குழந்தைகளிடம் ஏன் மதமாற்றத்தைத் திணிக்க வேண்டும்? அதற்கான வயதா அவர்கள்? இத்தனைக்கும் என்னிடம் இருந்து உதவி பெறும்போதாகட்டும், அந்தக் குழந்தைளாகட்டும், இடையில் நின்ற தரகர்கள் அவர்கள் அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றி முடிவெடுக்கும்போது சுயநலவாதிகளாகவே என் கண்ணில் தெரிந்தார்கள். இப்படி நான் தத்தெடுக்கும் விடயம் பற்றிய சிந்தனையை வெளிப்படுத்தியதுடன், என்னிடமான தொடர்பு தூண்டித்தார்கள். உண்மையில் சொல்கின்றேன். ஒரு காலத்தில் அன்னை திரேசா மீது நான் கொண்டிருந்த மரியாதை இதற்குப் பிற்பாடு உடைந்து போனது. அவர் தொழுநோயாளர்களைக் கவனித்த சேவை பெரிதாயினும், அதன் பின்ணனியில் மதமாற்றம் என்ற ஒரு வியாபாரமும் இல்லாமல் இருந்திருந்தால் உயர்வாகவே இருந்திருப்பார்கள். ஆனால் அவர் கடவுள் என்பதைப் பண்டமாற்றுச் செய்து தானே அவர்களைப் பார்த்துக் கொண்டார்....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.