லண்டனில் வாழும் சர்தார்ஜி வெள்ளிக்கிழமை வேலை முடிந்ததும் டர் என்று பப்புக்கு கூலிங் பீர் அடிக்க வந்துவிடுவார் வழக்கமாக.
இந்த முறை விடுமுறை சென்று வந்த பின்னர், ஒரு தடவையே 3 பைண்ட் ஆர்டர் பண்ணினார். வேறு இரு நண்பர்கள் வருகிறார்கள் போல என்று நினைத்த பார் டெண்டர், இவர் ஒவ்வொரு கிளாஸிலும் ஒவ்வொரு சிப் ஆக குடித்து முடித்து மீண்டும் 3 பைண்ட் ஆர்டர் பண்ண, தாங்க முடியாமல் கேடடார் ...
ஓ அதுவா, நம்ம அண்ணாச்சி கனடாவில், தம்பி அமெரிக்காவில்... நாம மூன்று பேருமே, குடிக்கும் போது , அடுத்தவரை மறக்காமல் அவர்களுக்காகவும் குடிப்பது என்று முடிவு செய்து உள்ளோம். என்னைப் போலவே அவங்களும் இப்படித் தான் குடிக்கிறாங்க அங்க...
இப்படி நாள் போகுது.
ஒரு நாள் சர்தார்ஜி 3 வேண்டாம்... 2 போதும் என்கிறார். துணுக்கிடடார் பார் டெண்டர். இரண்டாவது ரவுண்டு 2 பைண்ட் கொடுக்கும் போது , மெதுவாக சொன்னார்.... 'ரொம்ப கவலையாக இருக்கிறது... உங்கள் இழப்பு ஈடு செய்ய முடியாதது. என்ன நடந்தது... அண்ணாச்சியா, தம்பியா, கிளம்பியது...?
அட அப்படி ஒன்னும் இல்லப்பா. கவலைப் பட ஒண்ணுமே இல்லை.
விஷயம் என்னனா, நான் இன்னையில இருந்து குடியை விட்டுட்டேன்... அதுதான்.....