Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    23926
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    11
    Points
    46808
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33600
    Posts
  4. சண்டமாருதன்

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    5
    Points
    2554
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/31/20 in all areas

  1. நேற்று வேலையிடத்திலை ஒரு துருக்கிகாரனோடை கதைச்சுக்கொண்டிருந்தன்.அப்ப கதையோடை கதையாய் என்னட்டை உன்ரை பாசை என்ன பாசை எண்டு கேட்டான். நான் என்ரை மொழி தமிழ் எண்டு சொன்னன். தமிழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்??????? எண்டு ஒரு மாதிரி வாயையும் முகத்தையும் ஒரு மாதிரி கிட்டத்தட்டட புளிமாங்காய் கடிச்ச ரேஞ்சிலை வைச்சுக்கொண்டு கேட்டான். ஓம் தமிழ்தான் என்ரை மொழி எண்டன். இதென்ன புதிசாய் கிடக்கு நான் ஒருக்காலும் கேள்விப்படாத மொழியாய் கிடக்கு எண்டு திருப்பியும் புளிமாங்காய் கடிச்ச ரேஞ்சுக்கு முகத்தை வைச்சுக்கொண்டு நிண்டான். எனக்கு விசர் வந்துட்டுது. அப்ப நான் சொன்னன் கூகிள்ளை உலகத்திலேயே பழைய மொழி என்ன மொழி எண்டு தேடிப்பார் அப்ப தெரியும் எண்டன். சிங்கனும் கூகிள்ளை தேடிப்பாத்துட்டு திறந்த வாய் மூடேல்லை. பெடி கலங்கிப்போச்சுது.
  2. 'என்னை திருமணம் செய்ய சம்மதமா?' மாப்பிள்ளை கேட்டதும் மணப்பெண் செய்த காரியத்தால் அதிர்ந்த நீலகிரி..! தனக்கு மற்றோருவருடன் காதல் இருப்பதாக கூறி மண மேடையிலேயே மணமகனை மணமகள் நிராகரித்த சம்பவம் உதகையில் நிகழ்ந்துள்ளது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மட்டகண்டி கிராமத்தைச் சேர்ந்த மணமகன் ஆனந்த் என்பவருக்கும் கோத்தகிரி அருகேயுள்ள தூனேரி கிராமத்தை சேர்ந்த பிரியதர்சினி என்பவருக்கும் கடந்த 29 -ஆம் தேதி திருமணம் நடத்த பெற்றோர்கள் முடிவு செய்திருந்தனர். திருமணத்துக்காக மட்டக்கண்டி கிராமத்தில் உற்றார், உறவினர்கள் கூடியிருந்தனர். இவர்கள் படுகர் இனத்தை சேர்ந்தவர்கள். படுகர் இன மக்களின் சம்பிரதாயப்படி, தாலி கட்டுவதற்கு முன் மணப்பெண்ணிடம் மணமகன் மூன்று முறை 'திருமணம் செய்து கொள்ள சம்மதமா..?' என்று கேட்க வேண்டும் . மணப்பெண் 'சம்மதம்' என்று தெரிவித்தால் மட்டுமே மணமகன் தாலியை கட்ட முடியும். அதன்படி, மணமகன் ஆனந்த், மணப்பெண் பிரியதர்ஷினியிடத்தில் 'தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா..?' என இருமுறை கேட்ட போது அவர் மௌனமாக இருந்தார். மூன்றாவது முறையாக மணமகன் கேட்ட போது வெடித்து அழுது 'எனக்கு சம்மதமில்லை' என்று பிரியதர்ஷினி உரக்க கூற, திருமண பந்தலில் பதற்றம் தொற்றிக் கொண்டது. பிரியதர்ஷினியை சமாதானப்படுத்த பெற்றோர்கள் முயன்றனர், ஆனாலும் பலன் இல்லை. மணமகள் பிரியதர்ஷினி மணப்பந்தலில் கூறுகையில், ''தன்னை திருமணம் செய்து கொள்ள வேறு ஒருவர் வருகிறார். ஒரு மணி நேரம் பொறுத்திருங்கள். அவர் எனக்காக தனது திருமண பந்தத்தை முறித்துக் கொண்டவர். என் காதலரின் குழந்தைகளை நான்தான் பார்த்துகொள்ள வேண்டும். இவரை திருமணம் செய்து கொண்டால் அவருக்கு துரோகம் செய்தது போல் ஆகிவிடும். எனக்கு இந்த திருமணம் வேண்டாம்" என்றவாறே அங்கிருந்து செல்ல முற்பட்டார். 🤭 இந்த சம்பவத்தால் அதிர்ந்து போன மாப்பிள்ளை தாலி கட்டாமல் மண மேடையை விட்டு இறங்கி சென்று விட்டார். பின்னர், பெற்றோர் மணமகள் பிரியதர்ஷினியை காரில் ஏற்றி அங்கிருந்து அழைத்து சென்றனர். மேலும், இனி வீட்டுக்கு வர வேண்டாம் எங்கேயாவது சென்று விடும்படி கூறி அவரை அனுப்பி விட்டு பெற்றோர் மட்டும் வீட்டுக்கு அழுதபடி வந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே, 'இத்தனை நாள் பொறுத்து இருந்து விட்டு மண நாள் வரை காத்திருந்து அந்த பெண் ஏன் சொல்ல வேண்டும். திருமண கனவில் இருந்த மற்றோரு ஆணை ஏன் அவமதிக்க வேண்டுமென்றும்..?' சமூகவலைத் தளங்களில் அந்த பெண்ணுக்கு கடும் கண்டனம் எழுந்து வருகிறது. பாலிமர் செய்திகள் டிஸ்கி: இதை சொல்ல, இந்தப் பொண்ணு மணமேடை வரை வந்திருக்க வேண்டிய தேவையே இல்லையே..! பாவம் மாப்பிள்ளையாக வந்தவர்..! ☹️
  3. மணமகன் மணமகளிடம் கேட்பதை விட பெற்றோர்களே ஒன்றுக்கு 100 தடவை தங்கள் பிள்ளைகளிடம் கேட்டு முடிவெடுக்கலாமே?
  4. இந்த கதையில் ஏற்கனவே குழந்தைகளுடன் இருந்த ஒருபெண்ணின் தாலி அறுககப்பட்டிருக்கு. அதை கடைசிநேரத்தில் என்றாலும் வெளிப்படுத்திய பெண்ணிடம் ஒரு நியாயம் இருக்கு. அந்த வகையில் மாப்பிள்ளை கொடுத்துவைத்தவர்தான். எல்லாம் தாலி கட்டியபின் தெரியவந்திருந்தால் மாப்பிள்ளை நிலை பரிதாபமாக இருந்திருக்கும்.
  5. கடைசிப் பந்தில் ஆறு அடித்து அணியை வெற்றி பெறச்செய்தவர்கள்.......! இரு நாட்களுக்கு முன் csk vs kkr மாட்சில் csk ஜடேயா கடைசிப்பந்தில் ஆறு அடித்து csk அணியை வெற்றிபெற செய்தார்......!
  6. கோகுலத்தில் பசுக்கள் எல்லாம் கோபாலன்
  7. ஒன்பது கோளும் ஒன்றாய் காண
  8. திரிபுரம் எரித்த | சிவமோடு சிவமாக
  9. சுவியர்... நீங்கள் இணைத்த, இந்தக் காணொளியின் மூலம் தான்... முதன் முதலாக.. மரநாயை பார்க்கின்றேன். அதற்கு.. முன், இது.. வீட்டில் வளர்க்கும் கோழிகள்.. காணாமல் போனால், மரநாய்... சாப்பிட்டு விட்டது, என்று சாதாரணமாக பாட்டியும், அம்மாவும் சொல்வார்கள். ஆரோ... கோழிக் கள்ளன், "ஈரச் சாக்கு போட்டு" திருடிய கோழியை... மரநாய் மேல்... பழியை போடுகிறார்களே.. என்று, யோசித்ததும் உண்டு. ஆனால்.... இந்த, "மரநாய்" செய்யும்.... அட்டூழியத்தைப் பார்க்க, பயங்கரமாக இருக்கின்றது. ஒரு ஆளின், கையை... கவ்வினால், கழட்டி.. எடுக்க முடியாது போலுள்ளது. ⭕
  10. இறைவா என் இறைவா... ...இறைவா என் இறைவா... ... வைகறைப் பொழுதின் வசந்தமே நீ வா விடியலைத் தேடும் விழிகளில் ஒளி தா வாழ்வு மலர்ந்திட வான் மழையென வா வழியிருளினிலே வளர்மதியென வா இங்கு பாடும் இந்த ஜீவனிலே பரமனே நீ வா வைகறைப் பொழுதின் வசந்தமே நீ வா விடியலைத் தேடும் விழிகளில் ஒளி தா அலைகளில்லா கடல்நடுவே பயணமென என் வாழ்வு அமைதியெங்கும் அமைதியென பயணமதை நான் தொடரஅலைகளில்லா கடல்நடுவே பயணமென என் வாழ்வு அமைதியெங்கும் அமைதியென பயணமதை நான் தொடர இறைவா என் இறைவா இதயம் எழுவாய் நிறைவாய் எனிலே நிதமும் உறைவாய் எந்தன் வாழ்வு ஒளிர வாசல் திறந்து எனை அழைத்திட வா வைகறைப் பொழுதின் வசந்தமே நீ வா விடியலைத் தேடும் விழிகளில் ஒளி தா இடர் வரினும் துயர் வரினும் இன்னுயிர்தான் பிரிந்திடினும் எனைப்பிரியா நிலையெனவே இணைபிரியா துணையெனவே இடர் வரினும் துயர் வரினும் இன்னுயிர்தான் பிரிந்திடினும் எனைப்பிரியா நிலையெனவே இணைபிரியா துணையெனவே இறைவா என் இறைவா இதயம் எழுவாய் நிறைவாய் எனிலே நிதமும் உறைவாய் எந்தன் வாழ்வு ஒளிர வாசல் திறந்து எனை அழைத்திட வா வைகறைப் பொழுதின் வசந்தமே நீ வா விடியலைத் தேடும் விழிகளில் ஒளி தா வாழ்வு மலர்ந்திட வான் மழையென வா வழியிருளினிலே வளர்மதியென வா இங்கு பாடும் இந்த ஜீவனிலே பரமனே நீ வா வைகறைப் பொழுதின் வசந்தமே நீ வா விடியலைத் தேடும் விழிகளில் ஒளி தா
  11. சண்ட மாருதன் நீங்கள் கூறிய தேசங்கள் கடந்து தமிழர்களை ஒன்றிணைத்தல் என்ற கருத்து மிகவும் வரவேற்கப்பட வேண்டியது. ஆனால் அதை செய்ய நாம் எம்மை தயார்ப்படுத்த வேண்டும். அது ஒரு நீண்ட பயணமாக இருக்கும். எமக்குள் இருக்கும் குறுகிய மனப்பாங்குகளை களையவேண்டும். ஒரு ஊருக்குள்ளையே சாதி வேறுபாடுகளால் மற்றவரை மதிக்காத ஒரு சமுதாயம் உலகளாவிய இனமாக பரிணமிப்பது சாத்தியமே இல்லை. மொழி என்ற தொடர்பாடல் ஒன்றாக இருந்தால் போதாது மனத்தளவில் பரந்த மனப்பாங்கு உள்ளவர்களாக மாற வேண்டும். உணர்சசி வசப்பட்ட பேச்சுககள் பாடல்கள் குறுகிய காலத்திற்கு இணைக்குமே தவிர concert முடிந்தபின்னர் கலைந்து போகும் பாரவையாளர் போல் போய்விடும்.
  12. நந்தன் , என்ன விளையாட்டு இது .....! நெடுக்குக்கு நோட்ஸ் எடுத்துக் குடுக்கிறமாதிரி இருக்கு....! அனாலும் சூப்பர் .....!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.