Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    23926
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46819
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    38792
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/26/20 in Posts

  1. ஆக இழப்பை மட்டும் வைத்துக்கொண்டு பெரிய இழப்பா சிறிய இழப்பா என்று முடிவு செய்யச் சொல்கிறீர்கள்,உரிமை அரசியல் போய் இனி இழப்பரசியல் போல ...😂 எதையாவது பெற்று நமது இருப்பையாவது தக்க வைப்போம் என்பதற்கு தயாரில்லை, மக்களில் புரட்சி,போராட்டம் வெடிக்கும் ,எமக்காதரவான ஜட்டிகள், இரத்தத்திலக உசுப்பேத்தல்களுக்கு விலை போகும் தேசிக்காய்களும் இருப்பார்கள் தானே இம்முறை மஹிந்த மாபியா கொடுக்கும் டிரீட்மென்டில் கொழுப்பு கரைந்து சோறு முக்கியம் அமைச்சரே என்ற நிலைக்கு அவர்களாவே வருவினம் புதுக்குதிரைகளாவது பரவாயில்லை எஜமானரின் காலடிதான் எங்களிடம் பெரிசாக உரிமை அது இது என்று எதிர்பார்க்கபடாது என்று முன்னாடியே சொல்லிவிட்டு ஓடுகிறார்கள், ஆனால் இந்த பழுத்து போன திருட்டு குதிரைகள் இருக்கு பாருங்கோ எதை நோக்கி ஓடுகிறோம் என்றும் தெரியாது எது பாதை என்றும் தெரியாது ,ஏறுபவர்களை முகங்குப்புற கவுத்துக்கொண்டே கிடக்குதுகள், நன்றாக விழுந்து நங் என்று அடிவாங்கியவைகளும் இவை குருட்டு,திருட்டு குதிரைகள் ஒரு பைசாவுக்கு பிரயோசமற்றவை என்பதை கண்டுபிடித்தவர்களும் திருந்திவிட்டார்கள்
  2. எங்களுக்காக உங்களை உதிர்த்து எம்மினம் காத்திடத் தம்மைத் தந்து உயிர் என்னும் கொடை தந்து உங்கள் உணர்வுகள் துறந்து நின்றீர் தாய் மண்ணின் தடையகற்றிட தணியா மனதின் துணிவு கொண்டு மகிழ்வாய் மனதின் ஆசை அடக்கி அத்தனை ஓசையும் தாண்டி வந்தீர் பதின்ம வயதில் பாசம் அடக்கினீர் பருவவயதில் புலன்கள் அடக்கினீர் பசியது கொண்டும் புசிப்பது நிறுத்தி எதிரி அடக்கும் ஆசைதான் கொண்டீர் எங்கள் நிலத்தை எமதேயாக்க உங்கள் நிலங்கள் தான் துறந்தீர் சுற்றம் துறந்து சுகங்களும் துறந்து காடுமேடெல்லாம் கால் பதித்தீர் ஏறுபோல் எழுந்து எதிகளை வீழ்த்தி வீறுநடை போட்டு வெற்றிகள் கொய்தீர் தமிழர் பெயரை தரணியே போற்றிட தானைத் தலைவனின் தலைமை ஏற்றீர் அத்தனையும் எத்தர்களாற் அழிந்துபோனதே எதிரிகள் கைபட்டுக் குலைந்துபோனதே காட்டிக் கொடுக்கும் கயவர் கொடுமையால் கட்டிய கூடும் சிதைந்தே போனதே அத்தனை உயிர்களும் அவலம் தாங்கி எத்தனை ஈனமாய் எருக்களாய் ஆகிட நித்தமும் நாம் நிமிர்வுடன் நின்றது இத்தனை தாண்டியும் இல்லாமற் போனதே ஆண்டுகள் பலவாய் அடுக்கிக் கட்டிய ஆசைகளெல்லாம் நூர்ந்து போனதே ஓசை கொண்டு ஒலித்த குரல்கள் ஒட்டுமொத்தமாய் ஓய்ந்துபோனதே ஆயினும் உங்கள் அளவிடமுடியா அகத்தீயில் கார்முகில் கரையொதுங்க காவலரே உங்கள் கனவு நிறைவேறும் கணப்பொழுது வந்திடும் போராசை கேட்கும் பூமியின் விலங்கொடியும் அந்தநாள் வரும்வரை அடங்கிடோம் நாம் எத்தனை தடைகள் எங்கு தாண்டியும் அத்தனை பேரையும் ஆண்டுகள் தோறும் ஓர்மத்துடன் நாம் எண்ணிடுவோம் தோல்வி கண்டு துவண்டோமாயினும் தோள்கள் துடிக்க திருக்களமாடிய திண்ணிய வீரராய்ப் போர்க்களம் கண்ட துணிந்தவர் உம் புகழ் பாட மறந்திடோம் மண்ணை இழந்து மறுகினோமாயினும் ஊரை இழந்து உருகினோம் ஆயினும் மாண்டவர் மாண்பைக் காக்க மறந்திடோம் மானம் காத்திட்ட மறவரை மறந்திடோம் வன்மம் கொண்டு விடுதலை மூச்சுடன் வேங்கையானவர் வீரம் மறந்திடோம் கொடும் பகை வென்று கொடியது ஏற்றிய உங்களின் வீரம் என்றும் மறந்திடோம் படை நடத்திப் பகைவரை விரட்டித் துணிவுடன் இறந்த உம்மை மறந்திடோம் கார்த்திகை தோறும் காவலிருக்கிறோம் மண்ணிலிருந்து மரணம் வரை மாவீரரே
  3. கோவக்கார நண்பனும் அவனது நன்றி உணர்ச்சியும் ......! 😂
  4. பழையவற்றில் இருந்து பாடங்களைப் படிக்காதவரை அவற்றை நினைவூட்டத்தான் வேண்டும். கடந்த 16 வருடங்களில் தமிழ் மக்களுக்குக் சாதகமாக எதுவும் நடக்கவில்லை. தற்போதைய தமிழ் அரசியல் தலைமைகள் ஒரு தீர்வைப் பெறவோ, பொருளாதர முன்னேற்றத்தை உருவாக்கவோ, அல்லது அவலவாழ்வில் இருக்கும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவோ ஒரு உருப்படியான திட்டத்தையேனும் சிந்திக்கும் ஆற்றல் இல்லாதவர்கள். ஆனால் இவைகளை வைத்து கட்சி அரசியல் செய்து தங்களை வளப்படுத்திக்கொள்வார்கள். தமிழ்த்தேசியத்திற்கு எதிர்நிலையில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் முன்னெடுக்கும் அபிவிருத்தி அரசியலில் இலாபம் அடைவதும் சிங்கள அரசும், சிங்கள முதலாளிகளும், சிங்கள படையினரும்தான். தமிழர்களுக்கு தலையில் தொடர்ந்தும் மிளகாய் அரைக்கப்படும்.
  5. ஒரு துரோகத்தின் நாட்காட்டி தமிழினம் தனது சரித்திரத்தில் பல தியாகிகளை, வரலாற்று நாயகர்களை, வீர மறவர்களைக் கண்டிருக்கிறது. ராஜ ராஜ சோழன் முதல் பாண்டியர்கள், வன்னியர்கள் என்று பல தமிழ் எழுச்சி வரலாறுகளை அது கண்டிருக்கிறது. நமது முன்னோடிகளின் வாழ்க்கை வரலாறுகள் எமதினத்தின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாதது என்பதுடன், அவைபற்றித் தொடர்ந்தும் பேசப்படவேண்டும் என்பதும், எமது எதிர்காலச் சந்ததிக்கும் இவை கடத்தப்படவேண்டும் என்பது அவசியமானது. எமது வரலாற்றில் வீர மறவர்களினதும், வரலாற்று நாயகர்களினதும் கதை சொல்லப்படும்பொழுது உதிரியாக இன்னொரு விடயமும் கூட வருகிறது. இது தமிழினத்தால் தவிர்க்கமுடியாத, இனத்தினுள்ளேயே உருவாகி நெருக்கமாக இழையோடிப்போயிருக்கும் ஒரு சாபக்கேடு என்றால் அது மிகையில்லை. எமது வீர வரலாற்றின் ஒவ்வொரு எழுச்சியின்போதும் அல்லது அவ்வரலாற்றின் வீழ்ச்சிகளின்பொழுதும் இந்தச் சாபம் விடாது எம்மைப் பின் தொடர்ந்தே வருகிறது. வரலாற்றில் தனது சொந்த இனத்தையே தனது நலன்களுக்காகவும், இச்சைகளுக்காகவும் காட்டிக்கொடுத்து, எதிரியுடன் சேர்ந்து நின்றே தனது இனத்தைக் கருவறுத்து, சொந்த இனம் அழிவதில் இன்புற்ற பல சாபங்களைத் தமிழினம் கண்டதுடன், இப்பிறப்புக்கள் பற்றிய சரியான பதிவினையும் எமது வரலாற்றில் பதிவுசெய்தே வந்திருக்கிறது. இவ்வாறு தமிழினத்திற்கெதிராக எதிரியுடன் சேர்ந்து செயற்பட்ட துரோகிகளின் வரலாறு சரித்திரத்தில் நிச்சயம் பதியப்படவேண்டும் என்பதுடன், இத்துரோகங்களால் எமதினம் பட்ட அவலங்கள் தொடர்ந்து பேசப்படுவதும் அவசியமாகிறது. அந்தவகையில், கடந்த 15 அல்லது 16 வருடங்களுக்கு முன்னர் தமிழினம் இவ்வாறான மிகப்பெரிய துரோகம் ஒன்றிற்கு முகம் கொடுத்தது. தனது இச்சைகளுக்காகவும், நலனுக்காகவும் மட்டுமே தனது இனத்தையும், அவ்வினத்தின் சுந்தந்திர விடுதலைப் போராட்டத்தினையும் காட்டிக் கொடுத்து, பலவீனமாக்கி, ஈற்றில் அப்போராட்டமும் லட்சக்கணக்கான மக்களும் அழிக்கப்பட தானும் நேரடியாகக் காரணமாகவிருந்த ஒருவனது துரோகம் பற்றிய எனது புரிதலையும், நான் ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்ட விடயங்களையும் இங்கே பதிய நினைக்கிறேன். துரோகிகளை வரலாற்று நாயகர்களாகவும், உதாரண புருஷர்களாகவும் காட்ட முனையும் முனைப்புகள் வரலாற்றில் இத்துரோகிகளுக்கு வெள்ளையடித்து, அவர்களது துரோகத்தினை நியாயப்படுத்தும் கைங்கரியங்களில் ஈடுபடுவதால், இத்துரோகிகள் பற்றி நாம் தொடர்ந்து பேசுவதும், அந்தத் துரோகங்கள் பற்றித் தொடர்ந்து பதிவிடுவதும் அவசியமாகிறது. ஏனென்றால், இத்துரோகங்கள் மன்னிக்கப்படமுடியாத, மறக்கப்படமுடியாத, இனியொரு தடவை நடக்கக் கூடாத வெறுக்கப்படவேண்டிய நிகழ்வுகள் ஆகும். துரோகத்தின் நாள் 1 : 3 ஆம் திகதி மார்ச் மாதம், 2004 கேணல் கருணா என்னும் விநாயகமூர்த்தி முரளீதரனின் பேச்சாளர் செய்திச் சேவை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் புலிகள் இயக்கத்தினுள் பிளவுகள் இல்லை. நாம் எமது தலைவரின் நேரடிக் கட்டளையின்கீழ்த்தான் இனிமேல் செயற்படுவோம் என்று கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட புலிகள் இனிமேல் தலைவரின் நேரடிக் கட்டளைகளுக்கு மட்டுமே செவிசாய்ப்பதாகவும், இந்த மாவட்டங்களில் இருக்கும் மக்களின் நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு இனிச் செயற்படப் போவதாகவும் கூறுகிறார்.
  6. பழையதை கிளறி ஒன்றும் ஆகப்போவதில்லை நடப்பவற்றை நமக்கு சாதமாக பயன்படுத்தி அடுத்த கட்டத்திற்கு செல்ல பார்க்கவேண்டும் இல்லையேன் நம்மை விட எதிரி முந்தி செல்வான் வென்றும் செல்வான் .நாம் சைக்கிளில் செல்கிறோம் நம்முடன் வந்தவன் தள்ளிவிட என்னை தள்ளிவிட்டுவிட்டான் என அந்த இடத்தில் நின்று புலம்புவதில் அர்த்தம் இல்லை அவனை முந்த வேண்டும் அதை செய்யுங்கள் நீங்களும் அந்த இடத்தில் நின்று கொண்டு என்னை தள்ளிவிட்டான் தள்ளி விழுத்தி விட்டான் என சொல்லி கொண்டே நிற்கிறது போல இருக்கு
  7. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 29, மார்ச் 2004 கருணா துணை ராணுவக்குழுவுக்கெதிரான சுவரொட்டிகள் மட்டக்களப்பில் காணப்படுகின்றன கருணாவுக்கெதிரான சுவரொட்டிகள் மட்டக்களப்பின் பலவிடங்களிலும் காணக்கூடியதாகவிருந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு நகரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கருணாகுழுவுக்கு எதுவித உதவிகளையும் செய்யவேண்டாம் என்று கோரும் பல சுவரொட்டிக்களைக் காண முடிந்துள்ளது. பொலீஸார் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்ததன்படி பெருமளவு தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நடமாடி வருவதாகவும், இவர்களே இவ்வாறான துண்டுப்பிரசுரங்களையும் சுவரொட்டிகளையும் விநியோகித்துவருவதாகவும் கூறினர். "பலவிடங்களிலும் வெளிப்படையாகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் அணிகள் வலம்வருவது தெரிகிறது. ஆனாலும், கருணாகுழுவுக்கெதிரான நடவடிக்கைகளை அவர்கள் உடனேயே ஆரம்பிப்பார்களா என்று சொல்லத் தெரியவில்லை" என்று மட்டக்களப்பிலிருந்து கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவர் தெரிவித்தார்.
  8. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 25, மார்ச் 2004 கிழக்கு மாகாணப் போராளிகளுக்கு கருணாவின் துரோகத்தனம் பற்றிய விளக்கத்தினை அளிக்கும் புலிகள் கருணாவின் முறைகேடுகள் பற்றி கிழக்கு மாகாணப் போராளிகளுக்கும் பிரிவுத் தலைவர்களுக்கும் புலிகள் விளக்கம் அளித்துள்ளனர். "தனது முறைகேடுகளையும், இயக்கத்திற்கெதிரான செயற்பாடுகளையும் மூடி மறைப்பதற்காக கிழக்கு மாகாண மக்களையும், போராளிகளையும் கருணா திட்டமிட்டே தேசியத் தலைமையிடமிருந்து பிரித்து வைத்திருந்ததுடன், அவர்கள் தலைமையினைத் தொடர்புகொள்வதையும் தடுத்து வந்திருக்கிறார். மனச்சாட்சிக்கு விரோதமான அவரது நடவடிக்கைகள் பற்றியும், போராட்டத்திற்கு மக்களால் அளிக்கப்பட்ட பெருமளவு பணத்தினை அவர் களவாடியது பற்றியும், இயக்கத்தினுள் பலரைத் தனது சுயநலனிற்காகக் கொன்றுதள்ளியதுபற்றியும் விசாரிப்பதற்காகவே அவரை வன்னிக்கு அழைத்திருந்தோம்". "தனது முறைகேடுகளுக்கான தண்டனைகளுக்குப் பயந்தே கருணா வன்னிக்குச் செல்லாது தேசியத் தலைமை பற்றியும், விடுதலைப் புலிகள் பற்றியும் மிகவும் தவறான பிரச்சாரத்தை கிழக்கில் மேற்கொண்டு வருகிறார்". "கருணா எனும் துரோகிக்கெதிரான தண்டனை நடவடிக்கைகளை எதிர்க்கும் எவரும் தமிழ்த் தேசிய இலட்சியத்திற்கெதிரான துரோகியாகவே கருதப்படுவீர்கள். தேசியத் தலைமைக்கு எப்பொழுதும் விசுவாசமாக இருப்போம் என்று உறுதிப்பாடு எடுத்து இயக்கத்தினுள் சேர்ந்த அனைத்துப் போராளிகளும் அதனை நினைவிலிருத்தி, தமது அறியாமையினால் இதுவரை கருணாவுக்கு ஆதரவாக இருப்பின், உடனடியாக அவரிடமிருந்து தூர விலகி விடுமாறும் கேட்டுக்கொள்கிறோம்". என்றும் கேட்கப்பட்டிருக்கிறது. புலிகளின் அறிக்கையின் முழு வடிவமும் இதோ. "அன்பிற்குறிய மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட பிரிவுத் தலைவர்களே, போராளிகளே" "கருணாவின் முறைகேடான நடத்தைகள் எமது மண்ணிற்கும் மாவீரர்களுக்கும் அபகீர்த்தியை உண்டுபண்ணியிருக்கும் என்பதை இப்போது புரிந்துகொண்டுள்ள நீங்கள், சரியான பாதையினைத் தெரிவுசெய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். தனது முறைகேடுகளை மூடிமறைப்பதற்காக கருணா பிரதேசவாதம் எனும் நஞ்சினைக் கையிலெடுத்திருப்பதோடு, அழிவினைத் தரும் யுத்தம் ஒன்றிற்குள் மொத்த தமிழினத்தையும் தள்ளியிருக்கிறார்" "தனது முறைகேடுகளையும், இயக்கத்திற்கெதிரான செயற்பாடுகளையும் மூடி மறைப்பதற்காக கிழக்கு மாகாண மக்களையும், போராளிகளையும் கருணா திட்டமிட்டே தேசியத் தலைமையிடமிருந்து பிரித்து வைத்திருந்ததுடன், அவர்கள் தலைமையினைத் தொடர்புகொள்வதையும் தடுத்து வந்திருக்கிறார். மனச்சாட்சிக்கு விரோதமான அவரது நடவடிக்கைகள் பற்றியும், போராட்டத்திற்கு மக்களால் அளிக்கப்பட்ட பெருமளவு பணத்தினை அவர் களவாடியது பற்றியும், இயக்கத்தினுள் பலரைத் தனது சுயநலனிற்காகக் கொன்றுதள்ளியதுபற்றியும் விசாரிப்பதற்காகவே அவரை வன்னிக்கு அழைத்திருந்தோம்". "மீனகத்தில் சில போராளிகள் முன்னிலையிலும், சில பொதுமக்கள் முன்னிலையிலும் தான் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து செயற்படப்போவதாகவும், இனிமேல் தானே கிழக்கு மாகாணத்தின் தலைவராக இயங்கப்போவதாகவும் அறிவித்திருக்கிறார். தேசியத் தலைமைக்கு தமது விசுவாசத்தினைக் காட்டும் உறுதிமொழியினை பல்லாண்டுகளாக மாவீரரகளும், போராளிகளும் எடுத்துவரும் வழிமுறையினை இனிமேல் செயற்படுத்தப்போவதில்லையென்றும் அறிவித்திருக்கிறார்". "கருணா எமது தேசியக் கொடியினை அவமதித்துள்ளதோடு, உலகெங்கும் தமிழர்களால் வணக்கப்படும் மாவீரர்களையும் கொச்சைப்படுத்தியிருக்கிறார். தேசியத்தலைவரின் உருவப்படத்தினையும், உருவ பொம்மையினையும் எரிக்குமாறும் போராளிகளை வற்புறுத்தியிருக்கிறார். தனது அண்மைய செவ்விகளில் தமிழ்த் தேசியத்தை இழிவாகவும், மிகவும் அபத்தமாகவும் பேசிவருகிறார். தனது நலனுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்றுகுவித்த எதிரிகளுடனும், ராணுவ அதிகாரிகளுடனும் மிக நெருக்கமான சிநேகத்தை அவர் இப்போது கொண்டிருக்கிறார். தமிழ்த் தேசியத்தினை ஆதரிக்கும் பத்திரிக்கைகளைக் கொழுத்தியும் முற்றாகத் தடைசெய்தும் தனது துரோகத்தனத்தினை மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட மக்களிடமிருந்து மறைக்க கருணா முயன்று வருகிறார்". "மேற்சொன்ன முறைகேடுகள் எமது இயக்கக் கொள்கைகளுக்கும், விதிகளுக்கும் முரணானது என்பதால் இவற்றுக்குச் சரியான தண்டனை வழங்கப்படவேண்டும் என்பது நீங்கள் அறிந்ததே. எமது தலைவரால் கருணாவுக்கு வழங்கப்பட்ட மன்னிப்பினை கருணா உதாசீனம் செய்திருக்கிறார். மட்டக்களப்பு - அம்பாறை மக்களை இல்லாத பிரதேசவாதச் சிந்தனையில் ஆழ்த்திவைத்திருக்கும் கருணா தனது சுகபோக வாழ்வினை அனுபவித்துவருகிறார்". " தனது முறைகேடுகளை மறைக்க கருணா தொடர்ந்தும் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட மக்களை ஏமாற்றுவதை எமது தேசியத் தலைமை இனிமேலும் அனுமதிக்கப்போவதில்லை. மானிடத்தின் முன்னால் ஒரு குற்றவாளியாகவும், துரோகியாகவும் நிற்கும் கருணா, தனது தவறுகளை மறைக்க உங்களைப் பகடைக் காய்களாகவும், கவசமாகவும் பாவிக்கிறார். கருணாவின் சூழ்ச்சிக்கு ஒரு போராளியேனும் பலியாகிவிடக் கூடதெனும் எமது தேசியத் தலைமையின் உண்மையான கரிசணையினைப் புரிந்துகொள்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்". " தனது சூழ்ச்சிபற்றித் தெரியாத அப்பாவிப் போராளிகளையும், மக்களையும் பாவித்து எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கெதிராகச் செயற்பட்டுவரும் கருணா எம்மக்களின் விடுதலைக்கெதிரான துரோகிகளோடும், எதிரிகளோடும் கைகோர்த்திருக்கிறார். எமது மாவீரர்களினதும் போராளிகளினதும் தியாகங்களும், குருதியும் கருணாவினால் இன்று கேவலப்படுத்தப்பட்டு வருகின்றது. எமது தேசத்தையும் மக்களையும் காப்பதற்காக கருணாவை எமது மண்ணிலிருந்து அகற்றும் முடிவினை நாம் எடுத்திருக்கிறோம்". “எமது போராளிகள் கருணாவின் சூழ்ச்சிகளைப் புரிந்துகொண்டு அவரை விட்டு விலகியிருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். கருணாவின் துரோகத்திற்கெதிராக தேசியத்தலைமை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக நிற்போர் தேசியத்திற்கெதிரான துரோகிகளாகக் கணிக்கப்படுவர் என்பதையும் கூறிக்கொள்கிறோம். தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரனுக்கு விசுவாசமாக இருப்போம் என்கிற உறுதிப்பாடுடன் நீங்கள் இணைந்திருக்கிறீர்கள் என்பதும், உங்களின் பெற்றோர் இதனடிப்படையிலும்தான் உங்களை எம்மோடு இணைத்திருக்கிறார்கள் என்கிற வகையிலும் உண்மையினை அறியது கருணாவுடன் இன்று நிற்கும் போராளிகள் உடனடியாக அவரை விட்டு விலகுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கருணாவை விட்டு வெளியேறும் போராளிகள் தங்களது குடும்பங்களோடு இணைவதற்கான அனுமதியினை எமது தேசியத் தலைவர் வழங்கியிருக்கிறார் என்பதையும் இத்தாள் அறியத்தருகிறோம். “எமது வேண்டுகோள்களுக்குப் பின்னர் எந்தவொரு போராளியோ கருணாவின் சூழ்ச்சிகளுக்கும் துரோகத்தனங்களுக்கு ஆதரவாக நிற்பதென்று முடிவெடுத்தால், அவர்களின் முடிவிற்கு அவர்களே பாத்திரவான்களாக இருப்பார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். கருணாவின் துரோகத்திற்கு ஆதரவாக நின்று மரணிக்கும் எந்தவொரு போராளிக்கும் மாவீரருக்கான அந்தஸ்த்து ஒருபோதும் வழங்கப்படமாட்டட்து என்பதனையும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்". “தாயக விடுதலைக்காக இயக்கத்தில் இணைந்த போராளிகள் கருணா எனும் துரோகியினதும், அவரது கொலைக்குழுவினதும் நலத்திற்காக மரணிக்க வேண்டுமா என்பதை ஒருகணம் சிந்தியுங்க்கள். இன்று கருணாவுக்கு ஆதரவாக நிற்கும் பிரிவுத்தளபதிகள் பொறுப்புணர்வுடன் சிந்தித்து அவரிடமிருந்து விலகும் முடிவினை உடனடியாக எடுக்கவேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் சரித்திரத்தில் அவர்கள் மேல் விழவிருக்கும் பழிச்சொல்லிலிருந்து அவர்கள் தப்பித்துக்கொள்ள முடியும். “மட்டக்களப்பு - அம்பாறைப் போராளிகளின் வீரம்செறிந்த போராட்டச் சரித்திரம் கருணா எனும் இனத்துரோகியினால் களங்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது. நாம் அனைவரும் ஒன்றாகச் செயற்படுவதன் மூலம் கெளரவத்துடனும் தன்மானத்துடனுன் தலைநிமிர்ந்து வாழ்வோம்" துரோகத்தின் நாட்காட்டி : நாள் 26, மார்ச் 2004 யோசேப் பரராஜசிங்கத்தை தேர்தலில் நிற்கவேண்டாம் என்று மிரட்டிய கருணா துணை ராணுவக்குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வேட்பாளரான யோசேப் பரராஜசிங்கத்தை மட்டக்களப்பில் தேர்தல் பிரச்சாரத்தை உடனே நிறுத்துமாறு கருணா துணை ராணுவக்குழு அச்சுருத்தல் விடுத்திருக்கிறது. தமது கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை நிறுத்தாவிட்டால் விபரீத விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று இவ்வாயுதக்குழு மிரட்டியிருக்கிறது.
  9. உங்கள் கருத்தில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை ஆனால் இந்த இருபக்கத்தையும் தாண்டி எமது மக்களுக்கான கனவும் கொண்டு செல்லப்படணும் என்பதே அவா... நன்றி
  10. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 18, மார்ச் 2004 வடக்குக் கிழக்கு இணைந்த தாயகத்திற்காகத் தொடர்ந்தும் போராடுவேன் - யோசேப் பரராஜசிங்கம். "நான் எனது தேர்தல் பிரச்சாரங்களை புலிகளின் கட்டளைகளுக்கு இணங்கவே நடத்துவேன். ஒருங்கிணைந்த வடக்குக் கிழக்கு தாயகத்தின் அடிப்படையிலும், சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தமிழர் தேசத்தை உருவாக்கும்வகையில் எனது அரசியல் செயற்பாடு தொடரும். எனது குறிக்கோள்களிலிருந்து விலகி நடக்குமாறு என்னை நிர்ப்பந்தித்தால் நான் இத்தேர்தலில் இருந்து விலக்கிக்கொள்வேன்" என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் யோசேப் பரராஜசிங்கம் கனேடிய தமிழ் வானொலிக்கு செவ்வியளித்தார். . "கடந்த சில தினங்களாக கிழக்கில் தேர்தல்களம் சூடுபிடித்து வருகிறது. நான் எனது நிலையினைப் பற்றி மக்களுக்குத் தெளிவுபடுத்தி வருகிறேன். கருணாவின் பிளவின் பின்னர் இங்குள்ள தமிழ் அரசியல்வாதிகள் புலிகளிடமிருந்து அந்நியப்படுத்தப்பட்டு, அரசுக்குச் சார்பான நிலைப்பாட்டினை எடுக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டு வருகிறார்கள். என்மீது திணிக்கப்பட்ட அழுத்தங்களுக்கு நான் பதில் வழங்கி வருகிறேன். தந்தை செல்வாவின் வழியில் கடந்த 50 வருடங்களாக அரசியல் செய்யும் நான் ஒருபோதும் அந்த வழியினை விட்டு விலகி அரசுக்குச் சார்பான நிலையினை எடுக்கமாட்டேன் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகள் எனும் எனது அசைக்கமுடியாத நிலைப்பாட்டினை உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் தொடர்ந்து சொல்வேன் என்றும் கூறியிருக்கிறேன். என்னால் பிரதேசவாதம் பேசமுடியாதென்பதை என்மீது அழுத்தம் செலுத்துபவர்களுக்கு உறுதிபடக் கூறிவிட்டேன். புலிகளால் எனக்குக் கொடுக்கப்பட்ட ஒரு கடமை இருக்கிறது, அதனை நான் நிறைவேற்றப் போராடுவேன்". "எங்களை கொக்கட்டிச்சோலைக்கு வரச்சொல்லி, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தியினை மட்டுமே இனிமேல் பேசவேண்டும், தமிழரின் தாயகம், உரிமைகள் பற்றிப் பேசக்கூடாதென்று நிர்ப்பந்தம் தெரிவித்தார்கள். என்னுடன் வந்த பலர் அதனைப் பயத்துடன் ஏற்றுக்கொண்டபோதும், என்னால் அவர்கள் சொல்வதை ஏற்றுகோள்ளமுடியாதென்று அழுத்தம் திருத்தமாக அவர்களிடம் கூறிவிட்டேன். நான் தமிழ்த் தேசியத்திற்காகத் தொடர்ந்தும் போராடுவேன் என்றும், இணைந்த வடக்குக் கிழக்கே தமிழரின் தாயகம் என்பதை எப்போதும் விட்டுக்கொடுக்கமாட்டேன் என்றும் அவர்களிடம் கூறினேன்". "என்னுடன் இருந்தவர்கள் கட்டாயத்தின்பேரில் அவர்கள் சொல்வதற்கு இணங்கியிருக்கலாம். ஆனால், அது அவர்களதும் விருப்பமாக இருந்ததா என்பதுபற்றி நான் கருத்துக் கூற விரும்பவில்லை". "திருகோணமலை தேர்தல் கூட்டத்திற்கு கட்சியின் உப தலைவர் என்கிற வகையில் கலந்துகொள்ளச் சென்றபோது என்னைத் தடுக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன". "கிழக்கில் எனது நிலைப்பாட்டினை முன்வைத்து நான் தொடர்ந்தும் பிரச்சாரம் செய்வேன். அவர்கள் என்னைத் தடுக்கும்வரை இது தொடரும்". "கிழக்கின் மக்களும் அரச அதிகாரிகளும் இணைந்த வடக்குக் கிழக்கு தமிழர் தாயகத்திற்கே ஆதரவாகச் செயற்படுவதாகத் தெரிகிறது. அவர்கள் பலருடன் பேசியதிலிருந்து நான் இதனைப் புரிந்துகொண்டேன்". "நான் யாருக்கும் எதிராக அரசியல் செய்யவில்லை, எவரையும் தாக்கிப் பேசவில்லை. தமிழ்த்தேசியம் மீதான எனது விருப்பினால் எனது கொள்கைகளைப் பற்றிப் பேசுகிறேன். கடந்த காலங்களில் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாகப் பேசியதனால் இலங்கை ராணுவத்தாலும், உளவுப்பிரிவினராலும் பலமுறை அச்சுருத்தப்பட்டேன்". என்றும் அவர் கூறினார்.
  11. ஒருபோதும் அவர்களை தொடர சொன்னதில்லை ஆனால் தமிழ் மக்கள் இன்னும் அவர்களுக்கு வாக்களிப்பதற்கு ஒரு காரணமுண்டு அது குறைவான இழப்பு இவர்களால் என்பது மட்டும் தான் ஆனால் இந்த புதுக்குதிரைகளுக்கு எல்லைக்கோடு மற்றும் இலக்கு எஐமானின் காலடி மட்டுமே..
  12. கீத விநோத - திருப்புகழ்
  13. வானம் திறந்து வெண் புறா போல இறங்கி வரவேண்டும். விண்மீன் முடியென அணிந்தவளே எங்கள் மரியே நீ வாழ்க விண்ணக மண்ணக காவலியே எங்கள் மாதா நீ வாழ்க - (2) அம்மா நீ வாழ்க அமலியே நீ வாழ்க அடைக்கலமே வாழ்க - எங்கள் ஆறுதலே வாழ்க - (2) விண்மீன்..... 1. ஏழை மகனாம் இயேசுவுக்கு நீ எண்ணும் எழுத்தும் போதித்தாய் எல்லாம் அறிந்த இறைவனுக்கே உறைவிடம் ஆனவளே - (2) பிள்ளைகள் எம்மை கண்பாரும் அறிவில் கரை சேரும் - (2) கண்மணிபோல் காத்திடம்மா வழித்துணையும் நீயம்மா 2. வேளை நகரில் அமர்ந்தவளே நீ வேண்டும் வரங்கள் அருள்வாயே தேவையில் தேடி வருவோரை தேற்றிடும் தாரகையே - (2) கருணை மழையே கார்முகிலே கனிவே கனியமுதே - 2 கரம்பிடித்தே எமை நடத்தும் ஒளியின் வழியே நீயம்மா - 2
  14. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் மதீனா மணல்வெளியில்.🙏 அருள்மேவும் ஆண்டவனே... அன்புடைய காவலனே
  15. தலைமை தாங்குவது பற்றியே குறிப்பிட்டேன் குதிரைப்போட்டி பற்றியல்ல நீங்கள் சொல்வது போல் போட்டியாயினும் குதிரைகளின் பலம் பலவீனம் எல்லோரும் அறிந்திருக்கணும்
  16. கிளிகளை மகிழ்விக்கும் கிளிகள்.......! 🦜
  17. முருகனே ஜக மாயை - திருப்புகழ் முருகன் சுப்ரபாதம் லக்ஷ்மி வா நான் வாழ்ந்திடும் வீடு சூரியன் ஆயிரம் சுடர்முடியோடு லக்ஷ்மி வாராய் என் இல்லமே ஓம் நமோ நாராயண சிறந்த திருப்பதி பெருமாள்
  18. அத்திமரம் துளிர் விடாமற் போனாலும் நன்றியால் துதிபாடு
  19. இப்படிப்பட்ட திமிர் பிடித்த கூட்டங்கள் இருக்கும் வரை, ஏழைகளுக்கு விடிவில்லை, இவர்கள் எல்லாம் மோட்டு குடிகள்
  20. பத்மஸ்ரீ விருது பெற்ற ஒரு திருநங்கையின் மிகவும் சிறப்பான பேட்டி.....! 👍
  21. தொலைதூரம் சென்றாலும் தொட மாட்டோம்.......! 🚇

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.