Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    33600
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    88007
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    10
    Points
    46808
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    19163
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/18/20 in all areas

  1. நெருங்கும் போது அகப்படாமல் பறந்து போகிறாய்.... நிழலைப்போல தொடரும் என்னை மறந்து போகிறாய்....
  2. நடந்து வந்த பாதையிலே நாலுவழியும் பார்த்து வந்தேன்.....! 😁
  3. ராஜ கோபுரம் எங்கள் தலைவன்
  4. நயினாதீவு நாகபூஷணி அம்மன் பாடல் இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தனின் இசையமைப்பில் வேதகுள மைலியா வைரவர் பாமாலை இசை தொகுப்பில் இருந்து வைரவர் புகழ் பாடும் பாடல் பாடல் இசை -இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன் பாடல் குரல்வடிவம் -M.செல்வகுமார் பாடல் வரிகள் -MVK குமணா தயாரிப்பு -சிவநேசன் கரன் முறிகண்டிப் பிள்ளையார் பாடல். முடிசூடி நாடாளும் மன்னவனும் அங்கே திருவோடு ஏந்திவரும் ஆண்டியும் அங்கே
  5. கொஞ்சும் தமிழ் மொழியாலே ஆரிராரிரோ....... ஆரிராரிரோ..... ஆரிராரிரோ....... ஆரிராரிரோ...... சர்க்கரை முத்தெ சந்தண பொட்டே கண்ணே கண்ணுறங்கு முத்தமிழ் சொத்தே முல்லை பூ மொட்டே கண்ணே கண்ணுறங்கு அன்னை மரியின் செல்வமே விண்ணக தேவ திலகமே கண்ணே நீயும் கண்ணுறங்கு ஆரிராரிரோ.... ஆரிராரிரோ... ஆரிராரிரோ..... ஆரிராரிரோ....... கந்தையில் நீயும் மகிமை கண்டாய் கண்ணே கண்ணுறங்கு தந்தையின் அன்பை எமக்கு தந்தாய் கண்ணே கண்ணுறங்கு மந்தையின் ஆயர்கள் தோழமை கொண்டாய் கண்ணே கண்ணுறங்கு விந்தையில் வந்து வேந்தர்கள் நின்றாய் கண்ணே கண்ணுறங்கு ஆரிராரிரோ..... ஆரிராரிரோ.. ஆரிராரிரோ.... ஆரிராரிரோ....... விண்ணிலே தூதர் கீதங்கள் கேட்க கண்ணே கண்ணுறங்கு மண்ணிலே மாந்தர் நாதங்கள் சேர்க்க கண்ணே கண்ணுறங்கு கண்கவர் விண்மீன் உன்புகழ் பாட கண்ணே கண்ணுறங்கு தென்றலும் மெல்லிய தேனிசை மீட்ட கண்ணே கண்ணுறங்கு ஆரிராரிரோ.... ஆரிராரிரோ.... ஆரிராரிரோ.... ஆரிராரிரோ....... ஆ ஆரோ ஆரோ ஆரோ ஆ ஆரோ ஆரிரோ ஆராரோ கன்னி ஈன்ற செல்வமே இம் மண்ணில் வந்த தெய்வமே கண்ணே மணியே அமுதமே என் பொன்னே தேனே இன்பமே எண்ணம் மேவும் வண்ணமே என்னைத் தேடி வந்ததேன் ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ எங்கும் நிறைந்த இறைவன் நீ நங்கை உதரம் ஒடுங்கினாய் ஞாலம் தாங்கும் நாதன் நீ சீலக் கரத்தில் அடங்கினாய் தாய் உன் பிள்ளை அல்லவா சேயாய் மாறும் விந்தை ஏன் கன்னி ஈன்ற செல்வமே இம் மண்ணில் வந்த தெய்வமே வல்ல தேவ வார்த்தை நீ வாயில்லாத சிசுவானாய் ஆற்றல் அனைத்தின் ஊற்று நீ அன்னை துணையை நாடினாய் இன்ப வாழ்வின் மையம் நீ துன்ப வாழ்வைத் தேர்ந்ததேன் கன்னி ஈன்ற செல்வமே இம் மண்ணில் வந்த தெய்வமே
  6. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 மாகபூப் சுபகணி அருமையான பாடல்
  7. சகிப்புத்தன்மை.....தென்கச்சி கோ . சாமிநாதன்.......! 😂
  8. குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது. பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது. புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு துளைக்காது. பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூச்சிகள் உட்காராது. முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். மரம் செழிப்பாக வளரும். பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை தோண்டுங்கள். பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள். மீன்களைப்போல அடிக்கடி நீரில் நீந்துங்கள். நீங்கள் பூமியில் நடக்கும்போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள். அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும். நிறைய அமைதியாக இருங்கள், கொஞ்சம் பேசுங்கள். உங்கள் இதயத்தில் மௌனம் குடிகொள்ளும். உங்கள் ஆன்மா எப்போதும் அமைதியாக இருக்கும். விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுங்கள் . நாடு நாசமாகாது . - படித்ததில் பிடித்து ,முகப்புத்தகத்தில் இருந்து சுட்டது 🙂
  9. நாவற்குடா அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் காவடிப்பாடல்
  10. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 15, சித்திரை 2004 கருணா துணை ராணுவக்குழுவுக்கு அடைக்கலம் கொடுப்பதை வெளிப்படையாகக் கூற மறுக்கும் இலங்கை ராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலிலிருந்து கருணாவைப் பாதுகாத்து, அவரை கொழும்பிற்கு இலங்கை ராணுவமே அழைத்துவந்ததாக கொழும்பின் பிரபல தினசரியொன்றில் வந்த செய்தியை இலங்கை ராணுவம் மறுத்திருக்கிறது. இலங்கை ராணுவத்தின் ஊடகப் பிரிவின் சார்பாக கேர்ணல் தர அதிகாரி சுமேத பெரேரா இந்த அறிக்கையினை வெளியிட்டார். பெயர் குறிப்பிட விரும்பாத ராணுவ அதிகாரியொருவரை மேற்கோள் காட்டி இப்பத்திரிக்கை வெளியிட்ட முன்பக்க தகவலில், கடந்த திங்களன்று சுமார் ஆறு ராணுவ வாகனங்கள் பாதுகாப்பு வழங்க, கருணாவும் இன்னும் 20 அடிவருடிகளும் தம்புள்ளை - கொழும்பு வீதியூடாக பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டதாகவும், இந்த ராணுவத் தொடரணி இரவு 10 மணிமுதல் 11 மணிவரை தம்புள்ளையில் அமைந்திருந்த பிரபல உணவு விடுதியொன்றில் உணவருந்தியதாகவும் செய்திவெளியிட்டிருக்கிறது. கருணா குழுவினரும், அவர்களுக்குப் பாதுகாப்பாக வந்த விசேட ராணுவ அணியும் அந்த உல்லாச உணவுவிடுதியில் தரித்து நின்ற நேரம், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகவும், எவரும் அவ்வுணவு விடுதியினுள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லையென்றும் கூறும் அச்செய்தி, அவ்வுணவு விடுதியின் அனைத்துக் கதவுகளும் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக அடைத்துவைக்கப்பட்டிருந்ததாகவும் கூறுகிறது. அந்த ராணுவ அதிகாரியின் கூற்றுப்படி, கருணா குழுவுடன் அரசியல்வாதியொருவரும் கூடவே பயணித்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இச்செய்தி தொடர்பான மறுப்பறிக்கை கீழே "புலிகளிடமிருந்து பிரிந்து தனித்தியங்கும் கருணாவுக்கு இலங்கை ராணுவம் பாதுகாப்புக் கொடுத்து கொழும்பிற்கு அழைத்துவந்ததாக கொழும்பில் வெளியாகும் பத்திரிக்கையில் வந்த செய்திபற்றி பாதுகாப்பு அமைச்சு தனது கருத்தினைப் பதிவு செய்கிறது". " இலங்கை பாதுகாப்பு அமைச்சு இந்தச் செய்தியினை முற்றாக மறுக்கிறது. எம்மிடம் கருணா எதுவித உதவிகளையும் இதுவரை கோரவில்லையென்பதும், அவருக்கு இலங்கை ராணுவத்தின் எந்தப் பிரிவும் எதுவித உதவிகளையும் வழங்கவில்லையென்பதையும் இத்தால் உறுதிபடுத்திக்கொள்ள விழைகிறோம்". "மேலும், கருணாவினதோ அல்லது அவரது நெருங்கிய சகாக்களினதோ தற்போதைய இருப்பிடம் பற்றி இலங்கை அரசுக்கோ ராணுவத்திற்கு எதுவித தகவலும் தெரியாது". என்றும் அவ்வறிக்கை கூறியது.
  11. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 14, சித்திரை 2004 தப்பியோடும் கருணாவால் கொல்லப்பட்ட போராளிகளுக்கு அஞ்சலி செலுத்திய புலிகள் மட்டக்களப்பு மாவட்ட புலநாய்வுத்துறைப் பொறுப்பாளர் லெப் கேணல் நீலன் (சின்னத்தம்பி) தப்பியோடிய கருணாவால் 12 ஆம் திகதி கொல்லப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று அறிவித்தனர். லெப் கேணல் எனும் தரம் பொதுவாக அனுபவமுள்ள போராளிகளுக்கே வழங்கப்பட்டு வரும் நிலையில், நீலன் புலிகளின் பல வெற்றிகரமான தாக்குதல்களுக்கு தனது பங்களிப்பினை வழங்கியிருந்தார் என்று புலிகள் தெரிவித்திருக்கின்றனர். புலிகளின் அரசியற்துறையின் அறிக்கைப்படி மரணித்த நீலனின் திருவுடல் மட்டக்களப்பு இலுப்பையடிச்சேனையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் தாண்டியடி மாவீரர் மயானத்தில் விதைக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறது. புலிகளின் அறிக்கைப்படி மார்ச் மாதம் முதலாம் திகதி கருணாவால் சிறைவைக்கப்பட்ட நீலன், சித்திரை 12 ஆம் திகதி மருதம் முகாமிற்கு இழுத்துச் செல்லப்பட்டு, தான் தப்பியோடும் தறுவாயில் கருணா அவரைச் சுட்டுக் கொன்றதாக அறிவித்திருக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் புலநாய்வுத்துறை போராளிகள் அனைவரையும் கலந்துரையாடல் ஒன்றிற்காக மீனகம் முகாமிற்கு வருமாறு கருணா அழைத்திருந்தார். இதன்படி, நீலனும் ஏனைய புலநாய்வுப் போராளிகளும் அங்கு சென்றிருந்தனர். அங்கு மற்றையவர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட நீலன் கருணாவால் தனியாக விசாரிக்கப்பட்டதுடன், சிறையடைக்கப்பட்டார். சித்திரை 12 ஆம் திகதி தனது அடியாட்களைக் கொண்டு நீலனை தான் தங்கியிருந்த மருதம் முகாமிற்கு இழுத்துவந்த கருணா அங்கு அவரைச் சுட்டுக் கொன்றார். கண்கள் கட்டப்பட்டு, கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் நீலனின் உடல் போராளிகளால் கண்டெடுக்கப்பட்டது. நீலனுடன் சேர்த்துக் கருணா கொன்றுபோட்ட போராளிகள் மற்றும் அனுதாபியொருவரது பெயர் விபரங்கள் புலிகளால் வெளியிடப்பட்டது. அவை வருமாறு, 1. மேஜர் தமிழீழன் (தமிழ்) மரணித்த நாள் சித்திரை 4 2. கப்டன் மாவேந்தன் - மரணித்த நாள் சித்திரை 10, களுவங்கேணி 3. கப்டன் நம்பி - மரணித்த நாள் சித்திரை 10, வாகரை 4. லெப். வர்ணகீதன் (சபா) மரணித்த நாள் சித்திரை 10, களுவங்கேணி 5. புலிகளின் அனுதாபி மோகன் - கொல்லப்பட்ட நாள் சித்திரை 10, களுவங்கேணி
  12. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 13, சித்திரை 2004 கருணா குழுவினரால கட்டாயப்படுத்திச் சேர்க்கப்பட்ட சிறார்கள் உட்பட 269 போராளிகளைப் புலிகள் அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைத்தனர் கருணா துணை ராணுவக் குழுவினரின் நடவடிக்கைகள் கிழக்கு மாகாணத்தில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து புலிகளுடன் மீண்டும் சேர்ந்துகொண்ட பல போராளிகளில் 269 போராளிகள் மீண்டும் அவர்களின் பெற்றோருடன் அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்களுள் 168 பேர் 18 வயதிற்கும் குறைவானவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. 18 வயதிற்கு மேற்பட்ட 33 பெண்போராளிகளும், 68 ஆண் போராளிகளும் பெற்றோருடன் அனுப்பிவைக்கப்பட்டனர். 18 வயதிற்குக் குறைவான 168 போராளிகளில் 113 போராளிகள் பெண்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. சிறார்களைப் பெற்றோரிடம் கையளிக்கும் நிகழ்வில் புலிகளின் தளபதிகளான ராம், கெளசல்யன் ஆகியோரும், அரச பிரதிநிதி தியாகராஜா மற்றும் புலிகளின் சமாதானப் பணியகத்தின் பவானந்தன் மற்றும் யுனிசெப் பிரதிகளும் கலந்துகொண்டனர்.
  13. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 13, சித்திரை 2004 "மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணாவை காண முடியவில்லை - புலிகளின் தளபதிகள் கருத்து" கருணா துணை ராணுவக் குழுவுக்கெதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் புலிகளின் தளபதிகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து முகாம்களும் கைப்பற்றப்பட்டு, முழுமையான தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், ஆனால் இந்த முகாம்கள் எங்கிலும் கருணாவைக் காணமுடியவில்லை என்றும் அறிவித்திருக்கிறார்கள். "மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களின் ஆயுதக் களஞ்சியங்களை நாம் முற்றாக மீட்டுள்ளோம், ஒரு மோட்டார் செலுத்தியும் சில தானியங்கித் துப்பாக்கிகளும் காணாமல்ப் போயிருக்கின்றன. வெடிமருந்துகள் மற்றும் ரவைக்களஞ்சியங்கள் பாதுகாப்பாக இருக்கின்றன" என்றும் தெரிவித்தார்கள். மேலும், புலிகளின் பிரதான முகாமான மீனகத்தில் பல வாகனங்கள் தப்பியோடிய கருணா துணைராணுவக் குழுவினரால் தீவைத்துக் கொழுத்தப்பட்டிருக்கின்றன. "இந்த முகாம்களைப் பார்க்கும்போது, கருணாவும் அவரது அடியாட்களும் அவசரத்தில் வெளியேறி ஓடியிருப்பது தெரிகிறது. அரைகுறையாக நிரப்பப்பட்ட வாகனங்கள் மற்றும் கடைசிநேர பொதிகட்டல்களைப் பார்க்கும்போது எமது விசேட படையணிகளின் தாக்குதலை அவர் எதிர்பார்த்திருக்கவில்லையென்பதும், அவருக்குப் போதுமான கால அவகாசத்தினை எமது தாக்குதல் அணிகள் கொடுத்திருக்கவில்லையென்பதும் புலனாகிறது. அத்துடன், அவரது கட்டளைகளை ஏற்கமறுத்த பல அணிகள் எம்முடன் தொடர்புகொண்டது போராளிகள் மேலான தனது கட்டுப்பாட்டை அவர் முற்றாக இழந்துவிட்டாரென்பதையும் தெளிவாக்குகிறது". தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்கு விசுவாசமாக இருந்த நீலன் எனும் போராளியைக் கைதுசெய்து சித்திரவதைப்படுத்தியிருந்த கருணா, ஈற்றில் அவரைக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மீட்கப்பட்ட போராளிகள் கூறினர். " பெண்டுகல்ச்சேனை பகுதிமக்கள் எம்மிடம் கூறும்போது, கருணாவும் அவரது அடிவருடிகளும் இரு வாகனங்களில் வாலைச்சேனை - பொலொன்னறுவை வீதியிலுள்ள நாலாம் முச்சந்தி நோக்கி விரைந்ததாக கூறுகிறார்கள்" என்று தரவைப் பகுதியைக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்த விசேட தளபதியொருவர் கூறினார். ஆப்ப்குதிக் காடுகளைச் சல்லடைபோட்டுத் தேடிய புலிகளின் அணிகள் கருணாவையோ அல்லது அவரது அடிவருடிகளையோ காண முடியவில்லை என்றும் அவர் கூறினர். கருணாவும் அவரது அடிவருடிகளும் கல்லிச்சை - வடமுனைக் காடுகளினுள் பதுங்கியிருப்பதாக வந்த செய்திகளை மறுத்த அத்தளபதி, "நாம் அக்காடுகளை அங்குலம் அங்குலமாகச் சல்லடை போட்டு தேடிவிட்டோம், அவர் அங்கு இல்லை" என்று கூறினார். புலிகளின் கிழக்குப் பிராந்திய தகவல்களின்படி கருணாவின் இரு தளபதிகளான ஜிம் கெலித் தாத்தா, ரொபேட் மற்றும் பேச்சாளர் வரதன், நிதிப்பொறுப்பாளர் குஹனேஸ், விசாலகன் அணிப்பொறுப்பாளர் ஜீவேந்திரன், மட்டக்களப்பு பெண்போராளிகளின் தளபதி நிலவினி, கிழக்கு மாகாண அரச சார்பற்ற நிறுவனங்களின் மேற்பார்வையாளர் துரை, டீடோர் பொறுப்பாளர் துரை, நெருங்கிய சகா இலங்கேஸ் மற்றும் ஐந்து மெய்ப்பாதுகாவலர்கள் ஆகியோரே தரவைப் பகுதியிலிருந்து ஞாயிறு இரவு தப்பியோடியுள்ளதாக கூறியிருக்கின்றனர். இதேவேளை கருணாவினால் கிழக்கு மாகாண அரசியல்த்துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட விசு புலிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு, வார இறுதியில் இணைந்துகொள்வதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன.
  14. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 13, சித்திரை 2004 கதிரவெளிப் பகுதியில் கருணா துணை ராணுவக் குழுவுடனான மோதலில் வீரச்சாவடைந்த போராளிகளின் பெயர்களை புலிகள் இயக்கம் அறிவித்தது கதிரவெளி மோதல்களில் 9 ஆம் திகதி வீரச்சவடைந்த போராளிகளின் பெயர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வெளியிட்டிருக்கிறது. அப்பெயர்கள் வருமாறு, 1. வேலு பாண்டியன் (லெப் பொதிகைத்தேவன்) பதுளை வீதி, கித்துள் குளம், கரடியனாறு, மட்டக்களப்பு 2. கந்தசாமி அருள்ச்செல்வம் (2 ஆம் லெப் சங்கோலியன்), கடுக்காய்முனை, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு 3. தங்கராசா குகன் ( மலர்க் குமரன்), மாவளையான், கரடியனாறு, மட்டக்களப்பு இதேவேளை வாகரை பிரதேச சபைச் செயலாளரின் அறிக்கைப்படி கருணா குழுவினரால் ஏற்படுத்தப்பட்ட அசெளகரியமான நிலையினை அடுத்து சுமார் 2405 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் கதிரவெளி, பால்ச்சேனை, அமனாவெளி, வாகரை ஆகிய பிரதேசங்களிலிருந்து பாதுகாப்பான பகுதிகள் நோக்கி இடம்பெயர்ந்திருப்பதாகவும், அவர்களுக்கான உலர் உணவுப்பொருட்களை தாம் விநியோகித்துவருவதாகவும் கூறியிருக்கிறார்.
  15. குழந்தை ஜேசுவின் வருகையை எதிர்நோக்கி .......! 🌲
  16. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 12, சித்திரை 2004 தனது மறைவிடத்திலிருந்து கருணா தப்பியோட்டம் புலிகளியக்கத்திலிருந்து தனித்தியங்குவதாகக் கூறிவந்த கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தனது மறைவிடத்திலிருந்து தனது நெருங்கிய சகாக்கள், மெய்ப்பாதுகாவலர்கள் சகிதம் தப்பியோடிவிட்டதாக ஆரம்பத்திலேயே கருணாவைவிட்டு வெளியேறிய கரிகாலன் தெரிவித்தார். கிழக்கிலிருந்து வரும் தகவல்களின்படி, மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தப்பியோடிய கருணாவும் அவரது நெருங்கிய சகாக்களும் பொலொன்னறுவை மாவட்டத்திலுள்ள சிங்கள ராணுவ முகாமில் அடைக்கலமாகியிருப்பதாகத் தெரியவருகிறது. கருணாவுக்கு ராணுவம் பாதுகாப்பும், அடைக்கலமும் வழங்குகின்றதா என்று பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு ராணுவம் நேரடியான பதிலை வழங்காது, விசாரித்துவிட்டு சொல்கிறோம் என்று கூறியிருக்கிறது. தனது சகோதரர் உற்பட பலர் கருணாவின் பிடிக்குள் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கரிகாலன் மேலும் தெரிவித்தார். இதேவேளை ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் புலிகள் இயக்க அரசியல்த்துறைப் போராளி கெளசல்யன் உடனடியாகத் தனது பயணத்தை இடைநிறுத்திக்கொண்டு கிழக்கில் தனது கடமைகளைப் பொறுப்பேற்று கருணா குழுவிலிருந்து மீள் இயக்கத்தில் இணையும் போராளிகளை பொறுப்பேற்கவும், கிழக்கில் மீண்டும் புலிகளது அரசியல் செயற்பாடுகளை ஆரம்பிக்கவும் அழைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. கருணாவினால் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட மீனகம் முகாம் தொடர்ந்தும் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாகத் தெரிவித்த புலிகள், கருணாவின் ஊதுகுழலாக இதுவரை செயற்பட்ட தமிழ் அலை இணையம் மீளவும் தனது வழமையான செயற்பாட்டினைத் தொடங்கும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். கருணாவின் திடீர் தப்பியோடுதலை வரவேற்றிருக்கும் மட்டக்களப்பு வாசிகள் வரவிருக்கும் தமிழ் சிங்களப் புத்தாண்டைக் கொண்டாட ஆயத்தமாகிவருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏ எப் பி செய்திச் சேவையின்படி, புலிகளுடனான தமது மோதலை தாம் முடித்துக்கொண்டுள்ளதாக கருணா குழு அறிவித்திருப்பதாகத் தெரிகிறது. "சுமார் 400 இலிருந்து 500 வரையான போராளிகளை வீடுகளுக்குச் செல்லுமாறு கூறினார்கள். நானும் இன்னும் சிலருமே இறுதியாகப் பெற்றோரிடம் வந்து சேர்ந்தோம், ஏனையவர்கள் ஏற்கனவே சென்றுவிட்டார்கள்" என்று அருள்மொழி எனப்படும் போராளி தெரிவித்தார்.
  17. துரோகதின் நாட்காட்டி : நாள் 12, சித்திரை 2004 மட்டக்களப்பு நகர் நோக்கி முன்னேறும் புலிகள் புலிகளின் தாக்குதல் அணிகள் மட்டக்களப்பு நகரின் தென்மேற்குப் பகுதி நோக்கி திங்களன்று முன்னேறி வந்து நிலைகொண்டிருக்கின்றன. பல பகுதிகளிலிருந்து முன்னேறிவந்த புலிகளின் அணிகள் கொக்கட்டிச்சோலையினை திங்கள் பிறபகல் தமது பூரண கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தனர். கருணாவின் ஊதுகுழலாகச் செயற்பட்டுவந்த தமிழ் அலை காரியாலயமும் அச்சகமும் புலிகளின் அரசியல்த்துறையினரால் பொறுப்பெடுக்கப்பட்டன. கருணாவின் பிரதான தளமாகச் செயற்பட்ட மீனகம் முகாமிலிருந்து நூற்றுக்கணக்கான ஆண் பெண் போராளிகள் வெளியேறி தமது வீடுகள் நோக்கிச் செல்வதாகத் தெரியவருகிறது. மட்டக்களப்பின் பிரதான பகுதிகள் நோக்கி முன்னேறிவரும் புலிகளுடன் இணைந்துகொள்ளுங்கள், இல்லையேல் உங்களின் வீடுகளுக்குச் செல்லுங்கள் என்று தமது பிரிவுத்தளபதிகள் தம்மிடம் அறிவுருத்தியதாக இப்போராளிகள் தெரிவிக்கின்றனர். கருணாவின் பிரச்சார நிலையம் - தேனகம், கரடியனாறு கருணாவின் தளங்களில் ஒன்றான தேனகம் மண்டபத்திற்குச் சென்றிருந்த புலிகளின் தளபதியொருவர் அத்தளம் முற்றாகக் கைவிடப்பட்டு வெறிச்சோடிக் காணப்படுவதாகத் தெரிவித்தார். தேனகம் மண்டபமே கருணாவின் பிரதான தொடர்பாடல் மற்றும் பிரச்சார நிலையமாக விளங்கியதுடன் இங்கிருந்தே அவர் பல உள்நாட்டு வெளிநாட்டு செய்திச் சேவைகளுக்கு தனது துரோகம் பற்றிய நியாயப்படுத்தலை வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொக்கட்டிச்சோலைப் பகுதியைக் கைப்பற்றியுள்ள புலிகளின் அணிகளின் பேச்சாளர் தெரிவிக்கையில் கரடியனாறு மற்றும் தேனகம் பகுதிகளை திங்கள் மாலையுடன் தமது பூரண் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துவிடுவோம் என்று கூறினார். தமது முன்னேற்ற நடவடிக்கைகளின்பொழுது எதுவித எதிர்ப்பும் இருக்கவில்லையென்றும், தம்முடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ள பல தளபதிகள் போராளிகள் சகிதம் மீளவும் புலிகளியக்கத்தில் இணையும் விருப்பத்தைத் தெரிவித்துவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மட்டக்களப்பு நகரிலும், அதனைச் சுற்றியுள்ள இடங்களிலிருந்தும் கருணாவின் அரசியல்த் தரகர்களாகச் செயற்பட்ட பலர் தற்போது அவர்களின் காரியாலயங்களை கைவிட்டு விட்டு வெளியேறிவிட்டதாக அப்பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர்.
  18. துரோகதின் நாட்காட்டி : நாள் 11, சித்திரை 2004 கருணாவின் கட்டுப்பாட்டின் கீழிருந்த பல போராளிகள் மீட்பு, ஆயுதங்களைக் கைவிட்டு பின்வாங்கிய கருணா குழு வாகரையில் கருணா குழு மீது நடத்தப்பட்ட கொமாண்டோ ரகத் தாக்குதல்களில் பலபோராளிகளை புலிகள் விடுவித்ததுடன், பல ஆயுதங்களையும் மீட்டிருக்கின்றனர். கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் 120 மி மீ எறிகணைச் செலுத்திகள் மூன்று, அவற்றுக்கான எறிகணைகள் 1,000, 82 மி மீ எறிகணைச் செலுத்திகள் 4, அவற்றுக்கான எறிகணைகள் 370, பெருமளவு 5 மி மீ மோட்டார்கள், 50 கலிபர் விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் 2 மற்றும் 300 சிற்றாயுதங்கள் ஆகியவை அடங்குகின்றன. கருணாவின் ஊதுகுழலாகச் செயற்பட்டுவரும் தமிழ் அலை இணையத்தின் செய்திப்படி குறைந்தது 450 போராளிகள் வாகரைப்பகுதியில் கருணா குழுவை விட்டு வெளியேறியிருக்கின்றனர். அதேவேளை அம்பாறை மாவட்டத்தில் தளபதிகள் ஆதீஸ்வரன் மற்றும் வினோ தலைமையிலான 200 போராளிகள் கருணாவை விட்டு வெளியேறி மீள புலிகளுடன் இணைந்திருப்பதாக தமிழ் அலை இணையம் மேலும் தெரிவிக்கிறது. வாகரையின் வீழ்ச்சியோடு பெருமளவு போராளிகள் கருணா குழுவினை விட்டு வெளியேறி வருவதுடன், இவர்களில் பலர் வெளிநாடு செல்லும் நோக்கில் கொழும்பை நோக்கிச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கருணா குழுவின் வீழ்ச்சியை வரவேற்றிருக்கும் வாகரை மக்கள் அப்பகுதியில் தங்கியிருக்கும் புலிகளுக்கு தொடர்ச்சியாக உதவிவருகின்றனர். வாகரை மீதான புலிகளின் ராணுவ நவடிக்கை புலிகளின் சிறப்புத் தளபதி ரமேஷினால் ஒருங்கிணைக்கப்பட்டிருந்ததுடன், தளபதிகள் பிரபா மற்றும் ஜெயாந்தன் ஆகியோரினால் வழிநடத்தப்பட்டது.
  19. மூளையுள்ள அறிவுள்ள இடத்தில் அதிர்ச்சி தரும் படியாய் தொழில் புரிவோர்......! 😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.