Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    14
    Points
    46808
    Posts
  2. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    8910
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    19163
    Posts
  4. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    23926
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/23/20 in all areas

  1. நான் : உங்கள் மனைவியை எப்படி அழை ப்பீர்கள் ? நண்பன் ..நான் என் மனைவியை டீ ..போட்டு (அ )டீ அழைப்பேன் ... நான் : அப்படியா ? நண்பன் : இல்ல மச்சான் டீ ( Tea ) போடட பின் அழைப்பேன் . குறும்பன் 1. சிரி ப்பு வந்தால் ...சிரிக்கலாம், குறும்பன் 2. அழுகை வந்தால் ..அழு துவிடலாம் குறும்பன் 1 : சின்ன வீடு வந்தால் ? குறும்பன் 2 :: ஹா ஹா ..குஜால் பண்ணலாம். சார் : என்னடா ? பையன் ...அடுத்த மாதம் பரீடசை யில் இல் 0 (முடடை ) போடாதீங்க சார் சார் : ஏண்டா ? பையன் : அடுத்த மாதம் புரட்டாதி சார் விரதம் பையன்: அடுத்த வா ரம் ஸ்கூல் போக மாடடேன் அம்மா : ஏண்டா கண்ணு ? பையன் நம்ம சார் ஆல் இந்தியா ரேடியோ ...போல முழு ஸ்கூல் க்கும் கேட்க சவுண்டு விடுகிறார். அம்மா : ????? என் சுய முயற்சி வந்தவர்கள் ஒரு பச்சையை போட்டு விடுங்கப்பா 😀
  2. குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா சென்னிமலை சுப்ரமணிய சாமிக்கு . . . அரோகரா . . . நின்றருளும் அருணாச்சலன் பிள்ளையல்லவா தாயும் தந்தையும் நீயல்லவா எனக்கு தாயும் தந்தையும் நீயல்லவா தாயே நயினை நாகபூஷணியே
  3. மீட்பர் பிறந்துள்ளார் அவரே மெசியா மகிழ்ந்து பாடி ஆர்பரிப்போம் -2 நம் மீட்ப்பரும் அவரே நல் மேய்ப்பரும் அவரே - 2 இன்னிசை முழங்கிட கிறிஸ்மஸ் பிறந்ததே மீட்பர் பிறந்துள்ளார் அவரே மெசியா மகிழ்ந்து பாடி ஆர்பரிப்போம் சரணம் - 1 ஆண்டவர் இயேசு அன்பைத் தர வந்தார் மண்மீது தவழ்ந்திட மாட டையில் பிறந்தார் அருளைப் பொழிந்திட அக இருளை அகற்றிட மானுடன் பாவத்தை போக்கவே வந்தார் - 2 மகிழ்வோம் புகழ்வோம் மண்ணோரின் இரட்சகரை சரணம்-2 வாழ்வளிக்கும் வள்ளதேவன் வார்த்தையாக வந்தார் வையகம் எல்லாம் வாழ்த்த விடியலாக வந்தார் உன்னதர் இயேசு உலகிற்கு வந்தார் தந்தையின் அன்பை தரணிக்கு தந்தர் மகிழவோம் புகழ்வோம் மண்ணோரின் இரட்சகரை பனித்துளி தூவிடும் இரவில் வான் கூரையையாய் கொண்ட தொழுவில் தெய்வ சுதனாய் அன்னை மடியில் தவழ்ந்தார் இயேசு பாலன் மண்ணுலகை அவர் மீட்டிட மாடடை குடிலில் பிறந்திட்டார் மானிடர்கள் பாவம் போக்கிட ஏழையின் கோலம் எடுத்திட்டார் தேவலோகம் துறந்த இயேசு கன்னியின் மைந்தனாகினார் விண்ணொளி வானத்தில் தோன்றிட தூதர்கள் நற்செய்தி உரைத்தனர் மந்தையை காத்திட்ட மேய்ப்பர்கள் அவர் முகம் காண விரைந்தனர் பாலன் இயேசுவை கண்டு மகிழ்ந்து வாழ்த்தி வணங்கி துதித்தனர்
  4. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏
  5. கடவுள் இருக்கான் குமாரு.....😎
  6. தவளைகள் என்றும் சர்ப்பத்தால் சாகும், சர்ப்பமும் ஒருநாள் தவளையால் மாளும் .......! 🐍 🐸
  7. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 13, ஆடி 2004 உயிர் அச்சத்தின் காரணமாக நாட்டைவிட்டே வெளியேறும் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கிழக்கு மாகாணத்தில் கருணா துணை ராணுவக்குழுவினால் தமக்கு விடுக்கப்பட்டுவரும் கொலைப் பயமுருத்தல்களினால் குறைந்தது 10 வடமாகாணத்தைச் சேர்ந்த தமிழ் விரிவுரையாளர்கள் நாட்டைவிட்டே செல்லும் முடிவினை எடுத்திருக்கிறார்கள். 10 வருடச் சேவையினை முடித்தவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வு விடுப்பினைப் பாவித்து நீண்டகால அடிப்படையில் இவர்கள் நாட்டைவிட்டு வெளியேறலாம் என்று கருதப்படுகிறது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சார்பில் கருத்துத் தெரிவித்த ஆசிரியர் ஒருவர்," எமது பொருளியல்ப் பீட பீடாதிபதி, கலாநிதி குமாரவேல் தம்பையா அவரது வீட்டில் வைத்து கருணா துணை ராணுவக் குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, தமக்கும் இது நிகழலாம் என்கிற அச்சம் அவர்கள் எல்லோருக்கும் இருக்கிறது" என்று கூறினார். கலாநிதி குமாரவேல் தம்பையா கருணாவின் பிளவினையடுத்து யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள் தாக்கப்படலாம் என்கிற அச்சத்தில் மட்டக்களப்பிலிருந்து வெளியேறியிருந்தார். பின்னர், புலிகளால் கருணா விரட்டியடிக்கப்பட்டதையடுத்து மீளவும் மட்டுநகர் திரும்பியிருந்தார். ஆனால், இலங்கை ராணுவத்துடன் சேர்ந்தியங்கிய கருணா குழு அவரை ஞானசூரியம் சதுக்கத்தில் அமைந்திருந்த அவரது இல்லத்தில் வைத்து மே மாதம் 24 ஆம் நாள் தலையில் சுட்டுக் கொன்றது. "வெளிப்படையான அச்சுருத்தல் அவர்களுக்கில்லை என்றாலும் கூட, அரச ஆதரவுடன் இயங்கும் கருணாவால் தாம் எப்போதும் கொல்லப்படலாம் என்கிற அச்சமே அவர்களை நாட்டைவிட்டு விலகிச் செல்ல நிர்ப்பந்திக்கிறது" என்று அவர் மேலும் கூறினார்.
  8. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 11, ஆடி 2004 கருணாவுக்கு வெளிப்படையாகவே இலங்கை அரசு ஆதரவு வழங்குகிறது - புலிகள் நடைபெற்றுவரும் சமாதான பேச்சுவார்த்தைகளைக் குழப்பும் முகமாகவும், மக்களைக் குழப்பத்தில் வைத்திருக்கும் விதத்திலும் கருணாவுக்கு அரச ஊடகங்களிலும், செய்திச்சேவைகளிலும் அரசு முன்னுரிமையளித்து வருகிறது என்று மட்டக்களப்பு அம்பாறை அரசியல்த்துறைப் பொறுப்பாளர் கெள்சல்யன் தெரிவித்தார். அரச வானொலியில் கருணாவின் பேட்டியினை ஒலிபரப்பியதுபற்றி கண்டனம் தெரிவித்த கெளசல்யன், "கருணாவுக்கு அரச வளங்களை வழங்கியிருப்பதன் மூலம், புலிகளுக்கெதிரான பொய்ப்பிரச்சாரத்தையும், பினாமி யுத்தம் ஒன்றையும் இலங்கையரசு செய்துவருகின்றது என்பது இப்போது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கருணாவைப் பயன்படுத்தி இலங்கை ராணுவத்தின் புலநாய்வுப்பிரிவு புலிகளுக்கெதிராகவும், தமிழ் மக்களுக்கெதிராகவும் நாசகார தாக்குதல்களை மேற்கொண்டுவருவதுடன், சமாதானப் பேச்சுவார்த்தைகள் குழம்பவேண்டும் என்ற நோக்கிலும் செயற்பட்டு வருகிறது" என்றும் அவர் கூறினார். "இலங்கையரசின் உண்மையான நோக்கம் பற்றிய மிகத் தெளிவான பார்வை எமக்கு இருக்கிறது. அது கருணாவைப் பாவித்து எம்மைப் பலவீனப்படுத்துவதில் குறியாக இருக்கிறது. இதன்மூலம் தமிழ்மக்களுக்குச் சொல்லப்பட்டிருக்கும் செய்தி என்னவெனில், இலங்கையரசாங்கம் ஒருபோதுமே சமாதானத்தில் நாட்டம் காட்டவில்லையென்பதும், ஆனால் சமாதான காலத்தைப் பாவித்து எம்மை அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தோற்கடித்து முற்றான அழிவு யுத்தம் ஒன்றினை எம்மீது கட்டவிழ்த்து விடவே முயல்கிறது என்பதுதான்" என்றும் அவர் மேலும் கூறினார். "இலங்கையரசு எம்மைப் பலவீனப்படுத்தி அழித்துவிடலாம் எனும் நோக்கில் போரில் ஈடுபட்டால், நாமும் அதற்கெதிரான நடவடிக்கைகளை எடுப்பதைத்தவிர வேறு வழிகள் இல்லை" என்று அவர் கூறினார்.
  9. துரோகத்தின் நாட்காட்டி: நாள் 05, ஆடி 2004 பெளத்த விகாரையில் தங்கவைக்கப்பட்டிருந்த கருணா குழு உறுப்பினர்கள் கைது ஹிங்குராகொட பொலீஸாரின் தகவல்ப்படி அப்பகுதி பெளத்தவிகாரையொன்றில் தங்கியிருந்த கருணா துணை ராணுவக் குழுவினர் என்று சந்தேகிக்கப்படும் இளைஞர்களைத் தாம் கைதுசெய்ததாகக் கூறியிருக்கின்றார்கள். கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து மூன்று டி - 56 ரக துப்பாக்கிகள், மூன்று டி - 84 ரக துப்பாக்கிகள், டி - 81 ரக துப்பாக்கி ஆகியவையும் 6 கைய்யெறிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டதாகவும், அவர்களின் பாவனைக்கென்று வழங்கப்பட்டிருந்த ஒரு வான் ரக வாகனமும் ஒரு மோட்டார்வண்டியும் பொலிஸாரினால் கையகப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மிக அண்மைக்காலம்வரை இலங்கை ராணுவத்தின் அமெரிக்க ராணுவத்தால் பயிற்றப்பட்ட விசேட படைப்பிரிவொன்று இந்த பெளத்த ஆலயத்தில் தங்கியிருந்ததாகவும், இந்த படைப்பிரிவே மட்டக்களப்பு மாவட்டத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் ஆள ஊடுருவி புலிகளையும் பொதுமக்களையும் இலக்குவைத்துக் கொன்றுவந்ததாகவும் கூறப்படுகிறது. புபுல ஆலயம் என்றழைக்கப்படும் இந்த பெளத்த ஆலயத்தின் விகாராதிபதி கடந்த ஆண்டு பாராளுமன்றத் தேதலில் சிங்கள இனவாதக் கட்சியான சிஹல உறுமயவின் சார்பில் பொலொன்னறுவை மாவட்டத்தில் போட்டியிட்டவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. புபுல விகாரையிலிருந்த இந்த 14 கருணா துணை ராணுவக் குழு உறுப்பினர்களையும், அவர்களின் ஆயுதங்கள் சகிதம் திங்கள் இரவு பொலிஸார் கைதுசெய்தனர். கருணா குழு உறுப்பினர்களைப்பற்றிக் கருத்துத் தெரிவித்த சிஹல உறுமயக் கட்சியின் முக்கியஸ்த்தரான அந்தத் தேரர், "அவர்கள் மட்டக்களப்பு நோக்கிப் போய்க்கொண்டிருந்தனர். தங்க அனுமதிகிடைக்குமா என்று கேட்டுக்கொண்டதனால் நானும் அனுமதித்தேன். அவர்களிடம் ஆயுதங்கள் இருந்தனவா என்பதுபற்றி எனக்குத் தெரியாது" என்று பதிலளித்தார். தேரர் மேலும் கூறுகையில், அந்த இளைஞர்களை எனது பிரதான காரியாலயம்தான் என்னிடம் அனுப்பி வைத்தது என்றும் அவர் தெரிவித்தார். இதற்கிடையில், கருணா குழு இளைஞர்களைக் கைதுசெய்த போலீஸார்மீது கடுமையான கண்டனங்கள் விடுக்கப்பட்டதையடுத்து, அவ்விளைஞர்கள் அனைவரும் எதுவிதக் குற்றச்சாட்டுக்களுமின்றி மறுநாளே விடுவிக்கப்பட்டதுடன், அவர்களின் ஆயுதங்களும் மீளக் கையளிக்கப்பட்டன. இவர்களை ராணுவம் பின்னர் பொறுப்பெடுத்து அழைத்துச்சென்றதாக சிங்கள, ஆங்கில ஊடகங்கள் செய்திவெளியிட்டிருந்தன. Suspected Karuna cadres released on bail September 3, 2004 by lrrp The Hingurakgoda magistrate Tuesday released fourteen Tamil youth who were arrested with assault rifles and bombs by Sri Lanka Police in a village Buddhist temple in Hingurakgoda Monday evening. They were enlarged on personal surety bail, Police said. Possession of illegal weapons is a unbailable offense under Sri Lankan law. Sinhala nationalist media in Colombo did not report the arrest. Meanwhile, the head of LTTE’s political division in Batticaloa, Mr. E. Kousalyan said that he had conveyed message to Deputy Inspector General (Eastern Range), Mr. Nevil Wijesingha, confirming the identities of the fourteen youth as members of the renegade commander Karuna’s group. Police sources said that the released youth, who did not know any Singhalese were escorted out of court by persons from the Sri Lanka army intelligence. ”Now it is very obvious that the Sri Lankan authorities are conniving with their military intelligence and Police to gather, arm and send stragglers of the Karuna group to murder innocents and sabotage the peace. ”What happened today is a travesty of justice”, Mr. Kousalyan said. He further pointed out that a group of LTTE cadres who were arrested by Sri Lanka Police with a box of cartridges in Batticaloa in early 2003 are still in custody because the courts refuse to grant them bail. Police sources in Hingurakgoda who were involved in the arrest of the armed youth said that they (the youth) had told them that they were on their way to the Thoppigala jungles in the Baticaloa District. LTTE has military bases in this region.
  10. துரோகத்தின் நாட்காட்டி: நாள் 30, ஆனி 2004 இலங்கை ராணுவப் புலநாய்வுத்துறையுடன் செயற்பட்டுவந்த ஏழு கருணா துணைராணுவக் குழுவினர் புலிகளால் கைது இலங்கை ராணுவப் புலநாய்வுத்துறையுடன் செயற்பட்டுவந்த ஏழு கருணா துணைராணுவக் குழு உறுப்பினர்களைத் தாம் கைதுசெய்துள்ளதாக புலிகளின் மட்டு - அம்பாறை செயலகம் அறிவித்திருக்கிறது. இவர்களுள் சிலர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான திக்கோடை, துமாபன்கேணி ஆகிய பகுதிகளிலும் ஏனையவர்கள் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளான களுவாஞ்சிக்குடி, களுதாவளை மற்றும் கல்லாறு ஆகிய பகுதிகளிலிருந்தும் கைதுசெய்யப்பட்டதாக புலிகள் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்ட துணைராணுவக் குழுவினரிடமிருந்து கைத்துப்பாக்கிகள், கைய்யெறிகுண்டுகள், தொலைத் தொடர்புச் சாதனங்கள் மற்றும் கைய்யடக்கத் தொலைபேசிகள் என்பனவும் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது.
  11. துரோகத்தின் நாட்காட்டி: நாள் 21, ஆனி 2004 கருணா இலங்கை ராணுவத்துடனேயே கொழும்பில் தங்கியிருந்தார் - நிலவினி கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனின் நெருங்கிய தோழியான நிலவினி பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது, "நானும் என்னுடன் வந்திருந்த ஏனையவர்களும் கொழும்பில் இலங்கை ராணுவத்தின் வீடொன்றில் தங்கவைக்கப்பட்டோம்" என்று கூறினார். சார்ளி என்ற இயக்கப்பெயரினைக் கொண்ட நிலவினி மட்டக்களப்பு பெண்போராளிகளின் தளபதியாகவும், கருணாவுக்கு விசுவாசமாகவும் செயற்பட்டு, புலிகளின் ராணுவநடவடிக்கையின்போது கருணாவுடன் கொழும்பிற்குத் தப்பிச் சென்றவர். அவர், கொழும்பில் கருணாவின் செயற்பாடுகள் பற்றி விபரிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். நிலவினியுடன் மேலும் மூன்று பெண்போராளித்தலைவர்களும் மட்டக்களப்பிலிருந்து 18 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருந்த சோலையகம் முகாமில் நடைபெற்ற இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரசன்னமாகியிருந்தனர். நிலவினி மேலும் தெரிவிக்கும்போது, "நாம் தங்கவைக்கப்பட்டிருந்த அதியுச்ச பாதுகாப்புக் கொண்ட வீட்டிற்கு ராணுவ உயர் அதிகாரிகள் அடிக்கடி கருணாவைச் சந்திக்க பந்துபோயினர். எங்கள் எல்லோரையும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹீர் மெளளானாவே தனது சொந்த வாகனத்தில் ராணுவத்தின் பாதுகாப்போடு கொழும்பிற்கு அழைத்துவந்தார்" என்று கூறினார். " நாங்கள் முதலில் கொழும்பு ஹில்ட்டன் உல்லாச விடுதியில் முதல் மூன்று நாட்களும் தங்கவைக்கப்பட்டோம். அதன்பின்னர் கருணாவும் நாங்களும் கொழும்பிலிருந்த இன்னொரு பாதுகாப்பான வீடொன்றிற்கு மாற்றப்பட்டோம். அங்கு 7 முதல் 8 நாட்கள் வரை தங்கவைக்கப்பட்டு, மீண்டும் ஒருமுறை ராணுவப் புலநாய்வுத்துறையினரால் இன்னொரு பாதுகாப்பான வீட்டிற்கு மாற்றப்பட்டோம். நாம் இறுதியாக மாற்றப்பட்ட வீட்டிலிருந்து பார்க்கும்போது கொழும்பு அப்பொல்லோ மருத்துவமனைத் தெளிவாக எங்களுக்குத் தெரிந்தது. இவ்வீட்டில் வரதனும் எங்களுடன் கூடவிருந்தார்" என்றும் அவர் கூறினார். அப்பொல்லோ மருத்துவமனை கொழும்பின் நாரஹேன்பிட்ட எனும் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தனியார் மருத்துவமனை என்பதும், இப்பகுதியில் இலங்கை ராணுவத்தின் பாரிய முகாம் ஒன்றும் அமைந்திருக்கிறதென்பதும் குறிப்பிடத் தக்கது. நிலவினியின் கருத்துப்படி, ஜூன் மாதம் 13 ஆம் திகதி தமது பாதுகாப்பு மிக்க வீட்டிற்கு வந்த கருணா, தானும் தனது குடும்பமும் வெளிநாடொன்றிற்குச் செல்லவிருப்பதாகக் கூறிவிட்டு, அதே ராணுவ வாகனத்தில் ஏறிச் சென்றுவிட்டார் என்று கூறினார். கருணா சென்றதையடுத்து, மட்டக்களப்பிலிருந்த தனது உறவினர் ஒருவரைத் தொடர்புகொண்ட நிலவினி, தாம் மீண்டும் மட்டக்களப்பிற்கு வரும் ஒழுங்குகளைச் செய்துதருமாறு கேட்டுக்கொண்டார். கருணா சென்றதன் பின்னர் தாம் தங்கியிருந்த வீட்டின் பாதுகாப்பு வெகுவாகக் குறைக்கப்பட்டுவிட்டதாகவும், இச்சந்தர்ப்பத்தினைப் பாவித்து தானும் ஏனைய மூன்று பெண்போராளிகளும் அங்கிருந்து புறப்பட்டு மட்டக்களப்பை வந்தடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
  12. துரோகத்தின் நாட்காட்டி: நாள் 21, ஆணி 2004 கருணாவின் மறைவிடம் பற்றிய உண்மைகள் வெளிவந்தன கருணாவை விட்டு வெளியேறி புலிகளுடன் மீண்டும் இணைந்துகொண்ட நான்கு பெண் போராளித் தலைவர்களின் வாக்குமூலத்தின்படி கருணா கொழும்பில் இலங்கை ராணுவத்துடன் சேர்ந்து இயங்குவது வெளிப்படையாகியிருக்கிறது. இதுவரை காலமும் கருணாவுக்கும் தமக்கும் எதுவித தொடர்பும் இல்லையென்று அரசாங்கம் தொடர்ச்சியாகக் கூறிவரும் நிலையில், அவருக்குக் கீழிருந்த போராளிகளே அவரதும் ராணுவத்தினதும் சிநேகம்பற்றிக் கூறியிருப்பது, அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் சமாதானம் இல்லையென்பது தெளிவாவதாக கொழும்பில் அரசியல் அவதானிகள் தெரிவித்திருக்கின்றனர். மட்டக்களப்பு பெண்கள் பிரிவின் தளபதி நிலவினி, மட்டக்களப்பு பெண்போராளிகளின் அரசியல்த்துறைப்பொறுப்பாளர் ப்ரேமினி, ஆட்டிலெறிப் படையணியின் மூத்த தளபதி லாவண்யா மற்றும் தீந்தமிழ் ஆகியோர் கருணாவுக்கெதிரான புலிகளின் நடவடிக்கையின்போது அவருடன் கொழும்பிற்குத் தப்பிச் சென்று, பின்னர் அவரைவிட்டு விலகி புலிகளுடன் இணைந்திருக்கிறார்கள். ஆனால், தாம் கருணாவிடமிருந்து எப்படித் தப்பிவந்தார்கள் என்பதுபற்றி அவர்கள் பேசவில்லை. பி பி சி தமிழ்ச்சேவைக்குப் பேட்டியளித்த நிலவினி, "ஆரம்பத்தில் நாம் எல்லோரும் ராணுவத்தின் பாதுகாப்பில்தான் இருந்தோம். பின்னர், கருணா தனியாக இன்னொரு இடத்திற்கு போய்விட்டார். கருணாவின் நடவடிக்கைகளில் அதிருப்தியுற்ற நாங்கள், எங்களை எமது பொற்றோருடன் இணைய அனுமதிக்குமாறு அவரைத் தொடர்ச்சியாகக் கேட்டு வந்தோம். அதற்கு அவர் எம்மை எமது பெற்றோருடன் சேர்க்கும் வேலைகளில் தாம் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் இதுபற்றி எம்மிடம் கூறுவதாகவும் சொல்லிவந்தார். ஆனால், அவர் உடனடியாக பதில் ஏதும் தராததால், நாம் கொழும்பிலிருந்து புறப்பட்டு மட்டக்களப்பை வந்தடைந்து மீண்டும் புலிகளுடன் இணைந்துகொண்டோம்" என்று கூறினார். அரசாங்கம் தொடர்ச்சியாக கருணாவுக்கும் தமக்கு தொடர்பில்லை என்று கூறுவதுபற்றிக் கேட்டபோது, " அவர்களால் அதனை இனிமேல் மறுக்கமுடியாது, ஏனென்றால் எங்களை கொழும்பில் மறைவிடத்தில் வைத்திருந்தது இலங்கையின் ராணுவம்தான், இதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது" என்று குறிப்பிட்டார். இதேவேளை, இப்பெண்போராளிகளின் வாக்குமூலம்பற்றி சிங்கள சேவையான சந்தேஷயவுக்கு அளித்த பேட்டியில் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் சிரில் ஹேரத் அதனை முற்றாக மறுப்பதாகக் கூறினார். முடிந்தால் ஆதாரங்களை முன்வைக்கட்டும், நாம் விசாரிக்கிறோம் என்றும் அவர் மேலும் கூறினார். கருணாவைப் பயன்படுத்தி சமாதான நிலையினைக் குழப்பி, மோதல்ப்போக்கினை அரசு நாடுகிறது எனும் தளபதி ரமேஷின் கூற்றுப்பற்றிக் கேட்டபோது, " எமது அரசாங்கம் சமாதானத்தைக் கொண்டுவருவதில் உறுதியாக இருக்கின்றது" என்று மட்டும் கூறினார். மேலும் ஊடகவியலாளர் தொப்பிகலக் காட்டுப்பகுதியில் ஏற்பட்ட மோதல்களில் இலங்கை ராணுவத்திற்கு பலத்த இழப்பு ஏற்பட்டதாகக் கூறுகிறார்களே என்று கேட்டதற்கு, "அது மிகைப்படுத்தப்பட்ட தகவல், ஏழு அல்லது 8 ராணுவத்தினரே கொல்லப்பட்டிருக்கிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.
  13. துரோகத்தின் நாட்காட்டி: நாள் 19, ஆணி 2004 இலங்கை ராணுவமே கருணாவைப் பாதுகாத்து வருகிறது - சிறப்புத்தளபதி ரமேஷ் "இலங்கை ராணுவமே கருணாவைப் பாதுகாத்து வருகிறது. புலிகளுக்கும் தமிழர்களுக்கும் எதிரான சதிவேலைகளில் கருணாவை ராணுவம் பாவிக்கின்றதென்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்" என்று மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட புலிகளின் சிறப்புத் தளபதி ரமேஷ் கொக்கட்டிச்சோலை தேனகம் முகாமில் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கும்போது கூறினார். "கருணாவைப் பாவித்து இலங்கைராணுவம் எம்மீது வலிந்த தாக்குதல்களை மேற்கொண்டால், நாமும் பதிலுக்கு எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்படுவோம்" என்றும் அவர் கூறினார். கருணவுடன் செயற்பட்ட நான்கு ராணுவ அரசியல்த்துறைப் பெண்போராளித் தலைவர்கள் தம்முடன் வந்து இணைந்துள்ளதாக ரமேஷ் மேலும் தெரிவித்தார். கருணாவின் செயற்பாடுகள் தொடர்பாக இப்பெண் போராளித் தலைவர்கள் விரைவில் பத்திரிக்கையாளர்களிடம் பேசுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். "சிங்கள ஆங்கில ஊடகங்கள் எமது மக்களைப் பிரித்து, எமது போராட்டத்தினை நசுக்கிவிட கங்கணம் கட்டிச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆனால், எமது மக்களுக்கு இவர்களின் கைங்கரியம் நன்கு தெரிந்தே இருக்கிறது. மொத்தத் தமிழினமும் ஒன்றுபட்டு எமது தேசியத் தலைமையின்கீழ் எமது விடுதலையினை வென்றெடுக்கும் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது. எமது போராளிகளைக் குறிவைத்து துணை ராணுவக் குழுவும் ராணுவமும் அவ்வப்போது நடத்திவரும் படுகொலைகள் விரவில் முடிவிற்குக் கொண்டுவரப்படும்" என்றும் அவர் கூறினார்.
  14. துரோகத்தின் நாட்காட்டி: நாள் 31, வைகாசி 2004 நெல்லியடியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் நடேசனின் இறுதிக் கிரியைகள் கருணா துணை ராணுவக் குழுவினரால் படுகொலைசெய்யப்பட்ட மூத்த பத்திரிக்கையாளர் திரு ஐய்யாத்துரை நடேசனின் இறுதிக்கிரியைகள் புதன்கிழமையன்று அவரது பிறப்பிடமான நெல்லியடியில் நடைபெறவிருக்கிறது. அன்னாரின் பூடவுடல் வைத்தியசாலையிலிருந்து வாவிவீதியில் அமைந்திருக்கும் அவரது இல்லத்திற்கு அவரது நண்பர்களால் எடுத்துவரப்பட்டது. கொலை நடைபெற்ற இடத்தைப் பார்வையிட்ட மட்டக்களப்பு நீதவான் அஜ்மீர் இது கொலைதான் என்பதை உறுதிப்படுத்தினார். ஊடகவியலாளர்களும் நண்பர்களும் திரு நடேசனின் பூதவுடலை அவரது பிறப்பிடமான நெல்லியடிக்கு எடுத்துச் செல்ல ஆயத்தங்களை மேற்கொண்டு வருகின்றனர். நாடெங்கிலும் இருந்து பல தமிழ்ப் பத்திரிக்கையாளர்கள் அன்னாரின் இறுதிநிகழ்வுகளில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. "கடந்த 60 நாட்களில் மட்டும் மட்டக்களப்பு மாவட்டம் 35 படுகொலைகளையும், 20 வன்முறைச் சம்பவங்களையும் கண்டிருக்கிறது" என்று தனது இறுதி அரசியல் குறிப்பில் நடேசன் குறிப்பிட்டிருந்தார். இந்த அரசியற்கட்டுரை மே 30 ஆம் திகதிய ஞாயிறு வீரகேசரியில் பிரசுரமாகியிருந்தது. மட்டக்களப்பு மக்களின் அவலங்களை உலகின் கண்களுக்குக் கொண்டுவந்த ஒரு துணிச்சலான பத்திரிக்கையாளர் இன்று 36 ஆவது உயிராக அம்மக்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறார் என்று இன்னொரு பத்திரிக்கையாளர் குறிப்பிட்டார். 49 வயதான நடேசன் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். வர்த்தக மேலாண்மைத் துறையில் பட்டம்பெற்றிருந்த நடேசன் தனது ஆரம்பகால வாழ்வை ஒரு ஆசிரியராகவே ஆரம்பித்தார். பின்னர் வடக்குக் கிழக்கு மாகாணசபையிலும், வருமானவரித் திணைக்களத்திலும் பணியாற்றிய நடேசன் கடந்த 20 வருடங்களாக பத்திரிக்கையாளராகச் செயற்பட்டு வந்தார். ராவய பத்திரிக்கை ஆசிரியர் விக்டர் ஐவன் நடேசனின் கொலைபற்றிக் கண்டனம் தெரிவித்ததோடு, மட்டக்களப்பில் ராணுவத்தினதும், கருணா துணை ராணுவக் குழுவினதும் நடவடிக்கைகளை விமர்சித்து அவர் இறுதியாக எழுதிய அரசியற் கட்டுரையே அவரைக் கொல்லவேண்டிய தேவையினை கருணாவுக்கும் அவரை நடத்துபவர்களுக்கும் ஏற்படுத்தியதென்று குறிப்பிட்டிருந்தார்.
  15. வித்யாச ஆட்டமிழப்பு ..1 👌
  16. ஆம்லெட்டும், கணவன் மனைவியும்...!! . ஆம்லெட் போடுவதை வைத்து, கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆச்சு-ன்னு என்று கண்டுபிடிச்சிடலாங்க. . இதைப் படியுங்களேன்.. . கணவன்: என்னம்மா ! தொட்டுக்க இத்தன இருக்கும் போது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லெட் போட்டுகிட்டு இருக்க ! வாம்மா.. வந்து உட்கார்,, எவ்ளோதான் நீ செய்வ, வா சேர்ந்து சாப்பிடலாம் ! . மனைவி: இருங்க.. உங்களுக்கு தொட்டுக்க ஆம்லெட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க. அதுவும் சின்ன வெங்காயத்த வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பரா இருக்கும்னு சொல்லுவீங்க.. அதுக்கு தான். . இப்படி சொன்னா கல்யாணமாகி ஆறுமாதம் என்று அர்த்தம். ---------------------------------------------------------------------------- கணவன்: என்னம்மா ! இன்னைக்கு ஸ்பெஷல் ? . மனைவி: சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு, ஆம்லெட் தொட்டுக்க. . கணவன்: அவ்ளோதானா ? . மனைவி: முடியலைங்க ! . இது ஒரு வருடம் ஆன ஜோடிங்க ! ---------------------------------------------------------------------------- கணவன்: என்னம்மா ! சாப்பிடலாமா? . மனைவி: இருங்க இந்த சீரியல் முடியட்டும். என்னங்க கொஞ்சம் பெரிய வெங்காயம் உரிச்சு தாங்களேன் ! ஆம்லெட் போட்டுடறேன் ! . இது ஒன்றரை வருடம் ஆன ஜோடிங்க ! ---------------------------------------------------------------------------- கணவன்: என்னம்மா இது ? வெங்காயமே இல்லாம ஆம்லெட் போட்டிருக்கே. எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்லே ? . மனைவி: ஒரு நாளைக்கு இதை சாப்பிட்டாதான் என்ன ? எல்லாத்தையும் நானே செய்யனுமா? . இது இரண்டு வருடம் ஆன ஜோடிங்க! ---------------------------------------------------------------------------- கணவன்: என்னம்மா இது ? இத்துனூன்டு இருக்கு. முட்டைய கலக்க கூட இல்ல ! அப்படியே ஃபுல் பாயிலா போட்டிருக்க ? . மனைவி: முட்டை என்ன நானா போடுறேன் ? கோழி போட்டது சின்னதா இருக்கு, அதுக்கு நான் என்ன செய்ய ? சும்மா குறை சொல்லிகிட்டு இருக்காம தொட்டுகிட்டு சாப்பிடுங்க ! . இது மூன்று வருடம் ஆன ஜோடிங்க ! ---------------------------------------------------------------------------- கணவன்: என்னம்மா ! ஆஃபாயில் போட்டிருக்க? நான் இத சாப்பிடவே மாட்டேன்னு தெரியும்ல ? . மனைவி: ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போயிடாது. ஊருல இல்லாத அதிசய புருஷன் எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு ! . இது நான்கு-ஐந்து வருடம் ஆன ஜோடிங்க ! --------------------------------------------------------------------------- கணவன்: என்னம்மா ! இன்னைக்கு ஒன்னும் செய்யலையா ? . மனைவி: சாதம் வைத்து இருக்கேன், ஃப்ரிட்ஜில் நேற்று வாங்கிய மோர் இருக்கு, முட்டையும் இருக்கு ! ஆம்லெட் போட்டு சாப்பிடுங்க ! . இது ஏழு வருடம் ஆன ஜோடிங்க ! ---------------------------------------------------------------------------- கணவன்: என்னம்மா ! இன்னைக்கு என்ன சமையல் செய்யனும் ? . மனைவி: அதையும் நான்தான் சொல்லனுமா? எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதா ? அதை செய்யுங்க ! . இது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க ! ---------------------------------------------------------------------------- இதுல ஒரு விஷயம் கவனிச்சீங்களா? . அதாங்க.. நம்ம ஆளு (கணவன்) "என்னம்மா" என்று சொல்வது மட்டும் கடைசி வரை மாறவே இல்லீங்கோ !!! . என்னம்மா இப்படி பண்றீங்களேம்ம்ம்ம்ம்ம்மா ?😂😂😂😂😂 FB

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.