Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    14
    Points
    46808
    Posts
  2. Justin

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    7055
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    19166
    Posts
  4. nedukkalapoovan

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33035
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/25/20 in Posts

  1. இவ்வளவு உணவையும் வீணாக்குவதை பார்க்க கவலையாய் இருந்தாலும் , மற்ற பக்கத்தாலே இந்த உணவை எடுத்து திரும்பவும் அவங்களுக்கே வித்து காசாக்குவாங்களோ என்ற யோசனையாவும் இருக்கு 😂 கூச்சமில்லாமில்லாமல் இப்படி உணவை வீணாக்குபவர்களை குறைந்து ஒரு நாலாவது சோறு ,தண்ணி இல்லாமல் பட்டினி போடோணும்
  2. என்ன பெரிய படிப்பு படித்திருந்தாலும், விஞ்ஞான வித்தகராக இருந்தாலும், மனதை ஒரு நிலை படுத்தும் தியானமே, உலகை ஆளும் சக்தியை தரும்.
  3. வணக்கம் வாத்தியார்......! பெத்லேகேம் நகரில் மாட்டு தொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் ஏசுப்பிதா ஆறுவயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே ஆகமங்கள் ஐம்பதாறினையும் ஐயம் தீர உணர்ந்தார் இயற்கை உலகமே தூய்மையானதென இயேசு நினைத்தாரே எல்லா உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே பனிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே இயேசுவின் கேள்வியில் ஆலய குருக்கள் ஆனந்தம் ஆனாரே இளமை செய்த திறமையில் பஸ்கா பெருமையை வளர்த்தாரே இளமை பருவமதில் எளிமை வாழ்க்கையில் இருப்பிடம் ஆனாரே இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே தந்தையார் செய்த தச்சு தொழிலையே தனயனும் செய்தாரே தங்க உழவர்கள் உளிதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே தங்க உழவர்கள் உளிதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே.....! ---கேளுங்கள் தரப்படும்---
  4. படம் : வீராதி வீரன் (1964) இசை : நாகேந்திர ராசன் வரிகள் : புரட்சிதாசன் பாடியோர் : TMS & ஜானகி இன்னும் இன்னும் இது ஏதேதோ கேட்பது எது கண் பேச்சிலும் என் மூச்சிலும் ஏதோ ஒரு சுவை தோன்றுது ( இன்னும் ) சிவக்குமோ கன்னம் சிவக்குமோ நீ சிரித்தால் பூச்சரமோ சுரக்குமா வாய் மணக்குமோ நீ சொன்னது உன் இனமோ ஆஹாஹாஹ் வாழ்க்கையில் நம் வாழ்க்கையில் ஏன் வசந்தம் தோன்றியது ஆசையில் வரும் எண்ணங்கள் கரை தாண்டிய கொள்கை அது... ( இன்னும் ) ஆடுமோ இடை ஆடுமோ நீ அசைந்தாலும் பாடுமோ அங்கமோ இது தங்கமோ உடல் அது ஒன்றே போதுமோ ஆஹாஹாஹ் யவ்வனம் உள்ள செவ்விதழ் இன்னிசையோடு வீசுமோ பார்க்குமோ கலி தீர்க்குமா எனை பருகாமல் வாட்டுமோ..... ( இன்னும் )
  5. என் அப்பனே என்னையனே கந்தனும் வருவான் பிட்டுக்கு மண் சுமந்த பெருமான்
  6. குளிர் கால காற்றே கொஞ்சம் மெதுவாக சின்ன சின்ன பூவே சிங்கார பூவே
  7. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 யாழ் கள உறவுகளுக்கு நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்
  8. ஆச்சிக்கு வயது 80....அவவின் சிலம்பாட்டத்துக்கு வயது 100.....கம்பீரத்துக்கு வயது 20.....! 👍
  9. முருகா முருகா முருகா ஆடு மயிலே
  10. இன்று நமக்காக இயேசு பிறந்தாரே மண் மாந்தரின் பாவம் போக்க இம்மானுவேல் பிறந்தாரே மகிழ் பாடி கொண்டாடுவோம் அழகு மிகுந்தவர் இம்மானுவேல் அன்பு மிகுந்தவர் இம்மானுவேல் ஏழை கோலமாய் தாழ்மை ரூபமாய் உன்னத தேவன் வந்துதித்தார் ஆலோசனை கர்த்தர் இம்மானுவேல் வல்லமை உள்ளவர் இம்மானுவேல் நித்திய பிதா சமாதான பிரபு நீதியின் தேவன் வந்துதித்தார் தாவீதின் மைந்தர் இம்மானுவேல் தாழ்மை உள்ளவர் இம்மானுவேல் அன்பின் தேவனாம் இயேசு பாலகன் பாவங்கள் போக்க வந்துதித்தார் வானத்துல நட்சத்திரம், பூமியில முத்துச்சரம்,-2 நட்சத்திரம் வந்து நின்றது, முத்துச்சரம் இங்கு பிறந்தது-2 தேடி வந்த தேவர் கரம், சூழ்ந்திருந்த பாவமரம் -2 தேவர் கரம் தேடி வந்தது, பாவமரம் ஓடிப்போனது - 2 - வானத்துல.. மாளிகையும் இல்ல, மகுடமும் இல்ல, மன்னவர் வந்தாரு மனக்கவலை இல்ல-2 அடடா திண்டாட்டங்கள் கொண்டாட்டமா மாறும் இனிமே துக்கமெல்லாம் சந்தோசமாகும் -2 நம்மோடு உறவாட ஒரு பாலனாய் , வாதும் சூதும் இல்லாமலே -2 இயேசு என்ற நாமம் என்றென்றும் எப்போதும் - வானத்துல... கண்டது காட்சி, கொண்டது மீட்சி .அநீதியும் ஓடிப்போச்சி, நீதியாச்சு -2 முந்தின ஆதம் வந்து பாவத்தையே தந்தான், பிந்தின ஆதம் இயேசு மோட்சத்தையே தருவார்-2 இதுபோல ஒரு தெய்வம் பிறந்ததில்ல, இனிமேலும் இதுபோல வருவதில்ல இயேசு என்ற நாமம் என்றென்றும் எப்போதும் - வானத்துல...
  11. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏
  12. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 07, மாசி 2005 புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை அரசியல்த்துறைப் பொறுப்பாளர் கெளசல்யன் கருணா துணை ராணுவக் குழுவால் படுகொலை கடந்த திங்களன்று, மாலை 7:45 மணியளவில் மட்டக்களப்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கெளசல்யன் அவர்கள் வீதியில் அவர்களை வழிமறித்த கருணா துணைராணுவக்குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவருடன் பயணித்த இன்னும் மூன்று புலிகளின் அரசியல்த்துறைச் செயற்பாட்டாளர்களும் இக்குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதோடு மேலும் நான்குபேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் சந்திரநேருவும் கெளசல்யனுடன் வாகனத்தில் பயணித்ததாகவும், அவரும் இத்தாக்குதலில் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு திருகோணமலை நெடுஞ்சாலையில் இலங்கை ராணுவத்தின் வெலிக்கந்தை மற்றும் புணாணை முகாம்களுக்கிடையிலிருக்கும் நெடுஞ்சாலையின் பகுதியிலேயே இந்தப் படுகொலையினை கருணா துணைராணுவக்குழு நிகழ்த்தியிருக்கிறது. கடந்த 2002 ஆம் ஆண்டு புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே சமாதான உடன்படிக்கை செய்யப்பட்டதையடுத்து கொல்லப்பட்ட புலிகளின் அதி உயர் முக்கியஸ்த்தர் கெள்சல்யன் தான் என்பது குறிப்பிடத் தக்கது. கிழக்கில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான நிவாரண நடவடிக்கைகளை விஸ்த்தரிப்பது தொடர்பாக வன்னியில் தலைமையுடன் கலந்தாலோசித்து விட்டு மட்டு நோக்கித் திரும்புகையிலேயே அவர் துரோகிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவருடன் பயணித்தபோது கொல்லப்பட்ட மற்றைய இரு போராளிகளும் மதிமாறன் மற்றும் குமணன் என்று அடையாலம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை புலிகளின் நிதிப்பொறுப்பாளரும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று கொழும்பில் பரவிய செய்திகளை மறுத்துள்ள புலிகள், தமிழேந்தி கிளிநொச்சியில் அந்நேரத்தில் இருந்தார் என்பதையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். புலிகள் மேலும் தெரிவிக்கையில், கெளசல்யனுடன் வினோதன், புகழன், செந்தமிழ் மற்றும் நிதிமாறன் ஆகிய போராளிகளும் கிளிநொச்சியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்ததாகக் கூறியிருக்கிறார்கள்.
  13. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 24, கார்த்திகை 2004 மாவீரர் நிகழ்வுகளில் ஈடுபட்ட இருவரை சுட்டுக்கொன்றது கருணா துணை ராணுவக்குழு மட்டக்களப்பு நகரிலிருந்து 18 கிலோமீட்டர்கள் வடக்கேயிருக்கும் வந்தாறுமூலைப் பகுதியில் மாவீரர் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரு கிராமவாசிகளை கருணா துணைராணுவக்குழு புதன் மாலை 8 மணியளவில் சுட்டுக் கொன்றது. மோட்டார் சைக்கிளில் இப்பகுதிக்கு வந்த துணை ராணுவக்குழு உறுப்பினர்கள் ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தவர்கள்மீது சரமாரியாகச் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக ஊர்வாசிகள் தெரிவிக்கின்றனர். கருணா துணை ராணுவக்குழுவினரைப் பாவித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் மனங்களில் அச்ச உணர்வை ஏற்படுத்துவதன் மூலம் இவ்வருட மாவீரர் நினைவேந்தலை எப்படியாவது தடுத்துவிட சிங்கள ராணுவம் முயன்றுவருவதாக புலிகள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். இதேவேளை புலிகளையும் மாவீரர்களையும் கொச்சைப்படுத்தி கருணா துணைராணுவக்குழுவினரின் பெயரில் மீண்டும் துண்டுப்பிரசுரங்களை இலங்கை ராணுவம் மட்டக்களப்பு நகரில் இன்றும் விநியோகித்தது.
  14. துரோகத்தின் நாட்காட்டி : நாள்18, கார்த்திகை 2004 இலங்கை ராணுவப் புலநாய்வு அதிகாரியும், கருணா துணை ராணுவக் குழு உறுப்பினரும் புலிகளின் பிஸ்ட்டல் குழு நடவடிக்கையில் பலி மட்டக்களப்பு நகரிலிருந்து வடக்காக 85 கிலோமீட்டர்கள் தொலைவிலிருக்கும் கதுருவெல எனப்படும் சிங்களக் குடியேற்றக் கிராமத்தில் இயங்கிய இலங்கை ராணுவ உளவுவுப்பிரிவின் அதிகாரி லான்ஸ் கோப்ரல் அஜித் திசானாயக்கவும், அவரது உதவியாளரும் கருணா துணைராணுவக்குழு உறுப்பினருமான வசந்தநாயகம் பிரபாகரன் எனும் உறுபினரும் புலிகள் பிஸ்ட்டல் குழுவினரின் நடவடிக்கையொன்றில் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சிங்கள அதிகாரி தாக்குதலின்பொழுது ஸ்தலத்திலேயே கொல்லப்பட, துணை ராணுவக்குழு உறுப்பினர் ராணுவத்தினரால் பொலொன்னறுவை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு இறந்ததாகவும் கூறப்படுகிறது. இப்பகுதியிலிருக்கும் மின்னேரியா இலங்கை ராணுவ முகாமில் துணைராணுவக்குழுவினரை ராணுவபுலநாய்வுத்துறையினர் இயக்கிவருவதாகவும், அவ்வாறான நாசகார நடவடிக்கையின்றிற்காக மட்டக்களப்பு நோக்கி இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கும்பொழுதே புலிகளின் தாக்குதலுக்கு உள்ளானார்கள் என்றும் கூறப்படுகிறது. மின்னேரியாவில் அமைந்திருக்கும் இலங்கை ராணுவ புலநாய்வுத்துறையின் செயலகத்திலிருந்து இயங்கும் ஆள ஊடுருவும் துணைராணுவக் குழு உறுப்பினர்கள் மட்டக்களப்பு - பொலொன்னறுவை எல்லைப்பகுதியில் தொடர்ச்சியான நாசகார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும், அவர்களுக்கெதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை தாம் முடுக்கிவிட்டுள்ளதாகவும் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.
  15. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 21, ஐப்பசி 2004 மட்டக்களப்பில் கருணா துணை ராணுவக்குழு சார்பாக துண்டுப்பிரசுரங்களை ராணுவம் விநியோகித்தது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையினை கொச்சைப்படுத்தியும், துணைராணுவக் குழு உறுப்பினர் கருணாவை புகழ்ந்தும் எழுதப்பட்ட துண்டுப்பிரசுரங்களையும், சுவரொட்டிகளையும் மட்டக்களப்பு நகரில் ராணுவம் மக்களிடம் விநியோகித்தது. துணை ராணுவக்குழு உறுப்பினர் கருணா பெயரில் வெளியிடப்பட்ட இத்துண்டுப்பிரசுரங்களில் புலிகளுக்கெதிரான பல விமர்சனங்களும், தனிமனித தாக்குதல்களும் இடம்பெற்றிருந்தன. மட்டக்களப்பு அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட பகுதிகளிலேயே ராணுவம் இந்த துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததைக் காண முடிந்தது.
  16. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 23, புரட்டாதி 2004 துணைராணுவக்குழுத்தலைவர் கருணாவின் சகோதரர் பலி மட்டக்களப்பு பொலொன்னறுவைப் பகுதியில் அமைந்திருக்கும் மாதுருஓயா பகுதியில் நடந்த தாக்குதல் ஒன்றில் துணைராணுவக்குழுத் தலைவர் கருணாவின் சகோதரரும், அக்குழுவின் பிரதித் தலைவருமான ரெஜி என்பவர் கொல்லப்பட்டிருக்கிறார். மாதுரு ஓயாக் காட்டுப்பகுதியில் இலங்கை ராணுவத்துடன் சேர்ந்து தமிழ் மக்களுக்கெதிராக இயங்கிவந்த கருணா துணைராணுவக் குழுவினருக்கெதிராக தாம் மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் ஒன்றிலேயே துணைராணுவக்குழு உறுப்பினர் ரெஜி கொல்லப்பட்டதாக புலிகள் தெரிவித்தனர். இவருடன் சேர்ந்து, துணைராணுவக் குழு முக்கியஸ்த்தர்களான எழிலன் மற்றும் துமிலம் ஆகிய இருவரும் கொல்லப்பட்டதாக புலிகள் மேலும் தெரிவித்தனர். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் ஆள ஊடுருவி மக்களையும் புலிகளையும் கொன்றுவரும் இலங்கை ராணுவத்தின் 8 வீரர்கள் அடங்கிய விசேட படைப்பிரிவின் பிரதான பயிற்சிமுகாம் மாதுருஓயா காட்டுப்பகுதியிலேயே அமைந்திருப்பதும், இம்முகாமினுள்ளேயே கருணா துணை ராணுவக்குழு உறுப்பினர்கள் ராணுவத்தினருடன் பயிற்சிகளிலும், தமிழருக்கெதிரான நாசகார அழிவுநடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதாக புலிகள் குற்றஞ்சாட்டியிருந்ததும் இங்கே குறிப்பிடத் தக்கது.
  17. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 31, ஆடி 2004 கருணாவைத் தன்னுடன் தொடர்புபடுத்தி செய்திவெளியிட்டதற்காக ரணிலைச் சாடும் அநுர பண்டாரநாயக்க துணைராணுவக்குழுத் தலைவரான கருணாவை சிங்கப்பூருக்குப் பாதுகாப்பாக தான் அழைத்துச் சென்றதாக ரணில் விக்கிரமசிங்க கூறியிருப்பது தனது பாதுகாப்பிற்குக் கடுமையான பாதகத்தினை ஏற்படுத்தியிருப்பதாகவும், தனது நற்பெயருக்குக் களங்கத்தினை உண்டுபண்ணியிருப்பதாகவும் அமைச்சரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான அநுர பண்டாரநாயக்க இன்று குற்றஞ்சாட்டியிருக்கிறார். முதலீட்டுச் சபை அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அநுர, கருணாவை தான் சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றதை முற்றாக மறுதலித்துள்ளதோடு, அவரை இதுவரை தான் சந்திக்கவில்லையென்றும், இனிமேலும் சந்திக்கும் நோக்கம் தனக்கு இல்லையென்றும் திட்டவட்டமாகக் கூறினார். தனக்கு புலிகள் மூலம் ஆபத்தினை உருவாக்கவே ஐக்கிய தேசியக் கட்சியினர் முயல்வதாகத் தெரிவித்திருக்கும் அநுர, இக்கட்டுக்கதையினால் தனது நற்பெயரும் களங்கப்பட்டிருப்பதாக மேலும் கூறினார். "இது ஒரு மிகவும் பாரதூரமான அறிக்கை. பிரபாகரன் இச்செய்திபற்றி எவ்வாறான முடிவை எடுக்கப்போகிறார் என்று எனக்குத் தெரியவில்லை" என்று அவர் கூறினார். "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் நான் கருணாவை பாதுகாப்பாக சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றதாகக் கூறியதை சில பத்திரிக்கைகள் வேண்டுமென்றே பிரதான செய்தியாகப் பிரசுரித்து வருகின்றன. நான் இதுபற்றிய எனது கண்டங்களை பாராளுமன்றம் மீண்டும் கூடும்போது எடுத்துரைப்பேன்" என்று அவர் மேலும் கூறினார். "முன்னாள் பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவின் மிகத்தவறான ஆட்சிமுறைபற்றி நான் விமர்சனங்களை முன்வைத்ததற்குப் பழிவாங்கவே அவர் என்மீது இவ்வாறான பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்" என்றும் அவர் மேலும் கூறினார்.
  18. துரோகத்தின் நாட்காட்டி : துரோகிகளை பினாமிகளாக வைத்து இனவழிப்புப் போரை அன்றே திட்டமிட்ட சிங்களம் கருணாவைப் பாவித்து புலிகளை அழிக்க இலங்கையரசு திட்டமிடுகிறது - அமெரிக்க ஆய்வுக்குழு அமெரிக்காவின் தனியார் ராணுவ, அரசியல் , பொருளாதார புலநாய்வு மைய்யமான (Strategic Forecasting - STRATFOR) வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையில் கருணாவின் பிளவினை அரச - ராணுவ உயர்மட்டத்தினர் ஆதரிப்பதாகவும், இதற்கு அமெரிக்காவின் ஆசி கிடைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. "அவர்களின் திட்டம் இதுதான், புலிகளை நிலைகுலைய வைப்பது, தமக்குள் பிளவுகளை உண்டுபண்ணி, பலவீனப்படுத்துவது, இறுதியாக பலவீனப்பட்டிருக்கும் அந்த அமைப்பை பாரிய ராணுவ நடவடிக்கை ஒன்றின்மூலம் முற்றாக அழித்தொழிப்பது" என்று அரச உயர்மட்டத்திலிருப்பவர்களால் தமக்குக் கூறப்பட்டதாக இந்த ஆய்வுமைய்யம் கூறுகிறது. "கருணா தொடர்ந்தும் புலிகளிடமிருந்து பிரிந்துநின்று செயற்படுவாரானால், அவரது குழுவுக்கும் புலிகளுக்குமிடையே தொடர்ச்சியான மோதல்கள் இடம்பெறும். இவ்வாறான சூழ்நிலையொன்று இலங்கையரசிற்கு மிகவும் உவப்பானதாக இருக்கும் என்பதும், இந்த நிலையினைத் தனக்குச் சாதகமாகப் பாவிக்க அது கருணா குழுவைத் தொடர்ந்தும் அதிகம் அதிகமாக ஆதரிக்கும்" என்று இவ்வாய்வறிக்கை கூறுகிறது. "புலிகளின் உள்வீட்டுப் பிரச்சினையால், அவர்கள் உள்ளுக்குள் மோதி, பலவீனப்படுவதை விரும்பும் அரசு, இதன்மூலம் சமாதானப் பேச்சுவார்த்தைகள் குழம்புவதையும் எதிர்பார்க்கிறது. இதனாலேயே கருணவை அவரது பிளவின்போது காப்பாற்றிய அரசு, அப்பிளவு தொடர்ந்தும் உயிர்ப்புடன் இருக்க அவரைத் தொடர்ச்சியாக ஆதரித்தும், பாதுகாத்தும் வருகிறது". "சமாதானப் பேச்சுவார்த்தைகள் குழம்புமிடத்து புலிகள் மீண்டும் போரை நோக்கித் தள்ளப்படலாம், ஆகவே அதற்குமுன்னர் அவர்களுக்குள் ஏற்படும் பிளவு அவர்களை ராணுவ ரீதியில் கடுமையாகப் பலவீனப்படுத்தும். இந்தச் சூழ்நிலை அவர்களை இலகுவாக அழித்துவிட உதவும் என்று கொழும்பு எதிர்பார்க்கிறது". "தமக்கும் கருணாவுக்கும் இடையே எதுவித தொடர்புகளும் இல்லையென்று இலங்கையரசு திரும்பத் திரும்பக் கூறிவந்தாலும் கூட, அரச உயர் பீடத்திலிருப்பவர்களும், ராணுவத் தளபதிகளும் தனிப்பட்ட சந்திப்புக்களில் கருணாகுழுவுக்கான தமது ஆதரவினை ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்". புலிகளுடனான 6 வார மோதல்களில் வெட்கக்கேடான தோல்வியினைத் தழுவியிருந்த கருணா 3 மாதகாலத்திற்குப் பிறகு முதன்முறையாக இலங்கை அரச வானொலிச் சேவைகளிலும், பி பி சி செய்திச் சேவையிலும் தோன்றிப் பேட்டிகளை வழங்கியிருந்தார். "அவமானகரமான தோலிவியின் பின்னரும் வெளிப்படையாக பேட்டிகளை அளித்திருப்பதன்மூலம் கருணா தனக்கான ஆதரவினை குறிப்பாக, கிழக்கு மக்களிடையே பெற்றுக்கொள்ள முயலலாம். அத்துடன், புலிகளின் தலைமையினை அகற்றும் நடவடிக்கைகளில் அவர் தொடர்ந்தும் ஈடுபடலாம்" என்றும் அவ்வறிக்கைகூறுகிறது. "தனது பேட்டிகளின்போது அரசியலில் ஈடுபடப்போவதாக கருணா கூறியிருப்பது, தன்னை வேண்டுமென்றே புலிகளின் இலக்காக காட்டுவதற்காகத்தான் என்பதும், இதன்மூலம் தனக்கும் புலிகளுக்குமான பகையினை இலங்கையரசின் விருப்பத்தின்படி அவர் தொடரப்போகிறார் என்பதையும், இவரைப் பாவிப்பதன் மூலம் பலவீனமாக்கப்படும் புலிகளை தனது விருப்பப்படி அழிக்க அரசு முயல்வதும் தெரிகிறது " என்றும் அவ்வறிக்கை மேலும் கூறுகிறது. "ஆனால், புலிகள் இலங்கை அரசுகளுடன் பல தசாப்த்தங்களாக மோதிவருகின்றனர். ஆகவே, பெருமளவு இரத்தம் சிந்துதலில்லாமல் தீர்வொன்றை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் இப்போது தெரியவில்லை" என்றும் அது கூறுகிறது. "போர் ஒன்று மீண்டும் ஆரம்பிக்கும் பட்சத்தில் புலிகள் மிகவும் பலவீனமான நிலையினை அடைவார்கள் என்பது திண்ணம். இது பேச்சுவார்த்தைகளில் அவர்களது நிலையினை மிகவும் பலவீனப்படுத்தும் என்பதுடன், அவர்கள் இதுவரை காலமும் முன்வைத்த சுயநிர்ணய உரிமை அடிப்படியிலான கோரிக்கைகளை இலங்கையரசு உதாசீனம் செய்யும் நிலையும் ஏற்படப்போகிறது". "அதேவேளை, காயப்பட்ட புலியினை வலிந்து போருக்கு அழைப்பதும் பாதுகாப்பானது அல்ல. புலிகள் தமது கோரிக்கைகளைத் தளர்த்தினாலோ அல்லது இலங்கையரசு அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டாலோவன்றி, இப்போது தடைப்பட்டிருக்கும் பேச்சுவார்த்தைகள் மீள ஆரம்பிக்கப்போவதில்லை" என்றும் அவ்வறிக்கை கூறுகிறது. “
  19. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 25, ஆடி 2004 உள்ளிருந்த அதிருப்தியாளர்களால் கொல்லப்பட்ட கருணா துணை ராணுவக்குழு உறுப்பினர்கள் - கொட்டாவை பன்னிபிடியவில் சம்பவம் கொழும்பில் முகாமிட்டிருந்த கருணா துணை ராணுவக்குழு உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கருத்து மோதலில், அதிருப்தியாளர்கள் தம்முடன் இருந்த ஏனைய 7 பேரைக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இக்கொலைகளுக்குப் பின்னர் மட்டக்களப்பிற்குத் தப்பிவந்த மீதிப்பேர் தம்மிடம் சரணடைந்திருப்பதாக புலிகள் அறிவித்திருக்கின்றனர். உடனிருந்த துணை ராணுவக் குழு அதிருப்தியாளர்களால் கொல்லப்பட்ட கருணா துணைராணுவக் குழு உறுப்பினர்களின் விபரங்கள், 1. குகனேசன் 2. காஸ்ட்ரோ 3. கேசவன் 4. ரூபன் 5. அட்பரன் 6. விக்கி 7. விமல்காந்த் குகனேசன் என்பவர் கருணாவுக்கு அடுத்த நிலைத் தளபதியாகச் செயலாற்றியவர். புலிகளின் அரசியல்த்துறை அறிக்கை மற்றும் இலங்கை அரச செய்திச்சேவையின் பிரகாரம் குகனேசன் என்பவர் ஜூன் மாதத்தில் ஹிங்குராகொடை விகாரையில் அரச புலநாய்வுத்துறையினரால் தங்கவைக்கப்பட்டிருந்தபோது பொலொன்னறுவைப் பொலீசாரினால் கைதுசெய்யப்பட்டு பின்னர் உடனடியாக விடுவிக்கப்பட்ட 14 துணைராணுவக் குழுவினரில் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது. புலிகளிடம் சரணடைந்திருக்கும் துணைராணுவக் குழு உறுப்பினர்களின் தகவல்ப்படி கொட்டாவைப் பகுதியில் ராணுவப் பாதுகாப்புடன் ஒருவீட்டில் தாம் தங்கவைக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதேவேளை கருணா துணைராணுவக் குழுவினரோடு தங்கியிருந்தபோது கொல்லப்பட்ட எட்டாவது நபர் ராணுவப் புலநாய்வு அதிகாரியொருவர் என்று வெளிவந்த செய்திகளை இலங்கை அரசு மறுத்திருக்கிறது. பாதுகாப்பு அமைச்சு இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கருணா குழுவுக்கும் தமக்கும் எதுவித தொடர்புகளும் இல்லையென்றும், தமது அதிகாரிகள் கருணா குழுவினருடன் தொடர்புகளைப் பேணவில்லையென்றும் மறுத்திருக்கிறது. ஆனால், இந்திய பத்திரிக்கையொன்றில் வெளிவந்த செய்தியின்படி, கொலைகள் நடந்தவிடத்திற்குச் சென்ற பொலிஸார் எட்டாவது நபரை உடனேயே அடையாளம் கண்டுகொண்டதாகவும், அவர் ராணுவ புலநாய்வு அதிகாரிதான் என்பதை தமக்கு உறுதிப்படுத்தியதாகவும் இந்தியச் செய்தியாளர் குறிப்பிட்டிருக்கிறார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.