Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    17
    Points
    46808
    Posts
  2. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    23926
    Posts
  3. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    8910
    Posts
  4. Justin

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    7055
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/20/21 in Posts

  1. இப்படியான தமிழ் கலைஞர்கள் எம்மிடம் இல்லையா? அல்லது... ஊடகங்கள் எம்மவர்களை முன்னிலைப் படுத்துவதில்லையா?
  2. https://fb.watch/36ROBoiRLc/ ரசித்து மகிழ்ந்து பாடுகிறார். கண்டிப்பாக பாருங்கள் 👏🏼
  3. நீங்கள் காலால் அடித்தாலும் திருப்பி கரண்டியால் அடிக்காது.....! 😂
  4. 'கிரிதர கோபாலா...' எம்.எஸ்.சுப்புலட்சுமி (பாடகி & நடிகை) மீரா திரைப்படம் (1945)
  5. முன்பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே.....! 😂
  6. புளியோதரையில சிக்கின் பிசை சொருகி ஏமாற்றுவது போல வெள்ளை சோற்றில் ஏமாற்றுகினம் தோழர்..☺️..😊
  7. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 அல்லாஹு நபி புகழ் தமிழ் பாடல்
  8. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 18, கார்த்திகை 2007 பாராளுமன்ற உறுப்பினரின் உறவினரைக் கடத்திச்சென்ற பிள்ளையான் துணைப்படைக் கூலி அரசுக்கெதிராக வரவுசெலவுத் திட்டத்தில் வாக்களிக்கவேண்டாம் என்று பாராளுமன்ற உறுப்பினருக்கு அச்சுருத்தல் இலங்கை ராணுவத்தின் கொலைப்படையாகச் செயற்பட்டுவரும் பிள்ளையான் குழு எனப்படும் கொலைக்கும்பலின் உறுப்பினர்கள் மட்டக்களப்புப் பாராளுமன்ற உறுப்பினர் கனகசபையின் வீட்டிற்குள் அத்துமீறிப் பிரவேசித்து அவரது மகளின் கணவரைக் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தலின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினருடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட பிள்ளையான், அரசுக்கெதிராக வரவுசெலவுத் திட்டத்தில் வாக்களித்தால் உனது மருமகனைக் கொன்றுவிடுவோம் என்று மிரட்டியதாக அவர் தெரிவிக்கிறார். களுதாவளையில் , பொலீஸ் பாதுகாப்பிலிருந்த பாரளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு வெளிப்படையாகச் சென்ற இக்குழு அவரது மருமகனைக் கடத்தியதுடன், பொலிஸாரும் இதுபற்றி எதுவித நடவடிக்கையினையும் எடுக்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த பொலீஸ் பாதுகாப்பினை முற்றாக விலக்கிக்கொண்டுள்ள அரசாங்கம், அவர்களின் பாதுகாப்பினை அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியிருப்பதாகத் தெரிகிறது. பாராளுமன்ற உறுப்பினரின் மருமகனின் பெயர் சஜிதரன் என்றும், அவர் ஆசிரியராகக் கடமையாற்றி வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அரசுக்கெதிராக வரவுசெலவுத் திட்டத்தில் வாக்களித்தால் கொல்லப்படுவீர்கள் என்ற எச்சரிக்கையினை பிள்ளையானே மட்டக்களப்பின் பாரளுமன்ற உறுப்பினர்களான தங்கேஸ்வரி, அரியநேந்திரன் ஆகியோருக்கு விடுத்ததாகவும், இதன் பின்னரே அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொலீஸ் பாதுகாப்பினை அரசு நீக்க்கியதாகவும் தெரியவருகிறது.
  9. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 07, கார்த்திகை 2007 இலங்கை அரசாங்கமே கருணாவுக்கு ராஜதந்திரிகளின் கடவுச்சீட்டை வழங்கியது - சண்டே லீடர் சர்வதேச ராஜதந்திர நியமங்களை மீறி, சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் கடத்தல்களில் ஈடுபட்டு வந்த துணைராணுவக் குழுவின் தலைவரான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் இங்கிலாந்திற்குத் தப்பிப் போவதற்கு போலியான கடவுச்சீட்டினை ராஜதந்திரிகளின் அந்தஸ்த்துடன் வழங்க பிரித்தானிய உயர்ஸ்த்தானிகரலாயத்தை இலங்கை பணித்தது என்று சண்டே லீடர் செய்திவெளியிட்டிருக்கிறது. - "இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் பணிப்புரையின்பேரில் இந்த ராஜதந்திரிகளுக்கான கடவுச்சீட்டினை சட்டப்படியான இங்கிலாந்து அனுமதி விசாவுடன் கோகில குணவர்த்தன எனும் போலியான பெயரில் வழங்க பிரித்தானிய உயர்ஸ்த்தானிகராலயம் முன்வந்ததாகத் தெரிகிறது". மேலும் இதுபற்றி அப்பத்திரிக்கை கூறுகையில், இங்கிலாந்தில் நடைபெறவிருந்த காலநிலை மாற்ற மாநாடு ஒன்றிற்காக இலங்கை சார்பாக பங்குபற்றும் குழுவினரின் பெயர்ப்பட்டியலை இங்கிலாந்து உயர்ஸ்த்தானிகராலயத்திற்கு அனுப்பிவைத்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, இவர்கள் அனைவருக்கும் ராஜதந்திரிகளின் அந்தஸ்த்துடனான கடவுச்சீட்டுக்களை சட்டரீதியான நுழைவு விசாவோடு தயாரிக்குமாறு கேட்டிருந்தது. இவ்வாறு அனுப்பப்பட்ட பெயர்ப் பட்டியலிலேயே கருணாவின் போலியான பெயரான "கோகில குணவர்த்தன" எனும் பெயரும் உள்ளடங்கியிருந்தது என்று தெரியவந்திருக்கிறது. குணவர்த்தன என்கிற பெயரோடு தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டினை பாவிக்கப்போகும் நபர் சூழல் விவகார அமைச்சரான சம்பிக்க ரணவக்கவின் அமைச்சின் கீழ் பணிபுரிபவர் எனும் அடிப்படியிலேயே அனுப்பப்பட்டிருந்தது. கோகில குணவர்த்தன எனும் போலியான பெயருடன் ராஜதந்திர கடவுச்சீட்டில் பயணம் செய்த கருணா செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி லண்டன் ஹீத்ரோ விமானநிலையத்தில் வந்திறங்கியதாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதேவேளை கடந்தவாரம் லண்டனில் பொலீஸாரும், குடியேற்ற அமைச்சகத்தின் அதிகாரிகளும் நடத்திய திடீர் சோதனையில் போலியான கடவுச்சீட்டுடன் லண்டன் வந்திருந்த கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் அச்செய்தி மேலும் தெரிவிக்கிறது. கருணாவின் மனைவியும் பிள்ளைகளும் ஏற்கனவே லண்டனிற்கு வந்துவிட்டிருந்தார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
  10. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 16, கார்த்திகை 2007 கருணா துணைப்படை அலுவலகம் மீது பிள்ளையான் துணைப்படைக் கூலிகள் தாக்குதல் கடந்த திங்கள் இரவு, மட்டக்களப்பு நகரில் கோவிந்தன் வீதியில் அமைந்திருந்த கருணா துணைப்படைக் கூலிகளின் அலுவலகமான மீனகம் மீது மற்றொரு துணைப்படைக் கூலியான பிள்ளையானின் அடியாட்கள தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பில் இருக்கும் மீனகம் துணைப்படை அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று கருணா துணைப்படைக் கூலிகளை பிள்ளையான் துணைப்படைக் கூலிகள் உயிருடன் பிடித்துச் சென்றுள்ளதாகத் தெரிகிறது. இந்தத் தாக்குதலினையடுத்து கருணா துணைப்படைக் கூலிகளின் ஏனைய முகாம்களுக்கு விசேட அதிரடிப்படை மற்றும் தீவிரவாத எதிர்ப்புப் படையினரின் பாதுகாப்பினை வழங்குமாறு அரசு அறிவித்திருப்பதாகத் தெரிகிறது. பிள்ளையானின் துணைப்படைக் கூலிகளால் பிடித்துச் செல்லப்பட்ட மூன்று கருணா கூலிகளில் திலீபன் எனப்படும் முக்கியஸ்த்தரும் அடங்குவதாகத் தெரிகிறது. இங்கிலாந்தில் போலியான கடவுச் சீட்டினைப் பாவித்ததனால் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கும் விநாயகமூர்த்தி முரளீதரனாகிய அரச புலநாய்வுத்துறையின் கூலியான கருணா பற்றிய செய்திகள் கிழக்கில் பரவத் தொடங்கியதையடுத்து, பிள்ளையான் கூலிகள் கருணா குழுமீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி கிழக்கினைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர எத்தனிப்பதாகத் தெரியவருகிறது.
  11. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 1, கார்த்திகை 2007 ஏறாவூர்ப்பகுதியில் கருணா துணைப்படைக்கூலிகளின் ஆயுதமுனைக் கொள்ளைகள் அதிகரிப்பு தனது மோட்டார் வாகனத்தை கருணா துணைப்படைக் கூலிகள் பறித்துச் சென்றதாக சவுக்கடி பகுதியில் வசிக்கும் முஸ்லீம் இளைஞர் ஒருவர் பொலீஸில் முறையிட்டுள்ளார். அவ்வாறே, கொம்மாதுறை பகுதியில் அமைந்திருக்கும் பாடசாலையான விநாயகர் வித்தியாலயத்தினுள் புகுந்த துணைப்படைக் கூலிகள் அங்கிருந்த தளபாடங்களையும், குறைந்தது 4 லட்சம் ரூபாய்கள் பணத்தையும் திருடிச் சென்றிருப்பதாக பாடசாலை நிர்வாகம் முறையிட்டிருக்கிறது. இப்பகுதியிலிடம்பெற்றுவரும் கொள்ளைச் சம்பவங்களில் சவுக்கடிப் பகுதி கருணா துணைப்படை அலுவலகத்தில் இருந்து இயங்கும் உறுப்பினர்களே ஈடுபட்டுவருவதாகத் தெரிகிறது.
  12. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 18, புரட்டாதி 2007 கருணா துணைப்படைக் கூலிகளின் துன்புறுத்தல்களுக்கெதிராக மட்டக்களப்பு மீனவர்கள் போராட்டம் மட்டக்களப்பில் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் குறைந்தது 300 மீனவர்கள் தமது மீன்களை கருணா துணைப்படைக் கூலிகள் மிகக் குறைந்த விலைக்கு எடுத்துச் செல்வதாகவும், சிலவேளைகளில் பணம் கொடாது பறித்துச் செல்வதாகவும் கூறி, இந்த நடவடிக்கைகளை நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு துணைப்படைக் கூலிகளால் தமது மீன்கள் எடுத்துச் செல்லப்படுவதால் தமது நாளாந்த வருவாய் பெருமளவு பாதிக்கப்படுவதாகவும் வாழ்க்கையினை கொண்டுசெல்வது கடிணமானதாக மாறிவருவதாகவும் அவர்கள் முறையிட்டுள்ளனர். அத்துடன், துணைப்படைக் கூலிகளின் அச்சுருத்தலினால் தமது தொழில் பாதிக்கப்படுவதாகவும், தமது உயிர் பற்றிய அச்சம் ஏற்பட்டுள்ளதால், தாம் தொழிலைக் கைவிடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் கூறுகின்றனர். துணைப்படைக் கூலிகளால் பாதிக்கப்பட்ட இந்த மீனவர்கள் கல்லடியில் அமைந்துள்ள தேசிய மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளிடம் தமது முறைப்பாட்டினப் பதிவுசெய்துள்ளனர். மூன்று நாட்களாக மீனவர்கள் தொழிலுக்குச் செல்லாது போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் மட்டக்களப்பில் மீன்களின் விலை அதிகரித்துவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமது உயிருக்கும், தொழிலுக்கும் பாதுகாப்பு உத்தரவாதத்தினை அரசு வழங்கும்வரை தாம் மீண்டும் தொழிலுக்குச் செல்லப்போவதில்லை என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.
  13. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 3, புரட்டாதி 2007 முன்னாள் துணைப்படையுறுப்பினரைக் கொன்ற கருணா துணைப்படைக் கூலிகள் வவுணதீவு பொலீஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தியாப்புல பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 7:30 மணிக்கு கருணா துணைப்படைக் குழுவிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் உறுப்பினர் ஒருவரை கருணா துணைப்படைக் கூலிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். கொல்லப்பட்டவரின் வீட்டிற்குச் சென்ற துணைப்படைக் கூலிகள் அவரை விசாரிக்கவேண்டும் என்று பலவந்தமாக வாகனத்தில் ஏற்ற முயன்றதாகவும், அவர் பிடிவாதமாக மறுக்கவே தலையில் சுட்டுக் கொன்றதாகவும் உறவினர்கள் கூறுகின்றனர். கொல்லப்பட்டவர் புலிகள் இயக்கத்திலிருந்து விலகி கருணா துணைப்படைக் குழுவில் இணைந்து கொண்டவர் என்றும், குழுவின் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டினையடுத்து துணைப்படையிலிருந்து விலகி பொதுவாழ்க்கையில் இணைந்தவர் என்றும், திருமணமாகி சில நாட்களிலேயே இந்தக் கொலை நடந்திருப்பதாகவும் தெரிகிறது.
  14. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 23, ஆவணி 2007 தமக்குள் மோதிக்கொண்ட கருணா துணைப்படைக் கூலிகள் - ஒருவர் பலி திருகோணமலை நகருக்கு வடக்கே 8 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருக்கும் சாம்பல்த்தீவு பகுதியில் கருணா துணைப்படைக் குழுவின் இரு பிரிவுகளுக்கு இடையே நடந்த மோதலில் ஒரு துணைப்படைக் கூலி கொல்லப்பட்டுள்ளதுடன் இன்னும் இருவர் காயமடைந்திருக்கின்றனர். கடந்த வியாழக்கிழமை மாலை 2:15 மணிக்கு இந்த உள்வீட்டு மோதல் இடம்பெற்றிருக்கிறது. கொல்லப்பட்டவரையும் காயப்பட்டவர்களையும் உப்புவெளிப் பொலிஸார் திருகோணமலை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றதுடன், இப்பகுதியில் பாதுகாப்பினையும் பலப்படுத்தியிருக்கிறார்கள்.
  15. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 20, ஆவணி 2007 பாராளுமன்ற உறுப்பினர் ஜெயனந்தமூர்த்தியின் சகோதரைச் சுட்டுக் கொன்ற கருணா துணைப்படை கடந்த திங்கள் மாலை 6:30 மணிக்கு, வாழைச்சேனைப் பகுதியில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் ஜெயனந்தமூர்த்தியின் சகோதரர் ச தியாகராஜா அவர்களை கருணா துணைப்படைக் குழுவினர் சுட்டுக்கொன்றதாக அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். கடந்தவருடம் ஆடிமாதம் 21 ஆம் திகதி ஜெயனந்தமூர்த்தி மற்றும் அவரது மனைவி பிள்ளைகள் மீது கருணா துணைப்படைக்குழுவினர் நடத்திய ஆர் பி ஜி தாக்குதலில் அவர்கள் மயிரிழையில் உயிர்தப்பியது நினைவிலிருக்கலாம். நேற்றுக் கொல்லப்பட்ட தியாகராஜா 54 வயது நிரம்பியவர் என்பதும், இரு பிள்ளைகளுக்குத் தகப்பன் என்பதும், வாழைச்சேனைக் காகித ஆலையில் வேலைபார்த்து வந்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. அவரது உடல் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருக்கிறது.
  16. களுதாவளைப்பிள்ளையார் காவடிப்பாடல்
  17. உடல் பொருள் ஆவி யெல்லாம் /காணிக்கை பாடல் கதிரவன் எழும் காலை வேளை/ வருகை பாடல்
  18. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 யா நபி
  19. வணக்கம் வாத்தியார்......! ஆண் : காற்றை தரும் காடுகளே வேண்டாம் ஓ தண்ணீர் தரும் கடல்கள் வேண்டாம் நான் உண்ண உறங்கவே பூமி வேண்டாம் தேவை எதுவும் தேவையில்லை தேவை எல்லாம் தேவதையே ஆண் : என்னை நான் யாரென்று சொன்னாலும் புரியாதே என் காதல் நீயென்று யாருக்கும் தெரியாதே நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கி தருவேனே நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே என்னோடு நீ இருந்தால் ஆண் : உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே நீயும் நானும் பொய் என்றால் காதலை தேடி கொல்வேனே கூந்தல் மீசை ஒன்றாக ஊசி நூலில் தைப்பேனே தேங்காய்க்குள்ளே நீர் போல நெஞ்சில் தேக்கி வைப்பேனே பெண் : வத்திகுச்சி காம்பில் ரோஜா பூக்குமா பூனை தேனைகேட்டால் பூக்கள் ஏற்குமா முதலை குளத்தில் மலராய் மலர்ந்தேன் குழந்தை அருகே குரங்காய் பயந்தேன்.....! ---என்னோடு நீயிருந்தால்---
  20. இணைந்து வாருங்கள் வருகை பாடல்
  21. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 மதீனா தென்றல் சல்லி அலா நபியினா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.