Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    20026
    Posts
  2. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    23926
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    88006
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/18/21 in Posts

  1. 1960களின் கடைசியில் யாழ் இந்துவில் இருந்து வெளியே தலைகாட்ட தொடங்கிய நேரம். முதலாவது பாடம் முடிந்ததும் ஆசிரியர் வெளியேற ஓரிரு நண்பர்களும் நானும் அவர் பின்னாலேயே வெளியேறிவிடுவோம். ஆரம்பத்தில் ஒரு பாடம் இரண்டு பாடமாக தொடங்கி நாளடைவில் அரைநாள் முழுநாளாக மாறிவிட்டது. பாடசாலைக்கு 2 வருடமாக வாகனத்திலேயே வந்து போனேன்.அப்போது மாதம் 10 ரூபா மட்டுமே.வீட்டிலிருந்து வாகனம் வந்துபோகும் பாதை மாத்திரமே தெரியும்.வேறு பாதை தெரியாது. ஒருநாள் படம் பார்க்க போகலாமா என்று நண்பர் கேட்டார்.அவர் மனோகரா திரையரங்குக்கு அருகாமையில் வசிப்பராகையால் யாழில் கூடுதலான இடங்கள் தெரியும். சரி நண்பன் தான் கேக்கிறானே ஆனால் ரிக்கற் எவ்வளவு அதுக்கு என்ன செய்வது என்று யோசிக்க உங்களிடம் காசில்லாவிட்டால் பரவாயில்லை நாளைக்கு தாங்கோ என்றான்.நானும் மற்ற நண்பனும் கோவில் மாடு போல தலையாட்டினோம். ஒரு நண்பனின் தலமையில் பின் தொடர்கிறோம்.பெருந் தெருக்களுக்கு போகாமல் சிறிய ஒழுங்கைகள் வழியாக 10.30 க்குத் தான் படம் தொடங்கும் 10.25 க்கு போனால் சரி என்றான்.நெஞ்சு திக்குதிக்கென்று இருந்தாலும் படம் பார்க்க போகிறோமே என்று சந்தோசமும் ஏதோ சாதனையுமாக இருந்தது. நாங்களும் உள்ளுக்கு போக முதலாவது மணியும் அடிக்கிறது.படம் தொடங்கிய பின் தான் ஒரு ஆங்கிலப் படத்துக்கு வந்திருக்கிறோமே என்று.முதன்முதலாக களவாக பார்த்த படம் ஜேமஸ் பாண்ட் நடித்த கோல் பிங்கர்(Gold Finger) படம் முடிந்து பிற்பகல் முதல்பாடம் இடாப்பு கூப்பிட முதல் போக வேண்டுமே என்று ஓட்டமும் நடையுமாக போய் சேர்ந்துவிட்டோம். அன்று வீட்டுக்குப் போனால் 65 சதம் கொடுக்க வேண்டுமே எப்படி கொடுப்பது?இரவுவரை ஒரு வழியும் தெரியவில்லை. காலையில் குளித்து சாமி கும்பிடும் போது தான் ஒவ்வொரு சாமிப்படத்தின் முன்பும் சில்லரை காசுகள்.ஆகா இதைவிட்டால் வேறு வழியே கிடையாது.பொறுக்கி எடுத்து காற்சட்டை பொக்கற்றுக்குள் போட்டு கிலிங்கி சத்தம் கேக்காமல் ஒரு நுhலாலும் கட்டி கடன் கொடுத்தாயிற்று. இது தான் பள்ளியிலும் வீட்டிலும் தொடங்கிய முதல் களவு.முதல் தவறு செய்வது தான் மிகவும் கஸ்டம்.அப்புறம் அதுவே பழக்கமாயிடும். பின்னர் வின்சர் ராஜா திரையரங்குகளில் 10.30 படம்.காசில்லை அல்லது புதுப்படம் வரவில்லை என்றால் எங்காவது சும்மா சுற்றுவது. ஒருநாள் கஸ்தூரியார் வீதி வழியாக வின்சர் திரையரங்கு நோக்கி போகும் போது நிறைய நேரமிருக்கு என்று அதற்கு முதல் சந்தியில் இடதுபக்கமாக திரும்பி போனால் சிறிய வாசிகசாலை பெயர் அண்ணா அறிவகம். வாசிகசாலை சிறிதாக இருந்தாலும் நிறைய புத்தகங்கள் குறைந்த சனம்.புத்தகங்களுடன் இருந்தில் நேரம் போனதே தெரியவில்லை.படத்துக்கும் நேரம் போய்விட்டது. இதுக்குப் பின் படம் இல்லாவிட்டால் அண்ணா அறிவகம் என்றாகிவிட்டது.நாளாந்தம் போகப் போக படத்துக்கு போகாவிட்டாலும் வாசிகசாலைக்கு போய்வந்தோம். இதுவரை யாழ் பொதுசன நுhலகத்திற்குப் போனதில்லை. ஆனாலும் அண்ணா அறிவகம் மாதிரி ஒரு வாசிகசாலையை இன்னமும் காணவில்லை.அனேகமாக சுவியருக்கு இந்த வாசிகசாலையும் இடங்களும் நன்கு தெரிந்திருக்கலாம்.
  2. அட நான் கூட தோழர் ஏதோ அலுவல் காரணமா சென்னையில் உள்ள தீம்கா ஒபீஸ் உள்ள போயிட்டார் ..என உள்ள வந்தனன்.. மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு வாழ்த்துக்கள் தோழர்..👍
  3. நீங்கள் சொல்வது நீராவியடி பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக "செங்கை ஆழியான்" அவர்களின் வீட்டோடு சேர்ந்த வாசிகசாலை. நான் அங்கு நிரந்தர உறுப்பினர். அங்கிருந்துதான் ஏராளமான புத்தகங்கள் எடுத்து வாசித்தனான். எனது வீட்டுக்கு அருகில்தான் அது இருந்தது. அவரது மனைவியும் இந்து மகளிர் பாடசாலையில் ஆசிரியை என்று நினைக்கின்றேன். அதற்கு முன்னால் லிங்கம் அரவை மில் இருந்தது. அதனால் அடிக்கடி அரிசி, தூள் அரைக்க போகும்போது அந்த நூலகத்துக்கு போய் அதுவே வழக்கமாகி விட்டது...... முன்பு புதுப்படம் 65 சதம். பழைய படம் 35 சதம். கூட ஒரு 10 சதம் இருந்தால் நல்ல தேநீருடன் ஒரு வடை,சுசியும்,பகோடா,போண்டா எதோ ஒன்று வாங்கி சாப்பிட முடியும்....... நல்லதொரு நினைவு மீட்டல் பிரியன்......! 😁
  4. செந்தில் அரிய வகை பகிடி..😊
  5. எல்லாருக்கும் விளங்கிற மாதிரி.....நீராவியடிப் பிள்ளையார் கோயில் எண்டு சொன்னால் என்னவாம்? நாங்கள் எங்களுக்குள்ள கலரி எண்டு சொன்னால் கெளரவப் பிரச்சனை எண்டு சொல்லிக் காந்திக் கிளாஸ் என்று தான் எங்களுக்குள் அழைத்துக் கொள்வோம்! ஈழப்பிரியன்...அனுபவங்களைக் கொஞ்சம் நீட்டினால் என்ன?😄
  6. ஈழத்தமிழினத்தின் இனறைய நிலையை எவ்வாறு புரிந்து கொள்வது?? எந்தவகையில் நீ போராடினாலும் எந்த வகையிலும் நீ கவனிக்கப்படமாட்டாய் இது சிறீலங்கா சொல்வதல்ல உலகம் ஏன் மக்களை காப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஐநா சொல்வது? இன்றைய ஈழத்தமிழினத்தின் மௌனநிலை என்பதும் கூட மற்றவர்களால் கேட்கப்பட்டு அல்லது தேவைப்பட்ட ஒன்றல்ல ஈழத்தமிழினம் தன்னால் இதற்கு மேல் அழிவை சந்திக்கமுடியாது இதற்கு மேலும் தன்னிடம் போராடும் வலு கிடையாது என்பதனால் வந்தது அப்போ ஈழத்தமிழினத்தின் அடுத்த கட்டம் என்ன?? மீண்டும் உண்ணாவிரதம் ஊர்வலங்கள்? ஒன்றை மதிப்பவரிடம் அல்லது மனித மாண்புகளை கொண்டோரிடம் நாம் பரீட்சிக்கவேண்டியவை இவை கொலைகாரர்களிடம் அதற்கு துணைபோனவர்களிடம் அதற்காக ஆயுத விநியோகம் செய்தவர்களிடம் .... எவ்வாறு ஒரு படியாவது அவர்கள் முன்னகர்த்துவர்??? அவர்களுக்கு ஆப்பிழுத்த குரங்கின் கதை தெரியாதா??? நான் பிரான்சில் நடாத்தப்படும் அத்தனை ஊர்வலங்களுக்கும் சென்றிருக்கின்றேன் ஐரொப்பாவில் நடாத்தப்படும் அநேக ஊர்வலங்களுக்கும் சென்றிருக்கின்றேன் ஐநா வுக்கு முன்னால் நடாத்தப்படும் அத்தனை ஊர்வலங்களுக்கும் சென்றிருக்கின்றேன் இது வருடத்துக்கு 2 அல்லது 3 ஆக இருக்கும் இவ்வாறு செல்வதென்பது எவ்வளவு கடினமானது எவ்வளவு நேரத்தை விழுங்கக்கூடியது எவ்வளவு செலவானது என்று பல தமிழருக்கும் தெரிவதில்லை (அவ்வாறு தெரிந்தால் அவை பற்றி கிண்டலடிக்கமாட்டார்கள்) 2 நாட்கள் லீவு வேண்டும் மற்றும் எல்லைகளில் சோதனை என்ற பெயரில் நடக்கும் அவமதிப்புக்கள் திருப்பி அனுப்புதல்கள்....??? மற்றும் செலவுகள்?? இதையெல்லாம் தாண்டித்தான் போவதுண்டு போய் கால் கடுக்க பல மணி நேரம் நின்று நடந்து ஊர்வலமாக சென்றால் அங்கே எதையுமே கணக்கெடுக்கமாட்டார்கள் இத்தனை வருடங்களாக இவ்வளவு ஆயிரம் பேர் அமைதியாக வருகிறார்களே எமது கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டு நாம் சொல்வதையெல்லாம் கேட்டு திரும்பி சென்று மீண்டும் மீண்டும் அமைதியாக வந்து கெஞ்சுகிறார்களே என்று எந்த மனச்சாட்சியும் அற்ற செயற்பாடற்ற நிலை தான் ஒவ்வொரு முறையும். கடைசியாக நான் சென்றது 2018. அன்று அதே நடைமுறை அதே நடை ஊர்வலம் மேடைப்பேச்சு... இவை நடந்து கொண்டிருந்தபோது ஐநா வாசலில் சில கூக்குரல்கள் கேட்டன அங்கே சென்று பார்த்தபோது சில இளைஞர்கள் ஐநாவுக்குள் உட்புக எத்தனித்துக்கொண்டிருந்தார்கள் காவலர்கள் இவர்களை தடுத்து வைத்திருந்தாலும் அமைதியாக ஆனால் ஆக்ரோசமாக இளைஞர்கள் உட்புக எத்தனித்தனர் இந்த இளைஞர்களுக்கு ஆதரவாக கூட்டம் அதிகரிக்கத்தொடங்கியது நானும் அவர்களுடன் சேர்ந்த கொண்டேன் மேலும் நின்றிருந்த காவல்த்துறையினர் தம்மால் முடியாது போவதை உணர்ந்து மேலதிக காவல்த்துறையினரை வரவளைத்து சுற்றி வளைத்தனர். ஆனால் இளைஞர்கள் எவரும் பின் வாங்கவோ வன்முறையை பாவிக்கவோ இல்லை இறுதியாக இனியும் முன்னேறுவது என்றால் வன்முறையை தவிர வேறு வழியில்லை என்பதால் அழுதபடியும் திட்டியபடியும் எல்லோரும் பின் வாங்கினர். நானும் தான் அதற்கு பின்னர் நான் ஐநா ஊர்வலத்துக்கு போவதில்லை ஏனெனில் அவர்கள் எம்மிடம் வன்முறையை மட்டுமே விட்டு வைத்திருக்கின்றனர். இந்த யுத்தத்துக்கு உதவிய அனைவரும் அழிந்து உலகம் தலைகீழாக மாறினால் மட்டுமே எமக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களுக்கு எம்மினத்தின் மேல் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் அட்டூழியங்களுக்கு நியாயம் கிடைக்க சிலவேளைகளில் வழியுண்டு.. அதைவிடுத்து அமைதி வழி இவர்களுக்கு புரியும் என்று அப்பாவித்தனமாக நம்பி திலீபனாக பூபதி அம்மாவாக முருகதாசாக இறுதியாக அம்பிகை அம்மாவாக .... கைவிடப்படுவீர்கள்????? (ஆனால் அதே கதவை இன்றும் இன்னும் பலர் தட்டியபடி தான் உள்ளனர். தட்டுங்கள்)
  7. நீங்கள் சொல்வதிலிருந்து அது கன்னாதிட்டி சந்தி.(நகைக்கடைகள் அதிகம் இருக்கும்). அதில் இடது பக்கம் போனால் ஒரு அம்மன் கோவிலும் அதன் வீதியில் ஒரு மோட்டர் சைக்கிள் கராஜ்சும் (அப்பாமணியின் கராஜ், மகன்மார் நடத்தினவை) இருக்கு அதன் அருகில் என்று நினைக்கிறேன்.நான் அங்கு போனதில்லை......!
  8. மலரும் நினைவுகள் எப்பவுமே அருமையாக இருக்கும். ஈழப்பிரியன் அண்ணாவின் நினைவுகளும் அப்படியே அது சரி ஜேம்ஸ் பொன்ட் படம் என்றால் வயது வந்தவர்களுக்குரிய படமாக இருந்திருக்குமே?
  9. ஒரு ரூபாய் இருந்தால் மொக்கங் மன்னிக்கவும், ஹமீதியா கபேயில எட்டுப் புட்டும் (நாற்பது சதம்), ஒரு குறுமாவும் ( அறுபது சதம்) சாப்பிடலாம்! ஆணம் இலவசம்! இடைகிடை மொக்கனைக் கூப்பிட்டு அலுப்படிச்சால்...அவரது மூளை தாங்காது! வெளியால வரேக்குள்ள...அண்ணை எவ்வளவு? தம்பி...ஒரு ரூபாய்..!😄
  10. அட நீங்களும் நம்மாளுதான், நன்றி பழைய நினைகவுகளை பகிர்ந்த திற்கு. பள்ளியை கட் பண்ணி சுத்தவதில் தனி சுகம், அதுவும் ஒரு நண்பன் கிடைத்துவிட்டால் சொல்லி வேலையில்லை, 6ம் வகுப்பில் நானும் எனது நண்பனும் ஆறு மாத த்துக்கு மேல் பள்ளி பஸ் தரிப்பிடத்தில் இறக்கி திரும்ப வீடு வரை நடைதான், வரும் வழியில் ஒரே சுற்றலும் & பம்பலும் தான். யாரோ கண் வைக்க எங்கள் சொந்த காரா அண்ணாவிடம் அகப்பட்டு வீட்டில் நடந்த பூசையை மறக்க முடியாது😢, அதன்பின் பலத்த கறுப்பு பூனைகளின் பாதுகாப்பில் தான் பள்ளி செல்வது 🤣
  11. எகிறி குதித்தேன் வானம் இடித்தது .. பாதங்கள் இருந்தும் பறவையானது .. விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது .. புருவங்கள் இறங்கி மீசை ஆனது.. அலே அலே அலே அலே அலே அலே அலே அலே ...
  12. ஆமாம் சிறி பக்கத்தில் ஒரு கோவில் இருந்தது.சிறிய வாசிகசாலை நிறைய புத்தகங்கள்.ஒரு காலத்தில் படம் அங்கு இங்கு சுற்றுவதை விட வாசிகசாலையே சரண். நீங்களும் உலா வந்திருக்கிறீர்களோ?
  13. ஈழப்பிரியனின்... மலரும் நினைவுகளை வாசித்து மகிழ்ச்சி அடைந்தோம். 65 சதத்துக்கு... 👍🏼 007 ஜேம்ஸ் பொண்ட் படம், அருமையான காலம். 😁 கஸ்தூரியார் வீதிக்கும், பிரவுண் வீதிக்கும் இடையில் உள்ள பிள்ளையார் கோவில் குளத்தின் அருகில் உள்ள வாசிகசாலையை குறிப்பிடுகின்றீர்கள் என நினைகின்றேன். அரச மரத்தின் கீழ்... அழகான சூழலில் அமைந்துள்ள வாசிகசாலை அது.
  14. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 நானிலத்தை வாழ வைக்க நாயகம் பிறந்தார்
  15. ஓஹோ.. நீங்கள் குருதி உறைந்துவிடும் என்று பயந்த ஆட்கள்..! தடுப்பூசி சும்மா களைப்பை தருகிற மாதிரி இருக்கும். ஆனால் எல்லாம் இரண்டொரு நாளில் சரியாகிவிடும். ஐரோப்பிய யூனியனில் இருக்கும் சில நாடுகள் ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா குருதி உறைவில் பிரச்சினை தரும் என்று சொன்னதும் சிலர் பயந்து அதனைப் போடாமல் no show ஆகியதால் எனக்கு ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட வாய்ப்பு கிடைத்தது! போய்க் குத்திவிட்டு வந்தேன். அன்று ஏதும் செய்யவில்லை. அவர்கள் தந்த பிரசுரத்தில் இருந்ததில் side effects இல் ஒன்றிரண்டு அடுத்தநாள் வந்தது. முதலில் உடல் சில்லென்று சில மணிநேரம் குளிர்ந்த மாதிரி இருந்தது. பின்னர் சாடையாக சூடாகவும் அடிச்சுப் போட்ட மாதிரியும் இருந்தது. ஊசி போட்ட இடத்தில் நோ இருந்தது. ஆனால் 24 மணி நேரத்திலேயே எல்லாம் நோமலாகிவிட்டது!😀
  16. ஐயா நான் எல்லாவற்றையும் செய்து பார்த்த வரலாற்றுடனும் எனது சொந்த அனுபவத்துடனும் இருந்து கொண்டு அதன் உச்ச விரக்தியில் பேசுகின்றேன் ஆனால் உங்களுடைய கருத்துக்களை பார்க்கும்போது சிங்களமும் சர்வதேசமும் தமது இரு கரங்களிலும் தீர்வை ஏந்தியபடி தவமிருப்பது போலவும் தமிழர்கள் அதை வாங்காதிருப்பது போலவும் அல்லது உங்களிடம் தீர்வுக்கான பாதை இருப்பது போலவும் அதனை தமிழர்கள் முழுமையாக அழியும்வரை நீங்கள் வெளியடுவதில்லை என்ற உறுதியிலிருப்பது போலவும் திருட்டுத்தனமாக இருக்கிறது நாம் தான் சொல்கின்றோமே எங்களையும் சேர்த்து அல்லது சேர்க்காமல் எதையாவது செய்யுங்கள் செயலில் காட்டுங்கள் என்று???
  17. நம்பி கெட்டவர் எவரைய்யா ஓம் சரவணபவாய . . . ஓம் சரவணபவாய . . . ஓம் சரவண ஓம் சரவண ஓம் சரவண ஓம் ஆதி பழனியே சென்னிமலை ஒரு ஆண்டியின் தவக்கோலம் கொண்ட நிலை பன்னிரு கையிருக்க ஏன் கவலை கந்தன் வேலிருக்க நமக்கு பயமும் இல்லை முருகா முருகா முருகா முருகா அருள்பொழியும் தண்டபாணிமுகம் கந்த சஷ்டி கவசமங்கே தினமொலிக்கும் துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம், நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும், நிஷ்டையுங் கைகூடும், நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை சித்தனாய் பாலனாய் சிரிக்கும் முகம் அந்த சிரகிரி வேலவன் வாழுமிடம் ஓம் சரவணபவாய . . . பழத்திற்கு வலம்வந்த வேலாயுதம் தன் பக்தரைக் காத்திடும் தண்டாயுதம் ஞான பழத்திற்கு வலம்வந்த வேலாயுதம் அருமருந்தாகும் பஞ்சாமிர்தம் திருநீறும் சந்தனமும் கமகமக்கும் காவடிகள் ஆடிவரும் மலையினிலே திருவடியில் பக்தர்கள் அலைபோலே ஆடிவரும் அழகு முகம் தேரினிலே பாடிப் பணிந்தோமே உத்திரத்திலே
  18. தாயைப்போல என்னைத் தேற்றும் எந்தன் தெய்வமே என்னுள்ளம் நீ வாரும் என் இயேசுவே.... என்னுள்ளம் நீ வாரும் என் இயேசுவே என்னோடு தங்கும் என் இயேசுவே (2) என் சொந்தம் நீயாக வேண்டுமே - 2 உனக்காக நான் வாழ வேண்டுமே - 2 இறைவா இறைவா எந்தன் உள்ளம் வருவாய் - 2 என் உள்ளம் நீ வாரும் என் இயேசுவே உன்னை மறந்தால் உறக்கமின்றி தவித்தேன் தனிமையாக வாழ்ந்து வந்தேன் (2) என் இதயம் நீ வாருமே உன் அன்பில் நான் வாழுவேன் - 2 இறைவா இறைவா என் இதயம் வா அருளாய் வரமாய் திருவிருந்தில் வா உயிர் உடலாக எழுந்தே வா என்னில் வாழ்ந்திட வா பாவம் சுமந்ததால் அருளின்றி தவித்தேன் வெறுமையாக வாழ்ந்து வந்தேன் (2) உன் அன்பை எமில் தாருமே உன் உறவில் நான் வாழுவேன் - (2) இறைவா இறைவா என் இதயம் வா அருளாய் வரமாய் திருவிருந்தில் வா உயிர் உடலாக எழுந்து வா என்னில் வாழ்ந்திட வா
  19. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 கர்பலாவை கவியில் பாடவா
  20. சுயநலத்தில்த் தான் பொதுநலம் இருக்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.