Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts
  2. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    23926
    Posts
  3. புங்கையூரன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    13683
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    38791
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/24/21 in Posts

  1. ஒரு கதையை அல்லது ஒரு கவிதையை எழுதிச் செல்லும் போது, இடைக்கிடை ஆராவது வந்து ஏதாவது ஒரு கருத்தை அது நல்லதோ அல்லது கெட்டதோ எதுவாக இருந்தாலும் சொல்லிச் செல்லும்போது அது எழுதுபவனுக்கு ஒரு உந்து சக்தியை அழிப்பதுண்டு! அந்த விதத்தில் உங்கள் கருத்துக்களின் பெறுமதி அளவிட முடியாதது! நீங்கள் குறிப்ப்பிபிட்டது போலவே, நினைவு மீட்டல்கள் மிகவும் இனிமையானவை! அவற்றுள் சில பொத்திப் பாதுகாக்கப் பட வேண்டியவை! சில ஓரளவுக்குப் பகிர்ந்து கொள்ளத் தக்கவை! இன்னும் சில கல்லறை வரைக்கும் காவிச் செல்ல வேண்டியவை! நன்றி....விசுகர்..! உண்மை தான், சுவியர்! எங்கேயிருந்து இந்த உவமானங்களை எடுக்கிறீர்களோ தெரியாது! அந்த வலி எப்படியிருக்கும் என்று கற்பனை பண்ணிப் பார்த்தேன்! நன்றி சுவியர்...!
  2. நல்ல ஒரு அனுபவப் பகிர்வு, சுமே! ஒவ்வொருவரது உடல்களும் வெவ்வேறு வகையானவை! அவர்கள் தான் ...நிலைமைகளுக்கு ஏற்ற மாதிரி முடிவுகளை எடுக்க வேண்டும்! உங்கள் வீடியோ பதிவில் ஒரு 'பொறுப்புத் துறத்தல்" எச்சரிக்கை ஒன்றைப் போட்டால் நல்லது என்று நினைக்கின்றேன்! இந்தப் பதிவால்...நாளைக்கு ஒரு பிரச்சனை வரக்கூடாதெல்லோ? 😃
  3. உலகம் பூராவும் வயதானவர்களையும் குழந்தைகளையும் தாக்கும் முக்கியமான நோய் தாக்கங்களில் ஒன்றாக செப்சிஸும் (Sepsis) மாறி வருகிறது.. செப்சிஸ் என்பது நுண்ணுயிர் நோய் தொற்றும் அதற்கு எதிரான உடலின் வினைத்திறனாற்றலும்.. மோதிக்கொள்ளும் போது.. குறிப்பாக உடலின் நோய் எதிர்ப்பு தன்மை குறைவடையும் வேளையில்..உடல் பகுதி பகுதியாக செயலிழந்து இறப்பு ஏற்படுகிறது. செப்சிஸ் காரணமாக ஒருவர் சில மணி நேரத்தில் இருந்து சில வாரங்களுக்குள் இறப்பை சந்திக்கலாம். அதிதீவிர சிகிச்சையும் உடலின் நோய் எதிர்ப்பு வலிமையும் இதில் இருந்து மீள உதவலாம். குறிப்பாக பிறந்த குழந்தைகளிலும்.. வயதானவர்களிலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால்.. உடலில் உள்ள சாதாரண பக்ரீரியாக்கள் கூட உடலின் பிறபகுதிகளுக்குள் செல்வதால் கூட இந்த நிலை ஏற்படலாம். குறிப்பாக குடலில் உள்ள பக்ரீரியாக்கள்.. இரத்தத்தை அடைவதால் கூட.. அவை உடலால் அழிக்கப்படாது பல்கிப் பெருகி உடலங்கங்களை பாதித்து உயிரிழப்பை ஏற்படுத்தலாம். குறிப்பாக வயதானவர்களில்.. (60 வயதினருக்கு மேல்) நோய் எதிர்ப்பு சக்தி குன்றியவர்கள்.. நாட்பட்ட நோய் கண்டவர்கள்.. தொடர்ந்து படுக்கையில் இருக்கும் வயதானவர்கள்.. நடமாட்டம்.. உடற்பயிற்சி அற்ற நிலையில் வாழ வேண்டி உள்ள வயதானவர்கள்.. நீரிழிவு நோய் கண்டவர்கள்.. தைரொயிட் உட்பட்ட ஹார்மோன் பிரச்சனை உள்ளவர்கள்.. உடற்தசையிழப்பை கண்டு வரும் நோயாளிகள்.. விற்றமின் டி குறைபாடுள்ளவர்கள்.. போதிய உணவின்மை.. போதிய ஊட்டச்சத்தின்மை.. வைத்தியக் கவனிப்பு சரிவரயின்மை.. போதிய சுகாதார வசதிகள் இன்மை.. தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வாழுதல்.. போதிய வைத்திய பரிசோதனைகள் இன்மை.. இப்படி பல காரணிகள் தனித்தோ கூட்டாகவோ.. இந்த செப்ஸிஸ் உருவாக வாய்ப்பளிக்கின்றன. செப்சிஸ் தாக்கத்தின் பொதுவான அறிகுறிகளாவன.. 1.காய்ச்சல்/ குளிரும் காய்ச்சலும் 2. உடற்சோர்வு 3.சிறுநீர் உற்பத்தி குறைவு 4.மயக்க நிலை 5. அதிகரித்த இதயத்துடிப்பு 6. வாந்தி மற்றும் பேதி 7. தோலின் நிறம் வெளிர்ப்படைதல் 8. குறை குருதி அழுத்தம் சுவாசத்தொற்று எனில் சளி.. மூச்சு விடுவதில் சிரமம்.. மூச்சடைப்பு இவையும் சேர்ந்து கொள்ளும்.. அம்மாவின் விடயத்தில்.. அவருக்கு தைரொயிட் பிரச்சனை இருந்தது உண்டு. நடமாட்டம் வீட்டுக்குள் மையப்படுத்தி தான் இருந்தது. ஆனால் தொடர் வைத்திய கண்காணிப்பு.. மற்றும் எல்லா அடிப்படை வசதிகளும் கொடுக்கப்பட்டே வந்தன. அப்போ எப்படி செப்ஸிஸ் வந்தது.. எப்படி அதனை வைத்தியர் கண்டுபிடிக்கத் தவறினார்..??! இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன் தோல் சம்பந்தப்பட்ட சின்னப் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதன் விளைவாக.. காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. ஆனால்.. இது தொடர்பாக குடும்ப வைத்தியர் வந்து காய்ச்சலுக்கு மருந்து கொடுத்துச் சென்றிருக்கிறார்.. ஆனால்.. குருதி பரிசோதனையோ.. சிறுநீர் பரிசோதனையோ செய்யவில்லை. சில நாட்களின் பின் உடல்நிலை தீவிரமாக பாதிப்பட்ட நிலையில்.. அதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் உயிரைக் காக்க முடியவில்லை. செப்சிஸ் (Sepsis).. செப்சிஸ் தாக்கம்/ அதிர்சி (Septic shock) என்பது.. குறிப்பாக.. சுவாச பாதிப்பை அதிகம் ஏற்படுத்தும்.. அதற்கு அடுத்த படியாக.. சிறுநீரகத்தை பாதிக்கும். அதன் தொடர்ச்சியாக இதயத்தாக்கு ஏற்படும்.. மூளை செயலிழப்பு ஏற்படும். இதில் குருதி நஞ்சாதல்.. என்பது சிறுநீரக பாதிப்பின் விளைவாக ஏற்படுவதோடு.. சிறுநீர் தொற்று.. சிறுநீர் உற்பத்தி அளவு குறைவு என்பன செப்சிஸ் தாக்க விளைவுகளாகின்றன. குறிப்பாக மருந்துகளுக்கு எதிர்ப்புக்காட்டும் பக்ரீரியா வகை நுண்ணங்கள் உடலில் தொற்றாகி பெருகுவதால்.. சரியான பகுப்பாய்வுகள் செய்யப்பட்டால் அன்றி சரியான மருந்துகளை கொடுக்க வைத்தியரால் முடியாது. அந்த வகையில்.. குருதிப் பரிசோதனை மற்றும் Blood culture மற்றும்.. சிறுநீர் பரிசோதனை மற்றும் சிறுநீர் மாதிரியில் இருந்தான Urine culture என்பன செய்யப்படுதல்.. செப்சிஸ் தாக்கத்தினை இலகுவாக ஆரம்பத்தில் கண்டறிந்து கொள்ளலாம். ஆனால்.. இலங்கையில் வைத்தியர்கள்.. Blood culture மற்றும் Urine culture செய்வதை அரிதாகவே காண முடிகிறது. அதிலும் High Risk நோயாளிகளுக்கு கூட இவற்றை பரிந்துரைப்பதில்லை. அம்மா விடயத்தில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்ட வேளையில்.. குருதிப் பரிசோதனை.. சிறுநீர் பரிசோதனையுடன் Urine culture மற்றும் Blood culture செய்யப்பட்டு தொற்றுக்கான நோய்க்காரணி கண்டறியப்பட்டு சரியான சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பின் அவரின் வாழ்நாளை நிச்சயம் அதிகரித்திருக்க முடியும். அதைவிடுத்து.. அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு எடுத்துச் சென்ற பின்.. பரிசோதனைகளையும்.. கண்காணிப்பையும் செய்வதால் மட்டும் High Risk நோயாளிகளை பாதுகாக்கலாம் என்பது சரியான வழிமுறையாக தெரியவில்லை. உலகில் எங்கு என்றாலும் செப்சிஸ் மரணங்கள் வயதானவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில்.. இந்த அனுபவப் பகிர்வு உங்களுக்கும் உதவலாம்.. என்பதால் பகிர்ந்து கொள்கிறோம். தீவிரமான உடற்தொற்று கண்டால்.. நிச்சயமாக உங்கள் வைத்தியர்.. குருதி.. சிறுநீர் பரிசோதனைகளுக்கு மேலதிகமாக.. Urine culture செய்யச் சொல்லி கோருவது.. தேவை எனின் Blood culture செய்யச் சொல்லிக் கோருவது சரியான நோயாக்கியை கண்டறியவும் சரியான மருந்துகளை கன்டறிந்து.. தெரிவு செய்து வழங்கவும்.. உதவும். இது நோயாளிகளின் சடுதியான தேவையற்ற மரணங்களை கட்டுப்படுத்த உதவும். உசாத்துணை: https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3956061/ (யாழிற்கான சுய ஆக்கம்)
  4. உலக விஞ்ஞானிகளுக்கே சவால் விடும் நம்ம விஞ்ஞானிகள் .......சும்மா மிரட்டுகிறார்கள்.....! 👏
  5. காலத்தில் அழியாத காவியம் தரவந்த மாபெரும் கவி மன்னனே........! 💐
  6. முடியாப் பிறவிக் கடலிற் புகார்முழு துங்கெடுக்கும் இடியாற் படியில் விதனப் படார்வெற்றி வேற்பெருமாள் அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலமடங்கப் பொடியாக்கிய பெருமாள் அவுணர் குலமடங்கப் பொடியாக்கிய பெருமாள் அவுணர் குலமடங்கப் பொடியாக்கிய பெருமாள் அவுணர் குலமடங்கப் பொடியாக்கிய பெருமாள் திரு நாமம் புகல்பவரே நாளென் செயும்வினை தானென் செயும் எனை நாடிவந்த கோளென் செயும் நாளென் செயும்வினை தானென் செயும் எனை நாடிவந்த கோளென் செயும் கொடுங் கூற்றென் செயும் குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே ஜகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த திருமாது கெர்ப்ப முடலூறி தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில் திரமாய ளித்த பொருளாகி மகவாவி னுச்சி விழியாந நத்தில் மலைநேர்பு யத்தி லுறவாடி மடிமீத டுத்து விளையாடி நித்த மணிவாயின் முத்தி தரவேணும் முகமாய மிட்ட குறமாதி னுக்கு முலைமேல ணைக்க வருநீதா முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள் மொழியேயு ரைத்த குருநாதா தகையாதெ னக்கு னடிகாண வைத்த தனியேர கத்தின் முருகோனே தருகாவி ரிக்கு வடபாரி சத்தில் சமர்வேலெ டுத்த பெருமாளே தனியேர கத்தின் முருகோனே சமர்வேலெ டுத்த பெருமாளே எனக்குச்சற் றுனக்குச்சற் றெனக்கத்தத் தவர்க்கிச்சைப் பொருட்பொற்றட் டிடிக்கைக்குக் குடில்மாயம் எனக்கட்டைக் கிடைப்பட்டிட் டனற்சுட்டிட் டடக்கைக்குப் பிறக்கைக்குத் தலத்திற்புக் கிடியாமுன் தினைக்குட்சித் திரக்கொச்சைக் குறத்தத்தைத் தனத்தைப் பொற் பெறச்செச்சைப் புயத்தொப்பித் தணிவோனே செருக்கிச்சற் றுறுக்கிச்சொற் பிரட்டத்துட் டரைத்தப்பித் திரட்டப்பிக் கழற்செப்பத் திறல்தாராய் பனைக்கைக்கொக் கனைத்தட்டுப் படக்குத்திப் படச்சற்பப் பணத்துட்கக் கடற்றுட்கப் பொரும்வேலா பரப்பற்றுச் சுருக்கற்றுப் பதைப்பற்றுத் திகைப்பற்றுப் பலிப்பப்பத் தருக்கொப்பித் தருள்வாழ்வே கனக்குத்திக் கனைத்துச்சுற் றிடப்பச்சைக் கனப்பக்ஷிக் கிடைப்புக்குக் களிப்புக்குத் திரிவோனே கலிக்கொப்பிற் சலிப்பற்றுக் கதிக்கொத்திட் டெழிற்சத்திக் கடற்கச்சிப் பதிச்சொக்கப் பெருமாளே கடற்கச்சிப் பதிச்சொக்கப் பெருமாளே . . . பெருமாளே . . . பெருமாளே . . .
  7. இறைவனே என் தேவனே- காணிக்கை பாடல் உனக்காக இனி வாழ முடிவெடுத்தேன்
  8. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 முஹ்யித்தீன் ஆண்டகை மாலை
  9. கொரோனா அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி சுமே ஆன்ரி. பலருக்கு mild symptoms ஆகத்தான் வரும். எனினும் ஆபத்தாகவும் சிலருக்கு வந்து சேரும் என்பதால் லொட்டரி மாதிரி நினைக்கவேண்டும். எனக்குத் தெரிந்து பலருக்கு வந்து முறிச்சு எடுத்தது. கொரோனா வந்து சில மாதங்களில் 30 வீதமானோர் மீண்டும் வைத்தியசாலை போனதாக தரவுகள் சொல்லுகின்றன. எனவே சுவாசம் சம்பந்தமான பிரச்சினைகள் வந்தால் வைத்தியரை நாடவேண்டும். NHS guidelines படி Oxymeter 95 க்குள் கீழே வந்தால் உடனடியாக வைத்தியரை தொடர்புகொள்ளவேண்டும். 92 க்குப் போனால் அவசர சேவையை தொடர்புகொள்ளவேண்டும். 85 மட்டும் பிரச்சினை இல்லை என்பது சரியல்ல. அத்துடன் வைத்தியசாலைக்கு போவதா இல்லையா என்பதை நாம் தீர்மானிக்கக்கூடாது. அதனை வைத்தியர்கள்/ NHS சொல்லவேண்டும். கடந்த வருடம் எனக்குத் தெரிந்த ஒருவர் கொரோனா வந்திருக்கலாம் என்று வீட்டில் தனது அறையில் தனிமையாக இருக்கும்போது சிலநாட்களில் ஸ்ரோக் வந்து மரணமடைந்தார். அவருக்கு கொரோனா வந்திருக்கவில்லை. எனவே, மனதைரியம் மிகவும் முக்கியம். அத்துடன் வைத்தியர்களின் தகுந்த ஆலோசனைகளும் முக்கியம்.
  10. சிறிய விலங்குகள் எல்லாம் பெரிசாய் முன்னேறிட்டுது.........! 👍
  11. கஷ்டப்பட்டு உழைக்கும் மனிதா அதை அனுபவிக்காது மிச்சம் பிடித்துச் சேர்த்து என்ன பயன்???? 😂😀
  12. செய்திக்குறிப்பு 1 : மார்கழி 2011 சிறார்களை தனது துணைராணுவக் குழுவில் இணைத்த கருணா ஆங்கிலத்தில் : உவிந்து குருகுலசுரிய 2005 ஆம் ஆண்டு, இலங்கையினுள்ளும், வெளியேயும் மனிதவுரிமைகளுக்கான செயற்பாடுகளில் ஈடுபட்டதற்காக ராதிகா குமாரசுவாமிக்கு அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா தேஷமான்ய எனும் உயர்ந்த கெளரவத்தினை வழங்கியிருந்தார். ராதிகா அப்பொழுது ஐ நா வின் சிறுவர்களுக்கும் ஆயுதப் பிணக்குகளுக்குமான நடவடிக்கைக் குழுவில் விசேட பிரதிநிதியாகச் செயலாற்றிவந்தார். ஆயுத மோதல்களால் பாதிக்கப்பட்டுவரும் சிறுவர் சிறுமியரின் உரிமைகள் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே அவரது பிரதான கடமையாக இருந்து வந்தது. கார்த்திகை 2011 இல், இனியபாரதி என்றழைக்கப்படும் புஷ்பகுமார் எனும் நபருக்கு இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அதே உயர் கெளரவமான தேஷமான்ய எனும் பட்டத்தினை வழங்கி கெளரவித்திருக்கிறார். கடந்த 18 ஆம் திகதி திருக்கோயில் பகுதியில் இடம்பெற்ற ஆடம்பர நிகழ்வொன்றில் இனியபாரதிக்கு இந்த நாட்டின் மகத்தான கெளரவம் வழங்கப்பட்டதை அம்பாறையிலிருந்த அவரது அலுவலகம் சண்டே லீடர் பத்திரிக்கை இதுதொடர்பாக அவர்களைத் தொடர்புகொண்டபொழுது உறுதிப்படுத்தியிருந்தது. யார் இந்த இனியபாரதி ? சிறுவர் சிறுமியரை கடத்திச் சென்று கட்டாய ராணுவப் பயிற்சியின் பின்னர் துணைராணுவக் குழுவில் இணைத்துவருபவர் என்று ஐ நா வால் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர் இவர். கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில், அக்கரைப்பற்று, திருக்கோயில், வினாயகபுரம் ஆகிய பகுதிகளில் பலநூற்றுக்கணக்கான கடத்தல்களுக்கும் காணாமற்போதல்களுக்கும் காரணமானவர் என்று மக்களால் அடையாளம் காணப்பட்டவர் இவர். ராஜபக்ஷவின் அரசில் துணையமைச்சராகவிருக்கும் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் துணைராணுவக் குழுவில் மிக முக்கிய ஆயுததாரியாகச் செயற்பட்டு வருபவர் இவர். அதுமட்டுமல்லாமல், அம்பாறை மாவட்டத்தின் மகிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பாளராகச் செயற்பட்டுவருபவர் இவர். அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான விசாரணைக் குழுவின் அமர்வுகளில் சாட்சியமளித்த மக்களில் 90 வீதமானவர்கள் தமது பிள்ளைகள், கணவன்மார்கள், மனைவிமார்களைக் கடத்திச் சென்று காணமாலக்கியது இனியபாரதியே என்று வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டியிருந்தனர். திருக்கோயிலில் அமைந்திருக்கும் கருணா துணை ராணுவக் குழுவின் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் இலக்கத்தகடு பத்திரிக்கையால் மறைக்கப்பட்ட வெள்ளை நிற வானும் அருகே இனியபாரதியுடன் அவரது சகா ஜீவேந்திரனும் கடந்த காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்கள் அனைத்திலும் வாக்காளர்களுக்கு கொலைப் பயமுருத்தல் விடுத்தது, மகிந்தவின் கட்சிக்கு வாக்களிக்குமாறு அச்சுருத்தியது, தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டது போன்ற பல வன்முறைகளில் இனியபாரதியே தலைமை தாங்கிச் செயற்பட்டதாக தேர்தல்க் கண்காணிப்பாளர்கள் அறிக்கைகளை விடுத்திருக்கின்றனர். இந்த வன்முறைகளின்பொழுது குற்றவாளியென்று கண்டறியப்பட்ட இனியபாரதிக்கு 10 வருட சிறைத்தண்டனையினை கல்முனை நீதிமன்றம் வழங்கியிருந்தது. இனியபாரதியும் அவரது வெள்ளை வான் கடத்தல்களும் நான் இந்த மனிதரை ஆனி 19, 2007 அன்று திருக்கோயிலில் அமைந்திருக்கும் அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். சுதந்திர ஊடகம் சார்பாகவும், இலங்கை ஊடக நிலையம் சார்பாகவும் நானும், சர்வதேச ஊடக நிலையத்தின் இயக்குனர் டேவிட் டாட்ஜ், சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் சுகுமார் முரளிதரன், இலங்கை ஊடகத் தொழிலாளர்கள் சார்பாக அதுல லியனகே மற்றும் இலங்கை முஸ்லீம் ஊடகவியலாளர் அமைப்பின் ஜாவிட் முனவ்வரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டோம். பேச்சுக்களில் ஈடுபட்ட சுதந்திர ஊடகவியலாளர்களும், இனியபாரதியுடன் அவரது உதவித் தலைவரும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு கருணா குழுவினால் இழைக்கப்பட்டு வந்த அநீதிகளைச் சரிசெய்யும் நோக்கிலேயே எமது இந்தப் பயணம் அமைந்திருந்தது. அந்தவருடத்தில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு இனியபாரதியால் பல தடவைகள் கொலைப்பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தன. நாம் அம்பாறை மாவட்ட கருணா துணைராணுவக் குழுத் தலைவரும் ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பாளருமான இனியபாரதி மற்றும் அவரது உப தலைவரான ஜீவேந்திரன் ஆகியோரை அவர்களின் அலுவலகத்தில் அன்று சந்தித்தோம். அவரது அலுவலகத்தினுள்ளே பல சிறுவர்கள் ஆயுதங்களுடன் நடமாடுவதை நான் கண்டேன். அதுல லியனகேயுடன் சேர்ந்து இரகசியமாக அச்சிறுவர்களைப் படமெடுக்க நான் எண்ணினேன். அத்துடன், அவர்களின் அலுவலகத்தின் முன்னால், இலக்கத்தகடு பத்திரிக்கையினால் மறைக்கப்பட்ட வெள்ளைநிற வான் ஒன்றைக் கொண்டோம். அருகில் சென்று பார்க்கும்பொழுதுதான் அவ்வாகனத்தில் இலக்கத்தகடே இருக்கவில்லையென்பது எமக்குப் புரிந்தது. கருணாவின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழுவின் இலக்கத்தகடற்ற வெள்ளை நிற வான் தற்போதைய தேசமான்ய கெளரவத்தினைப் பெற்றிருக்கும் இனியபாரதியுடன் சேர்த்து அவ்வாகனத்தினைப் படம்பிடித்துக் கொண்டேன். அவர்களுடன் கூடவே ஆயுதம் தாங்கிய இரு சிறுவர்களையும் நான் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். இப்புகைப்படம் என்னாலேயே முதன் முதலாக வெளிக்கொண்ரப்பட்டது. பல்வேறு ஊடகங்கள் இப்புகைப்படத்தினைப் பகிருமாறு என்னிடம் கேட்டுக்கொண்டபோதும்கூட, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளரின் பாதுகாப்புக் கருதி அதனைப் பகிர நான் விரும்பியிருக்கவில்லை. கருணா துணைராணுவக் குழுவினரின் அலுவலகத்தின் முன்னால் இலக்கத்தகடற்ற வெள்ளைநிற வாகனம் நிறுத்தப்பட்டிருப்பது அவர்கள் ஆட்களைக் கடத்திச் செல்ல இந்த வாகனத்தைப் பாவிக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது. பலநூற்றுக்கணக்கான கடத்தல்கள் மற்றும் காணாமற்போதல்கள் தொடர்பான முறைப்பாடுகள் பொலீஸாரிடம் கிடைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இன்றுவரை ஒருவர் கூட விடுவிக்கப்படவுமில்லை, குற்றமிழைத்தவர்கள் கைதுசெய்யப்படவுமில்லை. பலவந்த சிறுவர் ராணுவப் பயிற்சியும் இனியபாரதியும் ஐ நா சிறுவர் நிதியத்தின் அறிக்கைப்படி, "64 வீதமான சிறுவர்கள் புலிகளால் கட்டாய ராணுவப் பயிற்சிக்கு இணைக்கப்பட்டிருக்கலாம்" என்று கூறுகிறது. ஆனால், தவறாகப் பிரசுரிக்கப்பட்ட இவ்வறிக்கையினைப் பார்த்த பிரபல சிறுவர் உரிமைகள் அமைப்பின் பிரமுகர் ஒருவர் என்னிடம் தொடர்புகொண்டு, கடத்தப்பட்ட சிறுவர்கள் அரச ராணுவத்தாலும் கருணா குழுவாலும் கடத்தப்பட்டிருக்கும்பொழுது, இதனைப் புலிகள் செய்தார்கள் என்று அறிக்கை வெளியிடுவது எப்படிச் சாத்தியம் என்று வினவினார். அரசு நேரடியாக கடத்தல்களில் ஈடுபடவில்லையென்று நான் கூறினாலும் கூட, இவ்வளவு பெரிய தவறை இந்தவறிக்கை எப்படி சுமந்து வந்தது என்று எண்ணுகிறேன். ஆனால், உண்மையென்னவெனில், அரசின் ஆதரவுடனேயே கருணா துணைராணுவக் குழு இக்கடத்தல்களைச் செய்துவருகிறது என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். புலிகளுடனான போருக்காகவே இவர்கள் தமிழ்ச் சிறார்களைக் கடத்திச்சென்று பயிற்றுவிக்கிறார்கள் என்பது வெளிப்படையானது. கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட செய்திக்குறிப்பில் இங்குநடக்கும் கடத்தல்களும் காணாமற்போதல்களும் பற்றி அமெரிக்கா நன்கு அறிந்தே வைத்திருக்கிறதென்பது தெளிவாகிறது. அத்துடன், நாட்டின் ஜனாதிபதி மகிந்த மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ஆகியோருக்கும் இக்கடத்தல்கள் பற்றி தெளிவாகவே தெரிந்திருக்கிறது. கருணாவினால் கட்டாய ராணுவப் பயிற்சிக்காக கடத்தப்பட்டு போரில் ஈடுபடுத்தப்படும் சிறுவர்கள் "ஜனாதிதிபதியுடனும், பாதுகாப்புச் செயலாளருடனுமான சந்திப்புக்களில் எமது இரு நாடுகளுக்குமிடையேயான பரஸ்பர ராணுவ உதவிகளைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்கு சிறுவர்களை துணைராணுவப் படையில் இணைக்கும் விடயம் தொடர்பாக கவனத்தில் எடுக்கப்படவேண்டும் என்று தூதுவர் கோரியிருந்தார். அதன் போது பதிலளித்த பாதுகாப்புச் செயலாளர், துணைராணுவக் குழுக்களை நிராயுதபாணிகளாக்கும் நடவடிக்கையினைத் தாம் ஆரம்பித்திருப்பதாகவும், அதன் ஒரு கட்டமாக துணைராணுவப் படையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட சிறுவர்களை விலக்குவதும் அடங்கும்" என்றும் கூறியிருந்தார். மே மாதம் 26 ஆம் திகதி, 2009 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட இந்த கேபிள் செய்தியின் காலப்பகுதியில் தூதுவராக ரொபேட் ஓ பிளேக்கே இருந்தார். அமெரிக்காவுக்கு, சிறுவர்களை படையில் சேர்த்து போரில் ஈடுபடுத்திவருவது இலங்கை அரசும், துணைராணுவக் குழுக்களும்தான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் யுனிசெப் அமைப்பு புலிகளை மட்டும் குற்றஞ்சாட்டுவது ஏன்? அவர்கள்கூட அரசாங்கத்தின் பிரச்சார இயந்திரமாக மாறிவிட்டனரா? கோத்தாபய அவர்கள் ஐலண்ட் பத்திரிக்கைக்கு வழங்கிய பேட்டியில் "100 ஆட்டிலெறிக் குண்டுகளால் செய்யமுடியாததை ஒரு மூளைச்சலவை செய்யப்பட்ட சிறுவர் தற்கொலைப் போராளியைக் கொண்டு பிரபாகரனால் செய்யமுடிந்தது. இன்று சிறுவர்களை நாம் படையில் சேர்க்கிறோம் என்று முதலைக் கண்ணீர் வடிப்பவர்கள் அன்றே பிரபாகரனுக்கெதிராக நடவடிக்கைகளில் இறங்கியிருந்தால் அவர்களால் ஆயுதங்களைத் தருவித்தோ, கட்டமைப்புக்களை உருவாக்கியோ போராடியிருக்க முடியாது. அவர்களின் சொத்துக்களை, கட்டமைப்பினை, வங்கிக் கணக்குகளை முடக்கியிருந்தால், அவர்களாகவே போராட்டத்தைக் கைவிட்டு, சிறுவர்களை இணைப்பதையும் நிறுத்தியிருப்பார்கள். ஆகவே, இன்று முதலைக் கண்ணீர் வடிப்பவர்கள், யுனிசெப்பை விமர்சிக்காமல், புலிகளுக்கெதிரான அதன் விமர்சனத்தை ஆதரிக்க வேண்டும்" என்று கூறினார். பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவை ஐலண்ட் நாளிதழுக்கு வழங்கிய செய்தியில் இறுதிப்போரில் நடந்த மனிதவுரிமை மீறல்களுக்கான பொறுப்புக் கூறல் பற்றிப் பேசுபவர்கள், சிறுவர்களை படையில் சேர்த்தது பற்றிப் பேசவேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள். அப்படியானால், புலிகளால் சேர்க்கப்பட்ட சிறுவர்கள் மட்டுமல்லாமல் அரசாலும், துணைராணுவக் குழுக்களாலும் சேர்க்கப்பட்ட சிறுவர்கள் பற்றியும் பேசப்படுவதுதான் நியாயமாக இருக்கும்.
  13. பரிசு. விழியில் விழுந்து இதயம் கலந்த உறவு. அன்று எனது பிறந்தநாள் நிறைய நண்பர்கள், நண்பிகள் ஏராளம் ! வாழ்த்துக்கள்,பரிசுகள் தங்க ஆபரணங்கள் தங்கி விட்டன தந்தப் பேழையில் வெள்ளிப் பாத்திரங்கள் படுத்திருக்கின்றன பரண்மேல் எதுவும் என் இதயத்தில் தங்கவில்லை ! தங்கியது பாவையவள் பரிசளித்தாள் வாசமுள்ள ரோஜா மலர் மலரின் மணம் நாசிகளில் மங்கை முகம் மனக்கண்ணில் இதயம் சுமந்து கொண்டிருக்கின்றது விலை மதிப்பற்ற அம் மலரை மட்டும் இன்று --- அவள் சங்கு கழுத்தில் முகம் புதைக்க மூச்சின் சுவாசம் சீராகியது செவ்விதழில் முத்தமிட செவ்வாயில் அமிலம் சுரந்தது பிடியிடை தழுவிட மூலாதாரம் முழுதும் துடிக்குதடி கண்ணை விட்டு தூரம் நீ மறைந்தாய் கண்களுக்குள் நிறைந்து நின்றாய் கண்களுக்குள் உன்னைப் பார்த்து யானை பார்த்த குருடனானேன்......! யாழ் அகவை 23 க்காக ஆக்கம் சுவி.......!
  14. Starring: M. G. Ramachandran, B. Saroja Devi, M. N. Nambiar Director: K. Shankar Music: M. S. Viswanathan Year: 1965 எம் யீ ஆர் அவர்கள் நடித்த படம்கள் அதிகம் பார்த்ததில்லை பாடல்கள் அருமையாக இருக்கும் இந்த பாடல்களின் வரிகளும் அருமை நடை பழகும்போது தென்றல்🚶‍♀️ விடை சொல்லிக்கொண்டு போகும் அந்த அழகு ஒன்று 🌹போதும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்
  15. பழையவற்றில் இருந்து பாடங்களைப் படிக்காதவரை அவற்றை நினைவூட்டத்தான் வேண்டும். கடந்த 16 வருடங்களில் தமிழ் மக்களுக்குக் சாதகமாக எதுவும் நடக்கவில்லை. தற்போதைய தமிழ் அரசியல் தலைமைகள் ஒரு தீர்வைப் பெறவோ, பொருளாதர முன்னேற்றத்தை உருவாக்கவோ, அல்லது அவலவாழ்வில் இருக்கும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவோ ஒரு உருப்படியான திட்டத்தையேனும் சிந்திக்கும் ஆற்றல் இல்லாதவர்கள். ஆனால் இவைகளை வைத்து கட்சி அரசியல் செய்து தங்களை வளப்படுத்திக்கொள்வார்கள். தமிழ்த்தேசியத்திற்கு எதிர்நிலையில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் முன்னெடுக்கும் அபிவிருத்தி அரசியலில் இலாபம் அடைவதும் சிங்கள அரசும், சிங்கள முதலாளிகளும், சிங்கள படையினரும்தான். தமிழர்களுக்கு தலையில் தொடர்ந்தும் மிளகாய் அரைக்கப்படும்.
  16. நீண்ட நாட்களின் பின்பு முருகனிட்ட விசிட் பண்ணினேன்.கொரானாவை சாட்டாக வைத்து அவரிட்ட போகாமால் காலம் கடத்திக்கொண்டுவந்தேன்.மனைவி முருகன் கோவிலுக்கு போக கேட்டாலும் முருகன் ஒன்லைனில் என்னிட்ட வாரார் ஏன் நான் போக வேண்டும் என்று கேட்டு கடத்தி வந்தேன் .இனிமேலும் காலம் கடத்தினால் எம்பெருமான் ஆத்திரமடைந்து என்னை மறந்து விடுவார் பயம் காரணமாக 2021 இங்கிலிஸ் வருடப்பிறப்புக்கு சென்றேன் .முருகன் தமிழ் கடவுள் ,நான் சைவதமிழன் ஏன் போக வேண்டும் என்று மனசு கேள்வி எழுப்ப "டேய் அவங்கன்ட லீவுகளை வீட்டிலிருந்து உற்சாக பாணம் அடிக்க பாவிக்க முடியும், என்னிடம் வாரது என்றால் மட்டும் நீ சைவம் /தமிழ் என்று எஸ்கியுஸ்களை தெடுகின்றாய் என்ன ?"அதே மனசு மல்டிபல்பெசனல்டிக்கு மாறி கேள்வி கேட்க நான் பயந்து வருடப்பிறப்புக்கு விசிட் பண்ண முடிவெடுத்தேன். "மாஸ்க் எடுத்தாச்சே" அர்ச்சனைக்கு சாமாங்களை எடுத்தாச்சே என்ற காலம் போய் மாஸ்க் எடுத்தாச்சோ என்று வந்திட்டு என புறுபுறுத்தபடி "போட்டாச்சு" என்றேன் "வெள்ளை வேஸ்டி நீல சேர்ட் போட்டுவிட்டு ஏன் கறுப்பு மாஸ்க் போட்டிருக்கிறீங்கள் ,நீல மாஸ்க் புதுசு வாங்கி காரில் வைத்திருக்கிறேன் போய் போடுங்கோ" ரொம்ப முக்கியம் என்ற படி "சரி கோவிலுக்கு கிட்ட போய் போடுவோம்" "என்ன புறுபுறுக்கிறீயள் ,காரில் கான்ட் சனிட்டைசர் இருக்குத்தானே" "முடியப் போகின்றது நாளைக்கு புதுசு வாங்குவோம்" "என்னை மட்ச் பண்ணுகிற மாஸ்க் போட சொல்லி போட்டு ,நீர் மல்டி கலர் மாஸ்க் போட்டிருக்கிறீர்" "பிளவுஸின்ட கலர் இந்த மாஸ்கில் இருக்கு ,உங்களுக்கு இந்த லெடஸ்ட் வசயன்கள் ஒன்றும் தெரியாது" "வழமையா பிரசாதம். எதாவது கொண்டு போவீர் இன்றைக்கு எங்க ஒன்றையும் காணவில்லை" "கொரானாவால் பிரசாதம் கோவிலில் கொடுக்க கூடாதாம் அரசாங்க சட்டமாம்" "அரசாங்க சட்டங்களை சுழிச்சு ஒடுறதில் நாங்கள் கில்லாடிகள் ஆச்சே" "உண்மைதான் ஆனால் உந்த கொரானா எங்களுக்கு நல்ல பாடம் கற்று தந்துவிட்டது" கோவிலுக்கு முன்னாலயே வாகன தரிப்பதற்க்கு இடமிருந்தது, வழமையாக இப்படி இலகுவாக கார் பார்க் பண்ணகூடியதாக இருப்பதில்லை கொரணா காரணமாக முருகனிட்ட வருகின்ற விசிட்டர்கள் குறைந்து விட்டார்கள் . கார்கள் குறைவாக இருந்தது ஆனால் முருகனின் வாசல்படியில் வரிசையாக‌ மக்கள் நின்று கொண்டிருந்தார்கள்.நானும் போய் வரிசையில் நின்றேன் .முருகனை கொள்ளையடிக்க வந்தமாதிரி எல்லோரும் முக கவசம் அணிந்திருந்தார்கள் யார் முன்னுக்கு நிற்கிறார்கள் ,மனைவிக்கு பின்னால் யார் நிற்கிறார்கள் என்று தெரியாமல் இருந்தது.தொண்டர் ஒருவர் நெற்றிக்கு அருகாண்மையில் துப்பாக்கி மாதிரி ஒன்றை கொண்டுவந்தார் நான் திடுக்கிட்டு போனேன் பிறகு சுதாகரித்து கொண்டு "முபத்தாறோ,முப்பதேழே என்றேன் " "35 நல்ல கூலா இருக்கிறீயள் போல " "முருகனிட்ட வந்தா கூல் தானே அவனே கூலானவ‌ன் தானே" மனிசி பின்னுக்கு நின்று கிள்ளி முழிசி பார்த்த படியே ,மாஸ்க் போட்டபடி முழிசினால் எப்படியிருக்கும் "கோவிலுக்குள்ள வந்தாலும், உந்த லொள்ளு நக்கல் கதையை விடாமாட்டியள் என்ன‌ ?" "டேய் உங்கன்ட தொல்லை தாங்க முடியாமல் தான் இதை செய்தன் ஆனால் நீங்கள் என்னடா என்றால் மாஸ்க்,சனிட்டைசர் எல்லாம் போட்டு கொண்டு வந்து என்னை தொல்லை படுத்துறீங்களேயடா?" "எல்லாம் உன் மீது கொண்ட அன்பு " " அன்போ? வார கோபத்துக்கு தும்மி விட்டன் என்றால் தெரியும்" " முருகா முருகா முருகா ஏன் இந்த ஆவேசம்" " பின்ன ? கொரனா என்று கொஞ்சம் நிம்மதியா இருப்பம் என்றால் நீங்கள் உங்கன்ட வழமையான பிரச்சனை கொண்டு வந்து மூட்டை மூட்டையாக கொட்டுறீயள்" முந்தி மாஸ்க் போடாமல் நீங்கள் சொல்லுறதையே கேட்கிறதே கஸ்டம்,மாஸ்க் போட்டுகொண்டு நீங்கள் கேட்கிற இந்த கேள்விகள் எனக்கு புறியப்போகுதே? எப்ப பிளைட் ஓடும் எப்ப கொமிட்டி கூடும் எப்ப தேர் கட்டலாம் எப்ப திருவிழா வைக்கிறது ,எவன் அடுத்த கொமிட்டி தலைவன்,எப்ப வக்சீன் வரும்,வக்சீன் போடலாமா? oh my dad lord Siva முருகன் புலம்ப தொடங்க நான் நடுங்கிபோனேன்
  17. ஆம்.. அம்மாவும் அப்பாவும் கொழும்பில் வாழ்ந்து பின் யுத்தம் முடித்த பின் ஊருக்கு போக விரும்பி போய் தங்கள் பரம்பரை இடத்தில் வாழ்ந்து வந்தார்கள். அது அவர்களின் சுய விருப்பமும் கூட. பிள்ளைகள் நாம் அதில் தலையீடு செய்யவில்லை. மாறாக அவர்களின் விருப்பத்திற்கு எம்மாலான ஒத்தாசை செய்தோம். அம்மாவுக்கு யாழில் நிலவிய கடும் மழை காலத்தின் பின் skin rash வந்தது. அதற்கு antibiotic cream பாவித்தே இருந்தார்கள். ஆனாலும்.. தன்னை அறியாமலே கையால் சொறிந்திருக்க வாய்ப்புள்ளது. அதன் மூலம் பக்ரீரியா தொற்றுக்கு வாய்ப்புண்டு. சிறிய காயம் ஒன்றே போதும்... sepsis வருவதற்கு. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள வயோதிப வயதினரில்... இது ஒரு பெரும் பிரச்சனை. என்ன தான் கவனமாக இருந்தாலும். இதில் அம்மா தனக்கான நோய் அறிகுறி தென்பட்டதும்.. அப்பா குடும்ப வைத்தியரை அழைத்து சிகிச்சை வழங்கித்தான் இருந்தார். ஆனால்.. குடும்ப வைத்தியர் ஏதோ காரணத்தால்.. செய்ய வேண்டிய பரிசோதனைகளை செய்யாமல் சாதாரண காய்ச்சல் போல் நிலைமையை கையாண்டது தான்.. பிரச்சனைக்கான தோற்றுவாய். இறுதியில் அம்மாவின் கடைசி 48 மணி நேரம்.. மிகவும் சிக்கலானதாக மாறிவிட்டது. சிறுநீரகங்கள் செயலிழக்க ஆரம்பித்துவிட்டன. குருதி அழுத்தம் குறைவடைந்துவிட்டது. இந்த நிலையில் மீண்டும் குடும்ப வைத்தியர் வந்து பார்த்துவிட்டு இந்த நிலையில் அம்மா கன நாள் தாக்குப் பிடிக்க முடியாது என்று சொன்னது தான் மிகவும்.. கோபத்தை தூண்டியது. ஆனாலும்.. நாங்கள் சோரவில்லை. உடனடியாக குடும்ப நண்பராக உள்ள வைத்தியரின் உதவியோடு.. உடனடியாக.. தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு.. தேறிவிடுவார் என்று நம்பிக்கை வளர்ந்திருந்த நிலையில்.. மிதமான இதயத் தாக்குக்கு ( Minor heart attack) உட்பட்டார். இருந்தாலும்.. மீண்டும் வைத்தியர்கள் விடா முயற்சி செய்தார்கள். சுமார் 12 மணி நேரத்துக்குள் இரண்டு இதயத்தாக்கு ஏற்பட்டு.. ஒக்சிசன் அளவு குருதியில் ஆபத்தான அளவுக்கு குறைந்த நிலையில்.. மரணம் சம்பவித்துவிட்டது. அப்போதும் வைத்தியர்கள் கூடவே இருந்துள்ளார்கள். இதில்.. குடும்ப வைத்தியராக இருந்து அம்மாவை பாதுகாத்து வந்தவர்.. இறுதி நேரத்தில் நாட்டில்.. கொரோனா அதுஇதென்று சாட்டுச் சொல்லி.. அம்மாவை சரிவர கவனிக்காமல் விட்டதும்.. காய்ச்சல் வந்தும்.. அவருக்கு உரிய பரிசோதனைகளை செய்யாமல் விட்டதும்..தான்... அம்மாவின் இந்த திடீர் இழப்புக்கு முக்கிய காரணம் எனலாம். இது வழமையாக சோதனையில் பெயில் விட்டால் ஆசிரியர் மேல் பழிபோடுவது போன்ற நிலை அல்ல. ஏனெனில் அம்மா ஒரு high risk patient என்பதை அந்த வைத்தியர் நன்கு அறிந்திருந்தும்.. அவருடைய அலட்சியத்தன்மை ( negligence ) தான் அம்மாவுக்கு ஆபத்தும் ஆகிவிட்டது. அம்மாவின் போதாத காலமும் கூடச் சேர்ந்துவிட்டதோ என்னவோ. ஆனால்.. நிச்சயமாக.. அம்மா மனதளவில்.. இந்தப் பூமியில் இருந்து விடைபெற தயார் இல்லாத நிலையில்... தான் அவர் விடைபெற்றிருக்கிறார். அதுதான் மிகக் கவலையாக அமைந்துவிட்டது. அதனை நினைக்கும் போது வலிதான் அதிகமாகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.