Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    23926
    Posts
  2. பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    15760
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    20029
    Posts
  4. Maruthankerny

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    10720
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/31/21 in Posts

  1. Song : Vennila Vaanil Movie : Mannippu (1969) Singers : TM Sounderarajan , P Susheela Music : SM Subbaiah Naidu வானவில்லின் நிறமெடுத்து மேகமென்னும் வெண் திரையில் வானவில்லின் நிறமெடுத்து மேகமென்னும் வெண் திரையில் மின்னல் எனும் தூரிகையால் நான் வரைந்த கோலமெது கன்னி எந்தன் வடிவமது
  2. அப்புவிட அப்புவும்,பேரனும்..! ********************* கந்தையா அண்ணரும் காசிம் நானாவும் றம்பண்டா மல்லியும் ஒரு குடும்பமாய் திரிந்த காலம் அப்போது .. ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. புத்த பெருமானுக்கும் நபிகள் நாயகத்துக்கும் ஜேசு பிரானுக்கும் சித்தர் சிவனுக்கும்-மதம் பிடித்ததாய்.. அப்போது.. ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. கண்டியில பெரகராவும் திருக்கேதீச்சரத்தில சிவராத்திரியும் கொச்சிக்கடையில பாலன் பிறப்பும் மட்டக்களபில நோன்புப் பெருநாளும் அன்பாக நடந்ததே தவிர அப்போது.. ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. ஒவ்வொரு இடத்தில ஒவ்வொரு ஆலயம் கட்டி வளிபாட்டுத்தலமெல்லாம் அனைவரும் வந்து வணங்கி வளிபட்டு போனார்களே தவிர அப்போது.. ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. தமிழ்.. வடக்கு கிழக்கென்றும் சிங்களம்.. தெற்கு மேற்கென்றும் ஒவ்வொரு பகுதியாக பிரிந்து வாழ்ந்தாலும் ஒற்றுமையைத் தவிர அப்போது.. ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. இப்படி எனக்கு-என் அப்புவிட அப்பு கனவில வந்து கதை சொல்லி போனார். அப்போது நினைத்தேன் இப்போது நடப்பது அரசியல் வாதிகளும்-சில அரசடி வாதிகளும் தாம் வாழ நினைத்து. வல்லரசு சிலதோட வறுமையை காட்டி முக்குலத்தையும் முட்டி மோதவிடும் முடிவால்தான்-இன்று எங்களுக்குள்ளே இத்தனை.. சண்டையோ? எண்ணித் திகைத்து இடையில.. எழுப்பி விட்டேன். “விடியவில்லை” ஐயோ பக்கத்தில.. அழுகுரல்கள் கேட்கிறது. அன்புடன் -பசுவூர்க்கோபி- 27.03.2021
  3. என் நண்பியின் கணவருக்கு மூன்று வாரங்களிற்கு முதல் கொறோனா தொற்று ஏற்பட்டது. கடுமையான காய்சல் 10 நாட்களாக தொடர்ந்தது.ஆனாலும் அவர் பயத்தில் வைத்தியசாலைக்கு செல்லவில்லை.ஆவி பிடிப்பது, ரசம் குடிப்பது என பல தமிழ் வைத்திய முறைகளை விடாமல் செய்து கொண்டிருந்தார்.ஆனால் அவருக்கு மூச்சு விடிவதில் எந்த சிரமமும் இருக்கவில்லை. அவர்களிற்கு 1 வயதில் ஒரு குழந்தை இருக்கின்றது அந்த குழந்தையை பரிசோதிப்பதற்காக வந்த nurse தற்செயலாக நண்பியின் கணவரின் நாடித் துடிப்பை பரிசீலித்துள்ளார்.அப்போது அவரின் நாடித்துடிப்பு மிக குறைவாக இருந்ததால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்படி கூறியுள்ளார். அங்கு சென்று பார்த்தபோது அவரது ஙரையீரல் 90% பாதிக்கப்பட்டிருந்தது.மிக கடுமையான நிலையில் அவர் உடல்நிலை காணப்பட்டது.தப்புவது கடினம் என வைத்தியர்களால் கூறப்பட்டது.எனினும் வைத்தியர்களின் கடுமையான ஒரு கிழமை போராட்டத்தில் அவர் இப்போது அபாய கட்டத்தை இப்போது தாண்டிவிட்டார். அவர் வைத்தியசாலை செல்லாமல் இருந்திருந்தால் இப்போது அவரை பார்த்திருக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான். ஒவ்வொரு உடலுக்கேற்ப இந்த கொறோனா தன் இயல்பை மாற்றிக்கொள்கிறது.யாராக இருந்தாலும் ஒரு வைத்தியரின் ஆலோசனையை பெறுவது பாதுகாப்பானது..
  4. 2006 இல் ஹியூமன் ரைட்ஸ் வோட்ச் எனப்படும் மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் வெளிவந்த கருணாவின் பலவந்த ஆட்கடத்தல்கள் மற்றும் சிறுவர்களைப் பலவந்தமாக தனது துணை ராணுவக் குழுவில் சேர்த்தது தொடர்பான விரிவான தகவல்கள் பாகம் 1 : 2006 இல் இடம்பெற்ற கடத்தல்கள் 2004 இல் கருணா விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறி ராணுவத்துடன் சேர்ந்துகொண்டதன் பின்னர் கிழக்கு மாகாணத்தின் பரவலாக பல இடங்களிலும் சிறுவர்களைக் கடத்திச் செல்லும் நடவடிக்கையில் அவரது குழு இறங்கியிருந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அந்நாட்களில் செயற்பட்டுவந்த உள்ளூர் மற்று சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களின் கருத்துப்படி கருணா குழு மட்டக்களப்புச் சிறுவர்களை பொலொன்னறுவை மாவட்டத்தில் வேலை செய்வதற்கு எங்களுடன் வாருங்கள் என்று பலவந்தமாக அழைத்துச் சென்றதாகவும், இவ்வாறு பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்ட சிறுவர்கள் ஒருபோதுமே தமது வீடுகளுக்குத் திரும்பவில்லையென்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2006 ஜூன் மாதமளவில் கருணா குழுவால் கடத்திச்செல்லப்பட்ட சிறுவர்களினதும் இளைஞர்களினதும் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்துக் காணப்பட்டதாக இவ்வறிக்கை மேலும் கூறுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்மாதத்தில் மட்டும் கடத்தப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 40 இற்கும் அதிகம் என்றும், இவர்களுள் 23 சிறுவர்கள் ஒரு நாளில் கடத்திச்செல்லப்பட்டதாகத் தெரியவருகிறது. இவ்வாறு ஒருநாளில் கடத்திச்செல்லப்பட்ட சிறுவர்கள் இரு கிராமங்களிலிருந்து கடத்திச் செல்லப்பட்டதாக இச்சிறுவர்களின் குடும்பங்களை செவ்விகண்ட மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள் கூறியிருக்கிறார்கள். இச்சிறுவர்களின் பெற்றோர்கள் வழங்கிய வாக்குமூலத்தில் தமது பிள்ளைகளை விட்டுவிடுமாறு தாம் கருணா குழு ஆயுததாரிகளைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டபோதும், அவர்களை இழுத்துச் சென்றுவிட்டதாகவும், பின்னர் கருணாவின் முகாம்களுக்கு தாம் தமது பிள்ளைகளைத் தேடிச் சென்றவேளை தமது பிள்ளைகள் கருணா குழு ஆயுததாரிகளால் தடுத்துவைக்கப்பட்டிருப்பதைக் கண்டதாகவும் கூறியிருக்கிறார்கள். இன்னும் சில பெற்றோர் தமது பிள்ளைகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விபரிக்கையில் காலையில் தமது கிராமத்திற்குள் புகுந்த இலங்கை ராணுவம் 7 சிறார்களை இழுத்துச் சென்று அவர்களது புகைப்படங்களை எடுத்துக்கொண்டதுடன் வேறு விபரங்களையும் பதிவுசெய்துவிட்டு திருப்பியனுப்பியதாகவும், அதே நாள் இரவுவேளையில் தமது வீடுகளுக்கு வந்த கருணா குழு ஆயுததாரிகள் அப்பிள்ளைகளை இழுத்துச் சென்றதாகவும் கூறுகின்றனர். கருணா குழுவிற்கு சிறுவர்களை பலவந்தமாகச் சேர்க்கும் நடவடிக்கையில் இலங்கைராணுவமும் ஈடுபடுகிறதா என்னும் கடுமையான சந்தேகத்தினை இம்மாதிரியான சம்பவங்கள் உருவாக்கிவருகின்றன என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. மனித உரிமைக் கண்காணிப்பகம் இன்னொரு கிராமத்தில் கடத்திச் செல்லப்பட்ட 13 சிறுவர்களின் பெற்றோருடன் பேசியதில் இன்னும் சில தகவல்களை சேகரித்துவைத்திருக்கிறது. அப்பெற்றோரின் கருத்துப்படி தமது பிள்ளைகள் கடத்தப்பட்ட நாளில் தமது கிராமத்திற்கு ராணுவத்தினரின் சீருடையில் வந்த 15 கருணா குழு ஆயுததாரிகள் தமது பிள்ளைகளை கிராமத்திலிருக்கும் கடையொன்றின் முன்றலுக்கு இழுத்துச்சென்று சில மணிநேரம் அவர்களை வைத்திருந்து பின்னர் வாகனங்களில் ஏற்றிச் சென்றுவிட்டதாகக் கூறுகிறார்கள். இக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் கருணா குழு ஆயுததாரிகள்தான் என்று உறுதிபடக் கூறும் பெற்றோர்கள், தாம் தமது பிள்ளைகளைத் தேடி கருணா குழுவின் முகாமிற்குச் சென்றதபோது இதே கடத்தற்காரர்கள் அங்கே நின்றிருந்ததையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். கருணா குழுவினரால் பலவந்தமாகப் பிடித்துவைக்கப்பட்டிருந்த தமது பிள்ளைகளை விடுவிக்குமாறு அருகில் நின்ற இராணுவத்தினரை இப்பெற்றோர்கள் வேண்டிக்கொண்டபோதிலும், ராணுவம் அவர்களை அசட்டை செய்து கருணா குழுவுடன் அலவலாவிக்கொண்டிருந்ததாகவும் கூறியிருக்கிறார்கள். நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லப்பட்ட கருணா குழுவின் சிறுவர்களைப் பலவந்தமாகக் கடத்திச் செல்லும் நடவடிக்கைகளையடுத்து ஐநா வின் சிறுவர்களுக்கான அமைப்பு வெளியிட்டிருந்த பொது வேண்டுகோளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்பட்ட சிறுவர்கள் பற்றி விசேடமாகக் குறிப்பிட்டிருந்தது. மேலும் அந்த வேண்டுகோளில், "சிறுவர்களைக் கடத்துவதையும், கட்டாய ராணுவப் பயிற்சிக்கும் இழுத்துச்செல்வதையும் கருணா குழு நிறுத்த வேண்டும் என்றும், இதுவரை கடத்திச் செல்லப்பட்ட சிறுவர்கள் அனைவரையும் அக்குழு விடுவிக்கவேண்டும் " என்றும் கேட்டிருந்தது. அத்துடன் இக்கடத்தல்கள் பற்றி இலங்கை அரசாங்கம் உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், சிறுவர்களுக்கான பாதுகாப்பினை உறுதிசெய்யவேண்டும் என்றும் அது அரசாங்கத்தைக் கேட்டிருந்தது. ஐ நா வின் இந்த அறிக்கை சாதகமான நிலையினை சில நாட்களுக்கு ஏற்படுத்தித் தந்திருந்தது. இவ்வறிக்கையினையடுத்து கருணா குழுவின் சிறுவர் கடத்தல்கள் சற்றுக் குறைந்திருந்ததாக கருதப்படுகிறது. ஆனாலும், ஒரு சில வாரங்களிலேயே கருணா குழு மீண்டும் தனது பலவந்த சிறுவர் கடத்தல்களை தீவிரமாக்கியிருந்தது. புலிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே ஆரம்பித்த மோதல்களை தனது கடத்தல்களுக்குச் சாதகமாகப் பாவித்த கருணா 2006 ஜூலை மாதத்தில பல சிறுவர்களைக் கடத்திச் சென்றதாக உள்ளூர் மற்றும் சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்கள் பதிவுசெய்திருக்கின்றன. ஆடி மாதத்திலிருந்து மார்கழி மாதம்வரையான 5 மாத காலத்தில் கருணாகுழுவினரால் குறைந்தது 200 சிறுவர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கருணா துணைராணுவக் குழுவிடம் தமது பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்மர்கள் 48 பேர் ஒன்றிணைந்து அரசாங்கத்திடம் இதுதொடர்பான முறைப்பாடொன்றினைக் கொடுத்திருந்தனர். மேலும் இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது. தமது பிள்ளைகள் கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுவிட்டார்கள் என்றும், அவர்களை உடனடியாகத் தேடி மீட்டுத்தருமாறும் கோரப்பட்ட இவ்வழக்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும், இடர் நிவாரண அமைச்சர் மகிந்த சமரசிங்கவுக்கும் வேண்டுகோளும் விடுக்கப்பட்டிருந்தது. ஐந்து மாதங்களின் பின்னர் கண்துடைப்பிற்காக ராணுவ அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைக்குழு, இத்தாய்மார்களைத் தொடர்பு கொண்டு, "கருணா குழு என்று குறிப்பிட வேண்டாம், இனந்தெரியாத குழு என்று குறிப்பிடுங்கள்" என்று வற்புறுத்தியதாக இத்தாய்மார்கள் தெரிவித்திருக்கின்றனர். தொடரும்
  5. ஆறுமுகம் ஆன பொருள் வான் மகிழ வந்தான் அழகன் இவன், முருகன் எனும், இனியபெயர் கொண்டான்! காலமகள் பெற்றமகன் கோலமுகம் வாழ்க! கந்தன் என, குமரன் என, வந்தமுகம் வாழ்க! (ஆறுமுகம் ஆன பொருள்)
  6. மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் ஆணி கொண்ட உம் காயங்களை
  7. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
  8. உதுகள் எல்லாம் விலாவாரியாத் தெரிஞ்சிடும்😃
  9. வடிவேலும் மயிலும் துணை.......! 🌹
  10. சீர்காழி கோவிந்தராஜன்பத்துமலைத் திருமுத்துக்குமரனைப் பார்த்துக் களித்திருப்போம் அவன் சத்தியக் கோயிலில் காவடி தூக்கியே தன்னை மறந்திருப்போம் தன்னை மறந்திருப்போம் பத்துமலைத் திருமுத்துக்குமரனைப் பார்த்துக் களித்திருப்போம் ஓம் ஓம் ஓம் அவன் சத்தியக் கோயிலில் காவடி தூக்கியே தன்னை மறந்திருப்போம் ஓம் ஓம் ஓம் இந்துக்கடலில் மலேசிய நாட்டில் செந்தமிழ் பாடி நிற்போம் ஓம் ஓம் ஓம் இங்கு சந்தனம் குங்குமம் கொண்டு குவித்தொரு தங்கரதம் இழுப்போம் ஓம் ஓம் ஓம்டி.எம்.சௌந்தரராஜன்சேவற்கொடியுடை காவலன் பூமியின் சிந்தை கவர்ந்தவன்டி உயர் சீனத்து நண்பரும் வேல் குத்தி ஆடிடும் மோகத்தைத் தந்தவன்டி தென்னை கனிந்தொரு தேங்காய் கொடுத்தது சக்தியின் முருகனுக்கே அதை இன்னும் ஒரு லட்சம் போட்டுடைத்தார் அந்த இன்பத் தலைவனுக்கே வேல் வேல் வேல் வேல் வேல் வேல்எல்.ஆர்.ஈசுவரிவாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா நல்ல வடிவேலன் துணையில்லாமல் சிறக்கவில்லை முருகா அரோகரா அரோகரா வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா நல்ல வடிவேலன் துணையில்லாமல் சிறக்கவில்லை முருகா ஆழமான பக்தி கொண்டோம் ஐயனே என் முருகா ஆழமான பக்தி கொண்டோம் ஐயனே என் முருகா நீ அள்ளிப் போடும் அருளுக்காக ஆடுகின்றோம் முருகா கையளவு வேலைக்கூட கன்னத்திலே செருகி எங்கள் கந்தன் பேரை மனதிலெண்ணி கசிந்து கண்ணீர் பெருகிசீர்காழி: முருகா முருகா முருகா முருகாஎல்.ஆர்.ஈசுவரிகையளவு வேலைக்கூட கன்னத்திலே செருகி எங்கள் கந்தன் பேரை மனதிலெண்ணி கசிந்து கண்ணீர் பெருகிடி.எம்.சௌந்தராஜன்ஐயன் வீட்டு வாசலிலே ஆடிப்பாடி உருகி............முருகா ஐயன் வீட்டு வாசலிலே ஆடிப்பாடி உருகி நாங்கள் ஐந்து லட்சம் பேருக்கு மேல் அண்டி வந்தோம் மருகிடி.எம்.சௌந்தராஜனும் எல்.ஆர்.ஈசுவரியும் இணைந்துவாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா நல்ல வடிவேலன் துணையில்லாமல் சிறக்கவில்லை முருகாபி.சுசீலாகன்னித் தமிழகம் தன்னில் நடந்திடும் கார்த்திகை தீபமும் உண்டு அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு இன்று வண்ணத் தைப்பூசம் நடத்துகிறோமய்யா வானத்தில் உன்னொளி கண்டு சிவஞானத்தை நெஞ்சினில் கொண்டு கன்னித் தமிழகம் தன்னில் நடந்திடும் கார்த்திகை தீபமும் உண்டு அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டுடி.எம்.சௌந்தரராஜன்பொன்னாய்க் குதிப்பதும் முருகனடி மலைப்புகழாய்க் குவிப்பதும் முருகனடி பொன்னாய்க் குதிப்பதும் முருகனடி மலைப்புகழாய்க் குவிப்பதும் முருகனடிபி.சுசீலாகண்ணைக் கொடுப்பது முருகனடி தினம் கருணையைப் பொழிவதும் முருகனடிசீர்காழி கோவிந்தராஜன்தண்டாயுதமே காவலடி இது சேனாபதியின் கோவிலடி வண்டார்குழலி வள்ளியில்லை அவள் வாழுமிடம் தமிழ்த் தேசமடிமெல்லிசை மன்னர்பத்தினி இருவரை விட்டு விட்டு அவன் பாய்மரக் கப்பலில் வந்து விட்டான் பத்தினி இருவரை விட்டு விட்டு அவன் பாய்மரக் கப்பலில் வந்து விட்டான் பத்துமலை குடி கொண்டு விட்டான் எங்கள் பரம்பரை காத்திட நின்று விட்டான் எங்கள் பரம்பரை காத்திட நின்று விட்டான் ஆனந்த தரிசனம் காணுகிறோம் அவன் அழகிய தேரினை வணங்குகிறோம் ஞாலத்து தேசிகன் மார்பினிலே நவமணி மாலைகள் சூட்டுகிறோம் நவமணி மாலைகள் சூட்டுகிறோம்அனைவரும்முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகாபெங்களூர் ரமணியம்மாள்கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான் அவன் கோயிலுக்கென்றே செலவழித்தோம் (கோடிக் கணக்கில் வாடிய பயிரை தழைக்க வைத்தான் எங்கள் வம்சத்தை அவன் வாழ வைத்தான் (வாடிய பயிரைத் அரோகரா அரோகரா அரோகரா அரோகரா இடம் தெரியாமல் தலைகளம்மா வெகு நீளம் நடப்பதைப் பாருமம்மா (இடம் தெரியாமல் வரம் தெரியாமல் வரவில்லையே எங்கள் பக்தியின் உள்ளத்தைத் தரவில்லையே (வரம் தெரியாமல் கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான் அரோகரா அரோகரா அரோகரா அரோகராபெங்களூர்: முருகா சண்முகா கந்தா கடம்பா அறுமுகவேலாசீர்காழி: கார்த்திகேயா செந்தில்நாதா சிங்கார வேலாபெங்களூர்: முருகா சண்முகா கந்தா கடம்பா அறுமுகவேலாசீர்காழி: கார்த்திகேயா செந்தில்நாதா சிங்கார வேலாபி.சுசீலா: கார்த்திகேயா செந்தில்நாதா சிங்கார வேலாஅனைவரும்: திருமுத்துக்குமரா உமைபாலா வள்ளியம்மைக் காவலாபெங்களூர்: தெய்வானைக் காவலாஅனைவரும்: வந்தருள்வாய் வடிவேலா வடிவேலா வடிவேலா http://muruganarul.blogspot.com/2007/04/037.html
  11. ராஜா நீர் செய்த நன்மைகள்
  12. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
  13. எதையும் சரியாக கணக்கிட முடியாது ... இன்னும் ஒரு 10-15 வருடத்தில் பல வேலைகள் வீட்டில் இருந்தே செய்ய கூடியதாகாக இருக்கும் 50 வருடம் முன்பு சிட்டி கட்டி சிட்டியில் உயர உயர பில்டிங் கட்டி ... வேலைக்கு போகிறோம் என்று காலையும் மாலையும் ட்ராபிக்கை உருவாக்கி சிட்டிக்கு அநியாய வரி கட்டி பல கொம்பனிகள் நொந்து நூல்ட்டிஸ் ஆகி இருக்கிறார்கள். இப்போ தொழிநுட்பம் வளர்ந்து பல வேலைகளை வீட்டில் இருந்தே செய்ய கூடியதாக இருக்கிறது பலர் சிட்டி நெரிசலில் இருந்து வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள். எதிர்காலத்தில் சிரியண்ணரின் மகள் ஒருவர் வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பு கிட்டினால் ஜெர்மனியில் குளிருக்குள் பூட்டிய வீட்டினுள் இருப்பதிலும்விட குளிர்காலத்தில் யாழ்பாணம் சென்று அங்கிருந்து வேலை செய்யவே விரும்புவார்கள் நாங்கள் போகாமல் இருக்க பல காரணம் இருக்கிறது எமது பிள்ளைகளுக்கு அதெல்லாம் இருக்காது.
  14. தந்தையும் தாயும் போல் அவனிருப்பான் சென்னிமலையினிலே சந்தனம் பன்னீரில் தினம் குளிப்பான் வேலவனே குன்றிருக்கும் இடமெல்லாம் குடியிருப்பான் ஆ... ஆ... ஆ... சென்னிமலை குமரா சிரகிரி வேலவனே முருகா. . . குமரா. . . கந்தா. . . முருகா . . . பங்குனி உத்திரத்தில் பால்குடம் ஆ... ஆ... ஆ... பாங்குடன் ஏந்துவர் பல்லாயிரம் ஆ... ஆ... ஆ... வாடாத பூமாலை அலங்காரம் பாடாத நாவும் திருப்புகழ் பாடும் கொக்கரக்கோ சேவலும் குன்றினில் கூவும் சென்னிமலை மேலே மயிலாடும் தேவியரின் திருக்கோயில் மலையிலே ஆ... ஆ... ஆ... தீபங்கள் ஏற்றினால் குறைவில்லையே ஆ... ஆ... ஆ... வேலும் மயிலும் துணையிருக்க ஆ... ஆ... ஆ... வேதனைகள் தீர்க்க குகனிருக்க ஆ... ஆ... ஆ... நம்பினோர் வாழ்வில் நலம்பல பெருக முருகாவெனும் நாமம் எதிரொலிக்க வேல் கையிலெடுத்து கந்தன் வருகையில் அவன் பழமுதிர்சோலையில் காட்சி தருகையில் தெய்வானை இடப்புறமும் குறவள்ளி வலப்புறமும் நின்று புன்னகை சிந்திடும் பொன்னெழில் கண்டதும் முருகா முருகா என்றேதான் மயில் நடனமாடாதா ஓம் முருகா முருகா என்றேதான் மனம் உருகிப்பாடாதா மூன்று தமிழ்மலராலே தேன் சிந்தும் கவிமாலை நான் சூட்ட அவன் தந்தான் இசை பாடலே கனிவேண்டி மலை நின்றான் கனித்தந்து தமிழ் உண்டான் அவன் செய்யும் செயல்யாவும் விளையாடலே இலகாத கல்நெஞ்சும் இலகும்படி செய்து இளநீரில் அபிஷேகம் ஏற்கின்றவன் மலைதோறும் தேன்கொண்டு அபிஷேகம்தான் செய்ய நிறைவான அருளாசி புரிகின்றவன் வண்ணசேவல் கொடியாட காற்சலங்கை சுழன்றாட சிவசண்முக வேலனின் பொன்முகம் கண்டதும் வேலேந்தும் பெருமானை ஆராதனை செய்ய தீராத வினையெல்லாம் தீர்க்கின்றவன் திருநீறுதனை பூசி முருகா என்றழைப்போர்க்கு சீரான செல்வங்கள் சேர்கின்றவன் பழியொன்றும் வாராமல் மலர்ப்பாதம் பணிவோர்க்கு வழியெல்லாம் துணையாக வருகிறவன் படியேறி சிரம்தாழ்ந்து புகழ்பாடும் அடியார்க்கு மறவாமல்த் திருக்காட்சி தருகின்றவன் குளிர்பொய்கையில் நீராடி நறுசந்தனமே சூடி அந்த படைவேல் செம்மலை பணிவுடன் வணங்கி மயிலாடும் திருசெந்த்தூரின் கடலோரத்தில்
  15. எனக்கென்னவோ இந்த பெயரை, அந்த நேரத்தில் யாருக்கு கிடைக்குதோ அவையல் வச்சிருப்பினம் போல இருக்கு 😝

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.