Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    18
    Points
    38778
    Posts
  2. பாலபத்ர ஓணாண்டி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    1836
    Posts
  3. Kapithan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    9308
    Posts
  4. பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    15755
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/01/21 in Posts

  1. வளர்ந்து வா மகனே ! - சுப.சோமசுந்தரம் தமிழக தேர்தல் 2021 முடிவு வருமுன் அவசரம் அவசரமாக அனைத்துக் கட்சிக் கூட்டம் எனும் பெயரில் கூடி, ஆக்ஸிஜன் மட்டும் தயாரிக்க அனுமதிக்கலாம் எனப் பம்மாத்து வேலையாக ஸ்டெர்லைட்டைத் திறக்க வழி செய்த அனைத்துக் கட்சித் துரோகத்தை எழுதிய சிறிய பதிவு. சில காலம் முன்பு நிகழ்ந்த ஒரு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டத்தின் பின்னணியில். வளர்ந்து வா மகனே! நீயே இப்போது விடிவெள்ளி. நீயென்பது ஓட்டுக் கட்சிகளால் இன்னும் மூளைச்சலவை செய்யப்படாத உன் தலைமுறையினர். நாங்கள் பாசிசவாதிகளையும் அடிமைகளையும் என்றுமே நம்பியதில்லை; அதனால் அவர்கள் எங்களை ஏமாற்றவில்லை. முழுமையாக இல்லாவிட்டாலும் ஏதோ ஒட்டுப் போட்ட திராவிடக் கட்சி, நொண்டி நோக்காடான இடதுசாரிகள் என்று நம்பி ஏமாந்து போகிறோமே எங்களுக்கான நீதியை நீதானடா வழங்க வேண்டும். ஒவ்வொரு முறை ஏமாறும்போதும் பாமர மனம் நம்பிக்கையை வேறு எதிலாவது ஏற்றுகிறது. அப்படித்தான் இப்போது நீ கிடைத்திருக்கிறாய் மகனே ! நாங்கள் பெரும் விவேகிகள் என்று நினைத்தவர்கள் எல்லாம் சமாளிப்பு மன்னர்கள் என்று உணர எங்களுக்கு இத்தனை நாட்களா? அவரவர் கட்சிக்கு வாழ்க்கைப்பட்டு விட்டார்களாம். எங்களைப் போன்ற டியூப் லைட்டுகளைப் பார்த்து அந்தக் கொள்கைக் குன்றுகள் எள்ளி நகையாடுவது உன் காதுகளில் விழ வேண்டும். அந்தப் பதினான்கு உயிர்களின் ஓலத்தில் எங்கள் காது கிழிகிறதடா. அவர்களைச் சுட்டவன் எவன், சுடச் சொன்னவன் எவன் என்ற கேள்வியை இந்த அதிமேதாவிகள் யாரும் இன்று வரை கேட்கவில்லை. நியாயம்தானே! இவர்கள் ஆட்சிக் காலத்திலும் மக்களைச் சுட்டவர்கள்தானே ! அது தமிழகமாய் இருந்தால் என்ன, TATA முதலாளிக்கான சிங்கூர் ஆக இருந்தால் என்ன ? முதலாளி வர்க்கத்தின் முன் இடது என்ன, வலது என்ன, திராவிடம் என்ன, ஆரியம் என்ன ? Sterlite என்பது தேர்தல் முடிவுக்கு முன் இவர்களுக்கு வைக்கப்பட்ட litmus test. கையில் மை காயுமுன்பே தோற்றுப் போனார்கள். தேர்தல் முடிவு அறியும் ஆர்வமெல்லாம் போய்விட்டதடா. நீதியை வழங்க உன் தலைமுறையினருக்கான ஆயுதத்தை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அது மீண்டும் வாக்குச் சாவடியாகக் கூட இருக்கலாம். ஆனால் நீதி வேண்டும். நீயே வழங்க வேண்டும்.
  2. மேநாள்..! *********** உழைப்பாளர் தினம் 18ம் நூற்றாண்டின் போராடிப் பெற்றதிற்கான வெற்றித்தினம்-இந்த மேதினம்.. ஆனால் இன்றும் ஆதிக்க அரசியல் முதலாளி.. வர்க்கத்துக்கு எதிராக போராடவேண்டிய தினம். உலகெங்கும் இன்று லீவுநாள். முதலாளிகளுக்கு ஆடம்பர நாள் அன்றாட தொழிலாளர்களுக்கு-இது பட்டணியின் நாள். இருந்தாலும் எல்லோரையும் துரத்தும் பொது எதிரியின் நாள் அதுதான் “கொரோனாவின் நாள்” உயிர் காக்க அனைவரும் இணைந்து.. போராடுவோம். அன்புடன் -பசுவூர்க்கோபி- 01.05.2021
  3. கருணாவின் தோல்வியினால் அதிருப்தியுற்றிருக்கும் சிங்கள இனவாதிகள் கல்க்குடாத் தொகுதியில் கருணாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் பாடத்தினையடுத்து, அவரை ஆதரித்து எழுதுகின்ற சிங்கள இனவாதிகள் கவலையடைந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. கிழக்கில் கருணா விடிவெள்ளியாக, பிரபாகரனை எதிர்த்து மேலெழும்புவார் என்று கனாக் கண்டுகொண்டிருந்த திசராணி மற்றும் மகிந்தபால போன்ற இனவாதிகளின் கனவில் இடிவிழுதிருக்கிறது. இலத்திரணியல் ஊடகங்களில் புனைவுகளை அவிழ்த்துவிடும் சிங்கள இனவாதிகளின் பத்திகள் பெரும்பாலும் அடக்கமுடியாத சிரிப்பைத்தான் எனக்குத் தருகின்றன. திசராணி குணசேகரவின் புனைவு ஒன்று கீழே..... "கிழக்கில் புலிகளை விட கருணா குழுவே பலம்வாய்ந்ததாகத் தெரிகிறது. கருணாவின் இந்த செல்வாக்கு தேர்தலில் எவ்வாறான தாக்கத்தினைச் செலுத்தும் என்பதனை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். ஆனால், இத்தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கு பெருமளவிலான வாக்குகளை கருணா சேகரித்துத் தருவார் என்பதை நிச்சயம் எதிர்பார்க்கலாம். இது அவரது அரசியல் முயற்சியைப் பலப்படுத்தும். கருணா, கிழக்கில் தனது ராணுவ மேலாண்மையினை, அரசியல் அரங்கிலும் உருவாக்குவது அவசியம். தேர்தலில் மகிந்தவுக்கான வாக்குகளை அள்ளி வழங்கி, தனக்கும், புலிகளுக்கெதிரான இலட்சிய அரசியலுக்கும் பலமான அடித்தளம் ஒன்றினை இட்டு, தனது பேரம்பேசும் பலத்தினை அவர் வளர்த்துக்கொள்ள வேண்டும். இதற்கான ஆலோசனைகளை பழுத்த புலியெதிர்ப்பு அரசியல்வாதியான ஆனந்தசங்கரியிடமிருந்து கருணா பெற்றுக்கொள்ள முடியும். கருணா மற்றும், அனைத்து புலியெதிர்ப்பு அரசியல்வாதிகளுக்கும் கிடைத்திருக்கும் இந்த அரியசந்தர்ப்பத்தினைப் பாவித்து ஆனந்தசங்கரி தலைமையில் பாரிய புலியெதிர்ப்பு அரசியல் சக்தியொன்றினை உருவாக்கிடுதல் இன்று அவசியமானது" என்று கருணாவின் ஊதுகுழலான கேடி ராஜசிங்கத்தின் மஞ்சள்ப் பத்திரிக்கையில் அவர் எழுதுகிறார். இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால், சிங்கள இனவாதிகள் கிழக்கு மாகாணத் தமிழர்களையும் கருணாவைப் போன்ற ஏமாளிகளாக பார்த்துவருவதுதான். இத்தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தமிழினத்திற்கெதிரான எதிர்ப்புக்களையோ அல்லது விமர்சங்களையோ எழுதுவதைக் கற்பனையில்க் கூட நினைத்துப் பார்க்காதவர்கள். ஆனால், அவர்களுக்கு தமது வாழ்க்கைக்கும், பாதுகாப்பிற்கும் எது அவசியம் என்பது நிச்சயமாகத் தெரிந்திருக்கிறது. அதனால்த்தான் 2004 இலிருந்து பிரபாகரனுக்கும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கும் எதிராக கருணா முன்வைத்துவரும் நச்சுத்தனமான விமர்சனங்களையெல்லாம் மீறி இத்தேர்தலில் தமது தெரிவைக் காட்டியிருக்கிறார்கள். தேசியத்தை நேசிக்கும் எவருமேயற்ற வெற்று மண்டபத்தில் தனது மாவீரர் உரையினை வழங்கிய கருணா, "2002 இல் நோர்வே தலைமையில் ஏற்படுத்தப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம்பற்றி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீள்பரிசீலினை செய்ய வேண்டும்..............." என்று கேட்டிருந்தார். ஆனால், தந்திரசாலியான மகிந்த கருணாவின் இந்த வேண்டுகோளினை உதாசீனம் செய்தார். கருணாவின் இந்த வேண்டுகோள் பற்றி மகிந்த ஏன் எதுவுமே செய்யவில்லையென்று விளங்கிக் கொள்வது கடிணமானது அல்ல. முதலாவது, கருணா தான் ஜனாதிபதித் தேர்தலில் கிழக்கில் செய்யப்போவதாக உத்தரவாதம் அளித்த எதனையும் செய்யவில்லை. இரண்டாவது அரசியலில் பழம் தின்று கொட்டைபோட்ட அரசியல்வாதியான மகிந்தவுக்கு தமிழர்களிடையே உண்மையான பூவிற்கும் "காகிதப் பூவிற்கும்" இடையிலான வித்தியாசத்தைக் கண்டுபிடிப்பது அப்படியொன்றும் கடிணமாக இருக்கவில்லை.
  4. கருணாவும் கல்க்குடாவும் கருணாவை அவரது தொகுதி மக்களே எவ்வாறு தோலுரித்து விரட்டினார்கள என்பதையும், ஜெயராஜின் அரை அவியல்கள் எவ்வளவு புனையப்பட்டவை என்பதையும் விளக்க விரும்புகிறேன். முதலில் 2004 பொதுத் தேர்தலில் கல்க்குடாத் தொகுதி மக்கள் எவ்வாறு வாக்களித்தார்கள் என்பதிலிருந்து தொடங்கலாம். தெளிவான புரிதலுக்காக, ஜெயராஜ் செய்திருக்க வேண்டியது 2004 பொதுத்தேர்தலில் இத்திகுதி மக்கள் வாக்களித்த முறையினை இன்றைய தேர்தலுடன் ஒப்பிடுவதேயன்றி, 1999 ஆம் ஆண்டுத் தேர்தலுடன் ஒப்பிடுவதல்ல. 2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் கருணா புலிகளிடமிருந்து வெளியேற்றப்பட்டு ஒரு மாதத்தின் பின்னர், குடும்பிமலையில் தனது முகாமில் பதுங்கியிருநெதவேளையில். கல்குடாத் தொகுதியில் இனவிகிதாசாரம் பின்வருமாறு காணப்படுகிறது. இலங்கைத் தமிழர் 64 வீதம், இந்தியத் தமிழர்கள் 3 வீதம், முஸ்லீம்கள் 28 வீதம், சிங்களவர்கள் 4 வீதம், வேறு இனமக்கள் 1 வீதம். 2004 சித்திரை மாதத்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் 86,626. அளிக்கப்பட்ட வாக்குகள் 74,645. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்குகள் 43,503 (61.5 வீதம்), சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பெற்ற வாக்குகள் 22,244 (31.4 வீதம்), ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2,706 (3.8 வீதம்), ஐக்கிய தேசியக் கட்சி 1,364 (1.93 வீதம்), டக்கிளஸ் கட்சி 568 (0.8 வீதம்). கார்த்திகை 17 ஜனாதிபதித் தேர்தலில் இரு பிரதான வேட்பாளர்கள் ரணிலும் மகிந்த ராஜபக்ஷவும். கருணா கல்க்குடாவிலோ அல்லது கிழக்கு ஈழத்தின் எப்பகுதியிலுமோ இருக்கவில்லை. அவரது அப்போதைய மறைவிடம்பற்றி எவருக்குமே தெரிந்திருக்கவில்லை. கல்க்குடாத் தொகுதியின் 91,410 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களுக்கான வேண்டுகோளினை கருணா இணையத்தளம் ஊடாகவே முன்வைத்திருந்தார். இப்பகுதியில் அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 40,369 (44.71 வீதம்). கருணாவின் வேண்டுகோளான தேர்தலினைப் பலிஷ்கரிக்கவேண்டாம் என்பதையும் மீறி 41 வீத வீழ்ச்சியை இப்பகுதி வாக்களிப்பு கண்டிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சி 28,484 வாக்குகளைப் பெற்றுக்கொண்டது, இவற்றுள் பெரும்பாலானவை 22,244 முஸ்லீம் வாக்காளர்களால் இடப்பட்டவை என்பது இரகசியமல்ல. ஏனென்றால், இதேயளவான வாக்குகளை கடந்த பொதுத் தேர்தல்களில் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியினை ஆதரித்துநின்ற முஸ்லீம் காங்கிரஸ் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. கருணாவால் ஆதரிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ஷ வெறும் 11, 105 வாக்குகளையே பெற்றிருந்தார். கணிப்புகளின்படி 2004 பொதுத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்குகளான 43,505 வாக்குகளில் குறைந்தது 30,800 வாக்குகள் இந்த ஜனாதிபதித் தேர்தலில் அளிக்கப்படவில்லையென்பது, 86 வீதமான பொதுத் தேர்தல் வாக்களிப்பிலிருந்து 45 வீதமான ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பாகக் குறைந்திருப்பதன்மூலம் தெளிவாகிறது.. கல்க்குடாவில் வசிக்கும் 12,700 தமிழர்களில் 7,800 வாக்காளர்கள் மகிந்தவுக்கும், 4,870 வாக்காளர்கள் ரணிலுக்கும் வாக்காளித்திருக்கிறார்கள். மொத்தத்தில் மகிந்த 11,105 வாக்குகளை கல்க்குடாத் தொகுதியிலிருந்து பெற்றிருக்கிறார். இதில் கடந்த பொதுத் தேர்தலில் அவருக்கு வாக்களித்த 2700 வாக்குகள், டக்கிளஸ் தேவானந்தாவின் கட்சிக்குக் கிடைத்த 568 வாக்குகள் மற்றும் மீதமான 7800 வாக்குகள் என்பன அடங்கும். இதன்மூலம் தெரியவருவது யாதெனில், கருணாவின் சொந்தப் பிரதேசத்தில் அவருக்கு ஆதரவாண வாக்காளர்கள் மிஞ்சி மிஞ்சிப் போனால் 7800 என்பதுதான். தனது சொந்தப் பிரதேசத்திலேயே தனக்குக் கிடைத்திருக்கும் ஆதரவுபற்றி கருணா கவலையடைந்திருக்கலாம். தனது மாவீரர் உரையில் பிரபாகரனையும், தமிழர்களையும் தனது சொல்லைக் கேட்கவில்லையென்று அவர் சாடியிருந்தார். "தமிழ்மக்கள் மீது சர்வாதிகாரத்தனமான அதிகாரத்தை பிரபாகரன் செலுத்துகிறார். தனது சர்வாதிகாரத்தனத்தை தமிழ் ஈழம் எனும் மாயைக்குள் அவர் மறைத்துவருகிறார். அவரது வன்முறைத்தனமான சர்வாதிகாரத்திற்கு ஒரு உதாரணம் தான் வடக்குக் கிழக்கில் மக்களை ஆயுதமுனையில் வாக்களிக்க விட முடியாமல் தடுத்து வைத்திருந்தது. வடக்குக் கிழக்கில் நடக்கும் அனைத்து விடயங்களுலும் தானே முழு அதிகாரத்தினையும் கொண்டிருக்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார். தமிழ் மக்களுக்கான சுதந்திர குரலை அவர் அடக்கி வைத்திருக்கிறார். அவர் தனக்கு விரும்பிய நேரத்தில் மக்களை வாக்களிக்கவும், மற்றைய நேரத்தில் வக்களிப்பதை தடுத்தும் வருகிறார்..................." என்று தனது ஊதுகுழலான கேடி ராஜசிங்கத்தின் ஏசியன் ட்ரிப்யூனில் அழுதிருந்தார். கருணாவின் ஊதுகுழல்கள் இந்தநேரத்தில் போலியாகவேனும் தைரியத்தைக் காட்டவேண்டியது அவசியம் என்பதை ஒருவர் புரிந்துகொள்ளமுடியும். ஆனால், கருணாவின் கல்க்குடாத் தொகுதியில் எப்போது, எவரால், எவ்வாறு வாக்காளர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளமுடியாமல் பிரபாகரனால் தடுக்கப்பட்டார்கள் என்பதை அறிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வமாக நான் இருக்கிறேன். என்னால் கல்க்குடாத் தொகுதி மக்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளமுடியாமல் தடுக்கப்பட்டார்கள் என்று கூறும் ஒரு பத்திரிக்கைச் செய்தியைத் தன்னும் இதுவரை பார்க்கமுடியவில்லை. இத்தேர்தலில் கல்குடாத் தொகுதி மக்கள் சொல்லிய செய்தி மிகவும் தெளிவானது, அது கருணாவால் இலகுவில் ஜீரணிக்கமுடியாதது. கல்க்குடாத் தொகுதித் தமிழர்கள் கருணாவைப் போல் ஏமாளிகளோ அல்லது ஏமாற்றப்படுபவர்களோ இல்லை. தமிழருக்கு எதிரான சதிகளிலும், நாசவேளைகளும் ஈடுபட்டுவரும் தமது சொந்த ஊர்க்காரனான கருணாவை அவர்கள் முற்றாக ஒதுக்கிவிட்டார்கள் என்பதுதான் அந்தச் செய்தி.
  5. கருணாவும் கல்க்குடாவும் சந்திரிக்காவின் பாவசங்கீர்த்தனங்கள் பற்றிய சில தெளிவுபடுத்தல்களை நான் முன்வைக்க விரும்புகிறேன். முதலாவதாக, கருணா மட்டக்களப்பிலிருந்து வெளியேறும் முன்னர் சந்திரிக்காவுடன் தனது பாதுகாப்பிற்கு ராணுவத்தினரின் உதவிவேண்டிப் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டார் என்பது. இரண்டாவது, சந்திரிக்கா கருணாவோடு நேரடியாகப் பேச விரும்பவில்லையென்பது, இன்னொருவர் மூலமாக கருணாவிடமிருந்து தகவல்களைப் பெற ஒத்துக்கொண்டார் என்பதும். மூன்றாவதாக, சந்திரிக்காவின் ஒப்புதலோடு, அவரது முகவர் ஒருவர் கருணாவோடு எப்போதும் தொடர்பிலிருந்து தகவல்களைப் பரிமாறிக்கொள்வதென்பது. நான்காவது, கருணா தானது வீரப்பிரதாபங்களை சர்வதேச செய்திச் சேவைகளிலும், உள்ளூர்ச் செய்திச்சேவைககளிலும் மார்தட்டி, பின்னர் புலிகளிடம் மரண அடிவாங்கி ஓடியிருக்காவிட்டால் ,சந்திரிக்கா சிலவேளை அவருடன் நேரடியாகப் பேசியிருக்கலாம் என்பது. ஆனால், கருணாவின் மார்தட்டல்கள் புஸ்வானமாகிப் போக, சந்திரிக்காவும் தனக்கும் கருணாவுக்கும் இடையிலான தொடர்பினை மிக இலகுவாக மறுத்துவிட முடிந்தது. ஐந்தாவது, சந்திரிக்கா தனது சுய சரித்திரத்தை எழுதும்வரை நாம் காத்திருந்தாலே, கருணா அவருக்கு அனுப்பிய முக்கியமான "அந்த" செய்திகள் பற்றி அறிந்துகொள்ளமுடியும், ஆனால் அதை அவர் எப்போது எழுதுவார் என்பது எவருக்கும் தெரியாது. அதுவரையில், சந்திரிக்கா கருணாவை வெளிப்படையாக தோலுரித்துக் காட்டியிருக்கிறார் என்றே நாம் கருதவேண்டும். அதேவேளை கருணாவும், அவரின் பின்னால் நின்று இயக்கிவருபவர்களும் இதுபற்றி எதுவுமே பேசமுடியாத நிலையில் மெளனமாகவே இருக்கவேண்டும். அனால், சந்திரிக்காவின் கருணா தொடர்பான வெளிப்படுத்தல்கள் பற்றி அவரது ஊதுகுழலான கேடி ராஜசிங்கம் நடத்தும் மஞ்சள்ப்பத்திரிக்கையான ஏசியன் ட்ரிபியூனில் ஒரு சொல் கூட பதியப்படவில்லை !! கருணாவுக்கெதிராக கல்க்குடா வாக்காளர்கள் வெளிப்படுத்திய அதிருப்தி கடந்த ஜனாதிபதித் தேர்தல் நாளான கார்த்திகை 17 ஆம் திகதிக்கு ஓறிரு நாட்களுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளரான மகிந்த ராஜபக்ஷவை தான் ஆதரிப்பதாக கருணா வெளிப்படையாக அறிவித்திருந்தார். இதனை அவருடைய ஊதுகுழலான ஏசியன் ட்ரிபியூன் பத்திரிக்கையே காவிவந்திருந்தது. "விநாயகமூர்த்தி முரளீதரன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இந்த ஜனாதிபதிதேர்தலை தமிழ் வாக்காளர்கள் பகிஷ்கரிக்கக் கூடாதென்று கேட்டுக்கொள்கிறது..........மகிந்த ராஜபக்ஷ அவர்கள் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பல மாற்றங்களைச் செய்யப்போவதாக உறுதியளித்திருக்கிறார். எம்மைப்பொறுத்தவரைக்கும் இது ஒரு முக்கியமான விடயமாகும். அத்துடன், இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக புலிகள் மட்டுமல்லாமல் அனைத்துக் கட்சிகளுடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாகக் கூறியிருக்கிறார். எம்மைப் பொறுத்தவரையில் இது மிக மிக முக்கியமானது ….இந்தக் காரணங்களுக்காக மகிந்த ராஜபக்ஷவை இத்தேர்தலில் ஆதரிப்பதென்று முடிவெடுத்திருப்பதாக கருணா அம்மான் தெரிவித்திருக்கிறார்" என்று கேடி ராஜசிங்கம் தனது மஞ்சள்ப்பத்திரிக்கையில் எழுதியிருந்தார். கருணாவின் சொந்த இடமான கிரான் அமைந்திருக்கும் கல்க்குடாத் தொகுதி வாக்காளர்கள் கருணாவின் இந்த அரசியல் வேண்டுகோளினைக் கேட்டிருப்பார்களா? இத்தொகுதியின் தேர்தல் முடிவுகள் கருணாவின் வேண்டுகோளுக்கு முற்றிலும் எதிராகவல்லவா அமைந்திருந்தன? இதில் வேடிக்கையென்னவென்றால், கருணாவோ அல்லது அவரது ஊதுகுழல்களோ கல்க்குடாத் தொகுதி மக்கள் வற்புறுத்தலின்பேரிலேயே வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லையென்று எழுதக் கூடத் திராணியற்றுப் படுத்துவிட்டனர். இதிலிருந்து தெரியவருவது என்னவென்றால், கருணாவின் அரசியல் திருகுதாலங்களை அவரது பிரதேச மக்களே ஊதித்தள்ளிவிட்டார்கள் என்பதுதான். புலிகளுக்கெதிரான பத்தியெழுத்தாளரான டி பி எஸ் ஜெயராஜ், கல்க்குடாத் தொகுதியில் கருணாவுக்கும், அவர் வரிந்துகொண்ட மகிந்த விசுவாசத்திற்கும் கிடைத்த மரண அடியை ஜீரணிக்கமுடியாமல், தேர்தல் முடிபுகளை திரிபுபடுத்தி, புனைகதையொன்றை பின்வருமாறு அரை அவியலில் இறக்கிவிட்டிருந்தார். “ரணிலுக்குக் கிடைத்த வாக்குகள் முஸ்லீம்களின் வாக்குகள் என்று புலிகள் நிறுவ முயல்கிறார்கள். இது தவறானது, பட்டிருப்புத் தொகுதி 99 வீதம் தமிழர்களைக் கொண்டது. கல்க்குடாத் தொகுதி 65 வீதம் தமிழர்களைக் கொண்டது. மட்டக்களப்பு 75 வீதம் தமிழர்களைக் கொண்டது. இத்தேர்தலில் கிடைத்த வாக்குகள் 1999 ஆம் தேர்தலைக் காட்டிலும் அதிகமானவை. மட்டக்களப்பில் கருணாவின் தாக்கமும் வாக்களிப்பில் அதிக பங்கினைச் செலுத்தியிருந்தது. மகிந்த ராஜபக்ஷவுக்கு வக்களியுங்கள் என்று கருணா கேட்டிருந்தாலும்கூட, மக்கள் வேறு வாக்களர்களுக்கு வாக்களிப்பதையும் ஊக்குவித்திருந்தார். இந்த "கலந்த சமிக்ஞைகளே" வாக்களர்களை பெருமளவில் வந்து வாக்களிக்க வைத்திருந்தது ......."
  6. கருணாவும் கல்க்குடாவும் இலங்கை தமிழ்ச் சங்கம் இணையத்தில் சிறி காந்தா எழுதிய ஆக்கம் காலம் : மகிந்த அரியணை ஏறிய காலப்பகுதி கடந்த சில வாரங்களாக கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனின் மீது முன்வைக்கப்பட்டு வரும் கடுமையான விமர்சனங்கள், அதிருப்திகள் பற்றி எவராவது எண்ணிப்பார்த்திருக்கிறீர்களா? இவை யாரிடமிருந்து வருகின்றன? முதலாவதாக, கொழும்பு அதிகார வர்க்கத்தின் அதியுச்சத்தில் இருந்த முன்னாள் ஜனாதிபதியான சாட்சாத் சந்திரிக்கா பண்டாராநாயக்கவிடமிருந்து. இரண்டாவதாக கருணாவின் பிறப்பிடமான கிரான் அமைந்திருக்கும் கல்குடா தொகுதி வாக்களர்களிடமிருந்து கடந்த கார்த்திகை 17 ஆம் நாள் இருந்து வந்த அதிருப்தி. கருணா தன் செயற்பாடுகள் மீதான இந்த விமர்சனங்கள், அதிருப்திகள் கண்டு அதிர்ச்சியடைந்திருப்பதாகவே எனக்குப் படுகிறது. ஊருடன் பகைத்தால் வேருடன் சாயும் எனும் பழமொழி கருணா விடயத்தில் பலித்திருப்பதாகவே படுகிறது. மூன்றாவதாக, தற்போது ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டிருக்கும் மகிந்த ராஜபக்ஷவிடமிருந்து. கொழும்பில் வெளியான கருணாவின் செயற்பாடுகள் ஒருகாலத்தில் கொழும்பிலும், இந்தியாவிலும் இருந்த அரசியல், ஊடக பெருச்சாளிகள் சந்திரிக்காவை "கவர்ச்சியான" தலைவராக பிரகணம் செய்துவந்தன, ஆனால் நான் ஒருபோதும் அதனை நம்பவில்லை. ஆனால், பேயாக இருந்தாலும், அதற்கான இடம் வழங்கப்படத்தானே வேண்டும்? சந்திரிக்காவிடம் ஒருவிடயத்தைச் செய்விக்கும் திறமை இருந்திருக்கலாம், ஆனால் இதுவே கவர்ச்சியாகிவிடாது. அவரின் பெற்றோர்களுடன் நெருங்கிப் பழகிய பலரும் கூறும் ஒருவிடயம், அவரது தந்தையாரான சொலொமொன் பண்டாரநாயக்கா வினைத்திறனும் கவர்ச்சியும் கொண்டிருந்த தலைவர் என்று கூறுகின்றனர். ஆனால், அவரது தாயாரான சிறிமாவோ கண்டிய மேற்தட்டு வர்க்கத்திற்கேயுரிய ஆணவமும், அதிகாரத்தனமும், அதேவேளை வெளிப்படைத்தன்மையில்லாத, ரகசியமான ஒரு தலைவராகவே இருந்தார். இந்தியாவின் ஹிந்துப் பத்திரிக்கையுடனான சந்திரிக்கா எனும் "நட்சத்திரத்தின்" அஸ்த்தமக் காலத்தின் வெள்ளையடிக்கும் நாடகச் செவ்வியில் கருணாவைப் பற்றியும், அவரின் பின்னாலிருந்து இயக்குவிக்கின்ற, அவரின் பெயரில் அரசியல் நிலைப்பாடுகளை வெளியிடுகின்றவர்கள் பற்றி பல விடயங்களை பொதுவெளியில் சல்லிகளாகப் போட்டுடைத்துவிட்டார். கருணாவின் கைங்கரியங்கள் பற்றிய சந்திரிக்காவின் வெளிப்படுத்தல்கள் அவராகவே விரும்பி வெளியிடப்பட்டவையா அல்லது சந்தர்ப்பவசத்தால் அவரை அறியாமலேயே வாயால் வந்து கொட்டப்பட்டவையா என்பது அவருக்கே வெளிச்சம். புலிகளுடனான சந்ர்திரிக்காவின் தொடர்பாடல்கள் குறித்து ஹிந்துவின் செவ்வியாளர் வி எஸ் சம்பந்தன் அவர்கள் கேட்ட மூன்று கேள்விகளும், இவற்றிற்கான சந்திரிக்காவின் பதிகளும் கீழே விரிகின்றன, கேள்வி 1 : கடந்த 11 வருடங்களாக புலிகளுடன் நீங்கள் நடத்திவந்த சமாதான முயற்சிகளில் மிக அதியுயர் புள்ளியாக எதனைக் கருதுகிறீர்கள்? சந்திரிக்கா : புலிகளின் கிழக்கு மாவட்ட தளபதியாகவிருந்த கருணாவுக்கு வெளிநாடுகளுக்கு செல்லக் கிடைத்த அடுதடுத்த சந்தர்ப்பங்கள் மூலமாக அவர் புலிகளிடமிருந்து பிரிந்து செல்லும் வாய்ப்புகள் நான் பதவியிலிருந்த காலத்தில் , வடக்குத் தமிழர்களுக்கும் கிழக்குத் தமிழர்களுக்கும் இடையே என்னதான் பிணக்குகள் இருந்ததாக கூறப்பட்டாலும்கூட ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பதை நிச்சயமாக என்னால் உறுதிபடக் கூறமுடியும். நான் இதனை கற்பனையாகக் கூறவில்லை, எனது சரித்திரத்தை நான் ஒருநாள் எழுதும்போது, கருணா எனக்குத் தனிப்பட்ட ரீதியில் அனுப்பிய, இன்றும் மிக ரகசியாமாக இருக்கும் பல விடயங்கள் பற்றி எழுதுவதென்பது என்னைப்பொறுத்தவரையில் நிச்சயமாக சங்கடமாகவே இருக்கும். அவர் என்னுடன் நேரடியாகப் பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால், நான் ஒருபோதுமே அவருடன் பேசவில்லை, இன்னும் சொல்லப்போனால் ஒரு பயங்கரவாதியுடன் நேராகப் பேசுவதில்லை எனும் வைராக்கியத்துடன் நான் இருந்துவருகிறேன். ஆனால், அவர் அனுப்பிய செய்தி மிகவும் தெளிவானது....... கேள்வி 2 : இது எப்போது நடந்தது? சந்திரிக்கா : அவர் புலிகளிடமிருந்து பிரிந்துசென்ற போது, மட்டக்களப்பை விட்டு வெளியேறுமுன்னர். கேள்வி 3 : நீங்கள் அவருடன் பேசவேயில்லையா? சந்திரிக்கா : நான் ஒருபோதும் அவருடன் பேசியதில்லை, இனிமேலும் பேசப்போவதில்லை. ஆனால், அவருக்கு பாதுகாப்புத் தேவைப்படுமிடத்து என்னால் அதற்கான உதவிகளைச் செய்யமுடியும் என்று நான் செய்தியனுப்பியிருந்தேன், பிரபாகரன் என்னிடம் பாதுகாப்புக் கேட்டிருந்தாலும் இதனையே செய்திருப்பேன். அவரும் இலங்கையின் குடிமகனே. ஆனால், கருணாவுடன் எதுவித தொடர்புகளையும் பேணவில்லை.
  7. புல்டாக்கின் பீலிங்க்ஸ் ..........! 🐕
  8. மே தினத்தில் மே தினத்துக்குரிய மிடுக்கான கவிதை . நன்றி கோபி .....! 👍
  9. நாத விந்துக லாதீ நமோநம வேத மந்த்ரசொ ரூபா நமோநம ஞான பண்டித சுவாமி நமோநம வெகுகோடி நாம சம்புகு மாரா நமோநம போக அந்தரி பாலா நமோநம நாக பந்தம யூரா நமோநம பரசூரர் சேத தண்டவி நோதா நமோநம கீத கிண்கிணி பாதா நமோநம தீர சம்ப்ரம வீரா நமோநம கிரிராஜ தீப மங்கள ஜோதீ நமோநம தூய அம்பல லீலா நமோநம தேவ குஞ்சரி பாகா நமோநம அருள்தாராய் ஈத லும்பல கோலா லபூஜையும் ஓத லுங்குண ஆசா ரநீதியும் ஈர முங்குரு சீர்பா தசேவையு மறவாத ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை சோழ மண்டல மீதே மநோகர ராஜ கம்பிர நாடா ளுநாயக வயலூரா ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை சேர்தல் கொண்டவ ரோடே முன்னாளினில் ஆடல் வெம்பரி மீதே றிமாகயிலையில் ஏகி ஆதி யந்த உலா ஆசுபாடிய சேரர் கொங்குவை காவூர் நனாடதில் ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் பெருமாளே தீப மங்கள ஜோதீ நமோநம தூய அம்பல லீலா நமோநம தேவ குஞ்சரி பாகா நமோநம அருள்தாராய்
  10. உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா உம்மை விட யாரும் இல்லை இயேசையா உறவின் உயிராக போற்றிப் போற்றி பாடுதே புகழ்ந்து ஏத்திப் பாடுதே ஆண்டவரை நெஞ்சம் பாடுதே என்னைக் கண்ணோக்கினார் வாழ்வைப் பொன்னாக்கினார் அந்த மீட்பரிலே மகிழ்ந்து பாடுதே 1. உலகம் ஒதுக்கிய என்னை உறவாய் கொண்டார் விலைமதிப்பில்லா பேறுகள் எனக்களித்தார் தலைமுறை எல்லாம் என்னை வாழ்த்திடுமே தலைவனவர் திருநாமம் புனிதமாமே 2. அவரைப் பணிபவர் என்றும் இரக்கம் பெறுவார் ஆணவம் கொண்டோர் யாவரும் அழிவுறுவார் செல்வர்களெல்லாம் வறுமையில் வாடச் செய்தார் பசித்தோரை நிறைவாக்கி வாழச் செய்தார்
  11. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
  12. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello), வணக்கம் மக்களே! உங்கள் எல்லோரையும் மற்றொரு ஆய்வுக்கட்டுரையில் சந்திப்பதில் மகிழ்சியடைகிறேன். இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழ நிழலரசின்(de-facto state of Tamilleelam) கடற்படையிடமிருந்த கப்பல்களையும் அதில் பணியாற்றிய ஆழ்-கடலோடிகளைப் பற்றியுமே! தமிழீழ நிழலரசிற்கான அனைத்து வழங்கல்களும் கடல்வழியாகவே நடந்தேறின. இவற்றை விடுதலைப் புலிகளின் கப்பல் பிரிவு செம்மையாக நிறைவேற்றியது. இக்கப்பல் பிரிவை உள்ளடக்கிய படையணி 'சிறப்புப் படையணி' என அழைக்கப்பட்டது. ஆனால் நான்காம் ஈழப்போரின் தொடக்க காலத்தில் இருந்து நடைபெற்றுவந்த ஒருசில காட்டிக்கொடுப்புகளால் (குமரன் பத்மநாதன் என்ற தமிழின துரோகியால்) இக்கப்பல் பிரிவின் நான்கைந்து கப்பல் தவிர ஏனைய அனைத்தும் பன்னாட்டு கடலில் வைத்து சிங்களக் கடற்படையால் ஒக்கமே(completely) அழிக்கப்பட்டது. புலிகளின் இக்கடற்கலங்கள் பல்வேறு நாட்டுக் கொடிகளுடன் கடலில் வலம்வந்தன. அவற்றில் கூடுதலாக பனாமா, கொண்டுராசு(Honduras), இலிபியா என்பவை குறிப்பிடத்தக்கன. புலிகளின் இக்கப்பல்கள் தம்சேவைக் காலத்தில் 95 வீதமான நேரம் வணிகச் சரக்குகளை மட்டுமே உலகெங்கும் போக்குவரவித்திருந்தன. மீதி 5% நேரம் மட்டுமே தமிழீழத்திற்குத் தேவையான பொருட்களைக் காவி வந்தன. சரி, இனி இந்தக் கப்பல் பிரிவின் செயல்பாட்டுகளைப் பற்றிக் கொஞ்சம் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம். இக்கப்பல்கள் நிழலரசின் மிதக்கும் வறைக்கூடங்களாக(Floating warehouse) பணியாற்றுவதற்காக ஈழத்தீவின் கடற்கரைக்கு அப்பால் பன்னாட்டு நீரில் நங்கூரமிட்டிருந்தன. அவற்றிலிருந்து தமிழீழத்திற்கு பொருட்களை இறக்கிக் கொணர கடற்புலிகளின் ஆழ்கடல் பிரிவானது வழங்கல் படகுகளைப் பயன்படுத்தியது. இவ்வாறு பொருட்களைக் கொணரும்போது சிங்களப் படை கண்டுவிட்டால் கடலில் பாரிய கடற்சமர் மூண்டுவிடும். இறக்கப்படும் பாரிய அளவிலான வழங்கட்பொருட்கள் போக்குவரவிற்காக பிரிக்கப்பட்டு தமிழீழத்தில் உள்ள கடற்புலிகளின் தளங்களில் மீண்டும் ஒன்றாக்கப்படும். ஜெனிவா ஒப்பந்த காலத்திலிருந்து இது போன்ற ஆழ்கடல் வழங்கல் நடவடிக்கைகளிற்கு கடற்புலிகளின் கட்டளையாளர்களில் ஒருவரான இள பேரரையன்(Lt.Col.) சலீம்/கலாத்தன் என்பவர் தலைமை தாங்கினார். இவர் 4 மார்ச், 2009 அன்று கடற்புலிகளின் தளமிருந்த சாலை பகுதியில், சிங்களப்படைகளின் பதுங்கித் தாக்குதலின்போது காயமடைந்து பண்டுவம் பெற்றுவரும் வேளையில் 10 மார்ச் 2009 அன்று வீரச்சாவினைத் தழுவிக்கொண்டார். 'லெப். கேணல் சலீம்/கலாத்தன் ' இனி புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட அல்லது அழிக்கப்பட்ட கப்பல்களின் பெயர்க் குறிப்புகளைக் காண்போம். இங்கு நான் எழுக்டும் செய்திகள் சிங்கள புலனாய்வாளர் ரொகான் குணரத்ன வின் சிங்களச் சார்பாக வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரை மற்றும் சிங்கள அரசின் humanitration analysis என்னும் அறிக்கை ஆகியவற்றில் இருந்து கிடைத்த செய்திகளையும் இணையத்தளங்களில் விரவிக்கிடந்த செய்திகளையும் தொகுத்து இங்கே வெளியிடுகிறேன். அதற்கு முன்னர், உங்களுக்கு ஒன்றினை அறிவுறுத்திக் கொள்ள விளைகிறேன். கீழே நான் கொஞ்ச கலைச்சொற்களைத் தருகிறேன். நீங்கள் அவற்றை படித்துவிட்டு மேற்செல்லுங்கள். ஏனேனில் அவை வரிக்கு வரி வரும் முக்கிய சொற்களாகும். கலைச்சொற்கள்: தண்டையல் - ship captain மீகாமன் - helmsman சேனைமீகாமன் - literary meaning 'military helmsman' தாங்கி- Tanker சரி, வாருங்கள் இனி கட்டுரைக்குள் தாவுவோம்! புலிகளிடம் இருந்த கப்பல்களின் நிலைமை: பிடிபட்டவை- 6 பிடிக்க முயன்ற போது தன்னழிப்பானவை - 5 [4 கப்பல்கள்(2 MT & 2 MV) + ஒரு பெரிய வள்ளம்(trawler)] அழிக்கப்பட்டவை - 10 (ஒரு பெரிய வேகப்படகு, ஒரு நடுத்தர படையேற்பாட்டுக் கலம்(medium sized logistics vessel), மற்றும் 8 கப்பல்கள்) எஞ்சியவை - 1+ (யாருக்குமே தெரியாது). ஆனால் சிங்கள அரசு புலிகளிடம் 8 கப்பல்கள் எஞ்சியுள்ளதாக போர் முடிந்தபின் அறிவித்திருந்தது. எம்.வி.சோழன்: 1984 ஆம் ஆண்டு புலிகளின் முதலாவது கப்பல் வாங்கப்பட்டது. அதன் பெயர் எம்.வி.சோழன் என்பதாகும். இதன் பழைய பெயர் சுன்-இஃகிங் என்பதாகும். இது 1985 இல் இருந்து தனது பணியைத் தொடங்கியது. இதில் எந்தக் காலத்திலும் ஆய்தங்களோ, தடை செய்யப்பட்ட பொருட்களோ ஏற்றப்பட்டது கிடையாது. இதற்கு பின்னாளில் என்ன நடந்தது என்பது பற்றிய செய்திகள் இல்லை. இது பற்றி மேலும் வாசிக்க: https://www.facebook.com/OruTamilMalumi/photos/2415087945231692 'எம் வி சோழனில் கேணல் சங்கர் அவர்கள் கடற்புறாவினருடன்' 'தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு முதற்கப்பலை வாங்கித் தந்த பிறைசூடி ஐயா / தண்டையல் டேவிட் ' அடுத்து, பிடிபட்ட கப்பல்களைப் பற்றிப் பார்ப்போம்: 1. எம்.வி.கடல்புறா பிடிபட்ட திகதி: 3 ஒக்டோபர் 1987 பிடிபட்ட பரப்பு: இந்திய மாகடல் பிடித்தோர்: சிங்களக் கடற்படை வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: 12 பேர் புலிகளின் புத்தம் புதிய கப்பலான இது இந்திய-இலங்கை-புலிகள் அமைதி ஒப்பந்த காலத்தின் போது சிங்களப் படைகளின் டோரா P467 என்ற எண்கொண்ட கலத்தால் பிடிக்கப்பட்டது. இதில் செலவாகிய குமரப்பா-புலேந்திரன் உட்பட்ட பதினைந்து புலிகள் இந்தியப் படைகளால் தடுத்து வைக்கப்பட்டனர். பின்னர் இந்திய-இலங்கை படைகள் அவர்களை வைத்து நயவஞ்சத்திற்கு முனைய தமிழீழ மரபிற்கேற்ப குப்பி கடித்து பன்னிருவர் வீரச்சாவினைத் தழுவிக்கொண்டனர். (பலாலியில் இந்திய நயவஞ்சகத்தால் குப்பி கடித்து உயிரை விட்ட போதும் சயனைட் தன்னைக்கொல்ல முதல் குப்பிகடித்த அதேவாயால் இரண்டு சிங்கள வீரர்களையும் கடித்து அவர்களின் மீதும் நஞ்சை பாய்ச்சி கொன்றவர் புலேந்தி அம்மான். பின் இறந்த அவரின் உடம்பில் பன்னிரு கத்திக்குத்து வீழ்ந்தது. குத்தியவர் இந்தியரா இல்லை சிங்களவரா என்று தெரியவில்லை.) கலவர்: 'கம்பியில் அமர்ந்திருப்பவர் கப்டன் கரன் ஆவார்' 'இடமிருந்து வலமாக: 2ம் லெப். ரெஜினோல்ட், கப்டன் ரகு, கப்டன் கரன்' 2. எம்.வி.சன் பேட்டு(Sun Bird) வேறுபெயர்கள்: இலியானா(Iliyaana), விரான்சிசு(Francis), ஐகுலைட்டு(Ichulite) பிடிபட்ட திகதி: 13 திசம்பர் 1990 பிடிபட்ட பரப்பு: பினாங்கு மாநிலம் பிடித்தோர்: மலேசிய சுங்கப்பிரிவு இக்கப்பலானது மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் வைத்து மலேசிய சுங்கப் பிரிவினரால் தடுப்பிற்கு உள்ளாக்கப்பட்டது. அக்கப்பலைச் சோதித்த மலேசிய சிறப்புக் கிளையினர்(Malasian Special Branch) அதில், 2600 x வேட்டிற்கான வெற்றுக் கணைகள்(rounds of blank ammunition) 03 x பெரிய வேகப் படகுகள் 21 x இயோன்சன் & இயமஃகா வெளியிணைப்புப் பொறிகள்(OBM) 324 x பெறுகித்துரவுகள்-தள நிலையங்கள் (transreceivers- base station) 440 x நடைபேசி(walkie-talky) (கைக்கொள் கணம்(hand held set)) 6000 x மின்கலங்கள்(batteries) நீர்மூழ்கிகளுக்கான உதிரிப் பாகங்கள் & மற்றும் பல ஆய்தங்கள் இருந்ததாக தெரிவித்திருந்தனர். இது மலேசியாவில் கைப்பற்றப்பட்டுவிட்டதால், அக்காலத்தில் தொடங்கப்பட்டிருந்த கடற்புலிகளின் நீர்மூழ்கி கட்டுமானம் தொய்வடைந்தது. 3. எம்.வி. செக்கெசிறி(Checesri) வேறுபெயர்: சோழகேரி(Cholakeri) பிடிபட்ட திகதி: 28 நவம்பர் 1992 பிடிபட்ட பரப்பு: தாய் கரையில் இருந்து வெகு தொலைவில் பிடித்தோர்: மலேசிய சுங்கப்பிரிவு 4. எம்.வி. வி லிங் (We ling) பிடிக்கப்பட்ட திகதி: டிசம்பெர் 2009 பிடிபட்ட பரப்பு: மலேசியாவில் பிடிபடட்தாக கூறப்படுகிறது பிடித்தோர்: சிறீலங்காக் கடற்படை இக்கப்பலை 'துரோகி கே.பி.(K.P.) என்று அழைக்கப்படும் குமரன் பத்மனாதனிடம் இருந்து கைப்பற்றிய சிங்கள அரசாங்கமானது அதனை ஏ522 என்னும் பெயரில் தனது கடற்படையிடம் பயன்படுத்த அனுமதி வழங்கியது. 90 மீட்டர் நீளமும் 33 மீட்டர் உயரமும் கொண்ட இந்தக் கப்பலில் 5000 மெற்றிக் தொன் எடை யுள்ள பொருட்கள் கொண்டுசெல்ல முடியும். கொஞ்சக் காலம் அதனை இலங்கை கடற்படையினர் பயன்படுத்தி வந்தனர். ஆனால், அது பழுதடையவே அதனை பயன்படுத்துவது கைவிடப்பட்டது. பின்னாளில் அது பயனுறுத்த முடியா அளவிற்கு பழுதடைய மார்ச் 26, 2018 அன்று கடலினுள் தாட்டப்பட்டது (தண்ணீர் நிரப்பி மூழ்கடிக்கப்பட்டது). இக்கலம் பற்றி மேலும் அறிய: https://www.wrecksite.eu/wreck.aspx?282324 இது தொடற்பான மேலும் பல படங்கள் பார்க்க: Navy sinks dilapidated LTTE ship கலப் படம்: 5. எம்.வி. பிறின்சசு கிறிசுரினா (Princess Christina) பிடிபட்ட திகதி: டிசம்பெர் 2009. கொழும்புவிற்கு டிசம்பர் மாதத்தின் மூன்றாம் வாரம் கொண்டுவரப்பட்டது. பிடிபட்ட பரப்பு: பன்னாட்டுக் கடலில் வைத்து பிடித்தோர்: சிறீலங்காக் கடற்படை இது சிங்கப்பூர் பதிவு கொண்ட கடற்கலமாகும். 6. எம்.வி. தொங்னொவா(Tongnova) பிடிக்கமுயன்ற திகதி: 1 நவம்பர் 1991 பிடிக்கமுயன்ற பரப்பு: வங்காள விரிகுடா பிடிக்க முற்பட்டோர்: இந்தியக் கடற்படை வீரச்சாவடைந்த கடலோடிகள்: 1(மீகாமன் & கலத்தின் சொந்தக்காரர்) அடுத்து, பிடிக்கப்பட்டபோது தன்னழிப்பானவை பற்றிப் பார்போம் பெரிய வள்ளம்:- பிடிக்கமுயன்ற திகதி: 02.09.1990 பிடிக்கமுயன்ற பரப்பு: பருத்துத்துறைக் கடலிலிருந்து 8 மைல் உயரத்தில் பிடிக்க முற்பட்டோர்: சிங்களக் கடற்படை வீரச்சாவடைந்த கடலோடி: தண்டையல் கப்டன் மோகன் மேத்திரி இவ்வள்ளத்தின் வேகம்: 8 மைல் / மணி இதுவொரு பெரிய வள்ளம் ஆகும். தமிழீழத்தின் வல்வெட்டித்துறையில் கட்டப்பட்டு தமிழ்நாடு-தமிழீழ கடல் வழங்கல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டது ஆகும். சம்பவத்தன்று வழக்கம்போல தமிழ்நாட்டில் இருந்து வழங்கல் பொருட்களை ஏற்றிவந்த வேளை கடற்படையின் டோறா கடற்கலம் அவர்களை கண்டுகொண்டது; அதை அவர்களும் அறிந்தனர். அதனால் வள்ளத்திலிருந்த வீரர்களை அருகில் பாதுகாப்பிற்காக வந்துகொண்டிருந்த கடற்புறாவின் இயந்திரப் படகு ஒன்றிற்கு மாற்றிவிட்டு, வள்ளத்தை எரிப்பதையே திட்டமாக கொண்டிருந்தனர், கடற்புறாவினர். ஆனால் மோகன் மேத்திரியாரோ வீரர்களை ஏற்றிவிட்டு தானேற மறுத்துவிட்டார். அதனால் கடற்புறாவின் அந்த இயந்திரப் படகானது ஏனையவர்களோடு கரை திரும்பியது. பிறகு, அக்கலத்தின் சொந்தக்காரரும் தண்டையலுமான வல்வெட்டித்துறையினைச் சேர்ந்த ஓடாவியார்கள் வழிவந்த கொச்சரையர் மோகன் மேத்திரி என்பவர், கொணர்ந்த பொருட்களோ, தன்னுடலோ எதிரியிடம் சிக்கக் கூடாது என்று முடிவெடுத்தார். வள்ளத்தில் தான் கொண்டுவந்த பெற்றோலினை எடுத்து வள்ளத்திற்கும் தனக்குமாக ஊற்றி, மின்னலென வந்த டோறா நெருங்கியதும் வள்ளத்தோடு தீக்குளித்தார், விடுதலைப்புலிகளின் மரபிற்கேற்ப! அதனால் எழுந்த தீப்பிழம்பினை கரையில் இருந்தே அவதானிக்கக் கூடியதாக இருந்தது. மோகன் மேத்திரி அவர்கள் செந்தணல் ஆனபோது அவரின் வயது ஒரு 22/23 இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 'தண்டையல் கப்டன் மோகன் மேத்திரி' 2.எம்.வி. அகத் (Yahath/Ahat) பிடிக்கமுயன்ற திகதி: 19 சனவரி 93 பிடிக்கமுயன்ற பரப்பு: வங்காள விரிகுடா பிடிக்க முற்பட்டோர்: இந்தியக் கடற்படை வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: 10 பேர் இக்கப்பலானது இந்தியக் கடற்படையால் பிடிக்க முற்பட்ட போது அதிலிருந்த தளவாய்(Col.) கிட்டு உட்பட்ட பத்து புலிகள் கைக்குண்டை வெடிக்க வைத்து தம்மையும் கப்பலையும் அழித்து வீரச்சாவினைத் தழுவிக்கொண்டனர். கலவர்: 'எம்.வி. அகத் கப்பலின் தண்டையல் வைரமுத்து ஜெயச்சந்திரா ' சம்பவத்தின் போது கப்பலின் தண்டையலை கடலில் குதிக்குமாறு போராளிகள் கேட்டுக்கொண்டதால் அவர் கடலில் குதித்த நிலையில் இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். பின்னர் இந்திய சிறைச்சாலைகளில் சிறைவாசம் அனுபவித்த அவர் தமிழீழம் திரும்பி வல்வெட்டித்துறையில் வசித்து வந்த நிலையிலே 2021-2-28 அன்று காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. → மூத்த தளபதி பயணித்த கப்பல் கப்டன் காலமானார்! 'படிமப்புரவு: கிட்டு என்னும் சதாசிவம் கிருஸ்ணுகுமார்' 3),4) & 5) - கீழே தனியாகக் கொடுத்துள்ளேன். இனி, அழிக்கப்பட்ட கடற்கலங்களைப் பற்றிக் காண்போம். 1. எம்.வி. கொரிசோன் (Horizon) வேறுபெயர்: கொமெக்சு இயூ-3 (Comex Joux-3) அழிக்கப்பட்ட திகதி: 13 பெப்ரவரி 1996 அழிக்கப்பட்ட பரப்பு: முல்லைதீவுக்கு உயர சரியாக 26 கடல்மைலில் வைத்து அழித்தோர்: இந்திய - இலங்கைக் கடற்படைகளுடனான முற்றுகைச் சமரின் போது சிங்கள வான்படையால் மூழ்கடிக்கப்பட்டது. வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: 2 கடற்கரும்புலிகள் + 1 கடற்புலி கலவர்: இவர்களுடன் கப்பலில் இருந்த கடல் வேவுப்புலி மேஜர் இலங்கேஸ்வரன் உட்பட மேலும் இரண்டு கடற்புலிகள் அற்றைய நாளில் வீரச்சாவடைந்தனர். இத்தாக்குதல் பற்றி மேலும் வாசிக்க: இலங்கை இந்தியத்தின் அத்துமீறலும் கடற்புலிகளின் சதுரியமும்…!! - Eela Malar 2. எம்.வி. இஃவெராட்செசுகொம் (Fratzescom) வேறுபெயர்: இசுரில்லசு இலிமாசல் (Stillus Limmasul) அழிக்கப்பட்ட திகதி: 2 நவம்பர் 1997 அழிக்கப்பட்ட பரப்பு: முல்லைத்தீவிற்கு வெளியே அழித்தோர்: சிங்கள வான்படை& கடற்படை வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: அறியில்லை கணைகள்(ammunition) & ஆய்த தளவாடங்களை மாற்றிக்கொண்டிருக்கும் போது அழிக்கப்பட்டது. 3. எம்.வி. மாரியம்மா(Mariamma) அழிக்கப்பட்ட திகதி: 11 மார்ச் 1999 அழிக்கப்பட்ட பரப்பு: அந்தமான் தீவுகளிற்கு வெளியே அழித்தோர்: இந்தியக் கடற்படை வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: 2 கடற்கரும்புலிகள் இந்திய கடற்படை சுற்றி வளைத்து சரணடையக் கூறி எழுதருகை வேட்டுகளைத் தீர்த்த போது உதவிக்கு கடற்புலிகள் வரவியலாத நிலையால் மண்டியிடாமல் வளத்திலிருந்த எரிபொருளை வள்ளத்திற்கு ஊற்றி வள்ளத்தையும் தம்மையும் அழித்துக்கொண்டனர். 4.எம்.ரி.கொய்மர்(Koimar) வேறுபெயர்: கொய்(Koie) அழிக்கப்பட்ட திகதி: 10 மார்ச் 2003 அழிக்கப்பட்ட பரப்பு: சிறீலங்காவின் கிழக்கு கரையோரத்திலிருந்து 240 கடல்மைல்களுக்கு அப்பால் பன்னாட்டு நீரில் வைத்து அழித்தோர்: சிங்களக் கடற்படை தண்டையல்: கடற்கரும்புலி லெப் கேணல் சிலம்பரசன் எ ரஞ்சன் வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: 10 பேர் இது ஜெனிவா ஒப்பந்த காலத்தில் நடந்தேறிய விதிமீறல். ஒரு நாட்டின் கடல் எல்லை 12 மைல்கள். கூடுதலாக அது 200 கடல் மைல்கள் வரை தன்னலப்படுத்திக் கொள்ளலாம். அதற்கு மேல் தொடக்கூடாது. ஆனால் சிங்களக் கடற்படையானது தமிழ் மக்களிற்கான டீசலை ஏற்றி வந்த புலிகளின் எண்ணைத் தாங்கியினை(Oil tanker) இந்த பன்னாட்டு கடலில் வைத்து மூழ்கடித்தது. கப்பல் மூழ்கிய இடத்தை பின்னாளில் ஆய்வு செய்த பன்னாட்டு போர்நிறுத்த கண்காணிகள் அது வெறும் வணிகக் கப்பல் என்றும் அதற்குள் ஆய்தங்கள் ஏதும் இல்லையெனவும் அறிக்கையிட்டன. கலப் படம்: 'கப்பலின் உட்புறம்' கலவர்: 5.எம்.ரி.சொசின்(Shoshin) வேறுபெயர்: செய்சின்(seysin) அழிக்கப்பட்ட திகதி: 10 ஜூன் 2003 அழிக்கப்பட்ட பரப்பு: திருகோணமலைக் கரையோரத்திலிருந்து 266 கடல்மைல்களுக்கு அப்பால் பன்னாட்டு நீரில் வைத்து அழித்தோர்: சிங்களக் கடற்படை தண்டையல்: மேஜர் நிர்மலன் வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: 11+1(நாட்டுப்பற்றாளர்) என மொத்தம் 12 பேர் இதுவும் ஜெனிவா ஒப்பந்த காலத்தில் நடந்தேறிய விதிமீறல் செயல். இக்கடற் சம்பவம் பற்றிய குறிப்புகள்: கடற் காவியங்கள் - irruppu கலப் படம்: கலவர்: 'இவ்விளக்கப்படமானது 2006- 2007 வரை கடற்கலங்கள் எங்கெல்லாம் மூழ்கடிக்கப்பட்ட என்பதைக் கட்டுகிறது | படிமப்புரவு:Google' 6. மருது அழிக்கப்பட்ட திகதி: 17 செப்ரெம்பெர் 2006 அழிக்கப்பட்ட பரப்பு: கல்முனைக்கு வெளியே 120 கடல் மைல் தொலைவில் வைத்து அழித்தோர்: சிறீலங்காக் கடற்படை தண்டையல்: லெப் கேணல் வெற்றியரசன்/ ஸ்ரிஃவன் வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: 8 பேர் கலவர்: இது இந்தோனேசியாவில் கட்டப்பட்ட ஒரு பெரிய வேகப் படகாகும். இக்கடற் சம்பவம் பற்றிய குறிப்புகள்: கடற்புலி லெப். கேணல் ஸ்ரிபன் கலப் படம்: மருதுவின் இறுதித் தருணங்கள் 7.எம்.ரி.கியோசி(Kioshi) வேறுபெயர்: எம்.ரி.கியோய்(kiyoe) அழிக்கப்பட்ட திகதி: 28 பெப்ரவரி 2007 அழிக்கப்பட்ட பரப்பு: தெய்வேந்திரமுனையிலிருந்து 365 கடல் மைல் தொலைவில் பன்னாட்டு நீரில் வைத்து அழிக்க முற்பட்டோர்: சிறீலங்காக் கடற்படை அழிக்கப்பட்டது: விடுதலைப்புலிகளின் மரபிற்கு ஏற்றவகையில் சரணாகதி அடையாமல் கப்பலுடன் தம்மைத் தாமே தீயிட்டு, கப்பலையும் மூழ்கடித்து வீரச்சாவைத் தழுவினர். தண்டையல்: லெப் கேணல் இளமுருகன் வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: 15 கலவர்: கலப் படம்: கியோசியின் இறுதி தருணங்கள் 8. எம்.ரி. செயோய்(Seyo) வேறுபெயர்: எம்.ரி. இயோசி(Eyoshi) அழிக்கப்பட்ட திகதி: 18 மார்ச் 2007 அழிக்கப்பட்ட பரப்பு: அறுகம்குடாவிற்கு தென்கிழக்கில் 825 கடல் மைல் தொலைவில் பன்னாட்டு நீரில் வைத்து அழிக்க முற்பட்டோர்: சிறீலங்காக் கடற்படை அழிக்கப்பட்டது: சமையல் எரிவாயு கலன் கொண்டு கப்பலை தீயிட்டு தாமும் அழிந்து கப்பலையும் அழித்தனர் தண்டையல்: லெப் கேணல் இசைக்கோன் வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: 9 கலவர்: இத்தாக்குதல் பற்றி மேலும் வாசிக்க: எம்.ரி.செயோய் கப்பலில் உலகெங்கும் கடலோடி ஈழ நிலமொன்றே நினைவாகி விழிமூடிய மாவீரர்கள் கலப் படம்: இது ஒரு புத்தாம் புதிய தாங்கி(Tanker) ஆகும். இயோசியின் இறுதித் தருணங்கள் 9. எம்.வி.செய்சின்(Seishin) வேறுபெயர்: எம்.வி.மன்(Mann) அழிக்கப்பட்ட திகதி: 10 செப்டெம்பர் 2007 அழிக்கப்பட்ட பரப்பு: தெய்வேந்திரமுனைக்கு தென்கிழக்கே 1400 கடல் மைல் தொலைவில் பன்னாட்டு நீரில் வைத்து அழித்தோர்: சிறீலங்காக் கடற்படை தண்டையல்: லெப் கேணல் சோபிதன் வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: - கலப் படம்: செய்சினின் இறுதித் தருணங்கள் 10. எம்.ரி.மன்யோசி(Manyoshi) இது ஒரு எண்ணெய் தாங்கி(Oil Tanker) ஆகும். அழிக்கப்பட்ட திகதி: 10 செப்டெம்பர் 2007 அழிக்கப்பட்ட பரப்பு: தெய்வேந்திரமுனைக்கு தென்கிழக்கே 1400 கடல் மைல் தொலைவில் பன்னாட்டு நீரில் வைத்து அழித்தோர்: சிறீலங்காக் கடற்படை தண்டையல்: லெப் கேணல் செம்பா எ செண்பகச் செல்வன் வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: - கலப் படம் & இறுதித் தருணங்கள்: 11.எம்.ரி.கொசியா(Koshia) வேறுபெயர்கள்: எம்.வி.கொய்சின்(Goishin) அ எம்.வி.இயொய்சின்(Joishin) அ எம்.வி.இயெய்சின்(Jeishin) அழிக்கப்பட்ட திகதி: 11 செப்டெம்பர் 2007 அழிக்கப்பட்ட பரப்பு: தெய்வேந்திரமுனைக்கு தென்கிழக்கே 1400 கடல் மைல் தொலைவில் பன்னாட்டு நீரில் வைத்து. அழித்தோர்: சிறீலங்காக் கடற்படை தண்டையல்: லெப் கேணல் எழில்வேந்தன் வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: 7+ கலப் படம்: செய்சின், மன்யோசி, கொசியா ஆகியவற்றின் இறுதித் தருணங்கள்: மேற்கண்ட மூன்று கப்பல்களிலுமாகச் சேர்த்து ஒரு கள மருத்துவர், ஒரு கடற்கரும்புலி உட்பட 20 கடற்புலிகளும் ஒரு நாட்டுப்பற்றாளருமாக மொத்தம் 21 ஆழ்கடலோடிகள் கப்பலினுள் இருந்த ஆய்தங்கள் மூலம் இறுதிவரை சிங்களத்தை எதிர்த்துக் களமாடி வீரச்சாவினைத் தழுவிக்கொண்டனர். வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: இத்தாக்குதல் பற்றி மேலும் வாசிக்க: உலகெங்கும் கடலோடி ஈழ நிலமொன்றே நினைவாகி விழிமூடிய மாவீரர்கள் - தேசக்காற்று 12. எம்.வி.மற்சுசிமா(Matsushima) நீளம்: 70மீ இடப்பெயர்ச்சி - 3000 தொன் அழிக்கப்பட்ட திகதி: 7 ஒக்டோபர் 2007 அழிக்கப்பட்ட பரப்பு: தெய்வேந்திரமுனைக்கு கிழக்கே பன்னாட்டு 1620கடல் மைல் தொலைவில் பன்னாட்டு நீரில் வைத்து. அழிக்க முற்பட்டோர்: சிறீலங்காக் கடற்படை அழிக்கப்பட்டது: விடுதலைப்புலிகளின் மரபிற்கு ஏற்றவகையில் சரணாகதி அடையாமல் கப்பலுடன் தம்மைத் தாமே தீயிட்டு, கப்பலையும் மூழ்கடித்து வீரச்சாவைத் தழுவினர். தண்டையல்: லெப் கேணல் எரிமலை எ கபிலன் வீரச்சாவடைந்த கடலோடிகள்: 9 கலவர்: -கடற்புலி கொச்சரையன்(கப்டன்) முரசறைவாணன் & : இதில் தான் விடுதலைப் புலிகளிற்குச் சொந்தமான இலகு வானூர்திகள் கொண்டுவரப்பட்டிருந்ததாக சிறீலங்காக் கடற்படை முன்னாள் சேர்ப்பன்(Admiral) 'சயந்த கொலம்பக' தெரிவித்துள்ளார். அந்த வானூர்திகளின் எண்ணிக்கை மொத்தம் மூன்று என்று சிங்கள புலனாய்வாளர் 'ரொகான் குணரத்ன' தனது ஆய்வுக் கட்டுரையில் பதிவிட்டுள்ளார். மேலும் இதற்குள், ஒரு நிலக் கலத்தூரம் -Land cruiser ஒரு சன்னத்தகை நிலக் கலத்தூரம் - Bulletproof Land cruiser ஏவரிகள் - Torpedos ஏவரி செலுத்திகள் - Torpedo launcher பாய்விறக்க ஏந்தனங்கள் - Diving equipments நீர்முழுகி பிலிறுந்தக் கரணங்கள் - Diver propulsion devices கணைகள் - ammmunitions எறிகணைகள் - shells படகுப் பொறிகள் - boat engine ஆகியன இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆதாரம்: Global Responses to Maritime Violence: Cooperation and Collective Action. pg-220 கலப் படம்: மற்சுசுமிசாவின் இறுதி தருணங்கள்: 13.பெயர் அறியில்லை அழிக்கப்பட்ட திகதி: 20 திசம்பர் 2008 அழிக்கப்பட்ட பரப்பு: முல்லைத்தீவிற்கு வடகிழக்கே 70 கடல்மைலில் தமிழீழ கடற்பரப்பில் வைத்து. அழித்தோர்: சிறீலங்காக் கடற்படை தண்டையல்: அறியில்லை வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: அறியில்லை இது ஒரு நடுத்தர படையேற்பாட்டுக்(logistics) கடற்கலமாகும். இதில் என்ன கொணரப்பட்டது என்பது பற்றிய செய்திகள் இல்லை. இக்கலத்தின் இறுதித் தருணங்கள்: இனி எஞ்சிய கப்பல்களைப் பற்றிப் பார்ப்போம்: எம்.வி.ஈசுவரி(Easwari) (போர் முடியும் வரை) → எம்.வி. ஓசீன் லேடி(Ocean Lady) (போர் முடிந்த பின்) . இது பிறகு போரால் பாதிக்கப்பட்ட மக்களை வெளிநாடுகளிற்கு ஏற்றிச் சென்றது. தண்டையல்: கமல் எ கமல்ராஜ் கந்தசாமி 2. யு.வி. புளூ இஃகவாக்கு(Blue Hawak) வேறுபெயர்: யு.வி. இராகுய்(Rakuy) இது 96 இருக்கைகள் கொண்ட ஓர் வலசை(ferry) ஆகும். ஆனால் சரக்குகள் போக்குவரத்திற்கும் பயன்படுத்தப்பட்டது. 3. எம்.ரி சோவ மாறு (Showa Maru) 4. எம்.வி. சின்வா(Shinwa) 5. எம்.வி. கோள்டன் பேட்டு (Golden Bird) வேறுபெயர்கள்: பாரிசு(Baris), செயின்ற் அந்தோணி(St.Anthony), சோஃவியா(Sophia), பர்ஃகான்(Barhan), சுவனே(Swene) இதை விட இன்னும் பல கப்பல்கள் புலிகளிடம் இருந்தன. அவை யாவும் எங்குபோனது யாருக்கும் தெரியாது. ஆனால் போர் முடிந்த பின் வெளிநாடுகளில் புலிகளின் 8 கப்பல்கள் இருப்பதாகவும் அவற்றை சிறீலங்காவிற்குக் கொண்ட வர வேண்டும் என்றும் சிங்கள அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. எம்.வி. சன் சீ(Sun sea) வேறுபெயர்: இஃகரின் பிஞ் 19 (Harin pinch 19) இது 492 அகதிகளை எற்றிக் கொண்டு தனது கடைசி உருவோட்டமாக(sail) கனடா சென்றது. அங்கு கனேடிய அரசால் இது தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இதன் பாந்தர்களில்(passengers) பெரும்பாலானோர் புலி உறுப்பினர்கள் என்றும் இக்கப்பல் புலிகளிற்குச் சொந்தமானதாகவும் சிங்கள அரசால் (சிங்கள புலனாய்வாளர் குணரத்னே) கூறப்பட்டாலும் அதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லையென தமிழர் தரப்பால் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. உசாத்துணை: Cannadamirror JVP International (JVP International) புலிகளின் கப்பல் ஒன்று இலங்கை துறைமுகத்திற்கு கொண்டுவரப்படுகின்றது.) CANADIAN AUTHORITIES TELL IMMIGRATION AND REFUGEE BOARD THAT LTTE SHIP CONTAINED TRACES OF HIGH EXPLOSIVES LIKE RDX) Tamil Tiger Supply Ships Sunk (Tamil Tiger Supply Ships Sunk) Last Procurement Operation of KP sunk by Navy) Ex-Sri Lankan navy chief describes how US helped destroy LTTE floating armories - NewsIn.Asia) The Sunday Leader (The Sunday Leader) எம்.ரி.கொய் கப்பலில் உலகெங்கும் கடலோடி ஈழ நிலமொன்றே நினைவாகி விழிமூடிய மாவீரர்கள்… - தேசக்காற்று) https://www.cbc.ca/news/canada/toronto/alleged-mcarthur-murder-victim-1.4624478) Who is KP? (Who is KP?) (http://galledialogue.lk/assets/template/research_papers/2010/Prof_Rohan_Gunarathne.pdf) எம்.ரி.செயோய் கப்பலில் உலகெங்கும் கடலோடி ஈழ நிலமொன்றே நினைவாகி விழிமூடிய மாவீரர்கள் - தேசக்காற்று) Global Responses to Maritime Violence) pg - 222–223 (https://tamilnation.org/ltte/0604dynamics_of_LTTE_maritime_infrastructure.pdf) The Assassination) Ocean Governance: Who Owns the Ocean? | Heinrich Böll Stiftung | Brussels office - European Union) ('Destruction of LTTE ship is a grave ceasefire violation' - Balasingham) Monitors says no evidence sunk ship carried weapons) உலகெங்கும் கடலோடி ஈழ நிலமொன்றே நினைவாகி விழிமூடிய மாவீரர்கள் - தேசக்காற்று) SLN sinks LTTE vessel in international waters) கேபியிடம் மீட்ட விடுதலைப் புலிகளின் கப்பல் கடலில் மூழ்கடித்து அழிப்பு! | Muthalvan News) Commentary #77 Canada spent $600,000 on MV Sun Sea before deciding to scrap ::. Latest Sri Lanka News MV Sun Sea (Canada) எம். வி. மற்சுசிமாவைத் தாக்கிய போது தமது இன்னுயிர்களை ஈகம் செய்த அனைத்து மாவீரர்களையும் இந்நாளில் நினைவு கூருகின்றோம். படிமப்புரவு தமிழர் நாம் -அதிகாரப்பூர்வ இணையதளம் Log In or Sign Up (Log In or Sign Up) களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்) தேசக்காற்று (தேசக்காற்று) WordPress.com: Create a Free Website or Blog (ஆனி மாவீரர்கள் – Eelamaravar) ஈழநாதம் 2003 - 3 -20 தட்ஸ்தமிழ் - Oneindia Tamil) Live Radio and News (Live Radio and News) Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News) SRI LANKA NAVY BLOG (SRI LANKA NAVY BLOG) Sri Lanka Guardian (Sri Lanka Guardian) Latest Sri Lanka News and Forum) NewsIn.Asia - South East Asian Headlines & Breaking News) Sri Lanka Mirror The Globe and Mail: Canadian, World, Politics and Business News & Analysis irruppu - Tamil News yarl நிகழ்படம் YouTube தொகுப்பு & வெளியீடு நன்னிச் சோழன்
  13. மருதர் பலர் கேள்விப்பட்டதே சிலரால் செய்திகளாகவும் கட்டுரையாகவும் எழுதப்பட்டது பிரிவின் பின்னர் ஊரில் திரிந்த வீடி குடிகள் , கஞ்சா குடிகள் , சாராய குடிகள் எல்லாம் காசுக்கும் , போதைக்கும் , பொண்ணுக்கும் அடிமையாகிய அனைத்து கழுசறைகளும் அந்த நேரத்தில் பல குழுக்களாக பிரிந்து சென்ற குழுக்களிடம் சென்று கட்டப்பஞ்சாயத்து , கடத்தல் என்பவற்றை நடத்தியது அதற்கு ரகுநாதான் எழுதிய குழந்தை கடத்தலும் ஒன்று இரு வருக்கு ஏற்பட்ட முறுகள்குழந்தை கடத்தல் கொலை வரைக்கும் சென்றது . அதுமட்டும் அல்லாமல் செட்டிபாளையம் ஒரு எஞ்சினியர் பெண் சுட்டுக்கொல்லப்பட்டார் காரணம் கான்ரக்ட் கொடுக்கவில்லையென தற்போது அந்த குடும்பம் லண்டனில் . தகப்பனார் ஒரு தமிழ் தேசிய கூட்டமைப்பு விசுவாசியாவார் . அதுவும் கர்ணா குழுவென செய்திகள் வந்ததது . குழந்தை கடத்தலும் அதில் ஈடுபட்டவர்களுக்கும் பின்னாளில் என்ன நடந்தது என இங்குள்ளவர்களுக்கு தெரியும் அதை நான் சொல்ல விரும்பல அதாவது பிரிவின் பின்னர் பலர் கர்ணா பிள்ளையானின் பெயரை வைத்து விளையாடி விட்டார்கள் ஆனால் அவர்களுக்காக வக்காளத்து வாங்கவுமில்லை என்பதை சொல்லிக்கொள்கிறேன். இன்னுமொரு உதாரணம் மட்டக்களப்பில் வவுணதீவில் இரு பொலிசார் சுட்டுக்கொல்லப்பட்டனர் ஆனால் அரசும் முன்னாள் புலிகளை சொல்லி வடகிழக்கில் தேடியது அனால் சுட்டது ஏப்றல் 21 தாக்குதலில் ஈடுபட்ட சகறானின் சகாக்கள் என்பது அவர்கள் நடத்த தாக்குதலின் பின்னரே உலகத்துக்கு தெரியவந்தது . இது போன்ற சம்பவங்கள் இருக்கிறது சொல்லமுடியாதும் உள்ளது யாரும் ஊக்கிக்க முடியாத சக்திகளும் சல்லடை போட்டு தூர்வாரியது இரவு வேளைகளில்
  14. வெளியில் தெரியாத வேர் கேணல் மனோ மாஸ்டர் அவர்களின் வீரவணக்க நாள் April 29, 2021 கதிரவேல் சந்திரகாந்தன்-திருகோணமலை- கேணல் மனோமாஸ்டர் 1983 இல் தமிழீழ விடுதலைப் போரில் தன்னை இணைத்துக் கொண்டவர்.இந்திய மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சிபெற்ற அவர் அங்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறைச் செயலகத்தில் பணியாற்றினார்.இந்திய படையினரின் ஆக்கிரமிப்பு நாட்களில் மணலாற்றில் பயிற்றுவிப்பு செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.1989 இல் மட்டக்களப்பு அம்பாறை பிராந்தியங்களில் படைத்துறை பயிற்சி நடவடிக்கைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.போராளிகளை சிறந்த போரிடும் ஆற்றல் கொண்ட வீரர்களாக வளர்த்தெடுப்பதில் மட்டுமன்றி அவர்களை அறிவியல் ரீதியிலும் வளர்க்க வேண்டும் என்பதில் அவர் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டார்.போராளிகள் ஒழுக்கமும் கட்டுப்பாடும் மிக்கவர்களாக உருவாக்க வேண்டும் என்பதில் மிகுந்த இறுக்கமான கொள்கையுடையாவராக இருந்தார்.மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் பெறப்பட்ட பல்வேறு போரியல் வெற்றிகளுக்கு மட்டுமன்றி தமிழீழப் பரப்பெங்கும் களமாடிய ஜெயந்தன் படையணியின் வெற்றிகளுக்குப் பின்னாலும் இந்த மனிதரின் உழைப்பு உயர்ந்து நிற்கிறது.ஜெயசிக்குறு படைநடவடிக்கை காலத்தில் அவர் வன்னியில் நின்றபோது ஜெயந்தன்,அன்பரசி படையணிகள் மேம்பாட்டு நடவடிக்கைகளில் மட்டுமன்றி பல்வேறு படையணிகள்,பிரிவுகளுக்கும் தனது தனது படைத்துறை பங்களிப்பை வழங்கினார்.முன்னாள் உயர்தரக் கணித ஆசிரியரான இவர் பௌதீகம்,வேதியல் பாடங்களிலும் சிறந்த அறிவைக்கொண்டிருந்தார். இதனால்தான் அவரால் போராளிகளை அரச மருத்துவர்களாகக் கூட ஆக்கிக்காட்ட முடிந்தது. தமிழ் அடிச்சுவடி அறியாத பல போராளிகளை இந்த மனிதரால் ஆங்கிலம் கூட பேசவைக்க முடிந்தது.மட்டக்களப்பு மாவட்டத்தில் அவர் பணியாற்றிய நாட்களில் கல்வியில் மிகவும் பின்தங்கியிருந்த கிராமப்புறங்களில் மாணவர்களின் கல்வி வளர்ச்சி நடவடிக்கைகளில் மிகுந்த அக்கறை கொண்டு செயற்பட்டார். அவரது பணிகளில் சில இன்றுவரை நீட்சி பெறுவது அந்த மனிதரின் அன்றைய உழைப்பின் வெளிப்பாடு.தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கால் நூற்றாண்டுக்கு மேலாக கடினமாக உழைத்து 29.04.2009 அன்று முள்ளிவாய்க்காலில் வீரச்சாவடைந்த மிக எளிமையான இந்த மனிதன் பற்றிய விரிவான பதிவொன்றை வலராற்றில் பதிக்கவேண்டியது இந்த போராட்டத்தில் அவருடன் பயணித்த அனைவரினதும் கடமையாகும். குறிப்பு – கேணல் மனோகரனுடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் சாந்தன், விழுப்புண் அடைந்திருந்தது பின்னர் வீரச்சாவடைந்த கேணல். கீர்த்தி ஆகியோரையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவில் நிறுத்தி அவர்களுக்கும் எமது வீரவணக்கத்தைச் செலுத்துவோம். https://www.meenagam.com/வெளியில்-தெரியாத-வேர்-கே/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.