நல்ல தகவல் மற்றும் காத்திரமான குறிகாட்டல் (sign-posting) சுமா.
இதில் எனது அறிவுக்கு எட்டியதை சொல்கிறேன்.
இந்த நாடுகளில் எம்பிகள் இதர அமைபுக்களோடு தொடர்பில் உள்ளவர்கள் அந்த நாட்டின் இலங்கைக்கான foreign aid எங்கே செலவழிக்கபடுகிறது என்பதை தீர்மானிக்கும், இல்லை, பிரேரிக்கும் நிலையில் கூட இல்லை என்பதும் உண்மையல்லவா?
உதாராணமாக யூகேயின் குறித்த ஒரு ஆண்டுக்கான உதவி இலங்கையில் எங்கே எப்படி செலவழிக்க படப்போகிறது என்பதை இலங்கையும், யூகேயுமே தீர்மானிக்க வல்லன.
நமக்கு அளுத்தம் கொடுக்கும் வலு இருந்தால் (இருந்தால்) ஒரு குறித்த தொகையை வடகிழக்கிற்கு அனுப்ப வேண்டும் என ஓரளவுக்கு அளுத்தலாம்.
ஆனாலும் சனத்தொகை பரம்பல் காராணமாக பெருந்தொகை வட கிழக்கிற்கு வெளியேதான் செல்லும்.
இன்னொரு பிரதிகூலம் - இந்த நாட்டின் பிரஜைகளாக நாம் நேரடியாக இந்த நாட்டு அரசுகள் வழியே முதலிட முடியாது.
உதாராணமாக ஒரு தமிழ் அமைப்பிடம் 100 மில்லியன் டாலர் இருந்தால் - அதை இந்த அரசுகளிடம் கொடுத்து - தனியே வட கிழக்கு திட்டங்களுக்கு மட்டும் பயன்படுத்துங்கள் என்று சொல்லவும் முடியாது. அவர்கள் செய்யமாட்டார்கள், இலங்கை செய்யவும் விடாது.
மேலும் ஒரு பிரதிகூலம் அரசுகள் செய்வது aid என்ற அளவில் மட்டுப்பட்டு விடுகிறது. நாம் செய்ய விழைவது nation building அதை இவர்களும் விரும்பபோவதில்லை, அவர்களும் விடப்போவதில்லை.
ஆனால் நீங்கள் சொன்ன வழிமுறையில் முயற்சிக்கலாம் - குறைந்த பட்சம் இந்த நாடுகளின் aid இல் கணிசமான அளவு எமது பகுதியில், வினைத்திறனாக செலவாகிறது என்பதையாவது உறுதிப்படுத்தலாம்.