கிழக்கு மாகாணத்தினை பயங்கரவாதிகளின் கைகளிலிருந்து விடுவித்துள்ள படையினருக்கும் அவர்களுக்கு ஆதரவாக நிற்கும் கருணாவுக்கும் இன்றிருக்கும் மிகப்பெரிய கடமை என்னவென்றால், வடக்கிலும் தமது ராணுவ முயற்சியற்சியினைத் தொடர்ந்து முன்னெடுத்து பிரபாகரனின் பயங்கரவாதிகளின் பிடியில் அகப்பட்டிருக்கும் அம்மக்களை விடுவித்து, பிரபாகரனினதும் அவரது பயங்கரவாதிகளினதும் பாசிஸ கொடுக்குகளை முற்றாக அறுத்தெறிந்து அழிப்பதுதான்.
இந்த நடவடிக்கையானது புலிகளின் வெறியாட்டத்தை அதிகாரபூர்வமாக முடிவிற்குக் கொண்டுவருவதுடன், வடக்கிலும் கிழக்கிலும் வாழும் அப்பாவி மக்களுடன் நிர்வாக அதிகாரங்களை நாம் பகிர்வதன் மூலம், அவர்களையும் எமது அரசுத் தலைவரின் ஆட்சியின் கீழ் கொண்டுவந்து அவர்களின் வாழ்வினை வழமைக்குத் திருப்ப வழிசமைக்கும் என்பது திண்ணம்..
ஆகவே, இந்த நடவடிக்கைகளினை எடுக்கும்பொழுது, அரசும் ராணுவமும் செய்யவேண்டியது யாதெனில், பிரபாகரனையும் அவரது பாசிஸப் பயங்கரவாதிகளையும் முற்றாகவும், இனியொருபோதும் தலையெடுக்காவண்ணமும் அழிப்பதென்பது அம்மக்களின் எதிர்காலத்திற்கும் மொத்தநாட்டினதும் அமைதிக்கும் மிக மிக முக்கியமானது என்பதை உணர்த்துவதோடு, பயங்கரவாதிகளினை இறுதியாக அழிக்கும்போது அவர்களால் நாட்டிற்கு எதுவித கேடும் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்வதும் ஆகும்.
பிரபாகரனின் பயங்கரவாதப் பிடிக்குள் அகப்பட்டு, செய்வதறியாது திகைத்து நிற்கும் இம்மக்களை தமது பக்கம் நோக்கி அழைத்துவருவது நாட்டின் தலைவர்களின் கடமையாகும்.
1975 ஆம் ஆண்டிலிருந்து புலிப் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளினால் இன்றுவரை பாதிக்கப்பட்டுவரும் தமிழ் மக்களைக் காக்க நடவடிக்கைகளை எடுத்துவரும் எமது ராணுவத்தினர் செய்யவேண்டியது யாதெனில் தொடர்ந்தும் தமது ராணுவச் செயற்பாடுகளை பயங்கரவாதிகள் மீது நடாத்தி சட்டத்திற்கு முரணான இப்பயங்கரவாதிகளை முற்றாக சீர்குலைத்து , இறுதியில் அழித்து, கடந்த 32 வருட சித்திரவதையான காலத்தினை முடிவிற்குக் கொண்டுவந்து இலங்கை நாட்டின் இறையாண்மையினை நிலைநாட்டுவதாகும்.
பிரபாகரனின் ஈழக் கனவினாலும், ராணுவ வெற்றிகளினாலும் மதியிழந்துபோயிருந்த தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் தற்போது தாம் இதுவரை கண்டுவந்தது ஒரு மாயை என்பதை உணரத் தலைப்பட்டுள்ளதுடன், யதார்த்தத்திற்கும் தாம் நினைத்திருந்ததற்கும் இடையே பரிய இடைவெளி இருப்பதையும் உணர்ந்துகொண்டுள்ளனர். இன்று உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் பல தமிழர்கள் இலங்கை நாட்டுடன் அமைதியாகவும் சமாதானமாகவும் வாழ விரும்புவதுபோல, இந்த மூளைச்சலவை செய்யப்பட்ட தமிழர்களும் வாழ விரும்புவதுடன், இலங்கை எனும் நாட்டினைப் பயங்கரவாதிகளால் ஒருநாளுமே வெற்றிகொள்ளமுடியாதென்பதையும், பயங்கரவாத நடவடிக்கைகளால் அந்நாட்டினை அசைக்கமுடியாதென்பதையும் முற்றாக விளங்கி ஏற்றுக்கொண்டு வருகின்றனர்.
தாம் இதுவரை கட்டிவளர்த்த ஈழக்கனவு முற்றாக சிதைக்கப்பட்டுவருவதையும், இலங்கை நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் மேம்பட்டுவருவது அவர்களது ஈழக் கனவிற்கு ஆப்பாக இறங்கியிருப்பதையும் வெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் புலிப்பயங்கரவாதிகள் திகைத்துப் போய் நிற்கின்றனர். இன்று அவர்களுக்கு இருப்பதெல்லாம், அழியும் தறுவாயில் இலங்கை நாட்டிற்கு தம்மால் செய்யக்கூடிய நாசகார அழிவுகளை செய்வது மட்டும்தான்.
ஆகவே, பயங்கரவாதிகள் தமது இறுதிக் காலத்தில் நடத்த முயற்சிக்கும் எந்தவிதமான நாசகார நடவடிக்கைகளுக்கும் தம்மைத் தயார்ப்படுத்தி, அநத நாசகார அழிவுகள் நடக்குமுன்னமே அவற்றினைத் தடுத்து நாட்டுமக்களை காக்கவேண்டியது ராணுவத்தினதும், புலநாய்வுத்துறையினரினதும் மிக முக்கிய கடமையாகும். இப்பயங்கரவாதிகளை இந்த நாட்டின் சகல திசைகளிலிருந்து முற்றாக அழித்து இந்நாட்டினை இப்பயங்கரவாதத் தொற்றிலிருந்து முற்றாக சுத்தப்படுத்துவது அவர்களின் கடமையாகும்.
இன்று இலங்கையிலும் வெளிநாட்டிலும் வாழும் அனைத்துத் தமிழர்களும் தாம் கடந்த 32 வருடகாலத்தில் அனுபவித்த சகல கொடுமைகளுக்கும், அழிவுகளுக்கும், கொலைகளுக்கும் ஒரே காரணம் பிரபாகரனும் அவனது பயங்கரவாதிகளும்தான் என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றனர்.
கருணா அம்மான் எனும் தெளிந்த சிந்தனையுள்க தமிழர்களின் தலைவர் கூறிய "வடக்கிலுள்ள, குறிப்பாக யாழ்ப்பாணத்திலுள்ள தமிழர்கள் எப்போதோ தமது அழிவுகளுக்கும், கொலைகளுக்கும் பிரபாகரனின் பயங்கரவாதிகளே காரணம் என்பதை உணர்ந்துகொண்டுவிட்டார்கள்" எனும் கூற்றினை இங்கு அனைவரும் நினைவில் வைத்திருத்தல் சாலச் சிறந்தது.
"செய் அல்லது செத்துமடி" எனும் பயங்கவாதிகளின் மனோநிலையே தமது அனைத்து அழிவுகளுக்கும் காரணம் என்பதை தமிழர்கள் உணரத் தொடங்கிவிட்டனர். ஆகவே தமது விடுதலைக்கான திறவுகோல் அரசத் தலைமையிடமும், ராணுவத்திடமும், கெளரவ கருணா அம்மானிடமும் மட்டுமே இருப்பதை அவர்கள் உண்மையாக நம்புகின்றனர்.
முற்றும்
http://lankaweb.com/news/editorial/020207-1.html