Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. valavan

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    1570
    Posts
  2. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    7
    Points
    15791
    Posts
  3. Nathamuni

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    13720
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/22/21 in all areas

  1. உதைபந்தாட்டத்தில் அழகிய மிக அழகிய விசிறிகள்.....! 👌
  2. போராட்டம் உணர்சி வசப்பட்டதால், படுத்தியதால் ஏற்பட்டது என்பதை நான் முற்றாக மறுக்கிறேன். 1. உணர்சிவசப்படுதல் வேறு, உணர்வு உந்தல் வேறு. உணர்வில்லாதவன் ஏன் போராடப்போகிறான்? ஆகவே எல்லா போராட்டமும் உணர்வின் அடிப்படையிலேயே எழுகிறது. 2. தொடர்சியான திட்டமிட்ட கலவரங்கள். இவற்றை கலவரங்கள் என்பதே பிழை. இரு குழுக்கள் அடிபட்டால்தான் கலவரம். ஒரு குழு இன்னொரு குழுவை அரச ஆதரவோடு தாக்குவது - வேட்டை. தொடர்ந்து ஆண்டுவிழா போல தமிழர்கள் வேட்டையாடப்படார்கள். 3. திட்டமிட்ட குடியேற்றங்கள். தமிழர் நிலங்கள் கல்லோயா, மகாவலி என்று அபகரிக்கப்பட்டது. 4. மொழி வாரி அடக்குமுறை. சிங்களம் மட்டுமே தமிழர் பகுதிகளிலும் ஆட்சி மொழி என்பதன் மூலம், தமிழ் மட்டும் அல்லது தமிழும் ஆங்கிலமும் மட்டும் தெரிந்த பல்வேறு சமூக நிலைகளில் இருந்த தமிழரை ஒரிரவில் “எழுத்தறிவில்லாதவர்கள்” ஆக்கியது. 5. தமிழர் தாயகம் தவிர ஏனைய பகுதிகளில் தொழில் கூட செய்ய முடியாது என்ற நிலையை உருவாக்கியது. 6. ஆங்கிலேயர்கள் விட்டு சென்ற சோல்பெரி யாப்பு தந்த சிறுபான்மை உரிமைகள் பாதுகாப்பு சரத்தை 1ம் குடியரசு யாப்பு அகற்றியது. 7. சத்தியாகிரகங்கள் வன்முறை மூலம் கேலிக்கூத்தாக்கப்பட்டது. ஒப்பந்தங்கள் மீள, மீள கிழிக்கப்பட்டது. இப்படி தமிழர்கள் இரண்டாம் தர பிரஜைகளாக, கெளரவம் குறைவதாக, அழித்தொழிக்க படப்போகிறோம் என்று அச்ச உணர்வு வருவதாகவே வட்டு கோட்டை தீர்மானத்துக்கு முந்திய காலம் இருந்தது. தரப்படுத்தல் ஒன்றை தவிர போராட்டம் ஆரம்பிக்க கால்கோலிய அத்தனை காரணங்களிலும் தமிழர் பக்கம் 100% நியாயம் இருந்தது. Survival instinct என்பார்கள். திருப்பி அடி, அல்லது அழிக்கப்படுவாய் என்ற உணர்வே அப்போ இருந்தது. அழியப்போகிறோம் என்ற நிலையில், அகிம்சை வழியில் ஏதும் செய்யமுடியாது என்ற நிலை வந்த பின்பே போது போராட்டம் எழுந்தது. மேலே சொன்னது போல கூட்டணி உணர்சிவசப்படுத்தியது உண்மை. ஆனால் இயக்க தலைவர்கள் எவரும் இந்த உணர்சி வசத்தால் போராட வரவில்லை. நான் அறிந்தவரை தலைவரோ, ஏனைய இயக்க தலைவர்களோ உணர்சி வசப்படும் பேர்வழிகள் அல்ல. தவிரவும் வெகு விரைவிலேயே எல்லா இயக்க தலைமகளும் கூட்டணி உசுப்பேத்துவதை தவிர எதையும் செய்யாது என்பதை கண்டு, கூட்டணியின் உண்ணாவிரதத்தை கலைப்பது போன்ற செயல்களில் ஈடுபட தொடங்கியும் விட்டார்கள். மாணவர் பேரவை, தலைவர், தியாகி சிவகுமாரன் போன்றோர் தனியாக அல்லது சிறு குழுவுடன், புரட்சிகர சிந்தனையாளர்கள் இன்னொரு புறம் - தீர்க்கமான பார்வையோடுதான் போராட்டத்தை தொடங்கினார்கள். உசுப்பேத்தல், உணர்சி வசப்படுத்தல் நிச்சயம் இருந்தது. ஆனால் போராட்டம் உருவாக பெரிதும் காரணமானது, அநியாயம் நடக்கிறது, போராடாவிட்டால் அழிந்து போவோம் என்ற பய/எச்சரிக்கை உணர்வுதான். இந்திரா காந்தி இலங்கையில் நடப்பது nothing less than genocide என்று பேசியுள்ளார். இந்தியா படைகளை அனுப்பியது. இணை அனுசரனை நாடுகள் என ஜி7 இல் உள்ள பெரும்பாலான நாடுகள் கவனம் செலுத்தின. கொழும்பு வருபவர்கள் வன்னிக்கு போய் கை நனைக்காமல் திரும்பாத காலம் ஒன்று இருந்தது. நோர்வே மத்தியஸ்தம் செய்தது. தேவையான அளவு சர்வதேச கவனத்தை போராட்டம் ஈர்த்தது அதற்கு ஒரு காரணம் அதன் பின்னால் இருந்த நியாயம். ஓம் எல்லாருக்கும் எந்த நேரமும் அடங்க மறுக்க கூடாது என்பதை நான் ஒரு பாடமாக கருதுகிறேன்.
  3. ஆரம்பகாலத்தில் இயக்கங்களை தடை செய்ததில், கையாண்ட முறையில் புலிகள் தவறு செய்தார்கள் என்பது உண்மையே. ஆனால் அந்த பிழைகளில் இருந்து அவர்கள் பாடம் படித்தார்கள் என்றும் படுகிறது. அவர்கள் கூட்டமைப்பு என்ற ஒற்றை புள்ளியில் பல முன்னாள் எதிரிகளை உள்வாங்கியது - அவர்கள் பாடம் படித்தார்கள் என்பதை காட்டுவதாகவே நான் கருதுகிறேன். தமிழர்கள் ஓரளவுக்கேனும் ஒரு கூட்டு பிரக்ஞையுடன் செயல்பட்ட காலம் என்றால் கூட்டமைப்பு புலிகளின் வழிகாட்டலுக்கு போனதில் இருந்து 2009 வரைதான். ஆனால் ஒரு கை மட்டும் தட்டி ஓசை எழாது. கடைசி வரை அவர்களால் புளொட்டையோ, ஈபிடிபியையோ, தமவிபுவையோ ஓரணியில் முடியாவிட்டாலும், ஒத்த அரசியல் கோரிக்கையின் கீழாவது கொண்டு வர இயலவில்லை. இது இயலாமல் போனதுக்கு புலிகள் ஒரு காரணம்தான். ஆனால் அதே அளவு காரணம் இந்த இயக்கங்களின் தலைமைகள் மீதும் உண்டு. இவர்களுக்கு தமிழ் இனத்துக்கு ஒரு தீர்வு வர வேண்டும் என்பதை விட, புலிகள் அழிந்தொழிய வேண்டும் என்பதே முக்கியமாக இருந்தது. இதில் கற்க கூடிய பாடங்கள் என்ன? புலிகள் காலத்தில் தமிழர் பொதுக் கூட்டு 75% தான் சாத்தியமானது. மிகுதி 25% சாத்தியம் ஆகாமல் ஏன் போனது? முஸ்லீம் அரசியல்வாதிகள், சிங்கள அரசியல்வாதிகள் எந்த கட்சியாயினும் இனம் சம்பந்த பட்டு ஓரணியில் திரள்வது போல் நம்மால் ஏன் திரள முடியவில்லை? தனியே சுயநலம் மட்டும் இதன் காரணம் இல்லை. எல்லா இனத்திலும் அரசியல்வாதிகள் சுய நலமிகள்தான். இந்த கேள்விகளுக்கு விடை காணும் போது 100% க்கு அண்மித்த ஒரு தமிழ் பொது கூட்டை கொள்கை அளவில் ஸ்தாபிக்க கூடியதாக வரக்கூடும்.
  4. கொம்பு இல்லாத சிங்கம்.......! 👌
  5. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! This document is solely made for an educational purpose only எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழர்களால் சமர்க்களங்களில் அணியப்பட்ட பல்வேறு விதமான தொப்பிகளைப்(Cap) பற்றியே. இவை ஒவ்வொரு படையணிக்கும் வெவ்வேறு வடிவில் வெவ்வேறு தோற்றத்தோடு இருந்தன. மேலும் இவர்களின் சுற்றுக்காவல் தொப்பிகளானவை உலகின் பிற நாடுகளின் சுற்றுக்காவல் தொப்பிகளிடம் இருந்து முற்றிலுமாக வேறுபட்டிருந்தன. ஆனால், எல்லாவற்றையும் இங்கே சொல்வது நல்லதல்ல.... எனவே, ஈழத்தமிழர்களால் அணியப்பட்ட தொப்பிகளின் வகைகளைப் பற்றி மட்டும் சொல்லிவிட்டு கட்டுரைக்குள் தாவுகிறேன். புலிகளின் தொப்பிகளின் வகைகள்:- சாக்குத் தொப்பி - Gunny cap ஒரு பக்கத் தொப்பி - One side cap குணகு மகுடக்கவி- Slouch hat வரைகவி - Barret செண்டாட்டத் தொப்பி - Baseball cap சுற்றுக்காவல் தொப்பி - Patrol cap செவிமறை தொப்பி - earflap cap மகுடக்கவி- hat இவ்வகைத் தொப்பிகள் யாவும் மகுடம் போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளதால் மகுடம் என்னும் சொல்லையும், தொப்பி என்பதன் ஒத்தசொல்லான கவி என்பதையும் இணைத்து மகுடக்கவி என்னும் சொல்லை வழங்கலாயினேன் மகுடக்கவி என்னுஞ்சொல்லானது சேர்த்தே தமிழில் வழங்கப்படல் வேண்டும் கௌபோய் மகுடக்கவி- Cowboy hat வாளி மகுடக்கவி- Bucket hat நெகிழ்வான மகுடக்கவி- Floppy Hat செவிமறை நெகிழ்வான மகுடக்கவி- earflap floppy hat சூரியக் காப்பு மகுடக்கவி- Sun protection hat சூரியக் காப்பு தொப்பி - Sun protection cap கடற்கலவர் சதுரத் தொப்பி - Sailors square rig உச்சிமுடி தொப்பி - Paked cap இனி, கட்டுரைக்குள் சென்று ஒவ்வொன்றாக விரிவாகக் காண்போம்! சாக்குக் தொப்பி- Gunny cap:- இவை பற்றி நான் ஏற்கனவே இங்கு எழுதியுள்ளேன். எனவே இக்கொழுவியைச்(link) சொடுக்கி சாக்குத் தொப்பி பற்றி வாசிக்கவும்: 2. & 3. ஒரு பக்கத் தொப்பி - One side cap & குணகு மகுடக்கவி- Slouch hat இவை கவற்றுறையினரால் அணியப்பட்டவை ஆகும். இவை பற்றி நான் ஏற்கனவே இங்கு எழுதியுள்ளேன். எனவே இக்கொழுவியைச் சொடுக்கி இவற்றை பற்றி வாசிக்கவும்: 4. வரைகவி - Barret இவை, விடுதலைப் புலிகளின் தரைப்புலிகளால் 90களின் தொடக்க காலத்திலும், கடற்புலிகளால் 90- 96 வரையிலும் (96 - 2000 வரை என்ன வகையான தொப்பி அணிந்தார்கள் என்பது அறியில்லை), கரும்புலிகளின் அனைத்து உட்பிரிவுகள், எல்லைப்படை மற்றும் சிறப்பு எல்லைப்படை ஆகியவற்றால் 2000 ஆம் ஆண்டு வரையிலும், கிழக்கில் தரிபெற்றிருந்த படையணிகளால் 2004 ஆம் ஆண்டு வரையிலும், சிறுத்தை அதிரடிப்படையின் அனைத்து உட்பிரிவுகளால் 2009 மே மாதம் வரையிலும் அணியப்பட்டிருந்தன. அவற்றின் நிறங்களாவன:- தொடக்க காலத்தில் - கறுப்பு & சிவப்பு வரைகவி கீழ்கண்ட படத்தில் இருப்பவர்கள் புலிகளின் (1984–1987) உறுப்பினர்கள் ஆவர். இவர்களில் சிவப்பு வரைகவி அணிந்திருப்பவர் கட்டளையாளர் ஆவர். கறுப்பு வரைகவி அணிந்திருப்பவர் உயரதிகாரி(high) ஆவர். இதே போல, ஒரு சிவப்பு நிற வரைகவியினையே புலிகளின் தலைவர்(leader) அக்காலத்தில் அணிந்திருந்தார் . இவர்களின் வரைகவியில் புலிச்சின்னம் குத்தப்பட்டிருந்தது . 'இவர்கள் கையில் ஏந்தியிருப்பது வகை-56 விதம்-2 (T-56 type-2) ஐச் சேர்ந்த துமுக்கிகளாகும்(Rifles). அவற்றுள் சிவப்பு வரைகவி அணிந்தவர் ஏந்தியிருக்கும் துமுக்கியானது மாற்றியமைக்கப்பட்டது(modified) ஆகும். ' 'இப்படம் 1983ற்கு முன்னர் எடுக்கப்பட்டது ஆகும்.' தரைப்புலிகள் - கறுப்பு நிறம் இவை புலி உறுப்பினர்களால் 1990-1995 வரை யாழ்ப்பாணத்தில் புலிகளால் அணியப்பட்டவை ஆகும். இவர்களின் வரைகவியில் புலிச்சின்னம் குத்தப்பட்டிருந்தது. '1994 யாழில் காவலிற்கு நிற்கும் புலிவீரர்' தரைப்புலிகள் இவை புலி உறுப்பினர்களால் 1995-1996 வரை யாழ்ப்பாணத்தில் புலிகளால் அணியப்பட்டவை ஆகும். இவர்களின் வரைகவியில் புலிச்சின்னம் குத்தப்பட்டிருந்தது. அதன் தோரணி சீருடை நிறத்திலான வரிப்புலிக் கோடுகளாக இருந்தது. மக்கள்படை: எல்லைப்படை - இளம்பச்சை நிறம் இப்படையின் ஆண்களும் பெண்களும் தொடக்க காலத்தில்(1999) கறுப்பு நிற வரைகவியினை அணிந்திருந்தனர். 'தொடக்ககாலத்தில் கறுப்பு நிற வரைகவி அணிந்து அணிநடை போடும் எல்லைப்படை வீரிகள் | இவர்களின் வரைகவியில் படை வில்லை குத்தப்பட்டிருக்கிறதைக் காண்க' அடுத்த ஆண்டிலும் - 2000 ஆம் ஆண்டளவில் - கறுப்பு நிற வரைகவியினையே அணிந்திருந்தந்தாலும் அவர்களின் சீருடை பச்சை நிறத்திற்கு மாறிவிட்டது. அதேநேரம், இதே 1999-2000 காலகட்டத்தில், இவர்களின் கட்டளையாளர்கள் சிவப்பு நிற வரைகவியினை அணிந்திருந்தனர். 'இடது பக்கத்தில் பச்சை வரிப்புலியில் சிவப்பு நிற வரைகவி அணிந்து வருபவரே இவர்களிற்கான கட்டளையாளர் ஆவார்' இவர்கள் 2005 க்குப் பின் செண்டாட்டத் தொப்பி(baseball cap)யினை அணிந்திருந்தாலும் ஒருசிலர் வரைகவியினையும் அணிந்திருந்ததாக கீழ்க்கண்ட படம் மூலம் என்னால் அறிய முடிகிறது. '2008 ஆம் ஆண்டு வவுனியாவில் சிங்களப் படைத்தாவளம்(military camp) ஒன்றினை அழித்தபின் ஆய்த சேகரிப்பில் ஈடுபட்டுள்ள புலிகள் | பச்சை வரைகவி அணிந்திருப்பவர் எல்லைப்படை வீரர் ஆவார். இவரின் வரைகவியில் படையணி வில்லை குத்தப்பட்டிருக்கிறதைக் காண்க' கிட்டு பீரங்கிப் படையணியின் மோட்டார் பிரிவு 1997 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தொடங்கப்பட்ட இப்பிரிவானது அதனது தொடக்க காலத்தில் கிட்டு பீரங்கிப் படையணியின் ஒரு உறுப்பாகவே செயல்பட்டது. 2000 வரை அப்படித்தான் இருந்துள்ளதாக புலிகளின் செய்தித்தாள்களில் வெளி வந்த செய்திகளின் அடிபப்டையில் அறிய முடிகிறது. இவர்கள் கறுப்புநிற வரைகவியினை 1999இன் இறுதிப்பகுதிவரை அணிந்திருந்தனர். சிறப்பு கண்ணிவெடிப்பிரிவு - தொடக்க காலத்தில் - கருநீல நிறம் 'படைத்தகையில்(parade) ஈடுபட்டுள்ள சிறப்பு ப்படையினர் | இவர்களின் வரைகவியில் படையணி வில்லை குத்தப்பட்டிருக்கிறதைக் காண்க' கடற்புலி கடற்கலவர் (1992/1993-2002)- இளநீல நிறம் ஆண்களும் பெண்களும் இளநீல நிற வரைகவியினை அணிந்திருந்தனர். கரும்புலிகள் - கறுப்பு நிறம் கரும்புலிகளும் 1990இல் இருந்து 2001 ஆம் ஆண்டுவரை வரைகவியினையே அணிந்திருந்தனர். கிழக்கில் தரிபெற்றிருந்த படையணிகள்:- இவர்கள் அணிந்திருந்த வரைகவிகளின்(?- 2004 ஐந்தாம் மாதம் வரை) நிறங்கள் மிகவும் குழப்புகிறது. இருந்தாலும் நானறிந்தவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். தவறென்றால் திருத்த உதவவும். அன்பரசி படையணி (high) - Maroon நிறம் மகனார் படையணியினர்: கடுஞ்சிவப்பு பிற படையணிகள் - கடும்பச்சை & சேர்ப்பன் நீல நிறம் (Admiral blue) - இரு நிறத்திற்குமிடையிலான தரநிலை வேறு பாடு தெரியவில்லை! 'இவர்களின் வரைகவியில் படையணி வில்லை குத்தப்பட்டிருக்கிறதைக் காண்க' 'இவர்களின் வரைகவியில் படையணி வில்லை குத்தப்பட்டிருக்கிறதைக் காண்க' ''சிங்களத் தரைப்படையின் சீருடையினை ஒத்த தோரணியிலான சீருடை அணிந்தோர் கடுஞ்சிவப்பு நிற வரைகவியினை அணிந்திருப்பதை நோக்குக. இவர்களின் வரைகவியில் படையணி வில்லை குத்தப்பட்டிருக்கிறதைக் காண்க'' சிறுத்தை அதிரடிப்படை - Azure நிறம் 'சிறுத்தைப்படை | இவர்களின் வரைகவியில் படையணி வில்லை குத்தப்பட்டிருக்கிறதைக் காண்க' 5. செண்டாட்டத் தொப்பி - Baseball cap இவை தரைப் படையணி ஒன்றாலும் கடற்புலிகளின் துணைப்படையான 'ஒஸ்கார் சிறப்புத் துணைப்படை அணி''யினராலும் அணியப்பட்டவை ஆகும். 'எல்லைப்படையினர்(2006–2009 இறுதிவரை) | இதில் எந்தவொரு வில்லையும் பொறிக்கப்படவில்லை.' 'லெப் கேணல் மங்களேஸ்' அவர்கள் தமிழீழத் தேசியக் கொடியினை ஏற்றிவைக்க அதற்கு ஒஸ்கார் சிறப்புத் துணைப்படை அணியினர் கொடிவணக்கம் செலுத்துகின்றனர் | இவர்களின் வரைகவியில் படையணி இலச்சினை பொறிக்கப்பட்டிருப்பதைக் காண்க' ஒஸ்கார் சிறப்புத் துணைப்படை அணியின் செண்டாட்டத் தொப்பி பற்றி நான் இங்கு விரித்திருக்கிறேன்:- (இதில் கடைசி பத்தியைக் காணவும்) 6. சுற்றுக்காவல் தொப்பி- Patrol cap புலிகளின் சுற்றுக்காவல் தொப்பியானது, உலக நாடுகளின் சுற்றுக்காவல் தொப்பியில் இருந்து வேறுபட்டு, ஓர் வேறான வடிவினை கொண்டிருந்தது. அந்த வடிவமானது புலிகளிற்கே உரித்தானது ஆகும். இதைப் போன்றதொரு வடிவினை உடைய தொப்பியானது உலகில் இன்றுவரை ( 02.03.2021) எங்குமே பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும். புலிகளின் சுற்றுக்காவல் தொப்பிகளின் காலத்தை இரண்டாகப் பிரிக்கலாம். அதாவது 1979–2001 வரை காலம் ஒன்று எனவும், 2001 இல் இருந்து 2009 வரை காலம் இரண்டு எனவும் பிரிக்கலாம். இவற்றிற்கு முந்தைய கால தொப்பியானது மிகவும் வேறான சாதாரணமில்லா வடிவத்தில் இருந்தது. பார்ப்பதற்கு வரைகவிக்கு சுண்டு வைத்தது போல இருந்தது. இதில் எந்தவொரு வில்லையும் பொறிக்கப்படவில்லை. 1979–2000 சுற்றுகாவல் தொப்பியில் 2 வகை இருந்தது. 1) சுண்டு(bill) கட்டையான சுற்றுக்காவல் தொப்பி:- 79-இல் இருந்து 2001 வரையிலான காலப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட இத் தொப்பியானது அனைத்து மட்ட புலிவீரர்களாலும் பயன்படுத்தப்பட்ட ஒன்றாகும். இது உலகில் அனைத்து படைத்துறைகளாலும் பயன்படுத்தப்படும் பொதுவான சுற்றுக்காவல் தொப்பியின் வடிவமைப்பைக் கொண்டதொன்றாகும். இதில் வரிப்புலியில் இல்லை. மாறாக சாம்பல் நிறமே இருந்தது. இதில் எந்தவொரு வில்லையும் பொறிக்கப்படவில்லை. 'பட விளக்கம்: 1985 இந்திய பயிற்சித் தாவளத்தில் போது Guard of honour நடக்கிறது | இங்கு புலிவீரர்கள் அணிந்திருக்கும் தொப்பியினை நோக்குக.' '2000 ஆம் ஆண்டு இத்தாவில் பெட்டியினுள் கேணல் நகுலன் அவர்கள் கட்டளை வழங்கிக் கொண்டிருக்கிறார் | இவரது தலையில் நான் சொன்ன தொப்பி இருப்பதை நோக்குக ' இதே காலப் பகுதியில், 1993 இல் 'தவளைப் பாச்சல்' நடவடிக்கையின்போது பலாலியினுள் புகுந்த கரும்புலிகள் அணிந்திருந்த சுற்றுக்காவல் தொப்பியானது சற்று வேறுபாடுள்ளதாக காணப்பட்டது. இது பிற்காலத்திய தமிழீழ காவற்றுறையின் தொப்பியின் முன்மாதிரி வடிவம் போன்று தோற்றமளிக்கின்றது. அதாவது இதனது பலகத்தின் அடிப்பாகத்து துணியானது சற்று அதிகப்படுத்தப்பட்டு கீழிருந்து மேனோக்கி மடிக்கப்பட்டுள்ளது. 'பலாலி மீதான கரும்புலித் தாக்குதலிற்குச் சென்ற லெப். ஜீவரஞ்சன் தலையில் அணிந்துள்ள தொப்பியினை நோக்குக.' 2) வடிவமைப்பே வேறுபட்டதான ஒரு சுற்றுக்காவல் தொப்பி:- இதுவும் புலிகளிற்கே உரித்தானதான வடிமைப்பைக் கொண்டிருந்தது. இந்த வடிவமைப்பை ஒத்த தொப்பிகளை நான் இதுவரை எங்குமே கண்டதில்லை. இது 1994 இறுதி - 1996 வரை மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக அறிய முடிகிறது. இதே கால கட்டத்தில் கடைநிலை போராளிகளால் வரைகவி பயன்படுத்தப்பட்டது. இதன் பலகங்களில் விறைப்புத் தன்மை இல்லை. அவற்றின் உச்சந்தலை கொஞ்சம் பெரிதாகவும் வரவர ஒடுங்கியதாகவும் காணப்படுகிறது. அதேநேரம் இதன் பலகம் மிகவும் உயரமானது ஆகும். ஆனால், இதன் சொண்டானது பிற்காலத்தியது போன்று நன்கு பரந்து பட்டதாகவும் நீளமானதாகவும் உள்ளது. ஆனால் இந்த சுண்டின் முன்பகுதியானது அகண்ட கரண்டி வடிவினைக் கொண்டுள்ளது. இக்தொப்பியே 2000 ஆம் ஆண்டுகளிற்குப் பின்னர் பயன்படுத்தப்பட்ட செந்தரமான சுற்றுக்காவல் தொப்பிகளின் மூலப்படிமம்(prototype) எனலாம். இதில் எந்தவொரு வில்லையும் பொறிக்கப்படவில்லை. 'மகளீர் ஒருவர் அத்தகைய சுற்றுக்காவல் தொப்பியினை அணிந்துள்ளதை நோக்குக' 'மகளீர் படையணியினர் அத்தகைய சுற்றுக்காவல் தொப்பியினை அணிந்துள்ளதை நோக்குக' பிந்தைய கால(2001–2009) செந்தரப்படுத்தப்பட்ட சுற்றுக்காவல் தொப்பி:- வடிவம்:- இதன் பக்கவாட்டு பலகமானது ஓரளவிற்கு விறைப்பானதாக இருக்கின்றது. உச்சந்தலை பலகமானது(panal) தளர்ந்ததாக, சாதாரண துணித் தன்மை உடையதாக இருக்கிறது. இந்த பலகத்தின் இருபக்கங்களிலும் இரு கண்கள்(eyelets) உள்ளன(சாதாரண தொப்பி போன்று). இதன் சுண்டானது(bill) வளைவாக இல்லாமல் தட்டையாகவும் கட்டையாக இல்லாமல் ஓரளவு தொப்பிக்கேற்ற நீளத்துடனும் முன்பக்கத்தில் நன்கு பரந்தும் காணப்படுகிறது. இத் தொப்பியின் முன்பக்கத்தின் நடுவில்தான் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட வில்லையானது(badge) தொப்பியுடனே சேர்த்து தைக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டிற்கு, 'தரைப்புலி படையணிகளின் சீருடை உருமறைப்பு நிறமான பச்சை கபில வரியானது அவர்களிற்கான தொப்பியில் இருக்க, தமிழீழத் தேசிய துணைப்படையின் தொப்பியில், அவர்களுடைய சீருடையில் உள்ள பச்சை கபில தொடர் கட்டங்கள் போன்ற உருமறைப்பு நிறமானது இருக்கும்.' தொப்பியின் பலகத்தின் நடுவில், அந்த கண்ணுள்ள நடுப்பகுதி, சுற்றிவர ஒரு பட்டை தைக்கப்பட்டிருக்கும். இந்தப் பட்டையானது முற்றுமுழுதாக பலகத்தோடு ஒட்டியிருக்காது. மாறாக ஆங்காங்கே தையல் போடப்பட்டிருக்கும். தையல் போடப்படாத இடங்களை உருமறைப்பிற்குப் பயன்படுத்தலாம்(கீழ் வரும் 3வது படிமத்தைக் காண்க) இதன் உருமறைப்பு(camoflage) மற்றும் நிறங்களானவை, ஒவ்வொரு படையணியின் சீருடைக்கு தக்கவாறு மாறுபட்டிருந்தது. 2004 ஆம் ஆண்டிற்குப் பிறகு, தென் தமிழீழ படையணிகள் யாவும் தம் வரைகவி விடுத்து சுற்றுக்காவல் தொப்பியினை அணிந்துள்ளனர். இதனால் 4ஆம் ஈழப்போரில் விடுதலைப்புலிகளின் அனைத்துப் படையணிகளும் செந்தரமான தொப்பிகளை அணிந்திருந்தமை காணக்கூடியவாறு இருந்தது. இவர்களின் தொப்பியில் புலி இலச்சினை பொறிக்கப்பட்டிருந்தது. 'தரைப்புலி வீரன் ஒருவனின் தலையில் உள்ள சுற்றுக்காவல் தொப்பி | தலையில் அணியப்பட்டாலும் பக்கவாட்டு பலகங்கள் விறைப்பாக உள்ளதை நோக்குக' 'இயந்திரச் சுடுகலச் சூட்டணி (MG fire team) ஒன்று சுற்றுக்காவல் தொப்பியினை அணிந்துள்ளதை நோக்குக' 'இவ்வீரனின் தொப்பியில் உள்ள பட்டையை நோக்குக. அதில் ஆங்காங்கே மட்டுமே தையல்கள் போடப்பட்டிருப்பதையும் இவற்றிற்கிடையில் உருமறைப்பிற்காய் புல்லுகள் செருகப்பட்டிருப்பதையும் காண்க.' 7.செவிமறை தொப்பி- Earflap cap இது புலிகளின் தொலைத் தொடர்பாளர்கள் & முன்னிலை நோக்குநர்கள் மட்டுமே அணியப்பட்ட ஒருவகை தொப்பியாகும். இது வரிப்புலியை நிறமாகக் கொண்டிருந்தது. இதில் எந்தவொரு வில்லையும் பொறிக்கப்படவில்லை. 8. வாளி மகுடக்கவி- Bucket hat இது தனியாக எந்தவொரு படையணிக்கோ இல்லை படைக்கோ சொந்தமானதாக இருந்திருக்கவில்லை. மாறாக, இது கட்டளையாளர்களால் மட்டும் அணியப்பட்டது. இதில் எந்தவொரு வில்லையும் பொறிக்கப்படவில்லை. 'கேணல் ராஜு அவர்களின் தலையில் உள்ள வாளி மகுடக்கவியினை நோக்குக' 'கேணல் ராஜு அவர்களின் தலையில் உள்ள வாளி மகுடக்கவியினை நோக்குக' 'மேஜர் சேரலாதன் அவர்களின் தலையில் உள்ள வாளி மகுடக்கவியினை நோக்குக' 'தவிபு இயக்கத்தின் அலுவல்சாரில்லா முதலாவது சீருடையில் வாளி மகுடக்கவி அணிந்து G-3ஐ ஏந்தி நிற்கும் முதலாவது தாக்குதல் கட்டளையாளர் லெப். சீலன்' 9.மகுடக்கவி- Hat இது தரைப்புலிகளின் அனைத்துப் படையணிகளால் மட்டும் அணியப்பட்ட மகுடக்கவியாகும். இதை அவர்களின் கட்டளையாளர்கள் முதல் இயக்கத் தலைவர் வரை அணிந்திருந்தினம். இதில் எந்தவொரு வில்லையும் பொறிக்கப்படவில்லை. 'ஆண்புலிகள்' 'பெண்புலிகள்' 10.கௌபோய் மகுடக்கவி- Cowboy hat 90களின் தொடக்கத்தில்…. இதில் எந்தவொரு வில்லையும் பொறிக்கப்படவில்லை. இத்தொப்பியில் வரியும் இருந்தது. இதை எல்லோரும் பொதுவாக அணிவர். 11. நெகிழ்வான மகுடக்கவி- Floppy Hat இது தனியாக எந்தவொரு படையணிக்கோ இல்லை படைக்கோ சொந்தமானதாக இருந்திருக்கவில்லை. மாறாக இது எல்லா வீரர்கள் மற்றும் தளபதிகளால் சூழலிற்கும் இடத்திற்கும் ஏற்ப அணியப்பட்டது. அதன் உருமறைப்பு நிறமும் அணியும் வீரரின் படையணி சீருடை நிறத்திற்கு ஏற்றவாறு மாறுபட்டது. இதில் எந்தவொரு வில்லையும் பொறிக்கப்படவில்லை. 'ஜோன்சன் படையணியினது வீரன் அணிந்துள்ள கடும்பச்சை நிற மகுடக்கவி' இச்சீருடையினை, திருமலை பற்றிய நிகழ்படம்(video) ஒன்றில் தான் புலிகள் முதன்முதலாக காண்பித்ததோடு, அப்படையணியின் பெயரைக் கூறியபோது, அந்நிகழ்படத்தில், இந்நிற சீருடை அணிந்த போராளிகளே அணிநடை செய்தனர். எனவேதான், அப்படையணிக்கான சீருடை இதுவென்ற முடிவிற்கு நான் வந்தேன். '5 - 9 - 2008 அன்று வன்னேரிக்குள மண்ணரணில் நின்றவாறு சமராடும் புலிகளின் அணிகள். உவர்களில், முன்னால் உள்ள இருவரும் மகுடக்கவி அணிந்துள்ளதை நோக்குக.' இதில் தென்படும் நான்கு பேரும் மூன்று விதமான சீருடையில் உள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க விதயம் யாதெனில், இந்த மகுடக்கவி அணிந்துள்ள இருவரும் இருவேறு நிறத்திலான சீருடை அணிந்துள்ளதோடு அவர்களின் மகுடக்கவியும் அதற்கேற்றவாறான நிறத்தையே கொண்டுள்ளதை நோக்குக. 'போராளி ஒருவர் நெகிழ்வான மகுடக்கவி அணிந்துள்ளார்' 12. செவிமறை நெகிழ்வான மகுடக்கவி- Earflap floppy hat இது புலிகளின் உந்துருளி படையணியால் மட்டுமே அணியப்பட்டது ஆகும். மகுடக்கவியின் கீழ்ப்பக்கத்தில் காதுமறை உள்ளது. மேலும் இதன் விளிம்புகள் யாவும் நெகிழ்ந்தவையாக உள்ளன. இதில் எந்தவொரு வில்லையும் பொறிக்கப்படவில்லை. குறிப்பு: புலிகளின் அதிவேக உந்துருளி படையணியின் தொப்பியானது இதிலிருந்து வேறுபட்டது ஆகும். அஃது செங்குத்து வரி கொண்ட சுற்றுக்காவல் தொப்பியாகும் 13. சூரியக் காப்பு மகுடக்கவி- Sun protection hat இவ்வகை மகுடக்கவியின் பின்பக்கத்தில் , ஒரு துண்டம்(துண்டுத் துணி) பொருத்தப்பட்டு உள்ளது. இதில் எந்தவொரு வில்லையும் பொறிக்கப்படவில்லை. 'ஓயாத அலைகள் மூன்றின் 4 கட்டமான ஆனையிறவுச் சமரில், குறிசூட்டுத் தாக்குதலில் ஈடுப்பட்டுள்ள மயூரன் குறிசூட்டு அணியொன்று(Snipe team)' 14. சூரியக் காப்பு தொப்பி- Sun protection cap இவ்வகை தொப்பியின் பின்பக்கத்தில் , நீளமான ஒரு துண்டம்(துண்டுத் துணி) பொருத்தப்பட்டு உள்ளது. இந்த பின்னால் உள்ள துண்டின் நீளம் முதுகின் முக்கால்வாசித் தூரம் வரை உள்ளது. 97-2000 ஆம் ஆண்டு வரை: இதில் எந்தவொரு வில்லையும் பொறிக்கப்படவில்லை. 2000 ஆம் ஆண்டிற்குப் பிறகு: அதில் வட்ட வடிவ படையணி இலச்சினை கொண்ட வில்லை குத்தப்பட்டிருப்பதை நோக்குக. 15. கடற்கலவர் சதுரத் தொப்பி - Sailors square rig இது இவர்களால் 2002 ஆம் ஆண்டுகளிற்குப் பின்னர் அணியப்பட்ட சீருடையாகும். அதில் புலி இலச்சினை கொண்ட வில்லை குத்தப்பட்டிருப்பதை நோக்குக. இவர்களின் அதிகாரிகளின் கடற்கலவர் சதுரத் தொப்பியில் குறுகிய சொண்டு உள்ளது: 'அதிகாரியின் கடற்கலவர் சதுரத் தொப்பியில் குறுகிய சொண்டு உள்ளதை நோக்குக | அதில் கடற்புலி இலச்சினை குத்தப்பட்டிருப்பது வட்டமிடப்பட்டுள்ளது.' 2004இற்குப் பின்னான காலத்தில் சதுரத் தொப்பியில் ஒரு தகடு பொருத்தப்பட்டிருந்தது. அந்தத் தகட்டில் 'விடுதலைப்புலிகளின் கடற்புலிகள்' என்ற வசனம் எழுதப்பட்டிருந்தது. 16. உச்சிமுடி தொப்பி - Peaked cap இது கணினிப் பிரிவு என்று அழைக்கப்படும் 'கேணல் ராயு படைய அறிவியல் தொழினுட்பவியல் கல்லூரி'இன் கீழ் செயற்பட்ட படைய தொழினுட்பவியல் கல்லூரி யின் போராளிகளால் அணியப்பட்டதாகும். இது ஒரு விதமான கபில நிறத்தில் இருந்தது. இதன் மையத்தில் உள்ள சட்டத்தில் கணினிப் பிரிவின் சின்னம் இருந்தது. அது தங்க நிறத்தில் இருந்தது. உசாத்துணை: செ.சொ.பே.மு. படங்களைப் கவனித்து சொந்தமாக எழுதியது படிமப்புரவு: YouTube - Journeyman Pictures http://aruchuna.com/http://gettyimages.com/http://tamilnet.com/ NTT ஈழ நாளேடுகள் ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
  6. காமராஜர் ஒரு முறை ஒரு கலெக்ட்டரை அழைத்து இருந்தார்.. உரையாடலுக்கிடையே தேநீர் வந்தது.. டீயக் குடிங்கன்னேன்.. என்றார் காமராஜர்.. தேநீரைப் பருக சில நிமிடங்கள் தயக்கம் காட்டினார் அந்த கலெக்டர்.. உடனே காமராஜர் அவரது டீக்கோப்பையை அருகில் சென்று பார்த்தார். அதில் ஈ ஒன்று விழுந்து துடித்துக் கொண்டு இருந்தது... ஈயை கையில் எடுத்து வெளியே பறக்க விட்டார் காமராஜர்... பிறகு கலேக்ட்டரிடம்... "...டீயைக் குடிப்பதா வேண்டாமான்னு யோசித்த நீங்க.. அந்த ஈயைப் பத்தி நினைக்கலையே... உங்களுக்கு டீ தான் பிரச்சனை.... ஆனா அந்த ஈக்கு..? வாழ்வா சாவா-ங்கறது பிரச்சனை.... இப்படி உங்க சைட்ல இருந்து மட்டுமே நீங்க சிந்திச்சு செயல்பட்டா... மக்களோட சைட்லே எப்படி சிந்திப்பீங்க..??.." கலெக்டர் தலை குனிந்தார்... நமது அப்பனும் பாட்டனும் இந்த நல்ல மனிதரைத் தோற் கடித்த பாவத்துக்கு தான் நாம் இப்போது இந்த பாவிகளிடம் சிக்கிச் சீரழிகிறோம் ( முன்னோர் செய்த பாவம் பிள்ளைகளைத் தானே சேரும்)?
  7. 2005க்கு பின்னான வன்னி நிலமைகள் (கல்யாணம் செய்து வைத்தல்) நீங்கள் சொல்வதை போல இருந்தாலும் அதை மட்டும் வைத்து 30 வருட கால போராட்டத்தை எடை போட முடியாது. ஆனால் போராட்டம் மக்கள் மயப்படவில்லை என்பதை நான் ஏற்கிறேன். 83-86 இல் போராட தயராக ஆயிரகணக்கில் ஆட்கள் இருந்தார்கள். புலிகள் கடும் கேள்விகளுக்கு பின்பே ஆட்களை தேர்ந்து இயக்கத்தில் சேர்த்தார்கள். ஆனால் பின்னாட்களில் அது அவர்களே பாஸ் நடைமுறை கொண்டு வரும் அளவுக்கு, அதன் பின் இன்னும் கட்டாய ஆட் சேர்புக்கு போகும் அளவுக்கு மாறி விட்டிருந்தது. இங்கே என்ன பிரச்சனை என்றால் ஒரு இலட்சிய வேட்கை கொண்ட தலைமை, அதே அளவு வேட்கை இல்லாத மக்களை வழி நடத்தியதுதான். அதற்காக மக்களை முழுதாக பிழை சொல்ல முடியாது. 30 வருடமாக பல இன்னல்களை தாண்டி போராட்டம் மக்கள் ஆதரவு இன்றி நிலைக்கவில்லை. போருக்கு பின்னும் கூட தேர்தல்களில் மக்கள் மாற்றி யோசிக்க 10 வருடம் எடுத்தது. ஆனால் மக்களால் ஒரு அளவுக்கு மேல் முடியவில்லை. எமது மக்கள் ஆப்கானிகள் அல்ல. முடிவில்லாமல் நீளும் யுத்தம், நிச்சயம் இதில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்றே யோசிக்க வைத்தது. நிச்சயமாக இதை கணிக்க தவறியது பிழைதான். இனி நாம் யாரும் படை திரட்ட போவது இல்லை. போராடவும் போவது இல்லை. ஆனால் இதில் ஒரு பெரிய பாடம் இருக்கிறது. முன்பு யாழில் சிலர் எழுதினார்கள், பலஸ்தீனம் போல் ஊரில் ஒரு இண்டிபாடா கிளர்சியை செய்யலாம் என. நிச்சயம் அதற்கு மக்கள் ஆதரவு தரப்போவதில்லை. போராடுவதற்குரிய சுந்தந்திர சூழல் ஒரு போதும் தமிழருக்கு இலங்கையில் இருந்ததில்லை. ஆனால் அதற்கும் மேலாக இப்போ மக்கள் ஆக கூடியது P2P, தூபி இடிப்பை எதிர்த்தல், காணாமல் போனோர் போராட்டம் இந்தளவு போராடத்தான் தயார். ஆகவே எமது மக்களிடம் அதிகம் தியாகங்களை இனியும் எதிர்பார்க்காமல், உரிமைக்கான அரசியலை எப்படி முன்னெடுப்பது என்பதையே சிந்திக்க வேண்டும்.
  8. 50 வருட கால வரட்சியை போக்கி NBA வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றிய Milwaukee Bucks.. போட்டியின் சில highlights…
  9. எருமைப் புத்தி என்று சொல்வார்கள்.... அதன் புத்தியில் ஒரு சிறிதாவது எங்களுக்கும் இருந்திருந்தால் இன்று தமிழீழத்தில் வாழ்திருப்போமே.
  10. தாயக விடுதலைய்க்கு தம்மை ஆகு தீயாக்கிய அனைத்து போராளிகளுக்கும் வீர வணக்கங்கள். உம்மை மறவாதிருப்போம்... 🙏 🌹🙏 🌹🙏 🌹🙏🌹 🙏 இந்த அறிய தகவல்களை திரட்டி இங்கே பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் நன்னிச்சோழன் 🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.