Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    19165
    Posts
  2. நன்னிச் சோழன்

    கருத்துக்கள உறவுகள்+
    11
    Points
    35682
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    9
    Points
    46808
    Posts
  4. MEERA

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    5418
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/25/21 in Posts

  1. இதற்கான சரியான தமிழ் தெரியவில்லை. சூப்பர் உணவுகள் என்று தேடிப் பார்த்ததில் தமிழில் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. ஐரோப்பாவில் goji, Acai, Cranberry, Chia, Linseed, Quinoa என்று சூப்பர் உணவுகளின் பெரிய பட்டியல் நீள்கிறது. இவை அதிகமாக சீனா, தென்னமெரிக்கா போன்ற தூர நாடுகளிலிருந்து தருவிக்கப்படுகின்றன. அண்மைக் காலமாக வியாபார ரீதியிலும் மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களால் இந்த உணவுகளின் விற்பனை பெருகி வருகிறது. இது நான் அறிந்த அறிவியல் தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டது. தவறான தகவல்கள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். கவிதையின் பொருள் உணர்ந்து இரசிப்பதுபோல் உண்ணும் உணவில் என்னவெல்லாம் உண்டு என்று புரிந்து மகிழ்வோடு உண்பது மனரீதியாக உடலுக்கு நன்மையே தரும். சூப்பர் உணவு என்றால் என்ன ? ஒவ்வொரு பழங்கள் காய்கறிகள் தானியங்கள் கிழங்குகளிலும் பலவிதமான விற்றமின்கள் தாதுப்புகள் புரதங்கள் என உடலுக்குத் தேவையான பல்வேறு மூலக்கூறுகள் உள்ளன. ஆனால் சில உணவுகளில் தனித்தன்மையாக ஏதாவதொரு மூலக்கூறு ஆச்சரியமான முறையில் அதிகமாக இருக்கும். அல்லது பலவிதமான கிடைத்தற்கரிய மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும், எமக்குச் சில குறிப்பிட்ட மூலக்கூறுகள் தேவையாக இருக்கும்போது அல்லது குறைவாக இருக்கும்போது சூப்பர் உணவுகளை இனம்கண்டு எமக்குத் தேவையான வகையில் அதனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சில நோய்களைக் கட்டுப்படுத்தக் கூடிய மூலக்கூறுகளை இயற்கையான இந்த உணவுகள் மூலம் உட்கொண்டால் மருந்துகளின் தேவையையும் குறைக்க முடியும். பெரும்பாலும் ஒரு உணவில் உள்ள Antioxidant (இதற்கும் தமிழ் தெரியாது) இன் அளவைப் பொறுத்து அது சூப்பர் உணவாகக் கருதப்படுகிறது. Antioxidant என்றால் என்ன ? ஊடலில் கோடிக்கணக்கான மூலக்கூறுகளுக்கிடையே தொடர்ச்சியாக இரசாயன செயற்பாடுகள் நடக்கின்றன. இவ்வாறான மாற்றங்களின்போது எதோ காரணங்களுக்காக சில மூலக்கூறுகள் சரியான முறையில் பகுக்கப் படாமல் இலத்திரன் ஒன்று அதிகமாக அல்லது குறைவாக இருக்கும்படியாக விடுவிக்கப்படுகின்றன. உதாரணமாக, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மூலக்கூறு ஒன்று சுவாசப்பை மூலம் உள்வாங்கப்பட்ட ஒட்சிசன் மூலக்கூறோடு சேர்ந்து நீர் மூலக்கூறாகவும் காபனீரொட்சைட்டாகவும் பிரிந்து உடலுக்குத் தேவையான சக்தியை வெளியிடும். ஏதோ காரணங்களுக்காக இந்த இரண்டும் சரியாகப் பகுக்கப்படாமல் ஒரு இலத்திரனை அதிகமாகப் பெற்றுக் கொண்ட மூலக்கூறொன்று வெளியாகிறது. இதை Free radicals என்று சொல்லப்படுகிறது. புகைத்தல் மாசுபட்ட காற்று போன்றவற்றாலும் இவ்வாறான மூலக்கூறுகள் உடலினுள் செல்லலாம். இந்த Free radicals மூலக்கூறுகள் கட்டுப்பாடிழந்து மூர்க்கத்தனமாக அருகிலுள்ள கலங்களைத் தாக்கும். இவ்வாறான தாக்குதலுக்குள்ளான தசை தோல் இதயம் போன்றவற்றிலுள்ள கலங்கள் சேதமாவதுடன் மரபணுக்களும் பாதிப்புள்ளாகும். இதுவே உடல் முதுமையடையவும் காரணமாகக் கூறப்படுகின்றது. எமது உடல் தேவையற்ற இந்த Free radicals களை அழிக்க வேண்டும். அதற்காக எமது உடல் வேறு சில மூலக்கூறுகளைத் தேவையான இடங்களுக்கு அனுப்பிவைக்கிறது. இந்த மூலக்குறுகள் Antioxidant என்று அழழைக்கப் படுகின்றது. இவற்றின் பணி Free radicals மூலக்கூறுகளை ஈர்த்து அழிப்பதாகும். Antioxidant மூலக்கூறுகள் தனித்துவமான அமைப்புடையவை அல்ல. Free radicals களை அழிக்கும் திறனுள்ள அனைத்தும் இந்த Antioxidant இனுள் அடங்கும். இதோ முக்கியமான சில Antioxidant மூலக்கூறுகள் vitamin C beta-carotene vitamin A selenium vitamin E zinc flavonoids copper இன்னும் பல. ஆர்வக் கோளாறில் மேல்குறிப்பிட்டவற்றை அளவுக்கதிகமாக உட்கொள்ளக் கூடாது. சில மூலக்கூறுகள் அளவுக்கதிகமானால் நச்சுத் தன்மையையானவை. வேறுசில புற்றொநோய் போன்றவற்றையும் ஊக்குவிக்கும். சூப்பர் உணவுகள் எவை ? Antioxidant உணவுகளை மட்டுமல்லாது வேறு பல உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளும் இதனுள் அடங்கும். இவற்றை வெகு தூரத்தில் தேடாமல் எங்கள் ஊரிலும் சாராரணமாகக் கிடைக்கும் உணவுகளிலும் காணலாம். அவற்றை அறிவியல் ரீதியாக இனம்காண்பதே இத் திரியின் நோக்கம். பித்தத்தைப் போக்கும், சூட்டைக் குறைக்கும் புற்றுநோயைத் தீர்க்கும் என்பது போன்ற ஆதாரமில்லாத கருத்துக்களைத் தவிர்த்து உங்களுக்குத் தெரிந்த அறிவியல் ரீதியான தரவுகளை மட்டும் தாருங்கள். இவ்வாறான தரவுகளை நீங்கள் தேடிப் போகும்போதுதான் ஒரு உணவிலுள்ள உண்மையான ஆற்றலை அறிந்து கொள்ள முடியும். உணவுக் கூறுகளின் தரவுகள் தெரியாமல் அது குறிப்பிட்ட நோய்களைத் தீர்க்கும் என்ற காரணத்தினால் அதனை உட்கொள்ளும்போது அதே உணவிலுள்ள வேறு கூறுகள் வேறு உபாதைகளைத் தரலாம். பல தமிழ் இணையத் தளங்களிலும் காணொலிகளிலும் பல போலியான தகவல்கள் பரந்து காணப்படுகின்றன. மருந்தே உணவு என்ற உன்னதமான கருத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் பணம் சம்பாதிப்பதற்காகப் பரப்பப்படும் போலித் தகவல்கள் அகற்றப்பட வேண்டுமானால் உணவு பற்றிய அறிவியல் தகவல்களை நாம் நாட வேண்டும். இவை பற்றிய மேலதிகத் தெரிந்தவர்கள் தமது கருத்துக்களைப் பரிமாறலாம். ஒருசிலவற்றை ஆரம்பித்து வைக்கிறேன். *** நெல்லிக்காய் பலரும் தேசிக்காய் அல்லது தோடம்பழத்தில்தான் விற்றமின் சீ அதிகமாக உள்ளது என்று நம்புகின்றனர். மாற்றீடாக வேறு பல உணவுகள் உள்ளன. உதாரணமாக கறிமிளகாயில் தோடம்பழத்தை விட அதிகமாக உள்ளது. ஆனால் சமைக்கும்போது விற்றமின் சீ ஏறத்தாள 60% அழிந்துவிடும். 100 கிராம் தோடம்பழத்தில் ஏறத்தாள 55 மில்லி கிராம் விற்றமின் உள்ளது. 100 கிராம் நெல்லிக்காயில் 700 மில்லி கிராமுக்கு மேல் உள்ளது. ஓரு நாளைக்கு ஒருவருக்கு 110 மில்லிகிராம் தேவைப்படும். ஏனைய உணவுகளிலிருந்தும் விற்றமின் சீ கிடைப்பதால் பாதி நெல்லிக்காய் ஒரு நாளைக்குப் போதுமானது. அதிகமான விற்றமின் சீ உடலுக்கு ஆபத்தில்லை. விற்றமின் சீ உடலில் சேமித்து வைக்கப்படுவதில்லையாதலால் மிதமிஞ்சியது சிறுநீர் மூலம் வெளியேற்றப்படும். 2016 இல் இந்தியாவில் உலர்த்திய நெல்லிக்காய் தூளை மிகச் சிறிய அளவில் கோழிகளுக்குக் கொடுத்து ஆராச்சி செய்யப்பட்டது. இதனை உண்ட கோழிகள் சாராதண கோழிகளை விட ஆரோக்கியமானவையாக வளர்ந்தன. அதனைத் தொடர்ந்து அண்மையில் சீனாவில் கோழிகளிலும் பின்னர் எலிகளிலும் பரிசோதனைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. (https://fr.wikipedia.org/wiki/Amla) மஞ்சள் இது எங்களுக்குக் கிடைத்த ஒரு விலைமதிப்பற்ற உணவு. இந்தியாவில் புற்றுநோயைத் தோற்றுவிக்கும் பல காரணிகள் காணப்பட்ட போதிலும் அங்கு ஒப்பீட்டளவில் புற்றுநோய் குறைவாகவே காணப்படுகின்றது. ஒருவேளை இதற்கான காரணிகளில் மஞ்சள் பாவனையும் காரணமாகக் இருக்கலாம். மஞ்சள் குறிப்பாக 2 வகைகளில் செயலாற்றுகிறது. கட்டி, புற்றுநோய்க் கலங்கள் உருவாவதற்கு அவசியமானதாகக் கருதப்படும் ஒருவித புரதத்தின் தொகுப்பைத் தடுத்து புற்றுநோய்க் கலங்கள் உடலில் இருந்து விடுபட உதவும் நொதிகளின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது இதன்மூலம் புற்றுநோய்க் கலங்கள் நலிவடைந்து இறக்க நேரிடும். மஞ்சள் புற்றுநோயைக் குணப்படுத்தாவிடினும் அது புற்றுநோய்க் கலங்கள் பரவாமல் கட்டுப்படுத்துகிறது. பக்கவிளைவுகள் இல்லாமல் சிலவிதமான உட்காயங்களை ஆற்றுகிறது. உலகம் முழுவதும் பரவலாக நடைபெற்ற ஆயிரக்கணக்கான ஆராச்சிகளில் மஞ்சளின் பயன்பாடு சிறந்த பெறுபேறுகளைத் தந்தாலும் மஞ்சள் பாவித்து ஒரு குறிப்பிட்ட நோயைக் குணமாக்கியதாக நிறுவப்படவில்லை. மஞ்சளை உடல் இலகுவாக உள்வாங்காது என்பதால் மிளகுடன் சேர்த்து அளவோடு உண்ணலாம். அதிகமாக உட்கொண்டால் தகாத உபாதைகள் வரலாம். ஈரல் தொடர்பான நோயுள்ளவர்கள், சத்திரசிகிச்சைக்கு உள்ளாக வேண்டியவர்கள், இரத்தத்தை இலகுவாக்கும் மருந்துகள் பாவிப்பவர்கள் கட்டாயம் மஞ்சளைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இதனைத் தவிர்க்கும்படி சொல்லப்படுகிறது. மஞ்சள் கிருமிகளை அழிக்கும் என்ற தவறான கருத்து உலாவுகிறது. அப்படி அழிக்குமாக இருந்தால் மஞ்சளை உண்பவர்களின் வயிற்றில் சமிபாட்டுக்கு உதவும் பக்ரீரியாக்கள் அழிக்கப்பட்டு சமிபாடு குழப்பமடைந்து உடலுக்குச் சரியான ஊட்டச் சத்துக்கள் கிடைக்காமல் பலவிதமான நோய்க்கு உள்ளாக நேரிடும். சமீபத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக பலவிதமான ஆராச்சிகள் உலகெங்கிலும் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் ஒன்றுகூட மஞ்சளால் கிருமிகளை அழிக்க முடியுமென நிரூபிக்கப் பட்டதாகத் தெரியவில்லை.
  2. நான் சமீபத்தில் அறிந்த Acai Berry பற்றி சில தகவல்கள்.. Acai berry- Acai berryயிலும் அதிக Antioxidants உள்ளதாக அறியப்பட்டதால் Super Food வகையில் ஒன்றாக சமீபகாலமாக இதன் பயன் பற்றி அதிகம் பேசப்படுகிறது.. Acai berryயின் பிறப்பிடம் அமேசன் காடுகளில் உள்ள Acai பனை மரங்கள்…Acai பனை மற்றும் berries Euterpe genus எனும் இனத்தைச் சேர்ந்தவை. இவை பெரும்பாலும் அமேசன் சதுப்பு நிலங்களில் வளர்க்கப்படுகின்றன. அத்துடன் அங்குள்ள பழங்குடி பழங்குடியினரின் முக்கிய உணவாகவும் உள்ளது. மேலும் ஊட்டச்சத்து மிக்க இந்த பெர்ரிகள், அடர்ந்த சிவப்பு மற்றும் அடர்ந்த ஊதா நிறத்தை உடையவை. இனிப்பு சுவை மிகவும் குறைந்த இந்த பழத்தில் நார்ச்சத்து, புரதசத்து, கார்போஹைட்ரேட்டுகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மட்டுமல்லாது வைட்டமின்கள்:- வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி மற்றும் தாதுசத்துக்கள்:- கல்சியம், சோடியம்,பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்தும் உள்ளது Acai berryயிலும் உள்ள மேற்கூறிய ஊடச்சத்துகளால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, இதய ஆரோக்கியத்திற்கு, இலகுவான சமீபாட்டு நடைமுறைக்கு, சரும ஆரோக்கியத்திற்கு என இதன் பயன்களை கூறிக்கொண்டு போகலாம்.. அதே போல, இதனை அதிகளவு உட்கொள்வதும் கூடாது. அத்துடன் வேறு ஏதாவது berry பழங்களிற்கு அலர்ஜி உள்ளவர்களும் இதை சாப்பிடக்கூடாது என கூறப்படுகிறது.. அத்துடன் இங்கே அவுஸ்திரேலியா supermarkets பழங்களாக கண்டதில்லை, powder அல்லது pulp ஆகவே வாங்கலாம். இன்று எனது காலை உணவாக இந்த Acai berry frozen pulp, Strawberry, Blueberry மற்றும் பால் சேர்த்து செய்த milkshake 👇🏼 https://en.m.wikipedia.org/wiki/Açaí_palm
  3. நான் அடுத்த பிறவியிலை இப்பிடியான ஊரிலைதான் ஆண்சிங்கமாய் பிறக்கவேணும். 😍
  4. வெப்ப மண்டலத்தில் பிறந்தவர்கள் எல்லோரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அது அங்கு வாழ்பவர்களுக்கு தெரிவதில்லை.
  5. ஒருக்கா ஒரு பொடியன் சண்டை கட்டம் வரேக்க எழுப்பி விடு எண்டு பக்கத்த இருந்த பொடியனிட்ட சொல்லீட்டு நித்திரையாபோனான்.. அவன்ர குஞ்சில சணல் நூல கட்டி பக்கத்துல இருந்த தேமாவில சணலின்ர மற்றபக்கத்தை நல்லா இழுத்து கட்டி விட்டுட்டு சண்டை வந்திட்டு எழும்புடா எண்டு கத்தி எழுப்பி அவனுக்கு சூ அறுந்துபோகப்பாத்திச்சு.. 😅 ஓம் பூவரசம் நெட்டும் சொன்ன சாமான்..
  6. ஒரு நற்செய்தி : அட்சயதிருதியைக்கு நகைகள் வாங்குவது அவசியமில்லை......உங்களை கடன்காரனாக்கிக் கொண்டு கோல்டுஸ்டோர்ஸ் காரரை ரோல்ஸ்ராய்ஸ் வாங்க வைக்க வேண்டாம்......! 👌
  7. கருணா இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு வந்த நாடகம் தொடர்பாக இலங்கையரசோ அல்லது பிரித்தானிய அரசோ சொல்லும் நாடகபாணியிலான விளக்கங்களை அபடியே நம்புமளவிற்கு தமிழர்கள் ஒன்றும் மூடர்கள் கிடையாது. ஆனாலும்கூட, தமிழர்களின் "அரசுகளை நம்பி ஏமாறும் " தன்மையே இவ்வாறான புரட்டுக்களை அவர்கள் நம்பும் நிலைமைக்கு இட்டுச் செல்கிறது. தம்மை ஒடுக்கிவரும் சிங்கள அரசும், அதற்குத் துணைபோகும் முன்னாள் ஆக்கிரமிப்பு இங்கிலாந்து அரசும் இந்நாடகம் தொடர்பாக செய்திச்சேவைகளில் வெளியிட்டுவரும் செய்திகளை அப்படியே நம்பும் அளவில் பெரும்பாலான தமிழர்கள் இருப்பதும், இச்செய்திகளின் நம்பகத்தன்மைபற்றி கேள்வியெழுப்பாமலேயே அவற்றை ஏற்றுக்கொள்வதும் ஒரு சசாபக்கேடுதான். கருணா விடயத்தில் பிரித்தானிய - இலங்கை அரசுகள் ஆடிய நாடகமும், அதனை தமிழர்கள் நம்பிய விதமும் தமிழர்களுக்குப் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தப்போகின்றது என்பதை அன்று அவர்கள் உணரவில்ல என்பதையே காட்டுகின்றது. தமிழர்களை முட்டாள்களாக்கி, அவர்களின் அரசியல்த்துறைப் பொறுப்பாளரை இலக்குவைத்துக் கொல்லும் நடவடிக்கை உட்பட பல நாசகார செயற்பாடுகளுக்காகவே கருணா லண்டனுக்கு அழைத்துவரப்பட்டிருக்கிறார் என்பது தமிழருக்கு அன்று தெரியாமல்ப் போய்விட்டது. ஆனால், புலிகளை நன்கு அறிந்துகொண்ட பலருக்கு, செய்மதி தொழிநுட்பத்தினைப்பாவித்து இலக்குவைக்கும் செயற்பாடுகளை முறியடிக்கும் செயற்பாடுகளை புலிகள் நிச்சயமாகத் தமது தளப்பகுதிகளில் ஆரம்பித்திருப்பார்கள் என்பது புரிந்திருக்கும். இதன் ஒருபடியாக, புலிகள் தமது உயர் தளபதிகளின் பெயர்களைத் தொலைத் தொடர்புகளின்போது பாவிப்பதனை நிறுத்திவிட்டார்கள் என்பது தெரியவந்திருக்கிறது. கருணாவின் பிரித்தானிய நாடகத்தில் இன்னொரு பாகமும் இருக்கிறது. அதாவது, ஏற்படப்போகும் போரில், புலிகள் வென்று, தனியீழத்தினைப் பிரகடணம் செய்யும் நிலை உருவானால், கருணாவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி அவருக்கெதிரான மனிதவுரிமை மீறல்களைத் தாக்கல் செய்வதென்றும், அவ்வழக்கில் தோன்றும் கருணா, தனது வாதமாக புலிகளின் தலைமையினால் நிகழ்த்தப்பட்டதாகப் பட்டியலிடும் மனிதவுரிமை மீறல்களைக் கொண்டு புலிகளின் தலைமையினை இலக்குவைக்கும் கைங்கரியத்தில் ஈடுபடலாம் என்பது. புதிதாக பிறக்கும் தமிழரின் நாட்டின் தலைமை மீதான சர்வதேசத்து பிடிவிராந்து என்பதை இந்திய ஹிந்து முதற்கொண்டு பல சர்வதேச பத்திரிக்கைகள் பிரச்சாரம் செய்யும் என்பதும் , இதன்மூலம், ஐ நா வின் படையொன்றின் தமிழர் பகுதிமீதான கட்டாய பிரசன்னம் தமிழருக்கு நிச்சயம் சாதகாமனாதாக இருக்காதென்பதும் இத்திட்டத்தின் இன்னொரு அங்கமாக இருக்கலாம். போர்க்குற்ரவாளிகளின் அரசின் நாசகார செயற்திட்டத்திற்கான தனது ஆசீரினை இன்று வழங்கிவரும் ஐ நாவின், "கருணாவை சர்வதேச நீதிமன்றில் ஏற்றும்" நாடகத்திற்கு அப்பாவித்தமிழர்களின் ஆதரவும் நிச்சயம் இருக்கும். தான் அங்கத்துவம் வகிக்க விரும்பாத சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மூலம் தம்முடன் ஒத்துழைக்காத மக்கள் தலைவர்களை தண்டித்துவரும் போலி மனிதவுரிமைவாதிகளான அமெரிக்க - பிரித்தானியர்களின் உண்மையான மனிதநேயம் எபது நகைப்பிற்கிடமானது. தமிழர்களைப் பொறுத்தவரை கருணாவின் பிரித்தானிய நாடகத்தினை தமக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்ப்பதைவிடுத்து, அதனைத் தமது புறங்கையினால் தட்டிவிட்டு கடந்துசெல்வதே சரியானதாக இருக்கும். முற்றும் https://www.sangam.org/2008/01/High_Definition.php?uid=2719 சரியாகத்தான் கஸ்ட்டப்படுகிறீர்கள் போலத் தெரிகிறது. தொடர்ந்து முயலுங்கள்.
  8. அன்பின் சமூக ஆர்வலர்களே, டோக்யோ ஒலிம்பிக் 2020 கள நிலவரம், பதக்க நிலவரம் சம்மந்தமாக விளையாட்டு திடலில் ஓர் உரையாடலை ஆரம்பியுங்கள், சுவாரசியமாக இருக்கும். நான் இப்போது சவூதி, ஜேர்மனி ஆரம்பசுற்று உதைபந்தாட்ட ஆட்டம் பார்க்கின்றேன். சவூதி நன்றாக விளையாடுகின்றது.
  9. ஓம் தெரியும் அண்ணா. காணொளியில் எனக்கு பிடித்தது கப்புக்கு மேல் இருப்பது. சிடானின் கால்பந்தாட்டம் பிடிக்கும். அவரின் நெத்தியடி அல்ல 🤣
  10. 🤣அந்த கோப்பி கப்புக்கு மேல இருந்தவர்👌😂. சினடின் சிடான் மறக்க முடியாத விளையாட்டுக்காரர்.
  11. "கொசாவா"சொல்லும் பாடம் 2008ல் விடுதலை அறிவித்து 18.7இலட்சம் மக்கள் கொண்ட "கொசாவா" 2021ல் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று பதக்கப்பட்டியலில். 8கோடி தமிழர்களோ "மாநில பட்டியலில்" https://www.facebook.com/groups/186225785430860/permalink/840033736716725
  12. எமக்குள் ஒரு பிரிவினருக்கு, அவர்கள் இன்று எடுத்திருக்கும் அரசியல் நிலைப்பாடுகளினால் அல்லது அவர்கள் ஆதரிக்கும் அவர்களது அரசியல்த் தலைவர்களின் நிலைப்பாட்டினால், போராட்டத்தைத் தவறு என்றும், தேவையற்றது என்றும், போராட்டம் தொடங்கப்படுவதற்கான காரணங்கள் எவையுமே நீதியானவை அல்லவென்றும், போராட்டம் என்பது வெறும் ஆயுதக் கவர்ச்சியினாலும், தனிமனித வழிபாட்டினாலுமே இளைஞர்களை உள்வாங்கியது என்றும் நிறுவவேண்டியது அவசியமாகிவிட்டது. தமது தவறுகளை, துரோகங்களை நியாயப்படுத்த, நியாயங்களைத் தவறென்றும், அநீதியானவை என்று நிறுவும் தேவை அவர்களுக்கு இருக்கிறது. அதன் ஒரு அங்கமே போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதும், தேவையற்றவை என்பதும், வடபகுதித் தமிழனால் மொத்தத் தமிழினத்தின்மீதும் திணிக்கப்பட்ட ஒரு அவலம் என்றும் நிறுவ முற்படும் கைங்கரியம். இவர்களின் இன்றைய புதிய அரசியலின் ( அதாவது 2004, பங்குனி 6 இன் பின்னரான) அடிப்படையே இதுதான் என்பது நான் விளங்கிக் கொண்டது.
  13. இப்போட்டியில் ஐவரி கோஸ்ரை சேர்ந்த cheikh tiote என்பவர் (ஐவரி கோஸ்ட் சார்பாக முதலில் பெனல்டி கோல் உதைப்பவர்) சீனாவில் பயிற்சியின் போது இதய வருத்தத்தால் மரணம்டைந்தார் 2017ல். இவர் Newcastle united எனும் உதைப்பந்தாட்ட குழுவுக்கும் விளையாடியவர். சுவாரசியமான பெனால்டி உதை போட்டி.
  14. கருணாவின் கட்டுப்பாட்டில் றமெஷ் இருக்க, அவரை வைத்து போலியான பத்திரிக்கையாளர் மாநாட்டினை நடத்திய புலிகள் ஆங்கில மூலம் : வோல்ட்டர் ஜெயவர்தின காலம் : கொழும்பில் கருணாவினால் கைவிடப்பட்ட நிலையில் கருணாவின் பெண்போராளிகள் சிலர் மீண்டும் புலிகளுடன் வந்து இணைந்துகொண்ட காலப்பகுதி தம்மால் விலத்தப்பட்ட கருணாவுக்கு இலங்கை ராணுவம் அடைக்கலம் கொடுத்துவருவதாகவும், கருணாவைக்கொண்டு தம்மீது நாசகாரத் தாக்குதல்களை இலங்கை ராணுவம் தொடுத்துவருவதாகவும் புலிகள் மீண்டும் இலங்கை அரசாங்கத்தினை கடுமையாகச் சாடியிருக்கின்றனர். புலிகளால் நடத்தப்படும் இணையத்தளமான தமிழ்நெட்டில் வந்துள்ள செய்தியின்படி தேனகம் கொக்கட்டிச்சோலையில் நடந்த பத்திரிக்கையாளர் மாநாட்டில் அம்பாறை - மட்டக்களப்புச் சிறபுத்தளபதி கேணல் ரமேஷ் கருணா குழுவினரை தமக்கெதிரான நாசகாரத் தாக்குதல் நடவடிக்களுக்கு ராணுவம் பாவித்துவருவதாகக் குற்றஞ்சாட்டியதோடு இந்த நடவடிக்கைகள் தொடரும் பட்சத்தில் புலிகள் அதற்கான தக்க பதிலடியினை வழங்கவேண்டி வரும் என்று எச்சரித்துள்ளதாக செய்தி வெளியிட்டிருக்கிறது. ஆனால், புலிகளின் இந்தச் செய்திக்கு மாறாக , கிழக்கிலிருந்து வரும் நம்பகரமான தகவல்களின்படி இந்தச் செய்தியானது தமிழ் மக்களைக் குழப்பும் நோக்கத்துடன் புலிகளால் வேண்டுமென்றே விடப்பட்ட செய்தியென்றும், கருணாவின் படைகளால் ரமேஷ் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் இருப்பதாகவும், அவரால் பத்திரிக்கையாளர் மாநாடு ஒன்றினை நடத்துவதற்கான சந்தர்ப்பமே இல்லையென்றும் தெரியவருகிறது. வழமையாக நடக்கும் நிகழ்வுகளின் ஒளிப்படத்தை தனது செய்திக்குறிப்புடன் வெளியிடும் தமிழ்நெட் இணையத்தளம் ரமேஷ் தொடர்பான இந்தப் பத்திரிக்கையாளர் மாநாட்டுச் செய்திக்குறிப்புடன் ரமேஷின் கடந்த கால ஒளிப்படம் ஒன்றினை மட்டுமே இணைத்திருந்தது. இது இவ்வாறிருக்க, கருணாவுக்கும் தமக்கும் இடையே எந்தவிதமான தொடர்புகளும் இல்லையென்று மறுத்திருக்கும் இலங்கை ராணுவம், கருணாவுக்கும் வன்னிப் புலிகளுக்கும் இடையே நடப்பது அவர்களது உள்வீட்டு விவகாரம் என்று தனது பாராளுமன்றப் பேச்சாளர் மங்கள சமரவீரவை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டிருக்கிறது. இதேவேளை, பொதுவான எதிரணியில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் புலிகளின் பினாமியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் சேர்ந்து செயற்பட்டு வரும் ஜாதிக ஹெல உறுமயக் கட்சி கருணாவுக்கு ஆதரவாக அரசாங்கம் இதுவரை செயற்படாதது குறித்து கடுமையான கண்டனங்களை பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளது. புலிகளால் போலியாக நடத்தப்பட்டதாகக்கூறப்படும் இந்த பத்திரிக்கையாளர் மாநாட்டில் கருணாவுக்கு ராணுவம் பாதுகாப்பினையும், ஆயுதங்களையும் வழங்கிவருவதற்கான உறுதியான ன சாட்சியங்கள் தம்மிடம் இருப்பதாகக் கூறினார். புலிகளின் இணையத்தளமான தமிழ்நெட்டின் செய்தியின்படி கருணாவினால் கொழும்பில் கைவிடப்பட்ட நான்கு பெண்போராளிகளின் தகவல்களின்படியே தமக்கு இந்த ஆதாரங்கள் கிடைத்ததாகக் கூறியிருந்தாலும்கூட அவை எவையென்பதை ரமேஷ் கூறியிருக்கவில்லை. தம்மிடம் சரணடைந்தவர்கள் என்று புலிகளால் கூறப்பட்ட நான்கு பெண்போராளிகளின் பெயர் விபரங்களைக் கூற புலிகள் மறுத்துவிட்ட நிலையில், இவர்கள் உன்மையிலேயே கருணாவின் தோழிகளா அல்லது சாதாரண பெண்களா என்று பத்திரிக்கையாளர்களால் இதுவரையில் உறுதிசெய்யப்படமுடியாது போய்விட்டது. தமிழ்நெட்டின்படி, தமக்கும் கருணாவுக்குமிடையிலான முறுகல் நிலைபற்றி சில சர்வதேச செய்திச்சேவைகள் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு வருவதாக ரமேஷ் கூறியதாக இந்தப் போலியான மாநாட்டுச் செய்தியை தமிழ்நெட் வெளியிட்டிருக்கிறது. மேலும், இந்த மாநாட்டில் பேசிய ரமேஷ் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் புலிகளின் அரசியல்த்துறைப் போராளிகள் மேல் நடத்தப்பட்டுவரும் படுகொலைகளை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை தமது இயக்கம் ஆரம்பித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதுவே முதல்தடவையாக புலிகள் தமது போராளிகள் கருணாவிணால் கொல்லப்படுவதாக கூறும் சம்பவம் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால், ஆயுதம் தரித்த புலிகளின் போராளிகள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நடமாட அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், தமது போராளிகள் மீதான தாக்குதல்களை புலிகள் எவ்வாறு தடுத்து நிறுத்தமுடியும் என்பது கேள்விக்குறிதான். மேலும், தமிழ்னெட்டின் இன்னொரு செய்திக்குறிப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளர் ஜி எல் பீரிஸை மேர்கோள் காட்டி "புலிகள் அரசு மேற்கொண்டுவரும் தந்திரோபாய செயற்பாடுகளால், சமாதானப் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையினை இழந்துவருவதாகவும்" குறிப்பிட்டிருக்கிறது. முற்றும் http://www.lankaweb.com/news/items04/200604-7.html
  15. தமிழீழ வரைபடங்கள் | Tamil eelam maps: இலங்கையிலுள்ள தொழிற்சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் கிருஷ்ண வைகுந்தன் ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றிய போது சமர்ப்பித்த தமிழீழத்தின் வரைபடம் 5 ஒக். 1978 கீழ்கண்டதுதான் தமிழீழத்தின் மூன்றாவது வரைபடம். இதில் தற்போதைய புத்தளத்தின் சில பகுதிகள் இல்லாமலும் - பழைய சிலாபம் மாவட்டம் 1953இல் மீண்டும் இணைக்கப்பட்டது. - அதே நேரம் தலைநகரில் அதிகளவான ஆட்புலத்துடனும், வில்பத்து அடவியை மன்னாருடனும் பதவிக்குளத்தை வவுனியாவுடனும் சேர்க்கப்பட்டதாக தமிழீழத்தின் ஆட்புலமாக உள்ளடங்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  16. தமிழீழ வரைபடங்கள் | Tamil Eelam maps: கீழ்கண்டதுதான் தமிழீழத்தின் இரண்டாவது வரைபடம். இது கவிஞர் காசி ஆனந்தன் அவர்களால் காட்டப்பட்ட வரைபடம். இங்கு கதை என்னென்றால் இந்த வரைபடத்தினை விடுதலைப்புலிகள் இறுதி வரை பயன்படுதினர் என்பதே ஆகும். பாடசாலைகளுக்கும் ஜெனிவா உடன்படிக்கை காலத்தில் இவையே வழங்கப்பட்டன. ஏனென்று எனக்குத் தெரியவில்லை. மேலும், சிறிலங்காவின் நில அளவைத் திணக்களத்தின் பிரதிமா அதிபராக பணியாற்றி இளைப்பாறிய ஜே.ஆர் சின்னத்தம்பி அவர்கள் 1977 வெளியிட்ட "தமிழ் ஈழம் - நாட்டு எல்லைகள்" என்னும் நூலிலும் இதே வரைபடமே பாவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் 7 மண்டலங்களாவன (இடமிருந்து வலமாக) : முத்து மண்டலம் , மேல் மண்டலம், யாழ் மண்டலம், வன்னி மண்டலம், நடு மண்டலம், கிழக்கு மண்டலம், தென் மண்டலம். என்பனவாகும். எனக்கு இதுதான் பிடிக்கும். ஏனென்றால் தலைநகரத்தைச் சுற்றிலும் நிறைய ஆட்புலங்கள் உண்டு. நேரடி ஊறு எதுவும் ஏற்படாது. மேலும் இதில் காட்டப்பட்டுள்ள கிழக்குதான் மெய்யான கிழக்கு மாகாணம்; ஆங்கிலேயர்களால் பிரிக்கப்பட்டது. பதவிக்குளம் எல்லாம் தமிழரின் தோற்றுவாய் நிலங்களே. இதில் உள்ள பல நிலங்கள் பிடுங்கப்பட்டு சுற்றியிருந்த சிங்கள் மாகாணங்களோடு இணைக்கப்பட்டு விட்டன. Pix: 3500x5000: https://srilankancivilwar.quora.com/The-proposed-third-map-of-Tamil-Eelam 2002/ 2003/ 2004 இல் எடுக்கப்பட்ட இப்படத்தில் தலைவர் மாமாவிற்கு பின்னால் இவ்வரைபடம் தெரிவதை கவனிக்குக: இதேபோல இன்னுமொரு படிமம் வைத்திருந்தனான். அதில் தலைவர் மாமா இந்த வரைபடத்தை தனது கையால் சுட்டிக் காட்டுவது போன்று(இதே பின்புலத்தில்). அதை எங்கோ தொலைத்து விட்டேன். கீழ்கண்டது தவிபு இன் ஒரு படைத்தளத்தில் இருந்து 2009 சிங்களவன் எடுத்தது. (3 திரைப்பிடிப்புகளை ஒன்றாக்கியுள்ளேன்)
  17. தமிழீழ வரைபடங்கள் | Tamil eelam maps: கீழ்கண்டதுதான் தமிழீழத்தின் முதலாவது வரைபடம். இது பிரித்தானியாவின் அரோசிமித்தின் வரைபடத்தை அடிப்படையாக வைத்து வரையப்பட்டது. இது வரையப்பட்ட காலத்தில் இதில் காட்டப்பட்டுள்ள தென் பகுதிகளில் தமிழர் வாழ்ந்திருந்தாலும் நடைமுறையில் பல சிக்கல்களைக் கொண்ட சாத்தியமில்லாத வரைபடம் ஆகும். இவ்ரைபடத்தை முதன் முதன் முதலில் காட்டியவர் "அடங்காத் தமிழர்" செ.சுந்தரலிங்கம் ஆவார். இவரே முதன் முதலில் தமிழீழத்தை கோரிய தமிழரும் ஆவார் (அதற்காக இவரொன்றும் உத்தமர் அன்று. இவர் சொந்த இனத்தின் ஆசைகளை புறந்தள்ளி தன் தன்னிச்சைகளுக்காக செயற்பட்ட காலங்களும் உண்டு, கோருவதற்கு முன்னர், என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்). படிமப்புரவு: fb
  18. மெத்தக்கடை சந்தி, பருத்தித்துறை 1/1/1992
  19. மெத்தக்கடை சந்தி, பருத்தித்துறை 2004/11/01
  20. சிங்களவரை எதிர்ப்பதெற்கென்று முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு: அடங்காத் தமிழர் முன்னணி (1958) தமிழீழத்தின் விடுதலைக்காக முதன் முதலில் தோன்றிய அமைப்பு: புலிப்படை (1961) என்னால் 2021ம் ஆண்டு எழுதப்பட்ட "மாமனிதர் ஆ. இராசரத்தினம் வாழ்க்கை வரலாறு" என்ற ஆவணக்கட்டின் பின்னிணைப்பு - 2லிருந்து: "திருகோணமலை கச்சேரியின் வாயிலில் 1961 மார்ச் 4இல் சிங்களத்தின் "ஸ்ரீ" என்ற எழுத்துக்கு எதிராக மறியல் செய்த சத்தியாக்கிரகிகள் மீது காவல்துறையினர் இரக்கமற்ற முறையில் தடியடி நடத்தினர். இந்நிகழ்வில் காயமடைந்த மூதூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏகாம்பரம் 23 மார்ச் 1961 அன்று காலமானார். உணர்ச்சிக் கொந்தளிப்புடன் நடந்தேறிய இவருடைய இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட உணர்வாளர்கள் சிலர் தமிழரசுக் கட்சியின் அகிம்சை வழியில் நம்பிக்கையிழந்ததால் தீவிரவாதப் பாதையில் "புலிப்படை" என்னும் அமைப்பைத் தொடங்கினர். இவர்கள் அனைவரும் கோணேஸ்வரத்தில் உறுதியெடுத்துக்கொண்டனர். இதில் 'மாமனிதர்' ஆ. இராசரத்தினம், வட்டுக்கோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் அமிர்தலிங்கம், சாவகச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் நவரத்தினம், தமிழ் எழுதுவினைஞர் சங்கத் தலைவர் 'மாமனிதர்' சிவானந்தசுந்தரம் மற்றும் வவுனியாவின் முன்னாள் அரச அதிபரான இராசதுரை என்போர் குறிப்பிடத்தக்கவராவர். இதில் ஏறத்தாள 20 பேர் உறுப்பினர்களாய் இருந்தனராம் (ஆதாரம்: மூத்த செய்தியாளர் சபாரத்தினம்). இதில் இணைந்திருந்த இளையோர் சிலர் கண்டிக்குச் சென்று ஆயுதப் பயிற்சி பெற்றிருந்தனர். அத்துடன் கொழும்பு கொட்டாஞ்சேனையில் தற்பாதுகாப்பு பயிற்சிகளையும் பயின்றனர். எனினும் 1965 இல் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்துடன் குறிப்பிட்ட புலிப்படை கலைந்து போனது. அமிர்தலிங்கம் மற்றும் நவரத்தினம் என்போர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்த கூட்டாச்சியில் சிங்கள அரசுடன் சோரம்போயினர். ஆயினும் இராசதுரை, சிவானந்தசுந்தரம் மற்றும் இராசரத்தினம் ஆகியோர் ஒடுவில் வரை தனித் தமிழரசு என்ற நோக்கத்துடன் வாழ்ந்து இறந்தனர் (ஆதாரம்: வர்ணகுலத்தான் அவர்கள் எழுதிய 'புலிப்படைமுதல் விடுதலைப்புலிகள்வரை புலிகளின் வரலாறு!')." --> இவ் ஆவணமானது வெளியக அழுத்தம் காரணமாக 2025ம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் நீக்கப்பட்டது. இறுதிவரை விடுதலைக்காக போராடிய அமைப்பு: தமிழீழ விடுதலைப் புலிகள்/ தவிபு
  21. எமது 'தாகம்' தமிழருக்கு தமிழீழமே தணியாத தாகம் என்ற பொருள் பட்ட முழக்கங்கள் முதன் முதலில் ஒலித்த இடங்கள் : "தமிழீழம் தமிழர் தாகம்" - 19/05/1972 மட்டக்களப்பு தமிழர் கூட்டணி அமைப்பின் மாநாட்டில் "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" - 70களின் இறுதியில் அம்பகாமம் பண்ணைப் பயிற்சி முகாமில் (தமிழீழத் தேசியத் தலைவர்) "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" - 1989ம் ஆண்டு இறுதியில் வன்னியில் துண்டு கொடுத்த அரசியல்துறைப் போராளியின் கடிதத்தின் இறுதி வரி [ஆதாரம்: கண்கண்ட பெண் புலனாய்வுத்துறை போராளி (விலத்தியவர்) எனக்கு வழங்கிய வாக்குமூலம்]
  22. தமிழீழத்தை முதலில் கோரியவரும் தமிழீழம் என்ற சொல் பிறந்த கதையும் "மட்டுநகர் மண்ணைத் தொட்டு நெற்றியிலே பூசு"

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.