Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    34974
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    38773
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    9
    Points
    46808
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    19144
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/25/21 in all areas

  1. யாழ். உறவுகளின்.... கருத்துக்களை மேலோட்டமாக, வாசித்த போது, சுவராசியமான... தகவல்களை அறியக் கூடியதாக இருந்தது. 👍 ஆனால்... இதற்குள், நுழையப் போகின்றேன் என்று, மனிசியிடம் சொன்னாலே... "நீங்கள் இதுவரை, கிழிச்சது காணும், சும்மா... பொத்திக் கொண்டு இருங்கோ" என்று... பேசிப் போடுவார் என்று, பயமாக இருக்கு. சுமார் 15 வருடங்களுக்கு முன்பு, இங்கிலாந்தில் இருந்த.. Adds Free (mobado) என்ற தமிழரின் நிறுவனத்தில், 5000 பவுண்ஸ் போட்டு... கையை, சுட்டுக் கொண்டனான். அதற்குப் பிறகு... மனைவி, என்னை.. சுயமாக முடிவெடுக்க விடுவதில்லை. அது... எமது வாழ்க்கை முழுக்க போதுமான அனுபவம். காசு... போனது பறவாயில்லை. எம்மவன்.. எம்மை... ஏமாத்திப் போட்டானே.. என்ற கவலை... என்றும் மறக்க முடியாதது.
  2. அனுபவங்கள் கருத்துக்களாக வெளிவருகின்றன, சுவி எத்தனை நாள் பட்டினி கிடந்தாரோ😄
  3. அவுஸ்ரேலியாவிலும் காலம் காலமாக வீட்டு விலை மிகைப்படுத்ததாகத்தான் சொல்கிறார்கள், விலை குறையவில்லை, 2020 முதல் காலாண்டில் 26% விலை குறைவு ஏற்பட்டது (பொதுவாக பொருளாதாரத்தில் 20% மேலானா வீழ்சியை பொருளாதார சரிவு என்பார்கள்) ஆனால் எந்த பாதிப்புமில்லாமல் வீட்டு விலைகள் வரலாற்று உச்சத்தை எட்டி நிற்கிறது. மேலே இணைத்த புள்ளி விபரங்கள் பார்க்கும் போது வீட்டு விலைகளுக்கும் வீட்டு உரிமையாளர்களின் வருமான இடைவெளி அதிகரிப்பது போல தோன்றுகிறது. உலகெங்கிலும் சீன முதலீட்டாளர்களின் முதலீடுகள் பெருமளவான வீட்டு விலை அதிகரிப்பிற்கு காரணமாக இருந்தது அந்த நிலை தொடரும் பட்சத்தில் வீட்டு விலை சரிவு காணாது எனவே தோன்றுகிறது. https://www.investopedia.com/terms/t/tulipmania.asp#:~:text=Tulipmania is the story of a speculative bubble%2C which took,some houses at the time.
  4. அட ,ஆமா ..பிரச்சனை பண்ண வந்தா அவங்கதான் பிரச்சனைக்குரியவர்கள் ,அப்புடி இருக்குமோ..?🤭
  5. உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேசுங்கள்...... ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா? ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான்.. விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர். வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள். கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். “அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?” அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். “நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை” வீரன் மகனைக் கேட்கிறான். “பின் யார் அப்பா?” “தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்” வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது. மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் தொடவில்லை. அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள். மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். “இதோ என் அப்பா” திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான். வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான். இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம்.. மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம். இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும். ஆனால் கணவன் தன் மனைவியின் நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான். மனைவியாவது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். ஒரு குடும்பமே தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் அல்லவா? எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம். சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான். புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள். முரண்பாடாக நடந்து கொள்வதாகத் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள். நீங்களாக அனுமானிக்காதீர்கள். அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள். அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள். தவறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடமும் சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம். அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ, மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா? இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயே சாத்தியமாகிறது. அப்படிச் செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே வந்து பிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது. எனவே நீண்டநாள் ஆழமான நட்பும், உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்த தாரக மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடியுங்கள்- வாய் விட்டுப் கேளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.
  6. விருப்பம் இல்லாதமாதிரி நடித்தால் என்ன செய்யிறதாம்......(ராகவன் பார்முலா என்று சொல்லக்கூடாது).......! 🤔

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.