Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    20
    Points
    46979
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    39366
    Posts
  3. Sasi_varnam

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    2197
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    19683
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/04/21 in Posts

  1. டாக்டர்: கணவன் உடம்பை சோதித்துவிட்டு, இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள் எல்லாத்தையும் செஞ்சிக்குங்க...." மாலை 5 மணி : கண்ணீர் மல்க விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்தான் கணவன். துடித்தாள் அவள். கணவன்: எனக்கு உன் கையால வெங்காய தோசையும், கெட்டி சட்னியும் செஞ்சி குடும்மா இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கியிருக்கு. மாலை 7 மணி : ராத்திரி சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வச்சி குடும்மா, இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்... இரவு 10 மணி : நல்ல பசும்பாலில் உங்கையால சொஞ்சமா சக்கர போட்டு எனக்கு குடும்மா..இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு. இரவு 12 மணி : தூங்கும் மனைவியை எழுப்புகிறான். மனைவி : பேசாம படுங்க...காலைல எழுந்ததும் ஆயிரம் வேல இருக்கு. சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பனும், ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும். சுடுகாட்ல புக் பண்ணனும். உங்களுக்கென்ன காலைல எழுந்திருக்கிற வேலை கூட இல்ல. ஜாலியா போயிருவீங்க!! கணவன்:
  2. மேலாடை காத்தாட மின்னலிடை கூத்தாட ......! 👍
  3. கருணாவைப் புலிகளைப் பலவீனப்படுத்தும் தமது நோக்கத்திற்காகப் பாவிப்பது எந்தளவு தூரத்திற்கு வெற்றிகரமானதாக இருக்கும் எனும் ராணுவத்தினரின் கேள்விக்கான பதிலை நான் சற்று விளங்கப்படுத்த முயல்கிறேன். கருணாவின் பிளவானது புலிகளியக்கத்திற்கு முன்னர் ஏற்பட்ட ஏனைய பிளவுகளைக் காட்டிலும் வித்தியாசமானது என்று சிலர் கூறலாம். இதில் முதலாவதாக 1978 இல் பிரபாகரனுடன் முரண்பட்டுக்கொண்டு உமா மஹேஸ்வரன் பெருமளவு வளங்களையும் எடுத்துக்கொண்டு பிரிந்து சென்றது. பின்னர் பிரபாகரனின் இரண்டாம் நிலைத் தளபதியாகவிருந்த ராகவன் 1985 இல் பிரிந்து சென்றார். 1992 இல் மாத்தையாவின் கலகம் நடந்தது. இவை மூன்றுமே பிரபாகரனை "தம்பி" என்று அழைத்த காலகட்டத்துப் போராளிகளால் நடைபெற்றவை. இவர்கள் அனைவருமே பிரபாகரனைக் கொல்ல விரும்பியிருந்தனர். அதற்கான மிகவும் தெளிவான திட்டங்களும் அவர்களிடம் இருந்தன. என்னைப்பொறுத்தவரை கருணாவின் பிரிவென்பது ஆரம்பம் முதல் இறுதிவரை தற்செயலாக நடந்தது என்றே நினைக்கிறேன். இப்பிரிவினைக் கருணா நீண்டகாலமாகத் திட்டமிட்டு வந்தார் என்று நான் நம்பவில்லை. அவர் பிரபாகரனின் தலைமைத்துவத்தை நிராகரிக்கவில்லையென்றும், விடுதலைக்கான பாதையினை விட்டு அகலப்போவதில்லையென்றும் தனது 42 நாள் கிளர்ச்சியின்போது தனது ஆதரவாளர்களிடமும், சமாதானம் செய்ய முன்வந்த பலரிடம் தொடர்ச்சியாகக் கூறிவந்திருந்தார். பிரபாகரனை "அண்ணை" என்று அழைக்கும், பிரபாகரனின் ஆளுமையினை, வெற்றியினினைக் கண்டு தரிசித்த, அவரால் வளர்க்கப்பட்ட போராளிகளின் காலகட்டத்தில் இருந்தே கருணாவும் வந்திருக்கிறார். கிழக்கில் தனித்து இயங்குவதாக கருணா பிரபாகரனுக்கு எழுதிய முதலாவது கடிதத்தில், "நீங்கள் எனக்குக் கடவுளைப் போன்றவர்" என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆரம்பத்தில் கருணாவின் கிளர்ச்சியென்பது, தன்னை சுதந்திரமாக, பிரபாகரனுக்கு நேரடியாகக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு தளபதியாக செயற்பட அனுமதிக்கும் வேண்டுகோளாகவே அமைந்திருந்தது. அத்துடன், புலிகளியக்கத்தின் ஏனைய தலைவர்களோ, தளபதிகளோ தனது நிர்வாகத்தில் தலையிடுவதனை தான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் அவர் பிடிவாதமாகக் கூறியிருந்தார். ஆனால், பிரச்சினை மாசி மாதம் 16 ஆம் திகதியே தொடங்கியது. புலிகளின் ராணுவத் தலைமைச் செயலகம் கருணாவை வன்னிக்கு வருமாறு அழைத்தபோது, அதனை கருணா வெளிப்படையாக நிராகரித்தப்பதாக பிரபாகரனுக்கு அறிவித்தபோதே அது ஆரம்பமாகியது. தான் வன்னிக்குச் சென்றால், புலிகளின் தலைவைரின் கோரிக்கையினை நிராகரித்ததற்குத் தண்டனையாக தனது பதவி பறிக்கப்படும் என்று நிச்சயமாக கருணா தெரிந்து வைத்திருந்தார். ஐரோப்பாவில் கருணா சென்ற இடங்களிலெல்லம் தமிழ் மக்கள் அவரை பெரிய வீரனாகவே பார்த்தார்கள். கூடச் சென்ற தமிழ்ச் செல்வனை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. கருணா சிறிது சிறிதாக, ஆனால் தவிர்க்கமுடியாமல் யதார்த்தத்திலிருந்து விலகிச் செல்ல ஆரம்பித்தார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அச்சாணியே தான் என்றும், அந்தவிடுதலை தன்னால் மட்டுமே சாத்தியமாகும் என்றும் அவர் நம்பத் தொடங்கினார். தனது கிழக்கு மாகாண தாளபதிக்கும் தனக்கும் இருந்த நெருங்கிய நட்பினாலும், நம்பிக்கையினாலும், பிரபாகரன் தனது உளவுத்துறையும், கணக்காய்வுத்துறையும் கருணா பற்றிய முறைகேடுகளை அவரிடம் முன்வைத்தபோது அவற்றை ஏறெடுத்துப் பார்க்கக் கூட விரும்பியிருக்கவில்லையென்றும், கருணா கூறுவதுபோல நிர்வாகத்தில் தலையீடுகள் இருப்பின் அவற்றினை நிவர்த்திசெய்து கருணாவை கிழக்கின் தளபதியாகத் தொடர்ந்து பணியாற்ற பிரபாகரன் விரும்பியிருந்ததாகவும் தெரியவருகிறது. போராட்டத்தின் மீதும், இயக்கத்தின்மீதும் கருணா வைத்திருந்த விசுவாசத்தை ஆணித்தரமாக நம்பியிருந்த பிரபாகரன், கருணா கேட்பவற்றை வழங்கும் விருப்பினைக் கொண்டிருந்தார் என்றும் தெரியவருகிறது. கடந்தவருடம் கருணா வன்னிக்குச் சென்றிருந்தவேளையில், கிழக்கில் தமிழீழ நீதித் துறை மற்றும் காவல்த்துறை நடவடிக்கைகளுக்கு கருணாவின் போராளிகளால் ஏற்படுத்தப்பட்ட இடையூறுகள் தொடர்பாக பிரபாகரன் கருணாவைக் கடிந்துகொண்டதாகத் தெரியவருகிறது. இதனால் கருணா அவமானப்பட்டதாகத் தெரிகிறது. அதேபோல, மட்டக்களப்பு சர்வதேச பாடசாலை விவகாரத்தில் கருணாவின் செயற்பாடு தலைவருக்குத் தெரியவந்தபோது, அதனைக் கூட தோழமையுடனான அறிவுருத்தலினையே பிரபாகரன் கருணாவுக்கு வழங்கியிருந்தார். கருணா மிக உயர் தளபதியாகப் பிரகடணப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து தலைவரிடமிருந்து கருணாவுக்கு பாராட்டுதல்களும், கணிவான அறிவுருத்தல்களும் மட்டுமே கிடைத்துக்கொண்டிருந்தன என்றால் மிகயில்லை. ஆனால் தற்போதோ, தலைவரின் கட்டளையினை வெளிப்படையாக நிராகரித்தமை, பாரிய நிதிமுறைகேடுகள் ஆகிய குற்றங்களுக்காக கருணா தனது தகைமையினை இழக்கப்போவது உறுதியென்று அவர் தெரிந்துவைத்திருந்தார். கருணாவைப் பொறுத்தவரை தனது தலைவரின் முன்னால் இவ்வாறான குற்றவுணர்வுடன் நிற்பது தாங்கொணாத, மிகப்பெரிய அவமானம் என்று கருதினார். ஆகவே இதற்கான ஒரே பரிகாரமாக, "வீட்டுவேலையினைச் செய்யவில்லையென்றால், பள்ளிக்கு ஒழிப்பது போல " தலைவரிப் பார்ப்பதைத் தவிர்ப்பதே ஒரே முடிவென்று அவர் கருதினார். முதலில், கருணாவின் நிராகரிப்பின் பின்னால் வெளிச்சக்திகள் இருக்கின்றனவா என்று புலிகள் ஆராயத் தொடங்கினர். ஆரம்பத்தில் தலைவரின் கட்டளையினை நிராகரிக்கும் கருணாவின் முடிவின் பின்னால் இலங்கை ராணுவத்தின் உளவுப்பிரிவோ அல்லது வெளிநாட்டுச் சக்திகளோ இல்லையென்பதை புலிகள் அறிந்துகொண்டார்கள். கருணாவின் பின்னால் அமெரிக்கா இருக்கலாம் என்று கரிகாலன் கூறியது, செய்தியாளர் ஒருவரினால் அவர் மீண்டும் மீண்டும் துருவப்பட்டு சங்கடத்திற்கு உள்ளானபோதுதான் என்பது வெளிப்படை. இக்கட்டத்தில், தமிழ்ச் செல்வன் மட்டக்களப்பிற்குச் சென்று, கருணாவுடன் சுமூகமாகப் பேசி, அவரை வன்னிக்கும் அழைத்துவரும் முயற்சியில் ஈடுபடுவதற்கு முன்வந்தார். புலிகளின் மூத்த தளபதிகளின் கருத்துப்படி, கருணாவை விசாரித்து, தனது நியாயப்படுத்தமுடியாத செலவுகளுக்கான காரணங்களை வெளிப்படுத்தத் தவறிய குற்றத்திற்காக 4 இலிருந்து 6 மாதாங்கள் தண்டனைக்குப் பின், அவரை மீண்டும் சகல அதிகாரங்களுடனும் கிழக்கு மாகாணத்தின் தளபதியாக நியமிக்கும் யோசனையில் பிரபாகரன் இருந்ததாகத் தெரியவருகிறது.
  4. கருணாவின் துரோகமும் ராணுவத்துடனான அவரின் தொடர்பும் ஆக்கம் : தாரக்கி (தர்மரத்திணம் சிவராம்) காலம் : 7, ஆடி 2004 கருணாவின் பிரிந்து செல்லுதல் எனும் நாடகம் பெரும் எடுப்புடன் ஆரம்பிக்கப்பட்டாலும் கூட, அது இறுதியில் அவமானகரமான தோல்வியாகவே அவருக்கு முடிந்திருக்கிறது. இன்னொரு ஆயுததாரியான டக்கிளஸ் தேவானந்தாவின் கூற்றுப்படி, புலிகளிடமிருந்து பிரிந்துசென்ற கருணா மிக விரைவில் தனது அரசியட்கட்சிபற்றி வெளியே வந்து பொதுமக்களுடன் பேசுவார் என்று தெரியவருகிரது. டக்கிளஸின் ஊதுகுழலான தினமுரசு கருணாவின் இந்த "அரசியல் வெற்றி" நாடகத்திற்கான பிரச்சாரப் பணிகளை மும்முரமாக முடுக்கிவிட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. மிக அண்மைக்காலம் வரைக்கும், "தம்மை இனங்காட்ட விரும்பாத" கிழக்கின் ராணுவ அதிகாரிகளை மேற்கோள்காட்டி தெற்கில் கருணாவின் வீரப்பிரதாபங்களைக் கிலாகித்து எழுதிவந்த பல முன்னணிப் பத்திரிக்கைகள், தளபதி கருணாவும் அவரது தோழர்களும் கிழக்கில் புலிகளியக்கத்திற்கு மரண அடி கொடுத்து வருவதாகவும், புலிகள் பின்வாங்கி ஓடிவருவதாகவுமே பல கட்டுரைகளை வரைந்துதள்ளிக்கொண்டிருந்தன. இதே கருத்தினையே பல ராணுவ அதிகாரிகள் கொண்டிருப்பதும் தெரியவருவதுடன், கொழும்பில் முடிவுகளை எடுக்கும் அதிகாரத் தரப்பிற்கு ஆலோசனை வழங்கிவரும் தெற்கின் புத்திஜீவிகள் கருணாவின் இந்த "பலத்தினை" புலிகளைப் பலவீனப்படுத்தும் ஒரு உபாயமாக அரசு நிச்சயமாகப் பாவிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துவருவதும் தெரிகிறது. அவர்களின் ஆலோசனைப்படி, நாட்டின் இறையாண்மையினைக் கட்டிக் காக்க கருணாவின் பலம் பாவிக்கப்படுமிடத்து, அது சமாதான நடவடிக்கைகளை பாதிக்கும் ஒரு நடவடிக்கையாக பார்க்கப்பட முடியாதென்றும் கூறப்பட்டிருக்கிறது. ஜாதிக ஹெல உறுமயக் கட்சியினர் இதுதொடர்பாக அரசாங்கத்திற்குக் கடுமையான அழுத்தங்களை முன்வைத்து வருகின்றனர். ஹிங்குராகொட விகாரையில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்ட கருணா குழு ஆயுததாரிகளின் விடயம் வெளியே கசிந்ததையடுத்து தெற்கின் பல தலைவர்களும் ராணுவ அதிகாரிகளும் கருணா பலப்படுத்தப்பட்டு, புலிகளை அழிக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க அவர் ஊக்குவிக்கப்படவேண்டும் என்றும் கோரிவருகிறார்கள். அரசையும், தெற்கின் புத்திஜீவிகளையும் பொறுத்தவரை கருணாவின் வெற்றியென்பது, அவர் புலிகளை எவ்வளவு தூரத்திற்குப் பலவீனப்படுத்தப்போகிறார் என்பதிலேயே தங்கியிருப்பதாகத் தெரிகிறது.
  5. சச்சின் சிறந்த ரெஸ்ட் பந்து வீச்சு இந்தியா எதிர் அவுஸ் (1998)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.