Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    24
    Points
    46808
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    19152
    Posts
  3. Paanch

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    8136
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    20023
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/13/21 in all areas

  1. கட்டின ஆக்களின் புலம்பலை பார்த்து பொடியள் பயப்பிடுறாங்களே அண்ணை.
  2. தினம் தினம் யாழ் கள உறவுகள் பல நூறு வந்து ஒரு பதிவு கூட போடாமல், சத்தமில்லாமல் யாழை வாசித்து விட்டுப் போகின்றார்கள். ஆகக் குறைந்தது, இந்த டாப்பிலாவது வந்து உங்கள் வருகையை தெரிவியுங்கள். உதாரணத்துக்கு "நான் உள்ளேன் .. நிழலி" இது கட்டாயம் அல்ல. ஆனால் யாழின் முன்னேற்றத்துக்கு உங்களால் செய்யக் கூடிய ஒரு பங்களிப்பில் இதுவும் ஒன்றாகும். நன்றி
  3. செம ஐடியா......! 😂
  4. ஒரு பயிரை விவசாயம் செய்யிறது பெரிய குத்தமா ஐயா ........! விவசாயம் செய்யிறது குத்தமில்லை......நீ வளர்த்த பயிர்தான் பிச்ரசினை......! 😂
  5. ரஞ்சித் அவர்களே, புதன்கிழமையின் முதலிரு மறுமொழிப் பெட்டியிலும் உள்ள அரசியல் கோமாளிகள் பற்றிய தங்களின் அரத்தின சுருக்க கருத்து அருமை. எம்முடைய கோமாளிகளின் கடந்தகாலத்தைப் பற்றி அறியாதோருக்கு சிறப்பாக சுருக்கமாக எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது. நன்றி!
  6. இது நடைபெறுவதைத் தடுப்பது எங்கணம்? ஒரே வழிதான். சிங்கள பெளத்த பேரினவாத அரசு தொடர்ந்தும் இயங்குவதை முடக்குவது. இன்றிருக்கும் அதன் அதிகார பலத்தினை உடைத்து, அது கம்பீரமாக நிற்கும் வெற்றிமமதையிலிருந்து கீழே வீழ்த்தி தமிழருடன் சமரசத்தில் ஈடுபடுவதன்மூலம், அவர்களின் கோரிக்கைக்கு உடன்படுவதே ஒரே வழியெனும் நிலையினை உருவாக்குவது. நாட்டினை தொடர்ந்து கொண்டுநடாத்துவதற்குத் தேவையான வருவாய்களை பேரினவாதம் பெற்றுக்கொள்ளும் வழிகளைத் தடுப்பது. உல்லாசப் பயணத்துறை, கைத்தொழில்ப் பேட்டைகள் மூலம் கிடைக்கும் வருவாய்களை முற்றாக முடக்குவது. பொருளாதார ரீதியில் தோல்வியடைந்த நாடாக மாற்றுவது. இதனைச் செய்ய தமிழர்கள் தமக்கு முன்னால் இருக்கும் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவது அவசியமானது. அந்த வழிகள் என்னவென்று கண்டுபிடிப்பது இப்போதைக்குத் தேவையானது.
  7. அப்படியானால் தமிழர்களின் எதிர்காலம் என்ன? நிச்சயமாக நடக்கப்போவது இவைதான் 1. தமிழர்களின் தாயகம் இன்று வடக்கென்றும் கிழக்கென்றும் பிரிக்கட்டிருப்பதுபோல, இன்னும் சிறிதுகாலத்தில் கிழக்கிலும், வடக்கிலும் பகுதிகள் சிறிது சிறிதாக அரித்தெடுக்கப்பட்டு பெருத்துவரும் சிங்களப் பகுதிகளுடன் இணைக்கப்படும். 2. தமிழரின் அருகிவரும் தாயகத்தில் சிங்களத்தின் ராணுவமும், கடற்படையும், வான்படையும், காவல்த்துறையும், புலநாய்வு அமைப்புக்களும் தொடர்ச்சியாக நிலை நிறுத்தப்படுவதோடு, அவற்றின் பிரசன்னமும் விஸ்த்தரிக்கப்படும். 3. தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களத்தின் அதிகாரிகளும், அவர்களின்குடும்பங்களும் பெருமளவில் குடியமர்த்தப்படும். 4. தமிழ் மற்றும் முஸ்லீம் சமூகங்கள் சிங்களத்திற்குள் ஊல்வாங்கப்படும் (உடனடியாக இல்லாவிட்டாலும்கூட இன்னுமோர் 50 - 60 வருடங்களில் இது சாத்தியமே). 5. அருகிவரும் தமிழரின் மொழி, கலசார விழுமியங்கள், ச்மய அடையாளங்கள் சிறிது சிறிதாக தொல்பொருள் காத்தல் எனும் பெயரிலும், "முன்னைய சிங்கள பெளத்த சின்னங்கள் " எனும் பெயரிலும் அபகரிக்கப்படும். அப்படி அபகரிக்க முடியாத தமிழரின் தொல்லியல் சின்னங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுதலோ அல்லது வேண்டுமென்றே பராமரிப்பின்றி விடப்படும், இன்று வன்னியின் பல பகுதிகளிலும் அழிந்துவரும் தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட பல தொன்மைவாய்ந்த கட்டிடங்கள் இதற்கு உதாரணம். 6. தொடர்ச்சியான ராணுவ அடக்குமுறைக்கும், நில அபகரிப்பிற்கும் முகம் கொடுக்கும் தமிழினம் ஒன்றில் நாட்டைவிட்டு வெளியேறி சிங்கள் ஆக்கிரமிப்பினை இலகுவாக்கும், அல்லது தனது அடையாலம் துறந்து சிங்களுத்தினுள் உள்வாங்கப்படும். 7. இன்னொரு நூற்றாண்டில் முழு நாடும் சிங்கள மயமாகும்.
  8. அடுத்தது கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் மற்றும் கஜேந்திரன் கூட்டு. சம்பந்தன் - சுமந்திரன் கூட்டிற்கு எதிராக தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கக்கூடியவர்கள் என்று மக்களால் கருதப்பட்டவர்கள். ஆனால், தாந்தோன்றித்தனமான நடவடிக்கைகளாலும், சுயநல அரசியலைனாலும் கூடவிருந்தவர்களின் நம்பிக்கையினை இழந்து பலர் வெளியேறக் காரனமாகவிருந்தவர்கள். கூட்டமைப்பின் தலைமைக்கு மட்டுமல்லாமல், இதர கட்சித் தலைமைகளுக்கும் எதிரான பிடிவாதமான அரசியல் நிலைப்பாட்டினால் இன்றுவரை தமிழ்த் தேசியப் பரப்பில் பல கட்சிகள் ஒன்றுபடுவதை விரும்பாதவர்கள். கூட்டமைப்பிலிருந்து பிரிந்ஹ்டு வந்ததன் பின்னர் தமக்குள் மோதுண்டு, மணிவண்ணன் வெளியேறவும், அரசுக்குச் சார்பான துனைராணுவக் குழுவின் உறுப்பினர்களுடன் சேர்ந்து அரசியல் செய்யவும் காரனமானவர்கள். பாராளுமன்றத்தில் ஆக்ரோஷமாகக் கதைப்பதே அரசியல் எனும் நிலைப்பாட்டில் வாழ்பவர்கள். சித்தார்த்தன், அடைக்கலநாதன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூட்டு. முன்னாள் அரச ராணுவத் துனைக்குழுக்களின் தளபதிகள் அல்லது தலைவர்கள். இந்திய ராணுவம் மற்றும் இலங்கை ராணுவத்துடன் நேரடியான தொடர்பை நெடுங்காலம் பேணிவந்தவர்கள். பல தமிழர்களின் படுகொலைகளுடன் நேரடியாகத் தொடர்புகொணடிருந்தவர்கள். தொடர்ச்சியாக இந்திய ஆதரவு நிலைப்பாட்டினை எடுத்துவரும் இவர்கள், சம்பந்தன் - சுமந்திரன் கூட்டிற்கு எதிரானவர்கள். தமது அரசியல் எதிர்காலமே இவர்களின் ஒரே இலக்கு. தொடர்ந்து அரச ராணுவ குழுக்களாக இயங்கமுடியாத பட்சத்தில் தமது இருப்பிற்காக அரசியலைத் த்ர்ரெந்தெடுத்தவர்கள். அடுத்தது விக்னேஸ்வரன். சம்பந்தன் - சுமந்திரன் கூட்டிற்கு பதிலாக தமிழ் மக்களால் தலைவராகப் பார்க்கக்கூடியவர் எனும் மாயையினை ஏற்படுத்தியவர். ஆரம்பத்தில் நம்பிக்கையினைத் தந்து பல மேடைகளில் தமிழரின் இழப்புக்கள் குறித்து வெளிப்படையாகப்பேசியவர். ஆனால், கூடவிருக்கும் இதர அரசியல்வாதிகளினதும், ஆதரவாளர்களினது பேச்சிற்கு அடிபணிந்து, இலக்கு மாறி இன்று பத்தோடு பதினொன்றாக நிற்பவர். சிறிதரன். கிளிநொச்சி மக்களால் முன்னர் ஆதரிக்கப்பட்டவர். வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் தமிழரசுக் கட்சியூடாக பாராளுமன்ற ஆசனம் என்பதைத்தவிர இவரின் அரசியல் அதிக தூரம் செல்வதில்லை. ஒரு சில பாராளுமன்ற உரைகளும், மாவீரர்களுக்கான வணக்கமும் தன்னைத் தொடர்ந்தும் அரசியலில் வைத்திருக்க உதவும் என்று நம்புபவர். இவர்கள் எவராலும் தமிழருக்கான விடிவு கிடைக்கப்போவதில்லை. இது இவர்கள் அனைவருக்குமே நன்றாகத் தெரியும், ஆனாலும் தமது அரசியல் எதிர்காலத்திற்காக, வருவாய்க்காக அதனைச் செய்கிறார்கள். தமது சொல்கேட்டு, தமது சுரண்டல்களை ஏற்றுக்கொன்டு, தமது பிராந்திய நலன்களுக்கான பகடைகளாகவிருந்து தமக்கு சலாம்போடும் அமைப்பாக புலிகள் இருக்கவேண்டும் என்று இந்தியாவும், மேற்குலகும் எதிர்பார்த்தது. அப்படி புலிகள் இருக்காதவிடத்து அவர்களை அழித்து நாடு முழுவதையும் சிங்களப் பேரினவாதிகளிடம் கொடுப்பதன்மூலம் மொத்த நாட்டையும் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து தமக்குத் தேவையானதை அடைந்து கொள்ளலாம் என்று இந்த அந்நிய சக்திகள் விரும்பியதன் விளைவே எமது மக்களின் அழிப்பும், போராட்டத்தின் வீழ்ச்சியும். இன்று தமிழருக்கான தீர்வு எதனையும் கொடுக்கவேண்டிய தேவை இந்த சக்திகளுக்கு இல்லை. தமக்குத் தேவையானவற்றை சிங்களமே கொடுத்துவரும்வேளையில், சிங்களத்திற்கு எதிராகச் சென்று எதுவுமேயற்ற தமிழர்களை ஆதரிக்க இந்த சக்திகளுக்கு தேவையென்று ஒன்றில்லை. ஆகவேதான் இன்றுவரை தமது பிணாமிகளாக தமிழ்த் தேசியம் பேசும் அரசியல்வாதிகளைக் குழுக்களாகப்பிரித்து தம்பாட்டிற்கு இயக்கி வருகிறார்கள். மனிதவுரிமை மீறள்கள், போர்க்குற்ற விசாரனைகள், சிறுபான்மையினங்களுக்கான அரசியல் பாதுகாப்பு, சிறுபான்மையினக் குழுக்கள் என்று வார்த்தை ஜாலங்களைப் பாவித்து கானல்நீரைப் போன்று இன்றுவரைத் தமிழர்களை நம்பிக்கையுடன் ஏங்கவைத்து தமது நலன்களை மட்டுமே பார்த்துக்கொள்ளும் சக்திகள். இந்தியாவென்றும், அமெரிக்காவென்றும், ஐரோப்பாவென்றும் தொடர்ச்சியாக தமது பிணாமிகளை வரவழைத்து தமிழர்களை "அரசியல்த் தீர்வு ஒன்று வரப்போகிறது" எனும் மாயைக்குள் அடைத்துவைத்திருப்பவர்கள். பலமுறை தாம் பாவித்து வெற்றிபெற்ற "தமிழர்களின் நலன்களைக் காவுகொடுத்து தமது நலன் பேணல்" எனும் அதே கைங்கரியத்தை இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் பாவிக்கத் தயங்காத சுத்த சுயநல சக்திகள். இவர்களாலும் தமிழருக்கென்று தீர்வொன்றும் கிடைக்கப்போவதில்லை.
  9. இன்றிருக்கும் தமிழரின் அரசியத் தெரிவுகள் யார்? 1. அரசுக்குச்சார்பானவர்கள் 2. அரசையும் சாராமல், தமிழ் மக்களையும் சாராமல் ஆனால் தமிழ்த் தேசியம் எனும் பெயரில் அரசியல் செய்பவர்கள் அரசுக்குச் சார்பானவர்கள் டக்கிளஸ், கருணா, பிள்ளையான், வியாழேந்திரன், ஆனந்த சங்கரி போன்றவர்கள். இவர்களால் தனித்து ஒரு முடிவினையோ, தமிழ் மக்கள் நலன் சார்ந்து ஒரு தீர்வினையோ எடுக்க முடியாது. சிங்கள பேரினவாதத்திற்குச் சேவகம் செய்யும் இவர்களினால் இவர்களுக்கும், இவர்களோடு கூடவிருக்கும் ஒரு சில தமிழருக்கும் நண்மைகள் கிடைக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், இவர்களால் தமிழருக்கு ஏற்பட்டுவரும் இழப்புக்கள் மிகவும் பாரதூரமானவை. போர்க்காலத்தில் மக்களினதும், போராட்டத்தினதும் அழிவோடும் நேரடியாகத் தொடர்புபட்டிருந்த இவர்கள், போரின் பின்னரான அரசின் எஜென்ட்டுகளாக செயற்பட்டு வருகின்றனர். இவர்களைப் பயன்படுத்தி தமிழர் தாயகத்தில் நில அபகரிப்பிலும், வளங்களைச் சூறையாடுவதிலும் அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அத்துடன் சர்வதேசத்தில் இவர்களைக் காட்டியே தான் தமிழ் மக்களுக்கு அரசியலில் சம அந்தஸ்த்தினை வழங்கிவருவதாகவும் அரசினால் காட்ட முடிகிறது. உள்நாட்டில் தமிழரின் அரசியல் பிரதிநிதித்துவத்தினை சிறிது சிறிதாகக் குரைத்து, தமிழர்களின் அரசியல்ப் பலத்தினை அழிப்பதில் இவர்களை முன்னிறுத்தியே அரசு செயற்பட்டு வருகிறது. தமிழர்கள் என்பதற்கு அடையாளமாக பெயர்களை மட்டுமே கொன்டிருப்பதைத்தவிர இவர்களால் தமிழ் மக்களுக்கு கிடைக்கும் பயன்கள் என்று எவையுமே இல்லை. 2. தமிழ்த் தேசியம் பேசும் ஏனைய அரசியல்வாதிகள். சுமந்திரன், சம்பந்தன், சிறிதரன், அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விக்னேஸ்வரன், மணிவண்ணன், சித்தார்த்தன் போன்றவர்கள். புலிகளால் தமிழ்த்தேசிய அரசியலுக்கு அழைக்கப்பட்டவர்கள் இவர்கள். அன்று எதற்காக அழைக்கப்பட்டார்களோ, அதற்கு நேர்மாறாக தமிழ்த் தேசிய அரசியலை, அதன் பலத்தை சிறு சிறு துண்டுகளாக உடைத்து நொறுக்குவதில் மட்டுமே தமது நேரத்தையும் வளங்களையும் பாவித்து வருபவர்கள். எடுப்பார் கைப்பிள்லைகளாக பிரிந்து நின்று உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளின் நூற்பொம்மைகளாக ஆளாளுக்கென்று ஒவ்வொரு திசையில் பயணிப்பவர்கள். சம்பந்தன் சுமந்திரன் கூட்டு செய்யும் அரசியல் தமிழ்த் தேசியத்திற்கு அமைவானதில்லை என்பது கண்கூடு. புலிகளை விமர்சிப்பதிலும், அவர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவத்ன் மூலம் மட்டுமே சிங்களவர்களௌக்கு தமிழரின் பிரச்சினைகளை எடுத்துரைக்கமுடியும் என்று நம்புபவர்கள். இந்தியாவினதும், மேற்குலகினதும் தேவைகளுக்காகவும், ஆசைகளுக்காகவும் தமிழரின் உண்மையான கோரிக்கைகளைக் கைவிடவும், அல்லது விட்டுக் கொடுக்கவும் தயங்காதவர்கள். ஐ தே க கட்சியுடனான இவர்களின் நெருக்கத்தினைப் பாவித்து 2015 இலிருந்து 2019 வரையான காலப்பகுதியில் தமிழருக்குச் செய்யக்கூடிய சிறு உதவிகளான கைதிகளை விடுவித்தல், மாகாணசபை தேர்தலினை நடத்துதல், அரசியலமைப்பினை மாற்றுதல் ஆகிய எந்தவித முயற்சியினையும் எடுக்க விரும்பாது வாளாவிருந்தவர்கள். இன்றுவரை இவர்களின் பின்னால் நின்று ஆட்டுவிக்கும் சக்தியெது என்பதை மிகவும் லாவகமாக மறைத்து அரசியல் செய்பவர்கள். இவர்களுடன் அண்மையில் அணிசேர்ந்திருக்கும் சாணக்கியனின் அரசியல் பின்புலம் அலாதியானது. அரச ராணுவத்தின் துனைக்குழுவான பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகராக, பிள்லையானின் பேச்சாளராக தனது அரசியலை ஆரம்பித்தவர் இவர். தனது முன்னைய நிலைப்பாட்டிலிருந்து 180 பாகை திரும்பி தமிழ்த் தேசிய அரசியலினையும், முஸ்லீம்களுடனான நட்பையும்பற்றிப் பேசும் கெட்டிக்காரன். சிங்கலத்திலும், தமிழிலும், ஆங்கிலத்திலும் பரீட்சயமுள்ள இவர் செய்யும் அரசியல் தனக்கானது மட்டும்தான். கிழக்கு மாகானசபை அல்லது இணைந்த வட - கிழக்கு மாகாணசபை முதல்வராகும் கனவில் வாழ்பவர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.