Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. நிலாமதி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    11531
    Posts
  2. இ.பு.ஞானப்பிரகாசன்

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    6
    Points
    31
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    19152
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    4
    Points
    46808
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/23/21 in Posts

  1. இதை நாங்கள் “விண்” என்று சொல்லுவோம். வில்லு மாதிரி முறியாமல் வளையக்கூடிய தடி என்றால் மூங்கில் தடி அல்லது கமுகம் சிலாகை (தடி) பாவிப்போம். படலம் அல்லது தட்டி (காணொளியில் இருக்கும் செவ்வக வடிவ பட்டம்) க்கும், கொக்கு, பிராந்து போன்ற பட்டங்களுக்கும் விண்பூட்டித்தான் ஏத்துவோம். விண் செய்ய தேவையானவை: விசை - வில்லு மாதிரி வளையக்கூடிய மூங்கில் அல்லது கமுகம் தடி. விசையை வழுவழுப்பாக இணக்கி, நடுவில் வைத்து பலன்ஸ் பார்த்து, முறியாமல் வளையக்கூடிய மாதிரிச் செய்யவேண்டும். நார் - பார்சல் ரேப் அல்லது பனம் நார், அல்லது உரப்பையில் இருந்து கிடைக்கும் பொலித்தீன் நார் (1 1/2 முழ விசைக்கு மேல் பாவிக்கமுடியாது!) வெடிப்பு இல்லாத பார்சல் ரேப்பாக எடுத்து, பிசிங்கானால் “வாட்ட”வேண்டும். பிசிங்கான் உடைந்த போத்தல் துண்டு. சிலவேளை உடைந்த பல்ப் துண்டும் பாவிக்கலாம். வாட்டுவது என்றால் நாரை சீராக செம்மைப் படுத்துவது. அப்போதுதான் பிசிறில்லாமல் கூவும்! காணொளியில் உள்ள விண் “அழறுகின்றது” (நாரில் வெடிப்பு இருக்கலாம் அல்லது ரென்சன் போதாது!). பனம் நார் செய்வது மிகவும் கடினம். முதலில் வடலிப்பனையில் நீண்ட ஓலையைக் கண்டுபிடிக்கவேண்டும். மூன்று நாலு முழ நீளமான பச்சை ஓலையின் தடியில் நீளப்பாட்டுக்கு பிசிங்கானால் நாரை வெட்டியெடுக்கவேண்டும். இது சரியாகக் கிடைக்க மிகவும் பொறுமை தேவை. அதை வெடிக்காமல் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்னர் “வாட்ட”வேண்டும். நார் அறாமல் இருந்தால் அதிஸ்டம்! கொக்கு, பிராந்துப் பட்டங்களுக்கு பனம்நார் கலாதியாக இருக்கும்! அவை ஜா(சா)டும்போது விண் நன்றாகக் கூவும்! கூவைகள்- நாரை இழுத்துப் பிடித்துக்கொள்ள. இவற்றை கிளுவைத் தடியில் வெட்டி துளை போட்டுச் செய்வது. — காணொளியில் வரும் முதலாவது படலம் அளவு நானும் எனக்கு கூட்டுக்களும் கட்டி ஏத்தினோம். 😀 அதை ஒரு “மிஷனாக” இரண்டு மூன்று நாட்களில் செய்தோம். ஊரில் பலரது வேலிகளை வெட்டி தடிகளைப் பெற்றுக்கொண்டோம். நாங்கள் விண்ணை பட்டத்தின் மேல் விளிம்பில் இருந்து 2-3 இஞ்சுகள் கீழேதான் கட்டுவோம். அப்போதுதான் முழுநார் மீதும் காற்றுப் படாமல் வெளிநீட்டிய நாரின் பகுதிகளில் மட்டும் காற்றுப் படும். இது அதிர்வின் frequency ஐக் கூட்டும் என நினைக்கின்றேன்!
  2. மீம்ஸ் என்று சொல்கிறோம்.... சிம்பிளா சிரித்து விட்டு போகிறோம். அதன் பின்னால் உள்ள சிந்தனை, வேலைகள்.... சும்மா சொல்ல முடியாது. இந்த மீம்ஸ் எவ்வளவு சிம்பிளா ஒரு விடயத்தை சொல்லுது
  3. நண்பர்களுடன் சேர்ந்து ராட்சத அளவிலான பட்டத்தை பறக்க விட்ட இளைஞர் ஒருவர், பட்டத்தின் கயிற்றை விட மறந்ததால் கயிற்றுடன் ஆகாயத்தில் பறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கவுண்டமணி பட காமெடி போல நடந்த நகைச்சுவை சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. 'நினைவுச்சின்னம்' படத்தில் இடம் பெற்ற காமெடிக்காட்சியில் ராட்சத பலூனில் இணைத்திருக்கும் கயிற்றை கெட்டியாக பிடித்திருக்கும் செந்திலை, கயிற்றோடு சேர்த்து வானில் பறக்கவிட்டு "இந்த பக்கம் போனால் பஞ்சாப்பு... அந்தப்பக்கம் போனால் சிலோனு..." என்று கவுண்டமணி அடிக்கும் காமெடி காட்சியை மிஞ்சும் வகையில் சம்பவம் ஒன்று யாழ்பாணத்தில் அரங்கேறி உள்ளது யாழ்பாணம் வடமராட்சி பருத்தித்துறை புலோலி கம்பாவத்தை கிராமத்தில் இளைஞர்கள் பலர் சேர்ந்து, 13 அடி உயரம் கொண்ட பெரிய அளவிலான பட்டம் செய்து அதனை பறக்கவிட ஆயுத்தமாகி கொண்டிருந்தனர். பல இளைஞர்கள் சேர்ந்து கயிற்றை பிடித்துக் கொண்டு பட்டத்தை வானில் ஏற்றிக் கொண்டிருந்த வேளை பட்டம் வேகமாக பறக்க ஆரம்பித்தது அப்போது முன் வரிசையில் இருந்த இளைஞர் பட்டத்தின் கயிற்றை விடுவதற்குள் அவருக்கு பின்னால் நின்ற இளைஞர்கள் கயிற்றை விட்டு விட்டனர். அடுத்த நொடி காற்றின் வேகத்துக்கு ஜெட்டாக வானை நோக்கி பறந்த பட்டத்தோடு அந்த முன்வரிசை இளைஞரும் தூக்கிச்செல்லப்பட்டார் முன்னதாக இளைஞர்கள் பட்டம் ஏற்றும்போது அதன் கயிற்றை ஒருமரத்தில் கட்டிவிட்டே பட்டம் ஏற்றியிருக்கிறார்கள், இதனால் பட்டத்தை ஏற்றிய இளைஞர்கள் அனைவரும் அதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறிப்போயினர் பட்டத்தின் கயிற்றை விடாமல் கெட்டியாக பிடித்திருந்த நிலையில் சுமார் நாற்பது அடி உயரத்தில், 'யாராவது காப்பாற்ற வரமாட்டார்களா ?' என்ற எதிர்பார்ப்பில் ஐந்து நிமிடத்திற்கு மேல் தொங்கிக்கொண்டிருந்தார் அந்த இளைஞர் ஹீரோயினை காப்பாற்ற செல்லும் ஹீரோ போல பட்டத்தின் கயிற்றில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த இளைஞரை மீட்க இயலாமல் அனைவரும் வானத்தை அண்ணாந்து பார்த்தபடி நின்றிருந்தனர். இதையடுத்து 'தன் கையே தனக்கு உதவி' என்று சமயோசிதமாக யோசித்த அந்த பட்டக் கயிறு ஜேம்ஸ் பாண்டு, கயிற்றின் பின் நகர்ந்து வர ஆரம்பித்தார் மெல்ல மெல்ல கயிற்றில் தொங்கியபடியே நகர்ந்து, வந்த அந்த இளஞர் சுமார் இருபது அடி உயரம் வரை வந்தார், அதற்கு மேல் நகர இயலாத நிலையில் தனது கையை விட்ட நிலையில் தோட்டச் செய்கைக்காக பண்படுத்தப்பட்ட நிலத்தில் விழுந்ததால் உயிர் தப்பினார் விழுந்த வேகத்தில் உடலில் ஏற்பட்ட உட் காயங்களுக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். உடனடி சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமாக உள்ளதாக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை மருத்துவர்கள் தெரிவித்தனர் இதற்கிடையே அந்தரத்தில் பட்டத்தின் கயிற்றை பிடித்துக் கொண்டு அந்த பேட்மேன் தொங்கிக் கொண்டிருந்த போது, 2K லிட்டில் பிரின்சஸ் ஆன அவரது மகள், தந்தை கயிற்றில் தொங்கிய நிலையில் பறப்பதை கண்டு ஆபத்தை உணராமல், ஆச்சரியத்தில் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. பாலிமர் செய்திகள்
  4. 13 அடி உயர பட்டம் அது வடமராட்சி பகுதிகளில் படலம் என்பார்கள் நெருப்பில் இதமாய் வாட்டிய வின் அதை செய்வது ஒரு கலை போல் வயதானவர்கள் குறிப்பிட்ட சிலர் தான் செய்வார்கள் படத்தில் காணப்படும் படலத்துக்கு வாலா நீளமாய் இருந்தால் நல்ல பிள்ளை போல் கூவிக்கொண்டு இரவிலும் சத்தம் போட வைப்பார்கள் அந்த அதிர்வு சத்ததில் மழை வெள்ளத்துக்கு வரும் பாம்புகள் நச்சு பூச்சிகள் பழைய இடத்துக்கு போகவைத்துவிடும் என்பார்கள் பேய்க்காட்டால் தான் . சிலநேரம் வேணுமெண்டே வாலாவை பாதியை அறுத்துவிடுவார்கள் அதன்பின் காத்தவராயர் கூத்துபோல் வெறிகாரன் போல் அந்த மூலைக்கு ம் அடுத்த மூலைக்கும் பாய்ந்து கொண்டு இருக்கும் விடிய விடிய வின் அதிர்வு வேறு . பகிடி இனிமேல்தான் குட்டி படலம்கள் வாலா முழுக்க பழைய பிளேடு களை கட்டி தொங்க விட்டவாறு உபயம் பாபர் சொப் சண்டை படலங்கள் வானில் திடிரென தோன்றும் அப்படி கூவும் படலம்களை அட்டாக் பண்ணி அறுந்து போக பண்ணும் இப்படி குளிர்கால பட்ட காலம் முழுக்க பருத்திதுறை தொடக்கம் தொண்டமானறு வரை கலகலப்பாய் போகும். அதிலும் ஐந்துமைல் நீளமும் அரைமைல் அகலமும் உள்ள வல்வெட்டித்துறையில் வீட்டுக்கு வீடு ஏதாவது பட்டம் ஏற்றி வைத்து இருப்பார்கள் பருத்தி முனையில் இருந்து சந்நிதியான் கோவில் வரை வாடைக்காத்து வந்தாலே காணும் ஒரே களேபரம்தான் பருத்திதுறை ஓடைக்கரையில் கொக்கு பட்டமும் பாராத்தை எனும் பட்டமும் கட்டுபவர்கள் வயதானவர்கள்தான் முன்பு பட்டப்போட்டி பருத்தித்துறையில்தான் நடப்பது உண்டு .
  5. எல்லாரும் கைய விட்டா பிறகு ஏன் பிசின்போட்டு ஒட்டின மாரி பிடிச்சு கொண்டு நிண்டவர் எண்டு தான் விளங்கேல்ல. ஒரு 3 அடி கிளம்பினோனயைவது விட்டிருக்கலாம். எல்லாரும் கைய விடுறா எண்டு வேற கத்திறாங்கள்.
  6. இவரு பரம்பரபட்டக்காரன் இல்ல போல.. பஞ்சத்துக்கு பட்டம் ஏத்த போய் ஆப்புல அவரே ஏறி உக்காந்து இருக்கார்… பாவத்த..
  7. நான் ஏதோ பெடியன் எண்டு நினைச்சன்... 😁 பிள்ளையும் இருக்குது... வாங்கிக் கட்டியிருப்பார் மனிசீட்ட... இனி பட்டம் விடுறன் எண்டு வெளிக்கிட்டால்.... வீட்டில இருந்து நேரா ஆசுபத்திரி போவார்... 😎
  8. சரி இதையும் பாருங்கள் 👋

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.