Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. புரட்சிகர தமிழ்தேசியன்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    16468
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    33600
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46783
    Posts
  4. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    7
    Points
    15790
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/28/22 in all areas

  1. ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்துவர் கூறுகிறார்: "அதெல்லாம் ஒன்றுமில்லை, ஜெர்மனியில் மூளையின் ஒரு பகுதியை எடுத்து, அதை வேறொரு மனிதனுக்குப் போட்டோம், 4 வாரங்களில் அவர் வேலை தேடுகிறார்."..!!! ரஷ்ய மருத்துவர் கூறுகிறார்: "அன்பர்களே, நாங்கள் ஒரு மனிதனின் பாதி இதயத்தை எடுத்து, மற்றொருவரின் மார்பில் வைத்தோம், 2 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! இலங்கை மருத்துவர் சிரிக்கிறார்: "நீங்கள் அனைவரும் எங்களுக்கு பின்னால் இருக்கிறீர்கள், சில ஆண்டுகளுக்கு முன்பு, மூளை, இதயம், கல்லீரல் இல்லாத ஒருவரை நாங்கள் ஜனாதிபதியாக்கினோம். இப்போது நாடு முழுவதும் வேலை தேடுகிறது!!!"
  2. மட்டக்களப்பு மக்களிடமிருந்து கருணா மாதா மாதம் எண்பது லட்சம் ரூபாய்களை கப்பமாகப் பறித்து வந்தார் - கருணா குழு முக்கியஸ்த்தர் செவ்வி மூலம் : லங்கா கார்டியன் காலம் : செப்டெம்பர் 29, 2007 "நாங்கள் கருணா அம்மானை ஒரு மக்கள் தலைவானகவே பார்த்துவந்தோம். ஆனால், அவர் அப்படியில்லை என்பது இப்போது தெளிவாகிறது" தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்து பிரிந்து சென்று ராணுவத்துடன் சேர்ந்து, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் துணைராணுவக் குழுவை அமைத்து இயக்கிவரும் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் மட்டக்களப்பில் மக்களை அச்சுருத்தி பெருந்தொகைப் பணத்தினைக் கப்பமாகப் பெற்றுவருவதாக அவரது குழுவின் முக்கியஸ்த்தர் ஒருவர் லங்கா கார்டியன் பத்திரிகைக்குப் பேட்டியளித்திருக்கிறார். கடந்த இரவு வழங்கப்பட்ட இச்செவ்வியில், அந்த முக்கியஸ்த்தர் மேலும் கூறும்போது கருணாவால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாதம் ஒன்றிற்கு குறைந்தது எண்பது லட்சம் ரூபாய்கள் மக்களிடம் இருந்து கப்பமாக அறவிடப்பட்டு வருவதாகக் கூறுகிறார். மட்டக்களப்பு நகரிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இயங்கும் வியாபார நிலையங்கள், வீடியோக் கடைகள், மதுபான விற்பனை நிலையங்கள் மற்றும் ஏனைய தனியார் சில்லறை விற்பனை நிலையங்களிலிருந்து கருணா இக்கப்பங்களைப் பெற்றுவருவதாக அவர் கூறுகிறார். தமது குழுவிற்குள் அண்மையில் ஏற்பட்டிருக்கும் உள்வீட்டுப் பிணக்கினையடுத்து கருணா சில நாட்களுக்கு முன்னதாக நாட்டினை விட்டு பெருமளவு பணத்துடன் தப்பியோடிவிட்டதாகக் கூறும் இந்த முக்கியஸ்த்தர், அவரின் உயிருக்கு தமது குழுவிற்குள் இருந்தே பாரிய அச்சுருத்தலை எதிர்கொண்டுவந்த கருணாவுக்கு நாட்டை விட்டு தப்பியோடுவதைத்தவிர வேறு வழியிருக்கவில்லையென்றும் தெரிவித்தார். லங்கா கர்டியனுடனான கருணா குழு முக்கியஸ்த்தரின் பேட்டி கீழே : "அவர் தப்பியோடிவிட்டார், ஆனால் அவரது தாக்கம் இன்னமும் இங்கே அப்படியே இருக்கிறது, நாங்கள் அவரை ஒரு நல்ல மக்கள் தலைவனாகவே எண்ணியிருந்தோம், ஆனால் அவர் அப்படியில்லை என்பது தெளிவாகிறது". கடந்த வருட இறுதியில் பதியப்படாத அரசியல் கட்சியாக தனது குழுவை கருணா ஆரம்பித்திருந்தார். ஆனால், ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்தே பாரிய உள்வீட்டு குத்துவெட்டுக்களை அவரது கட்சி சந்தித்து வந்ததுடன், ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் ஒத்துழைத்துச் செயற்பட கருணா ஒருபோதும் விரும்பியிருக்கவில்லை. தனது கட்சிக்குள் நடைபெற்று வந்த பல படுகொலைகளைப் பற்றித் தன்னும் கருணா அக்கறை செலுத்தவில்லை. திலீபன் மற்றும் வீரா ஆகிய முக்கியஸ்த்தர்கள் உடபட பல கருணா உறுப்பினர்களின் படுகொலைகள் பற்றி கருணா அலட்டிக்கொள்ளவில்லை. "பிள்ளையான் குழுவைப் பொறுத்தவரை திலீபன், வீரா ஆகியோரைக் கொல்வது அவசியாமனது என்று கருதப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த பிள்ளையான் இவர்களைக் கொல்வதன்மூலம் புலிகளின் புலநாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மானுக்கு தம்மைப்பற்றிய செய்திகள் செல்வதைத் தடுக்க முடியும் என்று நம்பினார். ஆகவே புலிகளுடன் தொடர்பிருக்கலாம் என்று கருதப்பட்ட பல உறுப்பினர்களை கட்சிக்குள்ளேயே அவர்கள் கொன்றுதள்ளினார்கள்" என்று அந்த முக்கியஸ்த்தர் கூறுகிறார். "கருணா குழு இரண்டாகப் பிளவுபட்டபின்னர் எம்மில் ஒருகுழுவினருக்கு இலங்கை ராணுவமும், மற்றைய குழுவுக்கு இலங்கைக் கடற்படையும் உதவிவந்தன. ஆயுதங்கள், அடைக்கலம் உள்ளிட்ட சகல வசதிகளும் இக்குழுக்களுக்கு இலங்கை அரசினால் வழங்கப்பட்டன". "கருணா பிரபாகரனிடமிருந்து பிரிந்து வெளியே வந்தபோது, எமது மக்களுக்கான நல்லதொரு தலைவர் தோன்றிவிட்டார் என்றே நாம் நம்பினோம். ஆனால் நாளடைவில் எந்தப் பிரபாகரனின் கீழ் நாம் அல்லற்பட்டோம் என்று கருதினோமோ, அதைவிட அதிகமான இன்னல்களை நாம் கருணாவின் கீழ் அடைந்தோம், ஆனால் பெயர் மட்டுமே மாறியிருந்தது". "புலிகளின் இலக்கு மாறிப்போனதைப் போன்றே, கருணாவின் இலக்கும் முளையிலேயே மாறிப்போனது. ஆனால், இலங்கை அரசுக்கும் ராணுவத்திற்கும் இது வரப்பிரசாதமாகவும், மிகச்சிறந்த சந்தர்ப்பமாகவும் மாறிப்போனது. எம்மைப் பாவித்தே புலிகளை அவர்களால் அழிக்க முடிகிறது" என்று அவர் மேலும் கூறினார்.
  3. மனைவி ஒருநாள் தன் கணவனுக்கு பிடித்த மீன் குழம்பு சமைத்தாள். இன்று எப்படியும் பாராட்டு வாங்க வேண்டும் என்று காத்திருந்தாள். தெரு முழுதும் மீன் குழம்பு வாசனை. கணவன் வந்ததும் வேகமாக சாப்பிட உட்கார சொல்லி மனைவி சாப்பாடு பரிமாறினாள். என்னங்க குழம்பு எப்படி இருக்கு ? நல்லா இருக்கு ஆனாலும் எங்கம்மா கைப் பக்குவம் உனக்கு இல்ல, எங்கம்மா வைப்பாங்க பாரு மீன்குழம்பு தெருவே மணக்கும்... அப்பப்பா ருசி சூப்பரா இருக்கும். அம்மா குழம்பின் ருசியை பாராட்டி கணவர் எழுந்தார். மனைவிக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. தன் கணவன் குழம்பின் ருசியை பாராட்டததை நினைத்து. எப்ப பாரு "அம்மா...அம்மான்னு அவரு அம்மாவைத்தான் தூக்கி வச்சு பேசுவாரு என்று முணுமுணுத்தாள். அப்போது அவளுடைய மகன் சாப்பிட வந்தான். மகன் ஒருவாய் சாப்பிட்டு விட்டு அம்மாவை பாராட்ட ஆரம்பித்தான். அம்மா "சூப்பர்மா " எப்படிம்மா இப்படி சமைக்கறீங்க ? தெருவே மணக்குது. உங்க அளவுக்கு யாராலயும் மீன்குழம்பு வைக்க முடியாதும்மா " என பாராட்டினான். அவளுக்குப் புரிந்தது... ஒரு மகன் யார் கையில் சாப்பிட்டாலும் தன் தாயின் சமையலைத் தான் அதிகம் பாராட்டுவான் என்று. நம் மகனும் அம்மா.. அம்மா என்றுதானே உயர்த்திப் பேசுகிறான். மகன் பேசுவது தவறில்லை என்றால் கணவன் பேசியதும் தவறில்லை தான் என்று புரிந்து கொண்டாள். புரிந்து கொள்ளும் ஒரு மனைவி இருந்தால் அவளும் அம்மாதான் கணவனுக்கு... முகநூலிருந்து...
  4. அந்தப் பேட்டி........ கேள்வி : வணக்கம் கருணா குழு முக்கியஸ்த்தர் : வணக்கம் அண்ணை, இதுகுறித்து உங்களை தொந்தரவு படுத்தியமைக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் நான் உங்களுடன் கருணா தொடர்பான பல ரகசிய விடயங்களைப் பேச விரும்புகிறேன், அதனைச் செவிமடுப்பீர்களா? கேள்வி : அதுசரி, ஆனால் இப்போது அதிகாலை 12:30 மணி, பரவாயில்லை சொல்லுங்கள்? க.கு.மு : நன்றி கேள்வி : கேர்ணல் கருணாவுக்கு என்ன நடந்தது? க.கு.மு: எங்களை நட்டாற்றில் விட்டுவிட்டு அவர் நாட்டைவிட்டுத் தப்பியோடிவிட்டார். கேள்வி : அவரை ஏன் கருணா என்று மட்டும் அழைக்கிறீர்கள்? ஏன் அவரது கேர்ணல் எனும் மரியாதைப் பெயரினைத் தவிர்க்கிறீர்கள்? அவர் உங்களது தலைவர் இல்லையா? க.கு.மு: முந்தி அவரைத் தலைவராகத்தான் நினைத்திருந்தோம், ஆனால் இப்போது அவர் அந்தத் தகுத்திக்குப் பொருத்தமற்றவர் என்பதனை நிரூபித்துவிட்டார். அவருக்கும், அவர் எதிர்த்துச் செயற்படப்போவதாகக் கூறிய பிரபாகரனுக்கும் எந்தவேறுபாடும் இல்லை. இருவரும் எமது மக்களையும், போராளிகளையும் நட்டாற்றில் விட்டு விட்டனர். கேள்வி : கருணா எங்கு தப்பியோடியிருக்கிறார்? அவர் இப்போது எங்கு வாழ்கிறார்? க.கு.மு: அவர் இப்போது எந்த நாட்டில் வாழ்கிறார் என்பது உண்மையாகவே எனக்குத் தெரியாது. ஆனால், அவர் நாட்டைவிட்டுத் தப்பியோடிவிட்டார் என்பது எம் எல்லோருக்கும் இப்போது தெரியும். அவர் ஒளிந்திருக்கும் இடம்பற்றி நான் பேசமுடியாது, அவரது பாதுகாப்பு முக்கியமல்லவா? கேள்வி : தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு என்ன நடந்தது? க.கு.மு: அது இப்போது இரண்டாகப் பிளந்துபோய்விட்டது. கருணாவின் சுயநலத்தாலும், இலக்குத்தவறிய இயல்பினாலும் இது நடந்தது. கேள்வி : அப்படியானால் உங்களின் அரசியல்ப்பிரிவுக்கு என்ன நடந்தது? க.கு.மு: அது ஒரு முற்றான கேலிக்கூத்து. கருணா தனது உறவினர்களையும் நெருங்கிய நண்பர்களையுமே அந்த அரசியல் கட்சிக்கு நியமித்தார். கேள்வி : மட்டக்களப்பிலும், அதனை அண்டிய ஏனைய கிழக்குப் பகுதிகளிலும் இப்போது என்னதான் நடக்கிறது? க.கு.மு: பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால், இன்றுவரை கருணா குழு உறுப்பினர்கள் அப்பாவிக் கிழக்கு மக்களிடம் கட்டாய கப்பம் அறவிடுதலை செய்துவருகின்றனர். இப்படியாக மக்களைக் கட்டாயப்படுத்தி சேர்க்கப்படும் கப்பப் பணம் கருணாவின் வங்கிக் கணக்கை நிரப்பி வருகின்றன. கேள்வி : மட்டக்களப்பில் ஒருமாதத்திற்கு கருணாவுக்காக எவ்வளவு பணம் கப்பமாக அறவிடப்பட்டு வருகிறது? க.கு.மு: பெருமளவான பணம். நானும் இந்தக் கப்பம் அறவிடல் நடவடிக்கையில் கருணாவுக்காக ஈடுபட்டிருக்கிறேன். எனக்குத் தெரிந்தமட்டில், கருணா ஒருமாதத்திற்கு குறைந்தது 80 லட்சம் ரூபாய்களைக் கப்பமாக அறவிட்டு வருகிறார். கேள்வி : கருணாவுக்கு அரசாங்கத்தினால் பணக் கொடுப்பனவுகள்கிடைக்கின்றனவா? க.கு.மு: ஆம், நிச்சயமாக. கேள்வி: அரசிடமிருந்து ஏனைய சலுகைகள் கிடைக்கின்றனவா? க.கு.மு: ஆம், கிடைக்கின்றன. ஆனால், அந்த விபரங்களைக் கூறுவது எனது பாதுகாப்பிற்கும், கருணா குழுவினரின் பாதுகாப்பிற்கும் அச்சுருத்தலாக மாறிவிடும், அதனால் அதனைத் தவிர்த்து விடுகிறேன். கேள்வி : உங்களின் எதிர்காலம் தொடர்பாகவும், தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் அமைப்பின் எதிர்காலம் தொடர்பாகவும் உங்களின் புரிதல் என்ன? க.கு.மு: புலிகளின் எதிர்காலம்போலத்தான் எமது எதிர்காலமும். புலிகளை பலவீனமாக்கி அழிக்க கருணாவின் பிளவு காரணமாக இருந்ததுபோல எமது அமைப்பு பிரிந்து அழிக்கப்படவும் கருணாவே காரணமாக இருக்கிறார். இன்று எம்மை நடத்துவதும், ஆட்டுவிப்பதும் அரசாங்கமும், அவர்களது ராணுவப் புலநாய்வுத்துறையினரும்தான் தான். இந்த மொத்த அவலநிலைக்கும் காரணமே கருணாதான். முற்றும்
  5. அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே...😍
  6. இவர்தான் அசாதாரண சாதனைப் பெண் .......! 💐 நன்றி நுணா.....! தண்டனை உதையில் தடுமாற்றம்.......! 😂
  7. " ஒட்டக பாலில் தேத்தண்ணி போடுன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கன்..! " ☺️..😊
  8. வாராயோ வெண்ணிலாவே......! 😍
  9. ஆஹா என்ன ஆட்டம் ,,குரங்காட்டம் ,,கரகாட்டம் https://www.facebook.com/then.rajan.14/videos/233303388994416/
  10. ஏக்கய ராஜ்ய நாட்டில் உள்ள முல்லைத்தீவில் சிங்கள இராணுவம் அருவிவெட்டி சூடடித்த போது எடுத்த படம்.
  11. வேகம் கூடும்போது அருகில் சாலையோரம் வருபவர்களை கவனிக்கும் திறன் குறையும் என்பதை விளக்கும் படம்......! 👍
  12. காலையில் யாரும் குடிப்பதில்லை என்றாலும் நேற்று அடித்த போதை இறங்கிவிட்டதா என்டு செக் பண்ணி போட்டு வண்டிய குடுங்கப்பா .. திராவிடம் - டாஸ்மார்க்..😢
  13. சீமான் சொல்வது சரிதான் ஈழம்தேசம் சென்று உறுதிப்படுத்திய தமிழ் ரக்கர் ....😎
  14. நதியா நடிமின் தந்தை அவள் குழந்தையாக இருந்தபோது தலிபான்களால் கொல்லப்பட்டார். அவள் 11 வயதில் ஒரு டிரக்கில் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி, இறுதியாக டென்மார்க்கை வந்தடைந்தாள். இப்போது அவர் 200 கோல்களை அடித்துள்ளார் மற்றும் டேனிஷ் தேசிய அணியை 99 முறை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். 11 மொழிகளைப் பேசுகிறார் மற்றும் சர்வதேச விளையாட்டுகளில் மிகவும் சக்திவாய்ந்த பெண்களின் Forbes பட்டியலில் உள்ளார். இந்த வாரம், கால்பந்து விளையாடிக்கொண்டே 5 ஆண்டுகள் படித்து மருத்துவராக தகுதி பெற்றார்.
  15. ஓஓ ,,,ரொம்ப தூரம் ஓடி எழும்பலை சும்மா டக்கென்னு எழும்பின மாதிரி ,,இல்லை பறந்தமாறியிருக்கு ,அருமை
  16. https://www.facebook.com/mathivananml/posts/10223883738495762 மானின் இப்படி ஒரு பாச்சல் பார்த்திருக்கிறீர்களா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.