"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! This document is solely made for an educational purpose only. இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழரின் கடற்படையால் அணியப்பட்ட சீருடைகள் பற்றியே. ஈழத்தமிழரின் கடற்படையான கடற்புலிகள் தரைப்பணிச் சீருடை(Land work uniform) மற்றும் கடற்கலவர் சீருடை(Sailor uniform) ஆகிய இரண்டையும் அணிந்திருந்தனர் என்பது எல்லோரும் மனதில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். சரி இனி நாம் விதயத்திற்குள் போவோம். முதலில் ஒன்றினை உங்களிற்குச் சொல்ல விரும்புகிறேன். இங்கே நான் கூறியிருக்கும் தொப்பிகள் பற்றிய தகவல்களை எல்லாம் மிக விரிவாக முதல் மடலத்தில் ஏற்கனவே கூறிவிட்டேன். அதைக் காண இங்கே சொடுக்கவும்: விடுதலைப் புலிகளின் சீருடைகள் பற்றி:- விடுதலைப் புலிகளின் முதன்மைச் சீருடையினை வரிப்புலி என்றும் வரியுடை(சேர்த்தே எழுதுதல் வேண்டும்) என்றும் அழைப்பர். நிறங்களை முன்னொட்டாக சேர்த்து வழங்கும் போது... நீல வரி பச்சை வரி கறுப்பு வரி அதில் இருக்கும் அந்தக் கோடுகளை வரி என்று விளிப்பர். வரியின் உட்புறத்தில் இந்நிறங்கள் ஏதும் தெரியாது. அதில் வரியில் உள்ள மூன்று நிறங்களில் எது மெல்லிய நிறமாக உள்ளதோ அதுவே உள்நிறமாக இருக்கும். அந்த சீருடையினை அணியும் போது படங்கு விரிப்பினை அணிவது போன்ற கனத்தை உணர்வீர்கள். இடது கையின் தோள்மூட்டிற்கு கீழே புயந் தொடங்கும் இடத்தில் 3 தூவல்(pen) வைப்பதற்கு ஏற்ப குழல் போன்று 3 குதைகள்(loop) இருக்கும். அவற்றின் கீழ்ப்பகுதி அடைக்கப்பட்டிருக்கும். தோளில் தோள் மணைக்கான(shoulder board) துண்டங்கள் இருக்கும். தோள் தொடங்கும் இடத்திற்கு அருகில் தோள் மணை துணிக்கு குறுக்காக ஒரு துண்டமானது (small piece of cloth) தோள் மணையோடு பொம்மிக்கொண்டு நிற்பதாக தைக்கப்பட்டிருக்கும்.(தெளிவிற்கு கீழே உள்ள பிரசாந்தன் அண்ணாவின் படத்தை காண்க) இது பெரும்பாலானோரின் வரிப்புலியில் இருந்தது. ஆனால் வரிச்சீருடை அல்லாத ஏனைய சீருடைகளில் எப்பொழுதும் இருந்தது. அதுவும் 2002 ஆம் ஆண்டிற்குப் பின் எவருடைய சீருடையிலும் இல்லை. குப்பி & தகடு வெளியில் தெரியாது. மேற்சட்டையால் ஏற்படும் மறைப்பால் உள்ளிருக்கும். மேற்சட்டையின் முன்புறத்தில் படைத்துறைச் சீருடைக்கு இருக்கும் நான்கு பக்குகள்(pocket) இருக்கும். அதாவது மேலே வலம்-இடமாக இரண்டும் கீழே வலம்-இடமாக இரண்டும் இருக்கும். கையின் முடித்தலானது சாதாரண நீளக்கைச் சட்டைக்கு இருக்கும் முடிதல் போன்று இருக்கும். நீளக் காற்சட்டைக்கு, மேற்பக்கத்தின் இரு கால்களிற்கும் சாதாரண நீளக் காற்சட்டைக்கு இருப்பது போன்ற பக்குகளும் முழங்காலிற்கு சற்று மேலே படைத்துறை சீருடைக்கு இருப்பது போன்ற இரு பக்குகளும் இருக்கும். நீளக் காற்சட்டையின் பின்புறத்தின் இருகுண்டியிலும் இரு பக்குகள் இருந்தன. காலின் முடித்தலானது உலகளாவிய படைத்துறைக்கு இருப்பது போன்ற தெறி கொண்ட கொச்சுத்துண்டு வைத்து தைக்கப்பட்டிருக்கும். பெண்கள் சீருடையினை அணிந்து இடைவாரினை அணியும் போது மேற்சட்டையினை வெளியில் விட்டு அதன் மேற்றான் இடைவாரினை அணிவர். அந்த இடைவாரானாது பச்சை நிறத்திலோ அல்லது கறுப்பு நிறத்திலோ இருக்கும். ஆண்கள் சீருடையினை உள்ளுடுத்திய பின்னர் சாதாரணமாக இடைவார் அணிவது போன்று இடைவாரினை அணிவர். 'கடற்புலி வீரர் 2002 இற்கு முந்தைய சீருடையில் | படிமப்புரவு: fb & tharaakam' 'இடமிருந்து வலமாக : தரைத் தாக்குதலாளிகள்; கடற்கரும்புலிகள்; கடற்கலவர்கள் | படிமப்புரவு: திரைப்பிடிப்பு ' பயிற்சி சீருடை: ஆண்களும் பெண்களும் 'Navy நீல' நிறத்திலான ஒரு உடையினை [அரைக்கைச்சட்டை & காற்சட்டை(ஆண்களின் காற்சட்டை பெண்களை விட கட்டையானது)] அணிந்து பயிற்சி எடுத்தனர். 'பெண் கடற்புலிகள் | படிமப்புரவு: திரைப்பிடிப்பு ' 'பெண் கடற்புலிகள் | படிமப்புரவு: திரைப்பிடிப்பு' 1990–1992/3 வரையிலான கடற்கலவர் சீருடை: இதுதான் கடற்புலிகளின் முதலாவது சீருடை. இது ஒரு ஊத்தை நிறம் அல்லது ஒரு விதமான வெள்ளை நிறம் ஆகும். 'இதில் உள்ள வீரர்கள் அணிந்துள்ளதே முதலாவது சீருடை ஆகும்.' 1990-2001 காலப்பகுதியில் இவர்கள் வெள்ளை நிறச் சீருடை அணிந்தனரா என்பது பற்றிய தகவல் இல்லை! 1992/1993 - 1995 வரையிலான கடற்கலவர் சீருடை: இச்சீருடையானது சிறீலங்கா கடற்படையின் சீருடை ஆகும். ஆனால் அதை புலிகளும் அணிந்திருந்தனர். அவரகள் அதை வீரவணக்க ஊர்வல அணிவகுப்பிலும் அணிந்திருந்தனர். ஆகையால் இதனது சரியான பயன்பாடு அறியில்லாததாக உள்ளது. ஆண்களும் பெண்களும் ஒரே நிறத்திலும் தோரணியிலுமான சீருடை அணிந்திருந்தனர். இவர்களின் தொப்பியும் சீருடையின் அதே உருமறைப்பைக் கொண்டதாக இருந்தது. 'கடற்புலி போராளி ஒருவர் இச்சீருடையில் உள்ளதை நோக்குக' 'கடற்கரும்புலி மாவீரர் ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் இச்சீருடையினை அணிந்து பங்கேற்றுள்ள பெண் கடற்புலிப் போராளிகளை நோக்குக.' இதே காலகட்டத்தில் தமிழீழத் தேசியத் தலைவரின் கடற்பயணங்களின் போது அவருடைய மெய்க்காவலர்கள் ஒரு வேறுபாடான கடற்சீருடை ஒன்றினை அணிந்திருந்திருந்தனர். இனி அச்சீருடை பற்றிப் பார்ப்போம். இச்சீருடை ஆனது உருமறைப்புடைய காற்சட்டை மற்றும் வேலைப்பாடில்லா ரி-சட்டை ஆகியவற்றால் ஆனது ஆகும். இச்சீருடையின் ரி-சட்டை ஆனது அரைக்கையுடையதான சாதராண நீல நிறத்தில் உள்ளது. இதன் கைகளில் புயத்திற்கு ஏற்ப கைமடிப்பு இருக்கும் திறவல் உள்ள இடத்தில் சுருக்கம் உள்ளது. காற்சட்டையானது மிகவும் கட்டையானதாகவும் இதன் உருமறைப்பானது இக்காலகட்டத்தில் புலிவீரர்களின் செந்தரமான கடற்படைச் சீருடையின் உருமறைப்பைக் கொண்டதானதாகவும் உள்ளது. 'இதில் நிற்கும் புலி வீரர்கள் அணிந்துள்ள சீருடையே நான் மேற்குறிப்பிட்டுள்ள சீருடை ஆகும். | இது 1993 தவளைப் பாச்சல் நடவடிக்கையின் போது புலிகளால் கைப்பற்றப்பட்டு பின்னாளில் 'பாமா' எனக் கலப்பெயர் சூட்டப்பட்ட வோட்டர் ஜெட் ஆகும். இதில் கவசக் கஞ்சுகம் அணிந்து கொண்டு நிற்கும் 'ஜக்கெற் மெய்க்காவலர்' இன் இயற்பெயர் மோகன் என்பதாகும். இவர் 10.06.2021 அன்று தமிழ்நாட்டில் சுகயீனம் காரணமாகச் சாவடைந்தார்.' 'இதில் அம்புக்குறியிட்டுள்ள அனைத்து புலி வீரர்களும் அணிந்துள்ள சீருடையே நான் மேற்குறிப்பிட்டுள்ள சீருடை ஆகும். | இது 1993 தவளைப் பாச்சல் நடவடிக்கையின் போது புலிகளால் கைப்பற்றப்பட்டு பின்னாளில் 'பாமா' எனக் கலப்பெயர் சூட்டப்பட்ட வோட்டர் ஜெட் ஆகும்.' 1995 - 2002 வரையிலான நீல வரிப்புலி பற்றி:- (நிறங் கண்டுபிடிக்கும் செயலியை வைத்தே இவற்றை கண்டுபிடித்தேன். மேலும் செம்மைப் படுத்தல் வேண்டும்) வரியில் இருந்த நிறங்களாவன: RGB - (182,185,216) - வெளுறிய பின்புல நிறம் RGB - (67,89,136) - Yale blue ஆகத் தெரிவது RGB - (77,78,124) - Navy blue ஆகத் தெரிவது இதில் இருந்த வரிக்கோடுகள் எல்லாம் தடித்த கோடுகளாகும்! 1992/93 - 2002 வரையிலான கடற்கலவர் சீருடை:- மேலே நான் குறிப்பிட்டுள்ள கடற்சீருடையினைக் காட்டிலும் தமக்கே உரித்தான உருமறைப்பான வரிப்புலியில் நீல நிறம் கொண்டதான 'நீல வரிப்புலியையும்' இதே 1992/1993 - 1995 காலத்திலும் அதன் பின்னரும் அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நீல நிற வரிப்புலியில் கழுத்தைச் சுற்றி தோள் மேல் இருக்கும் படையாக கடற்படையின் கடற்கலவர் அணியும் ஒரு நீல நிற வட்ட வடிவ துணியினை அணிந்திருந்தனர். இது சாம கடற்படை(Midnight navy) நீல நிறத்தில் உள்ளது. அது தலையினை உள்ளுடுத்துவதன் மூலம் தோள் மேல் அணியப்படும். இதை அணிந்த பின் நோக்கும் போது பின்பக்கமும் முன்பக்கமுமாக அரைநிலவு வடிவில் இருக்கும். அதில் முன்பக்கம் கொஞ்சமாகவும் பின்பக்கம் அதிகமாகவும்(முதுகு வரை நீள்கிறது) அந்த அரைநிலவு வடிவம் இருக்கும்.இதன் ஓரங்களில் இரு வெள்ளை நிறக் கோடுகள் உள்ளன. அவை குறிக்கும் பொருளினை அறியமுடியவில்லை. இவர்கள் இடுப்பில் அணிந்திருந்த இடைவாரானது அதே நீல வரிப்புலி உருமறைப்போடு இருந்தது. ' படிமப்புரவு: திரைப்பிடிப்பு' 1992/1993- 2002 வரையிலான கடற் கட்டளையாளர் சீருடை :- இவர்களின் சீருடையும் நீலநிற வரிதான். ஆனால் இவர்கள் கடற்கலவர் அணிவது போன்ற அந்த வட்ட வடிவ துணியினை அணியார். அத்தோடு வரைகவிக்குப் பகரமாக தொப்பியே அணிவர். 'கடற்புலிகளின் கேணல் சூசை | | படிமப்புரவு: Tharakam' 2002 இல் கடற்கலவர் சீருடை இச்சீருடையில் இள நீல நிறம் அதிகமாக இருந்ததால்(வானினை குறிப்பதால்), இதில் இருந்த கடுநீல நிறம் போன்ற நீல நிறமானது நீக்கப்பட்டு மேலும் சில மாற்றல்களோடு பின்னாளில் எழுந்த வான்புலிகளின் சீருடையாக்கப்பட்டது. 'கடற்புலிகளிர் கேணல் சூசை | படிமப்புரவு: Aruchuna.com' 2003 இல் தரைப்பணிச் சீருடை வரியில் இருந்த நிறங்களாவன: (நிறங் கண்டுபிடிக்கும் செயலியை வைத்தே இவற்றை கண்டுபிடித்தேன். யாராவது மேலும் செம்மைப் படுத்தல் வேண்டும்) RGB - (105,146,174) - பின்புல இளநீலம் RGB- (68,82,108) - சாதாரண நீலமாகத் தெரிவது RGB - (48,97,155) - கடுநீலமாகத் தெரிவது இதில் இருந்த வரிக்கோடுகள் எல்லாம் மெல்லிய கோடுகளாகும். அதே நேரம் பின்புல நிறமான இளநீலம் போன்ற நிறமே வெகு அதிகமாக இருந்தது. இது மிகக் குறுகிய காலம் பயன்படுத்தபட்டு அதன் பிறகு மாற்றப்பட்டு விட்டது '25–11–2003 அன்று பாரச்சவம்(heavy weapons) கொண்டு அணிநடையில் ஈடுபடும் கடற்புலிகள் | படிமப்புரவு: Aruchuna.com' 2004 - 2009(18–05–2009) வரையிலான தரைப்பணிச் சீருடை வரியில் இருந்த நிறங்களாவன: (நிறங் கண்டுபிடிக்கும் செயலியை வைத்தே இவற்றை கண்டுபிடித்தேன். யாராவது மேலும் செம்மைப் படுத்தல் வேண்டும்) RGB - (105,146,174) - பின்புல இளநீலம் RGB- (68,82,108) - சாதாரண நீலமாகத் தெரிவது RGB - (48,97,155) - கடுநீலமாகத் தெரிவது இதில் இருந்த வரிக்கோடுகள் எல்லாம் தடித்த கோடுகளாகும்! 'கடற்புலிகளின் கேணல் சூசையும் அவருடைய மெய்க்காவலர் ஒருவரும் தரைத் தாக்குதலாளி சீருடை அணிந்துள்ளதை நோக்குக | படிமப்புரவு: Aruchuna' 2001–2009(18–05–2009) வரையிலான கடற்கலவர் சீருடை:- இவர்கள் வெள்ளை நிற நீளக்காற்சட்டையும் வெள்ளை நிற மேற்சட்டையும் அணிந்திருந்தனர். மேற்சட்டையின் அடிப்பக்க விளிம்பு RGB (48;97;155) என்னும் கடுநீல நிற ஓரத்தைக் கொண்டிருந்தது. இடுப்பில் எல்லோரும் வெள்ளை நிற இடைவாரினை அணிந்திருந்தனர். ஆண்கள் மேற்சட்டையினை உள்விடாமல் வெளியில் விட்டிருந்தனர், பெண்களைப் போல. கடற்கலவரின் மேற்சட்டைக்கு கழுத்துப்பட்டை(collar) உள்ளது கடற்கலவரின் அதிகாரிகள் வீரர்களிடம் இருந்து வேறுபட்டு சுண்டு(bill) கொண்ட கடற்கலவர் சதுரக்கவி(sailor square rig) அணிந்திருந்தனர். கடற்கலவர்கள் தோள் மேல் சுற்றி நிற்குமாறு Scarf போன்ற RGB (48;97;155) என்னும் நிறத்திலான பளபளக்கக்கூடிய ஒரு துணியினை அணிந்திருந்தனர். அதன் ஓரத்தில் வெள்ளை நிறத்திலான மூன்று கோடுகள் இருந்தன. இந்த துணியானது முன்பக்கம் முக்கோண வடிவிலும் பின்பக்கம் சதுர வடிவிலுமாக உடல் மேல் நின்றது, அணிந்த பின். இதன் முன்பக்க முக்கோணம் சமச்சீராக வெட்டப்பட்டு அதில் திறத்தல் இருக்கிறது. மேலும கழுத்தைச் சுற்றிவர இருந்த திறத்தல்(opening) வட்ட வடிவுடையதாக இருந்தது. ''படைத்தகையில்(parade) ஈடுபடும் கடற்கலவர் | படிமப்புரவு: Aruchuna.com'' 'படை மரியாதையை ஏற்கும் தலைவர் 2002 | படிமப்புரவு: Aruchuna.com' ஆனால் கடற்புலிகள் கடற்சமரின் போது கடற்கலவர் சீருடையினையோ இல்லை கடற்படை அலுவலர் சீருடையினையோ அணியார். மாறாக குடிமை(civil) உடையினை அணிந்து கடற்சமராடுவர். வேலைச் சீருடை: வழங்கலின் போது அழுக்குகளோ இல்லை பிசுக்குகளோ சீருடையில் பிரண்டிடாமல் இருக்க கடற்புலிகள் இச்சீருடையினை அணிவர் '18|8|2002 தெந்தமிழீழத்திற்கான வழங்கல் ஒன்றின் போது ஆண்கலவர் இச்சீருடை அணிந்துள்ளதை நோக்குக. | படிமப்புரவு: Tamilnet.com' தேவை ஏற்படும் போது நல்ல சண்டையாளர்களாகவும் மாறினர்! 'கடற்புலி போராளி' இதில் இருவேறு நிறங்கள் இருந்தன. சமாதான ஒப்பந்த காலத்தின் தொடக்கத்தில் அணியபட்டது நல்ல நீல நிறத்திலும் (2002) அதன் பின்னரான காலத்தில்(2003<) அணியப்பட்டது கடுநீல நிறதிலும் இருந்துள்ளது. இதில் இந்த கடுநீல நிறம் போன்ற சீருடை அணிந்துள்ள பெண்களை நோக்குக. இவர்கள் வழங்கல் அணியினர். இவர்களின் காற்சட்டையும் மேற்சட்டையும் தொடுக்கப்பட்டுள்ளது. மேற்சட்டை Hoodie ஆக உள்ளது. '2003| இந்துமதி என்னும் கலப்பெயர் படகை கடலினுள் தள்ளும் கடற்புலிகள் | படிமப்புரவு: Aruchuna.com' படகு கட்டுமானம்: மங்கை & டேவிட் இப்பிரிவைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் கீழ்க்கண்ட நிறத்திலான சீருடை அணிந்திருந்தனர். இச்சீருஅடை பழுப்பு நிறத்தில் இருந்தது; தலையில் அதே நிறத்திலான சுற்றுக்காவல் கவியும் அணிந்திருந்தனர். இவர்களின் சீருடையின் மேலாடையும் கீழாடையும் இணைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இவர்களில் பெண்புலிகளின் தலைமயிர்ப் பாணி கொஞ்சம் வேறுபாடானது, ஏனைய படையணி/படை/பிரிவு-களிலிருந்து. ஏனெனில், இவர்கள் பிறரைப் போலல்லாமல் தங்கள் தலைமயிரினை பின்னால் எடுத்து கொண்டை போட்டிருந்தனர். ----------------------------------------- ----------------------------------------- கூடுதல் செய்திகள்: வான்புலிகளின் சீருடை & வானுர்திகள் - ஆவணம்: ----------------------------------------- ----------------------------------------- உசாத்துணை: செ.சொ.பே.மு. கிடைத்த படங்களை வைத்து அவற்றின் காலத்தைக் கணித்து எழுதினேன் ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்