Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    38777
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87997
    Posts
  3. யாயினி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    10214
    Posts
  4. Kandiah57

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    4043
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/21/22 in all areas

  1. உலக பொருளாதாரம் தனது இறங்கு முகத்தினை ஆரம்பித்துள்ளதா (Bear Market)? அல்லது இது ஒரு தற்காலிக பின்னடைவா (Market Correct)? தற்காலிக பின்னடைவு என்றால் முதலீட்டிற்கு வாய்ப்பான நேரம் ஆனால் சந்தை சரிவு நிலையினை அடைந்தால் அது எவ்வளவு தூரம் செல்லும் என தெரியாது. DOW theory இன் படி சந்தை ஆகக்கூடுதலான விலையிலிருந்து 20% விலை வீழ்ச்சி அடைந்தால் சந்தை இறங்குமுகம் என குறிப்பிடுகிறது, அத்துடன் தற்காலிக பின்னடைவு எனில் அதிக பட்சம் 3 மாதங்கள் வரை நீழும் எனககூறுகிறது, ஏற்கனவே 3 மாதங்களுக்கு மேலாக விலைகள் சரிவடைந்து செல்லுகிறது. அத்துடன் நஸ்டாக் குறியீடு 20% மேலாக வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது, ஆனால் S&P 500, DIJ இன்னும் 20% அளவு கோலை எட்டவில்லை. கடந்த மாதம் 10 வருட பண முறியும் 2 வருட பண முறியும் வட்டி வீதன் 2.40, 2.42 எட்டியது Market recession முன்னோடி அறிகுறி எனக்கூறப்படுகிறது, இவ்வாறு கடந்த 9 Market recession ஐயும் சரியாக எதிர்வு கூறியுள்ளது. ஆனால் இது எவ்வளவு காலம் நீடிக்கும் அல்லது எவ்வளவு தூரம் விலை சரிவடயும் என்பதுதான் முக்கிய விடயமாகவுள்ளது( 2019 இல் விலை 27% சரிவடைந்தது ஒரு வருடத்திற்குள்ளாகவே விலை மீண்டும் உயர்ந்து விட்டது). இரஸ்சிய உக்கிரேனிய போர் உலக பொருளாதாரத்தினை வெகுவாகப்பாதிக்கின்றது, எமது நிறுவனத்தில் பங்குனி மாத ஆரம்பத்தில் (யுத்த ஆரம்ப காலத்தில்) கூடிய கூட்டத்தில் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள் வருகை யுத்தத்தினால் பாதிப்புறும் ஆனால் 3 மாத இருப்பு இருப்பதனால் சமாளித்துவிடலாம் என கூறப்பட்டது, ஆனால் தற்போது அனைத்து மூலப்பொருளும் இக்கட்டான அளவுநிலைக்கு ஏற்கனவே சென்றுவிட்டது. முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா, இந்த போரை முடிவுக்கு கொண்டுவராமல் மக்களையும் உலக பொருளாதாரத்தினை அழிக்கிறார்கள் (இரஸ்சியாவினை மட்டும் குறைகூறவில்லை மேற்கு நாட்டினையும் சேர்த்துதான் சொல்கிறேன்)
  2. நான் யாழ் தளத்தை பல ஆண்டுகளாக அறிவேன் என்றாலும் இப்பொழுது தான் உறுப்பினர் ஆக இணைந்து கொண்டேன். நான் உக்ரைனில் 2006 புரட்டாசி மாசம் மருத்துவம் படிக்க போனேன்.2014 - 2015 அளவில் இலங்கைக்கு திரும்பினேன். இலங்கையில் சில வருடம் வேலை செய்து விட்டு இப்பொழுது கனடாவில் Alberta வில் வசிக்கிறேன். Canadian emergency Ambulance service இல் வேலை செய்கிறேன். படிக்க போன இடம் luhansk ( லூகான்ஸ்க்,டன்பாஸ் இல் உள்ள Donesk (டோனேஸ்க் ) க்கு அடுத்த பெரிய province. போன புதிதில் நான்கு இலங்கை மாணவர்கள் தான்போனோம். அப்பொழுது நாங்கள் தான் ஒரே இலங்கை மாணவர்கள். கொஞ்சம் தமிழ் நாட்டு மாணவர்களும் இருந்ந்தார்கள்.லீவு கிடைக்கும் பொழுது பல வெளிநாட்டு மாணவர்கள் இந்தியா இலங்கை போய் விடுவார்கள். நான் டிக்கெட் செலவு கூட என்பதால் ukraine க்குள் சுத்துவது வழக்கம். அப்படி போன இடங்களில் ஒன்று தான் மரிப்புல். இது தவிர கிரீமியா கீவ் கார்க்கிவ்,liviv, zaporizhzhia போன்ற இடங்களில் ஓரிரு மாதங்கள் ஆவது இருந்து இருப்பேன். டன்பாஸ் பிறதேசத்தில் இருப்பவர்களில் 90 வீதம் பேர் ரஷியன் தாய் மொழி ஆக கொண்டவர்கள். பலர் சுரங்க தொழிலாளிகள். ரஷ்யாவுடன் குடும்பம் பிணைப்புகள் அதிகம் கொண்டவர்கள். நானே சில தடவைகள் ரஷ்யாவுக்குள் போனேன் என்று தெரியாமலே உள்ளுக்குள் போய் இருக்கின்றேன் இவர்களுடன். குணம் என்று வரும் பொழுது மிகவும் பொதுவாக நல்ல மனிதர்கள் தான். நான் இளம் வயது ஆட்களை வைத்து அந்த சமூகத்தை மதிப்பிடக்கூடாது என்று நம்புகிறேன். ஆகவே 60 கடந்தவர்கள் என்று பார்த்தால் ஓரளவுக்கு நல்லவர்கள் தான் அவர்கள். என்றாலும் எல்லோரையும் அப்படி சொல்ல ஏலாது. கம்யூனிஸ்ட் சித்தாதத்தில் பற்று கொண்டவர்கள். வெளியே சொல்லிக்கொண்டு இருக்க மாட்டினம் ஆனால் உள் மனது அது தான். நான் கூட பழகியது பாட்டிகள் தாத்தாக்களுடன் தான். சில வருடங்கள் அவர்கள் வீட்டில் வாடகைக்கு வாழ்ந்தும் இருக்கின்றேன். Danbaas உண்மையில் ukraine க்கான பிரதேசம் தான். ஆனாலும் சோவியத் காலத்தில் ஸ்டாலின் சைபிரியாவுக்கு நாடு கடத்திய கிரிமினல்களில் ஓரளவுக்கு குறைவான பிழைகள் செய்தோரை இங்கே டன்பாசில் குடியெற்றி அங்குள்ள சுரங்க வேலைக்கு பயன்படுத்திக்கொண்டார். அவர்களின் பரம்பரை தான் இப்போது அங்கே இருப்போர். வெள்ளை இன வெறி உண்டு. அதுவும் எல்லோரும் அப்படி என்று ஒரேஅடியாக சொல்ல முடியாத அளவுக்கு நல்ல மனிதர்களின் ஞாபகங்கள் வந்து போகின்றது. இரவில் வெளியே நம்பிக்கையோடு சுற்ற முடியாது நன்கு ரஷியன் தெரியாவிட்டால். நான் பல முறை மாட்டி இருக்கின்றேன். குடிகாரர் குடித்து விட்டு காசுக்கு வெளிநாட்டு ஆக்களை அடித்து காசு வாங்குவது வளமை.. அப்படி அடிக்கும் பொழுதே அங்குள்ள இன்னொருவர் காப்பாற்றியும் விடுவார். நான் ஒருமுறை இரவு கடைக்கு போய் சாமான் வாங்கி வெளியே வரும் பொழுது சைக்கிள் செயின் கொண்டு அடிக்க ஒருவர் வந்து இருந்த காசை கொடுத்து தப்பிய சம்பவம் ஞாபகம். எல்லோருக்கும் ஒரு வீடு அங்கு உண்டு. குவர்த்திரா ( அப்பார்ட்மெண்ட் ) என்று சொல்வோம். ஏற்கனவே சொன்னது போல வாயோதிப்பர்கள் பழக இனிமையானவர்கள். அவர்களிடமும் வெள்ளை இன வெறி, உடைந்து போன சோவியத் பற்றிய கனவுகள், ரஷியன் மொழி மீதான தீரா தாகம், conservetive மனநிலை, மனிதாபிமானம், கடவுள் பக்தி, வெளியே காட்டாத அமெரிக்க வெறுப்புணர்வு, இந்தியா மீது பாசம்,உழைப்பு, சுற்றதாருடன் மனித பன்புடன் பழகுவது, இயலுமான வரை மற்றவர்களுக்கு உதவி, சிக்கனம், உபசரிப்பு என்று எல்லாம் கலந்த சாதாரண மனிதர்கள் அவர்கள். இவர்கள் கிழக்கு உக்ரைனியர்கள்.mariupol zaporizhzhia, கார்கிவ் போன்ற இடங்களில் வாழ்வோரும் இப்படி பட்டவர்கள் தான் என்றாலும் கார்கிவ் மேற்கத்தேய நாகரிக மோகம் கொஞ்சம் அதிகம் கொண்ட பகுதி. மேற்கு ukraine இல் உள்ள மக்கள் அப்படியே வேறு ஒரு மக்கள் கூட்டம். ரஷியன் தெரிந்தாலும் விடாப்பிடியாக பேச வேண்டாம் என்று இருக்கும் மக்கள் அவர்கள். ஒப்பீட்டளவில் மிகவும் நாகரிகம் ஆன மக்கள். ஒரு காலத்தில் யூதர்கள் சோவியட் ரஷ்யா உடன் சேர்ந்து இவர்களை அடக்கிபலரை படுகொலை செய்தது எவ்வளவு உண்மையோ அவ்வளவுக்கு இவர்கள் பின்னர் ஜெர்மனிஉடன் சேர்ந்து யூதர்களை படுகொலை செய்ததும் உண்மை. கம்யூனிஸ்ட் சித்தாந்தம், Soviet ரஷ்யா இந்த இரண்டும் இவர்களை முன்னேற விடாமல் இறுக்க பிடித்திருக்கிறது என்று மனதார உணருகின்றர்கள்.யூத வெறுப்புணர்வு ஓரளவு உண்டு என்பது உண்மை என்றாலும் எல்லோரிடமும் சமமாக இழையோடி இல்லை. இவர்களில் பலருக்கு poland ருமேனியா, அஸ்திரியா நாடுகளோடு குடும்ப பிணைப்பு உண்டு. கிழக்கு மக்கள் ரஷியன் ஆர்த்தோடோக்ஸ் என்றால் இவர்ககளில் பலர் கத்தோலிக்கார்கள். யாழ்ப்பாண மொழியில் சொல்வது என்றால் புழுத்த கத்தோலிக்கர்கள். இங்கே குடி போதையில் அடிப்பவன் இல்லை. எங்களை கறுப்பு குரங்கே என்று கூவி நக்கல் அடிப்பவர்களும் இல்லை.சுதந்திர நாட்டுக்கான தணியாத தாகம் கொண்டவர்கள். இங்கே liviv என்று ஒரு இடம் உண்டு அழகான இடம். ஒரு போட்டோ கூட எடுக்கவில்லை என்று இப்போது நினைத்து வருந்துகிறேன் கிவ் இது இன்னொரு அற்புதம். இங்குள்ள டேனிப்பர் ஆற்றின் கரையோரங்களில் நடந்து திரிந்த நாட்கள் பசுமையான நினைவுகள். மிகவும் ஆழத்தில் இருக்கும் மெட்ரோ ரயில் நிலையங்கள் எந்த குண்டு வெடிப்பிலும் இருந்தும் உங்களை பாதுக்காக்கும். இங்கே உள்ளவர்கள் அனைவரும் நன்கு ரஷியன் பேசுவார்கள், ரஷியன் தான் இங்கேயும் பெரும்பாலும் பேசப்படும் மொழியும், எனினும் கம்யூனிஸ்ட் சித்தாதம் மீது எந்த ஈடுபாடும் இல்லை. (கொழும்பு தமிழர்க்கு தமிழ் பாசம் போல.) ரஷியன் தான் இவர்களின் தாய் மொழி எனினும் பெரிய பற்று என்று ஒன்றும் இல்லை. Ukraineனை நேசிப்பவர்கள் என்பதை விட கீவை நேசிப்பவர்கள். எப்படி யாவது யூரோப் இல் இணைந்து விட்டால் தமது செல்வ செழிப்புக்கு நல்லது என்று கருத்துப்பவர்கள். கிரிமியா இது வரலாற்று முக்கியத்துவம் உள்ள குடா நாடு. Turkey யும் ரஷ்யாவும் பிரித்தானியாவும் சண்டை போட்டு களைத்துபோன இடம். இங்கே கருங்கடலில் குளித்து தான் நான் நீந்தவே பழகினேன். இரண்டாவது உலகப்போர் நிறுத்தபடவும் சர்வதேச சங்கம் ஐக்கிய நாடுகள் சங்கமாக மாறவும் கையெழுத்து போடப்பட்ட இடம். இங்கே உள்ளவர்கள் கொஞ்சம் பழுப்பு தோல் கொண்டவர்கள். ரஷியன் போல் அவித்த றால் போல் இருக்க மாட்டினம். அரேபிய, ஒஸ்மானிய, யூத, ரஷிய, உக்கரைன் கலப்பு மக்கள் தான் இங்கு அதிகம். நல்ல திராட்சை ரசத்துக்கு பெயர் போன இடம்.பல மேற்கு நாட்டவர்கள் summer ஹாலிடேக்கு வந்து போகும் இடம். 2014 இல் மைதான் ( தமிழில் மைதானம் ) புரட்சிக்கு பின் அப்போதைய அதிபர் விக்டர் யானுக்கோவிச் பதவியில் இருந்து அகற்றப் பட்ட பின் கிரீமியா ரஷ்யாவால் சண்டை இன்றி பிடிக்கப்பட்டது. பின்னர் நான் இருந்த luhansk மற்றும் donesk இல் ரஷ்ய சார்பு ஆட்களால் பிரச்னை ஏற்படுத்தப்பட்டு அங்குள்ள போலீஸ் ஸ்டேஷன்,நிர்வாக அலகுகள் கைப்பற்றபட்டது. அங்குள்ள வேலை இல்லாத ரவுடிகளுக்கு ரஷ்யா பணம் ஆயுதம் கொடுத்து தான் இது நடந்தது. அப்பொழுது நான் அங்க தான் இருந்தேன். படிப்பு முடிந்து பட்டமளிப்பும் முடிந்தது விட்டது ஆனால் இன்னும் கையில் எல்லாம் செர்டிபிகேட் documents வரவில்லை என்பதால் கொஞ்ச நாள் கஷ்டத்திலும் அங்கு நாங்கள் இருந்தோம். பின்னர் குண்டு சத்தம் கேட்க நான் கார்கிவ் போய் விட்டேன். வரமால் அங்கு மாட்டிய ஆபிரிக்க மாணவர்களை இந்த ரவுடிகள் பிடித்து அமெரிக்கன் army uniform போட்டு அங்குள்ள டிவி களில் அமெரிக்க ராணுவம் இங்கு வந்து விட்டது என்றும் தாம் அவர்களை பிடித்து விட்டோம் என்றும் சனங்களுக்கு பேய்க்காட்டினர்கள்.அங்கு ( கார்கிவ் )கிட்டதட்ட ஒரு வருடம் இருந்து பின்னனர் lugansk வந்தேன் என்னுடைய documents எடுக்க வரும் பொழுது முகமாலை ஆனையிறவு வழியில் வருவதை விட செக்கிங் அதிகம். luhansk railway station இல் வைத்து என்னை ரஷியன் பிரிவினைவாதிகள் பிடித்து கிழே ஒரு இடத்துக்கு கொண்டு போய் இரண்டு மணி நேரம் ஆவது விசாரித்து இருக்கிற காசை பிடுங்கி விட்டு அனுப்பி விட்டார்கள். நான் இவர்கள் காசு வாங்கமல் விட மாட்டார்கள் என்று ஏற்கனவே தெரியும் என்பதால் வேறு பணம் ஒழித்து வைத்து இருந்தேன். விட்டுக்கு போனால் தண்ணி இல்லை, மின்சாரம் இல்லை, பெரிய விற்பனை நிலையன்கள், சந்தை, நகரம் என்று எல்லாம் சுக்கு நூறாய் கிடந்தது. ஒரு கிழமை சமாளித்து விட்டு எல்லா documents ம் எடுத்துக்கொண்டு இலங்கைக்கு வந்து விட்டேன். இவை வெகு சுருக்கமான தகவல்கள் மட்டுமே.. அனுப்பவ படிப்பினைகள் இவைதான் 1) ஒரு நாட்டுக்கு போனால் உங்கள் மொழி பேசுபவர்கள், உங்கள் நாட்டவர்கள் உடன் மட்டுமே தொடர்பில் இருக்காதீர்கள். நான் கார்கிவ் போன பொழுது கையில் உடனடியாக பணம் இல்லை. தங்கியது எல்லாம் அங்குள்ள எனது உக்கீரைன் நண்பர் வீட்டில். 2) நன்கு அந்த நாட்டின் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். கடையில் போய் பால் வெங்காயம் வாங்கும் அளவில் தான் இன்று பலரின் மொழியறிவு . 3) பிரச்சனைக்கு உள்ளான இடங்களில் பிரச்னை மீண்டும் வரும். அது தீர்ந்து விட்டதாக தோன்றும். அந்த மாயத்துக்குள் உட்பட்டு விடாதீர்கள்.luhansk இல் இருந்த பொழுது போர் எல்லாம் வரவே வராது என்று தான் 99 வீதம் பேர் சொன்னார்கள். சொன்னவர்களில் பலர் இன்று உயிரோடு இல்லை. 4)கொஞ்சம் நிலைமை சரி இல்லை என்றால் அந்த இடத்தை விட்டு ஓட தயங்க வேண்டாம். நாங்கள் சவாகச்சேரியில் இருந்து வவுனியா 1991 இல் வந்தோம்.. ஆகவே எந்த பெரிய சண்டையிலும் சிக்கவில்லை. Luhansk திரும்பிய பொழுது ஒரு தெரிந்த குடும்பம் நான் இலங்கை போவதாக சொன்ன பொழுது இரவு சாப்பிட்டுக்கு அழைத்தார்கள். அவர்கள் முன்று மாசம் உருளைக்கிழங்கு, உள்ளி இந்த இரண்டும் மட்டுமே உண்டு வாழ்ந்து இருக்கிறார்கள்.அவர்கள் இலக்குவாக வேறு ஒரு இடத்துக்கு போய் இருக்கலாம். 4) எப்பொழுதும் எங்கு வாழ்ந்தாலும் அவசரம் என்று வெளியில் ஓட வேண்டி வரலாம். ஒரு bag இல் ஒரு மூன்று நாளைக்கு தேவையான உணவு, இதர அவசிய பொருட்கள், மற்றும் உங்கள் டாக்குமெண்ட்ஸ் அதில் வைத்துக்கொள்ளுங்கள்.
  3. பட்டினத்தார் சொன்னது* உணவை தான் உண்டேன் எப்படி மலம் ஆனது? உயிரோடுதானே இருந்தேன் எப்படி மாண்டு போனேன்? மலம்தான் உணவாக இருந்ததா? மரணம்தான் வாழ்வாய் இருந்ததா? . இந்த சுருங்கி போன உடம்புதான் இதுவரை இளமையை சுகித்ததா? இந்த சூம்பும் மார்புகளுக்கா இத்தனை கண்கள் வட்டமிட்டது? பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும் என்று பட்டினத்தார் பாடியது இந்த நிலையற்ற பொய் வாழ்வை தானா? "இன்னும் இழுத்து கொண்டு இருக்கிறான். செத்து தொலையவில்லையே" என்று மனைவியும் சுற்றமும் பேசியது எனக்கு அவர்கள் என்னை நூறாண்டு வாழ்க என வாழ்த்தியது நினைவுக்கு வந்தது. இதுவரை எனது கோடாரியால் நான் எனது வேரையல்லவா வெட்டியிருக்கிறேன் ! நான் விரும்பியவை எல்லாம் என்னைவெறுத்துகொண்டிருந்தது இளமையாய் இருக்கும் போதே முதுமையை பழகி இருக்கவேண்டும் அறுசுவை உணவை தேடி தேடி உண்ணும் போதே அது மலமாகும் என்று உணர்ந்திருந்தால், அடுத்தவர் உணவை நான் பறித்திருக்கமாட்டேன். அனைவருக்கும் பயன்படவேண்டிய பொன் பொருளை ஒரு திருடனை போல் பதுக்கி இருக்கமாட்டேன். காலம் கடந்த ஞானம். பாயும் நோயும் தவிர யார் துணை வரப்போகிறார்கள். இறந்தாலும் எனக்காக யார் அழப்போகிறார்கள்? பிணமானப்பின் இந்த மாளிகையும் பணமும் எனதென்று நான் சொந்தம் கொள்ளவா முடியும்? சந்தனத்தால் மணந்த உடல் என்றாலும் இறந்தால் மணக்கவா போகிறது? கண்ணே மணியே என்று கொஞ்சிய தாயும், காதலா, என் உயிரே என்று சொன்ன மனைவியும், பிணமானபின் சுடுகாட்டில் அல்லவா விட்டு செல்வார்கள் ! பிரியமாட்டேன் என்று சொன்னவர்கள் பிணம் என்று வீசிசென்ற பிறகு , மண் என்னைப்பார்த்து , "மகனே ! நானிருக்கிறேன்.என் மடியில் வந்து உறங்கு" என்று என்னை மார்போடு தழுவிக்கொண்டது. அருந்தின மலமாம் பொருந்தின அழுக்காம் வெறுப்பன உவப்பாம் உவப்பன வெறுப்பாம் உலக பொய் வாழ்க்கை நீ_நீயாக_இரு... உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது. அதனால் வயதானால் அந்த நோய் வரும் வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள் உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள். மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது. எந்தப்பறவைகளும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குஞ்சிடம் சாப்பாடு கேட்பதில்லை. எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை. எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை. மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன. மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள். நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்* முதுமை என்று எதுவும் இல்லை. நோய் என்று எதுவும் இல்லை. இயலாமை என்று எதுவுமில்லை. எல்லாம் உங்கள் மனதிலும், அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது. சிந்தனையை மாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள். நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள். நான்... நான்... நான்... நான் சம்பாதித்தேன், நான் காப்பாற்றினேன், நான் தான் வீடு கட்டினேன், நான்தான்உதவிசெய்தேன், நான் பெரியவன், நான் தான் வேலைவாங்கி கொடுத்தேன், நான் நான் நான் நான் என்று மார்தட்டி கொள்ளும் மனிதர்களே!!! நான் தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா? நான் தான் என் மூளையை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா? நான் தான் என் இரண்டு கிட்னியையும் இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா? *நான்* தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் கலக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?? நான் தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா ? இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே "நான்" என்று சொல்வதற்கு அதிகாரமும் உரிமையும் உண்டு.. ஆகையால் நான் என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் அன்பாக இருங்கள். உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே தாழ்வு மனப்பான்மை வரும்..! உனக்கு கீழே உள்ளவனை ஏளனமாய் பார்க்காதே தலைக்கனம் வரும்...! உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு ............
  4. நன்றி அன்பரே! ஓரளவுக்கு புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உண்டு, கனநாள் facebook இல் இருந்தேன். பின்னர் அது என்னை addict ஆக்கி விட்டதை உணர்ந்ததும் ஒரே அடியாய் அதை மூடி என்னுடன் தொடர்பில் இருந்த ஒரு 1500 பேருக்கு ஒரே நாளில் ராட்டா சொல்லி விட்டேன். இது நடந்து 2 வருடம் ஆகி விட்டது, facebook ஐ இன்னும் திரும்பியும் பார்க்கவில்லை.தொடர்ந்து எழுத விரும்புகிறேன். வாழ்த்தி வரவேற்றதற்கு இன்னுமொரு தரம் நன்றி. நான் இங்கே வந்து மெடிக்கல் எக்ஸாம் எல்லாம் முடித்து விட்டேன்.. என்றாலும் appointment தரவில்லை. அண்மைக்காலத்தில் இங்கு வந்த மருத்துவர்கள் அனைவருக்கும் இது தான் நிலைமை. என்னைப்போல் இங்கு ஒரு பத்தாயிரம் பேரின் நிலைமை இது தான்.ஆஸ்திரேலியா அல்லது யூஸ் இல் படித்து பின்னர் பட்ட மேற்படிப்பும் படித்து இருந்தால் இங்கே வேலை கிடைக்கும். ஆனால் இந்தியா, இலங்கை, பாக்கிஸ்தான், ரஷ்யா டாக்டர்ஸ் நிலையோ அந்தோ பரிதாபம்.சிலருக்கு அத்தி பூத்தால் போல் வேலை கிடைக்கும். அது வரை ஆறு மாசம் சொந்த நாட்டில் doctor வேலை மிச்சம் 6 மாசம் இங்கு ஏதாவது வேலை என்று பல வருடங்கள் கழிக்க எதிர்பார்ப்புடனேயே கழிக்க வேண்டும். இதில் சில சமயம் குடும்பம் இரண்டாகி விடும், இங்கே citizenship கிடைக்க இன்னும் சில வருடங்கள் ஆகும். கையில் காசும் இருக்காது, 45 வயதில் சில நேரம் வேலை கிடைக்கும், ஆனால் இப்படி ஒரு தியாக வாழ்க்கைக்கு நான் ரெடி இல்லை. Emergency service இல் டிரைவர் ஆக வேலை செய்யவில்லை. பலர் அப்படித்தான் நினைக்கிறார்கள். Pre hospital medical practice கடைசி பத்து ஆண்டுகளில் அசுர வளர்ச்சியை கண்டு விட்டது. அதில் advance care Paramedics ஆகவே வேலை செய்கிறேன். இதில் ஒரு 100 க்கு மேற்பட்ட அவசர மருத்துவ தேவைகளுக்கான medications நோயாளிகளுக்கு அளிக்க முடியும். ஒரு heart attack, stroke,அல்லது சுவாசம் சம்பந்தமாக ஏதும் நடந்தால் ஆஸ்பத்திரி கொண்டு போகாமலேயே வீட்டில் வைத்து சத்திர சிகிச்சை தவிர அனைத்து சிகிச்சைகளையும் அளித்து நோயாளி ஓரளவு சரியானவுடன் ஆஸ்பத்திக்கு அனுப்ப முடியும், stroke வந்தால் ambulance இன் உள்ளே வைத்து MRI scan எடுத்து தலையில் எங்கே எந்த நாளத்தில் இரத்தக் கசிவு உண்டு என்று பார்த்து அதை உடன் தடுத்து பாதிப்பின் அளவை கணிசமாகாக குறைக்க முடியும். தேவையானால் இரத்தம் ஏற்ற முடியும். கனடாவிலும் ஆஸ்திரேலியாவிலும் தான் இந்த தொழிலில் இவ்வளவு scope Of practice. ஒரு நாள் சம்பளம் $500 -$600. இரவு வேலை என்றால் இன்னும் கூட. இன்னும் சில வருடத்தில் Air ambulance இல் critical care para medics ஆக வர விரும்புகிறேன்.இதனால் தான் இந்த வேலையை தேர்ந்து எடுத்தேன். இதற்காக இங்கு 3 வருடம் படித்தேன். ( medical exam clear செய்த பிறகும் இதற்கு வேறு படித்து இன்னொரு எக்ஸாம் கொடுக்க வைத்தார்கள் படுபாவிகள்.)எனக்கு தெரிந்த பல இந்திய பாகிஸ்தான் டாக்டர்ஸ் இங்கு டாக்ஸி ஓட்டும் நிலை.. ஆகவே எனக்கு இது கிடைத்த வரை சந்தோசம். நான் செய்த பிழை கனடா வந்தது தான். இங்கு இந்த பிரச்னை இருக்கு என்று தெரிந்து தான் வந்தேன். எக்ஸாம் முடித்து விட்ட படியால் இவர்கள் எப்போதாவது சிலநேரம் தேவைப்பட்டால் கூப்பிட்டு எங்காவது கனடாவில் கண் காணாத தேசத்தில் appointment கொடுத்தால் நல்லம்.. இல்லாவிட்டால் ஒரு துன்பமும் இல்லை. ஏதாவது europ போய் இருந்தால் இந்த சிக்கல் இருந்து இருக்காது.. கல்யாண சம்பந்தம் அமைந்தது கனடாவில் தான்.திருமணம் செய்யும் குடும்பம் முக்கியமா எனது கனவு முக்கியமா என்ற நிலையில் முதலாவதை தேர்ந்து கொண்டு இங்கு வந்துவிட்டேன்.😉 நன்றி கிருபன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.