இன்று பின்னேரம் தங்கம் 1828 இனை அடைந்தவுடன் விற்று ஓரளவு இலாபம் எடுத்துவிட்டேன். நான் மூடியபின் 1835 வரை போனது.
ProShares UltraPro இனைப் பரீட்சிப்பதற்காக அமெரிக்க பங்குச்சந்தை திறப்பதற்கு 1 மணிநேரத்துக்கு முன் TQQQ, UPRO அகியவற்றில் மிகக் குறைந்தளவு பங்குகள் வாங்கினேன். காலையில் NASDAQ சாதகமான நிலையில் இருந்ததால் நிச்சயமாகக் கூடும் ஆனால் எப்போது எனது முதலீடு அதற்குள் சேரும் என்பதைப் பார்க்கவே இந்தப் பரிசோதனை.
பங்குச் சந்தை திறந்தவுடன் 5 வினாடிகளில் TQQQ 3 வீதத்தைத் தாண்டியது. எனது பங்கு 20-30 வினாடிகளுக்குப் பின்னரே எனது முதலீடு சேர்த்துக் கொள்ளப்பட்டது. 2 மணி நேரத்துக்குப் பின் குறைந்த இலாபத்துடன் வெளியேறினேன். பின்னர் NASDAQ 2.5 வீதம் கூடியபோது TQQQ 12 வீதத்தைத் தாண்டியது.
இரண்டாவது பரிசோதனை, இன்று பங்குச் சந்தை மூடமுன்னர் SQQQ கொஞ்சம் வாங்கியுள்ளேன். NASDAQ நாளை குறையலாம் என்ற எதிர்பார்ப்புடன். இது தரவுகளின் அடிப்படையான எதிர்பார்ப்பு அல்ல, ஊகம் மட்டுமே. நாளை பார்க்கலாம்.