Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    33600
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87993
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    10
    Points
    46798
    Posts
  4. P.S.பிரபா

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    1866
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/14/23 in Posts

  1. 2021´ம் ஆண்டு கார்த்திககை 29´ம் திகதியன்று வேலையிடத்தில் நடந்த விபத்தின் பின்... நோயாளர் காவு வண்டியில்.. வேலையிடத்தை விட்டு சென்ற நான், 15 மாத தொடர் சிகிச்சை, தெரப்பியின் பின்... இன்று முதன் முதலாக மீண்டும் வேலையிடத்துக்கு சென்றேன். 🙂 வைத்தியரின் அறிவுரைப்படி... முதல் இரண்டு கிழமைகள் தினமும் 3 மணித்தியாலமும், மூன்றாம், நான்காம் கிழமைகள் தினமும் 5 மணித்தியாலமும், ஐந்தாம், ஆறாம் கிழமைகள் 7 மணித்தியாலமும் வேலை செய்து பார்த்து சரி வந்தால், தொடர்ந்து எட்டு மணித்தியாலப் படி வேலை செய்யலாம் என்று சொன்னார். இன்று முதல் நாள் என்னை வேலை இடத்தில் கண்டது பலருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. வேலை இடத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இருவர் ஓய்வெடுத்து போய் விட்டார்கள். இருவருக்கு... ஒரு கால் கழட்டி நிரந்தரமாக வேலை செய்ய முடியாத நிலையில் உள்ளார்கள். அதில் ஒருவருக்கு சீனி வருத்தத்ததால் கால் கழட்டியதாம், மற்றவர்.... பல வருடமாக அதிக சிகரெட் புகைத்ததால், கால் கழட்ட வேண்டி வந்ததாம். எல்லோரையும் இன்று கண்ட போதும், எனக்கு விபத்தை ஏற்படுத்தியவர் எனக்கு கிட்ட வர இல்லை, தூரத்தில் அவரின் முகம் தெரிந்தது. நான் பார்த்தவுடன், ஒளித்து விட்டார். குற்ற உணர்ச்சி... எப்படி முகத்தில் முழிப்பது என நினைத்தாரோ தெரியவில்லை. 😎 எல்லோரும் எனக்கு... உடம்பு கூடியிருப்பதாக சொன்னார்கள். ஆஸ்பத்திரி சாப்பாடு செய்த வேலை என்று பகிடிக்கு சொன்னேன். 🙂 உண்மைதான்... முன்பு இருந்ததை விட பத்து கிலோ கூடியுள்ளேன். வேலை செய்த உடம்பு திடீரென சும்மா இருக்கும் போது, கூடுவது வழமை தானே. இனி வரும் காலங்களில்... குறையும் என நினைக்கின்றேன். 😋 விபத்தின் பின் நடந்த சிகிச்சைகளையும், தெரப்பிகளையும் நினைவில் வருபவற்றை அவ்வப்போது தொடர்ந்து பதியலாம் என நினைக்கின்றேன். உங்களுக்கு வாசிக்க விருப்பமா? 😃 பிற் குறிப்பு: கால் விரலுக்கு, Qtex பூசுறனீங்களா என்று கேட்டு, கடுப்பேத்த வேண்டாம். 😂 🤣
  2. தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(2). கதவைத் திறந்து கொண்டு வரும்போதே இவங்கள் துலைவராலை மனுஷர் நிம்மதியா ஒரு வேலை வெட்டிக்கு போய் வர ஏலாமல் இருக்கு ......! --- ஏனப்பா வரும்போதே புறுபுறுத்துக் கொண்டு வாறியல் ..... ---அதுக்கில்லையப்பா வருமானம் வருதோ இல்லையோ மாசக்கடைசியில வீட்டுக்காரர் வாடைக்காசுக்கும், மெட்ரொக்காரரின் வேலைநிறுத்தமும் வந்திடும். நான் இரண்டு மணித்தியாலத்துக்கு முதல் வந்திருப்பன் இவங்களால சனத்துக்குள் இடிபட்டு நெரிபட்டு இப்ப வாறன் வேர்த்தொழுக .......உள்ளே போய் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து குளிர்தண்ணீர்ப் போத்தலை எடுத்து குடித்து விட்டு ஒரு பியர் டின்னையும் எடுத்துக் கொண்டு மேசையில் இருந்த வறுத்த கடலை, கசுகொட்டை, பாதாம் பைக்கட்டையும் எடுத்துக் கொண்டு வந்து சுமதியின் அருகில் அமர்கிறார். சுமதியும் எழுந்துபோய் காற்றாடி பொத்தானை அழுத்தி விட்டு வந்து அவரருகில் மார்பு உரச நெருக்கமாக உட்காருகிறாள். நல்ல காற்றும் அவளின் அருகாமையும் சுரேந்தரின் மன இறுக்கத்தை தளர்த்தி இதமாக்குகின்றது. ---இஞ்சயப்பா உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லட்டே ......ம்....சொல்லு...... சேகரிட்ட நாங்கள் போட்ட சீட்டு இந்தமுறை எங்களுக்குத்தான் விழுந்திருக்கு. வழக்கமா சீட்டு ஏத்தி விடுகிற ஆட்கள் இந்த ஸ்ட்ரைக்கால வர பிந்திப் போட்டினம். கழிவு குறைவென்ற படியால் நான் எடுத்துப் போட்டன். வார கிழமை சேகர் காசை கொண்டுவந்து தாறனெண்டு சொன்னவர். ---அப்படியே சங்கதி....இந்த ஸ்ட்ரைக்கால நல்லதும் நடந்திருக்கு எண்டு சொல்லுறாய். நல்லது....நீங்கள்தான் உடுப்புகள் தைத்து கஷ்டப்பட்டு சீட்டு போட்டனீங்கள், வாங்கி பத்திரமாய் வைத்திருங்கோ. --- நானும் முதல் அப்படிதானப்பா நினைச்சனான், பிறகுதான் யோசித்தன், நாங்கள் ஏன் "லா சப்பலில்" ஒரு இடம் எடுத்து தையல் கடை போடக்கூடாது. சுரேந்தர் இடைமறித்து உது உமக்கு இப்ப தேவையோ, ஏற்கனவே நீங்கள் அங்க இங்க என்று அலைந்து திரிந்து செய்யும் வேலை சிரமமானது,...... சுமதியும் கொஞ்சம் பொறப்பா நான் சொல்லுறதையும் கேளுங்கோவன். அதுக்குள்ளே "ஆடறுக்கமுதல் விதைக்கு விலை பேசுறியள் " --- சரி சொல்லும், அவளும் (கிளாசில் பியரை நிரப்பி விட்டு பருப்பு பக்கட்டையும் பிரித்து வைக்கிறாள்). ம்...தங்கட காரியம் நடக்க வேணுமென்றால் எல்லாம் செய்வினம்.மனதுக்குள் நினைத்துக் கொள்கிறான், சொல்லவில்லை --- என்னிடம் இப்ப தைக்க வாற ஆட்கள் கனபேர் வருகினம்.கடை திறந்தால் இரண்டு பேரை கூட வைத்தும் வேலை செய்யலாம். அதுக்கு மேல கடை என்று ஒன்று இருந்தால் பின்னடி காலத்திலும் எங்களுக்கு உதவும். ---சிறிது யோசித்த சுரேந்தரும் சுமதி சொல்வதும் சரியென்று தோன்றவே, ம்....முதல்ல காசு கைக்கு வரட்டும் பிறகு இடம் பார்க்கலாம் என்ன .....! சுமதியும் புருஷனை சரிகட்டிய மகிழ்ச்சியுடன் எழுந்து சென்று கோப்பையில் இடியாப்பமும் சொதியும் விட்டுகொண்டுவந்து குடுக்கிறாள். சுரேந்தரும் என்னப்பா ஒரு முட்டையாவது பொரித்திருக்கலாமே என்று சொல்லிப் போட்டு சாப்பிட்டுவிட்டு கட்டிலுக்கு செல்கிறான். சுமதியும் காற்றடியையும் தொலைக்காட்சி பெட்டியையும் அனைத்து விட்டு அறைக்குள் போகிறாள். சிறிது நேரத்தில் அவனே எதிர்பாராமல் அவனுக்கு சுடச்சுட சூடாக கோழிப்பிரியாணி விருந்து படைக்கப் படுகின்றது.........! தைத்துக்கொண்டு இருக்கிறார்கள்..........! 💞
  3. எனக்கும் ஒரு ஆசை எப்படியாவது இந்த முறை யாழ் அகவை 25ற்கு ஏதாவது எழுதவேண்டும் என்று.. ஆனா எனக்கு கதை கவிதை எழுத தெரியாது அவற்றை வாசிக்க மட்டுமே விருப்பம்.. அரசியல் பற்றி எழுதுமளவிற்கு அதில் விருப்பம் இல்லை.. தெரிந்ததெல்லாம் இந்த மாதிரி படங்கள் எடுப்பதுதான்.. நான் இலங்கைக்குக் (அதிலும் வடக்கு கிழக்குப் பகுதிகள் மாத்திரம் தான்) சென்ற சமயங்களில் என் கண்ணில் பட்டு கருத்தை கவர்ந்தவற்றை படம் எடுத்து சேர்த்து வைப்பது ஒரு பொழுதுபோக்கு!!!! அப்படி எடுத்தவைகளில் சிலதை இங்கே பதிகிறேன்..நீங்கள் அங்கே நடந்த சம்பவங்களை நான்கு ஐந்து வரிகளில் எழுதுங்கள்.. ஏனெனில் மட்டுறுப்பினருக்கு நிறைய கஷ்டம் கொடுக்கக்கூடாது. உங்களுக்கு தெரிந்தது மற்றவர்களுக்கு சில சமயம் தெரிந்திருக்காது.. தனிப்பட்ட நினைவுகள் இருந்து எழுதினால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை😊 முதலில் இரு படங்களை இன்று இணைக்கிறேன்.. இது ஆலடிச் சந்தி - வல்வெட்டித்துறை.. முதல் படத்தைப் பார்த்து உங்களது மனதில் தோன்றுவதை இங்கே எழுதுங்கள்.. படங்களை நான் இணைக்கிறேன்.. அவற்றின் கருத்தை/எண்ணத்தை நீங்கள் கூறுங்கள். நன்றி..
  4. 10 கிலோ என்பது மிகவும் அதிகம். நாளாக நாளாக முழங்கால் வலிகள் ஏற்படலாம். உங்களுக்கு வீட்டிலேயே டாக்ரர் உள்ளதால் நாங்கள் எழுத தேவையில்லை. இருந்தும் ஏதோ எழுத வேண்டும் போல இருந்தது. ஏன் தம்பி காலில் நகம் இல்லையா?
  5. வேலைக்கு போவது சந்தோசம். உடல் நிறையில் கவனமாக இருக்கவும். உலகிலை இப்ப அதுதான் பெரிய பிரச்சனை.ஆ...ஊ எண்டால் கால களட்டி எடுக்கிறாங்கள் 😡
  6. பாகம் II அவனுக்கும் இவனுக்குமான நட்பு அலாதியானது. வாழ்க்கைமுறை, சமயம், பிரதேசம், தெரிவுப்பாடங்கள் என பலதிலும் வேறுபட்டிருந்தாலும் தமிழும், கவிதையும், நாடகமும், புத்தகங்களும் அந்த இடைவெளியை இட்டு நிரப்பி, மேலதிகமாகவும் ஒரு பிணைப்பை ஏற்படுத்த போதுமாயிருந்தன. இருவரும் கிண்டல் அடிப்பதில் ஆளை ஆள் சளைத்தவர்கள் இல்லை என்பது மேலும் அவர்கள் நட்பை எப்போதும் கலகலப்பான உறவாக வைத்திருந்தது. இவனின் மெசேஜை பார்த்ததில் இருந்து, அவனுக்கு கொஞ்சம் கலக்கலாமகவே இருந்தது. அவர்களுக்கு இடையில் இப்படியான pranks செய்வதும் வழமைதான். அதுபோல் இதுவும் இவனின் குழப்படிகளில் ஒன்றாக இருக்கலாம். போன கிழமை கூட வாட்சப்பில் மாவீரர் நாளுக்கு இவன் எழுதியதை வாசித்து விட்டு, அவன் ஒரு தெரியாத நம்பரில் இருந்து கோல் எடுத்து சிங்களத்தில் “மாத்தையா டக்சி ஓடர் பண்ணீர்கள், வீட்டுக்கு வெள்ளை வான் ஒன்று அனுப்பவா” என கேட்டு கலாய்திருந்தான். இதுவும் அதுக்கான இவனின் பதிலடியாக இருக்கலாம். ஆனால் அவனின் உள்ளுணர்வு இது ஏதோ வேறு பிசகு என கூறியது. பரவாயில்லை இன்றைக்கு வேர்க் புரொம் ஹோம்தான், நல்ல வேளையாக வேலை போனையும் கையோடு எடுத்து வந்தது வசதியாக போய்விட்டது. வேர்க் புரொம் ஹோம் என்றாலே வேலையை தவிர மிச்சம் எல்லாம் செய்யும் நாள் என்பது எழுதப்படாத சட்டம் ஆகி விட்ட நாட்டில் அவன் மட்டும் என்ன விதி விலக்கா? கார் கழுவுவது, உடுப்பு தோய்ப்பது, ஆருக்கும் சம்பளம் வாங்காமல் அட்வைஸ் கொடுப்பது, யாழிலும் வட்சாப்பிலும் உழட்டுவது, இடைக்கிடையே, முதலாளி பாவம் எண்டு கொஞ்சம் வேலையும் செய்வது. இதுதான் அவனின் இந்த வேர்க் புரொம் ஹோம் நாட்களின் ரூட்டின். ஆகவே அருகில் இருக்கும் டெஸ்கோவில் காரை விட்டு விட்டு என்ன எண்டு கேட்போம் என நினைத்தவாறே காரை டெஸ்கோ கார்பார்க்குக்குள் விரட்டினான் அவன். என்ன மச்சான் ஓகேயா? அவனின் கேள்விக்கு பதில் வர தாமதித்தது…. மச்சான்…டேய்…என்னடா மெசேஜ் போட்டிருந்தாய்…என்ன ஏர்ஜெண்ட் மட்டர்? தொண்டையை கனத்தபடி இவன் பேசத்தொடங்கினான்….. ஐ’ ம் குட் படி. ஐ டு ஹாவ் எ குவஸ்யன் போர் யூ…. டேய் லூஸ் விளையாட்டு விளாடாத…வேலை கடுப்பில நிக்கிறன் பிறகு அடிக்கிறன்…. நோ..நோ…லிசின் மேட்… ஐயம் சீரியஸ் எபவுட் திஸ்… அட்சரம் பிசகாத லண்டன் உழைக்கும் வர்க்க ஆங்கில உச்சரிப்பில்…. தன் பிரச்சனையை எடுத்து சொல்ல ஆரம்பித்து இருந்தான்…. வாழ்வில் என்றுமே இங்கிலாந்துக்கு வந்தே இராத, பிரித்தானியாவுடன் எந்தவித பரிச்சயமும் இல்லாத இவன். (தொடரும்) (யாவும் கற்பனை அல்ல) ——————————————-
  7. நம்ப முடியாது ஆனால் அதுதான் உண்மை நாய்போல குரைக்கும் வெள்ளைக்காக்கா subscribe & like
  8. தையல்கடை. தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(1). சுமதி சதயம் நட்ஷத்திரம் கும்பராசி...... அன்று லீவுநாளானபடியால் சுமதி வீட்டில் சின்ன சின்ன வேலைகள் செய்து கொண்டிருக்கிறாள்.எல்லாம் வளந்திட்டுதுகள் ஒரு வேலையும் செய்கிறதில்லை.பிள்ளைகளுக்கு திட்டும் நடக்குது.தொலைக்காட்சியில் செய்திகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கு. சுமதி ஒரு பெரிய ஹோட்டலில் முப்பதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மேலாளராக பணிபரிகிறாள்.அவளுக்கு ஒரு வீட்டுக்காரரும் இரண்டு பிள்ளைகளும் ஒரு கணவனும் இருக்கிறார்கள். மூத்தவன் முகிலன் பதினெட்டு வயது அடுத்து வானதி பத்து வயது. அவர்கள் இப்போதும் வாடகை வீட்டில் இருப்பதால், இப்ப உங்களுக்கு புரிந்திருக்கும் அவளின் வீட்டுக்காரர் யார் என்று.......!கணவன் சுரேந்தரும் வீடுகள் விற்கும் வாங்கும் ஒரு ஏஜென்சியில் மேலாளராக இருக்கிறார். சுமதிக்கு நல்ல ஊதியமும் காரும் கொம்பனி கொடுத்திருக்கு. இவற்றைவிட அவளுக்கு நன்றாகத் தையல் வேலை தெரியும். அதனால் வீட்டில் ஒரு தனியறையில் தையல் மிசின் வைத்து அக்கம் பக்கம் தெரிந்தவர்கள், உறவினர்களுக்கெல்லாம் ஆடைகள் நவீன மாடல் ப்ளவுஸ்கள் தைத்து கொடுத்து உபரியாக சம்பாதிக்கிறாள். இதெல்லாம் இருந்தபோதிலும் அவளுக்கென்று ஒரு ஆசை இந்த "லா சப்பலில்" சொந்தமாக ஒரு தையல்கடை போடவேண்டும் என்று. அதற்குத் தோதாக சென்றவாரம்தான் எதேச்சயாக அவள் சேகரிடம் கட்டிய சீட்டு ஒன்று சீட்டு கேட்டு ஏற்றுகிற வல்லுநர்கள் வரத் தவறியதால் குறைந்த கழிவில் சுமதிக்கு கிடைத்திருக்கு. அந்தப் பணம் இன்னும் சில நாட்களில் கைக்கு வந்து விடும்.என்ன ஒரு பிரச்சினை என்றால் அதை அப்படியே வங்கியிலும் போட முடியாது. நூற்றியெட்டு கேள்விகள் கேட்பாங்கள். இன்றைய நாளில் வீட்டில் வைத்திருப்பதும் பிரசினைதான்.கள்ளர்களுக்கும் உளவாளிகள் உண்டு.அவங்களும் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ஆயுதங்களைக் கொண்டுவந்து வெகு சுளுவாக பணம் நகைகள் மட்டும் எடுத்துக் கொண்டு போயிடுறாங்கள். பக்கத்தில ஐ போன் 14 இருந்தாலும் தொடுகிறதில்லை. வீடும் அலுங்காமல் குலுங்காமல் பூட்டியபடியே இருக்கும். ஆனால் சுமதிக்கு நகைகள் பற்றி பயமில்லை. அவையெல்லாம் வங்கிப் பெட்டியில் ஆழ்நிலைத் தியானத்தில் இருக்கின்றன. இவன் மூத்தவன் முகிலன் மட்டும் ஒரு பெட்டையாய் பிறந்திருந்தால் ஒரு சாமத்தியவீடு செய்து அதைக் காரணம் காட்டியாவது கொஞ்சப் பணத்தை வங்கிகளில் போட்டிருக்கலாம்.இப்போதைக்கு அதற்கும் வழியில்லை. அவனுக்கும் இப்ப பதினெட்டு வயதாகின்றது. ஒரு காதில் கடுக்கணும் போட்டுக்கொண்டு உரித்த சேவல் மாதிரி ஒரு மோட்டுச் சைக்கிளில் யுனிக்கு போய்வாறார். சுமதியின் கை பழக்கத்தில் வேலைகளை பர பர வென்று செய்ய மனம் தனக்குள் கணக்கு போட்டுக்கொண்டு இருக்கு. உடனே மூளைக்குள் பளிச் என ஒரு யோசனை, ஏன் நான் இந்தப் பணத்தைக் கொண்டு "லா சப்பலில்" ஒரு கடை போடக் கூடாது. நாலு தையல் மிசின் வாங்கிப் போட்டு மூன்று நாலு ஆட்களை சம்பளத்துக்கு வைத்துக்கொண்டு வியாபாரம் ஆரம்பிக்கலாம் தானே. மெலிதாகத் தோன்றிய எண்ணம் நேரம் செல்ல செல்ல விருட்ஷமாய் வளர்ந்து கொண்டிருக்கு. அப்போது செற்றியில் கிடந்த அவளது போன் ரிங்டோன் " ரஞ்சிதமே ரஞ்சிதமே " என்று அழைக்கிறது. செய்த வேலையை அப்படியே போட்டு விட்டு அங்கு போகிறாள். கவிதாதான் அழைப்பு எடுத்திருந்தாள். ஓ .கவிதா எப்படி சுகம் என்று தொடங்கி அக்கம் பக்கம் மற்றும் நண்பர்கள் எல்லாரையும் அலசிக் கழுவிக் கொண்டிருக்கும் பொழுது தொலைகாட்சியில் ஒரு ஐயா அங்கவஸ்திரம் அணிந்து வீபூதி சந்தனம்,குங்குமம் எல்லாம் போட்டுக் கொண்டு இராசிபலன் சொல்லுகிறார்.அப்போது வீட்டின் அழைப்புமணி ஒலிக்கிறது. பொறடி கவிதா ஆரோ பெல் அடிக்கினம்,நான் பிறகு எடுக்கிறன். என்ர வீட்டுக்காரர்தான் வாறதெண்டவர் அவராய்த்தான் இருக்கும் என நினைத்துக்கொண்டு கதவைத் திறக்க அவர்தான் நிக்கிறார். பொறுங்கோ அங்கிள் கவர் எடுத்துக் கொண்டு வாறன் என்று சொல்லி உள்ளே சென்று செக் இருந்த கவரைக் கொண்டுவந்து அவரிடம் குடுத்து விட்டு அவர் சொன்ன "A " ஜோக்குக்கு சிரித்து கதைத்துக் கொண்டிருக்க.... இராசிபலனில், எதிலும் நிதானத்தை கடைபிடிக்கும் கும்பராசி அன்பர்களே ! உங்களுக்கு ஏழரை சனியின் கடைக்கூறு நடைபெறுவதால் மிச்சம் இருக்கும் இரண்டு வருடங்களும் நீங்கள் மிகக் கவனமாய் இருக்க வேண்டும். மேலும் இன்னும் இரு மாதங்களில் குருபகவான் ஆறாம் வீட்டில் மறைவதால் சனியும் உக்கிரேன் மாதிரி உக்கிரமாக உங்களை வாட்டும். பிரச்சினைகளும் எந்தப் பக்கம் என்றில்லாமல் ரஷ்ய ஏவுகணைகள் போல் அடுத்தடுத்து வந்து தாக்கும். அதனால் இப்ப இருக்கிற பணத்தை, சொத்துக்களை பாதுகாத்து வைத்திருந்தாலே போதுமானது.இரு வருடங்களுக்கு புதிதாய் முதலீடுகள் செய்வதை தவிர்த்தல் நல்லது.சதயம் நட்ஷத்திரத்தில் பிறந்த கும்பராசிக்காரர்களே உங்களின் கும்பம் ஓடிகிற அளவுக்கு சுமை இருப்பதால் எதிலும் கவனம் தேவை........தொடர்ந்து அடுத்து அழகிய கண்களையுடைய மீனராசி அன்பர்களே.........! அப்போது அந்த பலூன் ஜோக்குக்கு சிரித்தவாறு உள்ளே வந்த சுமதி அட கும்பராசிக்கு சொல்லி முடிஞ்சாச்சுது போல, ச் சா.... மிஸ் பண்ணிட்டன் என்று சொல்லியபடி செற்றியில் அமர்கிறாள். சற்று நேரத்தில் அவளது கணவன் சுரேந்தர் வேலையால் அலுத்துக் களைத்து வீட்டிற்குள் வருகிறார். இன்னும் தைப்பார்கள்........! 🥻
  9. பைத்தியம் U mad bro பாகம் I நதியே…நதியே காதல் நதியே நீயும் பெண்தானே…. அடி நீயும் பெண்தானே …. நிசப்தமான இரவை குலைத்தபடி சங்கர் மகாதேவன் போனில் பாடத்தொடங்கி இருந்தார். சை…இந்த அலாம் டோனை மாத்த வேணும். பழைய நொக்கியா மாரி இல்லை, இந்த போனில் புதிதா ஒரு டோன் போடுறதுகுள்ளா போதும் போதும் எண்டாயீடும். நினைத்து கொண்டே கட்டிலில் இருந்து பிரண்டு, போனின் அலார்மை அணைத்தான் அவன். அலாம் அடிக்கிறது என்றால் அது ஒரு கிழமை நாள், காலை ஆறரை மணியாக இருக்க வேண்டும். அவன்……. அப்படி ஒன்றும் கதாநாயகன் களை எல்லாம் இல்லாவிடிலும் இந்த கதையின் நாயகர்களில் ஒருவன். ஒரு பெண்ணின் கணவன். ஒரு மகனின் தந்தை. கட்டிலில் திரும்பி பிரண்டபோதுதான் அருகில் மனைவி இல்லை என்பது உறைத்தது. நேற்றே சொல்லி இருந்தாள் “நாளைக்கு காலமை அப்பாவுக்கு ஹொஸ்பிட்டல் அப்பொயிண்ட்மெண்ட், ஸ்கூல் ரன் உங்கள் பாடு”. கட்டிலால் எழுந்து பல்லை விளக்கி விட்டு வந்து மகனை எழுப்பி, மகனுடன் பள்ளிக்கு வெளிக்கிடசொல்லி தேவாரம் பாடி, இடையில் உணவும் தயார் செய்து, அதை உண்ணவும் வைத்து, வெளியே ரத்தம் உறையும் குளிரில் நிண்டபடி காரில் படிந்திருக்கும் பனியை சுரண்டி……. நினைக்கவே அலுப்பாக இருந்தது அவனுக்கு. ஆனாலும் செய்யதான் வேண்டும். சோம்பலாய் எழுந்து போனை பார்த்தால் - இவன் மிஸ்டுகால் என காட்டியது. இவன்…….. இந்த கதையின் இன்னுமொரு நாயகன். கொழும்பில் நல்ல வசதியாக வாழும் ஒருவன். மூன்று மாடியில் ஏழு அறை வீடு, டிரரைவர், சமமையல்காரன், தோட்டகாரன் என சகல செளபாக்கியமுமான வாழ்க்கை வாழ்பவன். சரி ஏதோ ஸ்கூல் விசயமாக்கும். பிறகு அடிப்பம். என நினைத்தபடி வேலையில் மூழ்கிப்போனான் அவன். காரில் இருந்து மகன் இறங்கி போகும் போது, urgent. Plz call…..plz அவனின் போனில் இவன் அனுப்பிய குறுஞ்செய்தி மின்னியது. (தொடரும்) (யாவும் கற்பனை அல்ல) ——————————————-
  10. என்ன கோதாரியோ.....ஆனால் நான் சொல்ல வந்த விசயம் உங்களுக்கு விளங்கியதையிட்டு எனக்கு மகா சந்தோசம். நான் பெற்ற பாக்கியமாக கருதுகின்றேன்
  11. இந்த இடம் வடமராச்சியில்தான் உள்ளது.. பிரேசிலில் அல்ல எந்த இடம் என கூறுங்கள் பார்ப்போம் இவரைப் பார்க்கும் பொழுது உங்களுக்கு தோன்றுவது என்ன?
  12. உண்மைதான் தமிழ் சிறி அண்ணா.. நன்றி. நன்றி அங்கிள். பயணக் கட்டுரை ஒன்று pendingல் உள்ளது.. Aboriginals சம்பந்தப்பட்டமையால் சரியானதை எழுதவேண்டும் அத்துடன் அப்பாவின் உடல்நலமும் பாதிக்கப்பட்டுள்ளதால் எழுதமுடியாமல் தள்ளிப் போகிறது..பார்ப்போம்..
  13. தையல் கதை/வகை பலவிதமாக இருக்கும் போல உள்ளது..கதைக்கு நன்றி சுவி அண்ணா!!
  14. அரசியலில்.. காதலர் தின கருத்தோவியங்கள்.
  15. ரொம்ப மகிழ்ச்சி தமிழ் சிறி.👌 வயசு போன காலத்தில், "அங்கே ..இங்கே"ன்னு பராக்கு பார்க்காமல், சிரத்தையுடன் அலுவலக அறைக்குள் வேலையில் கவனம் செலுத்தவும். 😜
  16. தையல் கதை நகைச்சுவையோடு சுப்பராக போகிறது. லா சப்பலில் கடை போடுறாவோ இல்லையோ என்பதை பாத சனி முடிவெடுக்கும் போல.
  17. தொடருங்கள் தமிழ் சிறி. ஒரு டவுட்டு, காலுக்கும் கியூட்டெக்ஸ் போடுகின்றீர்களா?
  18. வாழ்நாள் பூரா அந்த உணர்வு இருந்துகிட்டே இருக்கும். நீங்களாவே கூப்பிட்டு கதைக்கவில்லையா? மீண்டும் வேலைக்கு போவது மிகவும் சந்தோசம். சில வேலையிடங்களில் இப்படி விபத்துக்களில் அகப்பட்டுக் கொண்டோரை மீண்டும் வேலையில் சேர்க்க மாட்டார்கள். ஒரு தொகை பணத்தைக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். நல்லது நாளாந்த அனுபவங்களை எழுதுங்கள்.
  19. நம்ம தல லேசில கதை சொல்லாது. கதை சொல்ல வெளிக்கிட்டால் ஒரே அதிரடிதான். சமூகக்கதை பிரமாதம் தொடருங்கள். நாயகன் மீண்டும் வாறார் நம்ம தையல் நாயகி
  20. ஒரு குடும்பத்தின் கதை சொல்ல வெளிக்கிட்டு "வீட்டுக் காரனையும்" கையோடு கூடி வந்துள்ளீர்கள். தொடருங்கள் வேடிக்கையை வாசிப்போம்.
  21. வேலைக்கு சென்றால் உடலுக்கும் மனநிலைக்கும் நன்று .டாகடர் சொன்ன படி அதிகம் உடலுக்கு சிரமம் கொடுக்காமல் படிப்படியாக முன்னேறுவது தான் நன்று. வேலைக்குசெல்வதால் யாழ் கள வரவும் கலகலப்பும் பகிடியும் குறையாது தானே ?😃 மனதுக்கு சோகம் தருபவற் றை மறந்து நல்லவைகளை , அறிவு பூர்வமான மற்றவர்களுக்கு பயன் தருவதை பதியுங்கள் வாசிக்க காத்திருக்கிறோம்.
  22. எனக்கு சிரிச்சு முடியவில்லை இன்னும். "இன் கம்மிங் "அவன் தான் பிரச்சினை அது யாருங்க இன் கம்மிங். அவனையிறக்கி விடுங்க...சார். லைன் இல் நிக்கிறான். மிக தரமான சிரிப்பு ..இப்படியும் அப்பாவிங்களா ? ...பகிர்வுக்கு நன்றி அன்பு ...
  23. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரிய நகரத்தில் இடிபாடுகளில் இருந்து காப்பாற்றப்பட்ட பிறந்த குழந்தை வடமேற்கு சிரிய நகரமொன்றில் இடிந்து விழுந்த கட்டிடத்தை தோண்டிய குடியிருப்பாளர்கள், இந்த வார அழிவுகரமான பூகம்பத்தின் இடிபாடுகளுக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்தபோது, அழும் சிசு ஒன்றைக் கண்டுபிடித்ததாக உறவினர்கள் மற்றும் மருத்துவர் செவ்வாயன்று தெரிவித்தனர். புதிதாகப் பிறந்த சிறுமியின் தொப்புள் கொடி இறந்த நிலையில் இருந்த அவரது தாயார் அஃப்ரா அபு ஹதியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர். துருக்கிய எல்லைக்கு அடுத்துள்ள ஜின்டெரிஸ் என்ற சிறிய நகரத்தில் திங்கள்கிழமை கட்டிடம் இடிந்து விழுந்ததில் இருந்து தப்பிய அவரது குடும்பத்தில் குழந்தை மட்டுமே உயிர் பிழைத்துள்ளது என்று உறவினர் ரமலான் ஸ்லீமான் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தார். நிலநடுக்கம் ஏற்பட்டு 10 மணி நேரத்திற்கும் மேலாக திங்கள்கிழமை மதியம் பிறந்த குழந்தை மீட்கப்பட்டது. மீட்பவர்கள் அவளை தோண்டி எடுத்த பிறகு, பக்கத்து வீட்டு பெண் ஒருவர் வடத்தை அறுத்தார், அவரும் மற்றவர்களும் குழந்தையுடன் அருகிலுள்ள நகரமான ஆஃப்ரினில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு விரைந்தனர், அங்கு அவர் ஒரு காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளார் என்று குழந்தைக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர், டாக்டர். ஹானி மரூஃப். குழந்தையின் உடல் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாக (95 டிகிரி ஃபாரன்ஹீட்) குறைந்துள்ளது, மேலும் அவள் முதுகில் ஒரு பெரிய காயம் உட்பட காயங்கள் இருந்தன, ஆனால் அவள் நிலையான நிலையில் இருப்பதாக அவர் கூறினார். அபு ஹதியா பிரசவத்தின் போது சுயநினைவுடன் இருந்திருக்க வேண்டும், விரைவில் இறந்திருக்க வேண்டும் என்று மரூஃப் கூறினார். குழந்தை கண்டுபிடிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே பிறந்துவிட்டதாக அவர் மதிப்பிட்டார். நிலநடுக்கத்திற்கு சற்று முன்பு பெண் குழந்தை பிறந்திருந்தால், குளிரில் இத்தனை மணி நேரம் உயிர் பிழைத்திருக்க மாட்டாள், என்றார். “அந்தப் பெண்ணை இன்னும் ஒரு மணி நேரம் விட்டு வைத்திருந்தால், அவள் இறந்திருப்பாள்,” என்று அவர் கூறினார். திங்கட்கிழமை விடியற்காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, அபு ஹதியா, அவரது கணவர் மற்றும் நான்கு குழந்தைகள் தங்கள் அடுக்குமாடி கட்டிடத்தை விட்டு வெளியேற முயன்றனர், ஆனால் கட்டிடம் அவர்கள் மீது இடிந்து விழுந்தது. அவர்களின் உடல்கள் கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு அருகில் காணப்பட்டன, புதிதாகப் பிறந்த குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு சம்பவ இடத்திற்கு வந்த ஸ்லீமன் கூறினார். "அவள் தன் தாயின் கால்களுக்கு முன்னால் காணப்பட்டாள்," என்று அவர் கூறினார். "தூசி மற்றும் பாறைகள் அகற்றப்பட்ட பிறகு சிறுமி உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டது." குழந்தை 3.175 கிலோகிராம் (7 பவுண்டுகள்) எடையுள்ளதாகவும், புதிதாகப் பிறந்த குழந்தையின் சராசரி எடையாகவும் இருந்ததாகவும், அதனால் குழந்தை பிறக்கும் வரை சுமந்து சென்றதாகவும் மரூஃப் கூறினார். "எங்கள் ஒரே கவலை அவள் முதுகில் காயம் உள்ளது, அவள் முதுகுத் தண்டில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என்பதை நாங்கள் பார்க்க வேண்டும்," என்று அவர் கூறினார், அவள் கால்கள் மற்றும் கைகளை சாதாரணமாக நகர்த்தினாள். திங்கட்கிழமை அதிகாலை 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், அதைத் தொடர்ந்து பல அதிர்வுகள், தெற்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியா முழுவதும் பரவலான அழிவை ஏற்படுத்தியது. | அசோசியேட்டட் பிரஸ் மூலம். subscribe & like
  24. ஒருவரின் கருத்துக்கு நீங்கள் மறு கருத்து பேசாத வரையில் அவருக்கு நீங்கள் நண்பன் தான்.
  25. உப்பிடித்தான் முந்தியொருக்கால் "எழுவான்" எண்டொரு ஆளும் ரீச்சர்வேலை பாக்க வந்தவர்......குடுத்த குடுவையிலை...வந்த வேகத்திலையே திரும்பி ஓடினவர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.