Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. nilmini

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    929
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87993
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46798
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    19139
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/12/23 in all areas

  1. View of our Earth from Mars மனிதா உன்னைத்தான்! வானப்பரப்பினிலெம் மண்ணோர் சிறுபுள்ளி காணவும் கூடாக் கடுகு. - எதற்காக உன்னையே எண்ணி உள்ளம் கலங்குகிறாய். செவ்வாய்ப் பரப்பிருந்து, சிற்றொளியைக் காலுகிற பூமியை நோக்குகையில் புழுதிமணியாக, தோற்றமளிக்கிறது தோற்றமற்றும் போகிறது. உன்னை நீ எண்ணிப்பார் உலகத்தில் எத்தனைபேர் சாதியென்றும் சமயமென்றும் தம்வாழ்வை வீணாக்கி நீதியறியா நீசர்களாய்த் தம்முள்ளே மோதியழிகின்றார், மூடர்களாய்ச் சாகின்றார். எம்மினிய சந்ததியே எண்ணிப்பார் இத்துயரை. மண்ணில் எதற்காக வாழ்வைக் கெடுக்கின்றோம். தூசினும் தூசாய் தூலமற்ற சூனியத்தில் ஞாலம் உதித்ததில் நாம் பிறந்து வாடுகிறோம். ஆசை பலகோடி அத்தனையும் தீராமல் காசு போருள் தேடி கணக்கற்ற வேதனைகள் பட்டுத் தவித்துப் பதறுகிறோம் ஆதலினால் விட்டுவிட முடியா விபரீத எண்ணங்கள் நெஞ்சை நிரப்பாது நிம்மதியை நீதேடு. கொஞ்சம் அமைதிபெறு குவலயத்திலே நீயோர் புழுதிமணி அஃதைப் புரிந்துகொள் எப்போதும்.
  2. காக்கா நரிக் கதை I ain’t playin பொறுப்பு துறப்பு கதைமாந்தர்கள், சம்பவங்கள் யாரையும் குறிப்பன அல்ல. கதை சொல்லி, தானே தன் வாழ்க்கையில் நரியாகவும், காக்காவாகவும் இருந்துள்ளார், இருக்கிறார், இருப்பார் என்பதை ஏற்று கொள்கிறார். ——————-//////————//////——————— நரிக்கு மனம் பக்…பக்… என்று அடித்துக்கொண்டது. இன்னும் ஒரு அரை வினாடி மட்டும்தான்…. பாடுகிறேன் பேர்வழி என்று இந்த அண்டங்காக்காய் மட்டும் வாயை திறக்கட்டும்… வடையை ஒரே லபக்கில் முழுங்கி விட வேண்டியதுதான். இந்த ஒரு வடைக்காக எத்தனை பாடு? எத்தனை பிரயத்தனம்? எத்தனை அவமானம்? காகத்தின் இந்த கர்ணகடூர ஓசையை கூட இசை என்று பொய்யாக புகழும் படி ஆயிற்றே…. அதுவெல்லாம் கூட பரவாயில்லை, என் சுயத்தை மறைத்து, நல்லவன் போல அல்லவா நடிக்கும் படி ஆயிற்று ? எத்தனை பெரிய ஒறுப்பு அது? பாட வாய் எடுத்தது போல் இருந்த காகத்தின் வாயில் நரியின் ஒட்டு மொத்த கவனமும் குவிந்திருந்தது. ஆனால் காகமோ பாடுவதாகக் காணோம். கால்களில் வடையை பற்றி கொண்டு, தலையை ஸ்லோமோசனில் இடமும், வலமுமாக திருப்பியது. இடையிடையே கண்களை திறந்து மூடிக்கொண்டது. பிறகு தலையை கீழே குனிந்து வடையை சில நிமிடங்கள் வெறித்துப் பார்த்து கொண்டிருந்தது. நரிக்கு இருப்பு கொள்ளவில்லை. வடை எல்லாம் பெரிய மேட்டரே இல்லை. சொல்லப்போனால் நரிக்கு வடை மேல் அதிக இஸ்டம் கூட இல்லை. இந்த காகத்தோடு வீணடித்த நேரத்தை, ஒரு ஆட்டு மந்தையில் செலவழித்திருந்தால் ஒரு கறி விருந்தேசாப்பிட்டு இருக்கலாம். ஆனால் அதுவல்ல முக்கியம். இது ஒரு விளையாட்டு, காகத்தின் வடையை கவர வேண்டும். அவ்வளவுதான். இந்த காகத்தை ஏமாற்றி விட்டேன் என என் சக நரிகளுக்கு நிரூபிக்க வேண்டும். அனைவர் முன்னிலையிலும் காகத்தை கேலிக்குள்ளாக்க வேண்டும். முக்கியமாக காகத்துக்கு ஒன்றும் தெரியாது என்று நிறுவ வேண்டும். அப்போதான் காகம் சொல்வது எதையும் இனி இந்த காடு நம்பாது. நரி சொல்லே மந்திரம் என இந்த காடு கட்டுப்படவேண்டும். அதற்கு என்ன தியாகமும் செய்யலாம். காகம் இப்போ பாடத்தயாராவது போல தெரிகிறது. ஆனால் வடையோ இன்னமும் காகத்தின்கால்களில்டையேதான் சிக்கிகொண்டுள்ளது. என்னது ஒரு அற்ப காகம் நம்மை விட குறுக்குப்புத்தி உடையதாக இருக்குமோ? நரிக்கு சந்தேம் சற்றே எட்டிப்பார்க்க தொடங்கியிருந்தது. காகம் மெதுவாக குனிந்து வடையை வாயில் கவ்வி…. தொப் … என்று நரியின் முகத்தில் விட்டெறிந்தது…. காகம் பாட மட்டும் இல்லை, நரியோடு பேசக்கூட செய்யவில்லை. பறந்தே போயிற்று.
  3. சிறி இந்தக்காணொளியை பார்த்தீர்களா? எமது வீடுகளுக்கு கிட்டவெல்லாம் எடுத்திருக்கிறார்கள்.
  4. 225 மில்லியன் ஆண்டுகள் பழமையான, ஓப்பல் மரத்தின் அடிப்பகுதி. அரிசோனாவில் உள்ளது. Opal tree.
  5. மணியான பதில். 😁 குருவை விஞ்சிய சிஷ்யன். 😂 படத்தில் உள்ள, முக பாவனைகளும் அருமை. 🤣
  6. தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன ஓடையைப் போலே உறவுமல்ல பாதைகள் மாறியே பயணம் செல்ல விண்ணோடு தான் உலாவும் வெள்ளி வார்ண நிலாவும் என்னோடு நீவந்தால் என்ன... வா வெள்ளி வர்ண நிலா விண்ணோடு (ஆகாயத்தோடு) தான் உலா வரும் நீ என்னோடுவந்தால் என்ன ? அருமையான வரிகள். விரும்பாத பெண்ணை தொடாத ஜென்டில் மன் கதாநாயகன். நல்லதொருபாடலை பகிர்வுக்கு நன்றி.
  7. தமிழ்ப் படங்களின் கதையைப் போன்ற கதை கிடைக்குமா? நிச்சயமாக! தமிழ் சினிமா, எந்தத் திரைப்படத் துறையையும் போலவே, இலக்கியம், வரலாறு, சமகாலப் பிரச்சினைகள் போன்ற பல்வேறு ஆதாரங்களில் இருந்து உத்வேகம் பெறுகிறது. தமிழ்த் திரைப்படங்களைப் போன்ற கதையை உருவாக்க நீங்கள் ஆர்வமாக இருந்தால், இந்த ஆதாரங்களில் இருந்து உத்வேகம் பெறலாம் மற்றும் தமிழ் சினிமாவில் பிரபலமான மரபுகள் மற்றும் ட்ரோப்களைப் பயன்படுத்தலாம். உதாரணமாக, அநீதி மற்றும் அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் ஒரு வீரமிக்க கதாநாயகனை மையமாகக் கொண்ட கதையை நீங்கள் உருவாக்கலாம். இந்த கதாநாயகன் வில்லன்களுக்கு எதிராக தனிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடலாம் அல்லது சமூகம் அல்லது தேசத்தைக் காப்பாற்றுவது போன்ற ஒரு பெரிய காரணத்திற்காக போராடலாம். கதையில் காதல், நகைச்சுவை மற்றும் நாடகம் ஆகிய கூறுகள் பார்வையாளர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்க முடியும். தமிழ் சினிமாவில் பிரபலமான குடும்ப மதிப்புகள், நட்பு, விசுவாசம் மற்றும் தியாகம் போன்ற கருப்பொருள்களையும் நீங்கள் இணைக்கலாம். கதை பார்வையாளர்களுடன் வலுவான உணர்ச்சித் தொடர்பைக் கொண்டிருக்கலாம் மற்றும் ஒரு நேர்மறையான செய்தி அல்லது தார்மீகத்தை வெளிப்படுத்தும். சுருக்கமாகச் சொன்னால், தமிழ் சினிமாவில் இருந்து உத்வேகம் பெறும் அதே வேளையில், தனித்துவம் வாய்ந்த ஒரு கதையை நீங்கள் உருவாக்கலாம், அதன் சொந்த குரல் மற்றும் பாணி. சாத்தியக்கூறுகள் முடிவற்றவை, படைப்பாற்றல் மற்றும் கற்பனை மூலம், பார்வையாளர்களுடன் எதிரொலிக்கும் ஒரு கதையை நீங்கள் உருவாக்கலாம். பெருமாள் தமிழ் சினிமா கதை எழுத முடியுமா? தலைப்பு பாத்திரங்கள்: அர் நான் ஆர் ஜே கதைக்களம்: அர்ஜுனும் மீராவும் ஒரு சிறிய நகரத்தை நாசப்படுத்திய இயற்கை பேரழிவு பற்றிய கதையை உள்ளடக்கிய பணியில் இருக்கும்போது ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள். அவர்கள் தங்கள் வேலையில் ஒருவருக்கொருவர் ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் ஈர்க்கப்படுகிறார்கள், விரைவில் காதலிக்கிறார்கள். அவர்கள் பல்வேறு கதைகளில் ஒன்றாக வேலை செய்யும் போது, ரவியால் நடத்தப்படும் ஊழல் மற்றும் சுரண்டல் வலையை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள், அவர் தனது செல்வத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி சுற்றுச்சூழலை அழித்து உள்ளூர் சமூகங்களை தனது சொந்த லாபத்திற்காக சுரண்டுகிறார். அர்ஜுனும் மீராவும் தங்கள் வேலையின் மூலம் ரவியின் செயல்களை அம்பலப்படுத்த முடிவு செய்கிறார்கள், ஆனால் இது அவர்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது, ஏனெனில் ரவி தனது அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி அவர்களையும் அவர்களது குடும்பத்தையும் அச்சுறுத்துகிறார். மீராவை ரகசியமாக காதலிக்கும் ஜீவா, ரவிக்கு எதிரான அவர்களின் போராட்டத்தில் அவர்களுடன் சேர்ந்து, உண்மையை வெளிக்கொணரவும், ரவியை நீதியின் முன் நிறுத்தவும் அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைக்கிறார்கள். இறுதியில், அர்ஜுன் மற்றும் மீராவின் ஒருவருக்கொருவர் அன்பும், அவர்களது பணிக்கான அர்ப்பணிப்பும், ஜீவா மற்றும் உள்ளூர் சமூகத்தின் ஆதரவுடன், ரவியின் பேராசை மற்றும் ஊழலில் வெற்றிபெற அவர்களுக்கு உதவுகிறது. தீம்கள்: அன்பும் அர்ப்பணிப்பும் வேலையில் ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு தைரியம் மற்றும் தியாகம் சமூக மற்றும் சுற்றுச்சூழல் நீதி இது ஒரு சாம்பிள் கதைதான், ஆனால் தமிழ் சினிமாவில் பொதுவாக இருக்கும் காதல், சமூக நீதி, தீமையின் மீது நன்மையின் வெற்றி போன்ற கூறுகளை இது விளக்குகிறது. படைப்பாற்றல் மற்றும் கற்பனைத்திறன் மூலம் உங்களுக்கான தனித்துவமான தமிழ் திரைப்படக் கதையை உருவாக்கலாம்.
  8. இலகுவாக விளங்க chatgpt யிடம் முட்டை நான்கு உள்ளது பச்சை மிளகாய் உள்ளது 2௦௦g கூடவே நேற்றைய ரைஸ் உள்ளது அது நன்றாக உள்ளது நேற்றைய மட்டன் கறி உள்ளது இவற்றை வைத்து சுவையான உணவு தயாரிக்கும்முறையை சொல்ல முடியுமா ? உங்களிடம் சில பொருட்கள் இருப்பது போல் தெரிகிறது! நீங்கள் செய்யக்கூடிய ஒரு சாத்தியமான உணவு இங்கே: பச்சை மிளகாயுடன் மட்டன் மற்றும் முட்டை வறுத்த அரிசி தேவையான பொருட்கள்: 4 முட்டைகள் 200 கிராம் பச்சை மிளகாய், நறுக்கியது 2 கப் சமைத்த அரிசி (முன்னுரிமை நேற்றையது) 1 கப் சமைத்த மட்டன் கறி உப்பு மற்றும் மிளகு, ருசிக்க 2 தேக்கரண்டி எண்ணெய் வழிமுறைகள்: ஒரு பெரிய வாணலி அல்லது வாணலியில், 1 தேக்கரண்டி எண்ணெயை நடுத்தர உயர் வெப்பத்தில் சூடாக்கவும். வாணலியில் முட்டைகளை உடைத்து, சமைக்கும் வரை துருவவும். வாணலியில் இருந்து முட்டைகளை அகற்றி தனியாக வைக்கவும். வாணலியில் மற்றொரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, நறுக்கிய பச்சை மிளகாயை சேர்க்கவும். 1-2 நிமிடங்கள் வறுக்கவும், அவை சிறிது மென்மையாகும் வரை. வாணலியில் சமைத்த மட்டன் கறியைச் சேர்த்து மேலும் 1-2 நிமிடங்கள் கிளறி, ஆட்டிறைச்சி சூடாக்கும் வரை வறுக்கவும். வாணலியில் சமைத்த அரிசியைச் சேர்த்து, அரிசி சூடாக்கும் வரை எல்லாவற்றையும் ஒன்றாகக் கிளறி, ஆட்டிறைச்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். துருவிய முட்டைகளை மீண்டும் வாணலியில் சேர்த்து, எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மற்றொரு 1-2 நிமிடங்களுக்கு கிளறி-வறுக்கவும், எல்லாம் சமமாக கலந்து சூடாகும் வரை. வறுத்த அரிசியை உப்பு மற்றும் மிளகு சேர்த்து, சுவைக்க. சூடாக பரிமாறவும் மற்றும் பச்சை மிளகாயுடன் உங்கள் மட்டன் மற்றும் முட்டை வறுத்த சாதத்தை அனுபவிக்கவும்! ஆங்கிலத்தில் இருந்ததை கூகிளில் மொழிபெயர்த்தது இலகுவான விளக்கத்துக்கு சில இடங்களில் மொழிமாற்றம் பிழையான மயக்கத்தை தரும் உடனே நம்ம பரியாரியார் போல் பொங்கி எழுந்து விடமாட்டிர்கள் தானே ?
  9. கட்டுரை போன்ற ஆக்கங்களை உருவாக்குவதற்கு வேண்ட்டுமானால் CharGPT பாவிக்கலாம். இதற்காக தரவுகளை வெட்டி ஒட்டுவதற்குப் பல்வேறு இணையத் தளங்கள் உள்ளன. கருத்தாடலில் ஒவ்வொருவரும் தம் பக்கக் கருத்துக்களையே எழுத விரும்புவார்கள். CharGPT ஒவ்வொருவரின் தனிப்பட்ட கொள்கை சார்பான உரையாடல்களைத் தரும் என்று நினைக்கவில்லை. அதன் தரவுகளும் பெரும்பாலும் சரியானதாகவே இருக்கும். பொய்ப் பரப்புரைகளுக்கும் சதிக் கோட்பாடுகளுக்கும் நிச்சயம் இடம் இருக்காது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.