Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    87993
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    11
    Points
    46798
    Posts
  3. nilmini

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    929
    Posts
  4. இணையவன்

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    9
    Points
    7596
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/18/23 in all areas

  1. இங்கே ஒரு வாழ்வு இருந்தது அங்கே ஒரு கதை இருந்தது அதிலும் ஒரு அறம் இருந்தது அப்போ எல்லாம் அழகு இருந்தது வீடு இருந்தது மரம் இருந்தது மரத்தில் பல பறவை இருந்தது பாடி இருந்தது கூடி இருந்தது பல குஞ்சுகள் அங்கு கூவி இருந்தது நிலவும் இருந்தது கனவும் இருந்தது நித்தம் இசைக்கும் பாடல் இருந்தது ஆட்டம் இருந்தது கூத்தும் இருந்தது எங்கும் சலங்கை ஒலியாய் இருந்தது நதி இருந்தது கடல் இருந்தது பூ இருந்தது கனியும் இருந்தது அருகில் எங்கும் ஆலயம் இருந்தது அங்கே ஒலிக்கும் மணி இருந்தது பள்ளி இருந்தது படிப்பும் இருந்தது துள்ளித் திரிந்த காலம் ஒன்றிருந்தது அடிக்கடி கூடும் நண்பர் இருந்தனர் அணைத்து எம்மை தாங்கும் ஆலமரமிருந்தது கோவில் இருந்தது சாமி இருந்தது வருடா வருடம் திருவிழா நடந்தது அம்மன் ஆடி வரும் தேரும் இருந்தது அதை விட அழகு எது தான் இருந்தது அறிவு இருந்தது தேடல் இருந்தது ஆயிரம் பள்ளிகள் அருகில் இருந்தது கலை இருந்தது தமிழ் மொழி இருந்தது காக்கவென்றொரு தெய்வம் இருந்தது மார்கழி மாதம் ஊர்களில் எல்லாம் கூவுத் திரியும் குயில்கள் இருந்தனர் பூவும் ஆட கூந்தலும் ஆட கண்கள் ஆலே கவிதைகள் பேசி சந்திரன் போலே பெண்கள் இருந்தனர் காதல் இருந்தது கனிவும் இருந்தது பாசம் இருந்தது நேசம் இருந்தது பங்கு பிரித்து உண்ணும் வாழ்வு இருந்தது உண்மை இருந்தது நேர்மை இருந்தது நீரும் இருந்தது நெருப்பும் இருந்தது நித்திய வாழ்வினில் சத்தியம் இருந்தது அறமும் இருந்தது தர்மமும் இருந்தது அழியாப் பிரம்ம ஜோதி எரிந்தது இத்தனை வாழ்வும் எங்கே போனது எத்தனை கனவுகள் வந்து போகுதே இன்னும் கனவுகள் உயிர்க்கவில்லையா எமக்காய் இரவுகள் விடியவில்லையா எங்கே கனவுகள் தொலைந்து போனதா. பா.உதயன்✍️
  2. சீ சீ கு சா அண்ணா இல்லாமல் யாழ் வெறிச்சோடிப்போடும். சும்மா இளையராஜாவை பற்றி ஒரு சிறு விவாதம்தான். இன்றுடன் முடிந்து விட்டது.
  3. மனம் போல வாழ்வு. அனைத்தும் திரும்ப கிடைக்கும் எமது மனக் கதவுகள் அகலத்திறந்தால்!
  4. சைவப் பிரகாச வித்தியாசாலையில் சேரப்போகிற மாணவ மாணவிகள் பதிவுசெய்துகொள்ள இங்கு ஒன்றுகூடவும்.
  5. ஓம் சிறி எல்லாமே மாற்றிவிட்டது. இயற்கையாக அமைதியாக இருந்த இடம். நான் அடிக்கடி போய்வருவதால் பழகிவிட்டது
  6. நான் இதனை ஒரு பிற்போக்கான சிந்தனை என்று நினைக்கவில்லை. ஒரு கலாச்சார நடைமுறை என்றே நினைக்கிறேன். சில விடயங்களை இங்கு எழுதமுடியாது. ஏனென்றால் அது பலவிதமாக பார்க்கப்பட்டு விவாதம் சொல்லவந்த கருத்தில் இருந்து விலகி வேறு கோணத்தில் செல்லும். எங்கிருந்தாலும் மனிதர்கள் எல்லோருக்கும் ஒரே குணம்தான். கலாச்சார வேறு பாடு, கல்வி, பணம், பழகும் உறவினர், நண்பர், சேர்ந்து வேலை செய்பவர்களை பொறுத்து அவரவர் பழக்கவழக்கங்கள், பழகும் விதங்கள் மாறுபடும்.
  7. இப்ப இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பார்ட்டி என்று சொல்லி நிறைய தமிழ் பெண்கள் குடிப்பது வழக்கமாக இருக்கு. என்ன இருந்தாலும் எமது கலாச்சாரத்தில் பெண்கள் அப்படி செய்வது வழக்கம் இல்லைதானே? அவரவர் குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ குடிப்பது அவர்களது விருப்பம்.நாங்கள் கொழும்பில் வளர்ந்துமே நண்பிகளின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஆட்ட்டம் பாட்டம் ஒன்றும் இருக்காது. அப்படி ஓரிருவர் பார்ட்டி வைத்தால் உடனே இது என்ன சிங்கள அல்லது பரங்கிகள் மாதிரி ஆட்டம் என்று சொல்லுவார்கள். சிங்கள பிள்ளைகள் வீட்டு பார்ட்டி ஒரே அமர்க்களமாக இருக்கும். எனது அக்கா சிங்கள மீடியத்தில் படித்ததால் பெரும் பிரச்னை. அப்பா அவாவை போக விடமாட்டார். ஆனால் இப்ப காலம் மாறிவிட்டது. நாங்களும் ஊரை விட்டே வெளியில் வந்து வெள்ளக்கார கலாச்சாரத்துக்கு மத்தியில் இருக்கிறோம். அவர்களது கலாச்சாரம் ஒன்றும் குறைந்ததல்ல. வேறுபட்டது. எனக்கு தெரிந்த நிறைய வெள்ளைக்காரர் குடிப்பதே இல்லை. வீட்டுக்கு வீடு வாசல்படி.
  8. நில்மினி... வீட்டிலும் உணவு விடயத்தில் நாட்டுக் கோழி முட்டைக் கோப்பி, திரிபோசா மா உருண்டை, ஆட்டுக்கால் சூப் குரக்கன் மா புட்டுக்கு... பாரை மீன் குழம்பு, மரவள்ளிக்கிழங்கு கறி.. பயத்தம் பணியாரம், பகோடா, தோடம்பழ சாறு என்று நல்ல கவனிப்பு கவனித்து.. பத்து கிலோ... ஏறி விட்டது. 😂 தெரப்பி செய்த குழுவினரையும் மிகவும் பாராட்ட வேண்டும். 👍 எலும்பு பொருந்தவும், நரம்புக்கும், சதை வளர்ச்சிக்கும், உடல் சமநிலையை பேணவும்... எவ்வளவோ... பொறுமையாக அவர்கள் மேற்கொண்ட ஒவ்வொரு விடயமும் பிரமிக்க வைத்தது. நீங்களுமா நில்மினி.... வீட்டிலேயே மனைவி, பிள்ளைகள் Qtex பாவிப்பதில்லை, அப்படியிருக்க... நான் பூசுவதென்றால்... பக்கத்து வீட்டு அன்ரியின் Qtex போத்தலை வாங்கித்தான் பூச வேணும்.
  9. 15 மாதத்தின் பின் வளமைக்கு திரும்பியுள்ளீர்கள் சந்தோசம். சில நேரங்களில் நீங்கள் எதிர்பார்ப்பது போல அவரது தவறினை உணர்ந்து கொண்டிருப்பார் என்றில்லை, எதற்கும் கவனத்துடன் அணுகவும். மனித மனம் வித்தியாசமானது, மனதில் ஏற்படும் வலிகளை உணராதிருக்க முயற்சி செய்யும் 1.உளப்பூர்வமாக தான் தவறே செய்திருந்தாலும் தவறு தனது பக்கமல்ல என நினைத்து அதனால் ஏற்படும் வலியினை கடக்க முற்படும். 2.சம்பவத்தினை அப்படியே மறந்து விட்டு விடும். ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இரு வழி பாதை கொண்ட வீதியால் வேலை முடித்து அதிகாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தேன், மழை இருட்டு வேறு; ஒரு வீதி சிக்னலில் எதிர் தரப்பில் வந்த கார்கள் இரண்டு விபத்துகுள்ளாகியிருந்தது. வார இறுதி என்பதால் பெரிதாக வாகனங்கள் வீதியில் இல்லை, அதனால் எதிர் தரப்பில் வந்த 3 வாகனங்கள், விபத்து வாகனங்களை தவிர்ப்பதற்காக நான் செல்லும் பாதையினூடாக வந்தன. அதனை அவதானித்தமையால் எனது வாகனத்தினை சிறிது தொலைவிலேயே நிறுத்திவிட்டேன். கடைசி வாகனம் கடந்த பின் எனது வாகனத்தினை எடுக்க தயாரான போது எங்கிருந்தோ(அதுவரையிலும் எனது பாதையில் ஒரு காரும் வரவில்லை) வந்த கார் எனது காரின் பின் மோதியது. காரினை பக்கத்தில் இருந்த பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினேன், என்னை பின் தொடர்ந்த அந்த காரும் எனது காரின் பின் நிறுத்தினார், காரில் இருந்து இறங்கி அந்த காரின் உரிமையாளரினை பார்த்து கேட்டேன் உனக்கு ஒரு பிரச்சினையுமில்லையா? அவர் அதிர்ச்சியில் இருந்தார், ஆனாலும் இல்லை எனக்கு எந்த பிரச்சினையுமில்லை, உனக்கு எதுவும் பிரச்சினையா எனக்கேட்டார். ஆனாலும் அவரது பதட்டத்தினை பார்த்து சொன்னேன் விபத்தினால் இருவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. பாதிப்பு வாகனத்திற்குதான், உன்னிடம் காப்புறுதி உள்ளதல்லவா எனக்கேட்டேன், ஆம் என்றார். அதனால் பிரச்சினை இல்லை என கூறிவிட்டு எனது விபரங்களை அவரிடம் கொடுத்து விட்டு அவரது விபரங்களை கோரினேன். அதுவரை என்ன நடந்தது என தெரியாத அவர் என்னிடம் என்ன நடந்தது எனக்கேட்டார், நடந்தவற்றை கூறினேன் அதில் அவருக்கு திருப்தியில்லை, எதற்காக வாகனத்தினை நிறுத்தி வைத்திருந்தாய் என கேள்வியினை திரும்ப திரும்ப கேட்டார், பின்னர் புரிந்து கொண்டேன் அவர் தவறு எனது என்பதாக நிறுவ முயல்கிறார். நீண்டநேர வேலை நித்திரையும் இல்லை, மீண்டும் வேலை ஆரம்பிப்பதற்கு 6 மணித்தியாலமளவில்தான் நேரம் இருந்தமையால், எனக்கு நேரம் இல்லை நான் போகிறேன் என கூறிவிட்டு வந்து விட்டேன், அத்துடன் அவர் பதற்றம் எல்லாம் நீங்கி தன்னை தற்காத்து கொள்ளும் அளவில் நல்ல தெளிவில் இருந்தார். வீட்டிற்கு வந்து குளித்து விட்டு இணையத்தில் வாகன விபத்தினை பதிவு செய்ய தயாராகி கொண்டிருக்கும் போது அவர் தொலைபேசியில் அழைத்தார். நல்ல வேளை உனது காரில் மோதினேன், இல்லாவிட்டால் ஏற்கனவே மற்ற இரண்டு கார் விபத்தினை வீதியின் ஓரமாக பார்த்து கொண்டிருந்த மக்கள் மேல் மோதியிருப்பேன் என்றார்(அவர் எனது காரினை மோதுவதை தவிர்ப்பதற்காக காரினை வீதியின் ஓரமாக திருப்பியிருந்தார்). இந்த தகவலை அவர் அங்கிருந்த மக்களிடம் கேட்டறிந்து கொண்டுள்ளார்(தவறு யார் பக்கம் என அறியும் அவரது முயற்சியில்).

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.