Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    87993
    Posts
  2. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    8910
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    32013
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/26/23 in Posts

  1. மலர்............(4). "வவுனியா" ஒரு நகரசபையைக் கொண்ட மிகவும் அழகான நகரம். திரும்பிய இடமெல்லாம் குளங்கள் உள்ள நகரம் என்றால் அது வவுனியாதான். அந்தக் குளங்களை அண்மித்தே குடிமனைகள் பாடசாலைகள் கடைகள் எல்லாம் இருக்கும். அங்கு பல கோவில்களும் ஓரிரு மசூதி மற்றும் விகாரைகள் இருக்கின்றன. அவளும் வெளிக்குளத்தில் ஒரு பாடசாலையை தெரிவுசெய்து அதற்கு அண்மையில் ஒரு ஆட்டோவில் சென்று இறங்கி பணம்குடுத்த ஆட்டோவை அனுப்பிவிட்டு அதில் இருந்து பிரிந்து செல்லும் கிளை வீதியில் குடிமனைகள் இருக்கும் பக்கமாக நடந்து போகிறாள். இங்கு இராசம்மாவின் வீட்டில் வழக்கம்போல் காலை ஆறுமணிக்கு காகம், கோழி, குருவிகளின்களின் சத்தத்தில் எழுந்த வேலைக்காரி தாயம்மா முற்றமெல்லாம் கூட்டி சாணித் தண்ணி தெளித்து கோலம் போட்டுவிட்டு அதன் நடுவில் சாணியாலேயே அழகாக ஒரு பிள்ளையாரும் பிடித்து வைத்து அதன்மேல் செம்பருத்திப் பூ ஒன்றும் வைத்து விட்டு நிர்மலாவைத் தேடி அவள் அறைக்குப் போகிறாள். அங்கு அவளைக் காணாமல் குளியல்அறை, கிணத்தடி எல்லாம் தேடி கூப்பிட்டுப் பார்த்து விட்டு நிர்மலாவுக்கு போன் செய்கிறாள். அது அமைதியாக இருக்கின்றது. சரி வெளியே சந்தைக்கு எங்காவது போயிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு மற்ற மற்ற வேலைகளைச் செய்கிறாள். இப்படியாக இருமணித்தியாலங்களுக்கு மேலாகி விட்டிருந்தது. மீண்டும் மீண்டும் நிர்மலாவின் கைபேசிக்கு முயற்சி செய்தும் தொடர்பில்லாததால் தாயம்மாவுக்கு பயமாகவும் பதற்றமாகவும் இருக்கிறது. அதற்கு சமீப நாட்களாக வீட்டில் ரகசியமாக நடக்கும் திருமண ஏற்பாடுகளும் காரணம். அது தாயம்மாவுக்கும் கவலையாக இருக்கிறது. தன்னை ஒருவாறு ஆசுவாசப்படுத்திக் கொண்டு இராசம்மாவுக்கு தொலைபேசி எடுக்கிறாள்.அங்கிருந்தும் இராசம்மா கைபேசியை எடுக்கவில்லை. இராசம்மா மற்றும் சங்கர் ஜோதி அவளின் பெற்றோர்கள் எல்லோருமாக வந்த கார்கள் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவிலடியில் தரிசனத்துக்காக தரித்து நிற்கின்றன. சுவாமி தரிசனம் முடிந்து வந்த இராசம்மா தனது கைப்பேசியைப் பார்த்தபோது அதில் வீட்டில் இருந்து அழைத்திருப்பது தெரிந்து வீட்டிற்கு அழைப்பு எடுக்கிறாள். அப்போது தாயம்மா தொலைபேசியை எடுத்து ஹலோ அம்மாவா பேசுறது என்று கேட்கிறாள். --- ஓம்.....நான்தான் என்ன தாயம்மா என்ன விடயம். --- அது வந்து அம்மா சின்னம்மாவைக் காணவில்லை. அதுதான் பதற்றமாய் இருக்கு. --- சரி.....நீ பதறாதே......நாங்கள் இப்பொழுது கோயிலடியில் நிக்கிறம். நீ ஒரு தட்டத்தில் ஆரத்தி சாமான்கள் எல்லாம் எடுத்து ஒழுங்கு பண்ணி வை. நான் அயல் ஆக்களிடமும் சொல்லி இருக்கிறன், அவர்களும் இப்ப அங்கு வருவார்கள். நாங்களும் கொஞ்ச நேரத்தில் அங்கு வந்திடுவம். --- சரி அம்மா அப்படியே செய்கிறேன்......! அப்போது ஒரு வானில் சிலர் வந்து சில பல பலகாரப் பெட்டிகளுடன் உணவு கறி வகைகளும் அத்துடன் பெரிய பெரிய சுடுதண்ணீர்ப் போத்தல்களில் பால் தேநீர் மற்றும் கோப்பி எல்லாம் இறக்கி வைத்து விட்டுப் போகிறார்கள். கைபேசியில் தாயம்மாவுக்கு தைரியம் சொல்லி விட்டாளே தவிர இராசம்மாவுக்கும் உள்ளுக்குள் ஒரு பதற்றம் ஏற்பட்டு விட்டது. ஒருவேளை நிர்மலா தனது தாய் வீட்டுக்கு போயிருக்கலாம் என நினைத்து அங்கு பேசுவதற்கு கைபேசியை எடுத்தவள் பிறகு இப்ப வேண்டாம், எதுக்கும் வீட்டுக்குப் போய் பார்க்கலாம் என்று முடிவெடுத்து சங்கருக்கும் விடயத்தை சொல்லாமல் மறைத்து விடுகிறாள். அவர்களின் கார்கள் மீண்டும் அங்கிருந்து புறப்படுகின்றன. தாயம்மாவும் அயலவர்களும் சேர்ந்து பொம்பிளை மாப்பிளைக்கு ஆரத்தி எல்லாம் எடுக்க ஆயத்தமாய் இருக்கும் போது அவர்களின் வண்டியும் அங்கு வந்து நிக்கிறது. மணமக்கள் இறங்கி உள்ளே வர இரு சுமங்கலிப் பெண்கள் வந்து அவர்களுக்கு ஆரத்தி எடுத்து கண்ணூறு கழித்து அவர்களுக்கு திலகம் இட்டு விட்டு மிச்சத்தைக் கொண்டுபோய் வாசலில் கொட்டிவிட்டு வருகினம். பின் எல்லோருமாக வீட்டுக்குள் போகிறார்கள். சங்கரின் கண்கள் நிர்மலாவைத் தேடுகிறது. தாயிடம் ஜாடையில் விசாரிக்கிறான். தாயும் கண்ணாலேயே அவனைப் பேசாமல் இருக்கும்படி ஜாடை காட்டி விட்டு தாயம்மாவை தனியாக அழைத்துக் கொண்டு போகிறாள். அயலவர்கள் சிலர் வந்திருந்த எல்லோருக்கும் பெட்டிகளில் இருந்து உணவுகள், தேநீர்கள் எல்லாம் எடுத்து பரிமாறுகிறார்கள். சங்கரும் புது மனைவி ஜோதிக்கு ஆடைகள் மாற்றுவதற்கு தங்களது அறையைக் காட்டிவிட்டு தனது ஆபீஸ் அறைக்கு வருகிறான். அங்கு அவனது மேசைமீது நிர்மலாவின் கூறைப்புடவையும் அதன்மேல் தாலிக் கொடியையும் பார்த்ததும் அவனுக்கு ஓரளவு விடயம் புரிகின்றது. வந்திருந்தவர்கள் எல்லோரும் இவர்களை வாழ்த்திவிட்டு சென்றபின் அவன் தாயிடம் சென்று அவற்றைத் தருகிறான். அவற்றைப் பார்த்ததும் இராசம்மாவுக்கு எல்லாம் தெளிவாகப் புரிகின்றது. உடனே இராசம்மா நிர்மலாவின் வீட்டுக்கு அழைப்பு எடுத்து அங்கு நிர்மலா வந்தாளா என்று விசாரிக்கிறாள். அதைக் கேட்டதும் நிர்மலாவின் தந்தை சண்முகமும் கோமளமும் பதற்றமாகி இங்கு வரவில்லை என்று சொல்கின்றார்கள். தொடர்ந்து சண்முகம் நான் உடனே அங்கு வருகின்றேன் சம்பந்தி, என்ர பிள்ளை எங்கு போயிருப்பாள், அங்கு என்ன நடந்தது என விசாரிக்க இராசம்மாவும் நீங்கள் இப்ப இங்கு வரவேண்டாம். அவளின் சிநேகிதிகள் வீட்டுக்கு போயிருப்பாள். நான் எல்லா இடமும் விசாரித்து பார்த்து விட்டு உங்களுக்கு சொல்லுறன் என்று சொல்லி அழைப்பைத் துண்டித்து விடுகிறாள். இவை எதையும் அறியாத ஜோதி ஆடை மாற்றி வரவேற்பறைக்கு வந்து சங்கரிடம் எங்கே உங்களது மனைவி நிர்மலாவை நான் பார்க்கலாமா என்று கேட்கிறாள். மலரும்..........! 🌹
  2. அந்தக் கண்கள் *************************** அவருக்கும் எனக்கும் இடையில் இரண்டு அடிகள் மட்டுமே இடைவெளி இருந்தன. எனக்கும் அவருக்குமான அந்த இடைவெளியில் சில யுகங்கள் நீண்டு பரவிக் கிடந்தன அந்த யுகங்களில் துயரம் ஒரு பேறாறாக பெருகி வழிந்து கொண்டு இருந்தது அந்த துயரை, ஆற்றா மனவலியை, அடக்க முடியாத சோகத்தை, வாழ்வு மீதான அவ நம்பிக்கையை இரண்டு கண்களும் கசிய விட்டுக் கொண்டிருந்தன. அந்தக் கண்களை நான் இரண்டடி தூரத்தில் கண்டேன். அந்தக் கண்கள் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டு மரணத்தை யாசித்துக் கொண்டு இருந்தன. மரணம் இரண்டு கைகளையும் விரித்து அரவணைக்க ஆயத்தமானது, நாசிகளில் மரணத்தின் வாசனை. . ************************* எனக்கு பொதுவாக கடைகளுக்கோ அல்லது நண்பர்களின் வீடுகளுக்கோ செல்லும் போது தனிய போவது பிடிக்காது, மனைவியுடன் அனேகமான நாட்கள் போவது. சில நாட்களில் மகளுடன் போவதுண்டு. மனைவி பக்கத்தில் இருக்கும் கடை என்றாலும் எனக்கு ஒரு 'சிண்' வேண்டும், கதைத்துக் கொண்டு போக. மனைவி பக்கத்தில் இருந்தால், "அந்தக் கார் உங்கள் முன்னுக்கு பிரேக் அடிக்கின்றான்.. காரை ஸ்லோ பண்ணுங்களன்.." என்றோ அல்லது "தூரத்தில் ஒருவர் ரோட்டை க்ரோஸ் பண்ணுகின்றார் கவனம் என்றோ " சொல்வதும் அதற்கு நான் "16 வருசமா ஒரு Traffic டிக்கெட்டும் எடுக்காமல் கனடாவில் கார் ஓடுறன். இப்படி பக்கத்தில் இருந்து கொண்டு எனக்கு படிப்பிக்க வேண்டாம்." என்று பதில் சொல்வதும் நடக்கும். பெண்கள் எப்பவும் பெண்களாக இருப்பது போன்றுதானே ஆண்கள் எப்பவும் ஆண்களாவே இருக்கின்றோம். சில விடயங்களை எப்பவும் மாற்ற முடியாது. ஆனால் அவ்வாறு அன்று அவர் சொன்னதால் தான் என் வாழ்வின் மிகப்பெரிய அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டது. இல்லாவிடின் விசரனாக தான் மாறியிருப்பேன். அன்றும் அப்படித்தான் டிசம்பர் மாதம். பனிவிழும் காலம் ஆரம்பித்து இருந்தது. இரவு 8 மணி. சாலைகளில் பனி ஈரத்தில் மினுங்கும் மின் விளக்குகளின் நிழல்களை மீறி இருள் கவிண்டு கிடந்திருந்தது. பனி மூட்டமும், இருளும், இலேசாக தூறும் உறை பனி மழையும் என அந்த இரவு வெளிச்சம் குறைந்த இரவாக இருந்தது. தமிழ் கடைக்காரர் கொஞ்சம் முந்தி தான் தொலைபேசி அழைப்பு எடுத்து "அண்ணை ஊசிக் கணவாய் வந்திருக்கு...வந்து வாங்க போறியளோ..நாளைக்கு காலம நீங்கள் வாறதுக்கு முன் முடிந்து விடும்" என்று சொல்லியிருந்தார். ஊசிக் கணவாய் என்ற சொல்லை கேட்டாலே எனக்கு வாய் ஊறும். நல்ல உறைப்பாக, கொஞ்சம் தேங்காய்ப்பால் போட்டு, கறி வைச்சு சாப்பிட்டால் அந்த மாதிரி இருக்கும். அதுவும் சில ஊசிக்கணவாய்கள் பிஞ்சில பழுத்த மாதிரி, சரியாக வளற முன்னரே வயிற்றில் முட்டையை வாங்கியிருக்கும். அந்த முட்டைகளின் ருசி தனி ருசி! மெல்லிய பனி விழும் இரவின் அழகை ரசித்தவாறு, பின்னனியில் எப்பவும் இசைக்கும் இளையராஜாவின் பாடலைக் கேட்டவாறு, 80 கிலோ மீற்றர் வேகம் அனுமதிக்கப்பட்ட சாலையில் 85 கிலோ மீற்றர் வேகத்தில் , மனைவியுடன் சந்தோசமாக கதைத்து சிரித்துக் கொண்டு ஊசிக் கணவாயை வாங்குவதற்காக சென்று கொண்டு இருக்கின்றேன்.... தூரத்தில் ஒரு கார் எமர்ஜென்சி விளக்குகளை போட்டவாறு வீதியின் கரையில் நிறுத்தி இருப்பது தெரிந்தது. குளிர் காலம் வந்தவுடன் இப்படி கார்கள் இடைக்கிடை வேலை செய்யாமல் வீதி ஓரங்களில் நின்று விடும். அனேகமாக பற்றரி போயிருக்கும் அல்லது போனில் கதைப்பதற்காக நிறுத்தி வைத்து இருப்பர். நான் தொடர்து காரை செலுத்துகின்றேன். திடீரென்று... மனைவி "ஐயோ.... நடு றோட்டில் ஒருவன் நிற்கின்றான்... நிற்பாட்டுங்கோ" என்று அலறினார். 85 கிலோ மீற்றர் வேகத்தில் காரைச் செலுத்திக் கொண்டு வந்த நான், மனைவி போட்ட கூச்சலில் சடுதியாக தன்னிச்சையாகவே ப்ரேக்கினை போடுகின்றேன். என் கார், ஒரு சில மீற்றர்கள் ஓடி, தன்னால் முடியுமானளவுக்கு வேகத்தை சடுதியாக குறைத்து, முற்றாக நின்ற போது எனக்கும் அந்த நபருக்கும் இடையில் இரண்டு அடிகள் மட்டுமே இருந்தன. அவர் எந்தச் சலனமும் இன்றி, நடு வீதியில், என் கார் வந்த திசையில், என்னை பார்த்தாவாறு நின்று கொண்டு இருந்தார். வேகமாக வரும் ஒரு வாகனத்துக்காக வந்தவுடன் மோதி உடலை சிதைக்க வைக்க வேண்டும் என்பதற்காக மோதித் தள்ளினால் மரணம் கட்டாயம் நிகழ்வதற்காக நின்று கொண்டு என் கண்களை ஊடறுத்து பார்க்கின்றார். எனக்கும் அவருக்குமான அந்த இடைவெளியில் சில யுகங்கள் நீண்டு பரவிக் கிடந்தன... அந்த யுகங்களில் துயரம் பல பேறாறுகளாக பெருகி கொண்டு இருந்தன.. அந்த துயரை, ஆற்றா மனவலியை, அடக்க முடியாத சோகத்தை, வாழ்வு மீதான அவ நம்பிக்கையை இரண்டு கண்களும் கசிய விட்டுக் கொண்டு இருந்தன.. அந்தக் கண்களை நான் இரண்டடி தூரத்தில் கண்டேன். அவை என்னிடம் தன் மரணத்தை யாசித்துக் கொண்டு இருந்தன. அவை வாழ்வை தன்னிடம் இருந்து பிய்த்து எறியும் ஒரு தருணத்துக்காக காத்துக் கிடந்தன. என்னை கொன்று விட்டு போ என்று இறைஞ்சிக் கொண்டு இருந்தன... அவர் ஆறடிக்கும் மேல் உயரம். சிறு தாடி, 35 வயதுக்குள் இருப்பார், அரேபியராகவோ அல்லது ஐரோப்பியராகவோ இருக்கலாம். ஒரு சில வினாடிகளுக்குள் நிகழ்ந்த பேரதிர்ச்சியில் என் முழு உடலும் நடுங்கிக் கொண்டு இருக்கின்றது நான் சடுதியாக ப்ரேக் போட்டு நிறுத்தியதால் என் பின்னால் வந்து கொண்டிருந்த வாகனம் என் காரை முட்டி மோதுவதை தவிர்ப்பதற்காக கடும் பிரயத்தனப்பட்டு கொண்டு இருந்ததை கண்டவுடன்,ப்ரேக்கில் இருந்து காலை எடுத்து வேகமாக அடுத்த லேனுக்குள் விட்டேன். பின்னால் வந்த வாகனமும் ஒருவாறு அவ் நபரை இடிக்காமல் நகர்ந்தது. என் உடல் இன்னும் நடுங்கிக் கொண்டு இருந்தது. கைகள் சோர்வாக தெரிந்தன. அழ வேண்டும் போலவும் இருந்தது. நெஞ்சு அடைத்துப் போய் விட்டது. அடைபட்ட நெஞ்சில் இருந்து விடுபட்ட மூச்சு பெரு மூச்சாக வெளியே வந்தது. சில நூறு மீட்டர்கள் காரைச் செலுத்திய பின் தான் என்ன நிகழ்ந்தது என்பதை மனம் மீட்டிப் பார்க்க தொடங்கியது. "மோட்டு மனுசன்.. இந்த இரவில் றோட்டை க்ரொஸ் பண்ணுகின்றார்" என்று மனைவி சொன்னார். "இல்லை...அவர் என் காரின் திசையில் உடலைக் காட்டியவாறு நின்றவர்... தற்கொலைக்கு முயன்று இருக்கின்றார்" என்றேன். அப்பதான் இன்னொன்றும் உறைத்தது. அந்த எமர்ஜென்சி போட்ட கார் அவருடையதாகவே இருக்கும். காரைச் செலுத்திக் கொண்டு வந்தவர் ஏதோ ஒரு கணத்தில் தற்கொலையை நாடியிருக்கின்றார். ஒரு புள்ளியில் மரணமே தனக்கு தீர்வு என்று நம்பியிருக்கின்றார்.ஏதாவது வாகனத்தில் அடிபட்டு செத்துப் போவோம் என்று நினைத்து இருக்கின்றார். என்மனைவியின் அலறல் அவரது மரணத்தை தள்ளி வைத்து விட்டது. பிறகு, நான் கடைக்கு போய் கணவாயை வாங்கிவிட்டு வெளியே வந்து காரில் ஏறியபின்... மனைவிக்கு "கவி, எனக்கு மனசுக்குள் ஒரு மாதிரி இருக்கு... திருப்பி அதே வீதியால் போய் பார்க்க போகின்றேன்.. அவருக்கு என்ன நடந்தது என்று அறியாவிடின் என்னால் கன நாட்களுக்கு நித்திரை கொள்ள முடியாது " என்றேன். அவரும் "சரி.. மனசுக்கு மாதிரி இருக்கு என்றால் போய் பார்ப்பம்" என்றார் மீண்டும் அவ் வழியால் திரும்பி செல்லும் திசையில் சென்ற போது, அவர் நின்ற அதே இடத்தில், வீதி ஓரம் மூன்று பொலிஸ் கார்கள் வரிசையாக நின்று கொண்டு இருக்கின்றதை காண்கின்றேன். அந்த மூன்று கார்களும் அந்த எமர்ஜென்ஸி விளக்குகள் போட்டு நிறுத்தி இருந்த, நான் முன்னர் குறிப்பிட்ட அந்த காரை சுற்றித்தான் நின்றன. நான் அடுத்த சந்தியில் ஒரு யூ ரேர்ன் போட்டு, அந்த பொலிஸ் கார்கள் நிற்கும் இடத்துக்கு வந்து காரை நிறுத்தி விட்டு, மனைவிக்கு "என்ன நடந்தது என்று போய் கேட்க போகின்றேன்" என்றேன். "பயமில்லையா... உங்களை சந்தேகப்பட்டால்" என்று கேட்கின்றார். "இல்லை,... எனக்கு என்ன நடந்தது என்று அறிய வேண்டும்" என்று விட்டு இறங்கி பொலிஸ்காரர்கள் நின்ற திசையில் நடந்து அவர்களருகில் செல்லும் போது, அவர்களில் இருந்த மூன்று பேர் என்னை நோக்கி வந்து "என்ன விடயம்" என்று கேட்டார்கள். நான் "10 நிமிடங்களுக்கு முன் இதே இடத்தில், இதே வீதியில், ஒருவர் என் காரின் முன் நின்று தற்கொலைக்கு முயன்றார்... அவர் அநேகமாக இந்த காரில் தான் வந்திருப்பார்" என்றேன். அவர்கள் ஆங்கிலத்தில் "dont worry... we are taking care of him now (கவலைப்படாதே நாங்கள் அவரை கவனித்துக் கொண்டு இருக்கின்றோம் இப்ப) " என்றனர். அவர்களில் ஒரு இளம்பெண் பொலிசாரும் இருந்தார். நான் அவரிடம் "Did he try to commit suicide" என்று கேட்க "Yes he was" என்று அழகான முகத்தில் ஒரு புன்னகையை தவழ விட்டவாறு சொன்னார். என்ன நடந்திருக்கும் என்று என்னால் ஊகிக்க முடிந்தது. என் பின்னால் வந்த வாகனத்தில் இருந்தவரோ அல்லது அதன் பின்னால் வந்தவரோ 911 இற்கு அடித்து பொலிசாருக்கு தகவல் சொல்லியிருக்கினம். அவர்கள் ஓடி வந்து ஆளை மீட்டு இருக்கினம். யோசித்துப் பார்த்தால், நானும் 911 இற்கு அடித்து உடனே சொல்லி அவர் உயிரை காப்பாற்ற முயன்று இருக்க வேண்டும். நிகழ்வு தந்த பதட்டத்தில் புத்தி எதையும் யோசிக்கவில்லை. ஆனால் இன்னொருவர் அந்த கடமையை செய்து இருக்கின்றார். இது நிகழ்ந்து ஒரு வாரம் போன பின்னும் காரை செலுத்த தொடங்கும் நேரம் எல்லாம் எனக்குள் சிறு பதட்டம் வந்து போகும். அதுவும் அதே வீதியால் போகும் போது உடலில் நடுக்கம் ஏற்படும் இப்ப அப்படி வருவதில்லை...ஆயினும் அந்தக் கண்கள் மட்டும் எப்ப நினைத்தாலும் மனசுக்குள் அப்படியே வந்து போகும். இனி என்னால் ஒரு போதுமே அந்தக் கண்களை மறக்க முடியாது!
  3. நூலக எரிப்பின் பின்னாலிருக்கும் மர்மமும் யாழ் நூலகத்தை எரித்த பொலீஸ் காடையர்களைக் காப்பாற்ற ஜெயார் ஆடிய நாடகமும் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்ட இராணுவப் பிரிவின் உண்மையான நோக்கம் யாழ் நூலத்தை எரிப்பதும், ஏற்கனவே தம்மால் அடையாளம் காணப்பட்ட யாழ்நகரின் முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களை எரிப்பதும் தான் என்று எதிர்க்கட்சிகள் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டியிருந்தன. இதேவகையான விமர்சனங்களையே அமிர்தலிங்கமும் தான் ஜனாதிபதிக்கு ஆனி 2 இல் எழுதிய கடிதத்திலும், ஆனி 9 அன்று பாராளுமன்றத்தில் தனது பேச்சிலும் குறிப்பிட்டிருந்தார். இக்குற்றச்சாட்டுக்களை மறுக்க அரசு ஒருபோதுமே முயன்றிருக்கவில்லை என்பதன் மூலம், இக்குற்றச்சாட்டுக்களை அரசு ஆமோதித்திருந்தது என்பது தெளிவாகிறது. இக்குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளித்துப் பேசிய ஜெயாரும், ஏனைய ஆளும்கட்சி உறுப்பினர்களும் அரச படைகள் இத்தாக்குதல்களில் ஈடுபடவில்லையென்றும், தமது சகாக்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதைக் கண்ணுற்ற பொலீஸாரே வன்செயல்களில் ஈடுபட்டனர் என்றும் கூறி இத்திட்டமிட்ட தாக்குதல்களை நியாயப்படுத்தியிருந்தனர். மேலும், எதிர்க்கட்சிகள் முன்வைத்த விமர்சனத்தில் இந்த அக்கிரமங்கள் நடந்தவேளை முக்கிய அமைச்சர்களும், பாதுகாப்புத் தலைமை அதிகாரிகளும் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து இந்த வன்செயல்களை ஊக்குவித்திருந்தது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என்றும் கூறியிருந்தன. இந்த வன்முறைகளின் பொழுது யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த இரு முக்கிய அமைச்சர்களும் மகாவலி அபிவிருத்தி அமைச்சர் காமிணி திசாநாயக்காவும், கைத்தொழில் அமைச்சர் சிறில் மத்தியூவும் தான் என்பது குறிப்பிடத் தக்கது. அதேவேளை பொலீஸ் மற்றும் இராணுவத்தின் அதிகாரிகளாக வன்முறைகளின்போது அரச காடையர்களுக்குத் தலைமை தாங்கியோர் பாதுகாப்புச் செயலாளர் கேணல் சி.ஏ. தர்மபால, அமைச்சரவைச் செயலாளர் ஜி.வி.பி. சமரசிங்க, பொலிஸ் மா அதிபர் ஆனா செனிவிரட்ண, இராணுவத்தின் அதிகாரிகளின் பிரதானி பிரிகேடியர் திஸ்ஸ வீரதுங்க மற்றும் உதவிப் பொலீஸ் மா அதிபர் எட்வேர்ட் குணவர்த்தன ஆகியோராகும். வன்முறைகளின்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த இரு அமைச்சர்களும் ஜெயாரின் அரசாங்கத்தில் மிகவும் பலம்வாய்ந்தவர்களாகக் கருதப்பட்டதுடன், ஜெயாருக்கு மிகவும் நெருக்கமானவர்களாகவும் அறியப்பட்டவர்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கங்களை தலைமையேற்று வழிநடத்தவென்று ஜெயாரினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். தொழிற்சங்கக் காடையர்கள் என்று பெயர்பெற்ற ஜாதிக சேவக சங்கமய எனும் குண்டர் பிரிவை சிறில் மத்தியூ வழிநடத்த, லங்கா ஜாதிக எஸ்டேட் சேவக சங்கமய எனப்படும் சிங்கள மலையகத் தொழிற்சங்கக் காடையர்களை காமிணி திஸாநாயக்கா வழிநடத்தி வந்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் விரோதிகளுக்கெதிரான திட்டமிட்ட வன்முறைகளில் ஈடுபடுத்துவதற்கென்று இவ்விரு காடையர் கூட்டங்களும் அரசால் தொடர்ச்சியாகப் பாவிக்கப்பட்டு வந்தன. இந்த அமைச்சர்கள் இருவரும் தம்முடன் இக்காடையர்களை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்றிருந்தனர். இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிகளில் இவர்கள் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தனர். ஜெயாரின் ஆலோசகராக கடமையாற்றிய தமிழரான பேராசிரியர் ஏ.ஜே. வில்சன் எழுதிய ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் இலங்கைத் தமிழர்களும்" எனும் புத்தகத்திலிருந்து ஒரு கூற்று , "யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சுவாரசியமான தகவல்கள் கிடைக்கப்பட்டிருக்கின்றன. ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க அமைச்சர் காமிணி திஸாநாயக்கா அங்கு நடந்த விடயங்கள் குறித்து சில தகவல்களை தொலைபேசியூடாக என்னுடன் பகிர்ந்துகொண்டார். காமிணி, எனது சகலையான செல்வநாயகம் சந்திரகாசனின் நெருங்கிய நண்பர் என்கிற முறையில்க் கூட இத்தகவல்களை என்னுடன் பகிர்ந்துகொண்டிருக்கலாம். எனக்குத் தெரிந்ததெல்லாம், காமிணி என்னுடன் தொலைபேசியில் பேசும்பொழுது, அவருக்கருகில் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவும் இருந்திருக்கிறார் என்பதுதான். அருகிலிருந்து ஜெயார் காமிணிக்குச் சொன்ன இரகசியங்களை காமிணி இன்று மறந்திருக்கலாம்". சிங்களக் காடையர்களான ஜெயவர்த்தனவும் காமிணி திஸாநாயக்கவும் காமிணி திஸாநாயக்க என்னுடன் பேசுகையில், "பொலீஸார் தமது சகாக்கள் கொல்லப்பட்டதால் மிகுந்த கோபம் கொண்டிருந்தார்கள்" என்று கூறினார். நூலகம் எரிக்கப்பட்ட இரவில் கோபம் தலைக்கேறிய நிலையில் பொலீஸார் வன்முறையில் ஈடுபட்டனர். தமது சகாக்கள் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கியே தீருவோம் என்று அவர்கள் சபதம் எடுத்திருந்தனர். ஆனால், யாழ்ப்பாணத்தின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் சிறில் மத்தியூ எதற்காகத் தலையிட்டார் என்பதுபற்றி காமிணி வாயே திறக்கவில்லை. அவர் என்னிடம் சிறில் மத்தியூ தொடர்பாகக் கூறிய ஒரே விடயம், "நான் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்ல ஆயத்தமாகும்போது என்னையழைத்த ஜனாதிபதி ஜெயவர்த்தனா, சிறில் மத்தியூ பல பஸ்களில் ஆட்களை கூட்டிக்கொண்டு யாழ்ப்பாணம் போகிறார், அவர் மீது ஒரு கண் இருக்கட்டும்" என்று கூறினார் என்பது மட்டும்தான். ஆனால், இதில் எனக்குப் புரியாத விடயம் என்னவென்றால், தனது அடியாட்களை பஸ்களில் கூட்டிக்கொண்டு சிறில் மத்தியூ யாழ்ப்பாணம் போகிறார் என்று தெரிந்தும் அவரை ஜெயவர்த்தனா ஏன் தடுத்து நிறுத்தவில்லை என்பதுதான். காமிணி என்னுடன் மேலும் பேசும்போது, யாழ்ப்பாணத்தில் இயங்கிய மதுபான விற்பனை நிலையங்களை உடைத்துச் சூறையாடிய பொலீஸாரும், இராணுவத்தினரும் போதை ஏற்றிக்கொண்டே வன்முறைகளில் ஈடுபட்டார்கள் என்று கூறினார். பொலீஸாரும், இராணுவத்தினரும் வன்முறைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது காமிணியும் முன்னணியில் நின்று இவற்றினை ஏனைய பாதுகாப்பு அதிகாரிகளுடன் சேர்ந்து மேற்பார்வை செய்துகொண்டிருந்திருக்கிறார். இவற்றைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் அவருக்கு இருந்தது. ஆனால் அவர் அதனைச் செய்யவில்லை. "அவர்கள் போதை தலைக்கேறி, ஆவேசத்துடன் வன்முறையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். நான் அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றேன், ஆனால் அவர்கள் கேட்கவில்லை. எனது வாழ்நாளில் மரணத்திற்கு மிக அருகில் நான் அதுவரை சென்றிருக்கவில்லை. வன்முறைகளில் ஆவேசத்துடன் ஈடுபட்டுக்கொண்டிருந்த அவர்களைப் பார்த்து ஒருவார்த்தைதன்னும் நான் பேசியிருந்தால், அவர்கள் தங்கள் கோபம் அனைத்தையும் என்மீது திருப்பி, எந்தத் தயக்கமும் இன்றி என்னையும் கொன்றிருப்பார்கள். அவர்களின் வன்முறைகளை மெளனமாக ஆமோதித்து அவர்களுடன் சேர்ந்து பயணிப்பதைத் தவிர எனக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை. ஆனால், அவர்கள் யாழ்ப்பாண நூலகத்தை எரிக்கும் நாசச்செயலில் ஈடுபடுவார்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை" என்று காமிணி என்னிடம் கூறினார். தான் கூறியதெல்லாம் உண்மையே என்று கூறி தனது தொலைபேசித் தொடர்பை அவர் முடித்துக்கொண்டார். மறுநாள் என்னைச் சந்தித்த ஜனாதிபதி ஜெயார், நடந்தவற்றை அப்படியே காமிணி என்னிடம் கூறியிருப்பதாகக் கூறினார். கீழுள்ள காமிணியின் அறிக்கை சில விடயங்களை ஏற்றுக்கொள்கிறது, பொலீஸாரே யாழ் நூலகத்தை எரித்தனர். "எனக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை, ஆகவே அவர்கள் செய்வதை நான் அனுமதித்தேன்" - இந்தக் கூற்றைக் கவனியுங்கள். காமிணி வன்முறைகளின்பொழுது முன்னால் இருந்திருக்கிறார். பொலீஸாரின் அளவிற்கு மீறிய ஆவேசமும், கோபமும், பழிவாங்கும் உணர்வுமே நூலகம் எரிக்கப்படக் காரணமாகியிருந்தன என்று காமிணி கூறுகிறார். இலங்கையின் இந்தியத் தலையீடு எனும் புத்தகத்தினை எழுதிய சிங்கள இனவாதியான ரொகான் குணவர்த்தன ஒரு அத்தியாயத்தில் பின்வருமாறு கூறுகிறார், " பொலீஸ் மா அதிபரான ஆனா செனிவிரட்ன என்னுடன் பேசும்போது யாழ்ப்பாணத்திற்கு அப்போது வந்திருந்த உதவிப் பொலீஸ் மா அதிபரும், ஒரு முக்கிய அமைச்சரும் பொலீஸாரின் கோபத்தை விஸ்வரூபமாக்கி, அவர்களை உணர்ச்சியூட்டி ஆவேசப்படுத்தினர். பின்னர் அவர்களுடன் சேர்ந்து யாழ் நூலகத்தை எரித்தனர் என்று கூறினார்" - பக்கம் 72 இல் இது பதியப்பட்டிருக்கிறது. நூலகம் எரிக்கப்பட்ட கொடுஞ்செயலில் தனது பெயரும் தொடர்ச்சியாக பிணைக்கப்பட்டு செய்திகள் வெளிவந்துகொண்டிருந்த நிலையில் காமிணி திசாநாயக்கா, தான் பொலீஸாரைத் தூண்டிவிட்டு நூலகத்தை அவர்களுடன் சேர்ந்து எரிக்கவில்லையென்றும், அவர்களைச் சமாதானப்படுத்தி வன்முறைகளைக் கட்டுப்படுத்தவே முயன்றதாகவும் பிடிவாதமாகக் கூறிவந்தார். ஜெயவர்த்தனாவும் தனது பங்கிற்கு நூலக எரிப்பு விடயத்திலிருந்து எப்படியாவது தனது அடிவருடியான காமிணியின் பெயரைத் துடைத்துவிட பகீரதப் பிரயத்தனம் செய்துவந்தார். ஆனால், காமிணியே ஒரு கட்டத்தில் இச்செயலுக்கான அவமானத்துடன் வாழ்நாளைக் கழிக்கவேண்டியிருக்கிறது என்று பேராசிரியர் சிவத்தம்பி உட்பட பல தமிழர்களிடம் வாய்விட்டுக் கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது. 1991 ஆம் ஆண்டு, இன்னொரு சிங்கள இனவாதியான லலித் அதுலத் முதலியுடன் சேர்ந்து அன்றைய ஜனாதிபதி பிரேமதாசவுக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை காமிணி திஸாநாயக்கா கொண்டுவந்தபோது, பிரேமதாசா யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்தை மீளவும் பேசுபொருளாகக் கொண்டுவந்தார். 1991 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 16 ஆம் திகதி புத்தளம் சகிராக் கல்லூரியின் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பிரேமதாச பின்வருமாறு கூறினார், "1981 ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான தேர்தலின்போது, எமது கட்சியின் சில முக்கிய அமைச்சர்கள் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பல பஸ்களில், நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து திரட்டிய தமது அடியாட்களையும் கூட்டிக்கொண்டு யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தனர். யாழ்ப்பாணத்தில் வன்முறைகளில் இவர்கள் ஈடுபட்டதோடு தேர்தல்களையும் குழப்பியிருந்தனர். அன்று யாழ்ப்பாணத்தில் கலகம் விளைவித்த அதே ஆட்கள்தான் இன்றும் கலகம் ஒன்றை உருவாக்க முயல்கின்றனர். அன்று விலைமதிப்பற்ற வரலாற்றுப் புத்தகங்களை நூலகத்துடன் எரித்தவர்கள் யாரென்று நீங்கள் தேடினால் இன்று எனக்கெதிராக கலகம் செய்யக் காத்திருப்பவர்களின் முகங்களே அவை என்பதைத் தெரிந்துகொள்வீர்கள்" என்று வெளிப்படையாகவே யாழ் நூலக எரிப்பிற்கும் காமிணி திசாநாயவுக்கும் இடையிலிருக்கும் நெருங்கிய தொடர்பை வெளிப்படுத்தியிருந்தார். . மூன்று நாட்களுக்குப் பின்னர், 1991 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 19 ஆம் திகதி கண்டியில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஜனாதிபதி பிரேமதாச யாழ் நூலகத்தை முன்னால் நின்று எரித்தது காமிணி திஸாநாயக்கதான் என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். கொல்லப்பட்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் அமிர்தலிங்கத்தின் கருத்துப்படி ஆசியாவின் புகழ்பெற்ற நூலகங்களில் ஒன்றான யாழ் நூலகத்தை எரித்தது மகாவலி அபிவிருத்தி அமைச்சர் காமிணி திஸாநாயக்கதான் என்று உறுதியாக நம்பியிருந்தார். 1981 ஆம் ஆண்டு ஆனியில் நான்குநாள் பயணமாக அன்றைய பிரதமர் ரணசிங்க பிரேமதாசா யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவருடன் பயணிக்கும் ஊடகவியலாளர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். யாழ் நூலகத்திற்கு அருகாமையிலிருந்த திறந்த வெளி அரங்கில் பொதுக்கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரேமதாசவின் செயலாளரான பிரட்மன் வீரக்கோனுடன் அரங்கின் முன்வரிசயில் நானும் அமர்ந்திருந்தேன். அங்கு பேசிய பிரேமதாச, யாழ் நூலகத்தின் பக்கம் தனது கையைக் காட்டி, " "அந்த கம்பீரமான கட்டடத்தைப் பாருங்கள். அது யாழ்ப்பாணத்தின் விலைமதிப்பற்ற பொக்கிஷம் என்று என்னிடம் கூறினார்கள். யாழ்ப்பாணத்து மக்கள் இந்தப் பொக்கிஷம் குறித்து மிகவும் பெருமைப்படுகிறார்களாம். அது இலங்கையின் நூலகம் என்பதால் நாமும் இதுகுறித்துப் பெருமைப்பட வேண்டும். இது உங்களின் பொக்கிஷம் மட்டும் அல்ல, எங்களதும் தான். ஏனென்றால் நாம் எல்லோரும் இலங்கையர்கள்" என்று அவர் பேசினார். 1991 இல் கண்டியில் தன்மீது பிரேமதாச முன்வைத்த குற்றச்சாட்டிற்கு காமிணி திஸாநாயக்க பதிலளித்திருந்தார். சுமார் 5 பக்கங்கள் கொண்ட நீண்ட கடிதமொன்றினை ஜனாதிபதி பிரேமதாசவுக்கு எழுதிய காமிணி, அதன் பிரதிகளை ஊடகங்களுக்கும் அனுப்பி வைத்திருந்தார். அந்த வகையில் டெயிலி நியூஸ் பத்திரிகைக்கும் காமிணியின் கடிதத்தின் பிரதியொன்று கிடைத்திருந்தது. அதனை ஆசிரியர் என்னிடம் கொடுத்திருந்தார். பிரேமதாசா மீதான காமிணி மற்றும் லலித் அத்துலத் முதலியின் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாகச் செய்திகளைத் தயாரித்து வந்ததினால், இந்தக் கடிதமும் எனக்கே வழங்கப்பட்டிருந்தது. ஆகவே, நான் இக்கடிதம்பற்றிய செய்தியை பத்திரிக்கையில் பதிந்துவிட்டு, கடிதத்தின் மூலப்பிரதியை என்னுடனேயே வைத்திருக்கிறேன். தனது கடிதத்தில் காமிணி மூன்று விவாதங்களை முன்வைத்து, யாழ் நூலகம் எரிக்கப்பட்டதற்கும் தனக்கும் தொடர்பில்லை என்று நிறுவுவதற்கு முயன்றிருந்தார். அவையாவன, 1. தான் நூலகம் எரிக்கப்பட்ட நாளில் யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லையென்றும், தான் பண்டாரவளையின் வெலிமடைப்பகுதியில் இருந்ததற்கான பயண ஒழுங்குப் பத்திரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் காமிணி கூறினார். 2. பாராளுமன்றத்தில் நூலக எரிப்புப் பற்றிப் பேசிய அமிர்தலிங்கம், காமிணி நூலக எரிப்பில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதை ஒருபோதும் சொல்லவில்லையென்று அவர் வாதாடினார். 3. 1981 ஆம் ஆண்டு, எதிர்க்கட்சிகள் தன்மீது நூலக எரிப்பிற்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தபோது, அப்போது பிரதமராக இருந்த பிரேமதாசவே தனக்குச் சார்பாக வாதாடியிருந்தார் என்றும் காமிணி கூறியிருந்தார். ஆனால், காமிணியின் காரணங்களை முற்றாக ஒதுக்கித் தள்ளிய பிரேமதாச, யாழ் நூலகத்தை எரித்தது காமிணி திஸாநாயக்கவே என்றும் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தினார். அத்துடன், அவர் இன்னொரு ரகசியத்தையும் கூறினார். அதாவது, மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான தீர்மானம் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டபோது காமிணி திஸாநாயக்க அதனை முழுதாக எதிர்த்தார் என்றும் பிரேமதாச கூறினார். மாவட்ட அபிவிருத்திச் சபைகளை காமிணியோடு சேர்ந்து இன்னும் இரு அமைச்சர்கள் எதிர்த்திருந்தனர். அவர்கள் யாரெனில், அமைச்சர் சிறில் மத்தியூவும், அமைச்சர் காமிணி ஜயசூரியவுமாகும். "தமிழர்களுக்கென்று எந்த அதிகாரமும் கொடுக்கப்படலாகாது" என்பதே காமிணி திஸாநாயாக்க உட்பட்ட மூன்று அமைச்சர்களினதும் நிலைப்பாடாக இருந்தது. இனங்களுக்கிடையிலான நீதிக்கும், சமத்துவத்திற்குமான இயக்கம் எனும் அமைப்பு யாழ் நூலக எரிப்புப் பற்றி விசாரிப்பதற்கு தூதுக்குழு ஒன்றினை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பியிருந்தது. அதன் அறிக்கையின் படி, "மிகவும் அவதானமாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்படி, யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட வன்முறைகளும், நூலக எரிப்பும் மிகவும் திட்டமிட்ட வகையில் நூறிலிருந்து 175 பொலீஸாரைக் கொண்ட குழுவொன்றினால் நடத்தப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிய வருகிறது". அந்த அமைப்பு பின்வரும் சம்பவத்தையும் பதிவுசெய்திருந்தது, கண்டியிலிருந்து காங்கேசந்துறை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த சிங்களப் பாதிரியார் ஒருவரை சுமார் யாழ்ப்பாணத்திலிருந்து இரண்டு மைல்கள் தொலைவில் காக்கிக் காற்சட்டையும், வெண்ணிற பெனியன்களும் அணிந்திருந்த மூன்று நபர்கள் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். தாக்குதலாளிகளுடன் முற்றான சீருடையில் ஒரு பொலீஸ் அதிகாரியும் சம்பவ இடத்தில் நின்றிருக்கிறார். வாகனத்தின் முன் கண்ணாடியை இரும்புக் கம்பிகளால் அடித்து நொறுக்கிய பொலீஸார், வாகனத்தின் சாரதியையும் கடுமையாகத் தாக்கியபோது அவர் நினைவிழந்து வீழ்ந்திருக்கிறார். வாகனத்தின் நடத்துனரான சிங்களவரும் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். ஆனால், தம்மால் தாக்கப்பட்ட மூவரும் சிங்களவர்கள்தான் என்பதை உணர்ந்தபின்னர், தாக்குதலில் ஈடுபட்ட பொலீஸார், அவர்களை அப்படியே விட்டு விட்டு அங்கிருந்து ஜீப் வண்டியில் ஏறிச் சென்றிருக்கிறார்கள். யாழ் பொலீஸ் நிலையத்திற்கு தம்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றி சிங்களப் பாதிரியார் முறையிடச் சென்றவேளை, அங்கிருந்த பொலீஸார் அதனை ஏற்க மறுத்து விட்டார்கள். யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்த மூன்று சிங்களவர்களையும் அங்கு பணிபுரிந்த தமிழ் வைத்தியர்களும், தாதிமாரும் மிகவும் அன்புடனும், கனிவுடனும் பராமரித்திருக்கிறார்கள். யாழ் வைத்தியசாலையின் கட்டிலில் படுத்திருந்தபடியே பற்றியெரியும் யாழ்நகரை அந்தச் சிங்களப் பாதிரியார் பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறார். லயனல் பெர்ணான்டோ பொலீஸாரின் திட்டமிட்ட தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட தமிழருக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும், இந்த வன்முறைகளிலும், நாசகாரச் செயல்களிலும் ஈடுபட்ட பொலீஸாரையும் அதிகாரிகளையும் விசாரித்துத் தண்டனை வழங்கவேண்டும் என்றும் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இருந்து அரசு மீது கடுமையான அழுத்தங்கள் எழுந்து வந்தன. இந்த அழுத்தங்களை நீர்த்துப் போகச் செய்ய ஜெயார் ஒரு சூழ்ச்சியைச் செய்தார். அதுதான், பொலீசாரின் வன்முறைகளை விசாரிக்க பொலீஸ் திணைக்களத்தில் உள்ளக விசாரணை ஒன்றினை மேற்கொள்ளப்போவதாக அவர் அறிவித்தார். விசாரணைகளின் அதிகாரியாக கிங்ஸ்லி விக்கிரமிசிங்க நியமிக்கப்பட்டதுடன், அவர் சாட்சிகளைப் பதிவுசெய்ததோடு, அடையாள அணிவகுப்புக்களினூடாக 187 பொலீஸார் அடையாளம் காணப்பட்டதுடன், அவர்கள் தடுத்தும் வைக்கப்பட்டனர். அதன்பிறகு இதுகுறித்து அரசோ, பொலீஸாரோ எதனையும் செய்ய முற்படவில்லை. விசாரணையும் அத்துடன் முற்றுப்பெற்று விட்டது. ஜெயாரின் அடக்குமுறை அரசின் இலக்கணமான "தமிழரைத் தாக்குவோரைக் கெளரவிப்பது" என்பதற்கமைய அத்தனை பொலீஸாரும் பதவியுயர்வு வழங்கப்பட்டு யாழ்ப்பாணத்திலிருந்து சிங்களப் பகுதிகளுக்கு இடமாற்றம் செய்து அனுப்பிவைக்கப்பட்டனர். நிவாரணத்திற்கான வேண்டுகோள்களை அடக்குவதற்கு முன்னாள் யாழ்ப்பாண அரசாங்க அதிபரான லயனல் பெர்ணான்டோவை நிவாரணங்களை மதிப்பீடு செய்யும் அதிகாரியாக ஜெயவர்த்தன நியமித்தார். லயனல் பெர்ணான்டோவும் ஜெயாரின் விருப்பத்தின்பேரில் யாழ் நூலக எரிப்பிற்கு நிவாரணமாக பத்து லட்சம் ரூபாய்களைக் கொடுக்கலாம் என்று மதிப்பிட்டார். நிவாரணக் கொடுப்பனவை ஒருவருடம் வரை தாமதித்து மெளனம் காத்த ஜெயார், 1982 ஆம் ஆண்டு ஆனி 10 ஆம் திகதி யாழ் நூலகத்தை மிளக் கட்டுவதற்கான தேசிய நிதி எனும் திட்டத்தை ஆரம்பித்தார். ஆனால், லயனல் பெர்ணான்டோ மதிப்பிட்ட பத்து லட்சம் ரூபாய்களைக் காட்டிலும் மிகக் குறைந்தளவு பணத்தையே ஜெயவர்த்தனா நூலகப் புணரமைப்பிற்குக் கொடுத்திருந்தார்.
  4. உ மலருக்கு தென்றல் பகையானால் .......! மலர்ந்திட கதிரவன் துணையுண்டு. (1). நிர்மலா சங்கரைத் திருமணம் செய்து கொண்டு இந்த வீட்டுக்கு வந்து பத்து வருடமாகின்றது. முன்பெல்லாம் மிக அன்பாயிருந்த அவளது மாமியார் இராசம்மா இப்போதெல்லாம் அவள்மீது கொஞ்சம் எரிச்சலாகத்தான் இருக்கிறாள். அது நிர்மலா அவளைக் கடந்து போகும் போதெல்லாம் ஜாடைமாடையாக கதைப்பதும், ஏதாவது சிறு தவறு செய்தாலும் அதைப் பெரிதாக்கி சண்டை போடுவதுடன், மாலையில் மகன் சங்கர் வேலையால் வந்ததும் போட்டுக் குடுப்பதிலும் தெரிகிறது. அவனும் வேலையால் அலுத்துக் களைத்து வரும்போது தாயின் புறணியைக் கேட்டு சில நேரங்களில் நிர்மலாவை கை நீட்டி அடித்தும் விடுகிறான். நிர்மலாவின் குடும்பம் அவ்வளவு வசதியில்லா விட்டாலும்கூட சராசரியான நடுத்தரக் குடும்பம்தான். சண்முகம் கோமளம் தம்பதிகளுக்கு நிர்மலா ஐந்தாவது பெண்பிள்ளை. ஆனாலும் அவர்கள் அவளை நன்றாகப் படிக்க வைத்திருந்தார்கள். அவளும் படிப்பில் நல்ல கெட்டிக்காரி. விசேஷமாக கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களில் அந்தப் பாடசாலையிலேயே சிறப்பான சித்தி பெற்றிருந்தாள். அத்துடன் சங்கீதத்திலும் நல்ல தேர்ச்சி உண்டு. யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது அவசரம் அவசரமாக இந்தத் திருமணம் வந்தது. அவர்கள் சீர்வரிசை எதுவும் கேட்கவில்லை. ஆயினும் நிர்மலா எவ்வளவோ மறுத்தும்கூட, இனி இப்படி ஒரு சம்பந்தம் அமைவது கஷ்டம் என்று சொல்லு அவளை சம்மதிக்க வைத்துவிட்டார்கள். ஆனாலும் சண்முகம் அவளுக்கு கழுத்துக்கு காதுக்கு கைகளுக்கு என்று சில பல நகைகள் எல்லாம் போட்டுத்தான் புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அவளும் வரும்போது மறக்காமல் தனது மடிக்கணனியையும் கைபேசியையும் கையேடு கொண்டு வந்திருந்தாள். இராசம்மாவும் கொடுமையானவள் அல்ல. அவளுக்கு வயசும் நாற்பத்தைந்தில் இருந்து நாற்பத்தெட்டில்தான் இருக்கும். அவளுக்கு குட்டையான தலைமுடி. முன்பெல்லாம் முடி நீளமாக வளரவில்லையே என்பதுதான் அவளது குறையாக இருந்தது. அதற்காக "கேசவர்த்தினி" உட்பட பல எண்ணெய்கள் தைலங்கள் எல்லாம் பாவித்தும் வந்திருக்கிறாள். இப்பொழுது அந்தக் குறைகூட இல்லை அவளுக்கு. முடிவாக இருக்கிற முடியை காப்பாற்றினாலே போதும் என்னும் மனநிலைக்கு வந்திருக்கிறாள்.அவ்வளவுக்கு முடி கொட்டத் தொடங்கி விட்டது. அத்துடன் இத்தனை வருடங்களாகியும் மகனுக்கு பிள்ளை இல்லையே என்னும் கவலையும் சேர்ந்துகொண்டது. அதற்கேற்றாற்போல் கோயில் குளங்கள், கடைகளில் சந்திக்கும் அவளது சிநேகிதிகளும் சங்கருக்கு இன்னொரு திருமணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகி விடும் என்று தூபம் போட்டுக் கொண்டிருந்தார்கள். "கரைப்பார் கரைத்தால் கல்லும் கரைவதுபோல்" இப்போதெல்லாம் அந்த எண்ணங்கள்தான் அவளை ஆட்டிப் படைக்கிறது. முன்பு இராசம்மாதான் மகனிடம் சொல்லி நிர்மலா விட்ட அவள் படிப்பைத் தொடர வழி செய்து பட்டப் படிப்பை முடிக்கவும் உதவியவள். சமைக்கவே தெரியாமல் இருந்த அவளை தனக்குப் பக்கத்தில் வைத்து தான் சமைக்கும் போதெல்லாம் அவளுக்கும் சொல்லிக் குடுத்து சாம்பார்,ரசம்,கறி குழம்புகளுக்கு ஏற்றாற்போல் காய்கறி வெட்டுவதில் இருந்து மீன்கள், இறைச்சிகள் எப்படி வெட்டுவது என்பதுவரை கற்றுக் குடுத்திருந்தாள். கூடவே வேலைக்காரி தாயம்மாவும் இருப்பதால் சமைக்கிற நேரம் போக மிச்சம் நிறைய நேரம் இருக்கும். அந்நேரங்களில் இருவரும் சங்கீதம்,இராகங்கள் பற்றி விலாவாரியாக விவாதிப்பதும் தேவாரம் கீர்த்தனைகள் சாதகம் செய்வதுமாய் பொழுதுகள் போகும். அதனால் மாமியாரை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவவை தனது தாய்க்கும் மேலாக மதித்து கவனித்து வருவாள். ஆனாலும் என்ன செய்வது தன் குலம் விளங்க ஒரு பேரனோ பேத்தியோ அவள் பெற்றுத் தரவில்லை என்னும் ஆதங்கம் அவளை கொஞ்சம் மாற்றி விட்டது. மலரும்...........! 🌹
  5. ஆம் அவரேதான். நான் உங்களை குழப்புவதற்காக வைகோ என்று சொன்னேன். 😂
  6. பக்கத்தாலை பார்க்க, வைகோ... மாதிரியும் இருக்கு. 😂 🤣
  7. 😂 இதைத்தான் பேக்காட்டிறது எண்டு சொல்லறது.
  8. இந்த நாய்க்கு, எவ்வளவு நீளமான கழுத்து என்று பாருங்களேன். 🤣
  9. இது, யாருடைய சிலை தெரியுமா? 😂
  10. ஒரே மூச்சில்... மிகுதி மூன்று பாகத்தையும் படித்து முடித்தேன். அருமையாக உள்ளது... தொடருங்கள் சுவியர். 🙂
  11. ஆபிரிக்க ஜகானா (ஆக்டோபிலோர்னிஸ் ஆஃப்ரிகானஸ்) African Jacana (Actophilornis africanus) -ஆண் பறவை- நான்கு குஞ்சுகளையும் தனது இறக்கைக்குக் கீழே சுமந்துகொண்டு, அவற்றின் நீண்ட கால்கள் மற்றும் கால் விரல்களை மட்டும் வெளியில் வைத்துக் கொண்டு நிற்கிறது.
  12. இதை எழுதுவதும் சரி இங்கே தொகுத்து இணப்பதும் சரி எத்தனையோ மணித்துளிகளை விழுங்க கூடியது. நன்றி என்று மட்டும் சொல்லி விட்டு செல்லமுடியாது. 🙏
  13. எப்படிப் பாடுகிறார் என்பது முக்கியமல்ல அந்த வரிகளுக்குள் எப்படி கரைந்து போயிருக்கிறார் என்பதைத்தான் நீங்கள் கவனிக்க வேண்டும் யுவர் ஆனர்.....! 😁
  14. கொடிகாமம்,சாவகச்சேரி, வவுனியா எல்லாம் வருகிறதை கவனிக்கவில்லையா நிழலி?
  15. நூலகம் எரியும் செய்தி பரவுவதைத் தடுக்க ஈழநாடு பத்திரிகைக் காரியாலயத்திற்கும் தீமூட்டிய பொலீஸ் காடையர்கள் தமது நாசகாரச் சதிச்செயல் சர்வதேசத்தின் கண்களில் தெரிந்துவிடக்கூடாதென்பதில் இதனைச் செய்தவர்கள் மிகவும் அவதானமாக இந்த கொடூரத்தை அரங்கேற்றியிருந்தனர். இக்கொடுஞ்செயலினை மறைக்க அவர்கள் யாழ்நகரிலிருந்து மாநிலச் செய்திகளைக் காவிவரும் நாளிதழான ஈழநாடு பத்திரிகைக் காரியாலயத்தையும், நூலகம் எரிந்துகொண்டிருந்த அதே கணப்பொழுதுகளில் எரித்தனர். ஈழநாட்டு அச்சகத்தை எரிப்பதற்காக சென்ற இன்னொரு பொலீஸ் குழு, உள்ளிருந்தவர்களை வெளியே வருமாறு உத்தரவிட்டது. எஸ்.எம். கோபாலரட்ணம் ஈழநாட்டு பத்திரிக்கையின் ஆசிரியர் கோபாலரட்ணம் என்னிடம் பேசுகையில், "ஞாயிற்றுக்கிழமை யாழ்நகரில் பொலீஸார் ஆடிய கோரத் தாண்டவத்தைக் கண்டித்து நான் எழுதிய ஆசிரியர் தலையங்கத்தை இறுதியாக சரிபார்த்துவிட்டு அச்சகத்தை அனுப்பியிருந்தேன். ஆசிரியர் செய்திப்பிரிவில் கடமையாற்றியோர் சில மணிநேரத்திற்கு முன்னர்வரை பொலீஸார் நடத்திவந்த கொடூரங்களை செய்தியாக்கும் அவசரத்தில் செயற்பட்டுக்கொண்டிருந்தனர். தமிழர்களின் கலாசாரத் தொன்மையினையும், பெருமையினையும் வெளிக்காட்டும் முகமாக யாழ்நகரின் வீதிகளெங்கும் நிறுவப்பட்டிருந்த சரித்திரப் பெருமைவாய்ந்த பெரியார்களினதும் சமயப் பெரியார்களினதும் சிலைகளை பொலீஸார் அடித்து நொறுக்கும் காட்சிகளை நாம் ஒளிப்படங்களாகப் பதிந்து, அவற்றினை அச்சிடும் பணியினையும் அப்போதுதான் நிறைவுசெய்திருந்தோம். எமது அலுவலகத்திலிருந்தே தூரத்தில் அடிக்கடி நடக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களையும் எம்மால் கேட்க முடிந்தது. அதனைச் செய்வது அமைச்சர்கள் சிலரும், அவர்களோடு யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த ஆதரவாளர்களும்தான் என்கிற செய்தி யாழ்ப்பாணமெங்கும் அப்போது பரவிவந்தது. அப்போதுதான் எமது அச்சகத்தைச் சூழ்ந்து ஒரு பொலீஸ் பிரிவொன்று நிற்பதை நாம் உணர்ந்தோம். திடு திடுப்பென்று உள்ளே நுழைந்த பொலீஸார் எம்மை அங்கிருந்து அடித்து விரட்டினர். எமது அச்சக இயந்திரங்கள் மீதும், காரியாலயம் மீதும் பெற்றோலினை ஊற்றி எம் கண்முன்னே அவற்ரைக் கொழுத்தினர்" என்று கூறினார். "சிங்களத்தில் தூஷண வார்த்தைகளால் எம்மை வைத பொலீஸார், முன்னிரவு நடந்த பொலீஸ் கலவரங்கள் குறித்து நாம் அளவுக்கதிகமாக செய்தி வெளியிடுவதாகக் குற்றஞ்சாட்டினர். இப்போது உங்கள் நூலகத்தையும் எரித்துவிட்டோம், அதை எப்படி செய்தியாக வெளியிடப்போகிறீர்கள் என்று பார்க்கலாம் என்று வந்திருந்த பொலீஸ் அதிகாரி ஏளனமாக எம்மைப் பார்த்துக் கேட்டார்" என்று ஈழநாட்டு செய்தியாளர் ஒருவர் என்னிடம் கூறினார். நூலகம் எரிக்கப்படும்போது, அச்செய்தி வேறிடங்களுக்குப் பரவாதிருக்கும் வகையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடங்களுக்குச் செல்லும் தொலைபேசி இணைப்புக்களையும் பொலீஸார் துண்டித்துவிட்டிருந்தனர். தமிழினத்தின் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட கலாசாரப் பேரழிவுபற்றி சர்வதேசம் முதன்முதலில் அறிந்துகொண்டது "அத்த" எனும் சிங்கள பத்திரிக்கையில் வந்த செய்தியின் ஊடாகத்தான். இதற்குப் பின்னர் தந்தை செல்வாவின் மகனான சந்திரகாசன் சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பொன்றில் இந்தக் கொடூரம் பற்றி தெரியப்படுத்தியிருந்தார். யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்நாட்டிற்குக் கடத்திவரப்பட்ட நூலகம் எரியும் காட்சிகளைக் கொண்ட பல புகைப்படங்களை அவர் செய்தியாளர்களுக்குக் காண்பித்தார். சர்வதேசச் செய்திச் சேவைகளில் இப்புகைப்படங்கள் பின்னர் பெருமளவில் செய்தியாகப் பாவிக்கப்பட்டன. எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இந்த நாசகாரச் செயல் குறித்து விமர்சித்திருந்தன. ஆனி இரண்டாம் வாரம் எதிர்க்கட்சிகள் கூட்டாக ஒரு அறிக்கையினை யாழ் நூலக எரிப்புப் பற்றி வெளியிட்டிருந்தன, "நூற்றிற்கு மேற்பட்ட வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு, களவாடப்பட்டு பின்னர் எரியூட்டப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணம் மற்றும் சுன்னாகம் ஆகிய பகுதிகளில் இயங்கிவந்த சந்தைக் கட்டடத் தொகுதிகள் போர்க்காலத்தில் அகப்பட்ட நகரங்கள் போன்று அழிக்கப்பட்டுக் காட்சி தருகின்றன. மக்களின் பல வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டபின் இடிக்கப்பட்டு, எரியூட்டப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினரின் இல்லம் அடையாளம் தெரியாது எரித்து நாசமாக்கப்பட்டிருக்கிறது. அரச இராணுவத்தாலும், பொலீஸாரினாலும் பல தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். யாழ்நகரின் இதயப்பகுதியில் இயங்கிவந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் அலுவலகமும் அடித்து நிறுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய நூலகமும், 90,000 இற்கும் அதிகமான விலைமதிப்பற்ற புத்தகங்களையும் கொண்டிருந்த யாழ்ப்பாண நூலகம் எரித்துச் சாம்பலாக்கப்பட்டுள்ளது". "இதில் மிகவும் கண்டிக்கத்தக்க விடயம் யாதெனில் இந்த அட்டூழியங்கள் யாழ்நகரில் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருந்தவேளை அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்களும், பாதுகாப்பு உயரதிகாரிகளும் யாழ்நகரில் தங்கியிருந்து இந்த கொடுஞ்செயல்களை முடுக்கி விட்டிருந்ததும், யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டவென்று அனுப்பப்பட்ட பாதுகாப்புப் படைகளும் பொலீஸாரும் நேரடியாக இந்த அழிவு வேலைகளில் ஈடுபட்டிருந்ததும் தான்" என்று அந்த அறிக்கை கூறியது. சுண்ணாகம் சந்தைப்பகுதியிம், கடைகளும் வைகாசி 31 ஆம் திகதி இரவே பொலீஸாரினால் நாசமாக்கப்பட்டிருந்தன. சுண்ணாகம் பொலீஸ் நிலையத்திலிருந்து கிளம்பிச் சென்ற பொலீஸ் காடையர்கள், சுண்ணாகம் சந்தைப்பகுதிக்குச் சென்று, அங்கிருந்த கடைகளை அடித்து உடைத்து, உள்ளிருந்த பொருட்களைச் சூறையாடிவிட்டு தீமூட்டினர். பின்னர், அருகிலிருந்த பொதுமக்கள் வீடுகளும் அவர்களால் எரியூட்டப்பட்டிருந்தன. இதேவகையான நாசகார செயல்களை காங்கேசந்துறை பொலீஸ் நிலையத்திலிருந்து கிளம்பிச் சென்ற பொலீஸ் காடையர்களும் செய்திருந்தனர். சிவசிதம்பரத்தின் அலுவலகத்தைச் சூழ்ந்துகொண்ட இராணுவப் பிரிவொன்று அதன்மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கித் தாக்குதலினை மேற்கொண்டது. அலுவலகத்தினருகில் இருந்த பொதுமகன் ஒருவர் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நாட்களில் ஐந்து தமிழர்கள் கொல்லப்பட்டதாக பொலீஸார் அறிவித்திருந்தனர், ஆனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதனைக் காட்டிலும் மிக அதிகமானது என்பது மக்களின் கருத்தாக இருந்தது. நன்றியண்ணா உங்களின் கருத்திற்கு. நானெல்லாம் போராளியில்லை. எனக்காக எனது சகோதரங்களை போராடச் சொல்லிவிட்டு வேறுநாட்டில் தங்கியிருக்கும் ஒரு அகதி, அவ்வளவுதான்.
  16. நீங்கள் இப்படி மொழிபெயர்த்து எழுதுவது யாழ்கள உறவுகள் மட்டுமல்ல தமிழினமே உங்களுக்கு கடமைப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்தினால்த் தான் போராளி இல்லை. பேனா பிடித்தாலும் போராளி தான். தொடருங்கள்.
  17. நூலகம் எவ்வாறு எரியூட்டப்பட்டது? தமிழரின் கலாசார பொக்கிஷத்தை முற்றாக எரியூட்டி, கட்டிடத்தை அழிக்கும் இந்த நாசகாரச் செயல் மிகவும் நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இரவு சுமார் 10 மணியளவில் குட்டையாக தலைமுடி வெட்டப்பட்டு, காக்கி நிற காற்சட்டைகளும் வெண்ணிற பெனியன்களும் அணிந்திந்திருந்த வாட்டசாட்டமான பொலீஸ் காடையர்கள் கைகளில் பெற்றொல் கொள்கலன்களும், இரும்புத் தடிகளும், கோடரிகள் மற்றும் வாட்கள் என்பவற்றுடன் அல்பிரெட் துரையப்பா விளையாட்டரங்கிலிருந்து, வீதிக்கு மறுபுறத்தில் அமைந்திருந்த யாழ் நூலகம் நோக்கிய தமது நாசகார பயணத்தை ஆரம்பித்தனர். நூலகத்தின் வாயிலுக்குச் சென்ற பொலீஸ் காடையர்கள், வாயிலின் உட்புறமாக சரஸ்வதிச் சிலையின் அருகில் காவலுக்கு நின்றிருந்த ஒற்றைக் காவலாளியையும் அடித்துத் துரத்தினர். பின்னர் தாம் கொண்டுவந்திருந்த கோடரிகளால் நூலகத்தின் கதவுகளைக் கொத்தித் திறந்தனர். "அவர்கள் செயற்பட்ட விதத்தினைப் பார்த்தபோது, இந்த நாசகாரச் செயலினை அவர்கள் ஏற்கனவே திட்டமிட்டு, இந்தச் செயலுக்காகப் பயிற்றப்பட்டு வந்தது போலத் தெரிந்தது" என்று பொலீஸாரால் திரத்தப்பட்டபின்னரும், அருகில் ஒளிந்திருந்து இந்த அக்கிரமத்தைக் கண்ணுற்ற அந்தக் காவலாளி கூறினார். நூலகத்தை எரிக்கவந்த குழு சிறு சிறு குழுக்களாகப் பிரிந்துகொண்டது. முதலாவது குழு, புத்தகங்களை வாசகர்களுக்கு கொடுக்கும் பிரிவினுள் நுழைந்து புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அடுக்குத் தட்டுக்களூடாக நடந்துகொண்டே இருபுறமும் இருந்த புத்தகங்கள் மேல் தாம் கொண்டுவந்த பெற்றோலினை ஊற்றிக்கொண்டே சென்றது. இரண்டாவது குழு, செய்தித்தாள்களும், பருவப் புத்தககங்களும் வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குச் சென்று, மரத்தாலான தளபாடங்கள் அனைத்தையும் அந்த மண்டபத்தின் மத்தியில் இழுத்துவந்து குவித்து அவற்றின்மேல் பெற்றோலினை ஊற்றியது. மூன்றாவது குழு குறிப்புப் புத்தகங்களும், ஈடுசெய்யப்பட முடியாத, புராதன ஓலைச் சுவடிகளும் பாதுக்கக்கப்பட்டு வந்த பகுதிக்குச் சென்று அவற்றின் மேல் பெற்றோலினை ஊற்றியது. இன்னொரு குழு சிறுவர் பகுதி உட்பட நூலகத்தின் ஏனைய பகுதிகளுக்குச் சென்று தமது திட்டத்தின் முதலாவது கட்டத்தை நிறைவுசெய்தன. "ஒரேநேரத்தில் முழுக் கட்டடமும் தீப்பற்றிக் கொண்டது" என்று நூலகக் காவலாளி நகர மேயர் சிவஞானத்திடம் கூறினார். "இந்த நாசகாரச் செயலினை அவர்கள் எதற்காக எங்களுக்குச் செய்தார்கள்?" என்று விம்மி அழுதுகொண்டே விசாரணைகளை மேற்கொண்ட பீட்டர் கியுனுமென்னைப் பார்த்துக் கேட்டார் தலைமை நூலகரான ஆர் நடராஜா. அவரால் அந்த அதிர்ச்சியைத் தாங்கிகொள்ள முடியவில்லை. அவரால் பொங்கிவரும் அழுகையினையும் கட்டுப்படுத்த முடியவில்லை. யாழ் நூலகத்தின் பிரதான நூலகர் திருமதி ரூபா நடராசா இடிந்துபோன நிலையில் நூலகத்தின் தரையில் அமர்ந்திருக்கும் காட்சி ஆனால், சொற்பிறப்பியல் நிபுணரான பாதிரியார் டேவிட்டிற்கு இந்த அதிர்ச்சி இலகுவானதாக இருக்கவில்லை. புனித பத்திரிசியார் கல்லூரியின் மாணவர் விடுதியில் இருந்த தனது அறையிலிருந்து வானத்தில் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்த யாழ் நூலகத்தைப் பார்த்த கணம் அவர் நடுக்கத்துடன் கீழே விழுந்தார், சில கணங்களில் அவரது உயிரும் பிரிந்தது. பாதிரியார் டேவிட் "அத்த" எனும் சிங்கள மொழி பத்திரிக்கை இந்த நாசகாரச் செயல் பற்றி எழுதும்போது, பீட்டர் கியுனுமென் நூலகத்தைப் பார்வையிடச் சென்றவேளை நூலகத்திலிருந்து இன்னமும் வெப்பமும் கரிய புகையும் வெளியேறிக்கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறது. "நூலகத்தின் சில பாகங்கள் இன்னும் வெப்பத்தால் தகதகத்துக்கொண்டிருந்தன, எம்மால் அப்பகுதிகளுக்குச் செல்ல முடியவில்லை" என்று அதன் செய்தியாளர் குறிப்பிடுகிறார். ஆடி 17 ஆம் திகதி, பிரான்ஸிஸ் வீலன் எனப்படும் ப்சர்வதேசப் பத்திரிக்கையாளர் எரிந்த நூலகத்தை சில தினங்களுக்குப் பின்னர் சென்று பார்வையிட்டார். தான் அங்கு பார்த்ததை பின்வருமாறு தனது பத்திரிக்கையில் எழுதுகிறார், "இன்று நான் நூலகத்தினுள் சென்றபோது அதன் நிலம் முழுவதும் எரிந்து சாமபலான புத்தகங்களால் மெழுகப்பட்டிருந்தது. அருகிலிருந்த உடைந்த யன்னல்களுடாக உள்ளே வீசிய மெல்லிய காற்றில் பாதி எரிந்த புத்தகத் தாள்கள் காற்றில் பறந்து ஊசலாடிக்கொண்டிருந்தன. சுற்றியிருந்த சுவர்களின் சுண்ணாம்புப் பூச்சுக்கள் புத்தகங்கள் எரிந்து வெளியிட்ட வெப்பத்தால் வலுவிழந்து நொறுங்கத் தொடங்கிவிட்டன. எரிந்த நூலகத்தைச் சுற்றி நான் நடந்துவந்துகொண்டிருந்தபொழுது, ஆசிரியர் கலாசாலையில் பயிற்றுனராகக் கடைமையாற்றும் ஒருவர் மனமுடைந்து என்னைப்பார்த்துக் கேட்டார், "ஏன் இப்படிச் செய்தார்கள்? நிச்சயமாக சிங்களவர்கள் எமது நூலகத்தின் மீது பொறாமைப்பாடிருந்தார்கள் என்பதையே இது காட்டுகிறது. எனது விரிவுரைகளுக்காகவும், குறிப்புகளுக்காகவும் நான் இந்த நூலகத்திற்கு ஒவ்வொரு நாளும் வருவேன். ஆனால், இனி என்னால் இங்கு வரமுடியாது. எனக்குத் தேவையான புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள நான் இனிமேல் கொழும்பிற்குச் செல்லவேண்டும், ஆனால் அங்கு எனக்குத் தேவையான புத்தகங்கள் இருப்பது சந்தேகமே என்று கூறினார்". செய்தியாளர்களிடம் பின்னர் பேசிய யாழ்நகர மேயர், "பொறாமையே இந்த நாசகாரச் செயலுக்குக் காரணமாக இருந்தது என்பதை நான் நம்பவில்லை. தமிழர்களை அடக்கி, ஒடுக்கி, சிறுமைப்படுத்தவேண்டும் என்கிற நோக்கம் சிங்களவர்களுக்கு இருக்கிறது. தமிழர்கள் தமது நாகரீகத்தின் பெருமைகளை, கலாசார விழுமியங்களை, தனித்துவமான அடையாளத்தை பறைசாற்றிப் பெருமைப்படும் எந்த சின்னத்தையும் கொண்டிருக்கக் கூடாதென்பதே சிங்களவர்களின் நோக்கம்" என்று அவர் கூறினார்.
  18. அம்மா பிள்ளைகளாக இருக்கும் ஆண்கள் எப்போதும் அப்படியே வாழ்வது நன்று...பெண்கள் தனித்து வாழும் நிலை ஏற்பட்டால் சந்தோசமாக ஏற்று தங்களை முன்னேற்றி யார் கை விட்டார்களோ அவர்கள் முன்னாடி வாழ்ந்து காட்ட வேண்டும்..என்ன மனமும், உடலும் கொஞ்சம் சோர்ந்து போய் விடும் அவ்வளவு தான்..தொடருங்கள் சுவியண்ண...
  19. 1995 இன் பிற்பாடு கல்வி கலாச்சாரம்களை அழிப்பதற்கு சிங்களம் மிகவும் திட்டமிட்டு செயல்படுத்தி இப்போ வெற்றியும் காண்கிறது.
  20. இலங்கையின் முதன்மை நூலகமாகத் திகழ்ந்த யாழ் நூலகம் யாழ்ப்பாணம் பல விடயங்களில் இலங்கையின் முன்னணி மாவட்டமாகத் திகழந்தது போல் நூலகத்துறையும் சிறந்து விளங்கியிருந்தது. முதலாவது வாசகர் அறையினை யாழ் நூலகமே கீரிமலையில் 1915 ஆம் ஆண்டு நகுலேஸ்வரா வாசக அறை என்ற பெயரில் உருவாக்கியிருந்தது. அதேபோல் இலங்கையின் முதலாவது பொது நூலகம் யாழ்ப்பாணத்திலேயே 1934 ஆம் ஆண்டு ஆவணி மாதம் முதலாம் திகதி திறக்கப்பட்டது. யாழ் பொது நூலகம் திறக்கப்பட்டு ஒரு ஆண்டிற்குப் பின்னரே கொழும்பு பொதுநூலகம் திறந்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாண நூலகம் சர்வதேச நூலகத்துறையில் நடைபெற்றுவந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து அவதானித்து, அவற்றினை தானும் நடைமுறைப்படுத்தி வந்தது. அந்தவகையில் பொதுமக்களிடம் வாசிப்புத்திறனை ஊக்குவிக்கும் நோக்கில் பொதுமக்கள் புத்தக இயக்கம் எனும் செயற்பாட்டினை யாழ்ப்பாண நூலகம் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த இயக்கத்தின் மூலம் 1930 களில் மக்களுக்கு மலிவான விலையில் பல புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்டு வந்திருந்தது. இதற்கு முதல், புத்தகங்கள் பல்கலைக்கழகங்கள், மத வழிபாட்டுத்தளங்கள், செல்வம் படைத்தவர்களின் இல்லங்களில் மட்டுமே காணப்பட்ட அரிய பொருளாக இருந்ததும் குறிப்பிடத் தக்கது. அக்காலத்தில் புத்தகங்கள் கம்பளியில் எழுதப்பட்டு, நேர்த்தியாகக் கட்டப்பட்டு, மினுங்கும் மைகளினால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. யாழ் நூலகத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த கிறித்தவப் பாதிரியார் லோங்கின் உருவச் சிலை யாழ் நூலகத்தின் முதலாவது கட்டிடம் 1842 ஆம் ஆண்டு யாழ்ப்பாண நீதிமன்றின் செயலாளர் எப். சி. கிரெய்னரின் வாசிப்பு அறையாகவே உருவாக்கப்பட்டிருந்தது. 1848 இல் இந்த வாசிப்பு அறை முறையான பொது நூலகமாக உதவி அரசாங்க அதிபர் வில்லியம் டியுனத்தினால் மேம்படுத்தப்பட்டது. 1933 ஆம் ஆண்டு நீதிமன்ற செயலாளராகக் கடமையாற்றிய கே. எம். செல்லப்பா அவர்கள் கந்தர்மடத்து இளைஞர்களை ஊக்கப்படுத்தி யாழ்ப்பாண நூலகத்திற்காக புத்தகங்களைச் சேகரிக்குமாறு கேட்டிருந்தார். மேலும், அவ்வருடம் மார்கழி 11 ஆம் திகதி தமிழிலும், ஆங்கிலத்திலும் பொதுமக்களுக்கான வேண்டுகோள் ஒன்றினை அவர் விடுத்திருந்தார். "யாழ்ப்பாணத்தில் இயங்கப்போகும் இலவச மத்திய நூலகம்" என்கிற தலைப்பில் அவரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு மக்களிடமிருந்து சிறந்த வரவேற்புக் கிடைத்தது. 1934 ஆம் ஆண்டு ஆனி 9 ஆம் திகதி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மண்டபத்தில் மாவட்ட நீதிபதி சி. குமாரசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் யாழ்ப்பாணம் பொதுநூலகத்தை அமைக்கும் நிர்வாக சபைக்கான உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். அதன்படி நூலக நிர்வாக சபையின் தலைவராக நீதிபதி குமாரசாமியும், உதவித் தலைவராக பாதிரியார் ஐசக் தம்பையாவும், இணைந்த செயலாளர்களாக வழக்கறிஞர் சி பொன்னம்பலமும், செல்லப்பாவும் தெரிவுசெய்யப்பட்டனர். கே. எம். செல்லப்பா யாழ்ப்பாண நூலகம் முதன்முதலாக 1934 ஆம் ஆண்டு, ஆவணி முதலாம் திகதி 844 புத்தகங்களுடனும், 30 செய்தித் தாள்களுடனும், ஆஸ்பத்திரி வீதியில் அமைந்திருந்த இலங்கை மின்சார சபைக் கட்டடத்தின் முன்னாலிருந்த தனியார் கட்டிடம் ஒன்றை வாடகைக்கு எடுத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்து மாநகரசபையின் பிரிவான யாழ்நகர அபிவிருத்திச் சபை 1935 ஆம் ஆண்டு தை மாதம் 1 ஆம் திகதியிலிருந்து இந்த நூலகத்தினை பொறுப்பெடுத்து நடத்தி வருகிறது. யாழ் நூலகம் தொடர்ச்சியாக வளர்ந்து வந்தது. 1952 ஆம் ஆண்டு நூலகத்தின் செயற்பாடுகள் விஸ்த்தரித்து மக்களின் அபிமானத்தை பெருவாரியாகப் பெற்றுவந்த நிலையில் அதற்கென்று தனியான கட்டடம் ஒன்றின் அவசியத்தினை உணர்ந்த அன்றைய யாழ் நகர மேயர் சாம் சபாபதி கட்டடம் ஒன்றினைக் கட்டுவதென்று முடிவெடுத்தார். கட்டடத்திற்கான அமைவிடம் நகர அபிவிருத்தி அதிகாரியான வீரதுங்கவினால் தெரிவுசெய்யப்பட்டு அதற்கான அடிக்கல் 1954 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 29 ஆம் திகதி மேயர் ஆர். விஸ்வநாதனின் மற்றும் பாதிரியார் லோங்கினாலும் நாட்டி வைக்கப்பட்டது. இந்த நூலகத்தை அமைப்பதற்கான முயற்சிகளின் பின்னணியில் பிரித்தானியா , அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தூதுவர்களும் இருந்திருக்கின்றனர். கலாநிதி எஸ்.ஆர். ரங்கநாதன் இரு இந்தியர்களான நூலக விஞ்ஞானத்தின் நிபுணர் கலாநிதி எஸ்.ஆர். ரங்கநாதன் மற்றும் திராவிட கட்டிடக் கலையின் விற்பன்னரான கே. எஸ். நரசிம்மன் ஆகியோர் நூலகக் கட்டிடத்தின் வடிவமைப்பையும், நூலகத்தின் பிரிவுகள் அமைக்கப்படவேண்டிய ஒழுங்கினையும் வரைந்து கொடுத்திருந்தனர். நூலகத்தின் முதலாவது கட்டம் பூர்த்தியாக்கப்பட்டபோது அன்றைய யாழ் மேயராக இருந்த அல்பிரெட் துரையப்பாவினால் 1959 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 11 ஆம் திகதி வைபவரீதியாகத் திறந்துவைக்கப்பட்டது. தொடர்ச்சியாக ஏனைய பிரிவுகளும் பூர்த்திசெய்யப்பட்டு வந்தன. இலங்கையின் இரண்டாவது பெரிய நூலகமாக யாழ் நூலகம் திகழ்ந்ததோடு 15,910 சதுர அடிகள் நிலப்பரப்பையும் கொண்டிருந்தது. பூர்த்திசெய்யப்பட்ட நூலகத்தில் ஏழு முக்கிய பகுதிகள் இருந்தன. புத்தகங்களை வாசிப்பதற்குக் கொடுக்கும் பகுதி, புதினப் பத்திரிக்கைகள் மற்றும் பருவப் புத்தகங்கள் பகுதி, சிறுவர் பிரிவு, கேட்போர் கூடம், குறிப்புப் புத்தகங்கள் பிரிவு, கலைப்பிரிவு மற்றும் கற்றல் பிரிவு ஆகியவையே அவை. நூலகம் எரிக்கப்பட்டபோது அங்கு 96,000 நூல்கள் இருந்தன. புத்தகங்களைப் பாவனைக்கு வழங்கும் பகுதியிலேயே அதிகளவான புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. குறிப்புப் பகுதியில் 29,000 புத்தகங்கள் பராமரிக்கப்பட்டு வந்ததுடன் இவற்றுள் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட பழமையான நினைவுக் குறிப்புக்கள், பழைய எழுத்தாளர்களின் ஆக்கங்கள், நாடகக் குறிப்புகள், அரசியல்க் குறிப்புகள், பாரம்பரிய வைத்திய முறைகள் பற்றிய தொகுப்புகள் உள்ளிட்ட விலைமதிப்பற்ற பல வரலாற்று ஆவணங்கள் கவனமாகப் பராமரிக்கப்பட்டு வந்திருந்தன. இறுதியாக பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண வைபவமாலையின் பிரதியும் அங்கிருந்தது. இலங்கையின் பெரிய சிறுவர் பகுதியைக் கொண்டிருந்த யாழ் நூலகம் 8,995 சிறுவர்களுக்கான புத்தகங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தது. இக் கொடூரமான நூலக எரிப்பினை விசாரித்த பிரபல நூலகரான எம்.கமால்டீன் தனது விசாரணைகளின் முடிவில் பின்வருமாறு கூறியிருந்தார். "அந்தப் பயங்கரமான இரவில் யாழ்ப்பாண நூலகத்திற்குள் நுழைந்தவர்களின் ஒரே நோக்கம் அங்குள்ள புத்தகங்கள் அனைத்தையும் அழிப்பதுதான் என்பது தெளிவாகத் தெரிந்தது. அவர்கள் ஒரு புத்தகத்தையாவது விட்டுவைக்க விரும்பவில்லை. பாதி எரிந்த நிலையில் ஒரு சில புத்தகங்களை மட்டுமே எம்மால் அங்கிருந்து மீட்க முடிந்தது" என்று குறிப்பிட்டிருந்தார்.
  21. மலர்..........(3). நிர்மலாவும் தான் இனி என்ன செய்யவேண்டும் என்று மனதுக்குள் நினைத்து கொள்கிறாள். தொடர்ந்து இங்கே இருப்பதா அம்மா வீட்ட சென்று அவர்களுக்கு சுமையாக இருப்பதா. ஏற்கனவே பெரியத்தான் குடி வெறி என்று ஒழுங்காக இல்லாததால பெரியக்கா குடும்பமும் பிள்ளைகளுடன் அம்மாவோடுதான் இருக்கிறார்கள். இதில் நானும் அங்கு சென்று இருப்பது சரியாய் இராது. என்று பலவாறு நினைக்கிறாள். தான் முன்பு விளையாட்டாக "யூ டியூபில்" சமையல் மற்றும் தோட்டக் கலை என்று தொடங்கிய நிகழ்ச்சிகள் மூலம் ஏதோ கொஞ்ச காசு வருகுதுதான் ஆனால் அது மட்டும் போதாது வேறு ஏதாவதும் செய்ய வேண்டும். அவளால் சரியாக ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. அன்று இராசம்மாவும் சங்கரும் வீட்டில் பரபரப்பாக வேலைகள் செய்து கொண்டிருக்கிறார்கள். சங்கர் கடைக்கும் போகவில்லை. அவன் தனது பெட்டியில் வேட்டி, சட்டை மற்றும் புது ஆடைகள் எல்லாம் எடுத்து வைத்து பூட்டுகிறான்.வளமையாய் அவன் எங்காவது வெளியூர் போவதென்றால் நிர்மலாதான் எல்லா ஆயத்த வேலைகளும் செய்து வைப்பாள். அவனுக்கு ஒரு வேலையும் இருக்காது. ஐயா ஹாயாக பெட்டியை உருட்டிக் கொண்டு கிளம்பிப் போவார்.இப்போது எதற்கும் அவளை கூப்பிடவில்லை.அவர்களுக்கு உள்ளுக்குள் குற்ற உணர்வு இருப்பதையும் அவள் கவனிக்கிறாள். வெளியே அவர்களது கார் வந்து நிக்கும் சத்தம் கேட்கிறது. அதை சாரதி மிகவும் அழகாக கழுவி பொலிஸ் போட்டு துடைத்துக் கொண்டு வந்திருந்தார். வெளியே தயாராய் இருந்த இவர்களது சாமான்கள் எல்லாவற்றையும் அவரே எடுத்துக் கொண்டு போய் கார் டிக்கியில் வைக்கிறார். நிர்மலா எல்லோருக்கும் தேநீர் கொண்டுவந்து குடுக்கும் போது இராசம்மாவும் நிர்மலாவிடம் பிள்ளை நாங்கள் ஒரு அலுவலாய் ஒரு இடத்துக்கு போயிட்டு இரண்டுநாள் கழித்துத்தான் வருவம். அதுவரை தாயம்மாவும் நீயும் வீட்டைப் பார்த்துக்கொண்டு கவனமாய் இருங்கோ. நான் போய் வந்து எல்லாம் சொல்லுறன். வீட்டையும் கொஞ்சம் கழுவித் துடைத்து வளைவுகளையும் கூட்டிப் பெருக்கி சுத்தமாய் வைத்திருங்கோ என்று சொல்லி கொஞ்சநேரம் அவளது கையை வாஞ்சையாய் பிடித்திருந்தது விட்டு கலங்கிய கண்களுடன் காருக்குப் போக சங்கரும் அவளைத் தீர்க்கமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு தலை குனிந்து கொண்டு போய் காருக்குள் ஏறுகிறான். காரும் புறப்பட்டு செல்கிறது. நிர்மலாவுக்கும் வேலைக்காரம்மாவுக்கும் வீட்டில் நிறைய வேலைகள் இருந்தன. அவர்கள் கூடுதலாக இரண்டு ஆட்களையும் கூலிக்கு கூப்பிட்டு வீடு மட்டுமன்றி தோட்டம், முற்றம் என்று எல்லாவற்றையும் நன்றாக செப்பனிட்டு மரம் செடி கொடிகள் எல்லாவற்றையும் அழகாக கத்தரித்து செழிப்பாக வைத்திருந்தார்கள். நான்காம் நாள் அதிகாலை நிர்மலா முதல்நாளே ஒழுங்கு செய்து வைத்திருந்த தனது சூட்கேஸ், கணனி கைபேசி எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டாள். மறக்காமல் போன் சிம்மை கழட்டி பையில் வைத்துவிட்டு மிக்க வேதனையுடன் தாலிக்கொடியை கழட்டி தனது கூறைச் சேலையின் மேல் வைத்து அவற்றை சங்கரின் மேசைமேல் வைத்து விட்டு வெளியே வருகிறாள். பின் குசினி அருகே இருக்கும் அறையை சென்று பார்க்க அங்கு தாயம்மா பகல்முழுதும் வேலை செய்த களைப்பில் நன்றாக அயர்ந்து உறங்குகிறாள். அப்படியே வீதிக்கு வந்தவள் சிறிது தூரம் நடக்கும்போது அவ்வழியால் வந்த ஒரு ஆட்டோவைப் பிடித்து புகையிரத நிலையத்துக்கு வருகிறாள். எதற்கும் இருக்கட்டும் என்று கொழும்புவரை பயணச்சீட்டு எடுத்துக் கொண்டு அடுத்து வந்த புகையிரதத்தில் ஏறி அமர்ந்து கொள்கிறாள். அந்த வண்டியும் சாவகச்சேரி, கொடிகாமம் என்று ஒவ்வொரு நிலையமாய் நின்று நின்று போகிறது. நிர்மலாவுக்கு எங்கு போவது, எங்கு இறங்குவது என்ற எண்ணம் இல்லை. அவர்கள் வரமுதல் இங்கிருந்து போக வேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்கி இருக்கின்றது. வவுனியாவில் வண்டி நிக்கும்போதுதான் தன் நினைவுக்கு வந்தவள் இனி அங்கால எல்லாம் சிங்கள ஊர்கள்தான் வரும், அதனால் இங்கேயே இறங்கி அடுத்த அலுவலைப் பார்க்கலாம் என்று நினைத்து வண்டி புறப்பட முன் பெட்டியுடன் இறங்கி விடுகிறாள். காலைப் பொழுது பலபலவென்று விடிந்து விட்டிருந்தது. நேராக வவுனியா மையத்துக்கு நடந்து வருகிறாள். இது எனக்குப் பழக்கமில்லாத ஊர் அதனால் எதற்கும் பயந்தவளாக தன்னைக் காட்டிக் கொள்ளக் கூடாது என்று தனக்குள் சொல்லிக்கொண்டே வருகிறாள். அதனால் மிகவும் பழகியமாதிரி அங்கிருந்த ஒரு கைபேசி விற்கும் கடைக்கு சென்று புதிதாக ஒரு சிம் வாங்கிப் போனுக்குள் பொருத்திவிட்டு ஒரு புதிய இலக்கத்தையும் பெற்றுக் கொண்டு வெளியே வரும்போது எங்கிருந்தோ ஒரு கோவில் மணி ஒலிக்கின்றது. அந்த ஓசையைப் பிடித்துக் கொண்டு அங்கு சென்றால் அது ஒரு முருகன் கோவில். அங்கு நன்கு வணங்கி முருகனுக்கு ஒரு அர்ச்சனையும் செய்துவிட்டு தனது கைபேசி மூலம் அருகில் இருக்கும் பல விடுதிகளில் ஒன்றைத் தெரிவுசெய்து அங்கு சென்று தனியறை ஒன்றை எடுத்து அங்கே தனது பெட்டியை வைத்துவிட்டு சிறிது ஒய்வு எடுக்கிறாள். பின்பு நிர்மலா அறையைப் பூட்டிவிட்டு கைப்பையுடன் வெளியே வருகிறாள். அவளது நோக்கமெல்லாம் நகரத்தைத் தாண்டி கொஞ்சம் உள்ளூருக்குள் சென்று ஒரு பாடசாலையை அண்மித்த இடமாக வதிவிடம் பிடிக்க வேண்டும் என்பதுதான். தற்போது நிர்மலாவிடம் போதிய அளவு பணமும் தனக்குப் பெற்றோர் போட்டுவிட்ட நகைகளும் கொஞ்சம் இருக்கின்றன. கைபேசியிலேயே அங்குள்ள பாடசாலைகளைத் தெரிவு செய்து பின் ஒரு வீதியைப் பிடித்து நடந்து செல்கிறாள்.......! மலரும்..........!🍁
  22. தொடருங்கள் சுவி அண்ணா ஆனாலும் இக் காலத்திலும் இப்படி செய்வார்களா என்ற கேள்வி வருகின்றது. முக்கியமாக இக் காலத்தில் எங்கள் சமூகத்தில் இப்படி நடப்பதில்லை அல்லவா? கதை ஊரிலா நிகழ்கின்றது?
  23. - மிகுதி: சரி, விமானம் புறப்படுவதற்கு இன்னும் 2 மணித்தியாலங்கள் உள்ளன. அதற்கிடையில் டுயூட்டி ப்றி (Duty Free) கடை ஒன்றில் நல்ல உடுப்பாக வாங்கி ஜம் மென்று போகலாம் என தீர்மானித்துக் கொண்டேன். புது உடுப்பாக வாங்குவதால், முதல் போட்ட ரீஷேர்ட் இனை விட, சூப்பராக இருக்க வேண்டும். புது உடுப்பாக வாங்குவதால், முதல் போட்ட ரீஷேர்ட் இனை விட அழகாக தோன்ற வேண்டும் புது உடுப்பாக வாங்குவதால், முதல் போட்ட ரீஷேர்ட் இனை விட, பார்த்தவுடன் இவன் கனடா போன்ற முன்னேறிய நாட்டில் வாழ்பவன், முற்போக்கு வாதி, அறிவானவன் ஆழமானவன், அசராதவன் என்றெல்லாம் மற்றவருக்கு தோன்ற வேண்டும். விமானத்துக்கான காத்திருப்பு அறையை விட்டு, மேல் மாடியில் உள்ள டுயூட்டி ப்றி கடைக்கு செல்ல எஸ்கலேட்டரில் (Escalator) ஏறினேன். சின்ன குழந்தை சுச்சா போன மாதிரி, என் ரீஷேர்ட் எல்லாம் ஈரமாகி இருப்பதை பார்த்து சிலர் தமக்குள் சிரித்த மாதிரி தோன்றியது (நல்ல வேளை அணிந்திருந்த டெனிம் காற்சட்டை ஈரமாக தோன்றவில்லை) அதுக்குள் ஒருவர் எஸ்கலேட்டரில் (Escalator) எப்படி இறங்குவது என்று தெரியாமல், ஒரு காலை மேல் படியில் வைத்தவாறு எஸ்கலேட்டரினை கட்டிப் பிடித்தபடி இறங்க முற்பட. அவர் கால்கள் இரண்டும் பப்பரப்பாய் என்று விரிந்து தடுமாறி முழுசிக் கொண்டு இறங்கிக் கொண்டு இருந்ததை பார்த்து "ப்ளடி கன்றி ப்ருட் (country brute)" என் நினைத்தவாறு நமுட்டு சிரிப்புடன் மேலே ஏறினேன். முதல் பத்து கடைகளுக்குள் உள்ளே சென்று பார்த்தால், மருந்துக்கும் கூட அங்கு உடுப்புகள் விற்க இருக்கவில்லை. சரி, அது எப்படி ஒரு உடுப்புக் கடை இல்லாமல், டுயூட்டி ப்றி இருக்கும்.. கட்டாயம் கொஞ்சம் அங்கால இருக்கும் என நினைத்தவாறு எட்டி நோட்டம் இட்டால், வரிசையாக பல கடைகளில் ஆடைகள் தொங்கிக் கிடப்பது போன்று தோன்ற அவற்றை நோக்கி சென்றேன் அவை பெண்களுக்கான ஆடைகள் விற்கும் கடைகள். அப்படியும் இரண்டு கடைகளில் ஆண்களுக்கான உடுப்பு இருக்குது என்று சொல்ல, உள்ளே சென்று பார்த்தால், இருக்கும் ரீஷேர்ட் இல் எல்லாம் இந்தியக் கொடி வரைந்தும், ஐ ல்வ் இந்தியா (I love India) என்ற வசனங்களும் இருந்தன. ஐ லவ் சென்னை / தமிழ் நாடு என்று இருந்திருந்தால் ஒரு கேள்வியும் இல்லாமல் வாங்கி இருக்க முடியும்...ஆனால் ஒரு ஈழத்தமிழனான நான் எப்படி ஐ லவ் இந்தியா என்பதை வாங்க முடியும்? ஒரு ரீஷேர்ட் இல் ஜிகினா பட்டெல்லாம் வைத்து தைத்து இருந்து வெறுப்பேற்றினர் இன்னொரு ரீஷேர்ட் இல் சாயிபாபா சயனித்துக் கொண்டிருந்தார். இறுதியாக கடை ஒன்றில் ஒரு தொப்பி அணிந்த இஸ்லாமியரிடம் என் நிலையை சொல்லிக் கேட்க, தன்னிடம் விற்பதற்கு சில ரீஷேர்ட் உள்ளதாக கூறி ஒவ்வொன்றாக காட்ட, அவற்றிலும் ஐ லவ் இந்தியா போன்ற வாசகங்களும் இந்தியக் கொடியும் பொறிக்கப்பட்டு இருந்தன. அவர் காட்டியதில் கடைசி கடைசியாக ஒரு நீல நிற ரீஷேர்ட் சதுரங்கள் பொறிக்கப்பட்டு ஐ லவ் இந்தியா என்ற வசனம் இல்லாம் இருந்தது. இதையும் வாங்காமல் விட்டால், இனி ஒன்றும் வாய்க்காது என்று சொல்லிவிட்டு பணத்தைக் கொடுத்து (1000 இந்திய ரூபாய்கள்!) வாங்கி, கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்த மாதிரி சந்தோசத்துடன் அருகில் இருந்த ஆண்களுக்கான வொஷ் ரூமிற்கு (Wash Room) ஓடிச் சென்று, போட்டிருந்த ரீஷேர்ட் இனை கழற்றி குப்பை bin க்குள் திணித்து விட்டு, புது ரீஷேர்ட் இனை அணிந்து கொண்டு வெளியே வந்தேன். நான் கடையை விட்டு வெளியே வரவும், Gate open என தகவல் வரவும் சரியாக இருந்தது. பரபரவென ஹாண்ட் லக்கேஜ்ஜினை இழுத்துக் கொண்டு, புது ரீஷேர்ட் போட்ட தெம்பில் எல்லாரையும் ஒரு 'லெவலகாக' பார்த்துக் கொண்டு போர்டிங் பாஸைக் காட்டி விமானத்துக்குள் வந்து அமர்ந்தாயிட்டு. இடையில் ஒரு சிலர் என்னை சற்று உத்துப் பார்த்ததும் புரிந்தது. "அழகண்டா நீ" என்று மனசுக்குள் நினைத்தவாறு மனசு ரிலாக்ஸ் ஆனேன். விமானம் கிட்டத்தட்ட நான்கு மணித்தியாலம் 30 நிமிடம் பறந்து Transit டான கட்டாரில் வந்திறங்கியது. கட்டாரில் இறங்கி, காலைக் கடனை முடித்து, முகத்தை நீரால் அலம்பி பிரஷ்ஷாக்கி விட்டு வர லேசாக பசித்தது. ஆனால் சென்னையில் ஏற்பட்ட அனுபவத்தால், பச்சைத் தண்ணீர் கூட குடிக்காமல், அங்கும் இங்கும் திரியாமல், நேரடியாக காத்திருப்பு அறைக்குள் சென்றேன். அங்கு ஒரு அழகான தமிழ் இளம் பெண், கனடா பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தார். சரியாக அவர் பார்வை என்னில் படும் விதமாக, கதிரை சரியுதா என்று ஒருக்கால் செக் பண்ணி விட்டு போய் அமர்ந்தேன். ஒரு முறை என்னை நிமிர்ந்து பார்த்தார். பின் தலையை குனிந்து விட்டு, சடுதியாக மீண்டும் நிமிர்ந்து என்னையே பல வினாடிகள் உற்றுப் பார்த்தார். உடலில் இரசாயன மாற்றம் நிகழ தொடங்கியது. ஒரு இனம்புரியாத சிரிப்புடன், சற்று ஏளனமாக சிரித்த போன்று சிரித்து விட்டு தலையை குனிந்து கொண்டார். இன்னும் ஒரு தமிழ் வயதான பெண்மணி என்னை உற்றுப் பார்ப்பதும், பின்னர் எதையோ யோசிப்பதும், மீண்டும் என்னை பார்ப்பதுமாக இருந்தார். நான் எழும்பி சற்று நடப்பம் என்று நடக்கும் போது, அங்கு ஒரு பெரிய கண்ணாடி ஒன்று பொருத்தி இருந்ததை அவதானித்து விட்டு அதில் என்று என்னைப் பார்த்தேன். அந்த கண்ணாடி முன் நின்று பார்க்கும் போதுதான் அந்த ரீஷேர்ட் இல் என்ன எழுதி இருந்தார்கள் என்பதும், அந்த சதுரங்களில் என்ன பொறித்து இருந்தார்கள் என்பதும் உறைத்தது. கடும் நீல நிறம். நெஞ்சுப் பகுதியில் ஆங்கிலத்தில் ஒரு வரி எழுதி இருந்தது. அந்த வரி "என் நட்சத்திரம் என்ன சொல்கின்றது (My Star Says...) என்று இருந்தது. அதன் கீழ் ஒரு சதுரப் பெட்டி அந்த சதுரப் பெட்டிக்குள் சில சின்ன சின்ன சித்திரங்கள். சதுர பெட்டியின் கீழ் இன்னொரு வரி. அந்த வரி "நான் தான் அடுத்த பில்கேட்ஸ்" (I will be the next Bill Gates ) என்று இருந்தது. சதுரத்துக்குள் இருந்த சித்திரங்கள், நான் பில்கேட்ஸ் ஆக வருவதற்கான கிரக நிலைகள். முழுக்க முழுக்க சாத்திரம் சம்பந்தமான விடயங்கள் பொறித்த ரீஷேர்ட் அது, தமிழகத்தில் இருந்து ரொரண்டோவுக்கு சாத்திரம் சொல்ல வரும் சாஸ்திரி கூட இப்படி ஒரு ரீஷேர்ட்டை அணிந்து இருக்க மாட்டார். குக்கிராமம் ஒன்றில் இருந்து வரும் பாமரர்கள் கூட இப்படி அணிந்து இருக்க மாட்டார்கள். அவ்வளவு ஏன்.. கொலுவில் வைத்து இருக்கும் பொம்மை கூட இதை விட நல்லா உடுப்பு போட்டு இருக்கும். அந்த இளம் பெண் பார்த்தது ஏளனப் பார்வை என்று புரிந்தது அந்த வயதான தமிழ் பெண்மணி பார்த்தது "இவரிடம் சாத்திரம் கேட்டுப் பார்ப்பமா" என நினைத்து என்பதும் புரிந்தது. அவ்வளவுதான். அப்படியே ஒதுக்கு புறமாக நின்று விட்டு, போர்டிங்க் பாஸ் இனைக் காட்டும் இடத்தில் " 2 நாட்களாக சரியாக நித்திரை கொள்ளவில்லை... எனவே ஓய்வெடுக்க கூடிய சீட் தந்தால் நல்லம்" என்று சொல்லிப் பார்க்க, அவர்கள் (சிங்கள இளைஞர்கள் தான் அங்கு வேலை செய்தனர்), உடனே விமானத்தின் ஆகக் கடைசி சீட்டை ஒதுக்கித் தந்தனர். இந்த சீட்டில் பக்கத்தில் ஒருவர் மட்டுமே அமர்ந்து வருவர். நல்ல இட வசதி கொண்ட சீட். எனக்கு பிடித்தமான சீட் அது. அன்று பக்கத்து சீட்டுக்கு ஒருவரும் வரவில்லை என்பதால் மனசுக்குள் ஒரு நிம்மதி. நல்ல வேளை ஒருவரும் இல்லை. விமானம் புறப்பட்டது 14 மணி நேரம் பறந்து விமானம் ரொரண்டோவில் தரையிறங்கியது. வேகமாக கடவுச் சீட்டை காட்டி விட்டு வெளியே வர, மனைவி என்னை பிக்கப் பண்ண மகளுடன் வந்து இருந்தார். 12 நாட்கள் என்னைக் காணததால் கட்டிப் பிடிக்க ஓடிவந்த என் மகள் அருகே வந்ததும் ஓட்ட்டத்தை நிறுத்தி, மூக்கை சுளித்து "அப்பா...உங்களில் ஏன் இப்படி புளிச்ச பால் மாதிரி Bad smell வருகுது" என்று கேட்டு விட்டு இரண்டடி தள்ளி நகர்ந்தவள் மீண்டும் என்னை பார்த்து " Why you are wearing such an ugly T Shirt" எனக் கேட்டாள் ---------------------------- யாவும் மெய் - மெய்யைத் தவிர வேறோன்றுமில்லை பராபரமே
  24. தொடருங்க சுவி அண்ணா. (இனி மருத்துவச் சான்றிதழ் பெற்றுத் தான் திருமணம் செய்து வைக்கவேண்டும் போல!)
  25. தன்னை வெட்டி வீழ்த்த வந்தவனுக்கும் ஓய்வெடுக்க நிழல் தந்தது மரம்..!
  26. சித்திரவதைக் கூடமாக மாறிய யாழ்ப்பாணக் குடாநாடு செயலில் இறங்கிய அரச பயங்கரவாதம் 1979 ஆம் ஆண்டு ஆடி 13 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் முதன் முதலாக அரச பயங்கரவாதத்தின் முழு வீச்சினையும் கண்டுகொண்டது. நள்ளிரவு வேளை இலக்கத்தகடற்ற இரு வாகனங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிக்கிளம்பின. இவ்வாகானங்களில் அவசரப்பட்டு ஏறிக்கொண்ட பொலீஸ் குழுவொன்று தனது கொலை வேட்டைக்காக பயணித்துக்கொண்டிருந்தது. யாழ்ப்பாண நகருக்கு வெளியே இருந்த நவாலி எனும் சிற்றூரை நோக்கி பிரிட்டிஷ் தயாரிப்பான ஏ - 40 கார்வண்டியொன்று மிக வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. மற்றைய ஜீப் வண்டி யாழ்நகரின் எல்லையில் அமைந்திருந்த, நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட முடமாவடி நோக்கி விரைந்துகொண்டிருந்தது. இன்பம் மற்றும் செல்வம் ஆகிய பெயர்களைக் கொண்ட இரு இளைஞர்களின் வீட்டின் முன்னால் அந்த ஏ - 40 கார் நின்றது. அந்தக் காரிலிருந்து திடு திடுப்பென்று மூன்று பொலீஸ்காரர்கள் காக்கிக் காற்சட்டையும், வெண்ணிற டீ சேர்ர்ட்டுக்களும் அணிந்தபடி இறங்கினர். அந்த இளைஞர்கள் இருவரும் துரையப்பாவின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்தவர்கள். ஆனால், அவர்களை மேலும் விசாரிக்கவேண்டும் என்று கூறி மூன்று பொலீஸ் குண்டர்களும் அவர்களை தமது காரில் இழுத்து ஏற்றினார்கள். பின்னர் அதே பகுதியில் வாழ்ந்துவந்த பாலேந்திரா எனும் இளைஞரையும் அவர்கள் இழுத்து ஏற்றிக்கொண்டார்கள். யாழ்ப்பாணக் குடாநாடு ஜீப் வண்டியில் சென்ற பொலீஸார் முதலில் ஆயுர்வேதக் கல்லூரியில் பயின்றுவந்த இந்திரராஜா எனும் இளைஞரை அவரது வீடு அமைந்திருந்த நல்லூர், பருத்தித்துறை வீதி, இரண்டாம் ஒழுங்கைப் பகுதியில் வைத்து கைதுசெய்து வண்டியில் ஏற்றிக்கொண்டனர். அங்கிருந்து கிளம்பிய அந்தப் பொலீஸ் குழு பின்னர் முடமாவடியில் வாழ்ந்துவந்த தபாலதிபரான செல்வதுரையின் வீட்டிற்குச் சென்றது. பொலீஸாரிடம் பேசிய செல்வதுரை தனது இரு மகன்களான ராஜேஸ்வரனும், பரமேஸ்வரனும் சாவகச்சேரிப் பகுதியில் அவர்களது மனைவிமார்களின் வீட்டில் வசித்து வருவதாகக் கூறினார். அந்த சகோதரர்கள் இருவரும் சோதிடரான சந்திரசேகரத்தின் இரு மகள்களை மணமுடித்திருந்தனர். மறுநாள் காலை பண்ணைப் பாலத்தினருகில் உருக்குலைந்த நிலையில் 27 வயது நிரம்பிய இன்பம் எனப்படு விஸ்வஜோதி இரத்திணம் மற்றும் 29 வயது நிரம்பிய செல்வம் எனப்படும் செல்வரட்ணம் ஆகியோரது உடல்கள் கண்டெடுக்கப்பட்டு யாழ் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டன. அவர்களின் உடல்களில் கடுமையான சித்திரைவதைக் காயங்களும், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களும் காணப்பட்டன. அவர்களின் மண்டையோடுகள் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன. இந்திரராஜா மூன்று நாட்களுக்குப் பின்னர் யாழ் வைத்தியசாலையில் பொலீஸார் கையளிக்கப்பட்ட பின்னர் இறந்துபோனார். அவரது உடலில் இருந்த காயங்கள் அவர் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாகியிருக்கிறார் என்பதைப் பறைசாற்றியது. அவசரகாலச் சட்டத்தின்படி பொலீஸாராலும், இராணுவத்தாலும் கொல்லப்படும் நபர்களின் மரணம் தொடர்பாக எவரும் விசாரிக்கமுடியாது என்கிற கட்டுப்பாடு இருந்தபோதிலும், யாழ் வைத்தியசாலை அதிகாரிகள், பொலீஸாரால் கடுமையான சித்திரவதைகளின் பின் சுட்டும் அடித்தும் கொல்லப்பட்ட இன்பம், செல்வம் மற்றும் இந்திரராஜா ஆகியோரின் மரண விசாரணைகளைச் செய்திருந்தனர். யாழ்ப்பாண நீதவான் இந்திரராசாவின் மரணம் தொடர்பாக 1980 ஆம் ஆண்டு தை 8 ஆம் திகதி வழங்கிய தீர்ப்பில், "உடலில் ஏற்பட்ட பல காயங்களின் விளைவாகவும் அதிர்ச்சியின் காரணமாகவும் இந்திரராசவுக்கு கடுமையான இரத்தப் போக்கும் , இருதயச் செயலிழப்பும், சிறுநீரகப் பாதிப்பும் ஏற்பட்டிருப்பதால் மரணமடைந்திருக்கிறார். பொலீஸாரின் கடுமையான தாக்குதல்களாலேயே இவர் கொல்லப்பட்டிருக்கிறார் என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. இவரது மரணம் ஒரு திட்டமிட்ட கொலை என்று தீர்ப்பளிக்கிறேன்" என்று கூறியிருந்தார். ஏனைய இரு இளைஞர்களான இன்பம், செல்வம் ஆகியோரின் மரண விசாரணை அறிக்கைகளும் இதனையே கூறின. அன்று நள்ளிரவு பொலீஸாரால் கைதுசெய்யப்பட்ட ஏனைய மூன்று இளைஞர்களான ஆர்.பாலேந்திரா, எஸ்.ராஜேஸ்வரன், எஸ்.பரமேஸ்வரன் ஆகியோர் தடயங்களின்றி காணாமலாக்கப்பட்டனர். வடமாகாணத்திலிருந்து காணாமலாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானோரின் பட்டியலில் பாலேந்திராவின் பெயர் இன்னமும் இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. இக்கொலைகள் நடைபெற்று சரியாக இரு நாட்களின் பின்னர் வீரதுங்க யாழ்ப்பாணம் சென்று வடமாகாண இராணுவத் தளபதியாக பொறுப்பெடுத்துக்கொண்டார். தனது நியமனம் கிடைத்த நாளே தனது பிறந்தநாள் என்பதால், அந்நாளில் பதவியேற்பதைத் தவிர்த்துவிட்டார். தனது நியமனத்தையும், பிறந்தநாளையும் வெகு விமர்சையாக அவர் கொண்டாடினார். வீரதுங்க யாழ்ப்பாணத்திற்குச் சென்று பொறுப்பெடுத்தவுடன், தமிழ் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான படுகொலைகள் பலமடங்கு அதிகரித்தன. போராளிகள் என்று சந்தேகிக்கப்படுவோர் கைதுசெய்யப்பட்டு கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். போராளிகள் என்று காட்டிக்கொடுக்கப்பட்ட பல இளைஞர்கள் கொல்லப்பட்டு யாழ்ப்பாணமெங்கும் பொதுமக்களின் கண்களில் படும்படி வீசியெறியப்பட்டனர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இராணுவத்தினரின் விசாரணை என்பது "சித்திரவதைகளின் பின்னர் கொன்றுவிடுவதே" என்று ஆகிப்போனது. பலநூற்றுக்கணக்கான இளைஞர்கள் இக்காலப்பகுதியில் கைதுசெய்யப்பட்டுக் காணாமலாக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் பழைய பூங்காவின் பிற்பகுதியில் இராணுவக் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றினை அப்பகுதி மக்கள் சித்திரவதைக் கூடாரங்கள் என்றே அழைத்துவந்தனர். பத்திரிக்கையாளர்களிடமும், மனிதவுரிமை அமைப்புக்களிடமும் பேசிய சுண்டுக்குளிப் பகுதி மக்கள் இரவுவேளைகளில் இந்த கூடாரங்கள் இருக்கும் பகுதியில் இருந்து அழுகுரல்களும், ஓலங்களும் தொடர்ச்சியாகக் கேட்டு வந்ததாகவும், தமிழ் இளைஞர்கள் வலியினால் துடி துடித்துக் கதறுவதை தாம் பலமுறை கேட்டதாகவும் கூறியிருந்தனர். இந்த அவலங்களால் தாம் மிகுந்த அச்சமுற்று இரவுகளைக் கழித்து வருவதாகவும் கூறினர். யாழ்ப்பாணத்து மக்கள் ஒவ்வொரு காலைகளிலும் உருக்குலைக்கப்பட்ட நிலையில் கொன்று எறியப்பட்ட தமது இளைஞர்களின் உடல்களைக் கண்டனர். யாழ்ப்பாண மக்களை அச்சுருத்தி பணியவைக்கவே இந்தக் கொலைகளை இராணுவத்தினர் செய்துவந்தனர். உருக்குலைக்கப்பட்டு கிடந்த தமிழ் இளைஞர்களின் உடல்களை வெளிப்படையாக பொதுமக்களின் பார்வைக்கு வைத்ததன் மூலம் இராணுவம் தமிழ் மக்களுக்கு கூறிய செய்தி, "போராளி அமைக்களில் இணைந்தாலோ அல்லது அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தாலோ உங்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்பதுதான். பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் வீசி எறியப்பட்ட உடல்கள் அனைத்துமே இறந்திருக்கவில்லை. யாழ்ப்பாணம் டச்சுக் கோட்டைக்கு முன்னால் இருந்து யாழ் சிறைச்சாலை காவலர்களால் கண்டெடுக்கப்பட்டு யாழ்வைத்தியசாலையில் கையளிக்கப்பட்ட ஜெயெந்திரனின் உடலில் இன்னமும் உயிர் இருந்தது. அவர் இன்னமும் கஷ்ட்டப்பட்டு சுவாசித்துக்கொண்டிருந்தார். அவரைப் பரிசோதித்த வைத்தியர் ஜெயெந்திரன் இறக்கவில்லை என்பதனை உறுதிப்படுத்தினார். உடுவில் பகுதியிலிருந்து இராணுவத்தால் கடத்திச் செல்லப்பட்ட ஜெயெந்திரன், மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் அதுலத் முதலியின் விசாரணைக் குழுவின் முன்னால் சாட்சியமளிக்கும் வரை உயிரோடு இருந்தார். அதுலத் முதலியின் விசாரணைக் குழு ஆடி 13 ஆம் திகதி காணமலாக்கப்பட்ட 6 இளைஞர்கள் தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. பொலீஸாரின் கொடூரங்கள் பற்றி அதுலத் முதலியின் குழுவின் முன்னால் சாட்சியமளித்த இன்னொருவர் கொக்குவில் மேற்கைச் சேர்ந்த நகைத் தொழிலாளரான மதியாபரணம் என்பவர். நடுத்தர வயது கொண்டிருந்த மதியாபரணம் அவர்கள் துப்பாக்கிகளைத் திருத்துவதற்கான சட்டரீதியான அனுமதிப் பத்திரத்தைக் கொண்டிருந்தவர். ஆனைக்கோட்டைப் பொலீஸ் நிலையத்தின் துப்பாக்கிகளை அவர் பழுதுபார்த்து வந்தார். அங்கு பணிபுரிந்த பொலீஸ் அதிகாரிகளை அவருக்கு நன்கு தெரிந்திருந்தது. ஒருநாள் இரவு, அவரது நண்பரான சந்திரன் என்பவர் தனது நண்பர் ஒருவரின் பொலீஸாருடனான பிரச்சினை ஒன்றைத் தீர்ப்பதற்கு உதவிநாடி மதியாபரணத்தைச் சந்திக்க வந்திருந்தார். மூவரும் பொலீஸ்நிலையம் நோக்கிச் சென்றபின், சந்திரன் தனது சைக்கிளில் வெளியே காத்துநிற்க மதியாபரணமும், சந்திரனின் நண்பரும் உள்ளே சென்றனர். மதியாபரணமும் சந்திரனின் நண்பரும் தமது வேலை முடிந்து பொலீஸ்நிலையத்திற்கு வெளியே வந்தபோது அங்கே சந்திரனைக் காணவில்லை. அவரது உடல் மறுநாள் செம்மணி சுடலையின் கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருந்தது. மதியாபரணம் இதனை மனிதவுரிமை செயற்பாட்டாளர்களிடமும் அதிகாரிகளிடமும் கூறினார். அவரைப் பழிவாங்க நினைத்த பொலீஸார், அவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்து, அவர் தொடர்ந்தும் தமது அக்கிரமங்கள் பற்றிப் பேசுவதைத் தடுத்தனர். பொலீஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த காலத்தில் ஒருநாள் இரவு தமது ஜீப் வண்டி பழுதடைந்துவிட்டதனால், மதியாபரணத்தை தமது ஜீப் வண்டியத் தள்ளுமாறு பொலீஸார் கேட்டனர். அப்போது ஜீப்பின் பின்பகுதியில் நான்கு உடல்களை அவர் கண்டார். அவற்றுள் ஒன்று ராஜேஸ்வரனுடையது. ஆனால், அவர் இன்னமும் இறந்திருக்கவில்லை. அவரை தனது மடியில் தூக்கிவைத்து காப்பற்ற மதியாபரணம் முனைந்தவேளையில், அவரது மடியிலேயே ராஜேஸ்வரனின் உயிர் பிரிந்தது. இந்தச் சம்பவத்தை மதியாபரணம் அதுலத் முதலியின் ஆணைக்குழுவின் முன்னால் கூறினார். அவர் தொடர்ந்தும் சாட்சியமளிகையில், காணமலாக்கப்பட்ட இளைஞர்களின் உடல்களை பொலீஸார் யாழ்ப்பாணம் கேரதீவுச் சாலையின் பகுதியொன்றில் புதைத்ததாகக் கூறினார். "பொலீஸார், தமிழ் இளைஞர்களின் உடல்களை வீதியின் அருகில் புதைத்துக்கொண்டிருக்கையில், நேரதாமதத்தினால் யாழ்ப்பாணம் - கேரதீவு பேரூந்து அவ்வழியால் வந்துகொண்டிருந்தது. பேரூந்திலிருந்த மக்கள் அனைவரும் வெளியே தலைகளை நீட்டி பொலீஸார் இளைஞர்களைப் புதைத்துக்கொண்டிருப்பதைக் கண்டார்கள். இதனால் கொதிப்படைந்த பொலீஸார் என்னை அங்கேயே விட்டு விட்டு அவசரத்துடன் கிளம்பிச் சென்றார்கள்" என்று அதுலத் முதலியின் குழுவின் முன்னால் கூறினார். ஆனால் மதியாபரணத்தின் வாக்குமூலத்தை உறுதிப்படுத்தமுடியாத தகவல்கள் என்று ஆணைக்குழு ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. ஆகவே, இந்தச் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அதே பொலீஸாரிடம் ஆணைக்குழு கேட்டுக்கொண்டது. இந்த ஆணைக்குழுவின் முக்கிய தோல்வி, ராஜேஸ்வரன் மற்றும் பரமேஸ்வரன் ஆகியோரது காணாமற்போதல்கள் பற்றிய அவர்களது மாமனாரான சந்திரசேகரத்தின் வாக்குமூலத்தை ஆணைக்குழு ஏற்றுக்கொள்ள மறுத்ததுதான். அவர்களின் தந்தையாரான செல்வதுரையின் வாக்குமூலத்தினை ஆணைக்குழு ஏற்றுக்கொண்டாலும் கூட, அவரது பிள்ளைகள் இருவரும் கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டது சாவகச்சேரியிலிருந்த அவர்களது மாமனாரின் வீட்டில் இருந்துதான் என்பதும், இதற்கு அவர்களது மாமனாரே கண்ணால் கண்ட சாட்சியம் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆணைக்குழு முன்னால் சந்திரசேகரம் வாக்குமூலமளிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாம் வேண்டுமென்றே தடுக்கப்பட்டன. சாவகச்சேரிப் பாராளுமன்ற உறுப்பினரான வி.என். நவரட்ணத்தை சந்திரசேகரம் இதுகுறித்து உதவுமாறு கோரி அணுகியபோது, "இது என்னுடைய பிரச்சினையில்லை, நான் தலையிட முடியாது" என்று கூறி கையை விரித்துவிட்டார். அதுலத் முதலியின் ஆணைக்குழுவில் சிவசிதம்பரம் ஒரு உறுப்பினராக இருந்தபோதும் ஜெயாருடன் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கு உருவாகி வந்த நட்பைப் பாதித்து விடும் என்பதனால சந்திரசேகரத்தின் வாக்குமூலத்தை ஏற்றுக்கொள்ளவைக்க எந்த முயற்சியிலும் அவர் ஈடுபட விரும்பவில்லை.
  27. தமிழர்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் லலித் அதுலத் முதலியின் மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட இத்தடைச் சட்டத்தில் பயங்கரவாதம் எனும் சொற்பதத்திற்கான விளக்கம் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டது. இங்கிலாந்துச் சட்டத்தின் படி பயங்கரவாதம் எனும் சொல்லிற்கு பின்வருமாறு விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது, "அரசியல் ரீதியிலான முடிவுகளை நோக்கி நடத்தப்படும் வன்முறைகள்". இலங்கை உருவாக்கிய 1979 இல் உருவாக்கிய சட்டம் முன்னர் உருவாக்கப்பட்ட சட்டத்திற்கான திருத்தங்கள் என்று மட்டுமே கூறியிருந்தது. இச்சட்டத்தின்படி குற்றங்களும் தண்டனைகளும் பின்வருமாறு பட்டியலிடப்பட்டிருந்தன, தமிழ் மக்கள் மேல் குரூரமான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டிருந்த இந்தச் சட்டத்தின் சில பகுதிகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன், 1. ஒரு குறித்த நபருக்கு மரணத்தை விளவிக்கும் அல்லது ஒரு குறித்த நபரைக் கடத்தும் அல்லது ஒரு குறித்த நபர் மீது தாக்குதலை நடத்தும் எந்த ஒரு நபரும் குற்றத்தடுப்புச் சட்டத்தின்படி மரண தண்டனையினை அல்லது 7 வருடங்களுக்குக் குறையாத சிறைத்தண்டனையினைப் பெற்றுக்கொள்வார். 2. ஒரு குற்றத்திற்கான சாட்சியாக இருக்கும் ஒரு நபரை கொல்லும் அல்லது கடத்திச் செல்லும் அல்லது அந்தச் சாட்சி மீது தாக்குதல் நடத்தும் எவரும் குற்றத்தடுப்புச் சட்டத்தின் பிரகாரம் மரண தண்டனையினை அல்லது 7 வருடங்களுக்குக் குறையாத சிறைத்தண்டனையினைப் பெற்றுக்கொள்வார். 3. ஒரு குறித்த நபருக்கு அச்சுருத்தல் விடுப்பது அல்லது சாட்சியொன்றிற்கு அச்சுருத்தல் விடுப்பது, அரச சொத்துக்களைக் கொள்ளையடிப்பது, திணைக்களங்கள், பொதுமக்கள் கூட்டுத்தாபனங்கள், வங்கிகள், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் ஆகியவற்றைக் கொள்ளையடிப்பது, அல்லது இந்த அரச சொத்துக்களைக் கையாடுவது, சட்டத்திற்குப் புறம்பான வகையில் ஆயுதங்களை, தோட்டாக்களை, வெடிமருந்துகளை, அவற்றின் உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்வது அல்லது தயாரிப்பது மற்றும் இவற்றினைப் பாவிப்பது அல்லது பாவிப்பதற்கு உத்தேசித்திருப்பது , பாதுகாப்புப் பகுதியொன்றில் ஆயுதங்களை, வெடிபொருட்களை, உதிரிப்பாகங்களை வைத்திருப்பது, அவற்றைப் பாவிப்பது அல்லது பாவிக்க உத்தேசித்திருப்பது, 4. இனங்கள், மதங்கள், சமூகங்களுக்கெதிரான வார்த்தைகளை, சொற்களை, பிரசுரங்களை இனங்களுக்கிடையே பகைமையினை வளர்க்கும்படி பாவிப்பது, அல்லது பாவிக்க உத்தேசித்திருப்பது 5. சட்டத்திற்குப் புறம்பான வகையில் பெருந்தெருக்கள், வீதிகள், பொதுமக்கள் பாவிக்கும் சொத்துக்களில் இருக்கும் அறிவிப்புப் பலகைகள் உள்ளிட்ட ஏனைய அறிவித்தல்களை அழிப்பது, மாற்றம் செய்வது, சேதப்படுத்துவது, 6. குற்றச்சாட்டிற்குள்ளான ஒரு நபரை மறைத்துவைப்பது அல்லது அவர கைதுசெய்யப்படுவதைத் தடுப்பது அல்லது கைது நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிப்பது, ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபடும் எந்த ஒருவரும் இச்சட்டத்தின்படி தண்டணைக்குள்ளாவார். 7. இவ்வாறு குற்றவாளிகளால் இலக்குவைக்கப்படும் குடிமக்கள் நாட்டின் ஜனாதிபதியாகவோ, பிரதம மந்திரியாகவோ, அமைச்சர்களாகவோ, பாராளுமன்ற உறுப்பினர்களாகவோ, உள்ளூர் அதிகாரிகளாகவோ, இராணுவம் மற்றும் பொலீஸ் உறுப்பினர்களாகவோ, சட்டத்துறையில் செயலாற்றுபவர்களாகவோ இருப்பர். இதற்குத் தண்டனையாக மரண தண்டனையினை அல்லது 7 வருடங்களுக்குக் குறையாத சிறைத்தண்டனையினைப் பெற்றுக்கொள்வார். 8. சட்டத்தின் பகுதி 2 மற்றும் பகுதி 3 இன் அடிப்படையில் குற்றச்செயல்களில் ஈடுபடும் ஒருவரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும். இந்த குற்றவாளியால் ஏற்படுத்தப்பட்ட அனைத்துக் கொடுக்கல் வாங்கல்களும் முறையற்றவை என்று பிரகடணப்படுத்தப்படும். 9. ஒரு நபர் குற்றமொன்றைச் செய்யவிருக்கிறார். அல்லது குற்றத்தைச் செய்துவிட்டார் என்று தெரிந்தும் அதனை மறைத்தல், அவரது நகர்வுகளை அதிகாரிகளுக்கு வழங்க மறுத்தல், குற்றவாளியினது மறைவிடங்கள் பற்றிய தகவல்களை வழங்க மறுத்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஏழு வருடங்களுக்கு உட்பட்ட வகையில் சிறைத்தண்டனை வழங்கப்படும். 10. மேலும், குற்றச்செயல்களில் ஈடுபடும் தனிநபரோ, அமைப்போ, நிறுவனமோ இதேவகையான தண்டனைக்கு உள்ளாகும். தமிழ் மக்களை இலக்குவைத்தே இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது என்பதை நன்றாகத் தெரிந்திருந்தும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, இச்சட்டத்தினை எதிர்க்க முன்வராமல் மெளனம் காக்கத் திட்டமிட்டது. முன்னணியினருக்கு தனது மகிழ்வான முகத்தை அப்போது காட்டிக்கொண்டிருந்த ஜெயவர்த்தனவைக் கோபப்பபடுத்திப் பார்க்க முன்னணியின் எந்த உறுப்பினரும் தயாராக இருக்கவில்லை. இச்சட்டம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு எதிர்ப்பதை விடுத்து, விவாதத்தில் கலந்துகொள்ளாது விடுவதன் மூலம் ஜெயாரை சாந்தப்படுத்திய முன்னணியினர், தமிழ் இளைஞர்களைச் சாந்தப்படுத்த இச்சட்டத்தினை விமர்சித்து அறிக்கையொன்றினை மட்டும் வெளியிட்டனர். மேலும், தமது கட்சியின் மத்திய குழுவில்க் கூட இச்சட்டம் பற்றிய விவாதங்களை நடத்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைமை மறுத்துவிட்டது. ஆனால், பாராளுமன்றத்தில் இச்சட்டத்தினை எதிர்க்கட்சியாகவிருந்த சுதந்திரக் கட்சி எதிர்த்து வாக்களித்தது. வெறும் 8 உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்த அக்கட்சியினால் இச்சட்டத்தினைத் தடுத்து நிறுத்தவியலாமல்ப் போய்விட்டது. இந்தக் கொடூரமான சட்டம் நாட்டிலிருந்த மனிதவுரிமைகள் செயற்ப்பாட்டாளர்களினதும், பல நீதிபதிகளினதும் கண்டனத்திற்குள்ளானது. கண்டனத்துக்குள்ளாக்கப்பட்ட இச்சட்டத்தின் சில பகுதிகளாவன, 1. பொலீஸாருக்கு வழங்கப்பட்ட வாக்குமூலங்கள் சாட்சியமாகப் பாவிக்கப்படக்கூடியன. 2. குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் வைத்திருந்த எந்தப் பொருளும், ஆவணமும் அவருக்கெதிராக சாட்சியமாகப் பாவிக்கப்படும். 3. ஒருவர் குற்றவாளியாக இருக்கலாம் என்று அமைச்சர் சந்தேகப்படுமிடத்து, அந்த நபர் குறைந்தது 18 மாதங்களுக்கு விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட முடியும்.
  28. ஜெயவர்த்தனவிடம் அடைக்கலமாகிப்போன அமிர்தலிங்கமும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும் தமிழருக்கான சுயநிர்ணய உரிமையினை மார்க்ஸிச - லெனினிஸக் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கவேண்டும் அல்லது வேண்டாம் என்கிற பாரிய சர்ச்சையொன்று தமிழ் மற்றும் சிங்கள இடதுசாரி அறிவுஜீவிகள் மத்தியில் ஏற்பட்டிருந்தது. சிங்கள இடதுசாரிகளைப் பொறுத்தவரை தமிழர்கள் சுயநிர்ணய உரிமைக்குத் தகுதியுடையவர்கள் ஆனபோதும் கூட நாட்டைப் பிரித்து தனியான நாடொன்றினை உருவாக்கும் நிலைப்பாட்டை அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். பாலசிங்கம் தனது இரண்டாவது பிரசுரத்தில் இவ்வாறு எழுதினார், "சோசலிசத் தமிழீழம் நோக்கி". அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட மக்கள் என்கிற வகையில் தமிழர்கள் பிரிந்துசெல்வதற்கு உரித்துடையவர்கள் என்று அவர் எழுதினார். தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இப்புத்தகத்தின் பிரதியொன்று பிரபாகரனுக்கும் கிடைத்தது. பாலசிங்கம் எழுதிய இப்புத்தகத்தை பிரபாகரன் படித்தபோது அதன்பால் மிகுந்த ஈடுபாடு கொண்டதாக "சுதந்திர வேட்கை" எனும் புத்தகத்தில் பாலசிங்கத்தின் துணைவியார் அடேல் பாலசிங்கம் குறிப்பிடுகிறார். பாலசிங்கத்தின் தாத்துவார்த்த ரீதியிலான ஆய்வுகள் லண்டனில் இயங்கிவந்த புலிகளின் செயற்பாட்டாளர்களான கிரிஷ்ணன், ஆர் ராமச்சந்திரன் (அன்டன் ராஜா) ஆகியோருடன் அன்டன் பாலசிங்கம் நெருங்கிப் பழகும் வாய்ப்பினை ஏற்படுத்தியிருந்தது. பாலசிங்கத்தை அடிக்கடி சந்தித்துக்கொண்ட இவர்கள், புலிகளின் செயற்பாடுகள் குறித்து அவருக்குத் தொடர்ச்சியாக அறிவூட்டியும் வந்தார்கள். அத்துடன் தமது அறிக்கைகள், துண்டுப்பிரசுரங்கள் ஆகியவற்றை வெளியிடுவதற்கு பாலசிங்கத்தின் உதவியினையும் நாடத் தொடங்கினார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்த்துறை, உலக இளைஞர் மாநாட்டில் தமிழரின் போராட்டம் தொடர்பான அறிக்கையொன்றினை வெளியிடத் தீர்மானித்தது. இதற்கு பாலசிங்கத்தின் உதவியை உமா மகேஸ்வரன் நாடினார். பாலசிங்கம் எழுதிய அந்த அறிக்கை ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, ஜேர்மனிய, போத்தூகேய மற்றும் தமிழ் மொழி ஆகிய ஆறு மொழிகளில் வெளியாகியது. இந்த அறிக்கை, மாநாட்டிற்கு வந்திருந்த அனைத்துலகப் பிரதிநிதிகள், இராஜதந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் போன்ற பலதரப்பட்டவர்களுக்கும் விநியோகிக்கப்பட்டது. போரும் சமாதானமும் விளையாட்டு புலிகளை சர்வதேச அளவில் பிரபல்யப்படுத்தும் உமா மகேஸ்வரனின் திட்டம் தொடர்ந்தும் செயற்படுத்தப்படுவதில் சிக்கல்கள் தோன்றியது. 1979 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையில் இலங்கையில் தோன்றியிருந்த கருத்து வேறுபாடே இதற்குக் காரணமாக அமைந்தைருந்தது. காளைமாடு - வீரதுங்க எதிர்க்கட்சியினருடன் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் சேர்ந்தால் தமிழருக்கெதிரான இன்னொரு வன்முறைக் கலவரத்தை உருவாக்குவேன் என்று அச்சுருத்தி, அந்த முயற்சியைத் தவிடு பொடியாக்கியிருந்த ஜெயவர்த்தன, தனது போர் விளையாட்டுக்களை முன்னெடுப்பதில் உறுதியுடன் செயற்படத் தொடங்கினார். 1979 ஆம் ஆண்டு ஆடியில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அவர் நடைமுறைப்படுத்தினார். இந்தச் சட்டம் பாராளுமன்றத்தால் ஆடி 20 ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1979 ஆம் ஆண்டின் இறுதிக்குள் வடமாகாணத்திலிருந்து தீவிரவாதத்தை முற்றாக அழித்துவிடவேண்டும் என்கிற கட்டளையுடன் தனது மருமகனான, "காளை மாடு" என்றழைக்கப்பட்ட திஸ்ஸ வீரதுங்கவை வடமாகாணத்திற்கான இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியாக அவர் ஆடி 14 இல் நியமித்தார். ஜெயவர்த்தன, காளைமாட்டு வீரதுங்கவிற்கு இட்ட ஆணை இவ்வாறு கூறியிருந்தது "தீவிரவாதத்தையும், அதன் அனைத்து விதமான வடிவங்களையும் இந்த நாட்டிலிருந்து, குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து, நாட்டின் அனைத்துச் சட்டங்களின் பிரகாரம் முற்றாக அழித்தொழிப்பதற்கு நீர் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருக்கிறீர். இந்நாட்டின் சட்டத்தை மதிக்கும் அனைத்து மக்களையும் உமது இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். உம்மால் மேற்கொள்ளப்படும் இந்த பயங்கரவாத அழிப்பு நடவடிக்கை 1979 ஆம் ஆண்டு மார்கழி 31 ஆம் திகதிக்குள் முற்றுப்பெறவேண்டும்". வீரதுங்கவின் இராணுவ நடவடிக்கைக்கு ஏதுவாக ஆடி 12 ஆம் திகதி, யாழ்ப்பாண மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் சரத்து 14 இனைப் பாவித்து அவசரகால நிலைமையினை ஜெயவர்த்தன பிரகடணப்படுத்தினார். இந்தச் சட்டத்தின் மூலம் சந்தேகத்திற்கிடமான எவரையும் உடனேயே சுட்டுக் கொல்லும் அதிகாரமும், அவர்களது உடல்களை விசாரணையின்றி எரித்துவிடும் அதிகாரமும் பொலீஸாருக்கும், இராணுவத்தினருக்கும் வழங்கப்பட்டது. பொலீஸாரினதும், இராணுவத்தினதும் மதிப்பீட்டின்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் இயங்குவதாகக் கணிக்கப்பட்ட சுமார் 200 போராளிகளுக்கெதிராகவே ஜெயவர்த்தனவின் இந்த இராணுவ நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது. தமிழ் பொலீஸ் பரிசோதகர் குருசாமியின் இழப்பிற்குப் பின் யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த பொலீஸ் உளவுப்பிரிவு சரிவைச் சந்தித்திருந்தது. அதேவேளை, பலாலி இராணுவ முகாமில் கப்டன் முனசிங்க தலைமையில் உருவாக்கப்பட்டு வந்த இராணுவப் புலநாய்வுப் பிரிவு செயற்படும் நிலைக்கு வந்திருந்ததுடன், அப்பிரிவு யாழ்ப்பாண இராணுவத் தளபதி பிரிகேடியர் ரணதுங்கவின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கத் தொடங்கியது. இராணுவம் முறுக்கேற்றப்பட்ட நிலையிலும், அந்த இராணுவ நடவடிக்கைகளுக்கான சட்டப் பாதுகாப்புக்கள் பலமாக இடப்பட்ட நிலையிலும், ராணுவ தீர்வில் வெகு இறுமாப்புடன் இருந்த ஜெயவர்த்தன, தனது கவனத்தை அரசியல்க் களம் நோக்கித் திருப்பத் தொடங்கினார். தன்னால் அடிபணியவைக்கப்பட்ட அமிர்தலிங்கத்தையும், அவரது தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும் தொடர்ந்தும் தமிழருக்கெதிரான கலவரம் பற்றி அச்சத்தில் வைத்திருக்க தனது பிரதமரான ரணசிங்க பிரேமதாசாவை ஜெயவர்த்தன பாவித்தார். இந்தச் செய்தியை பதியும்படி நான் பணிக்கப்பட்டிருந்தேன். நான் அமிர்தலிங்கத்துடனும் சிவசிதம்பரத்துடனும் பல சந்திப்புக்களில் கலந்துகொண்டேன். அவர்கள் மிகுந்த பதற்றத்துடனும், அதேவேளை கவலையுடனும் காணப்பட்டார்கள். "தமிழர்களால் இனியொரு இனக்கலவரத்தைச் சந்திக்க முடியாது" என்று அவர்கள் என்னிடம் திரும்பத் திரும்பக் கூறினார்கள். இனங்களுக்கிடையிலான பதற்றநிலையினைத் தவிர்ப்பதற்கு இருபகுதியினரும் இணைந்து சில நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று பிரேமதாச முன்னணியினரிடம் ஆலோசனை கூறினார். அதற்கு உடனடியாகவே அமிர்தலிங்கம் ஒப்புக்கொண்டார். பாராளுமன்றத்தின் பிரதமரின் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தின் பின்னர் பிரேமதாசவுடன் இணைந்து அறிக்கையொன்றினை முன்னணியினர் தயாரித்தனர். நாட்டு மக்களிடம் முன்வைக்கப்பட்ட அந்த வேண்டுகோள் இப்படிக் கேட்டிருந்தது, "நாம் இந்த நாட்டு மக்களிடம் வேண்டுவது யாதெனில், தீய சக்திகளின் வதந்திகளாலும், நடவடிக்கைகளாலும் ஆட்கொள்ளப்பட்டு விடாது, அமைதியையும் நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதுதான். பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அனைத்து அரசியல், மதத் தலைவர்கள், சமூக சேவைகள் அமைப்புக்கள் ஆகியோரிடமும் நாம் மக்களிடையே அமைதியையும் சமாதானத்தையும், சட்டம் ஒழுங்கினையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த தம்மாலான சகலதையும் செய்யவேண்டும் என்றும், தமது தேர்தல்த் தொகுதிகள், கிராமங்கள் மட்டத்தில் வதந்திகள் பரவுவதைத் தடுத்து மக்களுக்கும் சொத்துக்களுக்கும் சேதம் விளைவதைத் தடுக்க வேண்டும் என்றும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்" "தமது சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக பதற்றமான சூழ்நிலையினை உருவாக்கி மக்கள் மீது இனரீதியான வன்முறைகளை ஏவிவிடக் காத்திருப்போரிடமிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கும் நாம் எம்மாலான சகலதையும் செய்வோம் என்று உறுதியெடுக்கிறோம்". "எமது நாட்டை உலுக்கிவரும் பிரச்சனைகள் அனைத்திற்கும் சமாதான ரீதியில் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று திடமாக நம்பும் அதேவேளை, அரசியல் லாபத்திற்காக சில விஷமிகள் விரித்துவரும் வலையில் சிக்கிக்கொள்ளவேண்டாம் என்றும் மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்" "நாகரீகமடைந்த மக்கள் கூட்டம் என்கிற வகையில், எமக்குள் ஏற்பட்டிருக்கும் பிணக்குகளை சமாதான வழிகளில் எம்மால் தீர்த்துக்கொள்ள எமது மதங்களோடு இணைந்த பாரம்பரியங்கள் எமக்கு எப்போதும் துணைநிற்கும் என்பதை நாம் சர்வதேசத்திற்குப் பாடமாக எடுத்துக் கூறுவோம்". இந்த ஒருங்கிணைந்த வேண்டுகோளிற்கே ஒரு அரசியல்க் காரணம் இருந்தது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை எப்படியாவது தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஜெயவர்த்தன முயன்று வந்தார். பயங்கரவாதத் தடைச் சட்டம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவிருந்த ஆடி 19 ஆம் திகதி, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உருவாக்கம் பற்றிக் கலந்துரையாடுவதற்கு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும், எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சிக்கும் அழைப்பு விடுத்தார் ஜெயவர்த்தன. இந்த அழைப்பினை உடனடியாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஏற்றுக்கொள்ள, எதிர்க்கட்சியோ அழைப்பை நிராகரித்திருந்தது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தனது அழைப்பிற்குச் சாதகமாகப் பதிலளித்ததையடுத்து, அதற்குப் பிரதிபலனாக ஜெயார் சில விடயங்களைச் செய்யப்போவதாக அறிவித்தார். வவுனியாவில் சிங்களவர்கள் பெரும்பான்மையினராக வாழும் மூன்று உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளை அநுராதபுரம் மாவட்டத்துடன் இணைத்துக்கொள்ளும் தனது முடிவினை நடைமுறைப்படுத்தப்போவதில்லை எனும் அறிவிப்பு மற்றும் லலித் அத்துலத் முதலி தலைமையில் உருவாக்கப்படும் பாராளுமன்றத் தெரிவிக்குழுவினூடாக யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட இளைஞர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை செய்யப்போவதாக ஜெயவர்த்தன முன்னணியினரிடம் தெரிவித்தார். ஜெயவர்த்தனவை எப்படியாவது மகிழ்வித்துவிட வேண்டும் என்று தீவிரம் காட்டிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தாம் அதுவரை பகிஷ்கரித்து வந்த பாராளுமன்ற அமர்வுகளில் இனிக் கலந்துகொள்ளப்போவதாக அறிவித்தது. தனது போர் விளையாட்டு வெற்றிபெற்று வருவது கண்டு பூரிப்படைந்த ஜெயவர்த்தன, தமிழர்களுக்கு நீதிவழங்கத் தான் தயாராக இருப்பதாகவும், பேராசிரியர் ஏ.ஜே.வில்சனுடனான தனது கலந்துரையாடல்களின் அடிப்படியில் மாவட்ட அதிகார சபைகள் தொடர்பாக விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றினை நியமிக்கப்போவதாகவும் அறிவித்தார். இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் ஏ.ஜே. விஜேகோனும், ஏனைய உறுப்பினர்களாக கலாநிதி. ஏ.ஜே. வில்சன், கலாநிதி. ஜே.ஏ.எல். குரே, கலாநிதி நீலன் திருச்செல்வம் மற்றும் ஏ.சி.எம்.அமீர் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். இது ஜெயவர்த்தனவின் மிகச்சிறந்த தந்திர நகர்வாகக் கருதப்பட்டது. இதன்மூலம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை தனது அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக அவர் வரிந்துகொண்டார். இதன்மூதல் தமிழ்ப் போராளிகளுக்கும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும் இடையே நிரந்தரப் பிரிவை அவர் உருவாக்கினார். இதன்மூலம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முற்றான தோல்வியையும் அவர் உறுதிப்படுத்தினார்.
  29. பாலா அண்ணா இந்த இளைஞர் விழா நிகழ்வினைத் தமக்குச் சாதகமாகப் பாவித்த புலிகள் தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றிய துண்டுப்பிரசுரங்களை அங்கு வந்திருந்த வேறு நாட்டு இளைஞர்களிடம் விநியோகித்தனர். இந்தத் துண்டுப் பிரசுரம் அன்டன் ஸ்டனிஸ்லோஸ் பாலசிங்கம் எனும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆனால் வெளிநாடொன்றில் வாழ்ந்துவந்த இளைஞர் ஒருவரால் எழுதப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் வீரகேசரி பத்திரிக்கையின் உதவி ஆசிரியராகவும் பின்னர் கொழும்பில் இயங்கிவந்த பிரித்தானியாவின் உயர்ஸ்த்தானிகராலயத்தின் மொழிபெயர்ப்பாளராகவும் செயற்பட்டு வந்தவர் அன்டன் பாலசிங்கம். பின்னர் தனது குடும்பத்துடன் லண்டனுக்கு புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் காலத்தில் அவரது துணைவியார் கடுமையான சிறுநீரகக் கோளாறினால் மரணமானார். அதன்பிறகு, அவுஸ்த்திரேலியாவைச் சேர்ந்த தாதியான அடேலை பாலசிங்கம் மணமுடித்தார். இவர்கள் இருவரும் லண்டன் பலகலைக் கழகத்தில் சமூகவியல் கற்கை நெறிக்கான காலத்தில் சந்தித்திருந்தனர். வட்டுக்கோட்டைத் தீர்மானம், தனிநாடொன்றினை உருவாக்குவதற்கான மக்கள் ஆணை, 1977 ஆம் ஆண்டுத் தேர்தல், அதன்பின்னரான தமிழர் மீதான வன்முறைகள், புலிகளின் வெளிப்படுத்தல், அவ்ரோ விமானம் மீதான தாக்குதல் ஆகிய விடயங்கள் லண்டனில் வாழ்ந்துவந்த பல தமிழ் இளைஞர்களை உற்சாகப்படுத்தியிருக்க , அவர்கள் 33 வயது நிரம்பிய, தமது பல்கலைக்கழகத்தின் மூத்த மாணவரான பாலாவைச் சூழ்ந்துகொண்டு ஊர் நிலவரங்கள் பற்றிப் பேசத் தொடங்கினர். அந்த இளைஞர்களில் ஒருவரான ஞானசேகரன் தமிழர்களின் பிரச்சினை குறித்து கட்டுரை ஒன்றை வரையும்படி பாலாவைக் கேட்டார். அவர் கேட்டுக்கொண்டதன்படியே பாலா செய்தார். பாலா எழுதிய துண்டுப்பிரசுரம் இப்படிக் கூறியது, "தமிழ்த் தேசியப்பிரச்சினை தொடர்பாக". பாலசிங்கத்தின் இந்த முயற்சி அவரை லண்டனில் வாழ்ந்துவந்த புலிகளியக்க தொடர்பாளர்கள் மற்றும் ஈரோஸ், டி.எல்.ஒ ஆகிய ஏனைய அமைப்பின் செயற்பாட்டாளர்களுடனும் நெருக்கத்தை ஏற்படுத்த உதவியது.
  30. கியூபாவிற்குச் சென்ற புலிகள் போராளி அமைப்புக்களின் முக்கியஸ்த்தர்கள் அமிர்தலிங்கத்தின் பேச்சிற்கு மதிப்புக் கொடுத்து வந்த நிகழ்வுகள் 1977 ஆம் ஆண்டுத் தேர்தலின் பின்னரும் நடந்தது. இந்தப் போராளி அமைப்புக்களின் தலைவர்களுள் பிரபாகரனே அனைவராலும் அதிகம் நேசிக்கப்பட்டார். மங்கயற்கரசி என்னிடம் ஒருமுறை பேசும்போது "பிரபாகரன் எங்களின் மகன்களில் ஒருவராக எங்களுக்குத் தெரிந்தார்" என்று கூறினார். " அவர் எமது வீட்டிற்கு வரும்போதெல்லாம் நான் அவர் விரும்பி உண்ணும் கோழிக்கறியைச் சமைப்பேன். அவர் எம்மிடமிருந்து விடைபெற்றுச் செல்லும்போது எனது மகன்களை முத்தமிடுவது போல அவரையும் முத்தமிட்டே அனுப்பிவைப்பேன்" என்று அவர் கூறினார். அமிர்தலிங்கத்தின் பிரத்தியேக காரியாதிரிசியான ஆர். பேரின்பநாயகம் பேசும்போது, பிரபாகரன் தமிழ்நாட்டில் தங்கியிருந்த நாட்களில் அவரைச் சந்திக்கச் செல்லும்போது அவருக்குப் பிடித்தமான கோழி இறைச்சிப் பொறியலை மங்கையற்கரசி எடுத்துச் செல்வது வழமை என்று கூறினார். அமிர்தலிங்கத்தின் வெள்ளிவிழா கொழும்பில் 2003 ஆம் ஆண்டு ஆவணி 24 ஆம் திகதி நடைபெற்றபோது பேசிய மங்கையற்கரசி பிரபாகரன் மீது தான் வைத்திருந்த பாசம் குறித்துப் பேசத் தவறவில்லை. அமிர்தலிங்கமும் பிரபாகரனை மிகவும் அன்புடனேயே நடத்தி வந்தார். பதிலுக்கு பிரபாகரன் அமிர்தலிங்கத்தைப் பெரிதும் மதித்து நடந்துவந்தார். 1981 ஆம் ஆண்டு ஜெயவர்த்தனவின் மாவட்ட சபை மந்திரிப்பொறுப்புக்கள் எனும் பொறிக்குள் அமிர்தலிங்கமும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் விழும்வரை இந்த உறவு மாறாமலேயே இருந்து வந்தது. அமிர்தலிங்கத்தைப் பலப்படுத்துவதன்மூலம் பிரபாகரனைப் பலவீனமாக்குவதற்குப் பதிலாக, ஜெயவர்த்தனா அமிர்தலிங்கத்தைப் பலவீனப்படுத்தி பிரபாகரனைப் பலப்படுத்தியிருந்தார். இதுவே இலங்கையின் சரித்திரத்தில் திருப்புமுனையாக அமைந்தது. இதுபற்றிய தகவல்கள் இனிவரும் அத்தியாயங்களில் பேசப்படும். கியூபா நான் முன்னர் குறிப்பிட்டதுபோல, கியூபாவிற்குச் சென்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் தூதுக்குழுவில் புலிகளின் உறுப்பினர்களும் இடம்பெற்றிருந்தனர். 1979 ஆம் ஆண்டு கியூபாவின் ஹவானாவில் உலக மாணவர் மற்றும் இளைஞர்களுக்கான விழா நடந்திருந்தது. இந்த விழாவிற்கு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனைக் கேள்விப்பட்ட உமா மகேஸ்வரன் அமிர்தலிங்கத்தை அணுகி இக்குழுவில் புலிகள் அமைப்பின் மூன்று உறுப்பினர்களையும் இணைத்துக்கொள்ள முடியுமா என்று கேட்டார். 1977 ஆம் ஆண்டு புலிகளுக்கும் முன்னணிக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் ஒப்பந்தம் ஒன்றிற்கு அமைவாக முன்னணியின் அரசியல்த் தலைமையின் கீழ் இரகசிய ஆயுத அமைப்பாக புலிகள் இயங்குவார்கள் என்றும், அதற்குப் பதிலாக சர்வதேசத்து விடுதலை அமைப்புக்களிடமிருந்து பணம் முதலான உதவிகளைப் புலிகள் பெற்றுக்கொள்ள அமிர்தலிங்கம் உதவ ஒத்துக்கொண்டதாகவும் தெரியவருகிறது. ஆகவே, இவ்வாறான் இளைஞர் நிகழ்வொன்றிற்குச் செல்வதன் மூலம் ஏனைய கெரில்லா அமைப்புக்களின் பரிட்சயமும் தமக்கு ஏற்படும் என்று உமா அமிர்தலிங்கத்திடம் கூறியிருக்கிறார். இதுபற்றி பின்னர் நடந்த விசாரணைகளில் அரசை ஏமாற்றி புலிகளையும் தமது தூதுக்குழுவில் முன்னணியினர் அனுப்பியிருந்தனர் என்று பொலீஸார் குற்றஞ்சாட்டியுமிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. புலிகளின் இந்த வேண்டுகோளினை அமிர்தலிங்கம் ஏற்றுக்கொண்டார். மாவை சேனாதிராஜாவை தமது தூதுக்குழுவின் இளைஞர் அமைப்பின் தலைவராகவும் காசி ஆனந்தனை தமிழர் ஐக்கிய முன்னணியின் பிரதிநிதிகளின் தலைவராகவும் அமிர்தலிங்கம் நியமித்தார். தூதுக்குழுவின் ஏனைய மூன்று இடங்களையும் சிங்கநாயகம், சாந்தன் மற்றும் யோகேஸ்வரன் ஆகிய புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் நிரப்பினர். இது முன்னணிக்குள் சில கசப்புணர்வுகளை ஏற்படுத்தி விட்டிருந்தது. முன்னனியின் பிரதிநிதியாக இந்த நிகழ்விற்குச் செல்ல விரும்பிய வண்ணை ஆனந்தனுக்கு புலிகள் தமது குழுவில் இடம்பெற்றது மகிழ்வைக் கொடுக்கவில்லை. ஹவானாவில் இடம்பெற்ற விழா நிகழ்வின் போது காசி ஆனந்தன் தமிழில் கவிதை ஒன்றைப் படித்தார், பலமான சொண்டுகள் கொண்ட பறவைகள் நாங்கள் நாம் பாடுவதிலிருந்து தடுக்கப்பட்டிருக்கிறோம் அழகான சிறகுகள் கொண்ட பறவைகள் நாங்கள் ஆனால் பறப்பதிலிருந்து தடுக்கப்பட்டிருக்கிறோம் கூண்டில் அடைக்கப்பட்ட அடிமைகள் நாங்கள்
  31. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் தூதுக்குழுவில் இடம்பெற்ற புலிகளின் உறுப்பினர்கள் தமிழ் ஆயுத அமைப்புகளோடு அமிர்தலிங்கத்திற்குத் தொடர்பிருக்கிறது என்கிற சன்சொனியின் குற்றச்சாட்டில் உண்மை இல்லாமலும் இல்லை. பாதுகாப்பு அமைச்சிற்கு பொலீஸார் வழங்கிய தகவல்களில் அமிர்தலிங்கத்தைச் சந்திக்க யாழ்ப்பாணத்திலிருந்த அவரது வீட்டிற்கு பிரபாகரன், உமா மகேஸ்வரன் மற்றும் தங்கத்துரை ஆகியோர் வந்து சென்றிருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 1974 முதல் 1980 வரையான காலப்பகுதியில் வழக்கப்பட்ட இவ்வாறான தகவல்கள் ஜெயவர்த்தன நிலையத்தில் இன்றுவரை இருக்கிறது. ஜெயவர்த்தனவின் குடும்பத்துடன் நெருக்கமான ஒருவரின் உதவியோடு இந்தத் தகவல்களைப் படிக்கும் வாய்ப்பு சில வருடங்களுக்கு முன்னர் எனக்குக் கிடைத்திருந்தது. புரட்சிசெய்யத் துடிக்கும் இளைஞர்களுடன் எப்போதுமே தொடர்பைப் பேணவேண்டும் என்பது தந்தை செல்வாவினால் அமிர்தலிங்கத்திற்குக் கொடுக்கப்பட்ட பணியாகும். தமிழர்களின் அரசியலின் தந்தை என்று அறியப்பட்ட தந்தை செல்வா ஆயுத அமைப்புக்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும் என்று விரும்பியிருந்தார். ஆயுத அமைப்புக்களின் விமர்சனங்கள், விருப்பு வெறுப்புக்களை உள்வாங்கி தமது கொள்கைகளிலும், செயற்பாட்டு முறைகளிலும் மாற்றங்களைச் செய்யவேண்டும் என்று தந்தை செல்வா விரும்பியிருந்தார். இளைஞர்களை வழிநடத்த அமிர்தலிங்கம், ராஜதுரை மற்றும் நவரட்ணம் ஆகியோரை செல்வா அமர்த்தினார். திருக்கோணேஸ்வரம் ஆலயம் புலிப்படை எனும் அமைப்பு 1961 ஆம் ஆண்டு, தெற்கில் மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பிக்கும் முன்னரே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. ஒரு அரச ஊழியர் உட்பட 20 பேர்வரையான இளைஞர்கள் புலிப்படையினை உருவாக்கியிருந்தார்கள். 1961 ஆம் ஆண்டு ஆவணி 12 ஆம் திகதி புலிப்படையின் உறுப்பினர்கள் சரித்திரைப் பழமை வாய்ந்த திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் கூடினர். காலை வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் அக்குழுவினர் மலைக்குச் சென்று, தனியான தமிழ் தாய்நாடொன்றிற்காகப் போராடுவது என்று சபதம் எடுத்துக்கொண்டனர். 1961 ஆம் ஆண்டு தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட சத்தியாக்கிரக நிகழ்வை சிறிமாவோ தனது இராணுவத்தைக் கொண்டு கலைத்தமையே இந்தக்குழுவினர் தனிநாடு நோக்கிப் பயணிக்கும் தேவையினை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் புலிப்படை மீன்பிடிக்காகவும், ஆயுதங்களைக் கொண்டுவருவதற்காகவும் ஒரு கப்பற் கம்பெனியொன்றை உருவாக்கியிருந்தது. சில துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததுடன், மாணவர் மன்றங்கள் சிலவற்றையும் ஏற்படுத்திவிட்டு செயலற்றுப்போனது. இந்தக் குழுவின் செயற்பாடுகளை அமிர்தலிங்கமும், நவரட்ணமும் அவதானித்து வந்தபோதும், அவர்களின் செயற்பாடுகளில் தலையிட்டிருக்கவில்லை. பொலீஸாரும் இக்குழுவினரின் இருப்புக் குறித்து அதிக ஆர்வம் காட்டியிருக்கவில்லை. தமிழ் இளைஞர்கள் தம்மை மீளவும் ஒழுங்குபடுத்திய நிகழ்வு 1970 இல் இடம்பெற்றது. தமிழ் மாணவர் பேரவை எனும் அமைப்பு உருவாக்கப்பட்டு 1972 இல் தமிழ் இளைஞர் பேரவையாக மாற்றங்கண்டது. இந்த அமைப்பினை அமிர்தலிங்கமும், நவரட்ணமும் நெருங்கி அவதானித்து வந்ததுடன், இந்த அமைப்பினரும் அமிர்தலிங்கத்தை தமது "தளபதி" என்று கருதி வந்தனர். இளைஞர்கள் தமது விமர்சனங்களைப் பகிரங்கமாக முன்வைக்க வேண்டும் என்றும், தமது உணர்வுகளுக்கு அது வடிகாலாக அமையும் என்று அமிர்தலிங்கம் அவர்களிடம் கூறிவந்தார். ஒரு சில வன்முறைச் சம்பவங்கள் அவ்வப்போது இடம்பெற்று வந்தாலும், நிலமை கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது. ஆனால், இந்த செயற்பாடுகளை அரசு இனவாதப் புரட்சி என்று கருதியதாலும், அதனை அடக்க பொலீஸாரையும், இராணுவத்தினரையும் முடுக்கி விட்டதாலும் நிலைமை மாறத் தொடங்கியது. தமிழ் இளைஞர் பேரவையினரைத் தேடி வேட்டையாடிய பொலீஸார் அவர்களில் 42 பேரைக் கைது செய்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட அனைவருமே பிற்காலத்தில் ஆயுதப் போராளிகளாக மாற்றம்பெற்றனர். தங்கத்துரை, குட்டிமணி, பிரபாகரன், பாலக்குமார். பத்மநாபா, வரதராஜப் பெருமாள், சிறி சபாரட்ணம் ஆகியோர் அமிர்தலிங்கத்தை மதித்து வந்ததுடன், அவர் சொல்வதையும் கேட்டு வந்தனர்.
  32. அமிர்தலிங்கத்தையும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும் குறிவைத்த ஜே ஆர் கைதேர்ந்த அரசியல் மூலோபாயவாதியாக விளங்கிய ஜெயவர்த்தன, சிங்களக் கடும்போக்குத் தேசியவாதிகளின் வாக்குகளை சிறில் மத்தியூவைக் கொண்டு பெற்றுவிட திட்டமிட்டுச் செயற்பட்டுவந்தார். ஒரு சிங்களத் தேசியத் தலைவராக வளரும்வரையில் மத்தியூ, ஜெயவர்த்தனவினால் ஊக்குவிக்கப்பட்டார். தமிழர்களை உசுப்பேற்றும் வெறித்தனம் கொண்டவராக மத்தியூ செயற்படவைக்கப்பட்டார். இந்தச் சதிகுறித்து அறிந்திராத அமிர்தலிங்கம், இயல்பாகவே வருத்தமடைந்து காணப்பட்டார். ஆகவே, மத்தியூ தன்மீது முன்வைத்துவந்த விஷமத்தனமான பிரச்சாரங்கள் குறித்தும் கேலிகள் குறித்தும் ஜெயவர்த்தனவிடம் முறையிடலானார் அமிர்தலிங்கம். மத்தியூவின் பேச்சுக்களால் தமிழ் மக்களின் உணர்வுகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் தமிழ் மக்கள் மத்தியில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செல்வாக்குச் சரிந்துவருவதாகவும் கூறிக் கவலைப்பட்டார். "மத்தியூ எம்மை காலையும் மாலையும் வசைபாடி பேசி வரும் நிலையில், நாம் உங்கள் அரசாங்கத்தை எவ்வாறு ஆதரிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?" என்று அவர் ஜே ஆரை வினவினார். அதற்கு ஜே ஆர் தந்த பதில் இப்படியிருந்தது, "மத்தியூ கூறுவதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். நான் தமிழ் மக்களுக்குச் சார்பாகச் செயற்படுகிறேன் என்று பிக்குகளும் சிங்களத் தேசியவாதிகளும் எனது அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதற்குப் பதிலளிக்கும் முகமாகவே மத்தியூ தமிழர்களுக்கெதிரான பிரச்சாரத்தைச் செய்யவேண்டியிருக்கிறது" என்று கூறினார். அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் இதனைக் கேட்டதும் அமிர்தலிங்கம் கவலையடைந்தார். இதுகுறித்து அவர் என்னிடம் பேசுகையில், "ஜெயவர்த்தன அரசியல் விளையாட்டில் ஈடுபட்டு தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையே பகையுணர்வை வளர்க்கிறார். சிங்களவர்களுக்கு முன்னால் தன்னை ஒரு மீட்பராகக் காட்ட அவர் எத்தனிக்கிறார். தமிழர்களை நசுக்கக்கூடிய ஒரே தலைவர் தானே என்று சிங்களவர்களுக்குக் காட்ட நினைக்கிறார்" என்று கூறினார். ஜே ஆரின் பதிலின் பின்னர் அமிர்தலிங்கம் ஜே அர் மீது வெறுப்புக் கொண்டிருந்தார். ஆகவே, எதிர்க்கட்சியுடன் நெருங்கிவரும் இரகசிய நடவடிக்கையொன்றினை அமிர் மேற்கொண்டார். 1978 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் அவருக்கு இதற்கான சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தது. இலங்கை சம சமாஜக் கட்சியின் தலைவர்கள் அமிரையும், சிவசிதம்பரத்தையும் அவரது வீட்டில் சந்தித்து ஜெயவர்த்தனவுக்கெதிரான பரந்துபட்ட தேர்தல் கூட்டணியொன்றினை உருவாக்குவதுபற்றிக் கலந்துரையாடினர். ஆரம்பத்தில் இந்தக் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நம்பிக்கையளிப்பவனவாகத் தெரிந்தன. தான் விட்ட பழைய தவறுகளைத் திருத்திக்கொள்ள சிறிமாவோ தயாராக இருப்பதாக சம சமாஜக் கட்சியின் தலைவர்கள் அமிரிடம் கூறினர். இந்த இரகசிய பேச்சுவார்த்தையினை அறிந்துகொண்ட ஜெயவர்த்தனா, கொழும்பிலிருந்த தமிழ் வர்த்தகப் புள்ளியொருவரூடாக அமிர்தலிங்கத்திற்குச் செய்தியொன்றினை அனுப்பினார். "நீங்கள் எதிர்க்கட்சியுடன் தொடர்ந்து இரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் கொழும்பில் தமிழருக்கெதிரான இன்னொரு கலவரம் வெடிக்கும்" எனும் எச்சரிக்கை தான் அது. இதனால் அச்சமடைந்த அமிர்தலிங்கம் எதிர்க்கட்சியினருடனான இரகசியப் பேச்சுவார்த்தைகளை இடைநடுவில் முறித்துக்கொண்டார். அமிர் கவலையடைய. சிவசிதம்பரமோ கலங்கிப் போனார். தனது நண்பர்களுடன் பின்னர் பேசிய அமிர்தலிங்கம், "தமிழர்களால் இன்னொரு இனக்கலவரத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது" என்று கூறியிருந்தார். எதிர்க்கட்சிக்கும், முன்னணிக்கும் இடையிலான இரகசியப் பேச்சுவார்த்தையினைக் குழப்புவது ஜெயவர்த்தனவின் திட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே. தமிழர்களுக்கெதிரான சிங்களவர்களின் கோபத்தினை ஊதிப் பெருப்பித்து ஈற்றில் தமிழ் ஆயுதக் குழுக்களை முற்றாக அழிப்பதே அவரது திட்டத்தின் மீதிப்பகுதியாக இருந்தது. 1977 ஆம் ஆண்டு ஆவணியில் இடம்பெற்ற தமிழருக்கெதிரான வன்முறையினை விசாரித்த சன்சொனி ஆணைக்குழ் வழங்கிய இறுதி அறிக்கையினைப் பாவித்து அமிர்தலிங்கம் மீது கடுமையான விமர்சனங்களை ஜெயவர்த்தன மேற்கொண்டார். பொலீஸாரினால் சோடிக்கப்பட்ட பொய்யான ஆதாரங்களை ஆணைக்குழுவின் முன்னால் வைத்து, அமிர்தலிங்கம் ஒரு இரத்த வெறிபிடித்த, சிங்களவருக்கெதிரான இனவாதியென்றும், அவரது கட்சியான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியே தமிழ் ஆயுதக் குழுக்களின் வன்முறைகளின் பின்னால் இருந்ததென்றும் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் ஜெயவர்த்தன பிரச்சாரம் செய்துவந்தார். பொன் சிவகுமாரனின் இறுதிச் சடங்கின்போதும், 1977 ஆம் ஆண்டின் தேர்தல்ப் பிரச்சாரங்களின்போதும் அமிர்தலிங்கமும் அவரது துணைவியார் மங்கையற்கரசி பேசிய பேச்சுக்களை அடிப்படையாக வைத்து அவர்களுக்கெதிரான பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டது. தமிழ் இளைஞர்களை வன்முறையினை நோக்கித் தூண்டும் மனிதரே அமிர்தலிங்கம் என்று பிரச்சாரப்படுத்தப்பட்டது. தமிழ் ஆயுத அமைப்புக்களுக்குப் பின்னால் நின்று ஊக்குவிக்கும் சக்தியாக அமிர்தலிங்கத்தைக் காட்ட சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டன. அரசாங்கத்திற்கெதிரான நம்பிக்கையீனத்தை இளைஞர்களிடையே அமிர்தலிங்கம் ஏற்படுத்தி வருவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இதற்கு ஆதாரமாக யோகேஸ்வரனின் பேச்சில் கூறப்பட்ட, "தமிழ் மக்களைப் பொறுத்தவரை இலங்கை அரசாங்கம் ஒரு அந்நிய அரசாங்கமாகும். தமிழ் மக்களை ஆள்வதற்கான எந்தவித அதிகாரமும் இந்த அரசாங்கத்திற்குக் கிடையாது" எனும் பகுதி இதற்கு சாட்சியமாக அரசால் பாவிக்கப்பட்டது. "சிங்களவருக்கெதிரான வன்மத்தை தமிழர்களிடையே முன்னணி வளர்த்து வருகிறது" எனும் குற்றச்சாட்டும் அரசால் முன்வைக்கப்பட்டு வந்தது. யாழ்ப்பாணத்தில் பெளத்த மதகுருவாக இருந்த வீரமுவே விமலபாரதி எனும் பிக்கு தன்னைத் தமிழ் இளைஞர்கள் தாக்கியதாகவும், "இனிமேல் நீ யாழ்ப்பாணத்தில் இருக்கத் தேவையில்லை" என்று கூறியதாகவும் பொய்வாக்குமூலம் கூறும்படி அரசால் கட்டாயப்படுத்தப்பட்டார். தனது பெளத்த நிலையத்தை தமிழர்கள் எரித்ததாகவும் அவர் ஆணைக்குழுவின் முன்னிலையில் கூறினார். இவ்வாறே யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துவந்த பல சிங்களவர்களும் தமது உடமைகள் எரிக்கப்பட்டு, தாம் அங்கிருந்து விரட்டப்பட்டதாக ஆணைக்குழுவின் முன்னால் கூறவைக்கப்பட்டார்கள். சிங்கள பஸ் சாரதியான தர்மசேன கூறுகையில், தனது பஸ்வண்டி பாதையிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு, தான் சுடப்பட்டதாகக் கூறினார். யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த சிங்களப் பெண்மணியான கருணாவதி கூறுகையில் தனது குடும்பம் உழவு இயந்திரம் ஒன்றில் ஏற்றப்பட்டு அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டதாகக் கூறினார். இந்த வன்முறைகள் எல்லாம் முன்னணியினரின் தூண்டுதலினாலேயே தமிழ் இளைஞர்களால் நடத்தப்பட்டதாக ஆணைக்குழுவின் முன்னால் கூறப்பட்டது. அமிர்தலிங்கம் மீண்டு கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளானார். ஆணைக்குழுவின் முன்னால் 1979, சித்திரை 30 அன்று சாட்சியமளித்த அமிர்தலிங்கம், ஜனநாயக வழிகள் மூலம் தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ளவே தனது கட்சி முயன்றுவருவதாகக் கூறினார். தனது கட்சி வன்முறைகளைத் தூண்டிவிட்டதாக பொலீஸார் கூறிய குற்றச்சாட்டினை அவர் முற்றாக மறுத்தார். ஆனால், அமிர்தலிங்கத்தின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்ட நீதிபதி சன்சொனி, அரசு மீதான தமிழர்களின் அவநம்பிக்கைக்கும், வன்முறைகளைத் தூண்டிவிட்டமைக்கும் அமிர்தலிங்கமே பொறுப்பு என்று தீர்ப்பளித்தார். மேலும், அமிர்தலிங்கம் தமிழ் ஆயுத அமைப்புக்களோடு ஒத்துழைத்துவருவதாகவும் குற்றஞ்சாட்டினார். அமிர்தலிங்கத்தைக் கொல்லுமளவிற்கு, அவர்மீதும், அவரது கட்சிமீதும் அரசால் திட்டமிட்டு முன்வைக்கப்பட்ட வந்த விஷமத்தனமான பிரச்சாரங்கள் சிங்களவர்களைத் தூண்டியிருந்தது. ஜெயவர்த்தனவின் செல்லப்பிள்ளைகளான பிரேமச்சந்திரவும், ஜெயக்கொடியும் 1979 ஆம் ஆண்டு ஆடி 3 ஆம் திகதி பாராளுமன்ற குழுக்கள் கூட்டத்தில் ஆற்றிய உரைகளில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கெதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று வெளிப்படையாகக் கோரிக்கை முன்வைத்தனர். இதற்குப் பதிலளித்த ஜெயவர்த்தன, இதனைச் செய்வதற்கான சட்டவாக்கல் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும், அந்த மாதத்திலேயே அச்சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.