Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Justin

    கருத்துக்கள உறவுகள்
    18
    Points
    7054
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    87992
    Posts
  3. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    10
    Points
    15791
    Posts
  4. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    34974
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/28/23 in Posts

  1. பதிநான்கு அதற்குள் மகள் என்னை யாழ்ப்பாணத்தில் மட்டும் ஒரு மாதமாக அடைத்து வைத்திருக்கிறீர்கள். எப்ப வேறு இடங்கள் பார்க்கப் போவது என்கிறாள். இணுவிலில் இருந்து தொடருந்தில் கிளம்பி வவுனியா போய் அங்கு இரு குடும்பங்களைக் கண்டு தங்கி அங்கிருந்து வவுனிக்குளம் என்னும் இடத்தில் என் ஒன்றுவிட்ட அண்ணா சிறிய வீடு ஒன்று கட்டி ஐந்து ஏக்கர் நிலத்தை பக்கத்திலுள்ளவர்களுக்கு குத்தகைக்கு விட்டுவிட்டு ஆறுமாதம் இங்கு, ஆறு மாதம் கனடாவிலுமாக வாழ்கிறார். அவரின் அழைப்பின் பேரில் அங்கும் ஒருநாள் நிற்க அந்தப் பக்கம் காணிகள் வாங்குவோமா என்னும் எண்ணமும் எழுந்தது. என் அண்ணருக்கும் எனக்கும் பொருந்தவே பொருந்தாது. ஏனெனில் அவர் அமிர்தலிங்கத்தின் வால். போக என்னுடன் புலிகளுக்கு எதிராகவே எப்போதும் கதைத்து வாக்குவாதப் பட்டுக்கொண்டு இருப்பார். அத்தோடு அந்தப் பகுதியில் யானைகள் குரங்குகளின் ஆட்டக்காசமும்அப்பப்ப இருக்குமாம் என்றதுடன் அவருக்கு அருகில் இருப்பது சரிவாராது என்று முடிவுசெய்து யாழ்ப்பாணத்தில் காணி வாங்குவதே நல்லது என்கிறேன். அங்கிருந்து பஸ்சில் திருகோணமலை சென்றது. கோணேசரத்துக்கு 2017 இலும் சென்றது. இப்ப மகளுக்காக அவரையும் கூட்டிச் சென்றோம்.அங்கு முதலிலே மகள் ஹோட்டல் புக் செய்திருந்தார். மூவர் தங்க 6000 ரூபாய்கள். அங்கிருந்தே கன்னியா வென்நீர் ஊற்று பார்ப்பதற்கு போய்வர ஓட்டோ 2000 ரூபாய்கள். கோணேஸ்வரர் கோவிலுக்குச் செல்லும்போது சிங்களவர்களின் கடைகளைப் பார்த்து முன்னர் வந்த கோபம் இப்ப வரவில்லை. ஏனெனில் இங்கு வசிக்கும் மக்களே எதுவும் செய்ய முடியாதிருக்கும்போது நாம் கோபம் கொண்டோ மனம் வருந்தியோ எதுவும் ஆகப்போவதில்லை எனும் கையாலாகாத்தனம். அது முடிய புறாத்தீவு. சிறிய வள்ளத்தில் நாம் தனியாகக் செல்வதானால் 5000 ரூபாய்கள் என்றனர். சரி என்று புறப்படும்போது ஒரு சிங்கள சோடி வர அவர்களையும் ஏற்றிக்கொண்டு போவோம் நீங்கள் நான்காயிரம் அவர்கள் நான்காயிரம் தரட்டும் என்றனர். இது என்ன கணக்கு என்று நான் குளம்ப, அம்மா அவர்கள் எம்மிடம் எவ்வளவு கறக்க முடியுமோ கறப்பார்கள். பேசாமல் இருங்கள் என்றதும் நானும் எதுவும் கதைக்கவில்லை. தீவுக்குள் நுழைவதற்கு, பின்னர் எம்மை கடலுக்கடியில் பவளப்பாறைகள் காட்டுவதற்கு என்று நானும் கணவரும் இலங்கையின் பழைய அடையாள அட்டை வைத்திருந்ததனால் குறைவான காசும் மகள் வெளிநாடு என்பதனால் டொலரில் 10,15,25 என்று மகளுக்குமட்டும் 16000 ரூபாய்களை அறவிட்டனர். அது மிக அற்புதமான அனுபவம்தான். பின்னர் அடுத்தநாள் காலை மீண்டும் பஸ்சில் வெளிக்கிட்டு எல்லா, நுவரெலியா என்று பின்னர் கண்டி போவதாக ஏற்பாடு ஆனால் கண்டி செல்லாமலே கொழும்பு சென்றாச்சு. ஏனெனில் கணவரும் மகளும் இன்னும் ஒரு வாரத்தில் திரும்பச் செல்லவேண்டி இருந்ததால் கணவரின் காணி விடயம் ஒன்று முடிக்கவேண்டி இருந்தது ஒன்று. அடுத்தது நான் தொடர்ந்து நிற்பதனால் எனக்கு ஒரு வருட விசா எடுக்கவேண்டியும் இருந்தது. மூன்றாவது பஸ் பயணம் எனக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. றெயின் பஸ் என்று டாய்லெட் பிரச்சனை ஒருபுறம். அதனால் இனிமேல் வருவதானல் ஒருகாரையோ அல்லது வானையோதான் காசைப் பார்க்காமல் பிடித்துக்கொண்டு திரிய வேண்டும் என்னும் என் விருப்பத்தை மகளோ கணவரோ ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படித் திரிவதுதான் அவர்கள் இருவருக்கும் ஏற்றதாக இருக்க, இனிமேல் நீங்கள் இருவரும் தனியத் திரியுங்கள் என்றுவிட்டேன். அத்தோடு கொழும்பில் கோட்டலில் ஒரு நாள் மூன்று பேர் தங்கும் அறை 8000 ரூபாய்களுக்கு எடுத்து அடுத்தநாள் காலைவரை தங்கிவிட்டு மகள் தான் அங்கேயே இருக்கிறேன் என்று கூற எனக்கோ அவளைத் தனிய விட்டுவிட்டுப் போகவும் மனமில்லை. கவனமாக இருங்கோ என்று பலதடவை சொல்ல அம்மா நான் சின்னப் பிள்ளை இல்லை அம்மா என்று சிரிக்கிறாள். கோட்டலுக்கு முன்னால் நிற்கும் ஓட்டோக்களைக் காணவில்லை. அதனால் அங்கு வேலை செய்யும் பையன் வீதியில் ஒரு ஓட்டோவை எமக்காக மறிக்க மீற்றர் போடுகிறேன் என்கிறார். சரி என நானும் கணவரும் ஏறிக்கொள்கிறோம். விசா எடுப்பதற்கு பிறகு செல்வோம். முதலில் லைசென்ஸ் மாற்றுவோம் என எண்ணி அங்கு சென்றால் எக்கச்சக்கமான சனம். அத்தனை தூரம் சென்றதற்கு ஓட்டோக்காரர் 1200 ரூபாய்களைத்தான் எடுத்தார். அதுவே யாழ்ப்பாணத்தில் என்றால் 2000 ரூபாய் கொடுக்கவேண்டும். நாம் யூக்கேயில் இருப்பதனால் ஒரே பக்கம் staring என்பதனால் uk இல் main post office இல் ஒரு வருட லைசென்ஸ் எடுத்துக்கொண்டு போய் இலங்கையில் ஒரு ஆண்டுகள் வாகனங்கள் ஓட முடியும். நாம் அதை மறந்துபோய் வந்துவிட்டோம். ஆகவே நான் தொடர்ந்து அங்கு நிற்பதனால் எடுப்போம் என்று யாழ்ப்பாணத்தில் கச்சேரிக்குச் சென்றால் காத்திருப்புக்குப் பின் வரிசையில் நின்று ஒருவரிடம் செல்கிறோம். அவர் மெடிக்கல் எடுத்துக்கொண்டு வரவேண்டும் என்றும் வேறு எவற்றைக் கொண்டுவரவேண்டும் என்று கூறி எனது அடையாள அட்டையைக் கேட்கிறார். அது நான் படிக்கும் காலத்தில் எடுத்தது. அதைப் பார்த்ததுமே அவருக்கு விளங்கிவிட்டது போல. வெளிநாடோ? என்கிறார். ஓம் என்று கூற வெளிநாடு என்றால் நீங்கள் சுண்டுக்குளி லேடீஸ் ஸ்கூல் இற்குப் பின்னால் இருக்கும் ஒரு கண் வைத்தியரோ அல்லது கண்ணாடிக் கடையோ தெரியவில்லை. அங்கு சென்று தான் எடுக்க வேண்டும்.என்று முகவரி தந்ததோடு மட்டுமன்றி 8000 ரூபாய்கள் என்கிறார். நாமும் சரி என்று வெளியே வந்து முன்னால் சென்ற ஓட்டோ ஒன்றை மறித்து அவரிடம் விடயத்தைக் கூறுகிறேன். மெடிக்கல் எடுக்கும் இடம் கச்சேரிக்குப் பின்னால் இருக்கே. நீங்கள் வெளிநாடோ என்கிறார். ஓம் என்றதற்கு அதுதான் உங்களிட்டைக் காசு பிடுங்க நினைக்கிறார் என்று எம்மை பின்னாலே உள்ள இடத்துக்குக் கூட்டிச் செல்கிறார். அவருக்கு நன்றி கூறிவிட்டு உள்ளே சென்றால் ஒரு 20 நிமிடத்தில் 800 ரூபாய்கள் பெற்றுக்கொண்டு சான்றிதழ் தருகின்றனர். வெளியே வர அந்த ஓட்டோக்காரர் எமக்காகப் பார்த்துக்கொண்டு நிற்க யாழ்ப்பாணத்திலிருந்து பஸ்சில் வந்த நாம் அவருடன் யாழ்ப்பாணம் செல்கிறோம். கொழும்பில் லைசென்ஸ் மாற்றும் இடத்துக்குச் சென்ற பின்னர் தான் கணவர் தன் லைசென்சைக் காணவில்லை என்கிறார். இனி என்ன செய்வது யாழ்ப்பாணத்தில் இருந்தால் மீண்டும் கொழும்பு வரும்போது எடுப்போம் என்று கூறி அவரை வெளியே இருக்கும்படி கூறிவிட்டு நான் உள்ளே செல்கிறேன். வரிசையில் நின்று ஒருவரிடம் சென்று எமது விபரங்களைக் கொடுக்க அவர் எல்லாத் தகவல்களையும் ரைப் செய்து இன்னொருவரிடம் அனுப்புகிறார். கன நேரமாக என்னைக் காக்கவைத்துவிட்டுப் போன் செய்து சிங்களத்தில் கதைத்தபடி இருக்கிறார். எனக்கு கடுப்பானாலும் எதுவும் செய்யமுடியாமல் இருக்கிறேன். பின்னர் அவர் எல்லாவற்றையும் சரிபார்த்துவிட்டு வெளிநாட்டவர்களுக்கு 11000 ரூபாய் என்றும் தூரத்தில் இருக்கும் கவுண்டரில் பணத்தைச் செலுத்திவிட்டு வரும்படி கூறுகிறார். நேரம் 12.30. கவுண்டருக்குச் சென்றால் அங்கும் வரிசை நீள்கிறது. ஒரு பத்து நிமிடக் காத்திருப்புக்குப் பின் எனக்கு முன்னால் இருவரும் பின்னால் ஐவரும் இருக்க வேலை செய்பவர் வெளியே சென்றவர் திரும்பிவரவில்லை. அவர்கள் தமக்குள் சிங்களத்தில் அமளிப்படுகிறார்கள். என்ன என்று நான் கேட்க அவர் லஞ்ச் பிரேக் என்கின்றனர். எப்ப வருவார் என்றதற்கு தமக்கும் தெரியாது என்கின்றனர். மற்றவர்கள் வேறு கவுண்டருக்குப் போக நான் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்க ஒருவர் வந்து ஏன் நிற்கிறாய் என்று கேட்க நான் விபரத்தைக் கூற அவர் வா என்று என்னைக் கூட்டிச் சென்று உள்ளே வேறொருவரிடம் விடயத்தைக் கூறி foreign என்றுவிட்டுப் போக அவர் என்னிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு இன்னொரு கவுண்டருக்குப் போய் என் லைசென்சைப் பெற்றுக்கொள்ளுமாறு கூற அங்கே செல்கிறேன். ஒரு சிங்களப் பெண் என் பாஸ்போட்டையும் பணம் கட்டிய பற்றுச்சீட்டையும் வாங்கிப் பார்த்துவிட்டு, நீ வெளிநாடு என்றதனால் இன்னும் 8000 ரூபாய்கள் கட்ட வேண்டும் என்று வெளியே உள்ள வேறொரு கவுண்டர் ஒன்றுக்குப் போகுமாறு கூற ஏன் இங்கு கட்ட முடியாதா என்கிறேன். அவர்கள் உன்னை வெளியேதான் அனுப்பியிருக்கவேண்டும். மாறி அனுப்பிவிட்டார்கள் என்கிறார். ஒன்றுக்கு இரண்டு பேர் 11000 ரூபாய்கள் என்றுகூற இவ இன்னும் 8000 காட்டச் சொல்கிறா. அதுவும் வெளியே உள்ள கவுன்டரில் என்று கணவரிடம் சொல்லிக் கோபப்பட, நாம் வேறு சிங்களம் தெரிந்தவர்களைக் கூடிக்கொண்டு வந்திருக்க வேண்டும். இனி உவர்களுடன் நின்று வாக்குவாதப்பட்டு பிரயோசனமில்லை. போய் கட்டிப்போட்டு வா என்கிறார். எனக்கோ இவவை விடக்கூடாது என்று இருந்தாலும் எதுவும் செய்யமுடியாது என்று தெரிகிறது.. வெளியே சென்று காட்டிவிட்டு வர மூன்றுமணிக்கு வெளியே உள்ள இடம் ஒன்றைக் காட்டி அங்கு வந்து லைசென்சைப் பெற்றுக்கொள்ளும்படி கூற நானும் கணவரும் வெளியே சென்று உணவருந்திவிட்டு வந்து காத்திருக்க எட்டு ஆண்டுகளுக்கான லைசென்ஸ் கைக்கு வருகிறது.
  2. ஒருங்கிணைந்த பண்ணைகளின் சிறந்த மாதிரிகளைப் பார்க்க விரும்புவோர் போக வேண்டிய இடம் மத்திய மாகாணம். 20 ஆண்டுகளுக்கு முன்பே, குண்டசால, சரசவிகம, ஹிந்தகல, மஹகந்த போன்ற பேராதனையை அண்டிய சிறு கிராமங்களில் அருமையான ஒருங்கிணைந்த பண்ணைகள் இருந்தன. இவற்றுள் பலவற்றிற்கு கால்நடை மருத்துவ சேவைகளை வழங்கிய அதிர்ஷ்டம் கிடைத்தது. இவற்றுள் ஹிந்தகலவில் இருந்த பண்ணை சேதன பண்ணையாக இருந்தது. குண்டசாலையில் இருந்த ஒருங்கிணைந்த பண்ணையில், லொத்தர் அடிப்படையில் ஒரிரு குடும்பங்களைத் தேர்வு செய்து சில வருடங்களுக்கு பண்ணையில் வசித்து பயிற்சி பெறச் செய்யும் ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தினர். வளர்க்கும் பயிர்கள், ஆட்டினங்கள், மாட்டினங்கள் என்பன வடமாகாணத்தில் வேறாக இருக்கும், ஆனால், செயல்படுத்தும் நுட்பங்கள், முறைகள் பற்றி இந்த மத்திய மாகாண ஒருங்கிணைந்த பண்ணைகளில் கற்கலாம், ஆலோசனை பெறலாம்.
  3. தம்பி... இரண்டு மணி பஸ், எப்ப வரும்? 😂
  4. சிறுத்தையின் குணம் தெரியாமல் நட்பு வைத்துவிடடது. பாவம். தந்தை என்பவர் மெளனமான சுமை தாங்கி
  5. அந்த உழவு இயந்திரம் இன்னும் உயிரோட இருக்கா?😄
  6. நானும் சுமே சொன்ன பன்டத்தரிப்பு ஆசிரியரின் பண்ணைக்கு இரன்டு தடவை சென்றிருக்கிறேன்.நான் போன போது பண்ணை அற்புதமாக இருந்தது.நான் நினைக்கிறேன் கடந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் கால்நடைகளிற்க்கான உணவுகள் தட்டுப்பாடு காரனமாக அதிகமானவந்றை விற்று இருக்கலாம் என்டு.மற்ற உடுப்பிட்டி பண்ணைகாரனுடன் போனில் கதைத்துள்ளேன்.மற்றும் நானும் கடந்த சில வருடங்களாக சிறு பண்ணை ஒன்று வைத்திருக்கிறேன்.நான் அங்கு நின்று ஒன்றை உருவாக்கி அது பயன் தரத் தொடங்கும் போது இங்கு வர வேன்டி இருக்கும்.அதோடு அங்கு கவனிப்பு இல்லாமலும் நேர்மையில்லாமலும் அழிந்து விடும்.அடுத்த முநை போய் மீன்டும் ஒன்று என்டு இப்படியே போகுது.நானும் விடுகிற மாதிரி இல்லை.பார்ப்போம்.
  7. தகவல்களுக்கு மிக்க நன்றி அண்ணை......ஆனால் சுமே. உழவு இயந்திரத்தில் இருக்கும் ஒரு போட்டோ பார்த்தேன்......ஆகையால் கேட்டேன் ....🤣. வேற ஓன்றுமில்லை
  8. கண்ணிரண்டும் மின்ன மின்ன காலிரண்டும் பின்ன பின்ன ஒரு காதல் அரங்கேறும் நேரம்......! 😍
  9. உழவு யந்திரத்துக்கும் மோட்டார் சைக்கிளுக்கும் தனித்தனியாக எடுக்க வேண்டும்.அவைகளுக்கு 8 போட்டு காண்பிக்க வேண்டும்.அப்படித்தான் முன்பு இருந்தது.நான் அப்படித்தான் எடுத்திருந்தேன்......! 😁
  10. இந்த சடடம் அமுல்படுத்தபடடால் தமிழர் மட்டுமல்ல மற்ற இனத்தவருக்கும் பாதிக்கப்படுவார்கள். அதன் காரணமாகத்தான் அதிக எதிர்ப்பு வருகின்றது. நிச்சயமாக தமிழனுக்குத்தான் அதிக பாதிப்பு இருக்கும். இன்னும் அரசாங்கமும் மக்கள் போராட்டம் வெடிக்கலாம் என்று கவலைப்படுவதால்தான் இந்த மோசமான தெளிவற்ற சடடத்தை கொண்டுவருகின்றது.
  11. ஒட்டுமொத்தமாக எல்லோரும் அப்படி என்று சொல்ல முடியாது உண்மைதான் அண்ணா. சினிமா போல் எம்மை ஏமாற்றுகிறார்கள். மிகுதியையும் வாசித்துவிட்டுச் சொல்லுங்கள்😀 எனக்கு ஏற்பட்டது போல உங்களுக்கும் ஏற்படும் என்றில்லை. எதற்கும் இரண்டு பண்ணைக்களைப் போய்ப் பாருங்கள். நம்பிக்கையானவர்களிடம் தெரிந்தவர்களூடாக ஒரு வக்கீலை வைத்து எழுதி செய்தால் பிரச்சனை வராது.
  12. பன்னிரண்டு முதன் முதல் கீரிமலைக் கடற்கரைக்கு குளிப்பதற்கு என்று போனால் கடற்கரை முழுதும் பழுப்பு நிறமாக ஊத்தையாக இருக்க” உந்தக் கடலுக்கை சரியான கல்லு, நீங்கள் கேணீக்கை தான் குளிக்கவேண்டும் “ என்றார்எம்மைக் கவனித்துக்கொண்டு நின்ற ஒருவர். மகளும் நானும் சென்று கேணியைப் பார்த்தால் ஒரு நான்கு இளம் பெண்கள் விளையாடிக்கொண்டு இருக்கினம். அதற்குள் சென்று வடிவாக நீந்த முடியாது என்று தெரிந்துவிட காங்கேசன் துறைக்கே போகலாம் என்று முடிவெடுக்கிறோம். முன்னர் கீரிமலையில் ஒரு மடம் இருந்தது. நாம் சிறுவர்களாய் இருந்த நாட்தொட்டு வெளிநாடு வரும்வரை ஆண்டில் ஒரு தடவை கீரிமலைக்குப் போவோம். அந்த மடத்தில் நன்னீர் கிணறும் உண்டு. அங்கு சென்று குளித்து, மடத்தில் அசுவாசமாக இருந்து உண்டு குடித்து மகிழ்ந்து வருவோம். இப்ப அந்த மடம் இடிபாடுகளுடன் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. எம்மூரைச் சேர்ந்த ஆறு திருமுருகன் என்பவர் பெரிய மண்டபம் ஒன்றும், வயோதிபர்களுக்காக மடம் ஒன்றும் வெளிநாட்டவர் போனால் கூடத் தங்குவதற்கு வசதியாக மண்டபத்துடன் கூடிய அறைகளும் கட்டியுள்ளார். மறு பக்கம் ஒரு சிறு கோவில். அதில் ஒரு இளம் ஐயர் நின்றுகொண்டு வாங்கோ, அரிச்சனை செய்துவிட்டுப் போங்கோ என்கிறார். நாம் போகவில்லை. நகுலேச்சுரம் என்று சொல்லப்படும் இலங்கையின் ஐந்து ஈச்சரங்களில் ஒன்றான அது புதுப்பிக்கப்பட்டு அழகாகக் காட்சி தருகிறது. நாம் உள்ளே செல்ல யாரும் கோவிலின் உள்ளே இல்லை. மூலஸ்தானம் பூட்டப்பட்டு இருக்க நாம், சுற்றிக் கும்பிட்டுவிட்டு வெளியே வருகிறோம். அங்கிருந்து பஸ்சில் போவதற்காக பஸ்ராண்டுக்குப் போனால் அரை மணி செல்லும் பஸ் வெளிக்கிட என்கிறார் காத்திருந்த ஒருவர். கண்ணில் அம்மாச்சி உணவகம் பட அங்கு சென்றுவிட்டுச் செல்வோம் என்கிறேன். அந்தப் பகுதிகளிலோ அல்லது காங்கேசன் துறையிலோ அதுபோல உணவகம் இல்லாததால் மனிசன் ஓம் என்று சம்மதிக்கிறார். நாம் உள்ளே செல்ல கொஞ்ச சிங்களச் சனம் இருந்து உணவு உண்கிறது. நாம் வடைக்கும் தேனீருக்கும் ஓடர் கொடுத்துவிட்டு சென்று அமர்கிறோம். கிளிநொச்சி மற்றும் கோண்டாவிலில் இருக்கும் அம்மாச்சியில் நாம் தான் வாங்கிக்கொண்டு சென்று அமர வேண்டும். இது நன்றாக சுத்தமாக இருக்கு. சுத்தம் செய்வதற்கு என்று ஒரு பெண் முண் பகுதியில் நிற்கிறார். நாம் ஓடர் செய்தபோது வடை சுட்டுத் தருகிறோம். போய் இருங்கள் என்று சொன்னதனால் வந்து இருந்தோம். சிறிது நேரத்தில் ஒரு சுற்றுலாப் பயணிகளுடன் பஸ் வந்து நிற்க தப தப என எல்லோரும் உள்ளே வருகின்றனர். உள்ளே போதிய இடம் இல்லாததால் சிலர் திரும்பவும் பஸ்சுக்குள் போகின்றனர். பத்து நிமிடமாகியும் எமக்கு வடையோ தேநீரோ வரவில்லை. பிறகு வந்தவர்கள் சுற்றி நின்று ஓடர் செய்வதும் வாங்கிச் சென்று சென்று உண்பதுமாக இருக்க போய் கேளுங்கப்பா என்கிறேன். வரும் தானே பொறு என்று கூறிவிட்டு பார்த்துக்கொண்டிருக்க கடுப்பாகி நான் எழுந்து சென்று, தங்கச்சி வடையும் தேனீரும் கேட்டனாங்கள் இன்னும் வரேல்லை என்கிறேன். அந்தப் பெண் என்னை கவனிக்காததுபோல் நின்று அவர்களுக்கே கொடுத்துக்கொண்டு நிற்க, நான் திரும்பி வந்து எழும்புங்கோ போவம் என்கிறேன். கொஞ்சம் பொறுமையாய் இரன் என்று மனிசன் சொல்லி வெளியே நின்ற பெண்ணைப் பார்க்கிறார். அந்தப் பெண் நாம் வந்ததையும் இத்தனைநேரம் இருந்ததையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தார். உடனே பொறுங்கோ நான் எடுத்துக்கொண்டு வாறன் என்று கூறி ஐந்து நிமிடத்தில் எமக்கு வடையும் தேனீரும் கொண்டுவந்து தர நான் நன்றி என்கிறேன். வடை கோபத்தில் கூட மிகச் சுவையாக இருக்கிறது. தேனீரும் தான். வேறு ஏதும் வேணுமா என்றும் கேட்க, மோதகமும் கடலை வடையும் உளுந்து வடையும் போண்டாவும் ஆறு ஆறு பார்சல் தர முடியுமா என்று கேட்க இருங்கோ கட்டிக்கொண்டு வாறன் என்று செல்லிவிட்டுச் செல்கிறார். ஒரு பத்து நிமிடங்களில் பார்சலையும் கையால் எழுதிய பில்லையும் கொண்டு வர நான் எழுந்து பில்லுக்குரிய பணத்தைக் கொடுத்துவிட்டு இந்தாங்கோ நீங்கள் வச்சுக்கொள்ளுங்கோ என்று ஆயிரம் ரூபாய்த் தாளைக் கொடுக்க வேண்டாம் என்று மறுக்கிறார். நான் அவர் மறுக்க மறுக்க அவர் பொக்கற்றில் வைத்துவிட்டு நீங்கள் செய்தது பெரிய உதவி என்றுவிட்டு வர, கெதியா ஓடிவா பஸ் வெளிக்கிடுதுபோல என்றபடி ஓடிச் சென்று மனிசன் மறிக்க நானும் மகளும் அவர் பின் ஏறுகிறோம். பஸ்சில் நான்குபேரே இருக்க நாம் முன்பக்கம் சென்று அமர்கிறோம். எங்கும் வெறிச்சோடி வீடுவாசல்கள் பெரிதாக இல்லாமல் இருக்கு. காங்கேசன்துறை கடற்கரை முன்னர் 2017,19 களில் சென்றபோது நன்றாகச் சுத்தமாக இருந்தது. இப்ப சிறிது பொலிதீன், பெட்டிகள் என்று ஆங்காங்கே குப்பைகள் சேரத் தொடங்கிவிட்டன. வாரநாட்களில் சென்றால் ஆட்கள் நடமாட்டமே இன்றி இரண்டு மணிநேரம் தனியாகவே நாம் மட்டும் நீந்திவிட்டு வந்தோம். ஒரு சனிக்கிழமை சென்றால் எம்மவர்கள் குடும்பம் குடும்பமாக, நண்பர்கள் கூட்டம், ஆண்களும் பெண்களும் ஒருபுறம் திருவிழாவுக்கு வந்ததுபோல் அத்தனை சனம். சிலர் பட்டம்கூட விட்டுக்கொண்டு நின்றனர். அன்று ஆட்களைப் பார்ப்பதும் அவர்களின் கூத்துக்களைப் பார்ப்பதிலுமே நேரம் போய்விட்டது. ஆட்கள் சாய்ந்து இருப்பதற்கு வசதியாக பெரிதாக எதுவும் இல்லை. கடைகளும் நிறைய இல்லை. இருக்கும் இரு கடைகளும் சிங்களவர்களே வைத்திருக்கின்றனர் என்றார் ஒருவர். வெயில் மட்டும் சொல்லி முடியாது. மற்றப்படி நீந்துவதற்கு ஏற்ற கடற்கரை. அங்கு பயணிகள் விடுதிகூட இருக்கு.ராஜபக்க்ஷவின் என்று கேள்வி. கசூரினா கடற்கரையில் கிழமை நாட்களில் பெரிதாக ஆட்கள் இல்லை. உள்ளே போனால் மட்டுமே நன்றாக நீந்தலாம். ஒரு ஐம்பது நூறு மீற்றர் வரை முழங்காலளவு தண்ணீர்தான். ஒருநாள் வான் பிடித்துக்கொண்டு இருபது பேர் போய் வந்தோம். வானுக்கு 10000 ரூபாய். உணவுகள் வீட்டிலிருந்தே செய்துகொண்டு போனோம். எனக்குக் கடையில் வாங்கும் உணவுகள் பிடிப்பதே இல்லை. அதனால் ஆட்டிறைச்சிக் கறி, சம்பல் சொதியுடன் இடியப்பமும் அவித்து பாணும் வாங்கிச் சென்றோம். முதல் நாள் நானும் மச்சாளும் பிள்ளைகளும் சேர்ந்து ரோள்ஸ் செய்ததில் கடினமாக இருக்கவில்லை. ஃபிரிஜ் இல் வைத்துவிட்டு கலை எழுந்து பொரித்து, ஆக யூஸ், மிக்சர், தண்ணீர் மட்டுமே வெளியில் வாங்கியது. திரும்ப வரும்போது எல்லாமே காலி. உறவுகளுடன் கூடி மகிழ்ந்து உண்டது என்பது எமக்கு மனதுக்கு அத்தனை மகிழ்வைத் தந்தது. இடையில் பண்ணாகத்தில் நிறுத்தி கடையில் ஐஸ்கிரீம், யூஸ் என வாங்கிக் குடித்து ஊர் வந்து சேர்ந்தோம்.
  13. பதினொன்று எங்கள் ஊர் முழுதும் மாடிவீடுகள் பல இந்த நான்கு ஆண்டுகளில் முளைத்திருந்தன. பல வீடுகளில் ஆட்கள் இல்லை என்பது வேறு. ஒரு நாள் நயினாதீவுப் பயணம். காலையில் எழு மணிக்கே புறப்பட்டு யாழ்ப்பாணம் சென்று அங்கிருந்து குறிக்கட்டுவான் செல்லும் பஸ்சில் நானும் மகளும் ஒவ்வொரு இருக்கையில் அமர ஒரு அரைமணி நேரம் கணவர் நின்றபடியே பயணம் செய்ய பின் இருக்கை கிடைத்துவிட்டது. பஸ் குறிக்கட்டுவானில் நின்றவுடன் முன்னர் நேரே படகில் ஏறமுடியும். இப்போது ஒரு சிறிய கட்டடம்போல் வரிசையாக இருந்து இருந்து நகர்வதற்கு வாங்கு போன்றும் கட்டியுள்ளனர். அன்று பார்த்து எக்கச்சக்கமான சிங்களச் சனம். பஸ் நின்றவுடன் பலரும் அடித்துப் பிடித்து ஓட நானும் விரைவாகச் செல்ல ஏனம்மா அவசரப்படுகிறீர்கள் என்கிறாள் மகள். அந்தக் கட்டடத்தில் முக்கால்வாசி நிரம்பியிருக்கு. நாம் போய் கடைசி வரிசையில் அமர்கிறோம். சிங்கள மக்களுக்கு விகாரைகளிலேயே இலவச பேருந்துகள் ஒழுங்கு செய்யப்பட்டு நயினாதீவு, கீரிமலை போன்ற இடங்களைப் பார்வையிட ஒரு டூர் போல் ஒழுங்கு செய்கிறார்கள். எங்கள் கோவில்கள் ஏதாவது இப்பிடி எங்களுக்குச் செய்யுமா என்று ஒருவர் அங்கலாய்த்துக் கொண்டு இருந்தார். எம்மை விலத்திக்கொண்டு சிங்களப் பெண்கள் முன்னே செல்கின்றனர். எல்லோரும் எதுவும் பேசாமல் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஒருபத்து நிமிடமாக நானும் பொறுமையாகப் பார்த்துக்கொண்டிருக்க இன்னும் மூன்று பேர் வர நான் காலை நீட்டி அவர்கள் செல்லாதவாறு மறித்தபடி நாமும் வரிசையில் காத்திருக்கிறோம் என்கிறேன். அம்மா பேசாமல் இருங்கோ என்கிறாள் மகள். அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் முன்னால் பார்த்து ஏதோ சிங்களத்தில் சொல்கிறார்கள். ஒரு பெண் என்னைப் பார்த்து மன்னித்துவிடுங்கள், அவர்களுக்கு எதுவும் தெரியாது. நாம் குழுவாக வந்தோம் என்றவுடன் ஓகே என்று நான் காலை எடுக்கிறேன். ஆனாலும் மனம் குமைக்கிறது. குழுவாக வந்தாலும் ஒழுங்காகப் போகலாம் தானே. தமிழர்களின் நிலை எதுவும் பேசாமல் பார்த்துக்கொண்டு இருக்கும்படி ஆகிவிட்டாதே என்று எண்ணுகிறேன். 20 நிமிடத்தில் நாம் முன் வரிசையின் தொங்கலுக்குச் சென்றுவிட சரி இன்னும் ஒரு பத்து நிமிடம் ஆகும் என சலிப்புடன் எண்ணியிருக்க நாம் இருந்த பக்கத்துக் கதவு திறந்து தமிழ் ஆட்களெல்லாம் அந்தக் கதவால் இடித்துக்கொண்டு செல்ல குழுவாக வந்தவர்கள் எந்தப் பக்கம் போவது எனக் குழம்பி நிற்க நாமும் கடகடவென சென்று லைஃப் ஜக்கற் எடுத்து அணிந்துகொண்டு கடைசி ஆட்களாக இயந்திரப்படக்கில் ஏறுகிறோம். அவர்கள் நிற்கஎம்மவர்கள் வந்து எறிவிட்டார்கள் என்று மனதில் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. நாம் கடைசியாக ஏறியபடியால் முன்பக்க இருக்கை இருக்கும் பக்கம் நிற்கிறோம். நடுவில் ஒரு சிங்கள மதகுரு இருக்கிறார். அவரின் இரு பக்கமும் இரு இருக்கைகள் வெறுமையாக இருக்கின்றன. எனக்குப் பக்கத்தில் இருப்பவரை தள்ளி இருக்கும்படி கூற அவரோ பிக்குவையும் என்னையும் மாறி மாறிப் பரிதாபப் பார்வை பார்க்கிறார். நான் மீண்டும் கூற பிக்குவுக்கு விளங்கியதோ என்னவோ தன்பக்கம் வரும்படி கையால் அவருக்கு சைகை செய்ய அவர் தள்ளி இருக்க நான் அமர்கிறேன். படகு நகர கணவரும் மகளும் நின்று வீடியோ எடுக்கின்றனர். மகளுக்கு அந்தப் பயணம் நன்கு பிடித்துப்போகிறது. நாம் சென்றபோது நேரம் 11.15. 12.30 இக்குத்தான் பூசை. நாம் கால்களைக் கழுவி கோவிலைச் சுற்றிக் கும்பிட்டு அர்ச்சனைத் தட்டும் வாங்கி வந்து அரிச்சனைத் தட்டைக் கொடுப்பதற்காகக் காத்திருக்க எனக்கு முன்னால் உள்ளவரின் தட்டுவரை வாங்கி கிட்டத்தட்ட முப்பது தட்டுகளை ஒன்றாகப் பக்கம்பக்கம் அடுக்கி வைத்துவிட்டு தேங்காய்களை எடுத்துவிட்டு பாதித் தேங்காய்களை வைத்து விபூதி சந்தனச் சரையையும் வைக்கின்றனர் இருவர். தீபம் காட்டி மந்திரம்ஓதிவிட்டு ஐயர் தீபத்தைக் கொண்டுவர முண்டியடித்து எல்லோரும் வணக்குகின்றனர். அதன்பின் எல்லோரும் அரிச்சனைத் தட்டுகளை மறுபுறத்தால் சென்று எடுக்கின்றனர். எல்லாம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தட்டுகள் தானே. தாம் கொடுத்த தட்டுத்தான் அது என எண்ணாமல் எடுத்துப் போகின்றனர். ஒரு ஐயர் வந்து முதலாவதாக எனது தட்டை வாங்க, கொடுத்துவிட்டு அடுத்த பக்கம் போய் நிற்கிறேன். எனக்குப் பின்னர் வந்தவர்கள் என் பின்னால் போய் நிற்க என கணவரும் மகளும் அருகில் நிற்கின்றனர். ஐந்தோ ஆறாவதாய் ஒரு பெண் வந்து என் மகளை இடித்துக்கொண்டு எனக்கு முன்னால் வரப் பார்க்கிறார். நான் மெதுவாக தங்கச்சி இவ்வளவு பேர் நிக்கிறம். இடிக்காமல் பின்னால போய் நில்லுங்கோ. ஐயர் அங்கையும் தீபம் கொண்டு வருவார் என்றதும் என்னை எரிக்கும் பார்வை பார்த்துவிட்டு அப்பெண் அங்காலே போகிறது. மனிசன் நக்கலாய் ஆரிட்டை என்றுவிட்டு நமட்டுச் சிரிப்பு சிரிக்க, நான் ஏதோ இடையில வந்தது போலயல்லோ நீங்கள் சிரிக்கிறீர்கள் என்கிறேன். தீபம் கொண்டு ஐயர் வந்து எல்லாருக்கும் காட்டிவிட்டு நாம் கொடுக்கும் தட்சணையை வாங்கிக்கொண்டு அரிச்சனைத் தட்டுகளுக்குத் தண்ணீர் தெளித்துவிட்டுப் போக நான் சென்று நான் வைத்த அரிச்சனைத்தட்டை எடுக்கிறேன். முதலாவதாகக் கொடுத்து முதலாவதாகப் போய் எடுத்தது எனக்கு ஓட்டப்போட்டியில் முதலாம் இடம் கிடைத்ததுபோல் மகிழ்ச்சி ஏற்படுகிறது. வெளியே வந்து நாகதம்பிரானுக்கு நாகமும் பாலும் வாங்கி வைத்துக்கொண்டு நான்காவதாக நிற்க அந்தப் பக்கத்தாலும் சிலர் வந்து நிற்கின்றனர். இங்கு இவர்களும் எதற்காக நிற்கிறார்கள் எனும் யோசனையின்றி தாம் முதலில் போகவேண்டும்போல் முன்னே நகர, கலோ கியூ இந்தப் பக்கம் என்று அவர்களைக் கூப்பிடுகிறேன். கோயிலுக்கு வந்தாலும் உனக்குச் சண்டை தானோ என்கிறார் இந்தாள். அப்ப எல்லாரையும் போக விட்டிட்டு எப்ப ஒருத்தருமில்லையோ அப்ப போவமோ என்கிறேன். பிள்ளைகளின் நட்சத்திரங்களைச் சொல்லி மூவரும் பாலூற்றிவிட்டு வர, அன்னதானம் உண்டுவிட்டுப் போவோம் என்கிறார் மனிசன். சிறுவயதில் வரும்போது உண்டதுண்டு. வெளிநாடு வந்தபின் மூன்று தடவைகள் அங்கு சென்றிருந்தாலும் ஒருநாளும் அன்னதானம் செய்யுமிடத்தில் உண்டதில்லை. இம்முறை சம்மதித்து சென்று அமர்ந்து உணவு உண்ண மனதில் ஒரு நின்மதி எழுகிறது. அம்மா அங்க எப்பிடி சாப்பிட்டவா என்கிறாள் மகள். உவளுக்குப் பசி என்கிறார் மனிசன். உண்டபின் நயினாதீவைச் சுற்றிப் பார்க்கிறோம் என்று நடந்து சென்று விட்டு வர நேரம் போய்விடுகிறது. இன்னும் பத்து நிமிடத்தில் படகு புறப்பட்டுவிடும். எல்லோருக்கும் பதட்டம் தொற்றிககொள்கிறது. உடனே அங்கு நின்ற ஓட்டோ ஒன்றைப் பிடித்து விபரத்தைக் கூற அவர் விரைவாகக் கொண்டுவர இடையில் மறித்து வைத்துள்ளனர். அதற்கு அப்பால் வாகனங்கள் செல்ல முடியாது. நடந்துதான் செல்ல வேண்டும். ஓட்டோக்காரர் விடயத்தைக் கூற அவர் போகும்படி கூறி கயிற்றை மேலே இழுத்து தடியை உயர்த்தி அனுமதிக்க ஓட்டோ படகுக்குக் கிட்டச்சென்று எம்மையும் ஏற்றும்படி கையைக் காட்டுகிறார். நாம் முன்னே ஓட கணவர் ஓட்டோ காறருக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு ஓடிவருகிறார். எம்மைக் கண்டுவிட்டு நிறுத்தி எம்மையும் ஏற்றிச் செல்கிறது படகு. படபடப்பு நீங்கி எமக்கு நின்மதி ஏற்படுகிறது. பின் பஸ் பிடிக்க ஓடிப் போனால் இரண்டு பஸ்கள் நிற்கின்றன. ஒன்று சிவப்பு அரச பஸ். மற்றது பச்சை தனியார் பஸ். எதில் ஏறுவது என்று நாம் குழம்பியபடி நிற்க, தனியார் வண்டி வேகமாகப் போவாங்கள். சிவப்பில போங்கோ என்கிறார் ஒருவர்.அதில் போய் ஏற கடைசி சீற்றில் தான் இடம் கிடைக்கிறது. பஸ்ஸும் கடைசி என்பதனால் வேறு எங்கோ இருந்து வரும் படக்குக்காகவும் காத்திருந்து அரை மணி நேரத்தின் பின்னர் புறப்படுகிறது. அவ்வளவு சனம். கால்கள் மிதிபட்டும் நெருக்கியடித்தும் தூங்கி வழிந்தும் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தால் இன்னும் அரை மணித்தியாலத்தில் தான் கடைசி பஸ் வெளிக்கிடும் என்கின்றனர். அதுவரை காத்திருக்க முடியாது என்று ஓட்டோ பிடித்து வீடு வருக்கிறோம். மின்வெட்டு வேறு. வீதிகள் இருண்டு சனநடமாட்டம் அற்று இருக்கு. மனதில் ஒரு பயமும் ஏற்படுகிறதுதான். அடுத்த நாள் காலை எழுந்து குளித்து முடித்து காலை உணவு உண்ண வந்து மேசையில் அமர்கிறோம். இடியப்பம், சம்பல், உருளைக்கிழங்குப் பிரட்டல், சொதி. தற்செயலாக என் விரலைப் பார்த்த நான் அதிசயிக்கிறேன். என் நடுவிரலில் இருபது ஆண்டுகளாக இருந்து வளர்வதும் நான் வெட்டுவதுமாக என்னைத் தொல்லை செய்த சாம்பல் நிறக் காய்(உண்ணி) காணாமல் போயிருந்தது. நாகபூசணி அம்மனின் அருள்தான் என்கிறார் என் மச்சாள்.
  14. அம்மாச்சி உணவகம் அருமையானதொரு பயனுள்ள திட்டம். நானும் பல தடவைகள் அங்கு சென்று உணவு உட்கொண்டு உள்ளேன். வெவ்வேறு அமைவிடங்களில் உள்ளவை பற்றி நல்லதும், குறைகளுமான அபிப்பிராயங்கள் உள்ளன. கிளிநொச்சி அமைவிடத்தில் உள்ள அம்மாச்சி உணவகம் பற்றிய உங்கள் கருத்து வருத்தமளிக்கிறது. இப்படியான திட்டங்களுக்கு நாமே ஆதரவளிக்காவிட்டால் வேறு யார் செய்வார்கள். உங்களைப்போன்றோர் ஆதரவு நிச்சயம் பல்வேறு பிரச்சனைகளின் மத்தியில் தொழில் செய்யும் பெண்களுக்கு தேவை. இங்குள்ள பணியாளர்கள் எப்படியான அடிகளை வாழ்க்கையில் வாங்கினார்கள் என்பது உங்களுக்கு தெரியாமல் இல்லை. எமது வாய்சுவைக்காக மட்டும் செல்லாது அவர்களை ஊக்குவிக்கவும் அங்கு சென்று உணவு உட்கொள்ளலாம்.
  15. ஆண் : எப்ப பார்த்தாலும்… உன்ன பத்தி யோசிக்கும் மனசு… எப்ப கேட்டாலும்… உன்ன பத்தி பேசிடும் உதடு… ஆண் : உலகம் மறந்து உறவும் மறந்து… மேலா மேலா நானும் பறந்து… கலந்து கலந்து ஒன்னா கலந்து… கண்ணா பின்னா காதல் மலர்ந்து… ஆண் : ஆச்சுடி ஆச்சுடி… எனக்கு என்ன ஆச்சுடி… பூச்செடி பூச்செடி… புடவை கட்டும் பூச்செடி… ஆண் : ஹே… இன்னும் என்ன சொல்ல… உன்போல் யாரும் இல்ல… நீயும் நானும் வேற இல்ல… வாடி நெஞ்சுக்குள்ள… ஆண் : ஹே… இன்னும் என்ன சொல்ல… உன்போல் யாரும் இல்ல… நீயும் நானும் வேற இல்ல… வாடி நெஞ்சுக்குள்ள… ஆண் : மயில் மகளே மஞ்சள் பகலே… மானின் நகலே மழலை குரலே… மாமயில் மகளே மஞ்சள் பகலே… மானின் நகலே மழலை குரலே… ஆண் : எப்ப பார்த்தாலும்… உன்ன பத்தி யோசிக்கும் மனசு… எப்ப கேட்டாலும்… உன்ன பத்தி பேசிடும் உதடு… —BGM— ஆண் : நீ என் வீட்டுக்கு வந்த காதல் பூந்தொட்டி… நான் உன்பாதம் தொட்டு போடுவேன் கால் மெட்டி… வா நீ சொல்லலனாலும் நிப்பேன் கைகட்டி… வாய் அது மட்டும்தாண்டி ஒரசுர தீப்பெட்டி… ஆண் : பத்திக்கிச்சு பத்திக்கிச்சு நெஞ்சுக்குள்ளயே… வத்திகுச்சி வத்திகுச்சி கண்ணுக்குள்ளயே… கிச்சு கிச்சு கிச்சு கிச்சு செய்ய சொல்லியே… சிக்கிக்கிச்சு சிக்கிக்கிச்சு இந்த புள்ளயே… ஆண் : ஆச்சுடி ஆச்சுடி… எனக்கு என்ன ஆச்சுடி… பூச்செடி பூச்செடி… புடவை கட்டும் பூச்செடி… ஆண் : ஹே… இன்னும் என்ன சொல்ல… உன்போல் யாரும் இல்ல… நீயும் நானும் வேற இல்ல… வாடி நெஞ்சுக்குள்ள… ஆண் : ஹே… இன்னும் என்ன சொல்ல… உன்போல் யாரும் இல்ல… நீயும் நானும் வேற இல்ல… வாடி நெஞ்சுக்குள்ள… ஆண் : ஓ… எப்ப பார்த்தாலும்… உன்ன பத்தி யோசிக்கும் மனசு… எப்ப கேட்டாலும்… உன்ன பத்தி பேசிடும் உதடு…
  16. சுவியர், 1,100 வரையான நீர்மூழ்கிகளை இரண்டாம் உலகப் போர் காலத்தில் நாசி ஜேர்மனி வைத்திருந்தது. இவற்றுள் 700 வரையானவை எதிரிப் படைகளால் அல்லது விபத்துக்களால் மூழ்கடிக்கப் பட்டன (ஆனால், எதிரி நாடுகளின் 3000 வரையான கடற்கலங்களை நாசி நீர்மூழ்கிகள் மூழ்கடித்தன!). எஞ்சிய நூற்றுக் கணக்கானவை ஜேர்மனி சரணடைவதற்கு முன்னராக நாசிகளால் அழிக்கப் பட்டன. சில சரணடைந்தன அல்லது கைப்பற்றப் பட்டன. அவ்வாறு அமெரிக்காவினால் கைப்பற்றப் பட்ட ஒரு ஜேர்மன் நீர்மூழ்கி இன்னும் சிக்காகோவில் பார்வைக்கு இருக்கிறது. https://www.msichicago.org/press/press-releases/u-505-submarine/ நாசிகளின் ஜேர்மன் நீர்முழ்கிகள் பற்றி அறிந்து கொள்ள "Das Boot" (The Boat) என்ற திரைப்படத்தைப் பார்க்கலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.