Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87992
    Posts
  2. பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    15745
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    38771
    Posts
  4. satan

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    10104
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/19/23 in all areas

  1. சாகவச்சேர் காவல்நிலைய தாக்குதல் தொடர்பாக பசீர் காக்கா எழுதிய ஆக்கம் முன்னர் படித்திருப்பேன் என கருதுகிறேன், அதில் உள்ள தகவல் அனைத்தும் மறந்துவிட்டேன், அதில் குறிப்பாக ஒரு விடயம் மட்டும் நினைவில் உள்ளது, காவல்நிலையத்தில் இருந்த தொலைபேசி இணப்பை துண்டிக்க ஒரு கொழுவி ஒன்றில் ஈனைக்கப்பட்ட கயிற்றின் மூலம் முயற்சிப்பார் ஆனால் அவரால் அதனை அறுக்க முடியவில்லை எனவும் (தான் அப்போது ஒல்லியாக இருந்தமையால் முடியவில்லை என நகைசுவையாக குறிப்பிட்டிருந்தார்) வீதியால் துவிச்சக்கரவண்டியில் சென்ற ஒருவரின் துணையுடன் பின்னர் அதனை செய்து முடித்தாக நினைவுள்ளது.
  2. உண்மையில் இந்தத் வரலாற்றுத் தொடரைப் படிக்கும்போது திரு அமிர்தலிங்கம் அவர்களது நிலையை அறியமுடிகிறது. இங்குதான் உண்மைகளை அறிந்தவர்கள் அது எதுவாயினும் தயங்காது பதிவிடுவது தெளிவை ஏற்படுத்தும்.
  3. அன்பார்ந்த நட்புடன் றஞ்சித் அவர்களுக்கு மிகச்சிறந்ததொரு செயலைச் செய்துவருகின்றீர்கள். எமது தலைமுறை அறியாத அரசியல் வரலாற்று நகர்வுகளையும், எமது அடுத்தலைமுறை அறிந்து தன்னைத் தகவமைத்துக்கொள்ள வேண்டிய அரசியற் தந்திரோபாயங்களையும் கொண்டதாக இந்தத் வரலாற்று விரிப்புத் திகழ்கிறது. முழுமையடையும்போது இதனை யாழ்க்களம் சார்பாகப் பிரதியாக்கம் செய்து கைகளிற் கிடைக்கச் செய்தால் சிறப்பாக இருக்கும். நிதியை நாமே போட்டுச் செய்துவிடலாம். உங்கள் பொன்னான நேரத்துக்கு கரங்களை நன்றியோடு பற்றுகின்றேன். தமிழினம் கொண்டாடும் ஒரு வரலாற்று நாயகனின் காலத்தில் தமிழினத்திற்காக எதையுமே செய்யாது ஓடிவந்தோமே என்ற வருத்தமும் மேலெழுந்து வாட்டுகிறது. கருத்துகளைப் பதியாவிடினும் படிக்கின்றோம். தொடருங்கள்.... உழைப்பிற்கான பெறுமதியைக் காலம் பதிவுசெய்யும். நன்றி
  4. தன்னையும், தனது அடுத்தலைமுறையையும் அர்பணித்துவிட்டுத் தமிழரது மனமெங்கும் வாழும் வீரத்தலைவன் 'மேதகு' வே.பிரபாகரன் அவர்களுக்கு வீரவணக்கம்!
  5. சுவியர்.. sylvester stallone´ன் மனைவியின் படத்தை போட மறந்து விட்டீர்கள். 🙂
  6. பனை மரம், அரிய வகை மரம் என்ற படியால்... இனி அதனை வெட்ட முடியாது. - மதுரை நீதிமன்றம்.-
  7. பாடல்: உன்னை நினைச்சதும் வரிகள்:கவிஞர் தாமரை இசை:ஏ.ஆர்.ரகுமான் பாடியவர்கள்: ஸெரியா கோசல்,சர்தக் கல்யாணி பல்லவி. ஆண் : உன்னை நினைச்சதும் மனசு மயங்குதே மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே ! முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே... முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே ! பெண் : இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே... ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே... ஆண் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே ! மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே ! பெண் : தூரம் குறைந்ததும் பேசத் தோணுதே ! பேசப்பேசத்தான் இன்னும் பிடிக்குதே ! பிடிக்கும் என்றதால் நடிக்கத் தோணுதே... நடிக்கும் போதிலே சிரிப்பு வந்ததே ! ஆண் : சிரிப்பு வந்ததும் நெருக்கமாகுதே ! நெருங்கிப் பார்க்கையில் நேசம் புரியுதே..! பெண் : நேசங்களால் கைகள் இணைந்ததே ! கை சேர்ந்ததால் கவலை மறந்ததே ! தோள் சாயவும் தொலைந்து போகவும் கடைசியாக ஓர் இடம் கிடைத்ததே..! ஆண் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே ! மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே ! சரணம். ஆண் : மழை வருகிற மணம் வருவது எனக்கு மட்டுமா ? தனிமையில் அதை முகர்கிற சுகம் உனக்கும் கிட்டுமா ? பெண் : இருபுறம் மதில் நடுவினில் புயல் எனக்கு மட்டுமா ? மழையென வரும் மரகதக்குரல் சுவரில் முட்டுமா ? ஆண் : எனது புதையல் மணலிலே... கொதிக்கும் அனலிலே ! இருந்தும் விரைவில் கைசேரும் பயண முடிவிலே ! உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே ! மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே ! முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே ! முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே ! கொடி அசைந்ததும் காற்று வந்ததா பாடல் ஞாபகம் வருகிறதா??
  8. ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
  9. "எமது மக்கள் உயரிய பதவிகளை வகித்தவர்களையும், வசதியான வாழ்க்கையினை வாழ்ந்தவர்களையும் தான் நினைவில் வைத்திருக்கிறார்கள். ஆனால், நாம் தலைவர்களுக்கென்று விசேடமான அந்தஸ்த்து எதுவுமே வழங்கப்படக் கூடாதென்று முடிவெடுத்திருக்கிறோம். இந்தப் புனிதமான போராட்டத்தில் தமதுயிரை அர்ப்பணித்த அனைத்துப் போராளிகளையும் நாம் சமமாகவே நோக்குகிறோம். எமது தாயக விடுதலைப் போராட்டத்தில் மாவீரராகிய அனைத்துப் போராளிகளையும் ஒரே நாளில் நினைவுகூர்வ்தன் மூலம் எமது போராட்டத்தில் அவர்கள் ஒவ்வொருவரும் ஆற்றிய அர்ப்பணிப்பிற்காக நாம் அவர்களுக்கு நன்றியினையும் கெளரவத்தினையும் செலுத்த முடியும். அவ்வாறில்லையென்றால், காலப்போக்கில் ஓரிரு போராளிகளின் அர்ப்பணிப்புக்கள் மட்டுமே பேசப்படுவதோடு, மற்றையவர்களின் தியாகங்கள் புறக்கணிக்கப்பட்டு, மறக்கப்பட்டு விடும். தமது வீரர்களையும், வீராங்கனைகளையும் கெளரவிக்கத் தவறும் எந்தத் தேசமும் காட்டுமிராண்டிகளின் தேசமாகிவிடும். மற்றைய நாடுகளைப் போலல்லாமல் எமது தேசம் பெண்களுக்கு மிகுந்த கெளரவத்தினை வழங்கிவருகிறது. இவ்வகையான கெளரவத்தினை நாம் எமது வீரர்களுக்கு வழங்குவது கிடையாது. ஆனால், நாம் இன்று ஒரு மாற்றத்தினைக் கொண்டுவந்திருக்கிறோம். நாம் எமது மாவீரர்களுக்கான கெளரவத்தினை வழங்கும் முறையினை ஆரம்பித்து வைத்திருக்கிறோம். இன்றுவரை நாம் எமது மாவீரர்களுக்கான கெளரவத்தினை வழங்கவில்லை. ஆனால், இன்று அதனை நாம் மாற்றியிருக்கிறோம். இன்று எமது மாவீரர்களுக்கு கெளரவம் செலுத்தும் நாள் ஒன்றினை நாம் உருவாக்கியிருக்கிறோம். இன்று எமது தேசம் உலகின் முன்னால் தலை நிமிர்ந்து நிற்க முடிகின்றதென்றால், அது எமது 1307 மாவீரர்களின் அர்ப்பணிப்பினாலும், தியாகத்தினாலுமே சாத்தியமானது. தமது வாழ்க்கைபற்றிச் சிந்திக்காது, தேசத்தின் விடுதலைபற்றி மட்டுமே சிந்தித்து அவர்கள் போராடியதாலேயே உலகின் மரியாதையினை நாம் பெற முடிந்திருக்கிறது. இன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் இந்த மாவீரர் நாளினை நாம் அனுஷ்ட்டிப்போம், இந்த நாள் எமது வாழ்க்கையின் மிக முக்கிய நாளாக அமைய நாம் உறுதியெடுத்துக் கொள்வோம்" - தலைவரின் முதலாவது மாவீரர் நாள் உரையிலிருந்து
  10. எனது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனக்காகவும், என் இனத்திற்காகவும், என் தேசத்தின் விடுதலைக்காகவும் நீங்கள் எடுத்துக்கொண்ட அனைத்து முயற்சிகளுக்காகவும் சாமானியன் எனது நன்றிகள் ஐயா!!!
  11. சங்கரின் மறைவு கார்த்திகை 20 ஆம் திகதி நிர்மலா நித்தியானந்தனின் வீட்டிற்குச் செல்லும் பொழுதுவரை சங்கர் "ஒரு உண்மையான மனிதனின் கதை" எனும் ரஸ்ஸிய நாவலைப் படித்துக்கொண்டிருந்தார். சரியாக 7 நாட்களின் பின்னர், கார்த்திகை 27 ஆம் திகதி தமிழ்த்தேசத்தின் விடுதலைக்காக தனதுயிரை அவர் ஆகுதியாக்கியிருந்தார். இந்த நாளே வீரத்திற்கும், தியாகத்திற்குமான நாளாக நினைவுகூரப்பட்டு வருகிறது. தான் படித்து வந்த நாவலான "ஒரு உண்மையான மனிதனின் கதை" இல் வரும் நாயகனைப் போன்றே சங்கரும் தனதுயிரைத் தமிழ்த்தேசத்திற்காகக் கொடுத்திருந்தார். ஒரு உண்மையான மனிதனின் கதை - ரஸ்ஸிய நாவல் மதுரையின் இடுகாடு ஒன்றில் சங்கரின் உடல் தீயுடன் சங்கமமானது. சங்கரின் இறுதிக் கிரியைக்குத் தானும் போகவேண்டும் என்று பிரபாகரன் விரும்பினார். ஆனால், அவரோடு இருந்தவர்கள் அவரைத் தடுத்து விட்டார்கள். பிரபாகரனின் பாதுகாப்பு அவர்களைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமாகக் கருதப்பட்டது. ஆனால், கிட்டு, பேபி சுப்பிரமணியம், பொன்னம்மான் ஆகியோர் உட்பட சிலர் சங்கரின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டனர். நெடுமாறனும் இந்த இறுதிநிகழ்வில் கலந்துகொண்டார். அது ஒரு மிக முக்கியமான நாளாகக் கருதப்பட்டது. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் துடிப்பான இளைஞர் ஒருவரின் உயிரினை முதன்முதலாக இழந்திருந்தது. சங்கரின் மரணம் புலிகளால் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. இந்த இழப்பினை அறிவிப்பதனூடாக பொலீஸாரும், இராணுவத்தினரும் போராளிகள் மீதான தமது நடவடிக்கைகளை அதிகப்படுத்தலாம் என்று பிரபாகரன் எண்ணினார். மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்டிருந்த புலிகளின் எண்ணிக்கை அன்றைய காலத்தில் வெறும் 30 மட்டும் தான். மேலும், சங்கரின் மரணத்தை அறிவிப்பதனால் தமிழ் மக்களின் மனவுறுதி பாதிக்கப்படும் அதேவேளை புலிகளுடன் இணைந்துகொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கையினையும் பாதிக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால், சங்கரின் இழப்பு அவரது தந்தையாரான ஆசிரியர் செல்வச்சந்திரனுக்கு புலிகளால் அறிவிக்கப்பட்டது. ஒரு நாள் இரவு தனது வீட்டிற்கு வந்த இரு "புலிகளின் பொடியள்" சங்கரின் இறப்புப் பற்றி தன்னிடம் அறியத் தந்ததாக அவர் என்னிடம் பின்னர் கூறியிருந்தார். சங்கரின் முதலாம் ஆண்டு நிறைவின்போது புலிகள் அவரது மறைவினை யாழ்ப்பாணத்தில் வெளிப்படையாக அறிவித்திருந்தார்கள். யாழ்ப்பாணத்தின் சுவர்கள் சங்கரின் திரு உருவப்படத்துடன் அஞ்சலிச் செய்தியைக் காவிக்கொண்டிருந்தன. சங்கரின் வாழ்க்கை, அவரது திறமைகள், துணிவான செயற்பாடுகள் பற்றிய தகவல்களைக் காவிய துண்டுப்பிரசுரங்கள் யாழ்ப்பாணத்தில் மக்களிடையே விநியோகிக்கப்பட்டன. சரத் முனசிங்க என்னுடன் பேசும்போது சங்கரின் மரணம் தொடர்பான விடயங்களை தாம் சில மாதங்களின் பின்னர் அறிந்துகொண்டதாகக் கூறினார். இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு சங்கரின் இறப்பினை முதலாவது தமிழ்ப் போராளியின் மரணம் என்று பதிவுசெய்திருந்தது. சங்கர் மரணமடைந்து ஏழு வருடங்களின் பின்னர் அவரது நினைவுநாளினை மாவீரர் நாளாக அறிவித்தார் பிரபாகரன். வன்னிக் காட்டிற்குள் ஒதுக்கப்பட்டு, இந்திய அமைதிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டிருந்த தனது போராளிகளுக்கு முற்றுகையினை உடைக்கும் மனோதைரியத்தையும், உத்வேகத்தையும் கொடுக்கவும், தனது இயக்கத்திற்கு மேலும் இளைஞர்களை இணைத்துக்கொள்ளவும் ஊக்கப்படுத்த தேசத்திற்காக உயிர்த்தியாகம் செய்த போராளிகளை நினைவுகூருவது அவசியம் என்று அவர் கருதினார். தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டிருப்பது போன்று, தமிழரின் கலாசாராத்தில் ஊறிப்போயிருந்த, பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட்டு வந்த தியாகங்களுக்கெல்லாம் சிகரமான தேசத்திற்காக உயிர்கொடுக்கும் நினைவேந்தலிற்கு மீண்டும் உயிர்கொடுத்தார். தமிழுக்காகவும், தமிழ்த் தேசத்திற்காகவும் உயிர்கொடுத்த வீர மறவர்களைக் கெளரவிக்கும் நடைமுறையான நடுகல் நிறுவி வழிபடும் முறையினை பிரபாகரன் மீளவும் கொண்டுவந்தார். தமிழ்ச் சங்க கால இலக்கியங்களில் மக்களையும், போர்வீரர்களையும் உணர்வெழுச்சியுடன் வைத்திருக்க அக்காலத்தில் நடைமுறையில் இருந்த நடுகல் வழிபாட்டினை பிரபாகரனும் பின்பற்றினார். பிரபாகரனின் நடுகல் வழிபாட்டு முறையின் மீள் உருவாக்கம் எதிர்ப்பர்த்ததுபோலவே மக்களிடையே அதீத ஈடுபாட்டினை ஏற்படுத்தியது. மாவீரர்களாகிப்போன போராளிகளின் பெற்றோர், மனைவி, கணவன், பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் ஆகியோரின் உணர்வுகளை மாற்றிப்போட்டது. இழந்த தமது உறவுகளுக்காக இரங்குவது மட்டுமே தம்மால் செய்யக்கூடியது எனும் நிலையிலிருந்து, அவ்வீர மறவர்களின் கெளரவத்திலும், பெருமைகளிலும் பங்குகொள்ளும் மனநிலையினை இது உருவாக்கியது. மாவீரராகிப்போன குடும்பங்கள் புலிகள் இயக்கத்திடம் இருந்து விலகிச் செல்வதற்குப் பதிலாக அவர்களை நோக்கி நெருங்கிவர இந்த மாவீரர் நாட்களும், கெளரவித்தல்களும் வழிசமைத்துக் கொடுத்தன. ஆதி தமிழ்க் கலாசாரத்தில் நடைமுறையில் இருந்த மாவீரருக்கான வணக்கத்தினை ஒட்டுமொத்த மக்களின் உணர்வெழுச்சியுடன் மீட்டுவந்து நிறுத்தியது. இந்த மாவீரர் வழிபாட்டின் உச்ச நிகழ்வாக 2000 ஆம் ஆண்டில் மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வினைக் குறிப்பிட முடியும். மாவீரர் கெளரவம் தொடர்பான புலிகளின் பிரச்சாரத்தினைக் கேட்டுக்கொண்டிருந்த பல தாய்மார்கள் உணர்வுப் பெருக்கத்தால் ஆட்கொள்ளப்பட்டு, தமது பிள்ளைகளின் நெற்றியில் திலகமிட்டு, நாட்டிற்காகப் போராடும்படி கூறி புலிகளுடன் அனுப்பிவைத்திருந்தார்கள். ஆதித் தமிழ்க் கலாசாரத்தில் மாவீரராகிப் போன தமது கணவன்மாரின் நிகழ்வில் தமது ஆண்பிள்ளையின் நெற்றியில் சந்தனத்தால் வீரத் திலகமிட்டு போர்க்களத்திற்கு அனுப்பிவைக்கும் தாய்மாரின் செயலினை இது ஒத்திருந்தது. சிங்களவர்களும், தமிழ்க் கலாசாரத்துடன் சம்பந்தப்பட்டிருக்காத இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும் மாவீரர்களைக் கெளரவிக்கும் கலாசாரத்தினை விளங்கிக்கொள்ளவோ அல்லது மதிக்கவோ தவறிவிட்டனர். தமிழ்ச் சமூகத்தில் பரவிவந்த ஆரிய இந்துக் கலாசாரம் இந்த மாவீரர் வழிபாட்டு முறையினை சிறுகச் சிறுக மழுங்கடித்து விட்டிருந்தது. ஆனால், தமிழ்க் காலாசாரத்தின் வேரிற்குள் சென்று மீண்டும் மாவீரர் கெளரவிப்பினை பிரபாகரன் மீட்டு வெளியே எடுத்து வந்தார். முதலாவது மாவீரர் நாளில் தலைவர் பிரபாகரன் - 1989 1989 ஆம் ஆண்டு, சங்கல் மரணித்த நாளான கார்த்திகை 27 ஆம் திகதியினை மாவீரர் நாளாக அறிவித்தார் பிரபாகரன். முல்லைத்தீவு மாவட்டத்தின் காட்டுப்பகுதியான நித்திகைக்குளத்தில் ராணுவச் சீருடை அணிந்த 600 ஆண் மற்றும் பெண் போராளிகள் அணிவகுத்து நிற்க அதுவரை தாய்நாட்டின் விடுதலைக்காகவும், தமிழ் இனத்திற்காகவும் தமதுயிரை ஈந்த 1307 மாவீரகளுக்கான வணக்கம் செலுத்தப்பட்டது. போரில் காவியமான மாவீரர்களின் திரு உருவப் படங்கள் நடுகற்களில் வீற்றிருக்க, அவர்களின் பாதங்களின் மீது மலர்கள் தூவப்பட்டு, பிரபாகரன் முதலாவது விளக்கினை ஏற்ற, தொடர்ச்சியாக அனைத்து மாவீரர்களுக்கும் விளக்கேற்றப்பட்டது. ஈகைச் சுடர் ஏற்றல் எனும் மிகவும் இயல்பான இந்த நிகழ்வு இன்று விரிவான, உணர்வுபூர்வமான, ஒட்டுமொத்த மக்களின் உணர்வெழுச்சியுடனான சடங்காக மாறிப்போனது. தான் ஆரம்பித்த மாவீரர் வணக்க நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக போராளிகளால் அனுஷ்ட்டிக்கப்பட்டது கண்டு நெகிழ்ந்த பிரபாகரன் தனது முதலாவது மாவீரர் நாள் உரையினை தனது உணர்வுகளின் குவியலாக எடுத்துரைத்தார். மிகவும் சிறிய பேச்சாக அமைந்த பிரபாகரனின் முதலாவது மாவீரர் நாள் உரை மாவீரர்களை வணங்கும் நிகழ்வு ஏன் அவசியம் என்கிற விளக்கத்தோடு ஆரம்பித்திருந்தது. "எமது போராட்டத்தில் இன்றைய நாள் மிகவும் முக்கியமான நாள். தமிழ் ஈழம் எனும் உயரிய இலட்சியத்தை அடைய தமது இன்னுயிரை அர்ப்பணித்த 1307 மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் நாளாக இந்த மாவீரர் தினத்தினை நாம் உருவாக்கினோம். இன்றே இதனை முதன்முறையாகச் செய்ய ஆரம்பித்திருக்கிறோம். பல நாடுகளில் மரணித்த தமது விடுதலைப் போராளிகளுக்கான கெளரவத்தினை அவர்கள் வழங்கிவருகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நாமும் எமது மாவீரர்களை மனதில் நிறுத்தி வணகுவதென்று முடிவெடுத்திருக்கிறோம். எமது இயக்கத்தில் முதலாவது மாவீரரான சங்கரின் நினைவுநாளினை, தாயக விடுதலையில் வித்தாகிப்போன அனைத்து மாவீரகளுக்குமான வணக்க நாளாக இன்றுமுதல் நாம் அனுஷ்ட்டிப்போமாக" என்று கூறினார்.
  12. புலிகளின் முதலாவது மாவீரர் தமது பிரதான வீட்டின் விறாந்தையில் அமர்ந்திருந்த ரஜனி ராஜசிங்கம் , தமது வளவினுள் இராணுவத்தினரின் ஜீப் வண்டியொன்று நுழைவதைக் கண்ணுற்றார். உடனே வீட்டின் பின்புறம் நோக்கி ஓடிச்சென்று தனது மூத்த சகோதரியான நிர்மலாவைப் பார்த்து, "நிர்மலா அக்கா, ஆமி ஜீப்பொன்று வருகிறது" என்று கத்தினார். தனது சகோதரியைப் பற்றி நன்கு அறிந்துவைத்திருந்த ரஜனி, அக்கணத்தில் வீட்டினுள் புலிகளின் போராளியான சங்கரும் இருந்ததை அறிந்திருந்தார். நிர்மலாவின் பராமரிப்பில் இருந்துவந்த சீலனை தாம் பத்திரமாக தமிழ்நாட்டிற்கு அனுப்பிவைத்துவிட்டோம் எனும் தகவலைச் சொல்வதற்காக சங்கர் நிர்மலாவின் வீட்டிற்கு அப்போது வந்திருந்தார். மேலும், தன்னை பல நாட்களாக தமது வீட்டில் தங்க வைத்து, அக்கறையுடன் பார்த்துக்கொண்டதற்காக நிர்மலாவிற்கும், நித்தியானந்தனிற்கும், ரஜனிக்கும் தனது நன்றியைத் தெரிவித்து விடுமாறு சீலன் சங்கரைக் கேட்டிருந்தார், ஆகவேதான் சங்கர் அன்று நிர்மலாவின் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். சங்கர் நிர்மலாவின் வீட்டிற்கு வந்த நேரம் மதியமாதலால், அவரை தம்முடன் மதிய உணவில் கலந்துகொள்ளுமாறு நிர்மலா கேட்டிருந்தார். "இன்று நான் கோழிக்கறி சமைத்திருக்கிறேன். அதைச் சாப்பிட்டு விட்டு உங்களின் தலைவரின் கோழிக்கறி போல் சுவையானதா என்று கூறுங்கள்" என்று நிர்மலா சங்கரிடம் வேடிக்கையாகக் கூறினார். ஏனென்றால், பிரபாகரனின் கோழிக்கறி பற்றி சீலன் பல தடவைகள் நிர்மலாவிடம் பேசியிருக்கிறார். நிர்மலா, சங்கரின் உணவுக் கோப்பையில் இரு கோழிக்கறித் துண்டுகளைப் பரிமாறியிருந்தார். முதலாவது துண்டினை சங்கர் சுவைக்க ஆரம்பிக்கும்போதே ராணுவத்தின் வருகை தொடர்பான ரஜனியின் கூக்குரல் அவர்களுக்குக் கேட்டது. உடனே சுதாரித்துக்கொண்ட சங்கர், பின்கதவூடாக வெளியேறி மதில் நோக்கி ஓடுகையிலேயே வீட்டின் பின்புறமாக ஓடிவந்த ராணுவக் கொமாண்டோ வீரனின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானார். அவரது வயிற்றுப் பகுதியில் சன்னம் பாய்ந்தது. வயிற்றில் ஏற்பட்ட காயத்திலிருந்து இரத்தம் ஓடிக்கொண்டிருக்க, அதனை ஒரு கையினால் அழுத்துப் பிடித்துக்கொண்ட சங்கர் ஓடத் தொடங்கினார். சுமார் மூன்று கிலோமிட்டர்கள் வரை ஓடி, தமது மறைவிடம் ஒன்றினுள் அடைக்கலமாகியபின்னர் தனது கைத்துப்பாக்கியை சகபோராளிகளிடம் கொடுத்துவிட்டு மயங்கிச் சரிந்தார் சங்கர். எதிரியிடம் உயிருடன் பிடிபட்டுவிடக்கூடாதெனும் உறுதியும், தனது ஆயுதத்தை உயிரைக் கொடுத்தாவது காத்துக்கொள்ள வேண்டும் என்கிற இயக்கத்தின் கொள்கையும் சங்கரை ஆட்கொள்ள கடுமையான இரத்த இழப்பிற்கூடாகவும் அவர் மிகுந்த சிரமங்களைத் தாங்கி தனது சகாக்களிடம் வந்து சேர்ந்திருந்தார். சங்கரின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. ஆகவே, அவரைப் பாதுகாப்பாக தமிழ்நாட்டிற்குக் கூட்டிச்சென்று மருத்துவ உதவியினைப் பெற்றுக்கொடுக்கும் சிரமமான பணி மூத்த போராளியான அன்டன் எனப்படும் சிவகுமாருக்குக் கொடுக்கப்பட்டது. அன்டன், சங்கரை தமிழ்நாட்டின் கோடியாக்கரை எனும் போராளிகளுக்கு மிகவும் பரீட்சயமான பகுதிக்கு படகுமூலம் பாதுகாப்பாகக் கொண்டுசென்றார். அங்கு, புலிகளின் மறைவிடம் ஒன்றில் தங்கவைக்கப்பட்ட சங்கருக்கு மருத்துவ உதவிகளை மருத்துவர் ஒருவரூடாகப் பெற்றுக்கொடுத்தார். பின்னர், மதுரைக்கு உடனடியாக சங்கரை அழைத்துச் சென்ற அன்டன், மதுரை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தார். மதுரையில் சங்கரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவித்தனர். புலிகளின் பயிற்சி முகாம்கள் ஒன்றில் அப்போது தங்கியிருந்த பிரபாகரனுக்கு சங்கரின் நிலைபற்றி அறிவிக்கப்பட்டது. உடனடியாக சங்கரைப் பார்க்க வந்தார் அவர். சங்கர் பராமரிக்கப்பட்டு வந்த மருத்துவமனை அறையினுள் பிரபாகரன் நுழையும்போது பேபி சுப்பிரமணியமும் அங்கிருந்தார். இந்தச் சம்பவம் குறித்து மிகவும் துல்லியமாக அவர் என்னுடன் பின்னர் பேசியிருக்கிறார். பிரபாகரன் மிகவும் மனவேதனையுடன் காணப்பட்டார். சங்கரின் கைகளை தனது கைகளில் ஏந்திக்கொண்ட பிரபாகரன், அவற்றினை தனது கன்னங்களில் வைத்து அழுத்தினார். பின்னர் சங்கரின் கைகளை மெதுவாக அவரருகில் வைத்துவிட்டு, அவரின் தலைமாட்டில் அமர்ந்துகொண்டு, சங்கரின் தலையினை தனது மடியில் தூக்கி வைத்துக்கொண்டார். சங்கரின் தலைமுடியினை மென்மையாக பிரபாகரன் வருடிக்கொண்டிருக்க, சங்கர் அண்ணாந்து பிரபாகரனைப் பார்த்தார். தனது தலைவர் தன்னைப் பார்க்க வந்திருப்பதை சங்கர் அப்போதுதான் உணர்ந்துகொண்டார். சங்கரின் உதடுகள் "தம்பி, தம்பி, தம்பி" என்று முணுணுக்கத் தொடங்கின. பிரபாகரனுக்கு இயக்கத்தினுள் இருந்த செல்லப்பெயர் "தம்பி". ஆனால், அவரிலும் வயதில் குறைந்தவர்கள் கூட அவரைச் செல்லமாகத் தம்பி என்றே அழைத்தனர். சங்கர் பிரபாகரனைக் காட்டிலும் 6 வருடங்கள் இளையவர். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை நேரில் பார்த்த இன்னொருவர் நெடுமாறன். இச்சம்பவம் தொடர்பான தத்ரூபமான விபரிப்பினை அவர் பல செவ்விகளிலூடாக வெளிக்கொணர்ந்திருக்கிறார். அப்படியான ஒரு செவ்வியில், "அவர்கள் ஒருவரையொருவர் பாசத்துடன் பார்த்துக்கொண்டார்கள். அந்தப்பொழுதில் அவர்களின் மனங்களில் எவ்வாறான எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன என்பதை இலகுவில் கணித்துவிடமுடியாதிருந்தது. சங்கரை மிகவும் இரக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்த பிரபாகரனின் முகம் கூறிய ஒரே செய்தி, தயவுசெய்து எம்மை விட்டுப் பிரிந்துவிடாதே என்பதாக எனக்குத் தெரிந்தது" என்று அவர் கூறியிருக்கிறார். பிரபாகரனின் உடல்மொழி அவர் மிகவும் வருத்தத்துடன் இருந்தார் என்பதைச் சொல்லியது. தனது முதலாவது போராளியின் மரணத்தை காண்பது அவரை மிகவும் வருத்தியிருந்தது. வெறும் 22 வயதே நிரம்பியிருந்த இளைஞர், வாழ்வின் சுகபோகங்களை தேசத்தினதும், இனத்தினதும் மீட்சிக்காகவும் கெளரவத்திற்காகவும் தியாகம்செய்து இன்று உயிரையும் கொடுக்கும் நிலையில் இருப்பதைக் கண்டு பிற்பாகரன் மிகவும் மனமுடைந்து போயிருந்தார். பிரபாகரனின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து அவரது கன்னங்களின் மேல் ஓடியது. சங்கரின் உயிர்விளக்குச் சிறுகச் சிறுக அணைந்துகொண்டிருந்தது.
  13. ஒரு காலத்தில் இலங்கையின் வலது சாரி அரசு(UNP) போல தற்போது இந்திய அரசு(BJP) இயங்குகிறது (சிறுபான்மையினரின் மீதான வன்முறையினை அரசியல் இலாபத்திற்காக தூண்டுவது).

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.