தமிழ்ப் போராளி அமைப்புக்களை ஒன்றுபடுத்த முயன்ற அருளர் என்கின்ற அருட்பிரகாசம்
யாழ்ப்பாணத்தில் பொலீஸார் மீதும் இராணுவத்தினர் மீதும் புலிகள் தமது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தத் தொடங்கியிருந்த அதே நேரம் போராளி அமைப்புக்களை ஒரு அணியாக சேர்க்கும் முயற்சிகளும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. ஆரம்பத்தில் பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையே இருந்த பிணக்கினைச் சரிசெய்ய அமிர்தலிங்கம் மற்றும் பெருஞ்சித்திரனார் ஆகியோர் மேற்கொண்ட முயற்சிகள் 1982 ஆம் ஆண்டு ஆவணி மாதத்தில் அருளரால் மேலும் விரிவாக்கப்பட்டன.
ஏ. ஆர். அருட்பிரகாசம்
"தமிழரின் பூர்வீகத் தாயகம்" எனும் நூலினை எழுதிய அருளரிடம் எனக்கு பேசும் வாய்ப்புக் கிடைத்திருந்தது. அவரது இந்த நூலினை சரிபார்ப்பதிலும் அவர் பின்னாட்களில் எழுதிய நூலான "பொருளாதாரச் சுரண்டல்" எனும் நூலின் ஆக்கத்திலும் நான் அவருக்கு உதவியிருந்தேன். "இந்த நூல்களை எதற்காக எழுதினீர்கள்?" என்று அவரைக் கேட்டேன். "எல்லாம் வயிற்றுப் பசிக்காகத்தான்" என்று சிரித்துக்கொண்டே அவர் கூறினார். "நாம் வெறும் வயிற்றுடன் தூங்கிய நாட்களும் இருந்தன " என்று அவர் என்னிடம் கூறினார்.
"அப்படியான ஒரு இரவிலேயே நாம் அனைவரும் ஒன்றாக இயங்குவது குறித்துச் சிந்தித்தேன். அப்படி ஒன்றாவதன் மூலம் உமா கிளிநொச்சி வங்கியில் கொள்ளையடித்த பெருந்தொகைப் பணத்தினை எமக்குள் பங்கிட்டிருக்க முடியும் என்று நினைத்தேன்" என்று அவர் கூறினார்.
"உமா அன்று தான் கொள்ளையிட்ட பணத்தினை வேறு எந்த போராளி அமைப்புடனும் பகிர்ந்து கொண்டாரா?" என்று நான் அருளரைக் கேட்டேன்.
"இல்லை, நான் அதுபற்றிப் பேசும்போதெல்லாம் எனது பேச்சை அவர் தட்டிக் கழித்து விட்டார்" என்று அவர் கூறினார்.
ஆனால், போராளிகளை ஒன்றிணைக்கும் தனது முயற்சிபற்றி அருளர் சிறிதும் கவலைப்படவில்லை. பொலீஸ் அதிகாரி பஸ்டியாம்பிள்ளையின் கொலை மற்றும் 1978 ஆம் ஆண்டு கண்ணாடிப் பண்ணை மீதான பொலீஸாரின் தேடுதல்கள் ஆகியவற்றின் பின்னர் தமிழ்நாட்டிற்குத் தப்பிச் சென்றிருந்த அருளர், போராளி அமைப்புக்களிடையேயான ஒற்றுமையின் அவசியத்தை நன்கு உணர்ந்தே இருந்தார்.
தான் தமிழ்நாட்டில் தங்கியிருந்த நாட்களில் அங்கு வாழ்ந்து வந்த இலங்கைத் தமிழர்கள் மற்றும் தேசியத்திற்கு ஆதரவான தமிழ்நாட்டுத் தமிழர்கள் என்று அனைவருமே தன்னிடம் முன்வைத்த ஒரே கேள்வி, "ஏன் உங்களால் ஒன்றாகச் செயற்பட முடியாமல் இருக்கிறது?" என்பதுதான் என்று கூறிய அருளர், அதற்கான பதில் தன்னிடம் இருக்கவில்லை என்றும் கூறுகிறார்.
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுரையின் நாரந்தனைப் பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்ட அருளர் 1949 ஆண்டு பிறந்தவர். அவரது தகப்பனார் அருளப்பு ஆசிரியராகக் கடமையாற்றி வந்ததுடன் தந்தை செல்வாவின் சமஷ்ட்டிக் கட்சியிலும் தீவிரமாகச் செயற்பட்டு வந்தவர். 1956 ஆம் ஆண்டு இடம்பெற்ற காலிமுகத்திடல் சத்தியாக் கிரகத்திலும் தந்தை செல்வாவுடன் சேர்ந்து பங்கெடுத்தவர். காலிமுகத்திடல் போராட்டம் சிங்களக் காடையர்களால் அடித்துக் கலைக்கப்பட்ட பின்னர் முறிந்த கையுடன் வீடுவந்த தனது தகப்பனார், "எனது மொழிக்குச் சமாமான அந்தஸ்த்துக் கோரி கால்களை மடித்து தரையில் இருந்து கடவுளைப் பார்த்து வேண்டியதற்காக எனக்குத் தரப்பட்ட தண்டனை இது" என்று தன்னிடம் கூறியதாக அருளர் கூறினார். சில வருடங்களுக்குப் பின்னர், 1964 ஆம் ஆண்டு வன்னிக்கு இடம்பெயர்ந்து சென்ற அருளரின் தந்தையார், தமிழர் தாயகத்தின் மீது அடாத்தாக மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களைத் தடுக்கும் நோக்கில் சமஷ்ட்டிக் கட்சியினரால் எல்லையோரக் கிராமங்களில் அமைக்கப்பட்ட கண்ணாடிப் பண்ணை எனப்படும் கிராமத்தில் குடியேறினார்.
காலிமுகத்திடல் சத்தியாக் கிரகம்
லெபனானில் தனது பயிற்சியை முடித்துக்கொண்டு திருச்சியூடாக பாலாலி வருவதற்காக திருச்சி விமான நிலையத்தில் காத்திருந்தவேளை அருளருக்கு அவசரச் செய்தியொன்று வந்திருந்தது. அதாவது, பலாலியில் அருளர் கைதுசெய்யப்படப் போகிறார் என்பதும், அவரது தகப்பனாரின் கண்ணாடிப் பண்ணை மீது பொலீஸாரின் அடாவடிகளும் தேடுதல்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்பதுமே அச்செய்தி. ஆகவே அவர் சென்னைக்குச் சென்று அங்கேயே தங்கிவிடத் தீர்மானித்தார். லெபனானின் பெய்ரூட் விமான நிலையத்திலும் அவர் இரு வாரங்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. குண்டுகளைத் தயாரிக்கும் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த அருளர், தான் இலங்கை மீளும்போது தன்னுடன் குண்டுகளைத் தயாரிக்கும் பொருட்களையும் இரகசியமாக தனது பயணப் பையில் கொண்டுவர முயன்றிருந்தார். பெய்ரூட் விமான நிலையத்தில் இவற்றினைக் கண்டுகொண்ட சுங்க அதிகாரிகள் அருளரைக் கைதுசெய்திருந்தனர். ஆனால், லெபனானில் இயங்கிவந்த செல்வாக்குள்ள பலஸ்த்தீன ஆயுதக் குழுவான அல் பத்தா அமைப்பின் போராளி ஒருவர், அருளரைத் தனக்குத் தெரியும் என்றும், அவர் ஒரு இயந்திரவியலாளர் என்றும், கற்களை வெடிக்கவைப்பதற்காகவே குண்டு தயாரிக்கும் பொருட்களைத் தன்னுடன் கொண்டு வந்தார் என்றும் சுங்க அதிகாரிகளிடம் பேசி நம்பவைத்து அருளரை விடுவித்திருந்தார்.
Al-Fatah Group
"அது ஒரு கடிணமான வேலை" என்று போராளி அமைப்புக்களை ஒன்றாக்க தான் முயன்றது குறித்துப் பேசும்போது அருளர் கூறினார். 1982 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த அமைப்புக்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்திருந்தது. தமிழ் ஈழ விடுதலைப் புலிகள், தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் ஈழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் ஈழப் புரட்சிகர மாணவர் அமைப்பு ஆகியவையே அந்த ஐந்து அமைப்புக்களும் ஆகும். இந்த அமைப்புக்களின் தலைவர்களிடையே பகைமைகள் காணப்பட்டபோதிலும், பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையே இருந்தது போன்று தீவிரமானவையாக அவை இருக்கவில்லை. ஈ பி ஆர் எல் எப் அமைப்பின் தலைவரான பத்மநாபாவுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையிலும் பிணக்குகள் இருந்தன. அமைப்புக்களின் தலைவர்களுக்கிடையேயும், போராளிகளுக்கிடையேயும் சூழ்ச்சிகளும் காலை வாரிவிடும் செயற்பாடுகளும் அப்போது சர்வசாதாராணமாகவே நடைபெற்று வந்திருந்தன.
போராளி அமைப்புக்களுக்கிடையிலான இந்த பூசல்கள் சிலவேளைகளில் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களால் ஆதரிக்கப்பட்டதுடன், சில சமயங்களில் இந்தப பூசல்கள் ஆழமாவதற்குக் காரணமாகவும் அவர்களது நடவடிக்கைகள் அமைந்திருந்தன. பழ நெடுமாறனின் தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ் மற்றும் கே வீரமணியின் திராவிட கழகம் ஆகிய அரசியற் கட்சிகள் புலிகளுக்கு ஆதரவளித்து வந்தன. டெலோ அமைப்பின் தலைவர் தனது இயக்கத்தைனை மு கருநாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகத்தை நோக்கி இழுத்துச் சென்றிருந்தார். புளொட் அமைப்பிற்கு பெருஞ்சித்திரனாரின் தனித் தமிழ் இயக்கமும், ரஸ்ஸியச் சார்புக் கம்மியூனிஸ்ட் கட்சியும் ஆதரவு வழங்க, சீனச் சார்பு இந்தியக் கம்மியூனிஸ்ட் கட்சி ஈ பி ஆர் எல் எப் அமைப்பிற்கு ஆதரவு வழங்கி வந்தது.
தமிழ் போராளி அமைப்புக்களில் ஈரோஸ் அமைப்பு மாத்திரமே தமிழ்நாட்டு அரசியற் கட்சிகள் எவற்றுடனும் தொடர்புகளைப் பேணாது தனித்துச் செயற்பட்டு வந்தது.
தமது அரசியல்த் தத்துவார்த்த ரீதியிலும் தமிழ்ப் போராளி அமைப்புக்கள் வேறுபட்டுக் காணப்பட்டன. எல்லா அமைப்புக்களுமே மார்க்ஸிஸம், சோஷலிஸம் என்கிற அடிப்படையில் தமது அரசியலை வகுத்திருந்த போதிலும் அவற்றுக்கான முக்கியத்துவத்தை ஒவ்வொரு அமைப்பும் வேறுபட்ட அளவிலேயே வழங்கி வந்தன. புலிகளைப் பொறுத்தவரையில் மார்க்ஸிஸம் என்பது மேலெழுந்தவாரியாக மட்டுமே கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. புலிகளைப் பொறுத்தவரையில் சாதீய வேறுபாடுகளைக் களைவது, சீதனக் கொடுமைகளைக் களைவது உட்பட சமூகத்தில் காணப்பட்ட கொடுமையான நடைமுறைகளை அழிப்பது என்பதே பிரதானமான சமூகம் சார்ந்த செயற்பாடாகக் காணப்பட்டது. ஆனால், ஈ பி ஆர் எல் எப் அமைப்பானது அடிப்படையில் மார்க்ஸிஸ அமைப்பாகச் செயற்பட்டு வந்ததோடு சமூகத்தின் பல்வேறுபட்ட மக்கள் பிரிவுகளான பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் ஆகியோரை போராட்டத்திற்காகத் திரட்டும் நோக்கத்தினைக் கொண்டிருந்தது.
"இந்தப் பிரச்சினை பற்றி நான் ஆராய்ந்தபோதே அதன் ஆழம் குறித்து அறிந்துகொண்டேன்" என்று அருளர் என்னிடம் கூறினார். ஒவ்வொரு அமைப்பினதும் தனித்துவத்தைப் பாதுகாத்துக்கொள்ளும் அதேவேளை இவ்வமைப்புக்கள் ஒவ்வொன்றையும் எப்படி ஒரு குடையின் கீழ் கொண்டுவருவது என்பதுபற்றிச் சிந்திக்கத் தொடங்கினோம் என்று அருளர் கூறினார். "எம்மைப்பொறுத்தவரை பாலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் செயல்முறை சிறந்ததாகத் தெரிந்தது" என்றும் அவர் கூறினார்.
ஆகவே பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தினை ஒத்த திட்டத்தினை முன்மொழிந்த அருளர், அதற்கு ஈழம் விடுதலைக் கமிட்டி என்று பெயரிட்டார். இந்த அமைப்பு ஐந்து கமிட்டிகளின் தலைவர்களை உள்ளடக்கிய உயர் பீடத்தைக் கொண்டிருக்கும்.
"எனது திட்டத்தினை அனைத்து போராளி அமைப்புக்களும் ஏற்றுக்கொண்டது எனக்கு மகிழ்வினைத் தந்திருந்தது" என்று அருளர் கூறினார்.
ஜெயவர்த்தனவின் அரச பயங்கரவாதத்திற்கெதிராகச் செயற்படுவதற்கு போராளி அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணையவேண்டும் என்று இலங்கையிலும், வெளிநாடுகளில் இருந்தும் கல்விமான்கள், ஆதரவாளர்கள், முக்கியஸ்த்தர்கள் ஆகியோரிடமிருந்து தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்த அழுத்தங்களையடுத்து அருளரின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதைத் தவிர வேறு தெரிவுகள் போராளித் தலைவர்களுக்கு அப்போது இருக்கவில்லை.
பிரபாகரன் தலைமையிலான புலிகள் இயக்கம் ராணுவப் பிரிவிற்குப் பொறுப்பாகவும், உமா மகேஸ்வரன் தலைமையிலான புளொட் அமைப்பு அரசியல்ப் பிரிவிற்குப் பொறுப்பாகவும், பாலகுமாரன் தலைமையிலான ஈரோஸ் அமைப்பு பொருளாதார துறைக்குப் பொறுப்பாகவும், சிறி சபாரட்ணம் தலைமையிலான டெலோ அமைப்பு வெளிவிவகாரத் தொடர்புகளுக்குப் பொறுப்பாகவும், பத்மநாபா தலைமையிலான ஈ பி ஆர் எல் எப் அமைப்பு உள்நாட்டுப் பாதுகாப்புத்துறைக்குப் பொறுப்பாகவும் இருக்கும் என்று கூறப்பட்டது.
ஜெயவர்த்தனாவுடம் சேர்ந்தியங்கும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை ஓரங்கட்டுவது தொடர்பாக போராளி அமைப்புக்களால் எடுக்கப்பட்ட தீர்மானம் பற்றியும் அருளர் என்னுடன் பேசினார் .
"1983 ஆம் ஆன்டு இடைத் தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்குப் போட்டியாக சுயேட்சை வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதன் மூலம் நாம் அவர்களை ஓரங்கட்டியிருக்க முடியும். சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினை நடத்துவதாக ஜெயவர்த்தன அறிவித்தபோது அது எமக்குச் சாதகமாகவே தெரிந்தது" என்று அருளர் கூறினார்.
அருளரால் முன்மொழியப்பட்ட இணைந்த போராளிகள் அமைப்பு, ஜெயவர்த்தனவின் அரசாங்கம், முன்னணியுடன் பேசுவதைத் தவிர்த்து இனிமேல் தம்முடனேயே நேரடியாகப் பேச வேண்டும் என்றும் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றியது. 1983 ஆம் ஆண்டு பங்குனியில் இந்த இணைந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், தமிழர்களின் பிரச்சினைகளைக்குத் தீர்வான ஈழத்திற்கு மாற்றீடான தீர்வொன்றினை ஜெயவர்த்தனவின் அரசாங்கம் முன்வைக்குமிடத்து அதனைச் சாதகமான முறையில் பரிசீலிக்கத் தாம் தயாராக இருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகளுக்கான நடவடிக்கைகளை ஜெயவர்த்தன அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டிருந்தது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை ஓரங்கட்டும் தமது திட்டத்தின் ஒரு அங்கமாகவே இந்த முயற்சி போராளி அமைப்புக்களின் கூட்டினால் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக அருளர் மேலும் கூறினார்.
ஆனால், போராளி அமைப்புக்களின் கூட்டினால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையினை ஜெயவர்த்தனவும் அமிர்தலிங்கமும் முற்றாக நிராகரித்திருந்தனர். ஜெயாரைப் பொறுத்தவரை அமிர்தலிங்கத்துடனான தனது தொடர்பினை அப்போதுதான் மீளவும் புதுப்பித்திருந்தார். அமிர்தலிங்கமோ மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போயிருந்ததன் மூலம் மக்களின் உணர்வுகளையோ போராளிகளின் மனோநிலையினையோ சரியாகக் கணிப்பிடத் தவறியிருந்தார்.
இது திரு சபாரட்ணம் குறிப்பிட்ட விடயங்கள். எனது தரவுகள் இல்லை. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.