Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    8975
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    19669
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    20355
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    33811
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/05/23 in all areas

  1. ஓயாத நிழல் யுத்தங்கள் – 1 இது வரை இரு உலகப் போர்களை உலகம் கண்டிருக்கிறது. இவற்றுள் இரண்டாவது உலகப் போரின் பின்னர் இரு துருவங்களாக உருவான தேசங்கள் பனிப்போர் எனப்படும் நிழல் யுத்தங்களில் ஈடுபட்டதன் தாக்கம் இன்றும் உலகின் அரசியல், பூகோள நிலைமைகளில் எதிரொலிக்கிறது. அமெரிக்காவின், ஐரோப்பாவின் சில நகரங்களில் இன்றும் பனிப்போர் காலக் கட்டமைப்புகள் - அணுவாயுதத் தாக்குதலில் இருந்து காக்கும் காப்பரண் கட்டிடடங்கள்- நிலைத்திருக்கின்றன. 90 இற்குப் பிறந்த இளவல்களுக்கு இந்தக் கட்டிடங்கள் பற்றி எதுவும் தெரியாது. 90 களில் வயசுக்கு வந்த (சுவியர் சில சமயங்களில் குறிப்பிடும் 90’s kids) எங்கள் போன்றோருக்கு பனிப்போரின் முடிவு காலம் ஒரு “வாழ்ந்த அனுபவம்”. தனிப்பட்ட ரீதியில், என் வாசிப்பார்வத்தை வளர்த்ததில் பனிப்போருக்கு பெரிய பங்கிருக்கிறது. இதை ஒரு தட்டையான வரலாறாகச் சொல்லி விட முடியாது. ஆனால், அந்தக் காலங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் சார்ந்து முப்பரிமாணச் சித்திரமாக எங்கள் நினைவுகள் இருக்கின்றன. இவை சார்ந்து சில கட்டுரைகளை தனித்தனியாக எழுதும் முயற்சி இது. இதன் மூலம் உலக வரலாற்று வாசிப்பையும், பகிர்வையும் ஊக்குவிக்கும் ஒரு சிறு முயற்சி. இரு முன்னறிவித்தல்கள்: 1. இது மிகவும் மெதுவாக நகரப் போகும் ஒரு முயற்சி, எழுதுபவருக்கு வேறு வேலைகள் இல்லாமல் வெட்டியாக இருக்கக் கிடைக்கும் போது மட்டும் இது எழுதப் படும். 2. இந்தத் தொகுப்பில் இணைக்கும் படங்கள் அனேகமாக அமெரிக்க ஆவணக்காப்பகத்தில் (National Archives) இருந்து எடுக்கப் பட்டவையாக இருக்கும். இதன் அர்த்தம், அமெரிக்கா சொல்வதை மட்டும் விபரிக்கும் நோக்கமல்ல. இந்த ஆவணக்காப்பகத்தில் தான் பெரும்பாலான அரிய புகைப்படங்கள் பதிப்புரிமையில்லாமல் பயன்படுத்தக் கூடியவையாக இருக்கின்றன. கொரியா ஜூன் ஜூலை மாதங்கள் கொரிய தீபகற்பத்திற்கு முக்கியமான மாதங்கள். ஜூன் மாதம் 25, 1950 இல் கொரிய நேரப்படி அதிகாலையில் வடகொரியாவின் படைகள் சத்தமில்லாமல் எல்லையைத் தாண்டி தென் கொரிய தலை நகர் நோக்கி நகர்ந்தன. இது ஏன் முக்கியமெனில், இரண்டாம் உலகப் போரின் பின்னர், உலகில் முதன் முதலாக ஒரு நாட்டின் படைகள் எல்லை தாண்டி இன்னொரு அயல் நாட்டினுள் நுழைவது இது தான் முதல் தடவை. 3 ஆண்டுகள் கழித்து, பல இலட்சம் அமெரிக்க, கொரிய, மற்றும் சீனப் படைகள் உள்ளடங்கிய தரப்புகள் பலியான பின்னர் ஜூலை 27, 1953 இல் போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் கொரிய யுத்தம் முடிவுக்கு வந்தது. எப்படி இரு கொரியாக்கள் உருவாகின? ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்த கொரியாவை, இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் தற்காலிகமாக சோவியத்தும், அமெரிக்காவும் பாதியாகப் பிரித்து அங்கேயிருந்து சரணடைந்த ஜப்பானியப் படைகளை அகற்றுவது எனத் தீர்மானிக்கப் பட்டிருந்தது. இதை எப்படிச் செய்வதென யோசித்துக் கொண்டிருக்கும் போதே, சோவியத் நாடு தன் படைகளை வட கொரியாவில் நிலை நிறுத்த ஆரம்பித்தது. அவசர அவசரமாக அமெரிக்கா தன் படைகளை தெற்கில் குவிக்க ஆரம்பித்தது. கொரிய தீபகற்பம், 38thparallel சமாந்தரக் கோடு எனப்படும் latitude இன் படி வட, தென் கொரியாக்களாக உருவானது. இதன் பின்னர், 1946 இல் தற்போதிருக்கும் (கோசானின் தெய்வமச்சான்) கிம்மின் தாத்தா கிம் இல் சங் வட கொரியாவில் கம்யூனிச ஆட்சியை நிறுவியதுடன் அந்த 38 சமாந்தர எல்லைக் கோடும் அப்படியே நிரந்தர எல்லையாக நிலைத்து விட்டது. இந்த எல்லையைத் தாண்டித் தான் 1950 இல் வட கொரிய படைகள் தெற்கை ஆக்கிரமிக்க முனைந்தன. இந்த வடகொரிய ஆக்கிரமிப்பிற்கு ஒரு பின்கதை இருக்கிறது - இது ஒரே இரவில் நிகழ்ந்த ஒரு திடீர் நடவடிக்கையல்ல. உலகப் போர் முடிந்த பின்னர் 1948 இல், பசுபிக் பிராந்தியத்திலிருந்து அமெரிக்கா தன் பெருமளவிலான படைகளை அகற்றி விட்டிருந்தது. ஜப்பான், பிலிப்பைன்ஸ் தளங்களில் மட்டும் அமெரிக்க படைகள் இருந்தன, ஆனால் பாரிய யுத்த தயாரிப்புகள் இருக்கவில்லை. இதைக் கவனித்த வட கொரியாவின் கிம் இல் சங், ஸ்ராலின் தெற்கை ஆக்கிரமிக்க தங்களுக்கு உதவ வேண்டுமெனத் தொடர்ந்து நச்சரித்து வந்தார். முதலில் மறுத்த ஸ்ராலின், ஒரு கட்டத்தில் அனுமதியும் கொடுத்து தனது இராணுவ ஜெனரல்களைத் தாக்குதல் திட்டம் தயாரிக்கவும் வழங்கினார். பின்னர் படிப்படியாக, சோவியத் ஆயுதங்கள், விமானத் தாக்குதல் பாதுகாப்பு என்பனவும் சோவியத் மூலம் கிடைத்தன வட கொரியாவிற்கு. இதையெல்லாம் இன்னொரு கம்யூனிசத் தலைவர் பதற்றத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்: சீனாவின் மாவோ சே துங் தான் அவர். மாவோ, ஸ்ராலினை உலக கம்யூனிசப் பிதாமகராக ஏற்றுக் கொள்வதைத் தந்திரமாகத் தவிர்த்து வந்த ஒருவர். 1950 இல் தான் மாவோ தன் கம்யூனிச ஆட்சியை சீனாவில் ஓரளவுக்கு நிலை நாட்டி விட்டு, தப்பிப் போய் போர்மோசா (Formosa) தீவில் (இன்று தாய்வான் என்று அழைக்கப் படும் தீவு) தனிதேசம் அமைத்திருந்த போட்டிக் குழுவை நோக்கிப் பாய திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் கிம் இல் சங் ஸ்ராலினை நெருங்கி தெற்கைத் தாக்க அனுமதியும் உதவியும் பெற்று, மாவோவின் கனவுக்கு மறைமுக ஆப்பு வைத்திருக்கிறார். அமெரிக்க வடிவில் வந்த ஆப்பு கிம் இல் சங், மாவோவிற்கு வைத்த இந்த மறைமுக ஆப்பு அமெரிக்கக் கடற்படையின் வடிவில் வந்திறங்கியிருந்தது. "தாய்வானிற்கு இராணுவ ரீதியில் உதவப் போவதில்லை" என்ற முடிவை எடுத்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரூமன், வட கொரியாவின் ஆக்கிரமிப்பை முறியடிக்க ஒரு மட்டுப்படுத்தப் பட்ட "பொலிஸ் நடவடிக்கையை" அனுமதித்தார் (இந்தப் பதத்தில் இருந்து தான் பின்னாளில் அமெரிக்கா "உலக பொலிஸ்காரன்" என்ற சொற்பதம் உருவாகியிருக்கக் கூடுமென நினைக்கிறேன்). அதே நேரம், இந்த நடவடிக்கையில் அமெரிக்கா கவனம் செலுத்தும் போது, மாவோ தாய்வானை நோக்கிப் படையெடுக்கக் கூடும் என்ற ஊகத்தில், அமெரிக்க கடற்படையின் 7வது கப்பற் படையை (7th Fleet) தாய்வான் சீனா எல்லையில் தொடர் ரோந்து செய்யவும் ட்ரூமன் கட்டளை பிறப்பித்திருந்தார். இது தான் மாவோ, 1950 இல் தாய்வானை நோக்கி சீன மக்கள் இராணுவத்தை ஏவாமல் தவிர்த்தமையின் பிரதான காரணம். வடகொரியாவின் மீது நடவடிக்கை எடுத்த ஐ.நா பாதுகாப்புச் சபை இன்று ஐ.நா பாதுகாப்புச் சபை உலக வல்லரசுகளின் போட்டிக் களமாக திகழ்கிறது. ஆனால், 1950 இல் உருவாக்கப் பட்ட புதிதில், உண்மையாகவே உலக சமாதானம், பாதுகாப்பு என்பவற்றைப் பேணும் அதன் பணியை சீரியசாகச் செய்ய முயன்றது என்று தான் சொல்ல வேண்டும். இந்த அடிப்படையில், இதன் முதல் பணியாக, வட கொரியா மீது நடவடிக்கை எடுத்து தென்கொரியாவை விட்டு படைவிலகலைக் கோரும் தீர்மானத்தை ஏகமனதாக ஐ.நா பாதுகாப்புச் சபை எடுத்தது. ஆனால்,கொஞ்சம் நிதானித்து இந்த தீர்மானத்தை ஆராய்ந்தால், இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேறவும் சோவியத் நாடு தான் மறைமுகக் காரணமாக இருந்தது என்பதைக் காணலாம். 50 களில் இருந்த ஐ.நா பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக (எனவே வீட்டோ அதிகாரமுடைய நாடுகள்) அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனக் குடியரசு, சோவியத் நாடு என்பன இருந்தன. இங்கே “சீனக் குடியரசு” என்பது தாய்வானில் இருந்த, மேற்கு ஏற்றுக் கொண்ட சீனா, தற்போதிருக்கும் “மக்கள் சீனக் குடியரசு” அல்ல என்பதைக் கவனிக்க வேண்டும். கம்யூனிச சீனாவான மக்கள் சீனக் குடியரசை, ஐ.நா அங்கீகரிக்காமல் இருந்ததை எதிர்த்து, சோவியத் நாடு ஐ.நா பாதுகாப்புச் சபையை பகிஷ்கரித்துக் கொண்டிருந்த காலப் பகுதியில் தான், வட கொரியா மீது படையெடுக்கும் தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்புச் சபை எடுத்தது. எனவே, ஸ்ராலின் ஒரு பக்கம் கிம் இல் சங்கிற்கு தெற்கை ஆக்கிரமிக்க உதவி செய்தபடியே, ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் வட கொரியா மீதான எதிர் நடவடிக்கையை தடுக்காமலும் விட்டிருக்கிறார். இது முட்டாள் தனமென சில ஆய்வாளர்கள் சொல்கின்றனர். ஆனால், ஸ்ராலினின் நடவடிக்கைகளின் பின்னால் இன்னொரு உள் நோக்கம் இருந்திருக்கலாம். மேற்கு ஐரோப்பாவில் கண் வைத்திருந்த சோவியத் ஒன்றியம் இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடனேயே, சோவியத் ஒன்றியமும், மேற்கும் கொள்கையளவில் இரு துருவங்களாக உருவாகின. இந்த விரிசல்கள், ஐரோப்பாவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்காக நடத்தப் பட்ட பொற்ஸ்டாம் (Potsdam Conference) மாநாட்டிலேயே வெளிப்பட ஆரம்பித்து விட்டன. சோவியத் ஒன்றியம், கிழக்கு ஐரோப்பாவை மட்டுமன்றி, மேற்கு ஐரோப்பாவையும் கம்யூனிச குடையின் கீழ் கொண்டு வரும் ஆர்வத்தில் காய் நகர்த்தியது. இதற்கு மிகச் சிறந்த சாட்சியமான சம்பவம் கொரிய யுத்தம் ஆரம்பிப்பதற்கு சரியாக இரு ஆண்டுகள் முன்னர், ஜூன் 1948 இல் சோவியத் ஒன்றியம் மேற்கு பேர்லினிக்கான வினியோகப் பாதைகளை ஒரு தலைப்பட்சமாக மூடிய நிகழ்வு. நேட்டோ அமைப்பு உருவாக வித்திட்ட இந்த நிகழ்வை, ஒரு தனிக் கட்டுரையில் பின்னர் பேசலாம். சுருக்கமாகச் சொன்னால், மேற்கின், அமெரிக்காவின் படைகளை ஐரோப்பாவில் இருந்து, தொலைவிலிருக்கும் கொரியா நோக்கிப் போக வைத்தால், தனது மேற்கு ஐரோப்பா நோக்கிய விரிவாக்கம் இலகுவாகலாம் என்ற ஸ்ராலினின் கணிப்பும் வட கொரியாவை அவர் யுத்தமொன்றை நோக்கித் தள்ளக் காரணமாக இருந்தது. சுதாரித்து, வென்று பின் தோற்ற மேற்கு இஞ்சொன் தரையிறக்கத்தின் போது அமெரிக்கப் படையினர். எழுபதாயிரம் அமெரிக்க மரைன்கள், 200 இற்கு மேற்பட்ட கடற்கலங்களில் தரையிறங்கிய இந்த தாக்குதல். பட உதவி நன்றியுடன்: அமெரிக்க தேசிய ஆவணக்காப்பகம். ஐ.நா வட கொரியா மீது பொலிஸ் நடவடிக்கையை எடுத்த போதும், ஐ.நா படைகளின் பிரதான அணியாக அமெரிக்காவின் படைகளே விளங்கின. அமெரிக்காவோடு, தென்கொரியாவின் இராணுவமும் சம எண்ணிக்கையில் நடவடிக்கையில் இணைந்தது. தெற்கின் உள்ளே நன்கு ஊடுருவி விட்ட வட கொரிய இராணுவத்தை நேரடியாக அவர்களுக்குப் பரிச்சயமான நிலப்பரப்பில் எதிர் கொள்வது தற்கொலைக்குச் சமன் என அமெரிக்க இராணுவ வல்லுனர்கள் கருதினர். இந்த சந்தர்ப்பத்தில் தான், பசுபிக் பிராந்தியத் தளபதியாக இருந்த ஜெனரல் மக் ஆர்தரின் இராணுவ அனுபவம் மீண்டும் பயன்பட்டது. நோர்மண்டி தரையிறக்கம் போல, ஆனால் எண்ணிக்கையில் சிறிதாக, வட கொரிய படைகளின் பக்க வாட்டில் அமெரிக்க மரைன் டிவிஷன் ஒன்றை 1950 செப்டெம்பரில் இன்ஞொன் (Inchon) என்ற பகுதியில் மக் ஆர்தர் தரையிறக்கினார். இஞ்சொன் தரையிறக்கம் நோர்மண்டி போல பெரிதாகப் பேசப்படா விட்டாலும், பல வழிகளில் அது நோர்மண்டியை விட வெற்றிகரமானதாகக் கருதப் படுகிறது. ஒரு நாளில் இஞ்சொன் அமெரிக்க மரைன்களிடம் வீழ்ந்து, அடுத்த 11 நாட்களில் வட கொரிய படைகள் சியோலில் இருந்து பின்வாங்கி வடக்கு நோக்கிப் பின்வாங்க ஆரம்பித்தமைக்கு இஞ்சொன் தரையிறக்கம் தான் மூலக் காரணி. 1950 ஒக்ரோபர் 1 ஆம் நாள், ஐ.நா வின் கட்டுப்பாட்டில் தென் கொரியா வந்தது. 38 வது அகலாங்கு எல்லை மீண்டும் வட, தென்கொரியாக்களின் எல்லையாக உருவானது. அடுத்து நடந்த நிகழ்வுகள், அபரிமித வெற்றியுணர்வு எப்படி தோல்விகளுக்கு வழி வகுக்கும் என்பதைப் பற்றிய ஒரு பாடம்! ஜெனரல் மக் ஆர்தர், வட கொரியப் படைகளை, வடக்கு நோக்கி மேலும் துரத்திச் செல்ல வாஷிங்ரனிடம் அனுமதி கேட்கிறார். இதன் மூலம், வட கொரிய இராணுவ பலத்தை நிரந்தரமாக அழித்து, வட - தென் கொரியாக்களை ஒரே தேசமாக இணைப்பதே நோக்கம். இது நிகழ்ந்தால், சோவியத் ஒன்றியத்திற்கும், சீனாவுக்கும் மிக நெருக்கமாக ஒரு மேற்கின் இராணுவப் பிரசன்னம் உருவாகும். இதை, சோவியத் ஒன்றியமும், சீனாவும் எப்படி எதிர் கொள்ளும் என்ற கேள்வியைக் கேட்டு பதிலைத் தேட அமெரிக்காவின் பாதுகாப்புக் கட்டமைப்பில் யாருக்கும் தோன்றவில்லை அப்போது. இதன் பிரதான காரணம், வட கொரியாவை நிரந்தரமாக ஆக்கிரமிக்க அமெரிக்க அரசியல் தலைமைகள், மற்றும் பொதுமக்கள் அமைப்புகளின் ஆதரவு இருந்திருக்கிறது. அமெரிக்கா இந்த தொடர் இராணுவ நடவடிக்கைக்கு பச்சைக் கொடி காட்டியதோடு, ஐ.நாவும் வட தென் கொரியா என்ற பதங்களைத் தவிர்த்து "முழுக் கொரியாவிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்" என மறைமுகமாக கொரியாக்களை இணைப்பதற்கு ஆதரவு தெரிவித்தது. எனவே, குறுகிய காலத்தில், 38 வது அகலாங்கு எல்லையைக் கடந்து , வட கொரியாவின் பியொங் யாங்கை அமெரிக்கப் படைகள் கைப்பற்றின. தொடர்ந்து, வட கொரிய - சீன எல்லையில் இருக்கும் யாலு நதி நோக்கியும் அமெரிக்க இராணுவம் நகர ஆரம்பித்த போது சீனா தன் பங்களிப்பைத் தீவிரமாக்கியது. சீனாவின் "கம்யூனிசத் தொண்டர்கள்" “கம்யூனிசத் தொண்டர் படை” என்பது தான், சீனா வட கொரியாவினுள் அனுப்பிய தன் சீன மக்கள் இராணுவத்திற்கு இட்ட பெயர். சீனாவிடம் ஆட்பலம் - மூன்று இலட்சம் படையினர் வரை- இருந்த அளவுக்கு தொழில் நுட்பம் இருக்கவில்லை. ஆனால், வடக்கு நோக்கி நகர்ந்த ஐ.நா படைகளை (பெருமளவுக்கு அமெரிக்க படைகள்) தங்கள் அலை அலையான ஆட்பலம் மூலம் சீன இராணுவம் துவம்சம் செய்ய ஆரம்பித்தது. அமெரிக்கர்களுக்கு இருந்த பிரதான பலம் விமானப் படை. இந்த அமெரிக்க வான்படை மேலாண்மையை ஈடு கட்ட, சோவியத் ஒன்றியம் தன் “மிக்” ஜெற் விமானங்களைப் பயன்படுத்தி யாலு நதிப் பகுதியில் மட்டும் தனது சொந்த விமானிகளை வைத்து நடவடிக்கைகளில் ஈடு பட்டது. எனவே நடைமுறையில், இது அமெரிக்க, சோவியத், சீனப் படைகளிடையேயான போர் என்றாலும், மூன்றாம் உலகப் போர் உருவாகும் ஆபத்தைத் தவிர்க்க மூன்று நாடுகளும் இதனை வெளிப்படையாக அறிக்கையிடவில்லை. இறுதியில், 3 வருடங்கள் முன்னகர முடியாத பதுங்கு குழி யுத்தத்தை எதிர் கொண்ட ஐ.நா படைகள், பின்வாங்கி 38 வது அகலாங்குக் கோட்டு எல்லையில் மீண்டும் பிரிக்கப் பட்ட கொரியாவை ஏற்றுக் கொண்டதோடு, கொரியப் போர் ஜூலை 27, 1953 இல் போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. ஜூலை 27, 1953 இல், ஐ.நா படைகளின் தளபதியான அமெரிக்க ஜெனரலும், வட கொரிய இராணுவ ஜெனரலும் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டதோடு கொரிய யுத்தம் ஓய்வுக்கு வந்தது. பட உதவி நன்றியுடன்: அமெரிக்க தேசிய ஆவணக்காப்பகம். போரில் இருந்து உதித்த நாயகர்களும் வில்லன்களும் கொரிய யுத்தம் அமெரிக்காவிற்கு பாதகமாகத் திரும்பிய போது, ஜப்பான் மீது அணுவாயுதத் தாக்குதலை எதிர்த்த மக் ஆர்தர், சீனாவின் மீது அணுவாயுதம் பயன்படுத்த வேண்டுமென்று வாதிட ஆரம்பித்தார். ஆனால், 1945 இல் ஜப்பான் நிலையும், 1950 களில் கொரிய நிலையும் ஒன்றல்ல என்ற தெளிவான பார்வையோடிருந்த அமெரிக்க அதிபர் ட்ரூமன், மக் ஆர்தரின் கோரிக்கையை நிராகரித்து, போரை விரைவாக முடித்து வைக்க விரும்பினார். இதற்காக ஒரு கட்டத்தில், ட்ருமன் ஜெனரல் மக் ஆர்தரை அவரது பசுபிக் கட்டளைத் தளபதி பதவியிலிருந்து நீக்கவும் வேண்டியிருந்தது. இதன் பின்னரே, கொரிய தீபகற்பத்தின் போர் வெப்பம் ஓரளவு தணிந்து, போர் ஓய்வுக்கு வந்தது. மறுபக்கம், ஸ்ராலின் மார்ச் 1953 இல் இறந்து போக, ஸ்ராலினை விட சிறிது வித்தியாசமான பார்வை கொண்ட குருசேவ் சோவியத் தலைவரானார் - இதுவும் கொரியாவில் சோவியத்தின் பங்களிப்பை மாற்றியது என்கிறார்கள். சீனாவின் மாவோவும், வட கொரியாவின் கிம் இல் சங்கும் தங்கள் கம்யூனிச ஆட்சியை உள்நாட்டில் பலப்படுத்திக் கொண்டனர். இரு கொரியாக்களுக்குமிடையேயான 38 வது அகலாங்கு எல்லை, பனிப்போரில் ஒரு முக்கிய எல்லைக் கோடாக நிலைத்து, இன்றும் தொடர்கிறது. - முற்றும்
  2. இந்தியக் காரணி தமிழர் மீதான வன்முறைகளையடுத்து தேவையற்ற வெளிநாட்டு தலையீடுகளை தனது அரசாங்கம் எதிர்கொள்ளப்போகிறதென்பதை இந்திரா காந்தியுடனான தொலைபேசி அழைப்பினையடுத்து ஜெயார் உணர்ந்துகொண்டார். முதலாவதாக, தமிழர்களை பலவீனப்படுத்த தான் எடுத்திருக்கும் முயற்சிகள் தனது அரசியல் எதிர்காலத்தைப் பலவீனப்படுத்தியிருப்பதையும், சிங்கள மக்களை இனமாகப் பலவீனப்படுத்தியிருப்பதையும், சர்வதேசத்தில் சிங்கள மக்களின் பெயரினைக் களங்கப்படுத்தியிருப்பதையும் அவர் உணர்ந்தார். இரண்டாவதாக தமிழர் மீதான தனது அரசின் வன்முறைகள் இலங்கையில் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கான சந்தர்ப்பத்தினை இந்தியாவுக்கு ஏற்படுத்தி விட்டிருப்பதையும் அவர் உணர்ந்துகொண்டார். இந்திரா காந்தியின் தொலைபேசி அழைப்பும், அதன்பின்னரான நரசிம்ம ராவின் விஜயமும் ஜெயாரின் சுதந்திரத்தையும் ஆட்சியதிகாரத்தையும் ஓரளவிற்குக் கட்டிப் போட்டதுடன், அவரைத் தற்காப்பு நிலைக்கும் தள்ளி விட்டது. மேலும், எந்த நடவடிக்கைகயினையும் எடுப்பதற்கு தனக்கிருக்கும் அதிகாரம் தற்போது இந்தியாவின் தேசிய நலனினால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் அவர் உணரத் தலைப்பட்டார். தமிழர்களுக்குச் சரியான பாடம் ஒன்றினைப் படிப்பிப்பதற்கு அவர் முன்னெடுத்த தாக்குதல்கள் சர்வதேச ரீதியில் அவரையும் அவரது அரசாங்கத்தையும் "கண்காணிக்கப்பட வேண்டியவர்கள்" எனும் பட்டியலில் இணைத்துவிட்டிருந்தது. சிங்களவர்களால் படுகொலை செய்யப்பட்டுக் கிடக்கும் தமிழ்க் கர்ப்பிணிப் பெண் ஒருவர் ‍ இனக்கொலை 1983 வெள்ளிக்கிழமை தனது கண்டிநோக்கிய பயணத்தை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பிய இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவ், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஹமீதுடன் சுற்றுப் பேச்சுக்களை ஆரம்பித்தார். தான் பயணித்த இடங்களிலெல்லாம் தமிழர்கள் வீதிகளில் வைத்துச் சிங்களவர்களால் அடித்தும் எரித்தும் கொல்லப்படுவதையும், அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு எரிக்கப்படுவதையும் தான் கண்ணுற்றதாக ஹமீதிடம் கூறினார். மேலும், மலையகப் பகுதிகளில் தமிழர்களுக்கெதிரான வன்முறைகளை சிங்களவர்கள் மீண்டும் ஒருமுறை நடத்தத் தயாராவதாக தனக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்திருப்பதாக ராவ் கூறினார். "அரசாங்கத்தின் உறுப்பினர்கள், வன்முறைகளை ஒவ்வொரு நகருக்கும் பரப்பி வருகிறார்கள் என்று என்னிடம் கூறப்பட்டிருக்கிறது" என்று ஹமீதிடம் கூறிய ராவ், இந்திய உயர்ஸ்த்தானிகருக்கு காலை முதல் பல தொலைபேசி அழைப்புக்கள் மலையகத்திலிருந்து வந்துகொண்டிருப்பதாகவும், அவை நுவரெலியா பகுதியில் உள்ள தமிழர்களைக் குறிவைத்து தாக்குதல்களை ஆரம்பிக்க அப்பகுதியில் வசிக்கும் சிங்களவர்கள் ஒன்றுதிரண்டுவருவதாக முறையிடப்பட்டிருப்பதாகவும் கூறினார். ராவ் கூறியதன்படியே, நுவரெலியா நகரப்பகுதியில் வெள்ளி பிற்பகல் தமிழர் மீதான தாக்குதல்களை சிங்களவர்கள் ஆரம்பித்தனர். அதுவரைக்கும் நகரப்பகுதியை பொலீஸாரும், இராணுவத்தினரும் காவல்காத்து வந்தனர். நகருக்கு வந்த வாகனங்கள் அனைத்தும் சோதனையின்பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டன. தமிழ்ப் பயணிகளை தமது பஸ்களில் ஏற்ற்வேண்டாம் என்று நடத்துனர்கள் சிங்களவர்களால் அறிவுருத்தப்பட்டனர். பொலீஸாரும் தம் பங்கிற்கு தமிழர்களை அடைந்து கிடக்குமாறு பணித்திருந்தனர். நுவரெலியாவின் பாராளுமன்ற உறுப்பினர் ரேணுகா ஹேரத்தின் அறிவுருத்தலின்படி நகரில் குழப்பங்களை உருவாக்கக் கூடியவர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்களை பொலீஸார் தடுத்து வைத்திருந்தனர். மேலதிக பொலீஸ் ரோந்துகளும் நகர்ப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டன. ரேணுகா ஹேரத் மகாவலி அபிவிருத்தியமைச்சரும், ஜெயாரின் மிக முக்கிய சகாவுமான‌ காமிணி திசாநாயக்க வெள்ளி காலை 10 மணிக்கு விமானப்படை உலங்குவானூர்தி ஒன்றின் மூலம் நுவரெலியா நகருக்குச் சென்றார். அங்கிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களைச் சந்தித்து கூட்டம் ஒன்றினை நடத்தினார். காமிணி திசாநாயக்க‌ நுவரெலியாவில் தனது ஆதரவாளர்களுக்கு முன்னால் பேசிய காமிணி இனத்துவேஷம் மிக்க கருத்துக்களை வெளியிட்டார், "நீங்கள் நாட்டை நேசிக்கும் சிங்களவர்கள் இல்லையா? ஏன் இன்னும் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள்?" நுவரெலியாவின் மிகப்பலமான ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளரை பொலீஸார் கைதுசெய்து வைத்திருப்பதாக ஏனைய உறுப்பினர்கள் காமிணியிடம் முறையிட்டதுடன், அவரின்றி தம்மால் தமிழர்கள் மீது தாக்குதல்களை ஆரம்பிப்பது கடிணம் என்றும் கூறினர். அதற்குப் பதிலளித்த காமிணி அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும் உறுதியளித்தார். அவர் கூறியவாறே, பிற்பகலுக்குள் அவர்கள் அனைவரையும் பொலீஸார் விடுவித்தனர். பொலீஸாரினால் விடுவிக்கப்பட்ட காடையர்களின் முன்னணித்தலைவர்கள் உடனடியாகச் செயலில் இறங்கினர். பெற்றொல் பரல்கள், இரும்புக் கம்பிகள், வாட்கள், வெட்டரிவாள்கள் என்பன துரித கதியில் சேகரிக்கப்பட்டன. அவர்களின் முதலாவது இலக்கு நுவரெலியாப் பகுதியில் அமைந்திருந்த சைவக் கோயிலும் அங்கே தங்கியிருந்த சைவக் குருக்களும்தான்.தாக்குதல் ஆரம்பித்தவேளை குருக்கள் தப்பிக்கொள்ள, கோவில் முற்றாக இடித்து எரிக்கப்பட்டது. காடையர்களுடன் பெருமளவு சிங்கள மக்களும் தாக்குதல்க் குழுவில் இணைந்துகொண்டனர். அதுவரையில் நகர்ப்பகுதியில் காவலில் இருந்த இராணுவத்தினரும், தமது நிலைகளைக் கைவிட்டு தமிழர்களைத் தாக்கிவரும் குழுவுடன் இணைந்துகொண்டனர். இராணுவ வாகனங்களுக்கு என்று சேமித்துவைக்கப்பட்ட பெற்றொல் பரல்கள் சிங்களக் காடையர்களுக்கு இராணுவத்தால் வழங்கப்பட்டது. தாக்குதல் ஆரம்பித்து இரண்டு மணிநேரத்திற்குள் நுவரெலியா நகர்ப்பகுதியில் இயங்கிவந்த அனைத்துத் தமிழர்களின் கடைகளும் எரியூட்டப்பட்டன. நகர்ப்பகுதியில் தமிழர்கள் தாக்கப்பட்டு கடைகள் எரிக்கப்படுவதை அறிந்து உடனடியாக அப்பகுதிக்குச் சென்ற அமைச்சர் ரேணுக்கா ஹேரத்தை அக்கும்பல் விரட்டியடித்தது. மிகுந்த வேதனையோடு அவர் வீடு திரும்பியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் நுவரெலியாவை விட்டே சென்றுவிட்டதாக அப்பகுதியின் எமது நிருபரான ராஜரட்ணம் கூறியிருந்தார். "நகரமே நெருப்புக்கடலில் மிதந்துகொண்டிருக்க, அவர் நகரை விட்டுச் சென்றார்" என்று அவர் கூறினார். ஹமீதிடம் பேசிய ராவ், "இந்தியத் துணைத் தூதர் மற்றும் அவரது அதிகாரிகள் எனக்கு கூறியிருக்கும் தகவல்களின்படி நுவரெலியாப் பகுதியில் தமிழர் மீதான தாக்குதல்களை உங்களின் அமைச்சரவை முக்கியஸ்த்தர் ஒருவரே முன்னின்று நடத்திவருவதாகக் கூறப்பட்டிருக்கிறது" என்று கூறினார். மாத்தளை சிறி முத்துமாரியம்மன் ஆலயம் கண்டி, மாத்தளை, நுவரெலியா, நாவலப்பிட்டி, பதுளை ஆகிய பகுதிகளில் தமிழர் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல்கள் தொடர்பாக தனக்குக் கிடைக்கப்பெற்ற தகவல்களை ஹமீதிடம் கொடுத்த ராவ், இத்தாக்குதல்ப் பட்டியல்களில் தமிழர்களின் ஆலயங்களும் இணைக்கப்பட்டு அழிக்கப்பட்டிருக்கின்றன என்பதனையும் சுட்டிக் காட்டினார். மேலும், மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயத்தை சிங்களவர்கள் முற்றாக எரித்ததை அவர் ஹமீதிடம் காண்பித்தார். அன்று மாலை சிறு எண்ணிக்கையிலான தமிழ்க் கல்விமான்கள் ராவைச் சந்தித்தார்கள். இத்தாக்குதல்கள் நன்கு திட்டமிட்டே நடத்தப்பட்டு வருவதாக அவர்கள் ராவிடம் கூறினர். தமிழர்களின் பொருளாதாரத்தை, கல்வித்தகமையுடனான செல்வாக்கினை, வர்த்தகத் தளத்தை சிதைத்து அழிக்கும் நோக்கிலேயே நடத்தப்பட்டு வருவதாகக் கூறினர். இத்தாக்குதல்களின் மூலம் தமிழர்கள் இந்நாட்டில் தமது இருப்புக் குறித்த அச்சத்தைக் கொண்டிருப்பதாகவும் கூறினர். வெள்ளி இரவு கொழும்பிலிருந்து கிளம்பிய ராவ், சனிக்கிழமை இந்திராவைச் சந்தித்து தனது அறிக்கையினைச் சமர்ப்பித்தார். மேலும், இலங்கையின் நிலைமைகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், ஆனால் தமிழர்கள் தமது இருப்புக் குறித்த ஐயத்தையும் அச்சத்தையும் கொண்டிருப்பதாகவும் கூறினார். மேலும், தனக்குக் கிடைத்த தகவல்களின்படி கொழும்பில் அமைக்கப்பட்டிருக்கும் பல அகதி முகாம்களின் நிலை மிக மோசமாகக் இருப்பதாகவும் கூறினார். ஆகவே, தமிழ் அகதிகளைக் கையாளும் நடவடிக்கைக்கு இலங்கைக்கு இந்தியா உதவ வேண்டும் என்றும், தமிழர்களைப் பாதுகாக்க இந்திய இராணுவத்தை அங்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.
  3. சிங்களவர்கள் தமக்கு தேவையான போது கோவில்களுக்கு போகிறார்கள் வணங்குகிறார்கள். ஆனாலும் திரும்பவும் வந்து அடித்துடைத்து கொளுத்துகிறார்கள்.
  4. இருப்பதை வைத்து சமாளிப்பது. இதுகும் நல்ல யோசனை.
  5. எப்படி இருந்த ரசியா.....
  6. மென்பொருள் புதுப்பித்தல் காரணமாக இன்னும் அரை மணித்தியாலத்தில் சில நிமிடங்களுக்கு யாழ் இயங்காமல் போகலாம்.
  7. குட்டிமணியின் கண்களைத் தோண்டியெடுத்து அவரின் நாவினைச் சுவைத்த சிங்கள மிருகங்கள் ‍ - தொடரும் இனக்கொலை ஜூலை 1983 தம்மைக் கொல்லப்போகும் சிறைக் காவலர்களால் நீதிமன்றம் அழைத்துச் செல்லப்படும் குட்டிமணியும் தேவனும் சுமார் இரவு 8 மணியளவில் வெளியே நடக்கும் அசம்பாவிதங்கள் குறித்து தமிழ்ச் சிறைக்கைதிகள் அறிந்துகொண்டனர். திருநெல்வேலித் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்கிற செய்தியை குட்டிமணியே தமிழ்க் கைதிகளுக்குத் தெரிவித்திருந்தார். மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு நாளாந்தம் செய்தித் தாள்களை வழங்குவது வழமையான ஒரு நடவடிக்கை. குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன், தேவன், சிவபாதம் மாஸ்ட்டர் மற்றும் நடேசதாசன் ஆகியோர் நீர்வேலி வங்கிக்கொள்ளையில் குற்ற‌வாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டிருந்தனர். தமக்கெதிரான‌ தீர்ப்பினை எதிர்த்து அவர்கள் மேன்முறையீடு செய்திருந்தனர். தமிழ்க் கைதிகளின் கொலைக்களம் ‍ கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலை இரவு 10 மணியளவில் சிறைச்சாலையினுள் பதற்றமான சூழ்நிலையொன்று உருவாகிவருவதை தமிழ்க் கைதிகள் உணரத் தொடங்கினர். அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்த 72 தமிழ்க் கைதிகளில் பெரும்பாலானோர் சக ("+") அடையாளம் போன்ற வடிவில் கட்டப்பட்ட இரு மாடிக் கட்டடத்தினுள் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த சக அடையாளத்தினாலேயே அப்பகுதி தேவாலயப் பகுதி என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்தக் கட்டட‌திற்கு ஏ, பி, சி டி என்று நான்கு பிரிவுகள் இருந்தன. இவற்றுள் கீழ்த்தளத்தில் இருந்த பகுதிகள் ஏ3, பி3, சி3, டி3 என்று பெயரிடப்பட்டிருந்தன. குட்டிமணியும் ஏனைய ஐந்து கைதிகளான தங்கத்துரை, ஜெகன், தேவன், சிவபாதம் மாஸ்ட்டர் மற்றும் நடேசுதாசன் ஆகியோரும் கீழ்ப்பகுதியின் முகப்பில் அமைந்திருந்த பி3 சிறையறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். டி 3 சிறையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்த மேலும் 29 கைதிகள் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள் என்றும், விரைவில் இவர்களை விடுவிக்க எண்ணியிருந்ததாகவும் ஜான்ஸ் கூறியிருந்தார். சி 3 பகுதியில் மேலும் 28 தமிழ்க் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். டக்ளஸ் தேவானந்தா, மாணிக்கதாசன், ரொபேர்ட், பரந்தன் ராஜன், பனாகொடை மகேஸ்வரன், பாஸ்கரன், தேவகுமார், ஜயக்கொடி ஆகியோர் உட்பட மேலும் சில தமிழ்க் கைதிகளும் அங்கே தடுத்துவைக்கப்படிருந்தனர். ஏ3 பகுதியில் தீவிர கிரிமினல்க் குற்றவாளிகளும், தப்பிப் போக எத்தனித்தவர்களும் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். அலிடாலியா விமானத்தைக் கடத்திச் செல்ல முற்பட்ட சேபால எக்கநாயக்கவும் அப்பகுதியிலேயே தடுத்துவைக்கப்பட்டிருந்தான். இந்த நான்கு பகுதிகளுக்கும் பொதுவான சந்திபோன்ற பகுதியில் மண்டபம் போன்றதொரு அறை அமைக்கப்பட்டிருந்ததுடன், ஒவ்வொரு பிரிவுக்கும் செல்லும் வாயில்ப் பகுதியில் தடித்த இரும்புக் கம்பிகளால் உருவாக்கப்பட்ட பாரிய கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு இரும்புக் கதவிற்கு அருகிலும் இரு ஆயுதம் தாங்கிய காவலர்கள் அமர்த்தப்பட்டிருந்தார்கள். இப்பகுதிக்கு மேலே அமைக்கப்பட்டிருந்த இரு பிரிவுகளிலும் சுமார் 800 வரையான கைதிகள் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். இதனைவிடவும் மேலும் 9 இளவயது தமிழ் அரசியல்க் கைதிகள் தனியான பகுதியொன்றில் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். இளவயதுக் குற்றவாளிகளுக்கான கட்டடம் என்றழைக்கப்பட்ட இந்தக் கட்டடத்தில் வைத்தியர் வி. தர்மலிங்கம், கோவை மகேசன், வைத்தியர் ராஜசுந்தரம், ஏ. டேவிட், கே நித்தியானந்தன், பாதிரியார் சிங்கராயர், பாதிரியார் சின்னராசா, பாதிரியார் ஜயதிலகராஜா மற்றும் வைத்தியர் ஜயகுலராஜா ஆகியோர் இப்பகுதியில் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் நிபுணத்துவம் கொண்டவர்களாகவும், இவர்களினால் ஆபத்துக்கள் எதுவும் இருக்காது என்று கருதியதனாலும், அரசாங்கம் இவர்களை தனியாக அடைத்து வைத்திருந்தது. அதிகாலை 2 மணியிருக்கும், தாம் அடைத்துவைக்கப்பட்டிருந்த பகுதிக்கு மிக அண்மையாக பலபேர் ஆர்ப்பரித்தவாறே வந்துகொண்டிருப்பதை தமிழ்க் கைதிகள் உணர்ந்துகொண்டனர். "தமிழர்களைக் கொல், குட்டிமணியைக் கொல்" என்று அவர்கள் ஆவேசமாகக் கத்திக்கொண்டுவருவதை அவர்கள் தெளிவாகக் கேட்டார்கள். இடையிடையே, "அவர்களின் இரத்தத்தை நாம் குடிப்போம்" என்றும் பலர் வெறிகொண்டு கத்தத் தொடங்கினார்கள். சிங்களக் கைதிக் கும்பலுக்கு தலைமை தாங்கி வந்தவனை குட்டிமணி நன்கு அறிந்திருந்தார். "தம்பி" பிரபாகரனின் உடல்ச் சாயலில் அவன் காணப்பட்டதால் அவனை "தம்பி" என்றே குட்டிமணி அன்புடன் அழைத்துவந்தார். குட்டிமணியைப் போலவே ஏனைய தமிழ்க் கைதிகளும் அந்தச் சிங்களக் கைதியை தம்பி என்றே அழைத்துவந்தனர். தமிழ்ச் சிறைக் கைதிகளுக்கு உணவு வழங்குவதில் அவனே ஈடுபட்டுமிருக்கிறான். அந்தத் தம்பியே வெறிகொண்ட சிங்களக் கைதிக் காடையர்களை குட்டிமணியின் அறைநோக்கி அழைத்துச் சென்றுகொண்டிருந்தான். கைகளில் வாட்கள், கத்திகள், இரும்புக் கம்பிகள், சட்டங்கள், கூர்மையான முனையினைக் கொண்ட பல ஆயுதங்களை காவிக்கொண்டு சுமார் 25 பேர் அடங்கிய சிங்களக் கைதிகள் தலைமை தாங்க மீதிச் சிங்களக் கைதிகள் தமிழ்க் கைதிகள் அடைத்துவைக்கப்பட்டிருந்த பகுதிநோக்கி ஆவேசமாக ஓடிக்கொண்டிருந்தார்கள். முதலாவதாக ஆறு டெலோ போராளிகள் அடைத்துவைக்கப்பட்டிருந்த பி 3 அறியினை தாம் கொண்டுவந்த திறப்புக்களைக் கொண்டு திறந்தார்கள். கதவு திறக்கப்பட்டதும் அங்கிருந்த ஆறு தமிழ்க் கைதிகளின்மீதும் பாய்ந்தது சிங்களக் காடையர் குழு. சாவது உறுதியாகிய நிலையில் வெற்றுக்கைகளால் தம்மைத் தற்காத்துக்கொள்ள எதிர்த்தாக்குதலில் இறங்கினார்கள் தமிழர்கள். குட்டிமணிக்கு தற்காப்புக் கலை ஓரளவிற்குத் தெரிந்திருந்தது. அதனால், ஆரம்பத்தில் தன்னைத் தாக்கவந்த சிங்களவர்களை அவர் திருப்பித் தாக்கிக்கொண்டிருந்தார். தனது கைகளாலும், கால்களாலும் அவர்கள் மீது கடுமையாகத் தாக்கினார். ஆனால், அவரால் சிறிது நேரத்திற்கு மேல் ஈடுகொடுக்கமுடியவில்லை. பல சிங்களவர்கள் ஒன்றிணைந்து ஆயுதங்களால் தாக்கியபோது அவர் பலமிழந்து கீழே வீழ்ந்தார். கீழே வீழ்ந்த குட்டிமணியை இரும்புக் கம்பிகளால் தாக்கியபின்னர் வாட்களால் கடுமையாக வெட்டத் தொடங்கினர் சிங்களவர்கள். குற்றுயிராகக் கிடந்த குட்டிமணியை சிறை அறையிலிருந்து நடுப்பகுதியில் அமைந்திருந்த மண்டபத்திற்கு அக்கூட்டம் இழுத்துவந்தது. பின்னர் அவரை முழங்காலில் இருத்திவிட்டு கூராக்கப்பட்ட இரும்புக் கம்பிகளை அவரின் கண்களுக்குள் செலுத்தி அவரின் கண்கள் இரண்டையும் பிடுங்கியெடுத்தார்கள். இந்தக் கொடூரத்தை முன்னால் நின்றவர்கள் செய்துகொண்டிருக்க மீதமாயிருந்த அனைத்துச் சிங்களக் காடையர்கள் வெற்றி ஆரவாரம் செய்துகொண்டிருந்தார்கள். அவரின் கண்களைத் தோண்டியெடுத்தவர்கள் அவரைப் பார்த்து, "இந்தக் கண்களால்த்தானே ஈழம் மலர்வதைப் பார்க்கப்போகிறேன் என்று கூறினாய்? இனி எப்படிப் பார்க்கப் போகிறாய் என்று பார்க்கலாம்" என்று எள்ளி நகையாடினார்கள். குட்டிமணிக்கு மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டவேளை அவர் ஒரு பேச்சினை தனது கூண்டிலிருந்து வழங்கியிருந்தார். அப்பேச்சின் போது, தான் இறந்ததன் பின்னர் தனது கண்களை பார்வையற்ற தமிழ்ச் சிறுவன் ஒருவனுக்குத் தானமாக வழங்கத் தான் விரும்புவதாகவும், அவன் கண்களூடாக மலரப்போகும் தமிழ் ஈழத்தைத் தான் கண்டு மகிழ்வேன் என்றும் கூறியிருந்தார். இப்பேச்சினையே சிங்களக் காடையர்கள் அந்தவேளயில் எள்ளி நகையாடி குட்டிமணியின் கண்களை பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது குட்டிமணியின் தலை கீழே தொங்கத் தொடங்கியது. முழங்காலில் இருந்துகொண்டு கீழே வீழும் தறுவாயில் இருந்த குட்டிமணியின் அருகில் ஓடிச்சென்ற இன்னொரு காடையன், அவரின் தலைமயிரைப் பிடித்து, பின்னால் இழுத்து, வாய்க்குள் தனது கைய்யினை விட்டு அவரது நாவினை வெளியே இழுத்தெடுத்தான். பின்னர் தான் கையில் வைத்திருந்த கத்தியினால் குட்டிமணியின் நாவினை வெட்டியெடுத்த அவன், தன் வாய்க்குள் அதனைப் புகுத்திக்கொண்டே, "புலியின் இரத்தத்தைக் குடித்துவிட்டேன்" என்று வெற்றிக்களிப்புடன் பாடத் தொடங்கினான். இதன் பின்னர் குற்றுயிராகக் கிடந்த குட்டிமணியை அக்கும்பல் தமது வெறியடங்கும் வரையில் தாக்கிக் கொன்றுபோட்டது. முதலாவது அறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்த ஆறு டெலோ போராளிகளைக் கொன்றபின்னர், சிங்களக் காடையர்கள் டி 3 ஆம் அறையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் அடிப்படியில் கைதுசெய்து அடைத்துவைக்கப்படிருந்த தமிழ்க் கைதிகளின் அறை நோக்கி ஓடத் தொடங்கியது. அந்த அறையினுள் 29 தமிழ்க் கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். தமது கைகளில் இருந்த திறப்புக்களைப் பாவித்து அந்த அறையினைத் திறந்துகொண்ட கும்பல், தமிழ்க் கைதிகளின்மீது பாய்ந்து தாக்கத் தொடங்கியது. தாக்குதல் நடந்துகொண்டிருந்தவேளை வெறும் 16 வயதே நிரம்பிய மயில்வாகனம் எனும் சிறுவன் அறையின் ஓரத்தில் குறுக்கிக்கொண்டே ஒளிந்துகொண்டார். சிங்களக் காடையர்களுடன் தமிழ்க் கைதிகள் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த சிறைக் காவலன் ஒருவன் சிறுவன் மயில்வாகனத்தைக் கண்டுகொண்டான். உடனே அச்சிறுவன் மீது பாய்ந்த காவலாளி தனது கத்தியால் அச்சிறுவனைச் சரமாரியாக் குத்திக் கொன்றான். டி 3 அறையில் அடைக்கப்பட்டிருந்த இரு தமிழ்க் கைதிகள் இந்த கொடூரத்தை மிகுந்த அச்சத்துடன் அனுபவித்துக்கொண்டிருந்தனர். காற்று உட்புகவென சுவர்களில் அமைக்கப்பட்டிருந்த சிறிய ஓட்டைகளினூடாக அடுத்த அறைகளில் நடக்கும் அகோரத்தினை மாணிக்கதாசன் பார்த்துக்கொண்டிருந்தார். ஒவ்வொரு அறையிலும் கொல்லப்பட்ட தமிழர்களை வெளியே இழுத்துவந்த சிங்களவர்கள் அவ்வுடல்களை மண்டபத்தின் நடுப்பகுதியில் வீற்றிருந்த புத்தனின் சிலையின் முன்னால் குவிக்கத் தொடங்கினர்.புத்தனின் சிலைக்கு அருகில் இருந்த அறையில் அடைக்கப்பட்டிருந்த ரொபேர்ட் எனப்படும் கந்தையா ராஜேந்திரன் அங்கு நடந்துகொண்டிருந்த அகோரங்களை அறையில் இருந்த ஏனையவர்களுக்கு தொடர்ச்சியாகச் சொல்லிக்கொண்டிருந்தார். மாணிக்கதாசன் தான் அங்கே கண்ட அக்கிரமங்களை, படுகொலையின் அகோரத்தினை வெளியுலகிற்குச் சொல்ல உயிர்தப்பினார்.இரண்டாம் நாள்ப் படுகொலையில் ரொபேர்ட் கொல்லப்பட்டாலும் கூட, அவர் முதல் நாள் வழங்கிய படுகொலைகளின் தொடர்ச்சியான விவரணத்தை இன்னும் அங்கிருந்து உயிர் தப்பிய பலர் மறக்கவில்லை. திங்கட்கிழமை இரவு நடந்த படுகொலைகள் முடிந்தநிலையில், தாக்குதலை முன்னின்று நடத்திய சிங்களவர்களுக்கும், அவர்களுக்கு தோளோடு தோள் நின்று படுகொலைகளில் பங்கெடுத்துக்கொண்ட சிறைக்காவலர்களுக்கும் இடையே சிங்களத்தில் நடந்த சம்பாஷணையினை ரொபேர்ட் தனது சக தமிழ்க் கைதிகளுக்கு தமிழில் கூறிக்கொண்டிருந்தார். முதலாம் நாள் படுகொலைகளுக்குப் பின்னர் சி 3 அறையில் 28 கைதிகளும், இளவயதுப் பகுதியில் 9 பேரும் இன்னமும் மீதமிருந்தனர். தாக்குதல்க் கூட்டத்தில் பேசிய சிறைக் காவல் அதிகாரியொருவன், "இன்றைக்கு இது போதும்" என்று கூறினான்.
  8. இலங்கை ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனவே ஜூலை 83 இனக்கொலையின் சூத்திரதாரி ஒட்டுமொத்தச் சிங்கள மக்களினதும் கோபமே இந்த இனக்கலவரம் என்று ஜெயாரும் அவரது அரசாங்கமும் கூறிவந்ததை பொய்யென்று நிரூபிக்கவே இந்த சம்பவங்களை நாம் இங்கே பதிகிறேன். சில சந்தர்ப்பங்களில் நல்ல மனம் படைத்த சிங்களவர்கள் தமது உயிரையும் பொருட்படுத்தாது தமிழர்களைக் காத்திருக்கிறார்கள். ஆனால், இப்படியான சிங்களவர்களை ஏனைய சிங்களக் காடையர்கள் அச்சுருத்தியிருந்தனர். தமிழர்களைக் காப்பாற்ற நினைத்தால், தமிழர்களைப்போலவே அவர்களையும் கொன்று எரித்துவிடுவோம் என்று அவர்கள் அச்சுருத்தப்பட்டனர். 1983 ஜூலை இனக்கொலையினையடுத்து பாரிய அகதிகள் முகாமாக மாறிய கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபம் பிரட்மண் வீரக்கோண் ஆறு பிரத மந்திரிகளுக்கு காரியாதிரிசியாகப் பணியாற்றிய உயர் அரச அதிகாரியான பிரட்மண் வீரக்கோண் ஜெயாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகத் திகழ்ந்தவர். அவர் தனது அயலில் வசித்த தமிழர்களை தனது வீட்டில் வைத்துப் பாதுகாத்தார். தமிழர்களைப் பாதுகாத்து வைத்திருப்பதற்காக பல சிங்களவர்கள் அவருக்கு தொலைபேசியூடாக கொலைப் பயமுருத்தல் விடுத்துக்கொண்டிருந்தனர். தனது அயலில் வசித்துவந்த தமிழர்களைத் தான் பாதுகாப்பாக அகதிகள் முகாமிற்குக் கொண்டு சென்றதாக அவர் என்னிடம் கூறினார். "நான் பயத்திற்காக அவர்களை அகதிமுகாமிற்கு அழைத்துச் செல்லவில்லை. எனது வீட்டில் அடைக்கலம் தேடியிருந்த தமிழர்களின் உயிரைக் காப்பது அவசியமானது. அவர்களைத் தொடர்ந்தும் எனது வீட்டில் வைத்திருந்தால், அவர்களையும் கொன்றுவிடுவார்கள், ஆகவேதான் அவர்களை அகதிகள் முகாமிற்கு அழைத்துச் சென்றேன்" என்று கூறினார். http://dbsjeyaraj.com/dbsj/wp-content/uploads/2021/07/055B0D0A-3E4E-491A-8723-7D0444FB1205.jpeg எரிந்துகொண்டிருக்கும் தமிழர்களின் வியாபார நிறுவனம் ஒன்று அந்த இனக்கொலையினை அனுபவித்தவன் என்கிற வகையிலும், இனக்கொலையில் அகப்பட்டவர்களின் சாட்சியங்களைக் கேட்டவன் என்கிற வகையிலும் இந்த இனக்கொலை நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட நிகழ்வு என்கிற முடிவிற்கே நான் வரவேண்டி இருக்கிறது. இலங்கையின் இனக்கொலையும் அதன் பின்னரும் எனும் நூலினை பியதாச எழுதியிருந்தார். அவர் ஆவணப்படுத்திய சாட்சியங்களினூடாக இந்த இனக்கொலையினை திருநெல்வேலித் தாக்குதல் நடப்பதற்குப் பல மாதங்கள் முன்னரே அரசாங்கம் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்திருந்தது என்பது தெளிவாகிறது. நான் சேகரித்த முக்கியமான சாட்சியங்களில் ஒன்றான வாக்களர் பட்டியலைப் பாவித்தே தமிழர்களின் வியாபா நிலையங்களும் வீடுகளும் தாக்கப்பட்டன என்பதனை பியதாசவும் தனது நூலில் சாட்சியங்களோடு குறிப்பிட்டிருக்கிறார். வியாபார நிறுவனங்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தில் இக்காலத்தில் பணிபுரிந்து வந்த தமிழ் அதிகாரியொருவர் என்னுடன் பேசுகையில், தனது திணைக்களத்திலிருந்தே வியாபா நிறுவனங்களின் பட்டியல் காடையர்களுக்கும், தலைமை தாங்கியவர்களுக்கும் வழங்கப்பட்டிருந்தது என்று கூறினார். தமிழர்களின் கடைகளைச் சூறையாடும் சிங்களக் காடையர்கள் அரசாங்கத்தின் அதியுயர் பீடமே இத்தாக்குதல்களை வழிநடத்தி வருகின்றது என்பதற்கான ஆதாரத்தினை ஞாயிறு இரவும், திங்கள் காலையும் ஜெயார் நடந்துகொண்ட விதத்திலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது. ஞாயிறு மாலை அதிகாரிகளும், ஜெயாரின் ஆலோசகர்களும் பொரள்ளை மற்றும் மரதானை ஆகிய பகுதிகளில் ஏற்பட்டிருந்த அசம்பாவிதங்கள் குறித்து மிகுந்த பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்த வேளை, ஜெயாரோ மிகவும் நிதானமாகவும், மகிழ்ச்சியாகவும் காணப்பட்டதாக உதவிப் பொலீஸ் மா அதிபர் எட்வேர்ட் குணவர்த்தன குறிப்பிடுகிறார். இரத்தமும் சயனைட்டும் என்று தான் எழுதிய புத்தகத்தில் ஞாயிறு இரவு ஜெயார் நடந்துகொண்ட விதம் குறித்து எட்வேர்ட் குணவர்த்தன் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார், "ஜனாதிபதி குடும்பத்துடன் தனது நேரத்தைக் களித்தார். மிக விலைமதிப்பான ஊதாநிறத்திலான‌ முழு ஆடையில் தனது ஆசனத்தில் வீற்றிருந்த அவர், தன்னைச் சந்திக்க வந்திருந்த பல அதிகாரிகள் தன்னிடம் கூறிய அசம்பாவிதங்கள் குறித்த செய்திகளை மிகவும் நிதானமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். நாட்டின் பல பகுதிகளிலும் இருந்துவந்த வன்முறைகள் குறித்து அதிகாரிகளும் ஆலோசகர்களும் பதற்றதுடன் அவரிடம் கூறும்போது அவர் அதிர்ச்சியடையவில்லை, கலவரப்படவில்லை, நிதானம் தளரவில்லை. ஆனால், தனது இராணுவத்தினரும் தமிழர்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்கிற செய்தியைக் கேட்டபோது சற்றுக் கவலைப்பட்டார்" என்று கூறுகிறார். நாட்டில் அப்போது நடந்துகொண்டிருந்த தமிழர் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் குறித்து ஜெயார் நன்கு அறிந்தே இருந்தார். அது அவருக்கு ஒரு பிரச்சனையாகத் தெரியவில்லை. ஆனால், இராணுவத்தினரின் ஒரு பிரிவினர் கலகத்தில் ஈடுபடலாம் என்பதே அவருக்கு இருந்த ஒரே கவலை. ஆனால், அவர் இராணுவத் தளபதி திஸ்ஸ வீரதுங்கவை அன்று நாள் முழுதும் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருக்குமாறு பணித்தார். 13 கொல்லப்பட்ட இராணுவத்தினரின் உடல்களுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கே வீரதுங்க கொழும்பிற்கு வந்தார். பொலீஸ் உயர் அதிகாரிகளும், மூத்த ஆலோசகர்களும் ஞாயிறு மாலையும், திங்கள் காலையும் ஊரடங்கு உத்தரவினைப் பிறப்பிக்குமாறு ஜெயவர்த்தனவை அயராது வேண்டிக்கொண்டிருந்தனர். ஆனால், அவர் மசியவில்லை. அது ஏன்? பிரபாகரன் உட்பட பெரும்பாலான தமிழர்கள் ஜூலை 83 இனக்கொலையில் அரசாங்கமே முக்கிய சக்தியாக முன்னின்று செயற்பட்டதைக் கண்டுகொண்டனர்.
  9. அரசியல்துறை நடுவப்பணியகத்தில் இரு போராளிகள் பாதுகாப்பிற்கு நிற்கின்றனர் கிளிநொச்சி பேராசை பிடித்த இழிபிறவிகளே... படிமம் வேண்டுமெனில் அப்படியே பயன்படுத்துங்கள். ஆனால் இந்தப் படிமங்களை எடுத்து உங்கள் ஐந்து சதத்திற்கும் பிரியோசனமில்லாத வலைத்தளங்களின் பெயர்களை எழுதி வெளியிடவேண்டாம். ஒரு படிமத்தினை உருவி எடுக்க மணித்தியாலங்களில் செலவு ஆகிறது. அதைத் தன்னார்வத் தொண்டர்கள் உருவி எடுத்து மக்களிடம் ஒப்படைக்க இந்தப் பேராசைப் பிடித்த இழிஞர்கள் தங்களிற்குத் தேவையான பெயர்களை எழுதி மீள்வெளியீடு செய்வது எரிச்சலூட்டுகிறது. எமது இனத்தின் வரலாற்றில் மிகவும் முக்கியமான படிமங்களில் சில இவையாகும்... இதிலை இந்த இரண்டு போராளிகளும் அணிந்திருக்கும் சீருடையே விடுதலைப்புலிகளின் இறுதித் தரைப்புலி உருமறைப்புச் சீருடை விருத்து (version) ஆகும். மிகத் தெளிவாகத் தெரிகிறது. ஆகையால் பாதுகாத்து வையுங்கள், வரலாற்றில் ஆர்வமுடையோர். 23/05/2006 05/2006 படிமத்தை உருவித் தந்த துவிட்டர் கணக்கிற்கு நன்றி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.