Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. மோகன்

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    23
    Points
    9997
    Posts
  2. island

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    1748
    Posts
  3. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    8
    Points
    15791
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    19134
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/22/23 in all areas

  1. இதுவரை காலமும் கள உறுப்பினர்கள் அல்லாதோர் திண்ணையினைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. இன்று முதல் பரீட்சார்த்தமாக திண்ணை அனைவரின் பார்வைக்கும் திறந்துவிடப்படுகின்றது என்பதால் திண்ணையில் உரையாடும் விடயங்களில் மேலதிக கவனத்தினைக் கருத்தில் கொண்டு உரையாடல்களை மேற்கொள்ளுங்கள்.
  2. யாழ் களத்தில் இடைப்பட்ட காலத்தில் பச்சைப் புள்ளி மற்றும் சிவப்பு புள்ளி வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. பின்னைய காலங்களில் புள்ளி வழங்கும் முறைமைகள் தவறான முறையில் பாவிக்கப்பட்டமையினால் பல அறிவுறுத்தல்களின் பின்னர் சிவப்பு புள்ளி வழற்கும் முறை முற்றாக நிறுத்தப்பட்டது. பின்னைய காலங்களில் பச்சைப்புள்ளி வழங்கும் முறையிலும் சிலரால் விடயத்திற்கு புள்ளிகள் வழங்கப்படாது எழுதியவருக்கு என்று / இணைத்தவருக்கே புள்ளி வழங்கப்பட்டதை பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிந்தும் புரிந்தும் கொண்டமையால் புள்ளிகள் வழங்கியவர் விபரங்களை மறைக்க வேண்டிய நிலைமைக்கு வந்திருந்தோம். தற்போது மீண்டும் பழைய நிலைக்கு பச்சைப் புள்ளிகள் வழங்கியவர்களை பார்வையிடும் வசதியையும் சிவப்பு புள்ளி வழங்கும் முறையை மீண்டும் அறிமுகப்படுத்தத் தீர்மானித்துள்ளோம். அதேவேளை புள்ளிகள் வழங்குபவர்கள் சரியான முறையில் வழங்குகின்றார்களா என்பதையும் கண்காணிப்போம். தவறாகப் பயன்படுத்துவதும் குழுக்களாக இணைந்து புள்ளிகள் வழற்குவதும் கண்டுபிடிக்கும் பட்சத்தில் அந்த குறிப்பிட்ட உறுப்பினர்கள் சில காலத்திற்கோ அல்லது நிரந்தரமாகவே புள்ளி வழங்கும் முறையில் தடை வழங்கப்படும். கால மாற்றத்திற்கேற்ப இடை நிறுத்தப்பட்ட இந்த புள்ளி வழங்கும் முறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றது.
  3. ஓ நல்லவிடயம். @மோகன் மிகவும் நன்றி. நாம் இருக்கும் நாடுகளுக்கு விசுவாசமாக இருப்பது போல யாழுக்கும் விசுவாசமாக இருப்போம்.
  4. ஊரவர்கள் பார்ப்பது சந்தோசம் அப்பிடியே எல்லா உறுப்பினர்களும் பதியுமாறு உள்ள தடைகளை இந்த நேரத்தில் நீக்கிவிடலாமே?
  5. இந்த யுத்தமும் நீண்டு செல்லும் யுத்தம் ஆகும் என கூறுகிறார்கள், இதனால் பாதிப்படைவது மக்கள்தான். 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எல்லா கண்டங்களும் ஒன்றான மிக பெரிய ஒரே நிலப்பரப்பாக இருந்ததாக கூறுகிறார்கள், இதில் யார் முதலில் இருந்தார்கள் என்ற கேள்வியே அடிபட்டு போய்விடுகிறது. அப்படி ஒன்றாக நிலம் இருந்தாலும் பிராந்திய சண்டை ஓயாது ஏனெனில் மிருகங்களிடையே தற்போதும் பிராந்திய சண்டை உள்ளது, அதற்கு காரணங்கள் கூறலாம் ஆனால் குதிரை பந்தயம் போல் அணி பிரிந்து மக்களை கொல்லும் செயல்களை எப்படி நியாப்படுத்துகிறார்கள். மிருகங்களில் கூட ஆண் மிருகம்தான் இந்த பிராந்திய சண்டைக்கு காரணம், நாடுகளில் அரசியலில் ஆண்களை நீக்கினால் ஏதாவது உலக மாற்றம் ஏற்படுமோ தெரியவில்லை, சில காலாவதியான மதங்கள் சமூகங்கள் பெண்கள் கல்வியினை தடுப்பதன் காரணம் இவ்வாறான பிற்போக்கு சிந்தனை தொடர வேண்டும் என்பதற்காகவோ தெரியவில்லை, ஒரு பெண் படித்தால் அந்த குடும்பம் நன்மை பெறும் இப்படி அனைத்து பெண்களும் படித்தால் சமூகம் நன்மை பெறும், பின் தமக்கு வேலை இருக்காது என்பதால் தடுக்கிறார்கள்.
  6. மோகன் அண்ணா தங்களை இங்கு காண்பது மிக்க மகிழ்ச்சி. தாங்களும் தங்கள் குடும்பமும் நலமே என்று நம்புகிறோம்.
  7. அட்றா சக்கை! பையர், தமிழ்சிறி எல்லாரையும் திண்ணையில் பார்ப்பது சந்தோசம். பையா, நிதானமாக கலந்துரையாடுங்கள். கோவம் வரும் போது, விலகிச் சென்று ஆறுதலாக வந்து கருத்தாடவும். கருத்தை இழக்கலாம், களத்தை இழக்கக் கூடாது. அதே வேளை, களத்தை உற்சாகமாக வைத்திருக்கும் கருத்தாளர்களுக்கும், நிர்வாகத்துக்கும் நன்றி! 🙏
  8. இங்கே யாழிலும் இருதரப்பு ஆய்வாளர்களது(யூத,பலஸ்தீன)கருத்துகளிலும் ஒருவகைக் கணக்கெடுப்பு மனப்பாங்கு மிளிர்வதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள் என்றே நம்புகின்றேன். அதனையும் யோசியத்தோடு ஒப்பிடலாமா? இங்கே நான் குணா அவர்களது பார்வை சரியானது என்ற நோக்கில் எழுதவில்லை. மனிதப் பேரவலம் ஒன்று நடந்துகொண்டிருக்கும் வேளையில், பெரும் இனஅழிவைச் சந்தித்த தமிழ் இனத்தின் முகமாக இருக்கும் புலத்தமிழரில் ஒரு பகுதியினர் துடுப்பாட்டப் போட்டியின் வர்ணனைபோன்று எழுதும் மனப்பக்குவத்தைப் பெற்றிருப்பதுகூட பெரும் வளர்முகம்தான். யூதரும், பலஸ்தீனரும் தத்தமது இறைமைக்கான போராட்டத்தில் இதில் தமிழீழத்தவர் வெறும் பார்வையாளராக மட்டுமே இருக்கமுடியும். யூதருக்குப் பலம் வாய்ந்த பல்வகைப் படைகளுடனும், பலம்வாய்த அரசாகவும், மேற்கினது செல்லப்பிள்ளையாகவும், பலஸ்தீனருக்கு ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசும் படைகளுமாகவும் அயலிலே அவர்களுக்கு கைகொடுக்கப் பெரும் அரபு நாடுகளுமாக இரு பெரும் அணிகளாக உலகே பிரிந்து நின்று உதவுகிறது. ஆனால், தமிழீழத்தவர் மீதான இன அழிப்பில் உலகோ ஒரு நேர்கோட்டில் நின்று எம்மை அழிப்பதற்கு உதவியது. உலகின் இந்த அசைவின் ஊடாகவே எதிர்காலத்தை நோக்க வேண்டியுள்ளது. ஏனென்றால் இந்த உலகினது ஏழை நாடுகள் பல திவாலாகியது தனியே கொரோனா மட்டுமல்ல. ரஸ்ய – உக்ரேன் போரும் ஒரு கரணியமென்பது அனைவரும் அறிந்தது. இன்று பல வளர்ந்த நாடுகள் உக்ரேனுக்கு முண்டுகொடுத்து விழிபிதுங்கி நிற்பதையும் காணமுடிகிறது. ரஸ்ய – உக்ரேன் போராகட்டும், யூதப் – பலஸ்தீனப் போராகட்டும் இதிலே தமிழரது வகிபாகம் ஏதாவது சாத்தியமா? நாமே நீரினுள் வீழ்ந்த எறும்புபோல் தத்தளிக்கின்றோம். இந்த நிலையிலிருந்து இந்தப்போரழிவை நோக்காவிடினும் அமைதிகாத்தாலே போதுமானது. இரு தேசங்களதும் பின்னணிகளையும் வரலாற்று அசைவுகளையும் கற்றிதல், தேடல் எமது நிலைகுறித்த ஒரு சரியான பார்வைக்கு வழிவகுக்குமாயின் பயனுடையதாகும். யூதர்களோ பலஸ்தீனர்களோ ஒருவருக்கொருவர் சளைத்தவரல்ல என்பதுபோன்றே தற்போதைய மனிதப்படுகொலைகள் சுட்டுகின்றன. ஆதிக்க சக்திகளின் அடக்குமுறைக்குப் எப்போதும் முதற்பலியாவது அப்பாவி மக்களே என்பதை இவ்வுலகு அறிந்திருந்தும் அதை அனுமதித்திருப்பதை எப்படி நோக்குவது. யூதப் பொதுமக்களை கமாஸ் கொன்றது பயங்கரவாதமென்றால், இஸ்ரேல் பலஸ்தீனப் பொதுமக்களைக் கொல்வதும் பயங்கரவாதமென்றே கொள்ளமுடியும். இரு பயங்கரவாதமும் உலகுக் கேடனதே. இரண்டும் ஒரே கனதியானவையே. நாமும் இனஅழிப்பிற்குள்ளாகும் இனமென்றவகையிலே உலகில் நடைபெறும் இன அழிப்புகளை நோக்க வேண்டியவராயுள்ளோம். நன்றி
  9. நீக்கியாச்சு எல்லாருடைய‌ த‌டையும் ஈழ‌ப் பிரிய‌ன் அண்ணா மோக‌ன் அண்ணாவின் முக‌த்துக்கா யாழில் இணைந்து இருக்க‌ விரும்புகிறேன்😍🙏..........
  10. நன்றி மோகன். திண்ணையில் இனவெறி கருத்துக்களை யார் தெரிவித்தாலும் கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளுகிறேன். சிங்கள இனவாதத்திற்கு எதிர்வினையாக ஆரம்பித்த தமிழ் தேசியவாத்துக்குள் சிங்கள இனவாதத்துக்கு சமாத்தரமான இனவாதத்தை திணிக்க முயற்சிகள் நடை பெறுகின்றன.
  11. அப்பன்ர இயக்கத்தை அழிக்க பிள்ளை வேலை செய்துள்ளார்.... தகவலுக்கு நன்றி
  12. Variety of images Lakshmi Venkatesan · · 30 வயசுக்கு அப்புறம், இரவும், பகலும் ஒண்ணு தான். (கொஞ்ச நாள் தூங்கலன்னா கூட சமாளிச்சிட்டு போக கத்துக்குவோம்). 40 வயசுக்கு அப்புறம், அதிகமா படிச்சிருந்தாலும், குறைவா படிச்சிருந்தாலும் ஒண்ணு தான் (குறைவா படிச்சவங்க பெரும்பாலும் முதலாளியா இருப்பாங்க, அதிகமாவும் சம்பாதிப்பாங்க). 50 வயசுக்கு அப்புறம், அழகா இருந்தாலும், அசிங்கமா இருந்தாலும், வெள்ளையா இருந்தாலும், கருப்பா இருந்தாலும் ஒண்ணு தான். (எவ்வளவு அழகா இருந்தாலும், இந்த வயசில், முகத்தில் சுருக்கங்கள், கரும் புள்ளிகள் வந்துரும்). 60 வயசுக்கு அப்புறம், மேலதிகாரி, கீழதிகாரி எல்லாரும் ஒண்ணு தான். (ரிட்டயர் ஆனப்புறம், எல்லார் நிலையும் ஒண்ணு தான்). 70 வயசுக்கு அப்புறம், பெரிய வீடோ, குட்டி வீடோ எல்லாம் ஒண்ணு தான் (மூட்டு வலி, தள்ளாமை, நடக்க முடியா நிலை எல்லாமே வந்துரும். கொஞ்ச இடத்தில் மட்டுமே புழங்க முடியும்). 80 வயசுக்கு அப்புறம், பணம் இருந்தாலும் பணம் இல்லன்னாலும் எல்லாமே ஒண்ணு தான். (அதிகமா செலவழிக்க முடியாது, தேவைகளும் குறைஞ்சிரும், ஆசைகளும் குறைஞ்சிருக்கும்). 90 வயசுக்கு அப்புறம், ஆணோ, பெண்ணோ எல்லாரும் ஒண்ணு தான் (ஆணுக்கு உரிய தன்மைகளும், பெண்ணுக்கு உரிய தன்மைகளும்.. எல்லாமே மங்கி போயிருக்கும்). 100 வயசுக்கு அப்புறம், படுத்து இருந்தாலும், நடந்துட்டு இருந்தாலும் எல்லாம் ஒண்ணு தான் (நடக்க முடிஞ்சா கூட, செய்யுறதுக்கு எந்த வேலையுமே இருக்காது). அதனால வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்.. என்ன இருக்கோ, அதுக்காக சந்தோஷப்பட கத்துக்குவோம், இல்லாதத நினைச்சு வருத்தப்படுறத விட்டிடுவோம். வாழ்வோம் மகிழ்ச்சியாக.. Voir la traduction

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.